Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arumugasamiyin Adugal
Arumugasamiyin Adugal
Arumugasamiyin Adugal
Ebook394 pages3 hours

Arumugasamiyin Adugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1966ஆம் ஆண்டில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். பத்திரிகை, பிரசுரம் என்ற கவனிப்பு இன்றி, 150 சிறுகதைகள் எழுதி, 2007ஆம் ஆண்டில் வெளிவந்த கந்தசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம் பெற்றன. அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினாறு சிறுகதைகள் கொண்டதுதான் இந்நூல்.

இத்தேர்வில் இணைந்து செயல்பட்டவர் யுகன். அவர் ரசனையும் ஈடுபாடும் தேஜ்பூரிலிருந்து... தேடல், ஞானி இடம் பெறக் காரணமாகும். தேஜ்பூரிலிருந்து... தேடல் ஆகிய இரண்டு கதைகளும் ஆரம்ப காலக் கதைகள். ஓர் எழுத்தாளனுக்கு ஆரம்ப கால கதையென்று ஒன்றும் கிடையாது. ஏனெனில் அசல் எழுத்தாளனுக்கு எல்லாக் கதைகளும் ஆரம்ப காலக் கதைகள்தான். அவன் ஒவ்வொரு கதையையும் ஆரம்ப கால உற்சாகத்தோடும், கற்பனை வளத்தோடும் துடிப்போடுந்தான் எழுதுகிறான். எல்லாக் கதைகளிலும் அவன் இருக்கிறான், என்றாலும் காலம் என்பதோடு வளர்ந்து கொண்டிருக்கிறான் என்பது இல்லை. மீசை முளைப்பது, மயிர் நரைப்பது வளர்ச்சியோ, முதிர்ச்சியோ இல்லை. அது உடல் வளர்ச்சி. இலக்கிய வளர்ச்சி என்பது முதல் எழுத்திலேயே முதல் தரமான எழுத்தாகத்தான் இருக்கிறது என்பது இலக்கியச் சரித்திரந்தான். அது ஆறுமுகசாமியின் ஆடுகள்

என் கதைகள் ஆழ்ந்த படிப்பின் வழியாக எழுதப்பட்டவை இல்லை. நான் எழுதுவதற்கென்று ஆராய்ச்சி ஏதும் செய்தது இல்லை. எதைப் பற்றியும் எழுத முற்பட்டதும் இல்லை. பெரிய நோக்கம் கொண்டு எதையும் எழுதவில்லை என்பது போல பெயர், புகழ், விருது பெறவேண்டும் என்ற சின்ன நோக்கம் கொண்டும் எழுதப்பட்டவை இல்லை. அதுபோல பிடித்தவர்களைப் புகழ்ந்தும், பிடிக்காதவர்களை நிலைகுலைய வைக்கும் நோக்கத்தோடும் எழுதவில்லை.

வாழ்க்கையின் விசித்திரத்தை, வாழ்க்கையின் புதிரான புதிரை, அறிய முடியாத விசித்திரங்களை, அதாவது இருப்பு என்பதை இருப்பாகவே எழுதப்பட்டக் கதைகள் என்று எழுதிய கதைகளைப் படித்த பின்னர் அறிந்து கொண்டேன். தெரியாத வாழ்க்கையைப் பற்றி எழுதியதைப் படித்துப் பார்த்து, எழுதி இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அதாவது தெரிந்து கொண்டு எழுதியதைவிட, தெரிந்து கொள்ளாமல் எழுதிய கதையாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். அது மகிழ்ச்சி அளித்தது. நீண்ட மரபாக அதுவே இருக்கிறது என்பது சொல்லப்பட்டதைக் கேட்டபோது, எழுதுவதில் ஆர்வங்கூடியது.

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் பற்றி, நான் உரிமை கொண்டாட ஏதுமில்லை. இக்கதைகள் என்னால் எழுதப்பட்டவை என்பதற்கு மேல் அதன் மீது எந்த உரிமையும் கிடையாது. நன்றாக இருக்கிறது என்றாலும் சரி, நன்றாக இல்லை என்றாலும் சரி, அவை எழுதப்பட்டு பிரசுரம் பண்ணப்பட்டு விட்டன. அதன் மீது வாசிக்கிறவர்கள் தங்களின் சொந்த அபிப்பிராயத்தை முன்வைக்க எல்லாவிதமான தகுதிகளும் பெற்று இருக்கிறார்கள். அதற்கு மறுப்பு சொல்ல; விளக்கம் கூற எழுத்தாளன் என்ற முறையில் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஒரு படைப்பு பற்றி படைப்பின் தரம் பற்றி அது உணர்த்தும் பொருள் பற்றி அதுதான் சொல்லும். அதைப் படைத்தவன்கூட சரியாகச் சொல்ல முடியாது என்பது பொதுவிதியாக இருக்கிறது. கதைகள் முடிவும் தொடக்கமும் அற்றவை. கடைசிப் பக்கத்தில் கதை முடிவதில்லை என்பது போல் முதல் பக்கத்தில் தொடங்குவதும் இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் வேண்டி இருக்கிறது. ஒரு முடிவு அவசியமாகிறது. ஆனால் கதை முடியும் இடத்தில்தான் தொடங்குகிறது. ஏனெனில் வாழ்க்கை என்பது முடிவற்றதாக இருக்கிறது. முடிவுறாத வாழ்க்கையை முடிவுறாத தொனியில் சொல்லிப் பார்க்கும் முயற்சியாகவே கதைகள் எழுதப்படுகின்றன. அது ஒவ்வொரு வாசகரையும் தன்னளவில் தன் கதையை எழுதிக்கொள்ள வைக்கிறது. அதுதான் கதை என்பதன் கதை. எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனைக் கதைகள் இருக்கின்றன. அது எழுதப்பட்டதில் இருந்து எழுதப்படாத கதையாகவும் எழுதப்படாத கதையை எழுதவே ஒவ்வோர் எழுத்தாளனும் முயற்சி செய்கிறான். அது வெற்றி பெற வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஏனெனில் வெற்றி தோல்வி என்பது இலக்கியத்தில் இல்லை.

தமிழர்கள் நவீன இலக்கியம் படிப்பது இல்லை என்று அடிக்கடி குறை சொல்லப்படுகிறது. அது அனாவசியம். இலக்கியப் படிப்பு அப்படியொன்றும் வாழ்க்கைக்குத் தேவையானது இல்லை. வாழ்வதுதான் முக்கியம். பணம் சம்பாதிப்பதுதான் அவசியம். பணம் சம்பாதிக்க ஆளாய்ப் பறக்கும் மனிதர்களால் இலக்கியம் படிக்க முடியாதுதான். எல்லார்க்கும் எல்லாம் என்பது கிடையாது. அக்கறை கொண்டவர்கள், ஈடுபாடு கொண்டவர்கள் படிக்கிறார்கள். அதன் பயனை அடைகிறார்கள். இலக்கியத்தில் பயன் என்று அறிந்து இருப்பதும் அறியாமல் வாழ்வதும் ஒன்றுதான். அது நல்வாழ்க்கை. ஆனால் நல்வாழ்க்கை என்பது தனியானது இல்லை. ஆனால் இலக்கியத்தைப் படித்து அனுபவிக்க உள்ள ஒரே வழி அதனைப் படிப்பதுதான். படிக்கிறவர்கள் பாக்கியசாலிகள் என்று அதன் காரணமாகச் சொல்லப்படுகிறார்கள்.

- சா. கந்தசாமி

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125103485
Arumugasamiyin Adugal

Read more from Sa. Kandasamy

Related to Arumugasamiyin Adugal

Related ebooks

Reviews for Arumugasamiyin Adugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arumugasamiyin Adugal - Sa. Kandasamy

    http://www.pustaka.co.in

    ஆறுமுகசாமியின் ஆடுகள்

    Arumugasamiyin Adugal

    Author:

    சா.கந்தசாமி

    Sa. Kandasamy

    For more books

    http://pustaka.co.in/home/author/sa-kandasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தேஜ்பூரிலிருந்து...

    2. தேடல்

    3. ஒரு வருடம் சென்றது

    4. இரணிய வதம்

    5. தக்கையின் மீது நான்கு கண்கள்

    6. ஆறுமுகசாமியின் ஆடுகள்

    7. சாந்தகுமாரி

    8. மாயவவி

    9. காணாமல் போன ஏற்றம்

    10. பால்ய கால சிநேகிதன்

    11. அப்பா

    12. வாங்கூவர்

    13. எதிர்முனை

    14. நிழல்

    15. ஞானி

    முன்னுரை

    1964ஆம் ஆண்டு.

    நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட நா. கிருஷ்ண மூர்த்தி, பி. ராஜாராம், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரோடு சேர்ந்து இலக்கியச் சங்கம் என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தினோம். தலைவர், செயலாளர் எல்லாம் கிடையாது. எல்லாரும் இருபத்தைந்து வயதைத் தாண்டாதவர்கள். பி.ராஜாராம், எம்.ஐ.டி.யில் மாணவர். எஸ். ராமகிருஷ்ணன் லயோலா கல்லூரியில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணமூர்த்தி வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பணியில் சேர்ந்திருந்தார். நான் எம்.ஐ.டி. ஊழியன். இலக்கியச் சங்கம், சென்னையில் புதிதாகக் கட்டப்பட்ட தேவநேய நூலகத்தில் மாதம் இரண்டு கூட்டங்கள் நடத்தியது. கூட்டத்தில் பேச்சு இல்லை. கட்டுரை எழுதி வந்து படிக்க வேண்டும். க.நா.சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா, கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன் எல்லாம் கட்டுரை வாசித்தார்கள். கேள்வி கேட்டால் பதில் சொன்னார்கள். லா.ச. ராமாமிருதம் அடிக்கடி கூட்டத்திற்கு வந்து கொள்வார். ஒவ்வொரு கூட்டத்திற்கும் சுமார் ஐம்பது பேர் வந்தார்கள். அசோகமித்திரன், ந. முத்துசாமி, ஞானக்கூத்தன், ஐராவதம், தி.அ. சச்சிதானந்தம், ஓவியர் கிருஷ்ணமூர்த்தி, கே.எம். ஆதிமூலம் என்று பலரிடம் நட்பு ஏற்பட்டது.

    தமிழ் எழுச்சி, முற்போக்கு இலக்கியம் என்ற அலை வீசியபடி இருந்தது. ஆனால் இலக்கியச் சங்கம், சமூகம், இலக்கியம் என்று எதனோடும் சேர்ந்துகொள்ளலாம். மனிதர்கள் சார்ந்து அவர்களின் ஆசை அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் படைப்புகளை முன் னெடுத்துச் செல்லும் காரியத்தில் ஈடுபட்டிருந்தது.

    மூன்றாண்டுகளுக்குப் பிறகு இலக்கியச் சங்கம் தன்னைத்தானே பரிசோதனை செய்துகொள்ள ஆரம்பித்தது. பொதுவாக தமிழ் நவீன படைப்புகள் பற்றி விமர்சனம் என்பதில் இருந்து படைப்புகளில் ஈடுபடலாம் என்று முடிவு செய்தது.

    அதன் முதல் படியாக இலக்கியச் சங்கத்தோடு சேர்ந்திருக்கும் நான்கு பேரின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளியிடுவது என்று. நால்வரும் இளைஞர்கள். எழுதுவதில் அக்கறை கொண்டவர்கள். எழுதிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அவற்றைப் பத்திரிகைகள் எதற்கும் அனுப்பவில்லை. பத்திரிகைகளில் தங்கள் படைப்புகள் வெளிவர வேண்டும் என்ற ஆசையில்லாதவர்கள். காரணம் தங்கள் படைப்பு என்பது பத்திரிகையின் குண நலன் சார்ந்தது இல்லையென அறிந்து இருந்தார்கள். தங்கள் படைப்புகளை வெளியிட்ட பதிப்பகங்களை நாடிச் செல்வது கூட சரியாகப் படவில்லை. பதிப்பகங்கள் பத்திரிகையின் தொடர்ச்சியாக இருந்தன. எவையெல்லாம் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்தனவோ அவற்றையே பிரசுரம் செய்து வந்தன. சில பேராசிரியர்கள் நூல்களை சில பதிப்பகங்கள் வெளியிட்டன.

    தங்களின் புதுமையான, மரபு சார்ந்து எழுதப்பட்ட படைப்புகளுக்கென்று தனியாக ஒரு களத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவாகியது. அதன் அடிப்படையில் நான்கு பேர்களுக்கும் தலா மூன்று சிறுகதைகள். ஆக பன்னிரண்டு கதைகள். அதற்கு தலைப்புக் கதையாக ராமகிருஷ்ணன் எழுதிய கோணல்கள். எனவே அச்சிறுகதைத் தொகுப்பு கோணல்கள் என்று பெயர் பெற்றது. அதற்கு நால்வரையும் விட இளையவரான சுவாமிநாதன் என்னும் ஐராவதம் முன்னுரை எழுதினார்.

    கோணல்கள் அச்சாகிக் கொண்டிருந்தபோது ஓர் இலக்கியக் கூட்டத்தில் கு. அழகிரிசாமியைச் சந்தித்தேன். ஏதாவது

    எழுதுகிறீர்களா? பத்திரிகைகளுக்குக் கதைகள் அனுப்புகிறீர்களா என்று கேட்டார்.

    நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வருகிறோம். இதுவரையில் எந்தப் பத்திரிகையிலும் வெளிவராத கதைகள் என்றேன்.

    அது நல்லது. என்ன பெயர்? என்று கேட்டார். கோணல்கள்

    கு. அழகிரிசாமி நிமிர்ந்து பார்த்தார். என் கையைப் பற்றிக்கொண்டு ஒரு நல்ல பெயர் வைக்கக்கூடாது என்றார்.

    கோணல்கள் நல்ல பெயர்தானே என்றேன்.

    அவர் திருப்தி அடையவில்லை.

    1968 ஆம் ஆண்டு ஜனவரி தைத்திங்கள். பொங்கல் திருநாள். சென்னை யில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நகரம் முழுவதும் கொண்டாட்டங்கள். சான்றோர்கள் சிலைகள், ஊர்வலங்கள். மக்கள் பேச்சில் தமிழ் எழுச்சி. பத்திரிகைகள் பக்கம் பக்கமாக இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு பற்றி எழுதிக் கொண்டிருந்தன. முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை தமிழ்நாடு வெற்றிகரமாக அமையப் பாடுபட்டுக் கொண்டிருந்தார். சென்னை மெளண்ட் ரோடு என்று பெயர் பெற்று இருந்த சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் முதல் மாடியில் கோணல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    தி. ஜானகிராமன் கோணல்களை வெளியிட இலக்கியச் சிந்தனை ப. லட்சுமணன் பெற்றுக் கொண்டார். முகப்போவியம் பி. கிருஷ்ணமூர்த்தி. நாட்டில் ஏற்பட்டிருந்த புதுமையென்னும் அலையின் ஒவ்வோர் அம்சமும் கோணல்களில் பிரதிபலித்தது. ' தி. ஜானகிராமன், "நான் எல்லாக் கதைகளையும் படித்தேன், தனித்தன்மை கொண்ட கதைகள். அதில் எனக்கு நா. கிருஷ்ண மூர்த்தியின் மனிதர்கள் என்ற கதை அதிகமாகப் பிடித்திருக்கிறது. ராமகிருஷ்ணன் மனோதத்துவ ரீதியில் எழுதி உள்ளார். நிஜமாகவே நல்ல கதைகள். இவர்கள் யாரையும் சார்ந்து

    இல்லாமல் தனியாக எழுதி தனியாகப் புத்தகம் வெளியிட்டு இருப்பது எழுத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைதான். எழுத்தாளன் தன் எழுத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். நான் சம்பிரதாயத்திற்காகச் சொல்லவில்லை. கோணல்களில் எழுதியிருக்கும் எழுத்தாளர்களுக்கு பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது. இவர்கள் கோணல்களில் எழுதி இருப்பது போலவே எழுதிக்கொண்டு போக வேண்டும்" என்றார்.

    டில்லியில் இருந்த க. நா. சுப்ரமண்யம் லிபி' என்ற பெயரில் ஓர் ஆங்கிலப் பத்திரிகை நடத்திக்கொண்டு இருந்தார். அதில் கோணல்களில் இடம் பெற்று இருந்த தேஜ்பூரிலிருந்து என்ற சிறுகதையை மொழிபெயர்த்து வெளியிட்டார். மும்பையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த குவிஸ்டு என்ற ஆங்கில இலக்கியப் பத்திரிகையில், கோணல்கள் என்ற தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு, தமிழ்ச் சிறுகதையில் ஏற்பட்டிருந்த தேக்கத்தை உடைத்து முன்னே எடுத்துச் செல்கிறது என்று எழுதினார். கோணல்களில் எழுதியவர்கள் தங்களின் தனித்தன்மை, பொதுத்தன்மையோடு ஒரு குழுவாக அடையாளம் கண்டு கொள்வதை விரும்பாமல் எழுதினார்கள். அதுவே அவர்களின் படைப்பை முன்னெடுத்துச் சென்றது.

    கோணல்கள் தொகுப்பு தேஜ்பூரிலிருந்து, தேடல், உயிர்கள் என்று மூன்று கதைகள் இடம் பெற்று இருந்தன. சிறுகதை என்ற அளவில் ஒன்றுபடும் அவை ஒவ்வொரு கதையும், கருத்தாலும், சொல்லும் விதத்தாலும், சொல்லாமல் விட்டிருக்கும் முறையாலும் தனித்தனியானவை. ஒன்றுபோல் இருப்பதெல்லாம் ஒன்றில்லை என்பதுதான் அடிப்படை. அந்த அடிப்படையில்தான் என் கதைகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன.

    கதைகள் வெகு காலமாகச் சொல்லப்பட்டு வந்தாலும் தமிழ் உரைநடையில் பதினெட்டாவது நூற்றாண்டில் கான்ஸ்டாண்டிநோபிள் என்னும் வீரமாமுனிவர் பரமார்த்த குருவின் கதை என்று முட்டாள்தனமான குருவையும் அவர் சீடர்கள் நான்கு பேரின் செயல்பாடுகள் பற்றி எழுதினார். உரைநடை என்பதால் தமிழ் படிக்கத் தெரிந்தவர்களில் பலர் படித்தார்கள். மூடத்தனம் என்பது ஒருவரின் தனிப்பட்ட குணமில்லை, அது எல்லா மனிதர்களிடமும் இருக்கிறது. ஆனால்

    பலரிடம் அதிகமாகவும், சிலரிடம் குறைவாகவும் இருக்கிறது. ஒவ்வொருவரிடமும் உள்ள மூடத்தனத்தை அறிந்து கொள்ளும் விதமாகவும் எழுதினார். பரமார்த்த குருவின் கதையின் மொழி மாறிவிட்டது. அதில் உள்ள வாக்கிய அமைப்பு அப்படியொன்றும் எளிதாகப் படிக்க முடியவில்லை. இருந்தாலும் பரமார்த்த குருவின் கதை கருத்திற்காகத் தன்னிடம் பரமார்த்த குருவின் கதையில் வரும் குரு, சீடர்களிடம் உள்ளது எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டும், தெரிந்து கொள்ளவும் படித்து வருகிறார்கள். வீரமாமுனிவர்தான் தமிழில் கதைகள் எழுத உரைநடையில் ஒரு மொழியை உருவாக்கிக் கொடுத்தார்.

    வீரமாமுனிவர்க்குத் தாய்மொழி இத்தாலி. அவர் கிறிஸ்துவ சமயத்தில் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர். அதனால் பழமைவாதி என்றும், சனாதனி என்றும் சொல்லிவிடலாம். திருக்குறள் அறத்துப்பால், பொருட்பாலை கிரேக்கம், லத்தீன் மொழிகளில் மொழி பெயர்த்த அவர் காமத்துப்பாலை மொழிபெயர்க்கவில்லை. ஒரு கிறிஸ்துவத் துறவிக்கு காமத்துப் பாலை மொழிபெயர்ப்பது தகாதது என்று தவிர்த்து விட்டார். ஆனால் மூடர்கள், முட்டாள்கள் பற்றி தமிழில் உரைநடையில் கதையெழுதினார். தாய்மொழிதான் கதை எழுத உகந்த மொழி என்பது கிடையாது. ஒரு குழந்தைக்குத் தாய்மொழி பிறப்பின் வழியாக வருகிறது. ஆனால் அதுவே எல்லாம் என்பது கிடையாது. பல மொழிகள் கற்றிருந்தால் எந்த மொழியில் சரளமாக எழுத முடிகிறதோ அதுதான் முதன்மையான மொழி. மொழி என்பது மனிதர்கள் கண்டுபிடிப்பு. மொழியை எழுதும் எழுத்து இன்னொரு கண்டுபிடிப்பு. கண்டுபிடிப்பு எல்லாம் காலம் காலமாக மாறியே வருகிறது. மாறிவரும் மொழியிலும் மாறிவரும் எழுத்தின் வடிவத்திலும் மாறாத ஒரு முறையில் எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். பெரும்பாலும் அது தாய்மொழியாகவும்; சிறுபான்மையாகக் கற்ற மொழியாகவும் இருக்கிறது. எந்த மொழியில் எழுதினாலும் அசலான படைப்பு எழுத்தாளர்கள் தங்களுக்கென ஒரு மொழியை எழுதும் மொழியின் வழியாகவே கண்டறிந்து கொண்டு எழுதுகிறார்கள். அது அவர்களின் சொந்த மொழி என்பது போல எல்லார்க்குமான மொழியாக இருக்கிறது. அதாவது அசலான படைப்பை எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த மொழியின் படைப்பு போலவே இருக்கிறது;

    அப்படி அது இல்லையென்றால் சரியாக மொழி பெயர்க்கப்பட வில்லை என்றோ, சரியாக எழுதப்படவில்லை என்றோதான் சொல்ல வேண்டும்.

    மனிதன் எங்கு வாழ்ந்தாலும் ஒரே மனிதனாகவே இருக்கிறான்; மனிதனிடம் வேற்றுமையைவிட ஒற்றுமைதான் அதிகமாகக் காணப்படுகிறது. இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்களைப் பார்க்க முடியவில்லை என்றால் அவர்கள் எழுதிய இலக்கியங்களைப் படிக்க முடிகிறது; அவர்கள் வரைந்த ஓவியங்களைப் பார்க்க முடிகிறது; அவர்கள் வாழ்ந்த நகரங்களைப் பார்க்க முடிகிறது. அதில் இருந்து தெரிந்து கொள்வது, நாம் அதிகமாக முன்னோர் களிடம் இருந்து வேறுபடவில்லை. வேறுபட்டிருப்பதாகப் படுவது இல்லை வேறுபாடு என்பதில்லை என்பது தான். அதன் காரணமாக இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் புத்தர், உனக்கு நீயே ஒளியாகவும், விளக்காகவும் இரு என்று சொன்னதும், உனக்கு யாரும் வழிகாட்ட முடியாது என்று சொன்னது, சொல்லப்பட்ட காலத்தைவிட நிகழ்காலத்திற்கு உகந்தது மாதிரி இருக்கிறது. அது வாழ்க்கை என்பது பழசு மாதிரி புதிதாக இருக்கிறது; புதிது மாதிரி பழையதாக இருக்கிறது. அதனை இலக்கியங்கள் அடிக்கடி எடுத்துச் சொல்லிக்கொண்டே வருகிறது. அதனால்தான் இலக்கியத்தில் பழையது, புதியது என்று ஒன்றும் கிடையாது. சொல்வது போல் சொல்லாமலும், சொல்லாதது போல சொல்லிக்கொண்டும் சில படைப்புகள் காலம் காலமாக ஜீவித்துக் கொண்டிருக்கின்றன. அது அக வாழ்க்கை என்பதுபோல புற வாழ்க்கை உண்டு; புற வாழ்க்கை இருப்பது போல அக வாழ்க்கை உண்டு. அறிவதும் அறியாமல் போவதும் அவரவர் சம்பந்தப்பட்டது.

    மனித சரித்திரம் என்பதும் இலக்கியச் சரித்திரம் என்பதும் அது தான். ஆற்றல் என்பதை அறிவால் அறிந்தது போல, அறியாததையும், அறியாதது போலவும் நெடுங்காலமாக எழுதி வருகிறார்கள். அதுதான் இலக்கியமாக இருக்கிறது. இலக்கியம் என்பது அறிவுரை சொல்வதோ வழிகாட்டுவதோ இல்லை. அது வாழ்க்கை என்பதை அதன் எல்லா விதமான பரிமாணங் களோடும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளவற்றைச் சேர்த்துச்

    சொல்வதுதான். எனவேதான் படைப்பு என்பதும் மரம், செடி, கொடிகளும், பறவைகளும், விலங்குகளும், மீன்களும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்களும் இடம் பெறுகின்றன. வீசும் காற்றும், பொழியும் மழையும், பூக்கும் பூவும், பாடும் பறவையின் கீதமும் இலக்கியத்தோடு சேர்ந்து போகிறது. மனிதன் என்பவனால் படைக்கப்பட்டாலும் இலக்கியம் அவன் சம்பந்தப்பட்டு மட்டும் இருப்பது இல்லை. அவனோடு சுற்றியிருக்கும் ஒவ்வொன்றும் அதனோடு சேர்ந்து போகிறது.

    அதுதான் இழையறாமல் நூற்றாண்டுகளாக இலக்கியமாக இருந்து வருகிறது; அதனைச் சிலர் அறிந்தும், சிலர் அறியாமலும் எழுதினார்கள். அறிந்து எழுதியவர்களைவிட அறியாமல் எழுதியவர்கள் கவனிப்புக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் மனிதன் அறிந்து எழுதிவிட முடியாது. அறிவதற்கான காலமும், எழுதிய மொழியும் இல்லை. ஆனால் எழுதப்பட்டதன் வழியாக அறிய முடிகிறது. தமிழ்ச் சிறுகதைகள் தமிழ்ப் பத்திரிகைகளில்தான் தோன்றி வளர்ந்தன. சுதந்திரப் போராட்ட வீரரான வ.வே.சு. ஐயர் புதுச்சேரியில் அஞ்ஞானவாசம் புரிந்தபோது தன்னுடைய பாலபாரதி என்னும் பத்திரிகையில் குளத்தங்கரை அரச மரம் என்ற சிறுகதையை தன் மனைவி பெயரில் சு. பாக்கியலெட்சுமி என்று எழுதினார். அதுதான் தமிழின் நவீனச் சிறுகதை. ஒரு திட்டமான வடிவ நேர்த்தியில் குளத்தங்கரையில் நீராட வரும் பெண்கள் பேசும் ஊர்க்கதைகள் வழியாக ஒரு சோகமாக முடியும் இளம் பெண்ணின் வாழ்க்கையைச் சொன்னார். அது தமிழ்நாட்டுக் கதைதான். பணம், சொத்து என்பதை மருமகள் வழியாக அடைய ஆசைப்படும் பெண்கள் கதைதான். பல எழுத்தாளர்கள் பெண்கள் முன்னேற்றம், வரதட்சணை கொடுமை என்பதற்கு எதிராக எழுத குளத்தங்கரை அரச மரம் ஓர் ஆதாரமாக இருந்தது.

    கருத்துகளால் மட்டும் கதை படிக்கப்படுவதில்லை. சொல்லும் முறையில், சொல்லாமல் இருக்கும் பாங்காலும் கதை வெற்றியடையும் என்பதைத் தமிழில் சிலர் எழுதி நிலைநாட்டினார்கள். புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், மெளனி, க.நா. சுப்ரமண்யம், கு. அழகிரிசாமி, அசோகமித்திரன்,

    சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என்று சில பெயர்களைச் சொல்ல வேண்டும். ஆனால் தமிழ் மரபிற்கு பெயரே தேவையில்லை. அது தொகுப்பு மரபு. ஓர் ஆசிரியரின் தொகுப்பு இருப்பது போல பல ஆசிரியர்களின் பாடல்களின் தொகுப்புகளும் உண்டு. தொகுப்பு என்பது விமர்சனத்தின் அடிப்படையில் உருவாவது. எனவே அதற்குக் காலம் கிடையாது. எப்பொழுது எழுதப்பட்டது என்பதைக் கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை. அது பல்வேறு ஆசிரியர்களின் தொகுப்பிற்குத்தான் என்று இல்லை. ஓர் ஆசிரியர் படைப்பைக்கூட அது எழுதப்பட்ட காலவரிசையின்படி பார்ப்பது இல்லை. ஏனெனில் படைப்பு என்பதில் காலம் கிடையாது. அசலான, தரமான படைப்பு என்பது காலம் என்பதை தன்னளவில் உதறிவிட்டு முன்னே சென்று கொண்டிருக்கிறது. அதில் எழுதப்பட்ட காலத்தில் சுவடுகள் இருக்கலாம். ஆனால் அதில் நின்று விடுவதில்லை.

    1965ஆம் ஆண்டில் சாயாவனம் எழுதி முடித்தேன்.

    1966ஆம் ஆண்டில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். பத்திரிகை, பிரசுரம் என்ற கவனிப்பு இன்றி, 150 சிறுகதைகள் எழுதி, 2007ஆம் ஆண்டில் வெளிவந்த கந்தசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம் பெற்றன. அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினாறு சிறுகதைகள் கொண்டதுதான் இந்நூல்.

    இத்தேர்வில் இணைந்து செயல்பட்டவர் யுகன். அவர் ரசனையும் ஈடுபாடும் தேஜ்பூரிலிருந்து... தேடல், ஞானி இடம் பெறக் காரணமாகும். தேஜ்பூரிலிருந்து... தேடல் ஆகிய இரண்டு கதைகளும் ஆரம்ப காலக் கதைகள். ஓர் எழுத்தாளனுக்கு ஆரம்ப கால கதையென்று ஒன்றும் கிடையாது. ஏனெனில் அசல் எழுத்தாளனுக்கு எல்லாக் கதைகளும் ஆரம்ப காலக் கதைகள்தான். அவன் ஒவ்வொரு கதையையும் ஆரம்ப கால உற்சாகத்தோடும், கற்பனை வளத்தோடும் துடிப்போடுந்தான் எழுதுகிறான். எல்லாக் கதைகளிலும் அவன் இருக்கிறான், என்றாலும் காலம் என்பதோடு வளர்ந்து கொண்டிருக்கிறான் என்பது இல்லை. மீசை முளைப்பது, மயிர் நரைப்பது வளர்ச்சியோ, முதிர்ச்சியோ இல்லை. அது உடல் வளர்ச்சி. இலக்கிய வளர்ச்சி என்பது முதல் எழுத்திலேயே முதல் தரமான எழுத்தாகத்தான் இருக்கிறது என்பது இலக்கியச் சரித்திரந்தான். அது 14 * ஆறுமுகசாமியின் ஆடுகள்

    அறியப்பட்டிருப்பது போல, அறியப்படாமலும் இருக்கிறது. சரித்திரம் வேறு; இலக்கியம் வேறு என்பதுதான் முக்கியமான அம்சம். எழுதி எழுதி பலர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பதும், சிலரின் முதல் படைப்பே முதல் தரமான படைப்பாகவும் இருக்கிறது. அதுவும் சரித்திரந்தான்.

    என் கதைகள் ஆழ்ந்த படிப்பின் வழியாக எழுதப்பட்டவை இல்லை. நான் எழுதுவதற்கென்று ஆராய்ச்சி ஏதும் செய்தது இல்லை. எதைப் பற்றியும் எழுத முற்பட்டதும் இல்லை. பெரிய நோக்கம் கொண்டு எதையும் எழுதவில்லை என்பது போல பெயர், புகழ், விருது பெறவேண்டும் என்ற சின்ன நோக்கம் கொண்டும் எழுதப்பட்டவை இல்லை. அதுபோல பிடித்தவர்களைப் புகழ்ந்தும், பிடிக்காதவர்களை நிலைகுலைய வைக்கும் நோக்கத்தோடும் எழுதவில்லை.

    வாழ்க்கையின் விசித்திரத்தை, வாழ்க்கையின் புதிரான புதிரை, அறிய முடியாத விசித்திரங்களை, அதாவது இருப்பு என்பதை இருப்பாகவே எழுதப்பட்டக் கதைகள் என்று எழுதிய கதைகளைப் படித்த பின்னர் அறிந்து கொண்டேன். தெரியாத வாழ்க்கையைப் பற்றி எழுதியதைப் படித்துப் பார்த்து, எழுதி இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அதாவது தெரிந்து கொண்டு எழுதியதைவிட, தெரிந்து கொள்ளாமல் எழுதிய கதையாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். அது மகிழ்ச்சி அளித்தது. நீண்ட மரபாக அதுவே இருக்கிறது என்பது சொல்லப்பட்டதைக் கேட்டபோது, எழுதுவதில் ஆர்வங்கூடியது.

    கோணல்கள் தொகுப்பில் இடம் பெற்ற தேஜ்பூரிலிருந்து என்ற கதையை நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு படித்தபோது அது புதிதாக இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இரண்டொரு வார்த்தை கவிதை மொழியாக இருப்பதும் தெரிந்தது. ஆனால் கதையின் கருத்தும் அது சொல்லிய வாழ்க்கையும், சொல்லாமல் விட்டு இருக்கும் மனிதர்களின் மனோபாவனைகளும் பழசாகவில்லை. மனிதர்களே பழையவர்கள் இல்லை. ஒவ்வொரு நாளும் மனிதன் புதியவனாகவே இருக்கிறான். ஒரே காரியத்தைச் செய்வதால் அவன் ஒரே மாதிரியான ஆளில்லை. மனிதன் என்பவன் புறத்தால் அறியப்படுகின்றவன் கிடையாது. அவன் அக மனிதன். மனிதன் என்பவனை அகத்தின் வழியாகவே அறிந்து

    கொள்ள வேண்டும். அதைத்தவிர மனிதனை அறிந்துகொள்ள வழியெதுவும் இல்லை என்பதைத்தான் இலக்கியங்கள் சொல்கின்றன. விளக்க உரையாக இல்லாமல் படைப்பாகச் சொல்கிறது நிலைத்து இருக்கிறது. புறச் செயல் வழியாகவே அகம் சொல்லப்படுகிறது.

    அதில்தான் உயிர்கள் வருகிறது. உயிர் என்றால் மனித உயிர் என்பது மட்டுந்தானா? மனித உயிர் போல, உலகத்தில் எல்லா உயிர்களும் முக்கியந்தான். கேட்பதற்கு, தன் உரிமையை நிலைநாட்டுவதற்குப் பேசுவதற்கு மற்ற உயிர்களுக்கு வழி இல்லை என்பதால், தாக்க, தன் உரிமையை நிலைநாட்டுவதற்கு படைபலம் இல்லை, ஆயுதம் இல்லை என்பதால் பொருட்படுத்த வேண்டியது இல்லை என்பது இல்லை. நேசந்தான் வாழ்க்கை; அது சொல்கிறது; சொல்லப்படவில்லை என்பது முக்கியமல்ல. அது இருக்கிறது. எனவே எழுத முடிகிறது. அசலான கதை என்பதற்குக் காலம் இல்லை. இடம் கிடையாது, மொழியால் எழுதப்பட்டாலும் மொழிக்குள் அடங்கி இருப்பது இல்லை.

    1967 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உயிர்கள் இருபதாண்டு களுக்குப் பிறகு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இல்லஸ்ட்ரெட் வீக்லி இதழில் வெளிவந்தது என்பதால் அது முதல் தரமான கதை என்பது இல்லை. முதல் தரமான கதை என்பது எப்போதும் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்ளும். அதுதான் இலக்கியம். அது சொல்லப்படவில்லை; அறியப்பட வில்லை என்பதற்காக இல்லையென்றாகி விடாது.

    தேர்ந்தெடுத்த சிறுகதைகள் பற்றி, நான் உரிமை கொண்டாட ஏதுமில்லை. இக்கதைகள் என்னால் எழுதப்பட்டவை என்பதற்கு மேல் அதன் மீது எந்த உரிமையும் கிடையாது. நன்றாக இருக்கிறது என்றாலும் சரி, நன்றாக இல்லை என்றாலும் சரி, அவை எழுதப்பட்டு பிரசுரம் பண்ணப்பட்டு விட்டன. அதன் மீது வாசிக்கிறவர்கள் தங்களின் சொந்த அபிப்பிராயத்தை முன்வைக்க எல்லாவிதமான தகுதிகளும் பெற்று இருக்கிறார்கள். அதற்கு மறுப்பு சொல்ல; விளக்கம் கூற எழுத்தாளன் என்ற முறையில் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஒரு படைப்பு பற்றி படைப்பின் தரம் பற்றி அது உணர்த்தும் பொருள் பற்றி அதுதான் சொல்லும். அதைப் படைத்தவன்கூட சரியாகச் சொல்ல முடியாது என்பது பொதுவிதியாக இருக்கிறது.

    கதைகள் முடிவும் தொடக்கமும் அற்றவை. கடைசிப் பக்கத்தில் கதை முடிவதில்லை என்பது போல் முதல் பக்கத்தில் தொடங்குவதும் இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் வேண்டி இருக்கிறது. ஒரு முடிவு அவசியமாகிறது. ஆனால் கதை முடியும் இடத்தில்தான் தொடங்குகிறது. ஏனெனில் வாழ்க்கை என்பது முடிவற்றதாக இருக்கிறது. முடிவுறாத வாழ்க்கையை முடிவுறாத தொனியில் சொல்லிப் பார்க்கும் முயற்சியாகவே கதைகள் எழுதப்படுகின்றன. அது ஒவ்வொரு வாசகரையும் தன்னளவில் தன் கதையை எழுதிக்கொள்ள வைக்கிறது. அதுதான் கதை என்பதன் கதை. எத்தனை மனிதர்கள் உண் டோ அத்தனைக் கதைகள் இருக்கின்றன. அது எழுதப்பட்டதில் இருந்து எழுதப்படாத கதையாகவும் எழுதப்படாத கதையை எழுதவே ஒவ்வோர் எழுத்தாளனும் முயற்சி செய்கிறான். அது வெற்றி பெற வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஏனெனில் வெற்றி தோல்வி என்பது இலக்கியத்தில் இல்லை.

    பல நூற்றாண்டுகளுக்கு படிக்கப்படாமல் இருக்கும் படைப்புகள் படிக்கப்படும்போது புது படைப்புகளாக இருக் கின்றன. அதற்கோர் எடுத்துக்காட்டு சங்க இலக்கியங்கள்தான். பல நூற்றாண்டுகளுக்கு சங்க இலக்கியம் என்ற தொகுப்பு நூல்கள் ஓலைச்சுவடியிலேயே இருந்தன. அது தமிழ் மக்களின் அரிய படைப்புத்தான் என்றாலும் பெரும்பான்மையான மக்களால் படிக்கவேபடவில்லை. பல நூற்றாண்டுகளாக அவை பற்றி ஒரு குறிப்பும் கிடையாது. கல்வெட்டுகளில் அவை பொறிக்கப்படவே இல்லை. கிறிஸ்துவ சமயப் பிரசாரத்தில் ஈடுபட்டு, தமிழ் நூல்களைப் படைத்த வீரமாமுனிவர், சீகன்பாகு, போப், கால்டுவெல் யாரும் சங்க இலக்கியம் பற்றி ஒரு வரிகூட எழுதவில்லை. பெரும் தமிழ்ப்புலவர்கள் அவற்றை அளித்ததில்லை. அதனால் சங்க நூல்களுக்கோ தமிழ் அறிந்தவர்களுக்கோ இழுக்கொன்றும் ஏற்படவில்லை. படிப்பு என்பதால் ஒரு சமூகம் பெரிதாக எதையும் பெறுவது இல்லை. அது படைப்பாளி சம்பந்தப்பட்டது.

    தமிழர்கள் நவீன இலக்கியம் படிப்பது இல்லை என்று

    அடிக்கடி குறை சொல்லப்படுகிறது. அது அனாவசியம். இலக்கியப் படிப்பு அப்படியொன்றும் வாழ்க்கைக்குத் தேவையானது இல்லை. வாழ்வதுதான் முக்கியம். பணம் சம்பாதிப்பதுதான் அவசியம். பணம் சம்பாதிக்க ஆளாய்ப் பறக்கும் மனிதர்களால் இலக்கியம் படிக்க முடியாதுதான். எல்லார்க்கும் எல்லாம் என்பது கிடையாது. எல்லாரும் ஒன்று என்பது உயர்ந்த இலட்சியந்தான். ஆனால் ஒன்றில்லை என்பது நிதர்சனம். அக்கறை கொண்டவர்கள், ஈடுபாடு கொண்டவர்கள் படிக்கிறார்கள். அதன் பயனை அடைகிறார்கள். இலக்கியத்தில் பயன் என்று அறிந்து இருப்பதும் அறியாமல் வாழ்வதும் ஒன்றுதான். அது நல்வாழ்க்கை. ஆனால் நல்வாழ்க்கை என்பது தனியானது இல்லை. எத்தனையோ பிரச்சினைகளுக்கு இடையில் வாழும் ஒரு நல்வாழ்க்கை வாழ இலக்கியம் தன்னளவில் துணை செய்கிறது. ஆனால் இலக்கியத்தைப் படித்து அனுபவிக்க உள்ள ஒரே வழி அதனைப் படிப்பதுதான். படிக்கிறவர்கள் பாக்கியசாலிகள் என்று அதன் காரணமாகச் சொல்லப்படுகிறார்கள்.

    1. தேஜ்பூரிலிருந்து...

    இராணுவத்தினர் மட்டும்' என்று பெயர்ப் பலகை பாராட்டியிருந்த ரெயில் பெட்டியிலிருந்து முதலில் இறங்கினான் கோபாலகிருஷ்ணன். அவனைத் தொடர்ந்து ஆதிகேசவலுவும் பரமேஸ்வரனும் இறங்கினார்கள். கூட்டமும் கூச்சலும் அவர்களைத் திணற அடித்தது. எதிர்பாராத விபத்தில் சிக்கிக் கொண்டதைப்போல நடுங்கினார்கள். ஒவ்வொரு பெரிய ரெயில் நிலையம் வரும்போதும் துயருற்றுத் தவித்து மெல்ல மெல்ல ஆறுதலடைவது அவர்களுக்குப் பழக்கமாகி விட்டது.

    கோபாலகிருஷ்ணன் முகத்தைச் சுளித்துக்கொண்டு ரெயில் பெட்டியின் பக்கம் பார்வையைச் செலுத்தினான். இராணுவத்தினருக்கான அந்தப் பெட்டியில் மைசூரைச் சேர்ந்த போந்தரே சலனமற்ற பாவத்தோடு உட்கார்ந்திருந்தான். ராமன் நாயர் சிகரெட் சாம்பலைத் தட்டிக் கொண்டிருந்தார். வண்டி புறப்படும் போது அவசரமாக ஓடிவந்து ஏறிய சிதம்பரம் 'இண்டியன் எக்ஸ் பிரஸி 'யின் கடைசி பக்கத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தான்.

    தேஜ்பூரிலிருந்து புறப்பட்ட வண்டியிலிருந்து களிப்பும் கலகலப்பும் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வந்தன. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் இரண்டொருவர் இறங்கிக் கொண்டே இருந்தார்கள். இன்னும் ஐந்து ஸ்டேசன்களுக்கு அப்புறம் சிதம்பரம்

    Enjoying the preview?
    Page 1 of 1