Velvet Nila
4.5/5
()
About this ebook
Read more from Arnika Nasser
Octopus Vibareethangal Rating: 4 out of 5 stars4/5Magizhampoo Thendral Rating: 5 out of 5 stars5/5Nenjinile Oonjalaai Rating: 5 out of 5 stars5/5Mummy Rating: 2 out of 5 stars2/5Kuttrala Kolai Season Rating: 4 out of 5 stars4/5Palkolaikazhagam Rating: 0 out of 5 stars0 ratingsIsaithaal Irappaai Rating: 5 out of 5 stars5/5Pattaampoochi Nenjukkulle Rating: 5 out of 5 stars5/5Sivappu Echcharikkai Rating: 3 out of 5 stars3/5Victor Commission Rating: 5 out of 5 stars5/5Karuppu Malligai Rating: 0 out of 5 stars0 ratingsNaragathil Santhippom Nanba Rating: 0 out of 5 stars0 ratingsThuppakki Roja Rating: 4 out of 5 stars4/5Kaathal Mogini Rating: 0 out of 5 stars0 ratingsSaathaanin Kavithaikal Rating: 0 out of 5 stars0 ratingsCrime Sooravali Rating: 5 out of 5 stars5/5Abaayath Thiruppangal Rating: 0 out of 5 stars0 ratingsVelli Nilave Vinotha Rating: 5 out of 5 stars5/5Marana Kadigaram Rating: 0 out of 5 stars0 ratingsKana kachithamaai Rating: 0 out of 5 stars0 ratingsSoozhchikaludan Poridu Rating: 5 out of 5 stars5/5Uyir Parithu Soothaadu Rating: 4 out of 5 stars4/5Aarnikaavum 1001 Aavigalum Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Namathu Naal Rating: 5 out of 5 stars5/5Kana Kanden Kanne Rating: 4 out of 5 stars4/5Vadaamalar Rating: 0 out of 5 stars0 ratingsNila Veezhchi Rating: 3 out of 5 stars3/5Haikoo Maranangal Rating: 4 out of 5 stars4/5Saaththaan Devathai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Velvet Nila
Related ebooks
Kolusu Satham Rating: 0 out of 5 stars0 ratingsAabathu Kavarchiyaanathu Rating: 5 out of 5 stars5/5Thrill Thrill Dynamite Rating: 0 out of 5 stars0 ratingsNaangavathu Kurangu Rating: 0 out of 5 stars0 ratingsNee Rating: 5 out of 5 stars5/5Nila Veezhchi Rating: 3 out of 5 stars3/5Sivappu Echcharikkai Rating: 3 out of 5 stars3/5Ulagai Vilai Kel! Rating: 1 out of 5 stars1/5Kizhakku Kadarkarai Saalai Rating: 2 out of 5 stars2/5Thoodhu Sellaayo Thuppakkiye Rating: 5 out of 5 stars5/5Uyire Vaa Uyirai Thaa Rating: 0 out of 5 stars0 ratingsChicago Secret Rating: 0 out of 5 stars0 ratingsMoochil Vazhum Pullankuzhalkal Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsThithikkum Thee Rating: 0 out of 5 stars0 ratingsMoochil Vaazhum Pullanguzhalgal! Rating: 0 out of 5 stars0 ratingsNila Satchi Rating: 0 out of 5 stars0 ratingsHaikoo Maranangal Rating: 4 out of 5 stars4/5Thuppakki Roja Rating: 4 out of 5 stars4/5Pattaampoochi Nenjukkulle Rating: 5 out of 5 stars5/5Vaasamulla Roja Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5No… Sudathea Rating: 5 out of 5 stars5/5Soozhchikaludan Poridu Rating: 5 out of 5 stars5/5India Neram 2 AM Rating: 5 out of 5 stars5/5Thottal Tholaindhaai! Rating: 0 out of 5 stars0 ratingsAvaloru Kathanayagi Rating: 5 out of 5 stars5/5Thotravan Theerpu Rating: 5 out of 5 stars5/5Vaa! Rating: 5 out of 5 stars5/5Vanakkathirkuriya Kaathaliye Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Velvet Nila
3 ratings0 reviews
Book preview
Velvet Nila - Arnika Nasser
17
1
1-4-94 விடியற்காலை 4-15 மணி... வெள்ளிக் கிழமை.
இந்திய கலாச்சாரமும் - பிரஞ்ச் கலாச்சாரமும் காதல் செய்யும் சாரைப் பாம்புகளாய் பின்னிக்கொண்ட பாண்டிச்சேரி.
1580 மீட்டர் நீளமுள்ள அழகிய கடற்கரையும் முதலாம் உலகப்போரில் உயிர்நீத்தோருக்கான ஹௌபர்ட் நினைவுச் சின்னமும் - ரோமன் ரோலண்ட் நூலகமும் பாரதியார் நினைவு இல்லமும் - அழகிய நேரிய தெருக்களும் - வித்தியாச சீருடை கொண்ட போலீஸ்காரர்களும் அரவிந்தர் ஆசிரமமும், பெர்முடா டவுசர்களில் அலையும் வெளிநாட்டுப் பயணிகளும், தெருவுக்கொரு எம். எல். ஏ. வும் கொண்ட சட்டசபையும் அடங்கிய அழகிய பாண்டிச்சேரி. - திருமுடி நகருக்குப்பின் கிடக்கும் பத்தாயிரம் சதுர அடி காலிமனையில் எண்ணெய் எரிவாயு கமிஷன் தற்காலிக ஜாகை அமைத்திருந்தது.
11 கூடாரங்களும் தற்காலிக கழிப்பிடமும் சிற்றுண்டிச் சாலையும் ஷட்டில்காக் விளையாட தனி இடமும் உருவாக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கூடாரமும் சிறப்பாக வாழும் வீடுகளாய் வசதி செய்யப்பட்டிருந்தன, கமிஷன் அலுவலர்கள் உடல் நலம் கவனிக்க தனி மருத்துவரும். இரு செவிலியர்களும் சிறப்புக் கூடாரத்தில் தங்கியிருந்தனர்.
பாண்டிச்சேரி கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய் வளம் காணப்படுவதாக ஒரு விஞ்ஞானி சமர்ப்பித்திருந்த அறிக்கையை ஒட்டியே ஓ.என்.ஜி.ஸி. கூடாரமிட்டிருந்தது. நிலப்பகுதிகளில் எண்ணெய் தேடுவது என்றால், தேடும் பகுதியை கமிஷன் கைப்பற்றும். தனிச்சாலை அமைக்கும். ஆனால் கடல் பகுதி ஆய்வு என்பதால் பணிப் பளு சற்றே குறைவு.
கூடாரங்களுக்குப் பின்னால் ஹெலிபேட் கட்டியிருந்தனர். 1000 சதுர அடி பரப்பளவில் ஒரு சிமெண்ட் சதுரம். சதுரத்தின் நடுவில் சிறு டாய்லெட் ரூம் கட்டப்பட்டிருந்தது. காற்றுத் திசை உணர்த்தும் விண்ட்மில்கள் இரண்டு எதிர் எதிர் திசையில் தொங்கின.
பொழுது விடிய இன்னும் 100 நிமிடங்கள். தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து தன்னிரு உள்ளங்கைகளில் முகம் பார்த்தார் சீஃப் இன்ஜினியர் அழகுநாதன் - வயது 45. உயரம் 5.7. கவனமாக ‘டை’ அடிக்கப்பட்ட சொற்ப கேசத்தை நடுவகிடெடுத்துச் சீவியிருந்தார். இடது காதில் மச்சம். பவர் கிளாஸ் மூக்கின்மேல் அமர்ந்திருந்தது. ஆண்களுக்குப் பொருந்தாத பெண்மை மூக்கு; நடுவில் இடைவெளி கொண்ட மெல்லிய மீசை; பல் வரிசை கச்சிதமாய் அமைந்த தாடைப்பகுதி.
இரவு ஆடையில் இருந்தார் அழகுநாதன். அடுத்த 20 நிமிடங்களில் காலைக் கடன்களை முடித்துவிட்டு ரோஸ் நிற சபாரிக்கு மாறினார். கால்களில் அம்பாஸ்டர் ஷு. சட்டைப் பையில் குறிப்பேடும் மைக்ரோடிப் பேனாவும்.
உதவியாளன் வடிவேலு எட்டினான்.
குட்மார்னிங் சார்!
வெரிகுட்மார்னிங்பா...
பிளாஸ்க்கிலிருந்து காப்பி கவிழ்த்து ஆவி பறக்க மெலாமைன் கோப்பையை நீட்டினான் வடிவேலு.
வாங்கி நிதானமாய் உறிஞ்சினார் அழகுநாதன்.
ஹிண்டு பேப்பர் வந்திருச்சா வடிவேலு?
இன்னும் வரல சார்... (தயங்கி) சார்! ஒரு விஷயம் தெரியுமா? அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தன்னுடைய ஊழல்களை ஒத்துக்கிட்டு பதவிய ராஜினாமா பண்ணிட்டாராம். பி. பி. ஸி. நியூஸ் சார்!
காஷ்மீர் விஷயத்தில் தேவையில்லாம மூக்கை நுழைச்ச பில் கிளிண்டன் ஒழிஞ்சது நமக்கு நல்லதுதான்ப்பா...!
வடிவேலு சிரித்தான்.
சார்! இன்னைக்கு உலக முட்டாள்கள் தினம்! உங்கள ரெண்டு விஷயத்தில ஏமாத்திட்டேன்... ‘ஹிண்டு’ வந்திருச்சு! இந்தாங்க சார்! கிளிண்டன் விஷயம் கப்ஸா!
அழகுநாதன் புன்னகைத்தார். நீ சொன்ன கிளிண்டன் விஷயம் சில மாதங்கள் கழிச்சு நடக்கப் போவதுதான் வடிவேலு!
என்றபின், உலக விஷயத்திலிருந்து மீண்ட அழகுநாதன். வடிவேலு ஏரியல் சர்வேக்கு வரும் இரண்டு உதவிப் பொறியாளர்கள் எழுந்து தயாராகி விட்டார்களா?
ரெடியாகிட்டாங்க சார்!
குட் நேவல் பேஸிலிருந்து ஹெலிகாப்டர் வந்திருச்சா?
போன் பண்ணினேன் சார்! இன்னும் பத்து நிமிடங்களில் வந்துவிடும்!
விடியல் நேரத்திலும் அனைத்து டெண்ட்களும் உயிர்த்திருந்தன.
ஹெலிபேட் செயற்கை வெளிச்சத்தில் மிதந்திருந்தது. ஹெலிபேட் டாய்லெட், அறைக்குள் ஓர் உருவம் ஒளிந்திருந்தது. அது வெண்டிலேட்டர் வழியாக அழகுநாதன் டென்டையே உன்னித்தது. அந்த உருவத்தின் கண்களில் கொலைவெறி (?)!
கடற்படை கேந்திரம்...
பச்சைநிற ராணுவ ஹெலிகாப்டர் நின்றிருந்தது. அதனுள் அதிகபட்சம் 15பேர் அமரலாம். வால்பகுதியில் கார்கோ. ஹெலிகாப்டரின் பெட்ரோல் டாங்க் ஏவியேஷன் பெட்ரோலால் நிரப்பப்பட்டது. ஹெலிகாப்டரின் இன்ஜினும் இறக்கைகளும் செக் செய்யப்பட்டன. அனைத்து சோதனைகளும் முடிந்து கிளியரன்ஸ் சர்டிபிகேட் தரப்பட்டது. வெள்ளை நிற யூனிபார்மில் பைலட் வந்தார். வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
பைலட் ஹெலிகாப்டருக்குள் சென்று அமர்ந்தார். புறப்படும் சிக்னல் கிடைக்க ஹெலிகாப்டர் அப்படியே மேலெழும்பியது. திருமுடி நகர் நோக்கிப் பறந்தது.
பறக்கும் ஹெலிகாப்டரை கண்காணித்தபடி ஒரு டெம்போட்ராக்ஸ் நின்றிருந்தது. அதில் இரு இளைஞர்கள்.
தோழா! இந்த ஹெலிதானே ONGCயின் ஏரியல் சர்வேக்கு தினம் போகிறது?
ஆம் நண்பா.
ராமேஸ்வரம், வேதாரண்யம், தூத்துக்குடி கடல் எல்லைகள் தீவிரமாய் கண்காணிக்கப்படுவதால் பாண்டிச்சேரி கடல் பகுதியை நம் நடமாட்டத்துக்கு உபயோகப்படுத்தினோம். ‘எண்ணெய் தேடுகிறேன் பேர்வழி’ என்று ஒ. என். ஜி. ஸி. வங்காள விரிகுடாவில் சர்வே கப்பலை நிறுத்தி, கடந்த சில மாதங்களாக நம்மை பேஜார் பண்ணி வருகிறது. ஸோ, வி மஸ்ட் கிவ் தெம் எ டெரிபிக் ஷாக் ட்ரீட்மென்ட்!
*எப்படி?"
கடந்த மாதமே நம் இயக்க சகாவுக்கு கட்டளை பிறப்பித்தாகி விட்டது. ‘ONGC சர்வேக்குச் செல்லும் ஹெலிகாப்டரை பாம் வைத்துத் தகர்க்க. இத்தனை நாட்களுக்குள்ளாகவே அவன் ஹெலியைத் தகர்த்திருக்க வேண்டும். ஏனோ அவன் காரியத்தை இன்னும் முடிக்கவில்லை. என்னையும் வந்து சந்திக்கவில்லை. யார் கண்டது? இன்று அவன் சதித்திட்டம் நிறைவேற்றலாம். நாளை ‘தினமலரி’ ல் ஹெலி வெடிப்பை இருபக்க புகைப்படங்களுடன் நாம் பார்த்தாலும் பார்க்கலாம்...
சகா சாத்தானின் மகனாய் சிரித்தான்.
நடக்கும். ஹெலி வெடிப்பை மனக்கண்ணில் நிறுத்திப் பார்த்தால் சந்தோஷம் வடதுருவம் வரை பாய்கிறது தோழா!
எண்ணெய் எரிவாயு கமிஷனின் ஹெலிபேட்... ஹெலிகாப்டர் தளத்தின் மையத்தில் இறங்கி நின்றது.
விடியலுக்கு இன்னும் முப்பதே நிமிடங்கள்.
சீஃப் இன்ஜினீயர் அழகுநாதனும் இரு ஜூனியர் இன்ஜினீயர்களும் நகர்ச்சி பதிவேட்டில் கையொப்பமிட்டனர்.
பைலட்டின் அருகே இரு ஜூனியர் இன்ஜினீயர்களும் அமர்ந்து கொண்டனர். பின் இருக்கையில் அமர்ந்தார் அழகுநாதன்.
ஹெலிகாப்டர் கிளம்பும் வேளையில் அழகுநாதனுக்கு யூரினல் போய்வர உந்து உணர்வு தோன்றியது.
பைலட்டிடம் சமிக்ஞை காட்டி விட்டு ஹெலிபேட் பாத்ரூமுக்கு ஓடினார் அழகுநாதன். ஹெலிகாப்டர் புறப்பட்ட நிலையிலேயே நின்றிருந்தது. பேண்ட் ஜிப்பை சரி செய்தபடி அழகுநாதன் ஹெலி திரும்பினார்.
போகலாமா சார்?
இயந்திர இரைச்சலை மீறி ஒரு ஜே.ஈ. கேட்க-அழகுநாதன் தலையசைத்தார்.
ஹெலிகாப்டர் வானேறியது. அரையிருளில் பாண்டிச்சேரி முழுமையும் பார்வையானது.
ஹெலி - மத்திய மார்க்கெட், அரசு மருத்துவமனை, ஜோன் ஆஃப் ஆர்க் ஸ்கொயர் தாண்டி கடலுக்கு மேலே பறந்தது.
கடற்கரையோர சாலையில் ஜாகிங் செய்வோம் குழுமம்.
நூறு டஜன் உஜாலாவை யாரோ கடலில் கொட்டி, கடல் நீரை நீலமாக்கியிருந்தனர். கடலலைகள் கரையோர தடுப்புச்சுவர் கற்கள் மீது மோதி மோதி மீண்டன.
எண்ணெய் எரிவாயு கமிஷனின் கப்பல் கடலில் பிரம்மாண்டமாக நின்றிருந்தது. 50 மில்லியன் ஆண்டுகளுக்குமுன் நிலத்தடியில் சிக்கிய உயிரினங்களின் உடல் திரிபுதான் குரூட் ஆயிலும் உபபொருட்களும். கடலுக்கு அடியில் 4000 மீட்டர் ஆழத்தில் பெட்ரோல் கிடைக்கிறதா என அறிய கடலில் 50 அடிக்கு ஒன்றாய் டெட்டனேட்டர்கள் புதைக்கப்பட்டிருந்தன. அவைகளை ரிமோட்டால் வெடிக்க வைத்து கடலில் ஏற்படும் அதிர்ச்சி அலைகளை வரைபடத்தில் பதிவார்கள். பதிவை புவியியல்-பெளதிக நிபுணர்கள் ஆராய்ந்து எண்ணெய் வளத்தை உறுதி செய்வார்கள்.
இப்போது விடிந்திருந்தது. சூரியன் இரவு வீழ்ச்சியை நிகழ்த்திவிட்டு, பாதி பூமியை வெளிச்சமாக்கியிருந்தது. கடல் பறவைகள் தாழப்பறந்து கொண்டிருந்தன.
கப்பலின் மேல்தளத்தின்மேல் நின்று கொண்டிருந்த அதிகாரிகள் ஹெலிகாப்டரை பார்த்து கையசைத்தனர்.
வயர்லெஸ் உயிர்த்தது.
டெட்டனேட்டர்களை வெடிக்க வைத்து ஆய்வை ஆரம்பிக்கலாமா சார்?
ஓ. கே.!
என்றார் அழகுநாதன்.
டெட்டனேட்டர்கள் பத்தடி உயரத்துக்கு கடலலைகளை வீசி வெடித்தன.
ஹெலிகாப்டர், கப்பலையும் வெடிக்கும் பகுதிகளையும் சுற்றிச்சுற்றி வந்தது.
திடீரென்று பைலட் முகம் கறுத்தார். பறக்கும் உயரத்தைக் கணிக்கும் ஆல்டிடியூடு மீட்டர் வேலை செய்ய மறுத்தது. எரிபொருள் இருப்பைக் காட்டும் கருவியின் முள் அபாயகரமாய் சுழன்றது. வானத்தில் ஹெலி தடுமாறியது. நொடியில் உயரம் குறைந்து கடலில் பாய்ந்தது. கடல் நீரின் மேல் பாயாமல் பிரம்மப் பிரயத்தனம் செய்து பைலட் ஹெலியை வானேற்றினார்.
உள்ளிருந்த இரு