Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Subhavin Sirukathaigal - Part 2
Subhavin Sirukathaigal - Part 2
Subhavin Sirukathaigal - Part 2
Ebook111 pages1 hour

Subhavin Sirukathaigal - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Subha is the pen name used by the writing partnership of D. Suresh and A.N. Balakrishnan, who write Tamil detective novels.The two friends began co-authoring stories when they were in college together, and have been publishing their work since 1979. They have at least 450 short novels and more than 400 short stories to their credit, and have also written screenplays and dialogues for Tamil movies and television serials.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580102400327
Subhavin Sirukathaigal - Part 2

Read more from Subha

Related to Subhavin Sirukathaigal - Part 2

Related ebooks

Reviews for Subhavin Sirukathaigal - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Subhavin Sirukathaigal - Part 2 - Subha

    http://www.pustaka.co.in

    சுபாவின் சிறுகதைகள் - பாகம் 2

    Subhavin Sirukadhaigal – Part 2

    Author:

    சுபா

    Subha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/subha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மீசை

    2. குங்குமச் சிலுவை

    3. பேசாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

    4. திகிலோடு ஒரு மாலை

    5. வெண்ணெய் கோபுரம்

    6. வாத்தியார்

    7. ஊமைக் காயம்

    8. ஒற்றை நட்சத்திரம்

    9. மியாவ்

    10. மழை தேடும் மயில்கள்

    மீசை

    அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜீப் வசதியில்லாத காரணத்தால் தேவாவை விலங்கிட்ட போலீஸ்காரர்கள் நடத்தியே அழைத்துச் சென்றனர். தேவா முகத்தைத் துண்டால் மூடிக்கொண்டு அவர்கள் மத்தியில், அவர்களின் மிருதுவான இழுப்புக்கு ஏற்றவாறு போனான்.

    தேவாவுக்கு அவமானமாக இருந்தது. அவன் செய்துவிட்ட அந்தச் செயலின் காரணமாக இப்போது அந்த காக்கி உடுப்புக்காரர்களுக்கு இடையில் நடக்க வேண்டியிருந்ததால் ஏற்பட்ட அவமானமில்லை அது.

    அவனது அவமானமே வேறு!

    பள்ளியில் வாத்தியார் 'அ'கரத்தை எழுதச் சொன்னபோது, அந்த எழுத்தின் நெளிவு சுளிவுகள் கைக்கு ஏறாமல் போய் எழுத்தின் தொடக்கமும், முடிவும் இனம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்ட காரணத்தால், 'படித்த படிப்பு போதும்' என்று பெரிய மனித எண்ணத்தோடு பள்ளிக்குப் போகாமல் நின்றுவிட்டான் தேவா.

    அப்போதிருந்தே அவனது எண்ணங்கள் செயல்பட்ட விதமே வேறு. மார்பில் முண்டா பனியனின் எல்லைகளை உடைத்துக்கொண்டு வெளியில் நிற்கும் சுருள் சுருளான முடியை உடைய மனிதர்கள் அவனது கண்ணோட்டத்தில் மிகப்பெரிய மனிதர்கள்.

    அவன் தாத்தா கட்டபொம்மன் மீசையை வைத்துக்கொண்டு ஊரை வலம் வந்துகொண்டிருந்தவர் என்று கேள்விப்பட்டதிலிருந்து அவனுக்குத் தந்தையின் மீதிருந்த அபிமானம் குறைந்து போயிற்று.

    'இதென்ன... அழுத்தமான ஈர மணலில் நெல்லால் கோடு போட்டாற் போல ஒரு சன்னமான மீசையை வைத்துக்கொண்டு... இவரெல்லாம் ஒரு ஆம்பிளையா...' என்று எண்ணிக்கொண்டான் அவன். அவன் தாத்தாதான் அவனுக்கு முன்னோடி.

    அந்த மாதிரியான மீசையைத் தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதே முடிவு செய்துகொண்டான். அவன் அப்பா செத்துப் போகும்போது அவனுக்கு மேலுதட்டில் ரோமங்கள் அரும்புவிட ஆரம்பித்திருந்தன. நாள் தவறாமல் அதை மழித்துக்கொண்டான் - அது சீக்கிரம் வளர வேண்டுமேயென்ற ஆவலில்! அவன் கவலையெல்லாம் மீசையில்தான் இருந்தது.

    சாப்பிட வேண்டும். ஏதோ ஒரு தொழிலைச் செய்தால், சாப்பாடு தானாகக் கிடைத்துவிட்டுப் போகிறது என்ற எண்ணத்தில் அந்தத் தொழிலை எடுத்துக்கொண்டான் அவன்.

    சின்ன வயதிலிருந்தே பிறர் துன்பப்படுவதைக் காணுகையில், ஒரு அலாதியான ஆனந்தம் அவனுள் ஊற்றெடுத்ததை உணர்ந்துகொண்டு அந்த ஆனந்தத்திற்காக ஏராளமான தும்பிகளின் உயிரை விலை பேசியிருக்கிறான். தன் பாட்டுக்கு எச்சில் இலையை நக்கிக்கொண்டிருக்கும் நாயை மூன்று கால்களில் ஓடவிட்டு, அதன் குரைப்பு சங்கீதத்தை ரசித்திருக்கிறான்.

    அதனால்தானோ என்னவோ, ஆட்டின் கழுத்தை அறுத்தெறியும் தொழில் அவன் மனதுக்கு மிகவும் இயைந்துபோகும் ஒன்றாக அவனுக்கு அமைந்துவிட்டது.

    கட்டின ஆடு திமிறிக்கொண்டு போகும்போது, அதை இரண்டு கால்களுக்கு இடையில் இறுக்கிப் பிடித்துக்கொண்டு அது மே... மே... என்று கத்துவதை உற்சாகமாய் கேட்டுக்கொண்டு, அந்தக் கத்தலை, கூராகத் தீட்டிய கத்தியின் ஒரு இழுப்பில் நிறுத்துவதில் அவனுக்கு அலாதியான ஆனந்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் எப்போதோ அந்தத் தொழிலுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு து£ரப் போயிருப்பான்.

    இத்தனையிலும் அவன் மீசையை மட்டும் மறக்கவேயில்லை. கன்னத்தில் தூணாக இறங்கிய கிருதாவுக்குப் பக்கத்தில் சேருமாறு அந்த மீசையை நீளமாக இழையவிட்டான். மூக்கின் இரண்டு நாசித் துவாரங்களிலிருந்தும் வெளிப்படும் மூச்சு உருவங்கொண்டு இறங்கி பக்கவாட்டுக்குத் திரும்பிவிட்டாற்போல் அந்த மீசை அமைந்திருந்தது. கருகருவென்று அடர்த்தியாய் வளர்ந்து கன்னத்தில் இழைத்துக்கொண்டு போய் காதோடு ரகசியம் பேசுகிறாற்போல் இருக்கும் அந்த மீசை.

    வேலையெல்லாம் முடித்துவிட்டு புரட்டியெடுக்கும் அலுப்பும், வலியும் காணாமல் போவதற்காக இரண்டு மொந்தையை உள்ளே ஊற்றிக்கொண்டு, நிலை தெரியாமல் கண்ணுக்கு எதிரில் தெரிவதெல்லாம் புகையை ஆடையாய் அணிந்துகொண்டுவிட்டதோ என்ற எண்ணத்தை அவனுள் தோற்றுவிக்கும்போதுகூட, அந்த மீசையை அவன் கை அவனையறியாமலே நீவிக்கொண்டிருக்கும். உள்ளங்கையில் நன்றாக அரைபட்டுக் கூழாகிப்போன ஆட்டுக் கொழுப்பை எடுத்து, அந்த மீசையை முற்றிலுமாக அதனால் குளிப்பாட்டிய பின்புதான் தூக்கம் வரும் அவனுக்கு.

    உறியில் தூங்கிக்கொண்டிருக்கும் நெய்ச்சட்டியை எடுத்து நான்கு விரல்களை அதில்விட்டு, இறுகி நொய்யாய் கிடக்கும் நெய்யை வழித்தெடுத்து உள்ளங்கையில் வைத்து உருக்கி மீசையைத் தடவிக்கொள்வான். அந்த மீசைக்காகத்தான் அவனது ஜன்மமே தோன்றியிருக்கிறதோ என்று எண்ணுமளவுக்கு அந்த மீசையோடு ஒரு அன்னியோன்னியத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தான் அவன்.

    நான்கு தெருக்களை மட்டுமேகொண்ட அந்தச் சின்ன ஊருக்கு காரை விழுந்த செங்கல் கட்டிடம்தான் போலீஸ் ஸ்டேஷன். எப்போதாவது மேலதிகாரிகளிடமிருந்து உத்தரவு வரும்போதோ, அல்லது ஸ்டேஷனின் மாமூல் வருமானம் குறைந்து போகும்போதோ, அந்த ஊர் போலீஸ்காரர்களுக்கு கள்ளச்சாராயக்காரர்களின் நினைவு வரும்.

    அவர்களை வேட்டையாடப் புறப்படுகையில் ஒரு துணைக்காக தேவாவை அவர்கள் காரில் கூட்டிப் போவது உண்டு. அவர்களின் மனோபயத்தை தேவாவின் மீசை விரட்டிவிடும். யாராவது மேலதிகாரிகள் கேட்டால் தேவாவை இன்பார்மர் என்று சொல்லிக்கொள்ளும் தைரியம் அவர்களுக்கு இருந்ததால், அவர்கள் அவனைக் கூட்டிச் செல்லாமல் இருந்ததேயில்லை.

    ஊர்க் குழந்தைகள் அழுகையில் தேவாவின் மீசை கற்பனையில் கோர வடிவம் எடுத்து மிதந்து வந்து அவர்கள் அடத்தையும், அழுகையையும் நிறுத்துவது போல, கள்ளச்சாராயக்காரர்களையும் அந்த மீசை அடக்கி வைத்தது.

    அந்த மீசைக்கு இருந்த

    Enjoying the preview?
    Page 1 of 1