Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ettavathu Kadal
Ettavathu Kadal
Ettavathu Kadal
Ebook170 pages1 hour

Ettavathu Kadal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விசாகப்பட்டினத்தில் இருந்து ராஞ்சிக்கு தாமோதர ரெட்டிக்கு பதிலாக ஒரு கருத்தரங்கிற்கு எதிர்பாராமல் செல்லும் பன்னீர் செல்வம். அதே கருத்தரங்கிற்கு அசோக் தாசப்பா மற்றும் ரேணுகாதேவியும் வருகின்றனர்... ரேணுகாவின் கட்டுரையில் என்ன அபத்தம் ஏற்பட்டது? அதனால் அசோக் தாசப்பா ஆத்திரமடைய காரணம் என்ன? இதில் ரேணுகாவின் நிலை என்ன? இதையறிந்த பன்னீர் செல்வம் எவ்வாறு ரேணுகாவிற்கு ஆறுதல் கூறுவான்? நாமும் சில சுவாரஸ்யங்களுடன்...

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580125107054
Ettavathu Kadal

Read more from Sa. Kandasamy

Related to Ettavathu Kadal

Related ebooks

Reviews for Ettavathu Kadal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ettavathu Kadal - Sa. Kandasamy

    https://www.pustaka.co.in

    எட்டாவது கடல்

    Ettavathu Kadal

    Author:

    சா. கந்தசாமி

    Sa. Kandasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sa-kandasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    முன்னுரை

    எல்லா கதைகளும் ஒரு மனோ நிலையில்தான் எழுதப்படுகின்றன. ஆனால் சில நேரங்களில் அது எழுதப்படுகின்றன. ஆனால் சில நேரங்களில் அது எழுதுகின்றவன் மனோ நிலையாகவும், பல நேரங்களில் கதையின் மனோ நிலையாகவும் அமைந்துவிடுகிறது. அதுதான் படைப்பு என்பதன் ஆதார சுருதி. தீர்மானம் திட்டம் என்பதை எல்லாம் மீறிப்போய் கதை தன்னைத்தானே அமைத்துக்கொண்டு விடுகிறது.

    விசாகப்பட்டினத்தில் இருந்து ராஞ்சிக்கு ஒரு கருத்தரங்கிற்கு எதிர்பாராமல் செல்லும் பன்னீர் செல்வம் என்னும் செல்வத்தின் கதைதான் எட்டாவது கடல். எட்டாவது கடலில் செல்வத்தின் பங்கு என்ன? கதைக்கு அவனின் பங்களிப்பு எதைக் கொடுக்கிறது. சொல்லப்பட்ட கதையின் வழியாக அதன் சொல்லப்படாத கதைதான் எட்டாவது கடல். அது பற்றி இன்னும் என்னென்னவோ சொல்லலாம். கதை, நாவல் என்பதில் ஆசிரியனே முக்கியமில்லை. கதை என்பது எழுதப்பட்டதில் கிடையாது. எழுதப்பட்டதன் வழியாக எழுதப்படாத ஒரு கதையை அந்தரங்கத்தில் இருக்கும் கதையை படிக்கும்போது எழுதிகொள்ள வைக்கிறது. அதன் காரணமாகவே கதைகள் படிக்கப்படுகின்றன. இம்மாதிரியான கதைகளில் கதை இல்லை; கற்பனை கிடையாது. வாழ்க்கை என்பது மட்டுந்தான் இருக்கிறது. அது தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை இல்லை. பலரின் வாழ்க்கை, அறிந்ததும், அறியாததும் சேர்ந்தது. ஆனால் படிக்கும் போது இழையாமல் பிரிந்து முடிகிறது. அதில் பலரின் கதையோடு தெரிந்தவர்கள், உறவினர்கள் கதைகளோடு சொந்தக் கதையும் இருப்பது தெரிகிறது. அதுவே படிக்க வைக்கிறது. யாரோ, எப்பொழுதோ எழுதிய நாவல்களில், கதைகளில் வாசிக்கின்றவர்கள் கதையும், பேசிய பேச்சும் அப்படியே இருக்கிறது. என்பதுதான் அதன் பலமாக இருக்கிறது. படிப்பு என்பதைத் தூண்டுகிறது.

    தன்னை இன்னொரு படைப்பின் வழியாக அறிந்துகொள்ளும் போது வாழ்க்கையில் சுவாரசியம் கூடுகிறது. துன்பம், மகிழ்ச்சி என்பதில் ஆழ்ந்து போகாத ஒரு மனோ நிலையைத் தருகிறது.

    செல்வம் தன் பயணத்தில் என்ன தெரிந்து கொண்டான் என்பதுதான் எட்டாவது கடல் என்று சொல்லி விடலாமா? எதைப்பற்றியும் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது என்பதுதான் வாழ்க்கையாக இருக்கிறது.

    எட்டாவது கடல் இருப்பதை இல்லாததுபோல சொல்கிறது என்றால் கறுப்பின் குரல் உறுதியாக அறிந்ததன் அடிப்படையில் பேசுகிறது. அது தியாகராஜன் குரலா? அவன் என்ன தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறான். பேசுவதெல்லாம் அவன் அறிவா? படிப்பா?

    வாழ்க்கையில் இருந்து அவன் என்ன கற்றுக்கொள்ளவில்லை. அவனுக்கு வழிகாட்டி அவன் தாத்தா தியாகராஜ முதலியா? அவன் பித்தனா? புத்தி பேதலித்தவனா? இல்லை எல்லாம் அறிந்து கொண்டிருப்பவனா? எல்லாம் என்றால் என்ன? முதலில் தன்னை அறிந்து கொண்டிருக்கிறானா? தன்னை அறிந்துகொள்வது என்றால் என்ன? நிறைய கேள்விகளை கறுப்பின்குரல் கேட்கிறது. இது அவன் உள்ளுக்குள் இருந்து வரும் குரல். சில நேரங்களில் அவன் தனக்குத்தானே பதில் சொல்லி அடக்கிவிடுகிறான். ஆனால் மனித மனம் அடங்குவது இல்லை. அது எப்பொழுதும் சமுத்திரம் போல ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கிறது.

    சமுத்திரம் பெரிதா? மனம் பெரிதா என்றால் மனம் பெரிது என்று உடனே சொல்லிவிடலாம். ஏனெனில் சமுத்திரம் தெரிந்தது. தெரியாத மனம் சமுத்திரத்தையெல்லாம் விட பெரியதாகப் பரந்து விரிந்துக் கிடக்கிறது. அறிய முடியாத ஆழம் காண முடியாத மனத்தைப் பற்றி அறியாத விதமாகவே கறுப்பின் குரல் கூறுகிறது.

    26/9/2011

    நந்தனம்.

    சென்னை 600 035

    சா. கந்தசாமி

    1

    விசாகப்பட்டினம் ரயிலடியில் பன்னீர்செல்வம் உட்கார்ந்து பிளாட்பாரத்தையே பார்த்தபடி இருந்தான். கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் முதல் பிளாட்பாரத்தில் இருந்து மூன்றாவது பிளாட்பாரத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். இவன் திரும்பி பேண்ட் பையில் கைவிட்டு கைக்குட்டை எடுத்துக் கொண்டான். மூன்றாவது பிளாட்பாரத்தில் இருந்து ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது.

    பன்னீர்செல்வம் எழுந்து நின்று கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றதும் கூட்டம் கலைந்து, முதல் பிளாட்பாரத்தின் வழியாக வெளியில் சென்றது. இவன் ஓரடி முன்னே எடுத்து வைத்தான். பார்வை ரயில்வே கடிகாரத்தின் மேல் சென்றது. மணி மூன்று பதினைந்து. தலையை ஒருமுறை அசைத்துக்கொண்டான்.

    நீலச்சட்டை போட்டுக்கொண்டிருந்த ரயில்வே ஆள் இவனை இடித்துத் தள்ளிக் கொண்டு ஓடினான். கைக்குட்டை கீழே விழுந்தது. குனிந்து அதை எடுத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தான். ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையில் இருந்து மறைந்துகொண்டு நிமிர்ந்து பார்த்தான். ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையில் இருந்து மறைந்து கொண்டிருந்தது. இவன் குனிந்து கீழே வைத்திருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு டீ ஸ்டால் பக்கம் சென்றான். இரண்டு நேவல் ஆட்கள் மலையாளத்தில் பேசியபடி டீ குடித்துக் கொண்டு இருந்தார்கள். இவன் கொஞ்சம் முன்னால் சென்று டோக்கன் வாங்கிக் கொண்டு பின்னால் வந்தான். நான்கைந்து பெண்கள் கூட்டமாகச் சென்றார்கள். டீ பிடிக்கும் ஆளிடம் இவன் டோக்கனைப் போட்டான். சின்ன கிளாஸில் கழுத்து வரையில் அவன் டீ பிடித்து வைத்தான். சூடு பறந்தது. தலையை அசைத்தபடி கிளாஸை கையில் பிடித்தான். தாள முடியவில்லை. அவசர அவசரமாக இடது கையில் இருந்து வலது கைக்கு கிளாசை மாற்றிக் கொண்டான். பிளாட்பாரத்து ஒலிபெருக்கி கரகரக்க ஆரம்பித்தது. இரண்டடி முன்னே எடுத்து வைத்து ஒலிபெருக்கிக்குக் கீழே போய் நின்று கொண்டான்.

    ‘கௌகாத்தி செல்லும் கொச்சி கௌகாத்தி எக்ஸ்பிரஸ் இன்னும் சிறிது நேரத்திற்குள் முதல் பிளாட்பாரத்தில் வந்து சேரும்’ என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஒலிபெருக்கி மறுபடியும் கரகரக்க ஆரம்பித்தது. பிளாட்பாரத்து பெஞ்சில் உட்கார்ந்து இருந்த ஆட்கள் எல்லாம் எழுந்து நின்றார்கள். இவன் டீயை அவசர அவசரமாகக் குடிக்க ஆரம்பித்தான்.

    கௌகாத்தி செல்லும் கொச்சி எக்ஸ்பிரஸ் ஒன்னரை மணிக்கு வரவேண்டியது. ஆனால் மூன்றுமணி நேரம் தாமதமாக வருகிறது. அதுவே பெரிய ஆச்சரியந்தான். சாதாரணமாக பதினேழு மணிநேரம், இருபத்தொரு மணிநேரம் எல்லாம் தாமதமாக வரும் என்று டிக்கெட் வாங்கும் போது அனங்காபள்ளி அப்பாராவ் சொன்னான்.

    நிஜமாவா?

    உங்களுக்கு லக்கு சார்

    லேட் இல்லாம வராதா?

    ரொம்ப தூரத்தில இருந்து வர்ற வண்டி இல்லையா?

    கோரமண்டல்... இல்லாவிட்டால் ஹௌராவில போய் இருக்கலாம்.

    இல்ல... இல்ல சார். தனி ஆளா போறதுக்கு கௌகாத்திதான் சரி, ரிசர்வேஷன் கூட கஷ்டம் இல்லாம கிடைக்கும்

    எங்க?

    பஸ்ட்கிளாஸ்க்குத்தான் சார் கஷ்டம். பத்து ரூபா மேல வச்சா செகண்ட் கிளாஸ்க்கு வண்டியில் டி.டி.ஆர் போட்டுக் கொடுத்துடுவான்.

    இவன் ஒரு சிரிப்புச் சிரித்தான்.

    நம்ப நாட்டிலே பணத்தால ஆகாத காரியம் ஒன்னு இருக்கா சார் என்றபடி கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டான்.

    நீ புறப்படு அப்பாராவ்... உனக்கு நேரம் ஆகுது

    நீங்க சார்

    நான் பாத்துக்கறேன். நீ எவ்வளவு நேரம் இருப்ப

    அது இல்ல சார். நாளைக்கு ஆபீஸ் போனதும் நம்ப ரெட்டி, ரயில்ல ஏத்தி விட்டுட்டீயான்னு கேட்பார் சார்

    நீ சமாளிக்கமாட்ட

    ரயில் வர வரைக்கும் உங்களுக்குத் துணைக்கு ஒரு ஆள் வேணாமா சார்

    என்ன துணை, நான் சமாளிச்சிக்கிறேன். நீ புறப்படு

    இல்ல சார் அப்பாராவ் மறுபடியும் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்துக்கொண்டான்.

    ரயில் இப்பவே மூனுமணிநேரம் லேட். அப்புறம் இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமோ அதுவரைக்கும் நீ என்ன பண்ணப்போற

    அப்பாராவ் பேண்ட்டை மேலே இழுத்துவிட்டுக் கொண்டு இவனை ஒரு பார்வை பார்த்தான்.

    ஒயிப்புக்குக் கூட உடம்பு சரியில்லேன்னு சொன்ன இல்ல

    ஆமாம் சார். ரெண்டு நாளா நல்ல ஃபீவர், காலையில் டாக்டர்கிட்ட போயிட்டுத்தான் வந்தோம்

    அப்ப நீ முதல்ல புறப்படு

    ரெட்டி கேட்டா ரயில் ஏத்திவிட்டு வந்ததா சொல்லிடுறேன் சார்

    நீ புறப்படு

    அப்பாராவ் முன்னே ஓரடி எடுத்து வைத்துத் திரும்பி, ரயில்ல கூட்டமே இருக்காது சார். நல்லா சௌகரியமா படுத்துக்கிட்டே போகலாம், சார் என்றான்.

    அதெல்லாம் நான் பாத்துக்கறேன், நீ புறப்படு

    அப்பாராவ் தலையசைத்துவிட்டு கூட்டமாகச் செல்லும் நேவல் ஆட்களோடு நடந்தான். பார்வையில் இருந்து அவன் மறையும் வரையில் இவன் நின்று கொண்டே இருந்தான். புத்தகம் பேப்பர் - என்று ஒரு ஆள் வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தான். இவன் ஒரு ஜூனியர் விகடன் வாங்கிக் கொண்டு போய் சிமிண்ட் பெஞ்சில் உட்கார்ந்து புரட்ட ஆரம்பித்தான்.

    ***

    பன்னீர் செல்வத்திற்கு ராஞ்சியில் ஒரு செமினார், இரண்டு நாட்களுக்கு. இயற்கை சூழ்நிலையை தொழிற்சாலைகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றி. சாதாரணமாக ஆர்.கே. நாயர்தான் போவார். அவர் போக முடியாவிட்டால் டெப்டி டைரக்டர் தான் போவார் - உதவி டைரக்டரான இவன் வேலை செமினார் கட்டுரைக்காக லைப்ரரிக்குப் போய் புத்தகங்களை எடுத்து வருவது; குறிப்புகள் எழுதுவதுதான். அதோடு புதிதாக ஏதாவது பத்திரிகைகளில் கட்டுரைகள் வந்திருந்தால் அது பற்றி குறிப்புகள் எழுதி வைப்பது - அப்புறம் டைப் ஆன செமினார் பேப்பர்களைப் படித்துப் பார்ப்பது,

    Enjoying the preview?
    Page 1 of 1