Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enathu Raja Sabaiyiley..
Enathu Raja Sabaiyiley..
Enathu Raja Sabaiyiley..
Ebook91 pages46 minutes

Enathu Raja Sabaiyiley..

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறை மைதானத்தில் இருளை விரட்டும் பிரகாசமான வெள்ள விளக்குகள். சொல்லி வைத்ததுபோல் அத்தனை விளக்குகளும் திடீரென்று அணைந்தன. மின் தடங்கல். வேண்டுமென்றே செய்யப்பட்ட மின் தடங்கல். பலராம் நுனி விரல்களால் மைதானத்தின் முரட்டுப் புல்வெளியில் ஓடினான். அவனுக்கு சொல்லப்பட்டிருந்த இடத்திற்கு அவன் ஓடி முடித்ததும் உயரமான சுவர் எதிர்ப்பட்டது. இருட்டில் துழாவினான். நூலேணி தட்டுப்பட்டது. எத்தனை முன்னேற்பாடுகள் நூலேணி பிடித்துப் பரபரவென்று ஏறினான். நான்காவது படியில் காலைத் தப்பாக வைத்து, அது அவனைப் புரட்டிவிட்டதில் தலைமோதியது.

கருங்கல் சுவரில் மோதியிருந்தான். விண்ணென்று புடைத்து வலித்தது கூட அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. தலை மோதிய சத்தம் யாருக்காவது கேட்டிருக்குமா என்ற அச்சம்தான் பிரதானமாக இருந்தது. வலியைப் பொருட்படுத்தாமல் மேலே மேலே மேலே என்று ஏறலானான். தீடீரென்று விளக்குகள் விழித்துக்கொண்டபோது, அவன் சுவரின் உச்சியை அடைந்துவிட்டிருந்தான். நூலேணியை உருவி மறுபுறம் போட்டான். அதைப் பிடித்துத் தொங்கி அதன் ஆதாரத்தில் அப்படியே மறுபுறம் கீழே குதித்தான். சிறையிலிருந்து தப்பித்துவிட்டதாக அவன் பெருமிதம்கொள்ள..

உண்மையில் அவன் தப்பித்தானா, அல்லது ஒரு நரகத்திலிருந்து தப்பித்து இன்னொரு நரகத்துள் நுழைந்தானா..? எதிர்பாராத திருப்பங்களுடன் சுபாவின் பரபர நடையில் ‘எனது ராஜசபையிலே!’

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580102407436
Enathu Raja Sabaiyiley..

Read more from Subha

Related to Enathu Raja Sabaiyiley..

Related ebooks

Related categories

Reviews for Enathu Raja Sabaiyiley..

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enathu Raja Sabaiyiley.. - Subha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எனது ராஜ சபையிலே..

    Enathu Raja Sabaiyiley..

    Author:

    சுபா

    Subha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/subha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நீதியின் பார்வை இங்கே தொடக்கம்...

    பலராம் கையை விசிறிபோல் விரித்தான்.

    கையை மெல்ல நகர்த்திப் போய், சரேலென்று அந்த ஈயை அடித்தான்.

    இரண்டு விரல்களில் அதைப் பிடித்துக் கண்ணருகே வைத்து வெற்றி எரிச்சலுடன் பார்த்துவிட்டு, கம்பிகளுக்கு வெளியே தூக்கிப் போட்டான்.

    இன்னும் மூன்று ஈக்கள் இருக்கின்றன. அவற்றையும் ஒவ்வொன்றாய்ப் பிடித்துக் கசக்கி வெளியே தூக்கிப் போட்டால்தான் தூக்கம் வரும்.

    அந்த அறைக்குள் வெளிச்சம் குறைவாயிருந்தது. சூரியன் உறங்கப் போகும் மாலை நேரம். வானம் க்ரே கலரும், அடிவானத்தில் ஆரஞ்சுத் தீற்றலுமாக இருந்தது.

    வேறு ஏதோ ஒரு ரூமில் ஒரு கைதி வாய்விட்டு உரக்கப் பாடுவது கேட்டது. ஒரு லத்திக் கம்பு, அந்த கம்பிக் கதவில் தட்டிச் சத்தம் போடாதே என்று மிரட்டுவது கேட்டது.

    பலராம் சில்லிட்டிருந்த சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான். முழங்கால்களைக் கட்டிக்கொண்டான்.

    அடிவயிற்றிலிருந்து கோபம் குமுறிக் குமுறி எழுந்தது.

    ‘இந்த அவலம் இன்னும் எத்தனை நாட்களுக்கு? புகழேந்தியிடமிருந்து எந்தத் தகவலுமே ஏன் இல்லை?’

    பலராம் பின்னங்கழுத்தில் ஈ வந்து உட்கார்வதை உணர்ந்தான்.

    பசு மாட்டைப் போலக் கழுத்தை உலுக்கி அதை விரட்டினான். காரிடாரில் மின் விளக்குகள் எரியத் துவங்கின. தூரத்தில் பூட்ஸ்களின் சத்தம். ஒவ்வொரு கம்பிக் கதவாக க்ரீய்ச் என்று திறந்து மூடப்படும் சத்தம்.

    மாலை நேரக் கஞ்சி வந்துவிட்டது.

    சற்றே சலிப்பாக உணந்தான்.

    கஞ்சி. வேர்க்கடலை. கெட்டியான சோறு. மறுபடி கஞ்சி. மாற்றமில்லாத மெனு!

    அவனறையைக் கால்கள் நெருங்கிவிட்டன.

    நிமிர்ந்தான். கால்கள் நின்றன. சாவி நுழைக்கப்பட்டு தாள் விலக்கப்பட்டது. நசுங்கிய குவளையில் கஞ்சி தரையில் நொக் என்று வைக்கப்பட்டது.

    ஜோசப்! எனக்கு கஞ்சி போரடிக்கிறது. பசியடங்குவதில்லை... என்றான், புகார்க் குரலில்.

    இன்றைக்கு போரடிக்காது, பார்... என்றான் ஜோசப், கதவை சாத்திக்கொண்டே. சொல்லிவிட்டு, அவன் கண்ணடித்தது போலிருந்தது. பலராம் உடம்பில் ஒரு புத்துணர்ச்சி ததும்பியது. கஞ்சிக் குவளையை அவசரமாக எடுத்து வாயில் வைத்து உறிஞ்சலானான்.

    குவளையின் அடிப்புறத்தில் ஒரு பாலித்தீன் பேப்பரில் சுற்றப்பட்டிருந்தது அந்தக் கடிதம்.

    டியர் பலராம்,

    இன்னும் மூன்றே நாட்கள். பொறுமையுடன் காத்திரு. உன்னை வெளியே கொண்டுவர எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. வெள்ளிக்கிழமை ஜோசப் உதவுவான்.

    - புகழ்

    பலராமின் உடம்பில் மின்சாரம் ஊற்றெடுத்தது.

    ‘இன்னும் மூன்றே நாள்!’ சந்தோஷத்துடன் அந்தக் கடிதத்தைக் மென்று விழுங்கினான்.

    ***

    அந்த மருத்துவ சாலையின் வாசலில் விளக்குகள் எரியத் துவங்கிவிட்டன.

    கார்களும், ஆட்டோக்களும், ஒன்றிரண்டு சைக்கிள் ரிக்ஷாக்களும், சில மோட்டார் சைக்கிள்களும் அங்கே கூடியிருந்தன.

    மாருதி காரை மற்ற வாகனங்களுக்கு இடையில் கொண்டுவந்து நிறுத்தினான் டாக்டர் சந்திரகுமார். காரின் கண்ணாடியில் இடது மூலை உயரத்தில் டாக்டர் என்பதைக் குறிக்கப் பெரிய கூட்டல் குறி ஒட்டப்பட்டிருந்தது.

    காரிலிருந்து இறங்கினான்.

    அவன் காரைப் பார்த்துவிட்டு ஓடிவந்த பணியாள், பின்கதவு திறந்து டாக்டரின் சிறுபெட்டியை எடுத்துக்கொண்டான்.

    சந்திரகுமார் கிளினிக்கை நோக்கி வேகமாக நடந்தான். காத்திருந்த நோயாளிகள் சிலர் எழுந்தனர். வரவேற்பில் இருந்த பெண்மணி எழுந்து மரியாதை செலுத்தினாள்.

    சந்திரகுமார் என்று பெயர்ப் பலகை தொங்கிய கதவைத் தள்ளித் திறந்தான். ஏ.ஸியின் குளுமை சூழ்ந்தது.

    அவனுடைய இருக்கையில் போய் அமரும்முன் வாஷ்பேசினில் கைகளைக் கிருமிநாசினி போட்டுக் கழுவினான்.

    நோயாளிகளை கவனிக்கத் தயாராகிவிட்டான்.

    டாக்டர் சந்திரகுமார் பற்றி சில வரிகள்.

    சந்திரகுமார் 29 வயது இளைஞன். எலும்பு சர்ஜன். இளம் வயதிலேயே கைராசிக்காரன் என்ற புகழ் பெற்றவன். இந்த க்ளினிக்கில் தினமும் இருவேளை அவன் வருகையில் அவனை சந்திக்கக் காத்திருக்கும் நோயாளிகள் கூடிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

    சந்திரகுமாரின் முகம் இனிமையானது. அகன்ற நெற்றி. கறுத்த புருவங்கள். உயிருள்ள கண்கள். நீண்ட நேர் நாசி. கரிய மீசை. சிவந்த உதடுகள். அழகுப் பல்வரிசை. கன்னத்துக் குழிவுகள். ஆறடி உயரம். அதற்கேற்ற அகன்ற தோள்கள். பரந்த மார்பு. நீண்ட கைகள்.

    சந்திரகுமாரை மருத்துவக் கல்லூரியில் துரத்திய பெண்களின் பெயர்களை தனியே பட்டியல் போடலாம்.

    அவனுடைய புன்னகையே பாதி மருந்து என்று அடித்துக்கூற ஆயிரம் நோயாளிகள் தயாராயிருந்தனர்.

    Enjoying the preview?
    Page 1 of 1