Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devathai Vettai
Devathai Vettai
Devathai Vettai
Ebook112 pages45 minutes

Devathai Vettai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்தேகம் காவல்துறையின் உடன்பிறந்த குணம். தொடர்கொலைகளைச் செய்யும் முகம் காட்டாத கொலைகாரனைத் தேடிச் செல்லும் இரு காவல் அதிகாரிகளில் ஒருவனுக்கு அடுத்தவன் மீதே வரக்கூடாத சந்தேகம் வந்துவிட்டால்? இடையில் காதலும் நட்புமாக அன்பைப் பொழியும் ஓர் இளம் மனைவி சிக்கிக் கொண்டால்? இம்மூவரின் வாழ்வில் அந்தக் கொலைகாரனும் அடியெடுத்து வைத்தால்?

சுபாவின் இன்னுமொரு வித்தியாச த்ரில்லர்.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580102405968
Devathai Vettai

Read more from Subha

Related to Devathai Vettai

Related ebooks

Related categories

Reviews for Devathai Vettai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devathai Vettai - Subha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தேவதை வேட்டை

    Devathai Vettai

    Author:

    சுபா

    Subha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/subha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 1

    புதிதாக பெயிண்ட் செய்யப்பட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கேட்டில் அந்த சாண்ட்ரோ மறிக்கப்பட்டது.

    துப்பாக்கியைத் தழைத்து செக்யூரிட்டி காருக்குள் குனிந்து பார்த்தார்.

    டிரைவிங் சீட்டில் இருந்த மாதவன் தன் அடையாள அட்டையைக் காண்பித்தான். பக்கத்து இருக்கையில் திவாகர் தன்னுடையதையும் காண்பித்தான்.

    செக்யூரிட்டி விறைப்பாகி, சல்யூட் அடித்தான். கேட்களை விரித்தான்.

    சாண்ட்ரோ மழை நனைந்த பாதையில் நடந்து பார்க்கிங் பகுதியில் நின்றது.

    மாதவனின் செல்போன் ஒலித்தது. கட்டை விரலால் அழுத்தினான். எங்கிருந்து வருகிறது என்று எண் தெரிந்தது.

    புருவங்களை உயர்த்தி, என் பெண்டாட்டி என்றான்.

    ஹாய் டார்லிங், லன்ச்சுக்கா? சந்தேகம்தான். இப்பொழுது கமிஷனர் ஆபீஸில் நுழைந்து கொண்டிருக்கிறோம். எத்தனை நேர வேலை, எப்போது முடியும் என்று தெரியாது. நீ சாப்பிட்டு விடு… ஆமாம். என்னுடன்தான் இருக்கிறான். பேசுகிறாயா? என்று போனை திவாகரிடம் கொடுத்தான்.

    ஹாய்… என்றான் திவாகர். மறுமுனையில் என்ன சொல்லப்பட்டது என்று தெரியவில்லை. திவாகர் வெடித்துச் சிரித்தான். அதை மறக்க மாட்டேன். என்றான். சரி, மாலையில் வருகிறேன் என்று போனை அணைத்து மாதவனிடம் நீட்டினான்.

    அப்படி சிரிக்கும்படி அவள் என்ன சொன்னாள் என்று கேட்க வேண்டும் போல் மாதவனுக்கு ஒரு பக்கம் துடிப்பாயிருந்தது. திவாகராக சொல்கிறானா பார்ப்போம் என்று காத்திருந்தான்.

    போகலாமா? என்று திவாகர் கதவு திறந்து இறங்கினான்.

    ***

    கான்ஃபரன்ஸ் அறை களை கட்டியிருந்தது. ஸ்லைடு புரொஜெக்டர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர், கமிஷனர், அவரது உதவியாளர்.

    வணக்கம்! என்றார் கமிஷனர். அண்மையில்தான் ஐம்பதைக் கடந்தவர். சற்றுப் பெரிய உடம்பு. அகலமான முகம். நெற்றியில் சுருக்கம். அரைக் கண்ணாடி. பாதி நரைத்த மீசை. தடிதடியாய் விரல்கள். கனமான குரல்.

    இது இன்ஸ்பெக்டர் சண்முகம். அது சப் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் என்று அறிமுகம் செய்தார்.

    மாதவன், திவாகர். இருவரும் காவல் துறையின் நிழல் அதிகாரிகள். உளவுத் துறையில் பணிபுரிபவர்கள். குற்றங்களைப் பற்றியும், குற்றவாளிகளைப் பற்றியும், குற்றவாளிகளின் மனப் போக்குகள் பற்றியும் ஆராய்ந்தவர்கள்.

    இன்ஸ்பெக்டர் எழுந்து அறை விளக்கை அணைத்துவிட்டு புரொஜக்டரை இயக்கினார்.

    வெண்திரையில் ஒரு பெண்ணின் முகம் பளீரிட்டது. சிரித்த கண்கள். பளபளக்கும் கன்ன மேடுகள். நேர் நாசி. வசீகரமான சிரிப்பு.

    இவள் பெயர் பாவனா… என்று அறிவித்தார் இன்ஸ்பெக்டர். முப்பத்தி மூன்று வயது. விவாகரத்து வாங்கி தனியே ஒரு போர்ஷனில் குடியிருந்தவள். சூப்பர் மார்கெட்டில் பில்லிங் செக்ஷனில் இருந்தாள்.

    மாதவன், திவாகரின் தொடையைத் தொட்டான். அழகான இந்தப் புகைப்படத்தை நன்றாகப் பார்த்துக் கொள். இதற்கப்புறம் காட்டவிருக்கும் படங்களில் இந்தப் பெண்ணின் அழகை ரசிக்க முடியாது என்ற சேதி அந்தக் கை அழுத்தத்தில் இருந்தது.

    இரண்டு மாதங்களுக்கு முன்னால் கொலையானாள். மூன்று நாட்கள் தொடர்ந்து ஆபீஸ் வரவில்லை என்றதும், அவளுடைய தோழி ஒருத்தி தேடிப் போனாள். பாவனாவின் போர்ஷன் பூட்டியிருந்தது. ஆனால் அங்கே ஒரு துர்நாற்றம் இருப்பதைக் கவனித்து, அந்தப் பெண் போலீஸில் புகார் கொடுத்தாள்.

    இன்ஸ்பெக்டர் நிறுத்திவிட்டு அவர்களைப் பார்த்தார்.

    பூட்டை உடைத்துத் திறந்தோம். பாவனாவைப் படுக்கையறையில் கண்டெடுத்தோம்

    இன்ஸ்பெக்டர் அடுத்த ஸ்லைடை செருகினார்.

    பாவனா பொட்டுத் துணியின்றி குப்புறக் கிடந்தாள். அவளுடைய மணிக்கட்டுகள் முதுகுப்புறம் வளைத்துக் கட்டப்பட்டிருந்தன. கழுத்திலும் ஒரு மெல்லிய கயிறு கட்டப்பட்டிருந்தது. கழுத்துக் கயிற்றின் முனை முதுகு வழியே நீட்டப்பட்டு மணிக்கட்டுகளைக் கட்டியிருந்த கயிற்றின் வழியே மேலே இழுக்கப்பட்டு மின்விசிறி கொக்கியில் நுழைத்து கீழே இழுக்கப்பட்டு, குப்புறக் கிடந்த பாவனாவின் பாதங்களைச் சேர்த்துக் கட்டியிருந்த இன்னொரு கயிற்றுடன் முடிச்சிடப்பட்டிருந்தது.

    திவாகர் நாற்காலியில் அசைந்தான்.

    "குரூரமான விளையாட்டு. அவள் உயிரோடு இருக்கும் போதே இந்தக் கயிறு கட்டப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கோணத்தில் கழுத்தை அண்ணாத்தி படுக்க வைத்தபின், அவள் கழுத்தை அதிகமாக அசைத்தாலோ,

    Enjoying the preview?
    Page 1 of 1