Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suda Suda Raththam
Suda Suda Raththam
Suda Suda Raththam
Ebook83 pages1 hour

Suda Suda Raththam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466596
Suda Suda Raththam

Read more from Arnika Nasser

Related to Suda Suda Raththam

Related ebooks

Related categories

Reviews for Suda Suda Raththam

Rating: 4 out of 5 stars
4/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suda Suda Raththam - Arnika Nasser

    13

    1

    இரவு வானம் மயில் கழுத்து நீல நிறத்தையும் பருவம் பெண்ணின் கூந்தல் கறுப்பு நிறத்தையும் 60:40 என்ற விகிதத்தில் கலந்து பின்னிய ஆரை வட்டக் கூடாரமாய்க் காட்சி அளித்தது. கூடாரத்தின் வட்ட விளிம்புகள் தூரத்துப் பூமியைத் தொட்டிருந்தன. மாதம் ஒரு முறை திருடன்-போலீஸ் விளையாட்டு விளையாடும் நிலாப் பெண் தன் வீட்டு விளக்கை முழுவதும் அணைத்து ஒளிந்திருக்க, நட்சத்திரச் சிறுவர்கள் சிரத்தையாய்த் தேட ஆரம்பித்திருந்தனர். சுடுகாட்டு ஆந்தைகள் வினோதமாய்க் குரல் எழுப்பியபடி தாழப் பறந்து போயின. ஹிப்பி கிராப் மரங்களில் ஒடுங்கியிருந்த பறவைகள் பயந்து நடுங்கி அரைக் கண் மூடியிருந்தன.

    அப்பா-அம்மா விளையாட்டு விளையாடிய களைப்பில் கணவன்- மனைவிமார்களும், தேர்வுக்கு விழுந்து விழுந்து படித்த அசதியில் மாணவர்களும் மற்றும் சகலரும் ஆயிரக்கணக்கான குறட்டை ஒலிகளைத் தத்தம் சுவாச லயத்தில் எழுப்பியபடி ஆழ்தூக்கத் தேசத்தில் நீண்ட தூரம் பயணித்திருந்தனர். எங்கோ ஒரு தூரத்து மணிக் கூண்டு மிகச் சரியாக 12 முறை ஒலித்து ஓய்ந்தது.

    அந்த 5 லட்சம் ஜனத்தொகை கொண்ட ஊரின் பிரதான சுடுகாட்டில்...

    டிசம்பர் குளிரின் கடுமை தாங்காமல் அந்த வெட்டியான் கம் வாட்ச்மேன் தன் கறுப்புக் கம்பளியை இன்னும் இறுக்கமாகப் போர்த்திக் கொண்டு, தன் டயர்ச் செருப்பு சரசரக்க, லாந்தர் விளக்கு வழிகாட்டத் தன் குடிசைக்கு நடந்தான்.

    அவன் பெயர் இருளாண்டி வயது 63.

    அவனின் உள் மனதுக்கு இன்று ஏதோ நடக்கப் போகிறது எனச் சாத்தானின் நிழல் தெரிந்தது. வழக்கத்துக்கு மாறாகத் தன் சுடுகாட்டில் 120 நொடிகளாக ஒரு வினோத வாத்திய இசை ஒலிப்பது அவனுக்குள் பயத் திருவிழா நடத்திக் காட்டியது. குடிசைக்குள் முடங்கிக் கொள்ளத்தான் இப்போது போகிறான்.

    செருப்பைக் குடிசை வாசலில் கழற்றிவிட்டுக் குனிந்தபடி குடிசையின் உள் நுழைந்து லாந்தரின் ஒளி அளவைச் சொற்பமாக்கி மூலையில் வைத்தான். கிழிந்த கோரைப் பாயை விரித்து அழுக்குத் தலையணையைத் தலைமாட்டில் போட்டுத் தூங்கப் போனான் இருளாண்டி.

    சுடுகாட்டின் மையப் பகுதியில் ஒரு மேடை தெரிந்தது. மேடை முழுவதும் எலும்புகளால் ஆன தோரணம் கட்டப்பட்டிருந்தது. மேடையின் இடப் பகுதியில் கறுப்பு அங்கி அணிந்த நால்வர் வாத்தியங்கள் வைத்து இசைத்துக் கொண்டிருந்தனர்.

    ஒரு ஆள் வாசித்துக் கொண்டிருந்த புளூட் வெள்ளை நிற எலும்பால் செய்யப்பட்டு அமைப்பாகத் துவாரங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இரண்டாவது ஆள் வைத்திருந்த கிடார் கறுப்பு நிறத்தில் இருந்தது. ஆறு கம்பிகளுக்குப் பதில் ரத்தம் பூசிய மனித நரம்புகள். மூன்றாவது ஆள் வாசிக்கும் ட்ரம்ஸ் மனிதத் தோலால் செய்யப்பட்டிருந்தது.

    மேடைக்கு முன் கலகலப்பான பேச்சுக் குரல்கள். சிலிங் சிலிங் என்று கண்ணாடி டம்ளர்கள் உருளும் சப்தம். அங்கிருந்த அனைவரும் தரை புரளும் கறுப்பு அங்கி அணிந்திருந்தனர் கழுத்தில் எண்கள் பொறிக்கப்பட்ட டாலர், அவரவர் வலது கையில் சிவப்புத் திரவம் நிறைந்த கண்ணாடிக் கிண்ணங்கள். எல்லோரின் கண்களும் பளீர் சிவப்பு நிறத்தில் இமைகள் இல்லாமல்!

    ஒவ்வோர் உருவமும் வித்தியாசமான விசித்திர உருவ அமைப்பில் இருந்தன.

    திடீரென வாத்திய இசையின் ஒலி அளவு உச்சம் பெற்றது. எல்லா உருவங்களும் ஆவலுடன் எதிர்பார்த்த எண். 131313/ 983 நடந்து வருகிறது-கைகளை அரசியல் வாதித்தனமாய்த் தலைக்கு மேல் அசைத்தபடி,

    எம்.எல்.ஏ.வாக இருந்து செத்துப் போன பேய் முதலில் கோஷம் ஆரம்பித்தது.

    ஆவிகள் ராஜ்யம்...

    வாழ்க...

    ஆவிகள் தலைவி விசித்ரா...

    வாழ்க...

    அந்த விசித்ரா மேடை ஏறினாள். வாத்திய இசை உச்ச ஒலி அளவிலேயே இருந்தது.

    வகிடு தெரியாத கேசம். இதயத்தைத் துளையிடும் கண்கள். இருபக்க நாசித் துவாரங்களும் குறுகிய மூக்கு. ரத்தச் சிவப்பில் உதடுகள். கீழ் உதடு அகன்று கனத்து... அதிலொரு அபூர்வப் பளபளப்பு. கழுத்தை விட்டு இறங்கியிருந்தது கறுப்பு அங்கி.

    விசித்ரா இப்போது இடக்கையை உயர்த்தி வாத்திய இசையை நிறுத்தச் சொன்னாள். பின், தொண்டையைச் சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.

    என் ஆவிகள் தேசத்து அருமை நண்பர்களே! உங்களுக்கு என் அமாவாசையின் கறுப்பு வணக்கம் நாம் இங்கு எதைப் பற்றிப் பேசக் கூடியிருக்கிறோம் தெரியுமா?

    தெரியாது... தெரியாது...

    "நாம் யார்? அகால மரணமடைந்தவர்கள். கொலை செய்யப்பட்டு... தற்கொலை செய்து கொண்டு... விபத்தில் சிக்கி... கற்பழிக்கப்பட்டு... நம் ஆசைகள் நிறைவேறாத நிலையில் துரதிர்ஷ்டவசமாக இறந்தவர்கள்...

    நாம் எலும்பு ரத்த நிணக் குவியலின் மத்தியில் மண் மாதா

    Enjoying the preview?
    Page 1 of 1