Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ner Kaanalgal - Part 1
Ner Kaanalgal - Part 1
Ner Kaanalgal - Part 1
Ebook241 pages1 hour

Ner Kaanalgal - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உண்மையான உழைப்பு உயர்வுதரும்; உவகை நல்கும். வேதனைகள், விரக்திகள் வேடிக்கை காட்டும்; சோதனகள், சோர்வுகள் அச்சமூட்டும்.

இவற்றையெல்லாம் மீறி இலக்கை நோக்கி ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். அப்படி உலகை எதிர்கொண்டு சாதனைச் சரித்திரம் படைத்த சான்றோர்கள் பன்னிருவர் பெற்ற வெற்றி வரலாற்றை இந்நூலில் காணலாம். அவர்கள் பெற்ற வெற்றிகள் “நேர்காணல்” முறையில் இங்கே கட்டுரைகளாகத் தரப்பெற்றுள்ளன.

பன்னிருவர் பற்றி அறிய பலவகைகளில் தொடர்புகொண்டேன்.

* நேரில் சென்று சந்தித்தல்; உரையாடுதல்.

* நூல்கள் எழுதியிருந்தால் அவற்றைப் படித்தல்.

* சாதனைகளைப் பார்த்து அறிதல்.

அவர்களோடு தொடர்புடையவர்களை சந்தித்து அவர்களைப் பற்றிக் கேட்டறிதல்...

பின்னர் அவற்றை உள்ளத்தில் அசைபோட்டு நேர்காணலின்போது வினாக்கள் தொடுத்தேன்.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580141907040
Ner Kaanalgal - Part 1

Read more from M. Kamalavelan

Related to Ner Kaanalgal - Part 1

Related ebooks

Reviews for Ner Kaanalgal - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ner Kaanalgal - Part 1 - M. Kamalavelan

    https://www.pustaka.co.in

    நேர் காணல்கள் – தொகுதி 1

    Ner Kaanalgal – Part 1

    Author:

    மா. கமலவேலன்

    M. Kamalavelan

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. முனைவர் ச.வே. சுப்பிரமணியன்

    2. முனைவர் தமிழண்ணல்

    3. முனைவர் ம. திருமலை

    4. முனைவர் தி.சு. நடராசன்

    5. முனைவர் ம.பெ. சீனிவாசன்

    6. முனைவர் வே. கட்டளை கைலாசம்

    7. எழுத்தாளர் டி. செல்வராஜ்

    8. கயிலைமணி அ. வேதரத்னம்

    9. டாக்டர் அ. சௌந்திரபாண்டியன்

    10. கவிஞர் சி. விநாயகமூர்த்தி

    11. எழுத்தாளர் இரா. கல்யாணசுந்தரம்

    12. கவிஞர் பால. நடராஜன்

    1. முனைவர் ச.வே. சுப்பிரமணியன்

    உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். தொல்காப்பியம் உலக இலக்கணங்களில் முதன்மையானது என்ற கொள்கையர். தமிழ்ப் பண்பாட்டுக் காவலர். நெல்லை மாவட்டம் தமிழூரில் வாழ்ந்து வருகிறார்.

    இன்று நாம் சந்திக்க இருக்கக்கூடிய சிறப்பு விருந்தினர் மிகுந்த தமிழ்ப் பற்றாளர். அவரைப்பற்றிச் சொல்லுவதென்றால், நான் சொல்லுவதைவிட இரண்டுமுறை சாகித்ய அகாதமி பரிசு பெற்ற கவிஞர் சிற்பி அவர்கள்.

    ஆரூரும் பேரூரும் கண்ட அன்னை

    அணையாது தமிழ் விளக்கைக் காப்பதற்கு

    ஏரூறும் கழனிகளின் நடுவில் ஆங்கே

    எழிலூறும் தமிழூரைக் காண எண்ணி

    ஓர் மகனைப் பெற்றெடுத்தாள் அன்னோன் நெஞ்சில்

    உயிர்நதியாய்த் தமிழ்க் குருதி ஓடவிட்டாள்

    உள்ளமே தன்னிருக்கையாகக் கொண்டாள்

    என்று பாராட்டுவார். அப்படித் தமிழுக்காகவே வாழ்ந்து வருகின்றவர். இன்னும் சொல்லப்போனால் அவரைத் தமிழ் இயக்கம் என்றே பல அறிஞர்கள் குறிப்பிடுவார்கள். அந்நாளில் தமிழுக்கு உ.வே.சா. என்று சிறப்பித்துக் கூறுவது போல இந்நாளில் தமிழுக்கு ச.வே.சு. என்று சொல்லக்கூடிய அளவுக்கு மிகவும் புகழ் பெற்றவர்கள். டாக்டர் ச.வே.சு. அவர்களை இன்று நாம் சந்தித்து உரையாடுகிறோம்.

    கமலவேன்: வணக்கம். உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நம்முடைய நிகழ்ச்சியை உங்களுக்குப் பிடித்த கவிதை வரிகளின் மூலம் துவக்கலாம்.

    சவேசு: வேண்டத்தக்கது அறிவோய் நீ...

    இது மாணிக்கவாசகர் இறைவனைப்பற்றிப் பாடுகின்ற பாடல். வாழ்க்கையில் முழு நிலை பெறுவதற்கு அடிப்படையாக அமைவது இறைவனைச் சிந்தித்தல், அவன் பெருமை உணர்தல். அவன் நமக்கு எல்லாவற்றயும் தருகிறான் என்பது தான் இப்பாடலின் பொருள்.

    கமலவேன்: நீங்கள் தமிழ் விரிவுரையாளராகத் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி இருக்கிறீர்கள். அப்படியானால் உங்களது இளமைக்காலப் படிப்பு எங்கு நடந்தது?

    சவேசு: நான் பிறந்தது வீரகேரளன்புதூர் என்ற ஊரில். அது ஊற்றுமலை ஜமீனுக்குப் பாத்தியப்பட்டது. வளர்ந்தது அனைத்தும் விக்கிரமசிங்கபுரம் என்ற ஊரில் தான். இங்குதான் நான் எட்டாம் வகுப்பு வரை பயின்றேன். அம்பாசமுத்திரத்திலுள்ள தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் உயர்கல்வியையும் இடைநிலைப் படிப்பை நெல்லை ம.தி.தா. இந்தக் கல்லூரிகளிலும் படித்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் B.A. (Hons) படித்தேன். இது நான்காண்டு படிப்பை மூன்றாண்டுகளில் படிப்பது. அந்தக் காலத்தில் இந்தப் படிப்பு மிகவும் கஷ்டமான படிப்பு. ஒருமுறை நான் தேர்வு எழுத முடியும். மாற்றுத் தேர்வு கிடையாது. இதுபோன்ற கட்டுப்பாடான படிப்பை 1950-1953களில் படித்தேன். பின்பு தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பயிற்றுநராக இருந்தேன். எனக்கு ஆசிரியர்களின்மீது மிகுந்த மரியாதை உண்டு. எனக்கு உயிரையும் உடலையும் தந்தது தாய் தந்தையராயிருந்த போதும் எனக்கு அறிவை வழங்கியது ஆசிரியர்கள் தாம். இன்றும் எனது முதல் வகுப்பு ஆசிரியர் முதல் முனைவர்பட்ட பேராசிரியர் வரை தினமும் நினைப்பவன் நான். பின்பு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும் சில மாதங்கள் டியூட்டராக இருந்தேன். திருவனந்தபுரத்தில் விரிவுரையாளர் பதவி கிடைத்தது. அதனால் திருவனந்தபுரம் சென்றேன். திருவனந்தபுரத்தில் பல்கலைக்கழகக் கல்லூரி (University College) என்று கூறுவார்கள். அங்குதான் விரிவுரையாளராக 1.10.1956-ல் இணைந்தேன். அதற்குப் பின்புள்ள வளர்ச்சிகள் மிக அதிகம்.

    கமலவேன்: விரிவுரையாளராகத் திருவனந்தபுரத்தில் சேர்ந்தபிறகு அங்கே பல சாதனைகள் நிகழ்த்தியிருக்கிறீர்கள். ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் சமர்ப்பித்து இருக்கிறீர்கள். அங்கு நீங்கள் செய்த சாதனைகள் என்னென்ன? பின்பு தமிழ்நாட்டிற்குப் பணி செய்ய வருவதற்குக் காரணமாய் இருந்தவர் யார்?

    சவேசு: 1947ல் திருவனந்தபுரத்தில் பணி செய்து கொண்டிருந்தபோது இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிசிரியர் மன்றத்தின் சார்பாக ஒரு பெரிய கருத்தரங்கு நடத்தினேன். அந்தக் கருத்தரங்கிற்கு டாக்டர் மு.வ. அவர்கள் வந்திருந்தார்கள். பேராசிரியர் தெ.பொ.மீ. அவர்களும் வந்திருந்தார்கள். அந்நிலையில் நான் பல்கலைக் கழகத்தில் துறைத் தலைவராக இருந்தேன். அப்போது பல்கலைக் கல்லூரி வேறு. பல்கலைக் கழகம் வேறு. பல்கலைக் கழகக் கல்லூரியில் முதுகலை வகுப்பு தொடங்க வேண்டும் என்ற அங்குள்ள ஆசிரியர்கள் முயற்சி செய்து வந்தார்கள். அதற்காகப் பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பித்து இருந்தார்கள். வழக்கமாக அதை எனக்கு அனுப்புவார்கள். நான் உடனே அவசியம் கொடுக்க வேண்டும் என்று எழுதிவிட்டேன். ஆனால் அங்குள்ள ஆசிரியர்களுக்கு ஒருவருக்குக்கூட முனைவர் பட்டம் இல்லை. ஆய்வுப்பட்டங்கள் இல்லை. அதனால் பல்கலைக் கழகம் மறுத்துவிட்டது. அதனால் ஓர் ஆசிரியர் மாணவர்களைத் தூண்டிவிட்டு கருத்தரங்கிற்கு தெ.பொ.மீ. அவர்களும் சிங்காரவேலு என்ற ஐ.ஜி. அவர்களும் வந்துகொண்டிருந்தபோது சவேசு ஒழிக, தமிழ்த்துரோகி ஒழிக என்று கூச்சலிட்டார்கள். கருத்தரங்கத் தொடக்கவிழா முடிந்தவுடன் அவர்களை நேரில் சென்று சந்தித்தேன். அவர்கள் நீதான் தமிழ் M.A. வருவதைத் தொடுத்தாய் என்று ஒருமையிலேயே பேசினார்கள். நான் மிக அமைதியாக, ‘மூன்று மாணவர்கள் என்னோடு வாருங்கள், துணைவேந்தரிடம் சொல்லி உடனே உங்களுக்கு முதுகலை வாங்கித் தருகிறேன்’ என்று அழைத்துச் சென்றேன். அங்கு அப்போது டாக்டர் மு.வ. அவர்கள் துணைவேந்தரோடு இருந்தார்கள். மாணவரோடு போன என்னை சுப்பிரமணியம் என்ன விசேஷம் என்று கேட்டார்கள்.

    இந்த மாணவர்கள் பல்கலைக் கழகக் கல்லூரியில் M.A. முதுகலை வேண்டும் என்று கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் ஆவன செய்ய வேண்டும் என்று சொன்னேன். அதற்கு ஆங்கிலத்தில் You have already recommended to give MA to University College. It's rejected because there is no qualified person there என்று துணைவேந்தர் சொன்னார். இதையெல்லாம் பார்த்துகொண்டிருந்தார் மு.வ. இந்த மாணவர்களுக்கு உண்மை என்ன என்பது அப்போதுதான் தெரிந்தது. மாணவர்களை சில ஆசிரியர்கள் கிளப்பிவிட்டு எனக்குத் தமிழ்த்துரோகி பட்டம் கட்டினார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாது எனக்குத் தமிழ் தான் உயிர், தமிழ் தான் வாழ்க்கை என்பது. அப்போது உடனிருந்த மு.வ. அவர்கள் இவன் தமிழுக்காக வாழ்பவன் என உணர்ந்து என்னை உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழக முதன்மை அலுவலராகவும் பின்பு இயக்குநராகவும் அழைத்தார். அதற்குப் பிறகு தான் நான் சென்னைக்குச் சென்றேன்.

    கமலவேன்: நீங்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை அலுவலராக முதலில் பொறுப்பேற்றீர்கள். அதற்குப் பிறகு அந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலேயே தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறீர்கள். நிறைய சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறீர்கள். அதைப்பற்றிப் பேசுவதற்கு முன்னால் இப்படி ஓர் ஆழமான தமிழுணர்வை ஊட்டுவதற்கு உந்து சக்தியாக இருந்த ஆசிரியப் பெருமக்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

    சவேசு: நான் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் படித்த காலத்தில் தமிழ் உணர்வை உருவாக்கிய பேராசிரியர்கள் இருவர். ஒருவர் அருணாசலக் கவுண்டர், மற்றொருவர் சேதுரகுநாதன் ஐயா. அப்போது ஆறு பேர் சிறப்பு இடைநிலை படித்தோம். நாங்கள் புத்தகங்கள் கொண்டு வருவது இல்லை…

    அருணாசலக் கவுண்டர் வந்தால் இன்று என்ன பாடம் என்று கேட்பார். ஒவ்வொருவனும் ஒவ்வொன்று சொல்லுவான். ஒருவன் பரணி என்பான். ஒருவன் பிள்ளைத் தமிழ் என்பான். என்ன புத்தகம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்பார். யாரிடமும் புத்தகம் இல்லை. அப்போது எந்தவொரு ஆசிரியரும் புத்தகம் வைத்துப் பாடம் நடத்தியது கிடையாது. அவர்களுக்கு முழுவதும் மனப்பாடம். வந்து அமர்ந்தால் என்ன பாடம்A       என்றுதான் கேட்பார்கள். சரியப்பா இன்று பரணி படிப்போமே என்றுதான் சொல்வார்கள். உடனே பாடல் சொல்வார். அன்று படித்தது இன்றும் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கிறது. அதற்குக் காரணம், அவர்கள் கற்பித்த முறைதான்.

    ‘யுகம் நான்கும் பொருள் நான்கும்...’

    இது கலிங்கத்துப் பரணியில் பிரம்மனைப்பற்றிப் பாடும் துதி. நான்கு புயங்கள், இப்போது கலியுகம் என்று சொல்கிறோம். பொருள் நான்கு, அறம், பொருள், இன்பம், நான்கு வகை வேதங்கள் நான்கு முகம். நான்கு முகங்கள் கொண்ட பிரம்மன்.

    இதை அவர் சர்வ சாதாரணமாக சொல்லிக்கொண்டிருப்பார். இதே போல் கடைதிறப்பு என்று ஒரு பகுதி. ஒருவன் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது அவனுக்கு ஒரு உணர்வு தோன்றுகிறுது. ஆனால் அந்தப் பெண் இவனைப் பார்க்கும்போது அவள் தலையில் மலரை வைக்கும்போது இவனுடைய உயிரையும் சேர்த்து வைக்கிறாள்.

    ‘செக்கச் சிவந்த கலுநீரும்...’

    அவள் வெறும் மலரை மட்டும் சூடவில்லை. இவனுடைய உயிரையும் சேர்த்து வைத்திருக்கிறாள். இதை மனதில் பதியும்படியாக சொல்வார். புத்தகம் வேண்டாம். இன்னொருநாள் இதேபோல் நடந்தது. இன்று என்ன பாடம் என்றார். பின்பு பிள்ளைத்தமிழ் படிப்போம் என்றார். அது மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழில் உள்ள பாட்டு.

    போர்க்களத்தில் குருதி ஆறு போல ஓடுது. அந்தக் குருதியைக் குடிப்பதற்கு பேய்கள் செல்லுகின்றன. ஒரு குட்டிப்பேய் குருதியைக் குடிக்கும்போது அந்தக்குருதி நதி அதை இழுத்துக்கொண்டு செல்கிறது. குட்டிப் பேய் அதற்குப் பயப்படுகிறது. அப்ப அந்தக்குட்டி என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லுகின்றது. அதற்கு உடனே ஒரு பாட்டு சொல்வார்.

    ‘இட்ட முடித்தலை...’

    இவ்வாறு அந்தப் பாடலை அப்படியே சொல்வார். தமிழ் உணர்வில் ரொம்ப ஆழமான செய்திகளை எளிமைப்படுத்திச் சொல்லக்கூடியவர்...

    கமலவேலன்: அருணாசலக் கவுண்டர் ஐயா பற்றி அருமையாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள் இன்னொரு பேராசிரியர்...

    ச.வே.சு: இன்னொரு பேராசிரியர் சேதுரகுநாதர் அவர்கள். தொடங்கும்போதே சொல்வார். நீ புலவனுக்கு அரசன் பரிசு கொடுக்கிறான் என்று மட்டும் நினைத்துக்கொண்டு இருக்காதே. அரசனுக்குப் புலவர் பரிசு கொடுத்த கதையும் உண்டு. அதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ் படித்தால் பெருமிதத்தோடு வாழணும். அடிபணிந்து வாழக்கூடாது. அரசன் நமக்குப் பொருள் தருவான். அவன் சொல்வதெல்லாம் கேட்கணும் என்று நினைக்கக்கூடாது. நீ உன்னுடைய பெருமையை, ஆற்றலை விட்டுக் கொடுக்கக்கூடாது, அப்படி என்று சொல்வார்.

    பெருஞ்சித்திரனார்னு ஒரு புலவர், வீட்ல ரொம்ப வறுமை. அந்த வறுமையோட இருந்ததால்தான் அவனிடம் பொருள் வாங்கப்போகிறார். இளவடிமான் என்றொருவனிடம் பொருள் கேட்க போன போது காலந்தாழ்த்தினான். உடனே கொடுக்கவில்லை. இவருக்கு கோபம் வந்துவிட்டது. அதோட அவனுக்கு குதிரைப் படைதான் உண்டு. யானைப் படை இல்லை. அக்காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. அரசர்களுக்கும் குறுநில மன்னர்களுக்கும் காவல் மரம் என்று ஒன்று இருந்தது. அது புன்னை மரமாக இருக்கலாம். வேங்கையாகவோ வேறு ஏதாவது ஒரு மரமாகவோ இருக்கலாம். அந்தக் காவல் மரத்தில் அடுத்த அரசன் வந்து யானையையோ அல்லது ஏதேனும் விலங்கையோ கட்டீட்டான்னா இந்த அரசனை அவன் ஜெயித்துவிட்டதாக பொருள். இந்த புலவன் மிகுந்த வறுமையோடு போகிறான். அவன் காலந் தாழ்த்துகிறான். உடனே குமணன்ட்ட போயி ஒரு யானையைப் பரிசாகக் கேட்டு, நேரே இவனிடம் வந்து கொடுக்கிறான். கொடுக்கிறவன் நிறையப் பேர் இருப்பான், வாங்குறவனும் நிறையப் பேர் இருப்பான். ஆனால் அதற்குத் தகுதி வேண்டும். ஆனால் நீ கொடுப்பதாக மட்டும் நினைத்துக்கொண்டிருக்கிறாய். நான் இரவலன்தான். ஆனால் புரவலன் அல்ல. நான் கூறும் உண்மையை உணர்ந்துகொள். உன் காவல் வருந்தும்படியாக நான் கொண்டுவந்த இந்த யானையைப் பரிசாக உனக்களிக்கிறேன் என்றார். என் பேராசிரியர் இதை விளக்கும் போது ஏய், குதிரைக்காரப் பயலே இந்தா யானையை வச்சுக்கோ என்று எளிமையாகக் கற்பிப்பார். அப்போது தமிழ் படித்த காலத்தில் பெருமிதத்தோடு வாழ வேண்டும். அடிபணியக்கூடாது பொருளுக்காக என்பதையெல்லாம் சேதுரகுநாதர் சொல்லித்தருவார். எனவே எனக்கு இவ்வாறாக தமிழ் உணர்வை ஊட்டியவர்கள் இருவர்தாம்.

    கமலவேலன்: ரொம்பவும் அருமையாக அவர்களை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். அவர்கள் போலவே நீங்கள் வகுப்பு எடுத்த உணர்வு உங்களுக்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வந்த பிறகு, உங்களது 12 ஆண்டுக்கால பணியில் நீங்கள் செய்த சாதனைகள், புதுமைகள் என்னென்ன? ஏனென்றால் கருத்தரங்கை சரியான நேரத்தில் துவங்கி சரியாக கொண்டு செல்வது மட்டுமல்ல, கருத்தரங்கு நடக்கும்போதே அது சம்பந்தப்பட்ட நூலையும் வெளியிட்டு விடுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே அந்த அனுபவங்களை நேயர்களுக்குச் சொல்லுங்கள்.

    ச.வே.சு: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதந்தோறும் இலக்கியக்கொள்கை கருத்தரங்கு நடத்தினோம். அதற்குக் கட்டுரை தயாராகும். ஆண்டுக்கு 12 கட்டுரைகள் வரும் ஒன்பது தொகுதிகள் வந்தன.

    Enjoying the preview?
    Page 1 of 1