Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idaiyinam
Idaiyinam
Idaiyinam
Ebook127 pages45 minutes

Idaiyinam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இலக்கிய வடிவங்களில் சிறுகதை வடிவம் ஒரு அற்புத வகை ஆகும். மனிதனை பதப்படுத்தி, பக்குவப்படுத்தி, பண்புள்ளவனாக மாற்றிவிடும் ஆற்றல் சிறுகதைகளுக்கு உண்டு. உள்ளத்தில் அலுப்பையும் சலிப்பையும் போக்கி, வாழ்வில் பெரும் நம்பிக்கையையும் பிடிப்பையும் சிறுகதைகள் அளிக்கின்றன.

Languageதமிழ்
Release dateMar 30, 2024
ISBN6580141909918
Idaiyinam

Read more from M. Kamalavelan

Related to Idaiyinam

Related ebooks

Reviews for Idaiyinam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idaiyinam - M. Kamalavelan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இடையினம்

    (சிறுகதைகள்)

    Idaiyinam

    (Sirukadhaigal)

    Author:

    மா.கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. பை

    2. நாய் விற்ற காசு குரைக்கும்

    3. வாடகை

    4. கைலி

    5. திடீர் தேவதை

    6. காவல்

    7. இடையினம்

    8. பாத்திரங்கள்

    9. உயிர்ப்பு

    10. மந்திரச் சொல்

    11. ருசி

    12. நாலு வார்த்தை

    13. முகம் வெளிறிய கவிதைகள்

    14. இனிக்கும் பொய்கள்

    15. பொறுப்பின்மை

    காணிக்கை

    திறனாய்வுத் தென்றல்

    வல்லிக்கண்ணன்

    அவர்களுக்கு

    முன்னுரை

    இலக்கிய வடிவங்களில் சிறுகதை வடிவம் ஓர் அற்புத வகை ஆகும். மனிதனைப் பதப்படுத்தி, பக்குவப்படுத்தி, பண்புள்ளவனாக மாற்றிவிடும் ஆற்றல் சிறுகதைகளுக்கு உண்டு.

    இன்று விதவிதமான நோய்கள் பரவுகின்றன. புதுப்புதுப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. நோய் தீர்க்கும் மருந்துகளும் விதவிதமாக வந்து கொண்டேயிருக்கின்றன. உள்ளம் அலுப்பும் சலிப்பும் அடைந்தால் மனிதன் உடைந்து போகிறான்; விரக்தியிலும் வேதனையிலும் துவண்டு போய்விடுகிறான். அந்த நிலையில். உள்ளத்தின் அலுப்பையும் சலிப்பையும் போக்கி, வாழ்வில் பெரும் நம்பிக்கையையும் பிடிப்பையும் சிறுகதைகள் அளிக்கின்றன.

    இன்றைய நிலையில் இதழ்கள், பெரும்பாலான இதழ்கள் சிறுகதைகள் வெளியிடுவதை அவ்வளவாக ஊக்குவிப்பதில்லை. அதுமட்டுமல்ல அரைப் பக்கம், கால் பக்கம் என்று சிறுகதையின் வடிவத்தை சிதைத்து ஊனமாக்கி விடுகின்றன. இலக்கிய உலகின் மிகப் பெரிய சோகம் இது.

    சிறுகதை ஆசிரியர்களும் தங்களின் தேவை காரணமாக மெல்ல மெல்ல நாவல் பக்கம் சென்றுவிடுகிறார்கள். சிறுகதை - திருவிழாவில் தப்பிய சிறுகுழந்தையாக திகைத்து நிற்கிறது.

    பச்சை வயல்களை அழித்து பளிங்கு மாளிகைகளைக் கட்டினோம். அதன் விளைவு எப்போதோ வரும் மழைநீரைக்கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வந்த மழைநீரும் வடிகால் வசதி இன்றி, எங்கு செல்வது என்ற இலக்குத் தெரியாது கோபத்துடன் சீறிப் பாய்கிறது. வெள்ளமென்று நாம் கூச்சலிடுகிறோம்.

    பச்சை வயல்கள் மறைவதுபோல் படைப்பு உலகில் சிறுகதைகளின் இடமும் மறைந்து வருகிறது. மனம் வருந்துகிறது.

    நவீன போக்குவரத்து சாதனங்களால் குதிரை வண்டிகளும், இரட்டை மாட்டு வண்டிகளும் காணாமல் போய்விட்டன. அதுபோல நவீனங்கள் தோன்றும்போது பலியாக வேண்டியவைகளில் சிறுகதையும் சேர்ந்து விடுமோ?

    பதிப்புச் செம்மல் முனைவர். ச.மெய்யப்பன் அவர்கள் சிறுகதை இலக்கியங்களை வளர்ப்பதில் ஆர்வத்துடன் செயலாற்றியவர். அவர் வழியில், அவர் மைந்தர் திரு. ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்கள் கரம் கொடுக்கிறார். இதோ உங்கள் கரங்களில் தவழும் ‘இடையினம்’ சிறுகதைத் தொகுப்பு அதற்கு ஒரு சாட்சியாகும். அவர்க்கு என் நன்றி. தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘இடையினம்’ சிறுகதை சாகித்ய அகாதமியினர் திருப்பூரில் நடத்திய கதை.

    வாசிப்பில் என்னால் வாசிக்கப்பட்ட சிறுகதை ஆகும். அதுவே பின்னர் தாமரை இதழில் பிரசுரமாயிற்று. நடுத்தர மனிதனின் நிலையை நகைச்சுவையோடு சொல்கிறது.

    மற்ற கதைகள் அமுதசுரபி, கல்கி, குமுதம், குமுதம் ஜங்ஷன், ராணி, மாலை முரசு, கவிதை உறவு ஆகிய இதழ்களில் பிரசுரமானவை.

    சிறுமை நீக்கி சிறப்பு சேர்ப்பவை சிறுகதைகளே.

    அன்புடன்

    மா. கமலவேலன்

    திண்டுக்கல்

    1

    பை

    அவன்தான் முதல் ஆள்.

    அவனுக்கே கூச்சமாயிருந்தது. சந்தேகத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தான்.

    சீப்பு காணாத தலைமுடி; தூக்கத்திற்காக ஏங்கும் கண்களுடன் மைக்செட் பையன் ஒருத்தன் அப்போதுதான் ஆம்ப்ளிஃபையர், பாக்ஸ்... டேப்ரிகார்டர் சகிதம் உள்ளே வந்து கொண்டிருந்தான்.

    கூட்டம் ஆறு மணிக்குத்தானே?

    அதெல்லாம் தெரியாது சார். எங்க ஓனர் ஏழுமணிக்குள்ளாற செட்டை ரெடி பண்ணிடுன்னு சொல்லியிருந்தாரு... வந்துட்டேன் பையன் சொன்னான்.

    இல்லே... ஏன் கேட்டேன்னா? இவன் இழுத்தான்...

    கையில் சுற்றிய கறுப்பு வயருடன் பையன் வாசலுக்குச் சென்றுவிட்டான்.

    பாராட்டுக் கூட்ட அழைப்பிதழை எடுத்துப் பார்த்தான்.

    நல்லவேளை. விழா இன்று மாலை ஆறு மணிக்குத்தான்.

    இங்கும் அங்குமாக அலைந்து... கோணம் பார்த்து… மின் விசிறி பார்த்து ஒரு நாற்காலியைத் தேர்ந்தெடுத்து உட்காரப் போனான்.

    நாற்காலி தூசி படிந்து கிடந்தது.

    அவன் தன் கையிலிருந்த துணிப்பையிலிருந்து லெதர் ஹேண்ட் பேக்கை எடுத்து இடது கை கக்கத்துள் திணித்துக் கொண்டான். பிறகு அந்தப் பையினால் தூசியைத் துடைத்துச் சுத்தம் செய்தான்.

    பையை உதறியபோது மனைவி நினைவுக்கு வந்தாள்.

    அவன் மனைவி திறமையான குடும்ப நிர்வாகி அவன் தாம்தூம் பேர்வழி. அஞ்சு ரூபாய்க்கு மல்லிகைப்பூ வாங்கிவர பதினைஞ்சு ரூபாய் ஆட்டோ வாடகை கொடுப்பான்.

    அவளது சிக்கனத்தில்தான் அவர்கள் குடும்ப வண்டியே ஓடுகிறது.

    இந்தப் பை அவள் தைத்தது. பழசாகிப் போன அவன் பேன்ட்தான் பையாக மாறியிருந்தது.

    உங்களுக்கு எத்தனை பை தைத்தாலும் போதாது. போற இடத்துல எல்லாம் தொலைச்சுட்டு வந்து நிப்பீங்க. இந்தப் பையையாவது... பத்திரமா... வீடு கொண்டு வந்து சேருங்க... மனைவி சொல்லியனுப்பியிருந்தாள்.

    பையை நாற்காலிமீது விரித்தான். உட்கார்ந்தான்.

    ***

    சார்...

    திரும்பினான் அவன்.

    அவனைப் போல் ஓர் அப்பாவி.

    சார்... மீட்டிங் ஆறு மணிக்குத்தானே?

    ஆமாம்...

    இல்லே யாரையும் காணுமே. அதுதான் எனக்கு சந்தேகமாப் போச்சு

    இவன் அதற்கு ஏதும் பதில் சொல்லவில்லை.

    சார்... என் பேரு ரங்கசாமி. அச்சுதராயன்ற பேர்ல கதை... கவிதையெல்லாம் எழுதறேன்.

    அப்படியா! ரொம்ப சந்தோஷம்... அவன் அத்தோடு நிறுத்திக் கொண்டான். இப்படித்தான் பல சமயங்களில் உச்சாணிக் கொம்பில் ஏறிக் கொள்வான்.

    சார்... நீங்க?... அச்சுதராயன் விடுவதாயில்லை.

    நான் நரஹரி...

    அடடே... உங்க கதைகள்ளாம் நிறையப் படிச்சிருக்கேன். உங்க நடையே அலாதி சார். ஆமாம் நீங்க ஏன் புனைபெயர் வைச்சுக்கலே.

    நரஹரிங்கறதே ரொம்ப ‘ரேர்’ தானே

    இந்த மாதிரி பாராட்டுவிழாவுலதான் நம்ப மாதிரி எழுத்தாளர்களையெல்லாம் சந்திச்சுப் பேச முடியும். ஒரு விஷயம் தெரியுமா... எல்லாப் பாராட்டு விழாவுக்குப் பின்னாடியும் ஒரு சுவாரஸ்யமான கதையிருக்கும். இப்ப இந்தப் பாராட்டு விழாவும் அப்படித்தான். இவரு... அந்த சமூகத்தைச் சேர்ந்தவரு அதுதான்... அவங்க இலக்கிய அமைப்பு இவரைச் சிறந்த படைப்பாளியாத் தேர்ந்தெடுத்திருக்கு."

    அச்சுதராயன் முதுகுக்குப் பின்னால் இடது கையை மறைத்துக் கொண்டு, வலது கை ஆள்காட்டி விரலை அவனுக்கு முன்பு விறைப்பாக நீட்டி... தமது உடம்பைச் சற்று முன்னால் வளைத்துக் கொண்டு அவர் பேசிய தோரணையை அவன் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தான்.

    என்ன சார்... நான் எதுவும் தப்பா பேசிட்டேனா? அவர் கண்களைச் சிமிட்டினார். முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த இடது கையால்... எகதேசம் வழுக்கையான தமது தலையைத் தடவிக் கொண்டார். சின்னவாய்,

    Enjoying the preview?
    Page 1 of 1