Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoodhu Sellaayo Thuppakkiye
Thoodhu Sellaayo Thuppakkiye
Thoodhu Sellaayo Thuppakkiye
Ebook88 pages51 minutes

Thoodhu Sellaayo Thuppakkiye

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466596
Thoodhu Sellaayo Thuppakkiye

Read more from Arnika Nasser

Related to Thoodhu Sellaayo Thuppakkiye

Related ebooks

Related categories

Reviews for Thoodhu Sellaayo Thuppakkiye

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoodhu Sellaayo Thuppakkiye - Arnika Nasser

    11

    1

    உங்களுக்கு நம் மாநிலத்தை ஆளும்... கட்சி தெரிந்திருக்கும். அதில் இக்கதை எழுதும் கடைசி நொடிவரை எட்டு கோஷ்டிகள் இருப்பதும் தெரிந்திருக்கும். அதில் ஒரு பிரதான கோஷ்டியை வளர்த்து தன்னுடன் 52 எம்.எல்.ஏ. க்களை ஐக்கியமாக்கியிருந்தார் மந்திரி ராஜமுருகு பாண்டியன். அவரின் சொந்த ஊர் சிலுக்குவார்பட்டி. அங்கு ஒண்ணாவது ஒரு வருடம்- ரெண்டாவது ஒரு வருடம்- மூணாவது ரெண்டு வருடம் - நாலாவது மூன்று வருடம் படித்து வகுப்பின் கடைசி பெஞ்ச்சை தேய்த்தார். அப்பா மைக் செட் கம்பெனி வைத்திருந்தார். கல்யாணம், கருமாதி, காதுகுத்து, அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு மைக் செட் பொருத்துவது அவர் வேலை. ராஜமுருகு பாண்டியனுக்கு படிப்பிலிருந்த ‘அன்பு’ போய் அப்பனின் தொழிலுக்கு ‘ஹெல்ப்’ செய்ய ஆசை வந்தது. நாலஞ்சு மீட்டிங்குகளை கவனித்த ரா.மு. பாண்டியன் ஒரு பிரதான மீட்டிங்கில் முக்கிய பிரமுகர் லேட்டாய் வர, கிடைத்த இடை வெளியில் மைக்கை பிடித்து எதிர்க் கட்சியினரை மிகுந்த பாசத்துடன் ஆத்தா... அம்மா... என்று பாராட்டினார். கூட்டத்தினர் கை தட்டினர்.

    அதிக கொசுக்களை கொல்வதற்காகவோ அல்லது உண்மையில் இவனை பாராட்டியோ... விஷயம் கட்சித் தலைவருக்குப் போனது. பின் நடக்கும் எல்லா மீட்டிங்குகளிலும் ‘திட்ட’ அழைக்கப்பட்டான்.

    ஒரு தடவை தலைவர் தேர்தல் பிரச்சாரத்துக்காக இவன் தொகுதி வந்தபோது கூடவே மெய்க்காப்பாளனாகத் திரிந்தான். இவன் அதிர்ஷ்டம் தலைவரை நோக்கி விட்டெறியப்பட்ட அரை செங்கல் குறிதவறி இவனின் ‘டபுள்’ மண்டையை பழுது பார்த்தது. தற்செயல் நிகழ்ச்சி தலைவனைக் காத்த வீரசிங்கமாக்கிற்று ரா.மு. பாண்டியனை. அப்புறமென்ன? அடுத்த இடைத் தேர்தல. எம்.எல்.ஏ. ஆனான். பின் கோஷ்டி சேர்ந்து தலைவருக்கு எதிராக இயங்கினான். இவனின் விஷத்தை இறக்க மந்திரிப் பதவி பிச்சை போட்டார். அதன்பின் ராஜமுருகு பாண்டியன் தன் ஊருக்கு வெளியே உள்ள புறம்போக்கு நிலம் 25 ஏக்கரை பினாமி பெயரில் வளைத்துப் போட்டான். இன்னும் ஆறு பங்களாக்கள்- நகரில் ஏழு இடங்களில் கள்ளச் சாராயம் தயாரிக்கும் யூனிட்டுகள்- ஒரு மலைப்பாங்கான பகுதியில் கஞ்சா பயிர் 10 ஏக்கர் விஸ்தீரணத்தில். இதுதான் 20 வருட ராஜமுருகு பாண்டியனின் அரசியல் வாழ்வின் முன் கதைச் சுருக்கம்.

    நகரெங்கும் வண்ண வண்ண போஸ்டர்கள்.

    நகர பொதுச் செயலாளரின் மகளின் காது மூக்கு குத்தும் விழாவிற்கு வருகை தரும் மாண்புமிகு அண்ணன் ராஜமுருகு பாண்டியன் அவர்களுக்கு இதய நன்றி!

    இன்று இரவு 7 மணிக்கு தெற்குவெளி வீதியில் மாபெரும் பொதுக்கூட்டம். மாண்புமிகு ஊ.ஒ.துறை அமைச்சர் ராஜமுருகு பாண்டியன் பேருரை ஆற்ற இருக்கிறார்.

    இன்னும் பற்பல போஸ்டர்கள்- ஒவ்வொன்றிலும் ரா.மு. பாண்டியன் இளித்தபடி.

    தெற்குவெளி வீதி போக்குவரத்து முடக்கப்பட்டது. தார் சாலையில் குழி பறித்துப் போடப்பட்டிருந்த மேடையில் ஜிகினா அலங்காரம். மேடையின் முகப்பில் கட்சிக் கொடி நிறமான வயலட் ரிப்பன்கள்- காற்றில் தோரணம் அமைத்து. மேடையின் வயிற்றில் அக்கட்சியின் இறந்து போன தலைவர்கள் க்யூ வரிசையில் தொங்கினர் -சதுர சதுர பிரேம்களுக்குள். மத்திய அரசின் மூன்றாவது கையான சி.பி.ஐ. ஆசாமிகள் கூட்டத்தின் அளவை கணிக்கவும் ரா.மு. பாண்டியன் பேச்சை ஷார்ட் ஹாண்ட் செய்து மேலிடத்துக்கு இரகசிய தகவல் அனுப்பவும் வந்திருந்தனர். சாலை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பஸ்களை மாற்று வழியில் அனுப்ப கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தனார். போஸ்டர்களில் இரவு 7 மணிக்கு என்று போடப்பட்ட பொதுக் கூட்டம் இரவு 10 மணிக்குத்தான் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சில லோக்கல் கத்துக்குட்டி பேச்சாளர்கள் எழுதிக் கொண்டு வந்ததைக் கூட பேசத் தெரியாமல் திக்கி திணறித் திணறிப் பே-பே-பேசினர்.

    கடைசியில் ராஜமுருகு பாண்டியன் பேச எழுந்தார். வயது 16+12+11. பித்த நரையை மகா கவனமாய் டை அடித்திருந்தும் - 95 மணி நேர அவகாசத்தில் வேர்ப் பகுதி முடி கொண்டைச் சேவலின் கழுத்துப் பகுதி போல நிறம் மாறியிருந்தது. தங்க பிரேமிட்ட அரைக் கண்ணாடி. கவுண்டமணி மூக்கு. ஐப்ரோவில் வரையப்பட்டு வியர்வையில் நனைந்த மீசை. மேல்வரிசைப் பற்களில் முகப்பு பக்கம் மூன்றை தகராறில் இழந்து சப்ஸ்டிடியூட்டாக தங்கப் பற்கள் பொருத்தியிருந்தார். கழுத்தில் மூன்று பவுனில் மைனர் செயின். இரு காது மடலுக்குப்பின், காலரின் கழுத்துப் பகுதி, இரு அக்குளின் சட்டைப்பகுதி, இன்னும் சில அந்தரங்கமான பகுதிகளில் சார்லி ஜாஸ்மின் வாசனை பரப்பு செயலாளராக வேலைபார்த்துக் கொண்டி ருந்தது. தோளில் கட்சிக் கொடி நிற வயலட் துண்டு செந்தில் உயரத்துக்கு ரெடிமேட் விவால்டி சர்ட். பிரிமியர் மில்ஸ் பாலிஸ்டர் வேட்டி. கட் ஷூ.

    எழுந்து தோள்துண்டை சரி செய்து மைக்கின் முன் வந்து நின்று இடக்கை விரல்களால் ‘டிடிக் டிடிக்’ செய்து நன்றாக உள்ள தொண்டையை ‘க்கும்’ செய்து, என் உயிரின் ஒளிகளே!... பேச ஆரம்பித்தார். அந்த 95 நிமிட பேச்சில் நூறு வானவில்கள்.

    எதிர் (ரி) கட்சியினரை செம டோஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1