Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Roja Oviyam
Roja Oviyam
Roja Oviyam
Ebook146 pages51 minutes

Roja Oviyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியா-பாகிஸ்தான் தேசப்பிரிவினையை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட உணர்வுப்பூர்வமான நாவல் இது.

கமாண்டோ பயிற்சி முடித்து யாஸ்மின் தாத்தா அப்துல்லா இருக்கும் மதுரை திரும்புகிறாள். ஊரே வரவேற்கிறது. யாஸ்மினுடன் கராச்சி பெண்மணி ஷெகனாஸ் முகநூல் நட்பு கொள்கிறாள். பிளாஷ்பேக். அப்துல்லாவும் வஹாப்பும் சகோதரர்கள். 1947 தேசபிரிவினையின் போது அப்துல்லா இந்தியாவிலேயே தங்கிவிட வஹாப் பாகிஸ்தான் போகிறான். அப்துல்லாவின் பேத்தி யாஸ்மின். வஹாப்பின் பேத்தி ஷெகனான்ஸ். ஷெகனான்ஸ் திருமணமானவள். கணவன் பாகிஸ்தானின் உளவுபிரிவில் பணிபுரிகிறான். அவளின் மகன் அஷ்ரப். இம்ரான் ஷெகனான்ஸ்-யாஸ்மின் முகநூல் நட்பு அறிந்து அவளை விவாகரத்து செய்கிறான். ஷெகனாஸ் மகன் அஷ்ரப்புடன் இந்தியா தப்பி வருகிறாள். வழியில் ஷெகனாஸ் இறக்க அஷ்ரப் இந்திய கரை ஒதுங்குகிறான். அஷ்ரப்பை பாக் உளவாளி என இந்தியா கருதுகிறது. யாஸ்மின் மாபெரும் சட்ட போராட்டங்களை நடத்தி அஷ்ரப்பை மீட்டு எடுக்கிறாள். இறுதியில் தாய்மை வெல்கிறது. தேசங்களை தாண்டி மதங்களை தாண்டி ஒரு கன்னிதாய் ஜெயிக்கிறாள்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580111006385
Roja Oviyam

Read more from Arnika Nasser

Related to Roja Oviyam

Related ebooks

Related categories

Reviews for Roja Oviyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Roja Oviyam - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    ரோஜா ஓவியம்

    Roja Oviyam

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 1

    வானம் முழுவதும் அடர்த்தியாய் நூறு கோடிப் பறவைகள் பறக்கும் இந்தியர் வானமிது எங்கள் மீது கண்ணிவலை வீசப்பட்டால் என்னவாகும் உனது வலை. கூர் அலகுகளால் கொத்திக் கிழிபட்டு கீழே விழும் உங்கள் உடம்புகளில் கோடித் துணிகளாக.

    பா. சத்தியமோகன்

    மதுரை. கோரிப்பாளையம்.

    பட்டரைக்காரத் தெருவில் அந்தப் பங்களா டைப் வீடு கம்பீரமாய் நிமிர்ந்திருந்தது.

    வெளிவாசலில் சாமியானா போடப்பட்டிருந்தது.

    பாண்டு கோஷ்டியினர் நாகூர் அனீபாவின் இஸ்லாமியப் பாடல்களை இசை வடிவில் வாசித்துக் கொண்டிருந்தனர்.

    கொல்லைப்புறத்தில் ஒரு ராட்சத் 'தேக்ஸா'வில் பிரியாணி தயாராகிக் கொண்டிருந்தது.

    எழுபத்தியெட்டு வயதான அப்துல்லாவை பரபரப்பான உற்சாகம் தொற்றியிருந்தது.

    ஹாஜி அப்துல்லா பன்முகம் கொண்ட பணக்கார முஸ்லிம் பிரமுகர். சொந்தமாய் நான்கு தொழில்கள். கோரிப்பாளையம் பள்ளி வாசலின் முத்தவல்லி. மதநல்லிணக்கக் குழுவின் தலைவர்.

    உயரம் 170 செ.மீ. சங்கு மார்க் லுங்கி. வெள்ளைநிற முழுக்கை ஜிப்பா. தலையில் வலை தொப்பி. காந்தீயம் தவழும் முகம். மீசையுடன் இணைந்த நரைத்த தாடி. இடது காது மடலில் காது கேட்க உதவும் நவீனகருவி. கால்களில் கட் ஷூ.

    அப்துல்லாவின் பரபரப்புக்கு அர்த்தம் இருக்கிறது.

    பாளையங்கோட்டையில் 'கமாண்டோ' பயிற்சி முடித்தவிட்டு இன்று மதுரை திரும்புகிறாள் கடைசி பேத்தி யாஸ்மின்.

    அப்துல்லாவுக்கு மூன்று பேத்திகள். ஒரு பேத்தியை அருப்புக் கோட்டையில் கட்டிக் கொடுத்திருக்கிறார். இரண்டாவது பேத்தியை திண்டுக்கல் மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்திருக்கிறார். இரு பேத்திகள் வழி, அப்துல்லாவுக்கு இரு கொள்ளுப்பேரன்கள் இரு கொள்ளுப்பேத்திகள்.

    மகனும் மருமகளும் யாஸ்மின் கைக்குழந்தையாய் இருக்கும்போதே ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார்கள்.

    அப்துல்லா, தாத்தா ஸ்தானத்தில் நில்லாது கடைசி பேத்தி யாஸ்மினை மகள் போல் பாவித்து வளர்த்தார். யாஸ்மின் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு கமாண்டோவாக விரும்பினாள். அதன்படி கமாண்டோ பயிற்சியும் முடித்துவிட்டு இன்று ஊர் திரும்புகிறாள்.

    அப்துல்லா தனது இரு பேத்தி குடும்பங்களையும் வரவழைத்திருந்தார்.

    பேருந்து நிலையத்துக்கும் புகைவண்டி நிலையத்துக்கும் போய் யாஸ்மினைக் காணாது சோர்ந்து திரும்பினார்கள்.

    நல்லாப் பாத்தீங்களாப்பா! யாஸ்மின் குறும்புக்காரி. ஒளிஞ்சு நின்னு நீங்க தேடி அவஸ்தைப் படுறதை ரசிச்சாலும் ரசிச்சிருப்பா...!

    அவ வரல தாதா! மூத்த பேத்தி கணவன்.

    நாளைக்கு வர்றதா இருக்காளோ, என்னவோ? - இரண்டாவது பேத்தி கணவன்.

    வாசலில் பாண்டு வாத்தியம் உச்சத்தில் ஒலித்தது. ஹாஜி அப்துல்லா உட்பட அனைவரும் வெளிவாசலுக்கு ஓடினர்.

    காலில் ஸ்கேட்டிங் சக்கரங்களுடன் யாஸ்மின்!

    ஹாய் தாதா! உறாய் அக்காஸ்! ஹாய்... ஹாய்... கலைஸ்! பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன் தேடி ஏமாந்தீங்களா? தின்னவேலியிலிருந்து ஸ்கேட் பண்ணியே வந்தேன்! கால் சக்கரங்களைச் சுட்டினாள்.

    மூத்த அக்கா ஆரத்தி சுற்றினாள். ஆரத்தி சுற்றுவது அப்துல்லாவுக்கு பிடிக்காது என்றாலும், ஆசை பேத்திக்காகப் பொறுத்துக் கொண்டார்.

    யாஸ்மின் 23 வயது அதிரடிப்புயல். உயரம் 5'7". ரோஜா நிறம். சீரமைக்கப்பட்ட பாப் கேசம். ஜீன்ஸும் டீ சர்ட்டும் உடுத்தியிருந்தாள். கால்களில் ஸ்போர்ட்ஸ் ஷூ காதுகளில் பொட்டுக்கடலை வடிவ ஸ்டட். கண்களில் ரேபான். வாயில் பபிள்கம். மார்ஷியல் கலைகளிலும் துப்பாக்கி சுடுதலிலும் நிபுணி.

    தாதா! எப்படியிருக்கீங்க? கட்டிக் கொண்டாள் யாஸ்மின்.

    கண்ணீர் கசிந்தார் அப்துல்லா. அல்லாஹ்வின் நாட்டத்தாலே நல்லா இருக்கேன். நீ படிச்சு முடிச்சு வர்றதை கண் குளிரப் பாக்க உன் பாவாவும் அம்மாவும் இல்லையேன்றதுதான் மனசை ஈரப்படுத்துது.

    எல்லா உறவுக்கும் மேலா நீங்க இருக்கீங்களே தாதா. போதாதா?

    ட்ரெயினிங் முடிஞ்சிருச்சா, இன்னும் பாக்கி இருக்கா?

    முடிஞ்சிருச்சு!

    டூட்டி?

    போஸ்ட்டிங் போட இரண்டொரு மாசமாகும் தாதா!

    மூக்கை 'சருட்சருட்'டென்று உறிஞ்சினாள் யாஸ்மின். பிரியாணி போல...

    ஆமா யாஸ். கோரிப்பாளையம் முழுமைக்கும் மதிய விருந்து இங்கதான்!

    யாஸ்மின் தனது முதுகில் கோர்த்திருந்த லெதர் பேக்கைக் கழற்றி சோபாவில் போட்டாள்.

    வாங்கி வந்த பொருட்கள் அனைத்தையும் அனைவருக்கும் பங்கிட்டாள்.

    எனக்கு? - அப்துல்லா.

    தாதாவை இழுத்து இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள். போதாது?

    ஓ! நெகிழ்ந்தார். போன தடவைக்கு இந்தத் தடவை ரொம்ப மெலிஞ்சிருக்கியே யாஸ்?

    செல்லமாக முறைத்தாள் யாஸ்மின். நான் மெலியல. நீங்கதான் மெலிஞ்சு இருக்கீங்க.

    மூத்த பேத்தி புருஷன் உனக்கு பரமக்குடில மாப்பிள்ளை பாத்திருக்கார், மாப்பிள்ளை போலீஸ்லதான் வேலை பார்க்கிறான்!

    நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் தாதா. காலம் பூராவும் உங்களைப் பார்த்துக்குவேன். அத்தோட தாய் நாட்டுக்கு உழைப்பேன்.

    மூத்த அக்கா, போடி போடி... நீயும் உன் டயலாக்கும்! நானும் ஒரு காலத்துல உன்னை மாதிரிதான் பேசினேன்... இப்பப்பாரு... புருஷன், ரெண்டு குழந்தைங்களோட சராசரி மனைவியா செட்டிலாய்ட்டேன்... என்றாள்.

    இளைய அக்கா, குளிச்சிட்டு ட்ரஸ் மாத்திட்டு வா. இந்த ட்ரஸ் பாக்க சகிக்கல. கோரிப்பாளையம் வந்ததும் கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது முஸ்லிம் பொண்ணா நடந்துக்க! என்றாள்.

    தலையசைத்தபடி குளியலறைக்கு நடந்தாள் யாஸ்மின்.

    வாழை இலையை துண்டாக்கிக் கொண்டிருந்தனர். தயிர்ப் பச்சடிக்கு வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தனர். பிரியாணி 'தேக்ஸா'வின் மேல் தாம்பாளத்தில் நெருப்பு கொட்டி தம்மிட்டுக் கொண்டிருந்தனர். பக்கத்து அடுப்புகளில் ‘தால்ச்சா'வும் 'பீர்னி'யும் கொதித்துக் கொண்டிருந்தன.

    யாஸ்மின் குளித்து முடித்து எம்ராய்டரி வேலைகளும் கண்ணாடி வேலைகளும் செய்யப்பட்ட சுடிதாரை உடுத்திக் கொண்டாள். துப்பட்டாவை 'ஹிஜாப்' ஆக்கிக் கொண்டாள்.

    உள்ளறையில் மல்லிகைப்பூ பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. தரையில் கோரைப்பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன.

    'ரசூல்லாஹ் மௌலது' ஓத இமாமும் பதினேழு மதர்ஸா இளைஞர்களும் வந்திருந்தனர்.

    அறை முழுவதும் ஊதுபத்தி மணமும் சாம்பிராணி மணமும் சுழன்றடித்தன.

    இரண்டுமணி நேரம் மௌலது ஓதப்பட்டது. நிறைவில் 'துவா' ஓதப்பட்டது. அனைவரும் இரு கை குவித்து 'ஆமீன்! ஆமீன்!' கூறி ஆமோதித்தனர்.

    யாஸ்மின் தனியே ஒரு 'துவா' ஓதி 'ஆமீன்' கூறினாள்.

    எல்லாம் வல்ல இறைவனே! உலகில் சமாதானமும் மத நல்லிணக்கமும் மனிதநேயமும் பரவட்டும்!

    ஆமீன்! (அப்படியே ஆகட்டும்)

    எந்த வடிவத்தில் வரும் ஆத்மார்த்தமான இறை வழிபாட்டையும் சிறப்பானதாக ஏற்றுக் கொள்வாயாக!

    ஆமீன்!

    மதத்தின் பெயரால் செய்யப்படும் வன்முறைகளை அடியோடு வெறுப்பாயாக!

    ஆமீன்!

    எனது இந்திய தேசம் அனைத்து துறைகளிலும் முதலிடம் வகிக்க அருள் புரிவாயாக!

    ஆமீன்!

    பெண்களுக்குச் சம உரிமை வழங்க மறுக்கும் ஆண்களுக்குத் தகுந்த தண்டனை தருவாயாக!

    ஆமீன்!

    Enjoying the preview?
    Page 1 of 1