Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saaththaan Devathai
Saaththaan Devathai
Saaththaan Devathai
Ebook407 pages2 hours

Saaththaan Devathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Biography of Eva Writen By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466763
Saaththaan Devathai

Read more from Arnika Nasser

Related to Saaththaan Devathai

Related ebooks

Related categories

Reviews for Saaththaan Devathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saaththaan Devathai - Arnika Nasser

    1

    அது 17-5-1919 ஆம் ஆண்டின் ஓர் அதிகாலை...

    அர்ஜென்டைனாவின் தலைநகர் ப்யூனோஸ் ஏரிஸ்...

    பாராளுமன்றக் கட்டிடத்தின் முன் சீருடைக் கேடயமாக ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் துப்பாக்கி உயர்த்தி நின்றிருந்தனர். அவர்களின் இறுகிய முகத்தில் கொலைவெறி மிளிர்ந்தது.

    ‘ஹோ’வென்ற ஸ்பானிஷ் இரைச்சல் காற்று மண்டலத்தை பூகம்ப மித்தது.

    ஒரு சிறு நதியை இரையெடுக்க வரும் சமுத்திரத்தைப் போல தொழிலாளர் கூட்டம்- இலட்சக் கணக்கில்- கோஷமிட்டபடி பாராளுமன்ற கட்டடம் நெருங்கியது.

    தொழிலாளர் கூட்டம் சட்டையில்லாமல் வெறும் காற்சட்டையுடன்... புழுதிபடிந்த வெற்றுக் கால்களுடன்... ராணுவத் தலைமை மெஹா போனில் குரைத்தது.

    தொடர்ந்து வராதீர்கள்! நில்லுங்கள்! திரும்பி அப்படிக்கப்படியே கலைந்து போங்கள்!...

    ஆவேசத் தொழிலாளர் கூட்டம் தொடர்ந்து கோஷமிட்டபடி முன்னேறியது.

    ஆயிரக்கணக்கான ‘கலைஞர்- முகமது அலி’ தள்ளுமுள்ளுகள் அரங்கேறின.

    தலைமை பேய்த்தனமாய்க் கட்டளையிட்டது.

    சுட்டுத் தள்ளுங்கள் கூலிக்கார நாய்களை!

    ‘டுஷிங்!’

    ‘டுஷிங்!’

    ‘டுஷிங்!’

    தோட்டாக்கள் படுக்கை வசத்தில் சீறுசீறின. தொழிலாளர்கள் பதறி சிதறி விலகி ஓடினர். தோட்டா தைத்தவர்கள் மரண ஓலம் எழுப்பி தரையில் தொமீரினர்.

    தோட்டாக்களுக்குத் தப்பி தரை சிதறியவர்கள் தறிகெட்டு ஓடுபவர்களால் மிதிக்கப்பட்டு மரணதேசத்துக்கு விசா எடுத்தனர்.

    தொடர்ந்து பலமணிநேரம் விடாமல் குரைத்த பிறகு துப்பாக்கிகள் ஓய்வெடுத்தன. கந்தக புகைமண்டலம் சுற்றிச் சுழன்றது. எங்கு பார்த்தாலும் பொசுங்கிய நரமாமிச வாடை.

    கண்ணுக்கெட்டிய தூரம் தொழிலாளர் பிணங்கள், தொழிலாளர் பிணங்கள்...! பிணங்கள் அனைத்தும் தேங்கி அரை குறையாய் உறைந்திருக்கும் இரத்தக்குட்டையில் அமிழ்ந்திருந்தன.

    அதேநேரம்...

    தலைநகரிலிருந்து 250-வது மைலில் அமைந்திருந்த லாஸ்டோல்டாஸ் கிராமத்தில்...

    அந்தக் கிராமத்தில் பெரும்பாலும் அமெரிக்க செவ்விந்தியர்களே குடியிருந்தனர். மிக நீண்ட மணற்பரப்பில் ஒரு சிறு புழு போல் காட்சியளித்தது அந்தக் கிராமம்.

    கிராமம் முழுவதும் புழுதி படிந்த ஒற்றையறை செங்கல் வீடுகள் எழும்பியிருந்தன.

    கிராமத்தைச் சுற்றி சூழ்ந்திருந்த மக்காச்சோள வயலுக்குள்ளும் மணற்புல்லுக்குள்ளும் காற்று சுழன்றடித்தது.

    மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சிகள் தாழப் பறந்தன.

    அந்த ஒற்றையறைச் செங்கல் வீட்டின் வீச்சமடிக்கும் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்து பிரசவவலியால் துடித்துக் கொண்டிருந்தாள் ஹுவானா. (கதாநாயகியின் தாய்)

    அவள் கரடுமுரடு தன்மை கொண்ட அழகி. பிரான்ஸுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட மலை வட்டாரத்தின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவள். அவள் தந்தை ஒரு வாகன ஓட்டி. அவளுக்கும் சிறிதேனும் சொத்து இருந்திருந்தால் அவளுக்கு முறைமையான திருமணம் நடந்திருக்கும்; அல்லது படித்த ஆசிரியையாகவோ, தபால் அலுவலக ஊழியையாகவோ பணிபுரிந்து கொண்டிருப்பாள்.

    ஆனால் அவளுக்கென எதுவுமே இல்லாததால் பண்ணை வேலைகள் மேற்கொண்டாள். பண்ணை வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலும் பண்ணையாருக்கோ, பண்ணையார் மகனுக்கோ இரையாவர். பின்னர் அந்தப் பண்ணையிலேயே வேலை செய்யும் கூலி ஆண்களை திருமணம் செய்து கொள்வர். அந்தக் கிராமத்தில் 14 வயது மீறிய கன்னிப்பெண்கள் மிக அரிது.

    ஹுவானா மாற்று உபாயம் மேற்கொண்டாள். ஒரு திருமணமான வசதியுள்ள ஆணுக்கு வைப்பாட்டியானாள்.

    துவார்த்தே அவளுக்குத் தேவைப்படும் தற்காலிக பாதுகாப்பையும் ஐந்துக்கு இரண்டு பழுதில்லாத சமூக அந்தஸ்தையும் வழங்கினார். அவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர். அங்கு அவருக்கு முறைப்படியான மனைவியும் குழந்தைகளும் இருந்தனர். இந்த ‘ரெண்டுவீடு’ விஷயம் துவார்த்தேக்கு எவ்வித மனக்கிலேசத்தையும் ஏற்படுத்தவில்லை.

    அவருக்கும் அவளுக்கும் இடையேயான உறவு பத்து வருடம் நீடித்திருந்ததின் அடையாளமாக ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை பிறந்திருந்தன. தற்சமயம் பிறக்கப் போவது ஐந்தாவது குழந்தை ஈவா.

    தாதிப்பெண் அவளின் கால்களை அகல விரித்து பனிக்குடம் உடைந்துவிட்டதா என ஆராய்ந்தாள்.

    வீட்டின் வாசலில் கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தார் துவார்த்தே. அவரின் காலடியில் நைந்து போன ஆடைகள் உடுத்திய நான்கு குழந்தைகள் நின்றிருந்தனர்.

    ஜீஸஸ் கிரைஸ்ட்! இம்முறையும் எனக்கு ஆண் குழந்தை பிறக்க அருள்புரிவாயாக! -முணுமுணுத்தார்.

    ஹுவானா வானம் கிழிய வீறிட்டாள். தாதிப்பெண் குழந்தையை வெளியே சரேலென உருவினாள். குழகுழப்பான திரவத்துடன் குழந்தை தாதிப்பெண் கையில் தலைகீழாய் தொங்கியது.

    தாதிப்பெண் குழந்தையின் வயிற்றில் கிள்ளினாள். குழந்தை மிகையான ஒலியில் அழுதது.

    அந்தக் குழந்தைதான் மரியா ஈவா துவார்த்தே! எதிர்கால அர்ஜென்டைனாவின் பெண் சர்வாதிகாரி!!

    பழைய கத்தரிக்கோல் வைத்து ஈவாவின் தொப்புள் கொடியை நறுக்கி முடிச்சிட்டாள் தாதிப்பெண். ஈவாவை சுத்தப்படுத்தி துணி சுற்றி, ஹுவானா அருகே படுக்க வைத்தாள். பிரசவ அசுத்தங்களை பொட்டலம் கட்டி கொல்லையில் புதைத்து திரும்பினாள்.

    என்ன குழந்தை? துவார்த்தே வினவினார் தாதிப்பெண்ணை.

    பெண் குழந்தை!

    ஒரு மைக்ரோ நொடி ஆர்வம் குறைந்தார். பின் மனதை சமாதானப்படுத்திக்கொண்டு குழந்தையை நோக்கி ஓடினார். நான்கு குழந்தைகளும் பின் தொடர்ந்தன.

    நீள்வட்டமுகம்.

    ஆண்களை வசியப்படுத்தப்போகும் கண்கள்.

    கடவுளின் சுண்டுவிரல் நுனிபோல் மூக்கு.

    சாகசம் விதைக்கப்பட்ட உதடுகள்.

    தேன்நிற கேசம்.

    வெண்கோதுமை நிறம்.

    குழந்தைகள் தங்களின் புதிய தங்கையை அசூயையுடனும் பொறாமையுடனும் வெறித்தனர்.

    ‘தாங்கள் உண்ணும் சொற்ப உணவிலும் பங்குகேட்க வந்துவிட்டதே ஒரு சின்னஞ்சிறு உயிர்!’

    ஈவாவின் அழகையும் சங்கீதக்குரலையும் துடிப்பையும் கண்டு மயங்கிப்போனார் துவார்த்தே. ‘என் இரு குடும்ப குழந்தைகளிலேயே அழகுக் குழந்தை இவள்தான். இவள் சாதாரண குழந்தையல்ல; ஏதோ பெரிதாய் சாதிக்கப்போகிற குழந்தை!’

    தனது அழகிய வைப்பாட்டியின் கைகளை நெகிழ்ச்சியாய்ப் பற்றிக்கொண்டார் துவார்த்தே. ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் ஹுவானா. நான்கு குழந்தைகளும் கூட பொறாமை மறந்து குழந்தை அழகில் சொக்கிப்போய் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்தனர்.

    பிரசவம் பார்த்த தாதிப்பெண்ணுக்கு இரண்டு மூட்டை மக்காச்சோளம் வழங்கினார் துவார்த்தே.

    வணங்கியபடி கிளம்பிப்போனாள் தாதிப்பெண். தனது கோவேறு கழுதையில் இரு மூட்டைகளையும் ஏற்றி மண்சாலையில் நடந்து போனாள் தாதிப்பெண்.

    தூசிப்புயல் சீறியது. கண்களை தூசி தாக்காமலிருக்க முகத்தை மூடிக்கொண்டாள் தாதிப்பெண். கவுன் காற்றில் உயர்ந்து தாதிப் பெண்ணின் உள்ளாடை கண்காட்சியானது. அதனை ஒரு கையால் பிடித்து கீழிறக்கி, தனது தொடையை மறைத்தாள் தாதிப்பெண்.

    வழி மறித்தனர் இரு கிராமத்துப் பெண்கள்.

    எங்க போயிட்டு வர்ற?

    பிரசவத்துக்கு!

    யாருக்குப் பிரசவம்?

    ஹுவானாவுக்கு!

    ஒரு வைப்பாட்டிக்கு பிரசவம் பார்க்க உனக்கு வெக்கமாயில்ல?

    விபச்சாரிகளை விட வைப்பாட்டி மேல்!

    எங்களை விபச்சாரி என்கிறாயா?

    ஓர் உதாரணம்தான் கூறினேன்!

    என்ன குழந்தை?

    பெண் குழந்தை!

    இழிவாய் நகைத்தனர்.

    ஓவ்! ஒரு ‘பெரிய வைப்பாட்டி’க்கு ஒரு ‘சின்ன வைப்பாட்டி’ பிறந்திருக்கு! இன்னும் பத்து பதினஞ்சு வருஷம் கழிச்சு ஹுவானா ஒரு ‘முதல் இல்லாத வியாபாரம்’ ஓஹோன்னு பண்ணலாம் நாலையும் வச்சு. வாடிக்கையாளர் கூட்டிவர இருக்கவே இருக்கான் ஒரு பையன்!

    அவசரப்படுறியே நீ? ஹுவானா குழந்தை பெறுவதை இத்தோடயா நிறுத்திக்கப்போறா? இன்னும் நாலு பெறுவாளோ, அஞ்சு பெறுவாளோ? பெண் குழந்தை எண்ணிக்கை ஒரு டஜன் ஆச்சுன்னா, ஹுவானா விபச்சாரப் பள்ளியே நடத்தலாம்!

    இவர்களை சபித்தபடி தொடர்ந்து நடந்து போனாள் தாதிப்பெண்.

    தன் தாயையும் தன்னையும் தன் சகோதரிகளையும் இருபெண்கள் அவதூறு பேசுவதை, பச்சைக் குழந்தை ஈவா காதுற்றாள் போலும்! ஈவாவின் இதழோரம் ஒரு பழிவாங்கும் புன்னகை வழிந்தது!! புன்னகையில் ஒளிந்திருக்கும் ‘7.5 ரிக்டர் ஸ்கேல்’ உக்கிரம் தாளாது- ஒட்டுமொத்த அர்ஜென்டைனாவும் ஒருகணம் நடுநடுங்கியது மானசீகத்தில்!!!?

    2

    ஹுவானாவுக்கு அருகில் படுத்திருந்த துவார்த்தே மெதுவாகக் கண் விழித்தார். ஹுவானாவின் இரு கனத்த மார்பகங்களுக்கு இடையே முகம் புதைத்து குப்புறப்படுத்திருந்தாள் இரண்டு வயது ஈவா. துவார்த்தேக்கு அடுத்து நான்கு குழந்தைகளும் தாறுமாறாய் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தன.

    ஹுவானா!

    சொல்லுங்கள் துவார்த்தே!

    உன்னை நான் அதிகாரப்பூர்வமற்ற மனைவியாய் சேர்த்துக் கொள்ளும்போது நான் செல்வ செழிப்பாய் இருந்தேன். இந்தக் கிராமத்திலுள்ள ஒரு பண்ணையை வாடகைக்கு எடுத்து நடத்திக் கொண்டிருந்தேன். நிலமில்லாத எத்தனையோ விவசாயக் கூலியாட்கள் என்னின் ஏவல்காரர்களாக பணிபுரிந்தனர். என்னுடைய பண்ணையில் அதிநவீன விலை உயர்ந்த இயந்திரங்கள் இருந்தன. ஈவா பிறந்தபின் எல்லாம் தலைகீழாகிவிட்டன. வரவை விட செலவு அதிகரித்தது. விளைவு- முதலில் ஏவல்காரர்கள் நின்றனர்; அடுத்து விலையுயர்ந்த இயந்திரங்கள் என் கையை விட்டுப் போயின; தற்சமயம் எல்லாம் இழந்து பரம ஏழையாய் நிற்கிறேன்! நெட்டுயிர்த்தார் துவார்த்தே.

    ஈவா மீதான அணைப்பை இன்னும் தீவிரமாக இறுக்கிக் கொண்டாள் ஹுவானா.

    உங்களோட அனைத்து துரதிர்ஷ்டங்களுக்கும் காரணம் ஈவாதான் என்கிறீர்களா துவார்த்தே?

    இல்லை ஹுவானா. அவள் மீது நான் அபரிமித பாசம் வைத்திருக்கிறேன். நடப்பது நடந்தே தீரும்!... இப்போதெல்லாம் நான் இங்கு வருவதை கடுமையாக எதிர்க்கிறாள் என் மனைவி. எனக்கும் அவளுக்கும் இடையே அடிக்கடி சண்டை வருகிறது. அவளுக்கு ஆதரவாக அவளது குழந்தைகளும் என்னிடம் முரட்டுத்தனமான வாக்குவாதம் செய்கின்றன. இனி முன்னைப்போல் நான் இங்கு வந்து போவது சிரமம். நான் இறந்ததாக நினைத்துக்கொண்டு இந்தக் குடும்பத்தை சுயமாய்க் காப்பாற்றப் பார்!

    ஹுவானா கண் கலங்கினாள்.

    இதென்ன அபசகுனமாய்? எப்போது உங்களுக்கு வரமுடிகிறதோ அப்போது நீங்கள் வந்தால் போதும்...

    பெற்றோரின் உரையாடல் சப்தத்தில் விழித்தெழுந்தாள் ஈவா. இரத்தச் சிவப்பு நிறக் கவுன் அணிந்திருந்தாள். வகிடு இல்லாமல் தூக்கிச் சீவப்பட்ட தலைகேசம்.

    ப்பா! - மழலையில் மிழற்றினாள் ஈவா.

    துவார்த்தேயின் கவலை படர்ந்த முகம் பேரானந்தத்தில் மூழ்கியது.

    தூக்கித் தனது நெஞ்சில் போட்டுக்கொண்டார்.

    என்ன ஈவா?

    ப்பா! ஒரு பந்து வாங்கித் தருவாயா?

    வாங்கித் தருகிறேன். பந்தை வைத்து என்ன செய்வாய்?

    தெருக்குழந்தைகளுடன் விளையாடுவேன்! ஈவாவை முத்தமிட்டு ஹுவானாவிடம் கையளித்துவிட்டு எழுந்தார்.

    ஹுவானா எழுந்து அமர்ந்தாள். மடியில் ஈவா.

    வெளிவாசலில் துவார்த்தேயின் - நண்பர் குரல் கேட்டது.

    இன்னும் நீ புறப்படவில்லையா - துவார்த்தே? ஏற்கனவே நாம் ஒரு மணி நேரம் தாமதம். இப்போதாவது நாம் போனால்தான் நாம் வியாபாரக் கடன் பெற முடியும்!

    துவார்த்தே மேற்சட்டை காற்சட்டை அணிந்து கொண்டார். கால்களில் நாட்டு பூட்ஸ். தலையில் தொப்பி. சிவப்பு ஒயின் ஒரு கோப்பை பருகினார்.

    நான் போகிறேன் ஹுவானா!

    ஈவாவுக்குத் தலைவாரி விட்டபடி தலையசைத்தாள் ஹுவானா. துவார்த்தே இனி வரவே போவதில்லை என்பதை ஹுவானா அறிந்தாளில்லை. ஈவா பலமாகக் கையாட்டினாள். பதிலுக்கு தலைத் தொப்பியை எடுத்து வேகமாய் ஆட்டியபடி சென்று மறைந்தார் துவார்த்தே.

    குடும்ப நண்பர் குதிரையில் பறந்து வந்தார். குதிரையின் பின்னங்கால்களில் புழுதிவால்.

    ஹுவானாவின் வீட்டை நெருங்கியதும் குதிரை இரு கால்களையும் உயர்த்தி நின்று நுரை கக்கியது. தரையில் குதித்தார் குடும்ப நண்பர். ஹுவானா இடுப்பில் ஈவாவுடன் எட்டினாள்.

    என்னாச்சு?

    குடும்ப நண்பர் அழுதார்.

    துக்கச்செய்தி சொல்வதற்கு என்னை மன்னித்துவிடு ஹுவானா. சுமார் ஒரு மணி நேரத்துக்கு முன் நடந்த ஒரு கார் விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் துவார்த்தே. கர்த்தருக்குள் அவரது ஆவி உறைந்துவிட்டது!

    ஹுவானாவின் நெஞ்சில் தொடர்ந்து இடி விழுந்தன. வெது வெதுப்பான கணகணப்பான துக்கம் அடிவயிற்றிலிருந்து கிளம்பி இருமார்பகங்களுக்குப் பரவி தொண்டைக்கு உயர்ந்து இரு கண்களுக்குத் தாவியது. இமை கரைகளை உடைத்துக்கொண்டு கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. அம்மாவின் முகத்துக்கு அண்ணாந்தாள் ஈவா. கண்ணீர் சொட்டுகள் முகத்தில் வந்து விழுந்தன. அம்மாவின் அழுகை ஈவாவையும் தொற்றிக் கொண்டது. பெரும்குரலில் அழுதாள்.

    அவரின் பிரேதம் எங்கே நண்பரே?

    மனதைத் தேற்றிக்கொள் ஹுவானா, அவரின் அதிகாரப் பூர்வ மனைவி பெற்றுச் சென்று விட்டாள் சடலத்தை. தற்சமயம் சடலம் சிவில்காய் பண்ணை வீட்டில் இருக்கிறது!

    துவார்த்தே ஹுவானாவை பனிரெண்டு வருடகாலம் வைப்பாட்டியாக வைத்திருந்தாலும் ஒரு மனைவிக்குரிய மரியாதையை அளித்தே வந்தார். தனக்கும் ஹுவானாவுக்கும் உள்ள உறவை வெளியுலகத்துக்கு மறைத்தாரில்லை. ஹவானாவின் குழந்தைகள் தங்களின் தந்தை பெயராக துவார்த்தேயை உயர்த்திப் பிடித்தன பல சமயம்.

    அதனை அவர் எப்போதும் ஆட்சேபித்ததில்லை.

    துவார்த்தே மீது ஹுவானா அலாதிபிரியம் வைத்திருந்தாள். துவார்த்தே மரணம் பொருளாதார ரீதியாகவும் அவளை பயமுறுத்தியது. பாதுகாப்பின்மை உணர்ந்தாள்.

    நானும் எனது குழந்தைகளும் அவர் உடலைப் பார்க்கவேண்டும் அய்யா?

    முடியாதம்மா. உங்களுக்கு அந்த உரிமை இல்லை. நமது நாட்டில் சவ அடக்க சடங்குகள் ஆழமான குடும்ப முக்கியத்துவம் கொண்டவை. நீயும் உனது குழந்தைகளும் சவ அடக்கத்தில் கலந்து கொள்ள துவார்த்தேயின் அதிகாரப்பூர்வ மனைவி சம்மதித்தால் மறைமுகமாக உனக்கும் துவார்த்தேக்கும் இருந்த உறவை அவள் ஒப்புக்கொண்டதாகிவிடும். அவள் உன்னை முழுவதும் புறக்கணிக்கவே விரும்புகிறாள்...

    குடும்ப நண்பர் முன் முழங்காலிட்டாள் ஹுவானா. மற்றக் குழந்தைகளும் ஓடிவந்து அம்மாவைக் கட்டிக்கொண்டு கதறின. நண்பரும் துக்கம் தாளாது அழ ஆரம்பித்தார்.

    அய்யா! நீங்கள் எனது கணவருக்கு நண்பர் மட்டுமல்ல; எங்களின் இறைத் தந்தையும் கூட. மனதுக்குள் எந்த உள்நோக்கத்தையும் ஒளித்துக்கொண்டு அவர் சடலத்தைக் காண அனுமதி கேட்கவில்லை நான். ஒரே ஒருமுறை- வாழ்வில் கடைசியாக ஒரு முறை அவரின் முகம் காண நானும் என் குழந்தைகளும் விழைகிறோம். நீங்கள்தான் அவர்களுடன் வாதாடி நாங்கள் சவ அடக்கத்தில் கலந்து கொள்ள அனுமதி பெற்றுத்தர வேண்டும். அவர்கள் நிர்தாட்சண்யமாக மறுத்தால் கிறிஸ்துவ தேவாலயத்தின் பங்கு தந்தையிடம் முறையிடுங்கள்!

    நண்பர் யோசித்து தீர்க்கமாய்த் தலையாட்டினார்.

    நீ கேட்பது நியாயமான உரிமை. நான் பேச வேண்டிய விதத்தில் பேசி அனுமதி பெற்று வருகிறேன். நீங்கள் அனைவரும் சவ அடக்கத்தில் கலந்துகொள்ள ஆயத்தமாய் இருங்கள்! -குதிரை மீது தாவியேறி கடுகிப் பறந்தார்.

    துக்க அடையாளமாக கறுப்பு ஆடை உடுத்திக் காத்திருந்தனர் ஹுவானாவும் ஹுவானாவின் குழந்தைகளும்.

    குடும்ப நண்பர் திரும்பிவந்தார்.

    என்னாச்சு அய்யா?

    பாதி வெற்றி பாதி தோல்வியம்மா!

    புரியவில்லை!

    சவ அடக்கத்தில் உனது குழந்தைகள் மட்டும் கலந்து கொள்ளலாம். நீ கலந்து கொள்ளக்கூடாது என்கிறார்கள். இதுதான் இறுதி முடிவு!

    ஹுவானாவின் முகத்தை எதுவோ ‘ரப்’ என்று அறைந்தது.

    ஜீஸஸ்! - இரைந்து அழுதாள்.

    இந்த அளவுக்காவது அவர்கள் கருணை காட்டியதற்கு நன்றி தெரிவியுங்கள். குழந்தைகளை கூட்டிச் செல்லுங்கள்!

    நண்பர் ஈவாவைத் தூக்கிக் கொண்டார். மற்ற குழந்தைகளை நடத்திக் கூட்டிச் சென்றார். இரு குதிரைகளில் ஏறி புறப்பட்டனர்.

    அவர்கள் செல்ல, சில நிமிடம் காத்திருந்து தலைதெறிக்க பின்னே ஓட ஆரம்பித்தாள் ஹுவானா.

    "சவப்பெட்டியில் மலர் வளையங்களுக்கு இடையே துவார்த்தே ஊமைத்தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தார். சவப்பெட்டியருகே துவார்த்தேயின் அதிகாரப்பூர்வ குடும்பம் நின்றிருந்தது. ஹுவானாவின் குழந்தைகளை அவர்கள் இழிவாய் உறுத்தனர். துக்கம் விசாரிக்க வந்திருந்த கூட்டமும் உன்மத்தமாய் முறைத்தது...

    இரண்டே வயதான ஈவாவுக்கு தனது தந்தை இன்னொரு குடும்பத்துக்குச் சொந்தமானவர் என்பது அப்பட்டமாய்ப் புரிந்தது. தனது தந்தை சாயலில் இருக்கும் மற்ற சகோதர சகோதரிகளை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள் ஈவா.

    கல்லறைத்தோட்டம்.

    பங்குத்தந்தை ஸ்பானிஷ் மொழியில் பைபிள் வாசித்தார்.

    முக்காடு இட்டு ஒரு கல்லறையின் பின் ஒளிந்திருந்து சடங்குகளை செவியுற்றாள் ஹுவானா. அவளது உதடுகள் ‘ஆமென்’ ‘ஆமென்’ என முணுமுணுத்தன.

    ஈவா இறைத்தந்தை பிடியிலிருந்து நழுவி கீழே குதித்தாள். யாரும் அறியாமல் தந்தையின் சடலம் இருக்கும் சவப்பெட்டியை பிஞ்சுக்காலால் எட்டி உதைத்தாள்!

    3

    ... வருடா வருடம் நம் சமூகத்தின் ஏழை மக்களுக்கு அடுக்கடுக்காய் நிகழ்த்தப்படும் அநீதிகளை கண்கூடாய் காண்கின்றேன்: அது என்னை கலகக்காரியாக்குகிறது; என் ஈர நெஞ்சை இரண்டாய்ப் பிளக்கிறது...

    -ஈவா

    துவார்த்தே மரணத்துக்குப் பின் ஹுவானா குடும்பத்தில் வறுமை தலைவிரித்து ஆடியது.

    ஈவா மற்றும் நான்கு குழந்தைகளும் கொலைப்பட்டினி கிடந்தனர்.

    ஹுவானா மனதைக் கல்லாக்கிக்கொண்டு புதிதாக ஒருவனுக்கு வைப்பாட்டியாகத் தீர்மானித்தாள்.

    இத்தனை குழந்தைகள் பெற்றபிறகும் ஹுவானாவின் அழகு குறையவேயில்லை. சில பெண்கள் நாற்பது வயதில் இளமையின் உச்சத்தில் இருப்பார்கள்; ஹுவானாவோ தொண்ணூறு வயதானாலும் இளமையின் உச்சத்தில்தான் இருப்பாள்.

    ஹுவானா காதல் கலையில் நிபுணி.

    அவளைத் தொட்டவன் ஆயுளுக்கும் அவளை விட்டு விலகமாட்டான்.

    கையிலிருந்த சொற்ப பணத்தை எடுத்துக்கொண்டு நான்கு வயது ஈவாவை இடுப்பில் தூக்கிக்கொண்டு மார்க்கெட்டுக்கு நடந்தாள் ஹுவானா. லோ-கட் மார்புச் சட்டை இணைந்த கவுன் அணிந்திருந்தாள். கால்களில் கயிற்றால் பின்னப்பட்ட செருப்பு. மாட்டிறைச்சி கடையை நெருங்கினாள் ஹுவானா.

    கசாப்புக் கடைக்காரனின் கண்கள் காமமாய் மின்னின.

    வா ஹுவானா! என்ன வேண்டும்? நம்மளையெல்லாம் கண்டுக்க மாட்டேன் என்கிறாயே?

    முறைத்தாள்.

    அசடு வழியாதே. எனக்கு இரண்டு பவுண்ட் மாட்டுத் தொடைக்கறி வேண்டும்! - இருபது சென்ட் நீட்டினாள்.

    கசாப்புக்கடைக்காரன் கறி கழித்துக் கொண்டிருந்தான். ஹுவானா குனிந்து எலும்புகளை கிளறிக் கொண்டிருந்தாள்.

    ஹுவானாவுக்கு எதிரே வந்த ஓர் அந்நியன் ஏறக்குறைய முழுமையாகத் தெரியும் மார்பகங்களைப் பார்த்துவிட்டான். ஒரு இத்தாலியன் நாடோடிப் பாடலை சீழ்க்கையடித்தான்.

    நிமிர்ந்தாள். திட்டப்போனவள் அவதானித்தாள். இறைச்சியை வாங்கிப் பையில் வைத்துக்கொண்டு அவனை நோக்கி நடந்தாள்.

    யார் நீ? எங்கள் கிராமத்தில் உன்னை நான் பார்த்ததில்லையே?

    அந்நியன் புன்னகைத்தான்.

    உன் யூகம் மிகச் சரி. இங்கிருந்து நாற்பதாவது மைலில் அமைந்திருக்கும் நகரத்தைச் சேர்ந்தவன் நான். அங்கு நான் ஒரு உணவு விடுதி நடத்துகிறேன்!

    அப்படியா?

    கேட்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதே... உன் கணவன் எங்கே இருக்கிறான்?

    ஏன்?

    உன்னைப்போலொரு அழகுப்பெண்ணை மனைவியாகப் பெற்றிருக்கிறானே- அதனைப் பாராட்ட வேண்டாமா?

    நான் திருமணம் செய்து கொள்ளவில்லை!

    ஓ! யாருடன் சேர்ந்து வாழ்கிறாய்?

    என்னுடன் சேர்ந்து வாழ்ந்தவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்! தற்சமயம் நான் யாரிடமும் இல்லை! அந்நியன் முகம் பிரகாசித்தது.

    உனக்கு எத்தனை குழந்தைகள்?

    ஐந்து!

    உனது பெயரென்ன?

    ஹுவானா!

    ஹுவானா! உன்னைப் பார்த்த முதல் பார்வையிலேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னுடன் சேர்ந்து வாழ வருகிறாயா? உன்னை ஒரு மகாராணி போல் பார்த்துக்கொள்கிறேன்!

    உங்களின் பெயரென்ன?

    ஒரு இத்தாலியன் பெயரைக் கூறினான்.

    உங்களுக்குத் திருமணமாகி விட்டதா, உங்களின் குடும்பம் எங்கேயிருக்கிறது?

    அதனைப்பற்றி எதுவும் கேட்காதே. உனக்கு என்னுடன் சேர்ந்து வாழ சம்மதமா?

    ஒரு நொடி யோசித்தாள்.

    கூட்டிப்போய் ஒரு மூணுமாதத்தில் ஒரு ஆறுமாதத்தில் விரட்டி விட்டுவிடமாட்டாயே? உன் அந்திமக்காலம் வரை நாங்கள் பட்டினி கிடக்காமல் பார்த்துக்கொள்வாயா? என்னுடைய ஐந்து குழந்தைகளிடம் விரோதம் பாராட்டமாட்டாயே? (ஈவாவை சுட்டி) இவள் என் கடைக்குட்டிப் பெண். பெயர் ஈவா துவார்த்தே. இவளை நன்கு படிக்க வைப்பாயா?

    ஈவா நடக்கும் உரையாடலை கூர்ப்பாகக் கேட்டாள். இத்தாலியன் ஈவாவைக் கனிவாகப் பார்த்தான். இரு கைகளை நீட்டினான். ஈவா அவனிடம் தாவினாள். ஈவாவை தூக்கிக் கொஞ்சி முத்த மிட்டான்.

    இனி இவள் என் மகள்! போதுமா? உன்னுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் புறம்பாக நன்கு நடந்து கொள்வேன்!

    இப்போதுதான் என் மனக்கிலேசம் அகன்றது. உங்களின் நகரம் எங்களின் கிராமம் போல் இருக்குமா?

    சிரித்தான் இத்தாலியன்.

    "வந்து பார்- அசந்து விடுவாய். என்னுடைய நகரம் ஒரு மெட்ரோ நகரம். இரட்டை மாடி வீடுகள் புகை வண்டி நிலையங்கள், பெரிய பெரிய உணவு விடுதிகள் சூதாட்ட கிளப்புகள் - நவீன செருப்பு கடைகள்- துணிக் கடைகள் எல்லாம் உண்டு ஹுவானா.

    வாரம் ஒருமுறை அல்லது இருமுறை ஊமைப்படம் காட்டும் திரையரங்கு இருக்கிறது. சர்வசாதாரணமாக ஃபோர்டு கார்களும் செவர்லெட் கார்களும் நகரை வலம் வரும். மொத்தத்தில் உனது வாழ்க்கை முறையே அசாதாரணமாக மாறப்போகிறது ஹுவானா!"

    கண்கள் அகட்டி ஆச்சரியம் காட்டினான்.

    உங்கள் உணவு விடுதி, வீடு எப்படி இருக்குமென நீங்கள் கூறவில்லையே?

    "இரண்டுமே ஒரே கட்டடமாய். கட்டடம் ‘எ’ வடிவில் அமைந்திருக்கும். மாடியில் இரு பால்கனி இணைந்த ஜன்னல்கள். குறுகிய முன் கதவு. நிறைய படுக்கையறைகள் உண்டு.

    ஒவ்வொரு படுக்கையறைக்கும் மூன்று கதவுகள் உள்ளன. நீயும் உன் குழந்தைகளும் கட்டடத்தின் பின்பகுதியில் அமைந்திருக்கும் உணவு அருந்தும் அறையில் தங்கிக் கொள்ளலாம். கட்டடத்தின் முன்பகுதியில் உணவு விடுதியும் வழிப்போக்கர் தங்குமிடமும். கட்டிடத்தின் கொல்லைப்புறத்தில் தோட்டமும் இருக்கிறது. கட்டடம் முழுமைக்கும் குடிநீர் வழங்க உதவியாக இரும்புக் காற்றாடி கொல்லையில் இயங்குகிறது. ஒரு எலுமிச்சை மரம் வேறு உண்டு.

    தொகுத்துக் கூறினால் எங்களது நகரம் ஸ்பானிஷ் காலனி நகரங்களுக்கு ஒரு அழகிய முன் மாதிரி. எனது கட்டடத்தில் ஒரே ஒரு அசௌகரியம் உள்ளது.

    நாம் படுக்கையறையில் சல்லாபிக்கும்போது திடீரென்று யார் வேண்டுமானாலும் மாற்றுக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வரலாம்!"

    எனக்கு உங்களுடன் வர பரிபூர்ண சம்மதம்!

    நன்றி இங்கு நீயும் உன் குழந்தைகளும் வறுத்த மாமிசம், மசாலா மாமிசம், அவித்த பீட்ரூட், முள்ளங்கி துண்டங்கள், அரிசிக்கஞ்சி சாப்பிட்டு நாக்கு மரத்துப் போயிருப்பீர்கள். அங்கு வாருங்கள்! இத்தாலியன் உணவு வகைகளால் உங்கள் பசியை மகிமைப் படுத்துகிறேன்! குடிக்க பேரல் பேரலாய் சிவப்பு ஒயின் உண்டு...

    எப்போது நாங்கள் உங்களுடன் கிளம்பிவரவேண்டும்? சிரித்தான் இத்தாலியன்.

    இன்றே! என்றான்.

    நீயும் உன் குழந்தைகளும் சமைத்து சாப்பிட்டுவிட்டு வீட்டு சாமான்களை மூட்டை கட்டுங்கள். இரண்டு மணி நேரத்தில் வந்துவிடுகிறேன்!

    பரவச முகத்துடன்

    Enjoying the preview?
    Page 1 of 1