Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravukal Pirivathillai
Uravukal Pirivathillai
Uravukal Pirivathillai
Ebook84 pages35 minutes

Uravukal Pirivathillai

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Uravukal Pirivathillai

Read more from Rajeshkumar

Related to Uravukal Pirivathillai

Related ebooks

Related categories

Reviews for Uravukal Pirivathillai

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravukal Pirivathillai - Rajeshkumar

    15

    1

    பச்சை நிற பிரியதர்சினி சின்ன சிணுங்கலில் ஆரம்பித்து அடுக்கடுக்காய் ‘ட்ரிங்’ சொல்ல ஆரம்பித்த நேரம் - சரியாக ஓடும் இந்திய வாட்சுகள் எல்லாமே பதினொன்றிலிருந்து பதினொன்று ஐந்தைக் காட்டின நேரம்.

    கிச்சனுக்குள் பிரஷர் குக்கர் கிளப்பின நீராவிக்கிடையே - ப்ளக்கிலிருந்து ஒயர் வழியே வழிந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டு ‘வொய்ங்... ங்...’ ஓசையோடு ஓடும் மிக்ஸியின் தலையைத் திறந்து விடாமல் பிடித்திருந்த சூர்யாவின் ‘சிங்கிள் ட்ராப்’ அணிந்திருந்த பவுன் நிற காதுகள் மிகக் கஷ்டப்பட்டு கிரகித்தன முன்னறையில் ஒலித்த டெலிபோன் ஓசையை.

    அவளின் பாலிஷ் போட்ட மாதிரியான நீள நீள விரல்களில் ஒன்று நீண்டுபோய் ஸ்விட்சைத் தட்டிவிட மிக்ஸிக்கு தொண்டை கட்டிப் போய்... கடைசியில் ஊமையாகி நின்றது கேஸ் ஸ்டவ்வை அடைந்து கறுப்பு நாபைத் திருப்பி SIMல் வைக்க - குக்கர் மெல்ல மெல்லத் தன் வால்யூமைக் குறைக்க ஆரம்பித்தது.

    டெலிபோன் சத்தம் தெளிவாய் வந்து விழுந்தது.

    யாராயிருக்கும்...? என்ற யோசிப்போடு நடந்து போன சூர்யா, கட்டியிருந்த பிரிண்டட் சைனா சில்க் மாதிரியே மினுமினுத்தாள். பிங்க் நிற ரப்பர் மோல்டட் பெரிய சைஸ் குழந்தை பொம்மைக்கு ஆர்வமாய் முத்தம் கொடுக்கும் - ஆசை நிரம்பிய சூர்யா நிஜமாகவே குழந்தையைக் கொஞ்ச காத்திருக்க வேண்டிய நாட்கள் - இன்னும் நூற்றி ஐம்பத்தி மூன்று நாட்கள் மட்டுமே!

    மிதமாய் வயிறு பம்மியிருந்த சூர்யா போனை அடைந்த போது, அது சலிப்போடு கடைசிக் கத்தலை வெளியிட நினைக்க - சட்டென ரிஸீவரைக் கையிலெடுத்தாள்.

    மேலே உயர்த்தி காதருகே கொடுத்த பின், ஹலோ சொன்னாள்.

    26222968- தானே அது...? கரகரப்பான அந்தக் குரல் கேட்க

    ஆமா... யாரு வேணும்...?

    யாரு சூர்யாவா பேசறது?

    மறுமுனை கேட்டதுமே திகைத்தாள்.

    ரொம்பப் பழக்கப்பட்ட தொனியில் தன் பெயரைக் கேட்கும் அந்தப் பரிச்சயமில்லாத ஆண் குரலுக்கு வியந்து? நீங்க யாரு...? - கேட்டாள்.

    மறுபடியும் மறுமுனை. நீ சூர்யா தானே? என்றதும் கொஞ்சம் அளவில் எரிச்சல் வந்தது.

    ஆமா கோபத்தோடு சொன்னாள்.

    போன் பண்ணினா முதல்ல இன்னார் பேசறேன், இன்னார் வேணும்னு கேட்டுப் பழகுங்க.

    குரல் ஒரு சின்னச் சிரிப்பை உதிர்த்துவிட்டு. அட்வைஸுக்கு தேங்க்ஸ் சூர்யா. இன்னும் உன்கிட்டே நான் ரசிச்ச பழைய சிறப்பம்சங்கள் எல்லாமே மாறாம அப்படியே இருக்கு!

    திகைப்போடு திடுக்கிடலும் சேர, விரல்கள் ரிஸீவரை இறுக்கப்படுத்தியது.

    என் குரல் தெரியல்லே...?

    சூர்யா யோசிப்பில் இறங்கின மறு விநாடியே எதிர்முனை சொன்னது.

    நான் ரதீஷ் சூர்யா

    ர... தீஷ்...?

    சட்டென ஞாபகம் சிலிர்த்துக்கொண்டது. பழைய நினைவுகள் ஸ்லோமோஷினில் பின்னோக்கி நழுவியது.

    2

    "பாம்ப்... ப்..."

    ஹாரன் ஓசை கேட்டதுமே, கை நிறைய புத்தங்களை மார்போடணைத்து நடந்து வந்த சூர்யா. புடவையின் பால்ஸ் சரசரக்க நடையில் வேகம் கொடுத்தாள்.

    ஐம்பதடி தூரத்தில் தெரிந்த மெயின் சாலையில் அலுமினிய மினுமினுப்போடு டவுன் பஸ் பதினாலு. பஸ்ஸின் அருகாமைக்கு வரவர கொஞ்சம் ஓட்டத்தையும் கலந்து... பளபளத்த கம்பியை அவசரமாய்ப் பற்றி காலைப் பாவி மூன்று படிகளையும் கடந்த பின்- மெல்லமாய் ஊர்ந்து பின் ஓட ஆரம்பித்தது பஸ்.

    இடநிலையை நோட்டம் விட்டவளைப் பார்த்து எல்லா ஸீட்களுமே உதட்டைப் பிதுக்கிக் காண்பித்தன. சொற்ப அளவில் நின்றுகொண்டும் இருந்தார்கள்.

    நகர்ந்து போய் பானட் அருகே கம்பியைப் பற்றி நின்றதும் சட்டென காரணமேயில்லாமல் ஒரு தடவை ஹாரன் அடித்தபடி திரும்பினான் ரதீஷ் காக்கி பேண்ட் சர்ட்டில் கனமாய்ப் பொதிந்திருந்தான். சட்டையில் வலது மார்பில் டிரைவர் லைசென்ஸ் நம்பரை உலோக வட்டத்தில் பொறித்து மாட்டியிருந்தான். பெரிய ஆர ஸ்டியரிங்கை அனாயசமாய்க் கையாளும் ரதீஷ் அழகான இளைஞன். எந்தப் பெண்ணையுமே சுண்டும் இளைஞன்.

    திரும்பினான் சூர்யாவிடம்.

    என்னங்க, உங்களுக்காக இத்தனை பாஸன்ஞ்சர்ஸின் பொன்னான சில நிமிஷங்களை வீணடிச்சுக் காத்திருந்து இருக்கேன். ஒரு தேங்க்ஸ் கூட இல்லியா?

    பதிலுக்கு சூர்யா சிரித்துவிட்டுக் கேட்டாள்.

    "இவ்வளவு கஷ்டப்பட்டு உங்க பஸ்ஸில் ஏறியிருக்கேன். உக்கார ஒரு ஸீட் இல்லே! சே! மோசமான

    Enjoying the preview?
    Page 1 of 1