Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Palkolaikazhagam
Palkolaikazhagam
Palkolaikazhagam
Ebook73 pages56 minutes

Palkolaikazhagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466855
Palkolaikazhagam

Read more from Arnika Nasser

Related to Palkolaikazhagam

Related ebooks

Related categories

Reviews for Palkolaikazhagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Palkolaikazhagam - Arnika Nasser

    அத்தியாயம் 1

    டிடக்டிவ் டியாரா ராஜ்குமார் படுக்கையிலிருந்து எழுந்தான் கண்களைத் திறக்காமலேயே ஆளுயரக்கண்ணாடிக்கு நடந்தான். மெதுமெதுவாக இமை திறந்தான். கண்ணாடியில் தெரியும் தனது பிம்பத்துக்கு ஹாய்! சொன்னான். இன்றைய பொழுது நன்றாக இருக்க வாழ்த்துக்கள் டியாரா!

    டியாரா உயரம் கூடிய மாநிற அஜீத். டேக் வான் டோ கராத்தேயிலும் மார்ஷியல் ஆர்ட்ஸிலும் துப்பாக்கி சுடுதலிலும் நிபுணன் அவன்.

    அவனின் மனைவி பெயர் ஜெருஷா. மகனின் பெயர் நிலாமகன்

    டியாராவுக்கு இரு பெண் உதவியாளர்கள். ஒருத்தி தேஜிஸ்வினி. சுருக்கமாக தேஜி. அறிவே ஆயுதமாகக் கொண்டவள். இன்னொருத்தி ஸிஜா. உடல்பலத்தை ஆயுதமாகக்கொண்டவள்.

    டியாராவின் இறைத்தந்தை ‘பச்சைக்கண்’ பத்திரிக்கையாசிரியர் சங்கரலிங்கம்.

    டியாராவின் காவல்துறை நடவடிக்கைகளுக்கு உதவுபவர் போலீஸ் உயரதிகாரி தேவச்சந்தர், சுருக்கமாக தேவா

    டியாரா பல்துலக்கினான். குளித்தான். முகச்சவரம் செய்தான். அக்குளிலும் பின்னங்கழுத்திலும் இருகாதுமடல் பின்னிலும் நறுமணம் பீய்ச்சிக்கொண்டான்.

    ஹாய் டியாரா! குட்மார்னிங்! காபி நீட்டினாள் ஜெருஷா. காபியை ஒரு ‘கல்ப்’ உறிஞ்சி வாயில் வைத்துக்கொண்டு ஜெரு உதட்டில் முத்தமிட்டு காபியை அவளது உதட்டுக்குள் அனுப்பினான்.

    உமிழ்நீர் கலந்த காபியை திவ்யமாய் ரசித்து விழுங்கினாள் ஜெரு.

    செம டேஸ்ட்டா டியாரா!

    கண்சிமிட்டி சிரித்தான் டியாரா. ‘ஆலன் ஸோலி காக்கி ட்ரவுஸரும் ‘பேன்ட்டலூன்’ டிஸைனர் சர்ட்டும் அணிந்து கொண்டான். கால்களில் அடிடாஸ் சூட்கேஸை கவர்ந்தான்.

    பை ஜெரு, ஸே பை டு நிலாமகன்!!

    கரிபியன் தீவுகளிலிருந்து கற்போடு திரும்பிவா பய்யா!

    முயற்சிக்கிறேன்!

    -டிடக்டிவ் ஏஜன்ஸி அலுவலகம்.

    குட்டைக்கவுனும் பனியனும் அணிந்து உட்பட்டாள் தேஜி

    ஊப்! உதடு குவித்து மூச்சுவிட்டான் டியாரா.

    முறைத்தாள் தேஜி.

    யூ ஆர் ஆல்வேஸ் பிகேவிங் லைக் எ நாட்டி பிளே பாய்...

    சிரித்தான் டியாரா ஒரு செக்ஸ் ஜோக் சொல்லட்டுமா?

    சொல்லு!

    சொன்னான்

    சிரித்தாள் தேஜி. கலீஜ் பார்ட்டிப்பா நீ. புறப்படு ஏர்போர்டுக்கு பிளைட்டுக்கு நேரமாச்சு!

    ஓபல் ஆஸ்ட்ரா கார் காத்திருந்தது.

    காரின் பின்சீட்டில் சூட்கேஸை எறிந்தான்.

    காரை கிளப்பினான்.

    அறிஞர் அண்ணா சர்வதேச விமானநிலையத்திற்குள் பிரேவேசித்தான். பார்க்கிங்கில் நிறுத்தினான். சூட்கேஸுடன் விமானநிலையத்திற்குள் நடந்தான்,

    செக்கிங்கில், ஸாரி சார்! உங்க ப்ளைட் தொழில்நுட்பக்காரணங்களுக்காக கான்ஸல் செய்யப்பட்டுள்ளது! 36-34-36-குயில் கொஞ்சியது.

    அட் எனி காஸ்ட்... நான் கரிபியன் தீவுக்களுக்கு போயாக வேண்டும்!

    ஒரே ஒரு வழி இருக்கிறது! கீ போர்டு பட்டன்களை தட்டி,

    என்ன?

    ஒரு ‘சார்ட்டட் ப்ளைட்’ லேடீஸ் ஸ்பெஷல் கரிபியன் தீவுகளுக்கு இங்கிருந்து கிளம்ப இருக்கிறது. உலக அழகிப்போட்டியின் முதல் சுற்றை இங்கு முடித்துவிட்டு 86 தேசத்து அழகிகள் இறுதிச்சுற்றுக்கு அங்கு போகிறார்கள். அந்த ப்ளைட்டில் ஒரே ஒரு இருக்கை காலியாக உள்ளது. விமானத்தை அமர்த்திய பெண்மணி சம்மதித்தால் நீங்கள் பயனிக்கலாம்!

    அந்தப் பெண்மணி எங்கே?

    அதோ!

    ஜீன்ஸும் ஸ்லிவ்லெஸ் லோகட் பனியனும் அணிந்த யுவதி ஹைஹீல்ஸால் டாக்டாக்கினாள்.

    எக்ஸ்க்யூஸ் மீ... இறைஞ்சினான்.

    பேசும் டியாராவின் உதடுகளையே க்ளோஸப்பில் காமமாய் பார்த்துவிட்டு ஒய் நாட்? கம் கம் மிஸ்டர் டியாரா!

    டியாராவை இடதுகை நீட்டி அணைத்தபடி நடந்தாள். அவளது அக்குளிலிருந்து டியோடரன்ட் நறுமனம் கிளம்பித்தாக்கியது. வானநங்கை ஜப்பானிய முறையில் குனிந்து வரவேற்றாள்.

    விமானத்திற்குள் பிரவேசித்த டியாரா ஆனந்தமாய் திகிலுற்றான்.

    டு பீஸ் பிகினியில் 86 தேசத்து அழகிகள்! வாவ்! வாவாவாவாவ்!

    ஒரு இருக்கையில் அமர்ந்தான். பக்கத்து இருக்கை பெண் கைக்குலுக்கினாள். க்ளாட் டு மீட் யூ. மீ ரினி!

    "மீ

    Enjoying the preview?
    Page 1 of 1