Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ella Pookkalum Enakke
Ella Pookkalum Enakke
Ella Pookkalum Enakke
Ebook328 pages1 hour

Ella Pookkalum Enakke

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466909
Ella Pookkalum Enakke

Read more from Arnika Nasser

Related to Ella Pookkalum Enakke

Related ebooks

Related categories

Reviews for Ella Pookkalum Enakke

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ella Pookkalum Enakke - Arnika Nasser

    1

    ஆளுயரக் கண்ணாடி முன் போய் நின்றான் யாத்ரா.

    காட்டாற்றின் வேகத்தையும் சூறாவளியின் சூட்சமத்தையும் இசையின் சஞ்சாரத்தையும் ஏகாந்தத்தின் ஓர்மையையும் பறவைகளின் பறத்தலையும் மீன்களின் நீந்தலையும் சிறுத்தையின் பாய்ச்சலையும் ஆப்பிரிக்க காட்டுயானைகளின் கம்பீரத்தையும் சுருக்கி - மல்லிகைரோஜா பூசி - மலைத்தேன் தடவி- ஜென் பதித்து ஒரு ஆன்ட்ரோஜன் கவிதை செய்தான் கடவுள். அதனை யாத்ராவின் தாயின் கர்ப்பபையில் பத்து மாதம் மிதக்கவிட்டு யாத்ராவாக்கினான்.

    யாத்ரா நூற்றி எழுபது சென்டிமீட்டர் உயரன். வயது 25. கிருஷ்ணக்கண்கள். தேவதைகளின் உட்காருமிடம் போல மூக்கு. மீசையின் ஒவ்வொரு ரோமத்திலும் ஆண்மையும் குறும்பும் ஊஞ்சலாடின. பிரஞ்ச் ஒயின் நிற உதடுகள்.

    ஹிமாலயன் ஹேர்கிரீம் எடுத்து இரு உள்ளங்கைகளில் ஈஷி தலையில் கோதிக் கொண்டான். சுருள் சீப்பெடுத்து தலைகேசத்தை வாரிக் கொண்டான். இரு வெவ்வேறு ஆக்ஸ் எபக்ட் டியோடரன்ட்டுகள் எடுத்து ஒரே நேரத்தில் இடமும் வலமும் பீய்ச்சிக் கொண்டான்.

    மகனின் அலங்காரத்தை வெகுவாய் ரசித்தபடி அமர்ந்திருந்தார் ராஜகுமாரன். வயது 53. ஆண்-பெண் உறவுச்சிக்கல்களை மையப்படுத்தி ஐம்பதுக்கும் மேற்பட்ட சினிமாக்கள் டைரக்ட் செய்தவர். தற்சமயம் சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கிறார்.

    மெதுவாக எழுந்து மகனின் அருகில் போனார் ராஜகுமாரன். பின்னுக்கு இருந்து மகனின் இருதோள்களை பிடித்துவிட்டார்.

    என்னப்பா? வினவினான் யாத்ரா.

    இப்பத்தான் உன்னை நர்ஸ் நீட்டிய பிறந்த குழந்தையாய் பாத்த மாதிரி இருக்கு. மடமடன்னு வளந்து முழு ஆம்பிளையாய்ட்ட...

    பதில் பேசாமல் சிரித்தான் யாத்ரா.

    என் கண்ணே பட்ரும் போலிருக்கேடா!

    சும்மா இருங்கப்பா. எதாவது சொல்லி என் தலைகனத்தை கூட்டிராதிங்க!

    ஒரு சின்ன ஆசைடா!

    என்ன?

    நீ நாமக்கல் மருதம் உறைவிடப்பள்ளியில் தங்கி ரெண்டு வருஷம் ப்ளஸ்டு படிச்சப்ப லீவுக்கு வருவ. அப்ப பிரிவுத்துயர் தாங்காம உன்னை கட்டிப்பிடிச்சு அழுதிருக்கேன். அதுக்குபிறகு உன்னைக் கட்டிப்பிடிக்கும் சான்ஸே வரல. கேட்டா தப்பா நினைச்சிக்குவியோன்னு இத்னி நாளா கேக்கல. இன்னைக்கி வாய் வந்திருச்சு கேக்க. உன்னை ஒரே ஒரு தடவ கட்டிப்பிடிச்சிக்கட்டா? சிறுகுழந்தை போல் வினவினார் ராஜகுமாரன்.

    யாத்ரா திரும்பி தனது தந்தையை ஆழமாக பார்த்தான்.

    இப்டியெல்லாம் கேள்விகேட்டுக்கிட்டு இருக்கலாமாப்பா?- கமான் ஹக் மீ!

    யாத்ரா ராஜகுமாரனை விட நான்கு அங்குலம் உயரம் அதிகம். ஆகவே எக்கி அவனை கட்டிப் பிடித்தார். கட்டிப்பிடிப்பு குதிரை ஒட்டகச்சிவிங்கியை கட்டிப்பிடித்தது போலிருந்தது.

    அடித்திருந்த டியோடரன்ட்கள் மீறி ஒரு ஆம்பிளை வாசனை யாத்ராவிடம் அடித்தது. நுகர்ந்து பேரானந்தித்தார். தற்பெருமையாய் சிரித்துக் கொண்டார் ராஜகுமாரன்.

    நூறு ரஜினிகாந்த்தனமான ஸ்மெல்!

    ப்பா... பொதுவா ஆம்பிளைப்பசங்க தோளுக்கு வளந்துட்டா அப்பாமார் பசங்களை தள்ளிவச்சிருவாங்க. நீங்க என்னடான்னா என்னைக்கும் போல என்கிட்ட கிரேஸாயிருக்கீங்க. ஐ எம் வெரி லக்கி. ஐ லவ் யூப்பா!

    நானும் மகனே!

    அறைக்குள் ஜீவிதா நடந்து வந்தாள். வயது ராஜகுமாரனை விட ஒரு வயது கூட. வயதாகியும் யௌவனம் மிச்சமிருந்தது.

    பார்ரா லவ் சீனை... அப்பாவும் பய்யனும் கட்டிப்பிடிச்சிக்கிட்டு கொஞ்சுராங்க. வாரணம் ஆயிரம் பார்ட் டு எடுத்திரவேண்டியதுதான். பாக்க எனக்கு பொறாமையாக இருக்கு!

    பொறாமை எதுக்கு?- நீயும் வாம்மா!

    அம்மாவையும் அப்பாவையும் ஒரு சேர கட்டியணைத்துக் கொண்டான்.

    நான் வாழ்க்கைல வேண்டிக்கிரது ஒரே ஒரு விஷயத்தைத்தான்! யாத்ரா.

    என்ன வேண்டுவ?

    காசோ பணமோ புகழோ பதவியோ இல்லை. என் பெற்றோர் வாழும் காதல் வாழ்க்கையை நாளை நானும் என் வருங்கால மனைவியும் வாழவேண்டும். என் நினைவு தெரிஞ்ச நாள்லயிருந்து பாத்துக்கிட்டே இருக்கேன். அம்மா நீ அதே இளமையோட இருக்க. அப்பா நீங்க அதே குழந்தைத்தனத்தோட இருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்ற மாதிரி இருக்கும். அது நிஜச்சண்டை இல்லை. அது அப்பழுக்கற்ற காதலுக்கான ஒத்திகை. உங்களுக்கிடையே வரும் கருத்துவேற்றுமைகள் பத்து நொடிகள் கூட நீடிக்காத மாயைகள். நீ இன்னும் அப்பாவை பாத்து நாணிக் கோணுறதும் அப்பா உன்னை சுத்திசுத்தி வருவதும் பாக்க ரம்மியமான விஷயங்கள். அப்பா தமிழ்சினிமால பிஸியா இருந்தப்பவும் உன் கை சாப்பாட்டைதான் சாப்பிடுவார். அவுட்டோருக்கு உன்னை கட்டாயம் கூட்டிட்டுப் போய்டுவார். சிங்கத்தின் அடையாளம் கர்ஜனை. அப்பாவுக்கு அடையாளம் கோபம். பருவமழைநாளில் அணைக்கட்டின் உயரச்சுவரில் நின்று முட்டிமோதி ததும்பும் தேக்கநீரை ரசிப்பது போல அப்பாவின் கோபத்தை ரசிக்கலாம்!

    என்னடா இன்னைக்கி அப்பா புராணம் பாடுற?

    விடேன். கேக்க பத்து பிலிம்பேர் அவார்டும் அஞ்சு நேஷனல் அவார்டும் ஒருசேர வாங்ன மாதிரி இருக்கு. பொண்டாட்டிகிட்ட ஒரு புருஷன் நல்லபேர் வாங்றது பெரிய விஷயமில்லை. வயதுக்கு வந்த மகனிடம் கிழட்டு அப்பா நல்லபேர் வாங்றது ஒசாமாகிட்ட ஒபாமா நல்ல பேர் வாங்றமாதிரி!

    யாத்ராவின் தங்கை இசையருவி கையில் வளர்ப்பு பூனை ‘கிசும்பு’ வுடன் காட்சியமைப்புக்குள் பிரவேசித்தாள்.

    வரவர வீட்டு அங்கத்தினர்களுக்கு இசையருவி ஞாபகமே வருவதில்லை. மிஸ்டர் ராஜகுமாரன்! நான் உங்க மக இசை. சுமார் இருபத்தியோரு வருடங்களுக்கு முன் பெற்றீர்கள். ஜிங்கிள்ஸுக்கு இசை அமைத்து வருகிறேன். மிஸஸ் ஜீவிதா! நான் உன் மக இசை. உன் ஓவிய மகனை பெத்த வயித்தாலதான் என்னையும் பெத்த. மிஸ்டர் புது ஆம்பிளை யாத்ரா!... நான் இசை-உன் ஒரே தங்கச்சி!

    இசைக்கு அறிமுகம் தேவையா தங்கையே? யாத்ரா.

    வரும்போது உன் பாட்டி அபிதகுஜாம்பளையும் அறைக்குள்ள அழைச்சிட்டு வந்திருக்க வேண்டியதுதான?- ஏன் மறந்திட்ட இசை? ஜீவிதா.

    எம்பிஏ முடிச்சிட்டு உங்க பய்யன் குறும்படங்கள் டாக்குமென்டரிகள் எடுத்து தள்ளிக்கிட்ருக்கான். வயசு இருபத்தியைஞ்சாவுது அவனுக்கு. அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாப்பம்னு நினைச்சீங்களா? சினிமா எடுக்றதை விட்டுட்டு அம்மாவை புல்டைமா சுத்திசுத்தி வரீங்க!

    வாய மூட்றி அதிகப்பிரசங்கி!

    அவளை ஏன் அடக்ற? அவ கேக்றதும் நியாயம்தானே? என்றார் ராஜகுமாரன். யாத்ராவை அருகே இழுத்தார். நீ யாரையும் காதலிக்கிறியாடா?

    ‘கண்ணில் எந்தப் பெண்ணைக் கண்டாலும் காதலிக்கிறேன். பெரிய பெரிய விஷயங்களுக்காக ஒருத்தி. மிகச் சிறிய விஷயங்களுக்காக ஒருத்தி. பவர் கிளாஸ் அணிந்திருப்பதற்காக ஒருத்தி. கன்னங்கரேலென்று இருப்பதற்காக ஒருத்தி. செக்கச் செவேல் என்று இருப்பதற்காக ஒருத்தி. பேச்சிமுத்தாக இருப்பதற்காக ஒருத்தி. பேசாமடந்தையாக இருப்பதற்காக ஒருத்தி. எனது ராஜ்ஜியத்தில் எல்லா பெண்களும் அழகுதான். தோட்டத்தின் எல்லாப் பூக்களும் எனக்குதான். எனது அரசாட்சியில் ஐஸ்வர்யா ராயுக்கும் கோவை சரளாவுக்கும் சமமரியாதை வழங்கப்படும். ஆண்கள் மண்ணால் செய்யப்பட்டவர்கள் என்றால் பெண்கள் கற்பனைகளால் செய்யப்பட்டவர்கள்.’

    நா... நான் யா... யாரையும் காதலிக்கலைப்பா... நீங்க யாரை சுட்டி கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாலும் பண்ணிப்பேன்! பொய் பொய் அக்மார்க் பொய்.

    நீ யாரையும் காதலிக்கல- நம்புரோம். உன்னை நூறு பொண்ணுகள் துரத்தி துரத்தி காதலிக்கும்களே - அதுகளை எப்டி சமாளிக்ற?

    ‘நானும் பெண்களை துரத்துகிறேன் - அவர்களும் என்னை துரத்துகிறார்கள். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை!’

    கண்டுக்காம போய்ட்டே இருப்பேன். தட்ஸ் ஆல்! பொய் போட்ட குட்டி பொய்.

    உனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்க வேண்டியதுதான். உனக்கு என்ன மாதிரி பொண்ணு இருக்கனும் யாத்ரா?

    ‘தசரதன் மாதிரி எனக்கு 90000 பொண்ணுகள் தேவை. பார்க்க முடியுமா உங்களால் தந்தையே?’

    அதெல்லாம் யோசிக்கல!

    நடிக்கிரான் நடிக்கிரான்! என்றாள் இசை. கிசும்பு மியாவ்! என்று ஆமோதித்தது.

    பொண்ணுக்கு தலைமுடி நீநீளமா இருக்கனுமா?

    சென்னை பொண்ணுகளுக்கு தலைமுடி எங்க நீளமாயிருக்கு? இசை.

    மகனே! என் மனதில் இருக்கும் ஒரு விருப்பத்தை சொல்லவேண்டிய நேரம் வந்திருச்சு!

    என்ன விருப்பம்ப்பா?

    லைக் பாதர்-லைக் சன்’- என்று ஒரு தியரி கேள்விப்பட்ருக்கியா மகனே?

    தாயைப் போல் பிள்ளை - நூலைப்போல் சேலை -ன்ற சொலவடைதான் கேள்விப்பட்ருக்கேன்பா!

    நான் சொல்ற தியரி விஞ்ஞானப் பூர்வமா நிருபணமானது!

    புரியுறமாதிரி சொல்லுங்க!

    ஒரு தந்தை எழுபது வயதுவரை உயிரோடு. அவரின் மகன் எழுபது வயது வரை உயிரோடு. இருவர் வாழ்க்கையையும் எடுத்து ஆராஞ்சு பாத்தா தந்தையின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மகனின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும். தந்தையின் பத்துவயதில் நாய் கடித்திருந்தால் மகனின் பத்துவயதில் குதிரையாவது கடித்திருக்கும். தந்தையின் பதினைந்து வயதில் சைக்கிள் ஆக்ஸிடென்ட் என்றால் மகனின் பதினைந்து வயதில் பைக் ஆக்ஸிடென்ட் நடந்திருக்கும். தந்தையின் காதல் தோல்வி மகனுக்கும். தந்தைக்கு எதுஎது எந்தெந்த வயதில் நடந்தததோ அது அது அதன் சாயல்கள் மகனுக்கும் நடக்கும் யாத்ரா!

    கோடில ஒரு அப்பா-மகனுக்குதான் இப்டி நடக்கும்!

    எனக்கு ஆறுவயசாய் இருக்கும்போது என் இரண்டாம் வகுப்பு டீச்சர் என்னை மடிலவச்சு நிறைய முத்தம் குடுத்திருக்காங்க. நீ ரெண்டாம் வகுப்பு படிக்கும்போது உனது டீச்சர் உன்னை மடில வச்சு பச்பச்னு முத்தம் குடுக்றதை என் ரெண்டு கண்ணால பாத்ருக்கேன்.

    உங்க தியரிக்கும் என் கல்யாணத்துக்கும் என்னப்பா சம்பந்தம்?

    இருக்கு. உன் அம்மாவுக்கு அழகான தங்கச்சி உண்டு. உன் அம்மாவை திருமணம் செய்தபிறகு நான் உன் சின்னம்மாவின் பார்வை தூண்டிலில் விழுந்தேன். தூண்டிலை அறுத்துக்கொண்டு வெளியே வந்த நான் உன் சின்னம்மாவுக்கு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தேன். கணவன் ஒரு சாடிஸ்ட். அவனை உன் சின்னம்மா டைவர்ஸ செய்தாள். அவளை நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக ஒரு சாடிஸ்ட்டை தெரிந்தே திருமணம் செய்து வைத்ததாக என்னை குற்றம் சாட்டினாள். நல்லவேளை உன் அம்மா நம்பவில்லை. இருந்தாலும் நான் அவளுடன் இருபதுவருடம் போராட வேண்டி இருந்தது. சிலபல வருடங்களாக அவளின் காற்று நம் வீட்டில் படாம நிம்மதியா இருக்கேன். எனக்கு அமைந்த மாதிரி ஒரு மச்சினி உனக்கு அமைந்துவிடக் கூடாது என நான் கடவுளை வேண்டாத நாளில்லை!

    அதனால?

    நீ யாரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்க. ஆனா உன் வருங்கால மனைவிக்கு அக்காளோ தங்கச்சியோ ஒண்ணுவிட்ட ரெண்டுவிட்ட கூட இருக்கக்கூடாது. தம்பி அண்ணன் இருக்கலாம்!

    ஓஹோ!

    அக்காதங்கச்சி இல்லாத பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பன்னு சத்தியம் பண்ணிக்கொடு யாத்ரா!

    சத்தியம் நமக்கு சாக்கரைப் பொங்கல். சத்தியம் செய்து கொடுத்தான் யாத்ரா.

    கடவுளே! எதாவது கோக்மாக் பண்ணி எங்கப்பா எண்ணத்ல மண்ணை அள்ளிப்போடு! இசையருவி.

    ‘மியாவ்’ என வேண்டுதலை ஆமோதித்தது கிசும்பு.

    இறைவன் நேசிகா என்ற பெண்ணைத் தூக்கி யாத்ராவின் வாழ்க்கை பாதையில் வைத்தான். நேசிகாவின் தோளில் உப்புமுட்டைகளாய் அவளது இரண்டு அழகிய தங்கைகள்!

    2

    அடர்ந்த காடு. நிலமங்கை பச்சைகம்பளம் போர்த்தியிருந்தாள். மரங்கள் மரங்கள் மேலும் மரங்கள். பூச்சிகள் புழுக்கள் மிருகங்கள் பறவைகளின் தேசமே காடு. காட்டுக்கு மனிதன் அந்நியன் அல்லது அழையா விருந்தாளி. காடு மூலிகைகளின் அஞ்சரை பெட்டி. காடு ஆக்ஸிஜன் மற்றும் மழைகளின் ரிசர்வ் வங்கி. காடுகள் பச்சை நுரையீரல்கள்.

    தூரத்தே ஒரு நீர்வீழ்ச்சி. வெள்ளியை உருக்கி கொட்டியது போல் நீர் ஜாஜ்வல்யம் காட்டியது. தனது குகையிலிருந்து வெளிவந்து நின்றது அந்த சிங்கம். வழக்கமாய் சிங்கங்கள் காணப்படுவது போல் இச்சிங்கம் இல்லை. சிங்கத்தின் பிடறி மயிர்கள் சிறுசிறு ஜடைகளாய் பின்னப்பட்டு முத்துகள் கோர்க்கப்பட்டிருந்தன. சிங்கத்தின் கூர்மையான பற்கள் ரின் வெண்மையாய் மின்னின. சிங்கத்தின் கண்களில் கொடுரம் தெரிவதற்கு பதில் காமமும் காதலும் தெரிந்தன. சிங்கம் வாய்திறந்து கர்ஜித்தது. கர்ஜனையில் உதித் நாரயணன் சங்கர் மகாதேவன் திப்பு படிமங்கள் மிதந்தன.

    நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் நீர் வழுக்குப்பாறைகளுக்கிடையே புகுந்து ஓடியது. மான்கள் கூட்டமாய் கூடி நீர் நக்கின. ஒவ்வொரு மானும் ஒரு நிறத்தில் பளபளத்தது. அன்று லட்சுமணன் துரத்திய மாயமானின் நகல்களோ இவை?

    இன்றைக்கும் நம் இனத்தை வேட்டையாட சிங்கம் வருமா? தங்களுக்குள் வினவிக் கொண்டன மான்கள்.

    வரும்!

    மான்களை சிங்கம் பார்த்துவிட்டது. ஓசை எழுப்பாமல் நடந்து நீரருந்தும் மான் கூட்டம் சமீபித்தது. சிங்கம் நெருக்கத்தில் வந்துவிட்டதை ஒரு மான் பார்த்துவிட்டு கத்தியது.

    சிங்கம் சிங்கம் ஓடுங்கள்!

    நூறு மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை புரிந்த கறுப்பின ஓட்டவீரர் உஸைன் போல்ட் வேகத்தில் மான்கள் ஓட ஆரம்பித்தன. அவுட் ஆப் போக்கஸிவ். காடு பின்னோக்கி போனது. சிங்கம் துரத்திப் பாய்ந்தது.

    துரத்தல் துரத்தல் சீரான துரத்தல். வீடு கூடும் பாவனை. ஒன்றுக்குள் ஒன்று இயங்கும் சீர்மை. இறுதிபுள்ளியில் பூசணிவெடிப்பு.

    வெகுநேரம் வெகுதூரம் துரத்திவந்த சிங்கம் நின்றது. ஆரோக்கிய இடைவெளி விட்டு மான்கள் நின்றன. இருதரப்பும் மூச்சு வாங்கின. சிங்கத்தின் மூச்சுவாங்கலில் பழைய பாடகர் கண்ட சாலா.

    நன்றாக ஓடுகிறீர்கள் மான்களே! சிவாஜி கணேசன் குரல்.

    அழகாய் துரத்துகிறாய் சிங்கமே!

    ஏன் நின்றுவிட்டீர்கள்? ஜெமினி கணேசன் குரல்.

    நீ ஏன் நின்றாய்?

    சிங்கம் என்றால் மான்களை துரத்தவேண்டும்- துரத்தினேன். துரத்தின சந்தோஷம் எனக்கு போதும். நான் எல்லைக்கு மீள்கிறேன். நீங்கள் உங்களது எல்லைகளுக்கு மீளுங்கள்! ஜெய்சங்கர் குரல்.

    பொய் சொல்கிறாய்!

    என்ன பொய்? காதலிக்க நேரமில்லை ரவிசந்திரன் குரல்.

    துரத்தினதும் துரத்தினாய்-எங்களில் ஒருவரை பிடித்து கடித்துக்குதறி தின்ன வேண்டியதுதான?

    ம்ப்ச்! கமல்ஹாசன் ஒலிக்குறிப்பு.

    என்ன அலுத்துக் கொள்கிறாய்?

    நான் வேட்டையாடும் தரத்தில் நீங்கள் இல்லை. இன்று போய் நாளை வாருங்கள்! விஜய் குரல்.

    கொடிய மிருகங்களுக்கு இரையாக வேண்டும் என்று எங்கள் தலையில் இறைவன் எழுதிவிட்டான்!

    வேட்டையாடித்தான் வாழவேண்டுமென்று எனது தலையில் எழுதிவிட்டான் இறைவன்! அஜீத் குமார் குரல்.

    வேட்டையாடலும் வேட்டையாடப்படலும் காலம் காலமாய் தொடர்கிறது. நாளை நாங்கள் வந்தாலும் நீ எங்களை வேட்டையாடப் போவதில்லை என நினைக்கிறோம்!

    புதிய மான்களை துணைக்கு கூட்டி வாருங்கள்! வைரமுத்து குரல்.

    சரி! ஒரு மான்.

    போவதற்கு முன் ஒரு வார்த்தை! இன்னொரு மான். வானவில் நிறத்தில் க்ளைடாஸ்கோப்பியது மானின் உடல். குறுக்கும் நெடுக்குமாய் ஓடி மறைந்தது மின்னல் கீற்று.

    என்ன? சுகிசிவம் குரல்.

    நீ கவர்ச்சிகரமான சிங்கமாய் இருக்கிறாய். யாமறிந்த சிங்கங்களிலே உன்னைப் போலொரு சிங்கம் எங்கும் காணேன். உன் பற்களால் கிழிபட அரைபட எனது மாமிசம் துடியாய் துடிக்கிறது. நீ என் கழுத்தை கவ்வி உயிர் போகச் செய்யவேண்டும் என ஆவலாதிக்கிறேன். இறை நிழலில் இளைப்பாற விரும்பும் ஆத்திகன் போல் உன் வயிற்றில் இளைப்பாறும் மாமிசமாக விரும்புகிறேன்.

    அதிகம் பேசுகிறாய் மானே... கிளம்புங்கள் கிளம்புங்கள்! ஜெயம் ரவி குரல். சிங்கத்தை திரும்பி பார்த்த வண்ணம் மான்கள் முழங்காலில் நடந்து போயின. சிங்கம் தனது வாய்க்குள் செர்ரி பழங்களை தூக்கி தூக்கிப் போட்டது.

    கனவு அறுபட்டது அல்லது முடிந்தது. எழுந்து அமர்ந்தாள் நேசிகா. வயது 27. நீள்முகம். சுருள் சுருள் தலைகேசம். நடிகை சோபனா போல் தீர்க்கமான கண்கள். பழைய ஸ்ரீதேவி மூக்கு. மாதவி உதடுகள். குஷ்பூ மார்பகங்கள். சிம்ரன் இடுப்பு. லெட்சுமிராய் தொப்புள்.

    எழுந்தாள். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பெட்பாட்டில் எடுத்து குளிர்நீர் பருகினாள்.

    பெரும்பான்மையான கனவுகள் விழித்தவுடன் மறந்துவிடும் பிரம்ம பிரயத்தனம் பண்ணினாலும் நினைவுக்கு வராது.

    ஆனால் தற்சமயம் கண்டு முடித்த கனவு அப்படியே முழுகதையாய் மனக்கண்ணில் ஓடுகிறது.

    சிங்கம் யார்?

    மான்களில் ஒன்று நம்மைப்போலவே இருந்ததே!

    நாம் ஏன் சிங்கத்தை இரை எடுக்க சொல்லி கெஞ்சினோம்?

    நேசிகா மனோதத்துவ ஆராய்ச்சி மாணவி.

    சிக்மண்ட் பிராய்ட்டை தனது தாத்தா என்பாள்.

    பால்கனிக்கு நடந்தாள்.

    இரவு வானத்தை அண்ணாந்தாள் நேசிகா. நட்சத்திரங்களில் இருநூறு புள்ளி கோலம்போட்டு ஒரு ஒளிரும் சிங்கம் தெரிந்தது. மின்பழ சிங்கம்.

    அட சட்! என்றாள் நேசிகா.

    கல்யாண வயதை தாண்டி படிப்பதால் இப்படிப்பட்ட கனவுகள் வருகின்றனவோ... இருக்கலாம்... உடலை மனதை எனக்கு அடக்கத் தெரியவில்லையோ...

    படுக்கைக்கு திரும்பின நேசிகா துள்ளிக்குதித்தாள்.

    படுக்கையில் சிங்கம் சம்மணமிட்டு அமர்ந்திருந்தது.

    எங்கெங்கு காணினும் சிங்கமடி என்கிறாயா நேசிகா?

    எனது பெயர் உனக்கெப்படி தெரியும்?

    நான் ஆண் மகப்பேறு மருத்துவன் போல. எனக்கு தெரியாத விஷயங்களே இல்லை. உன்னைப்பற்றிய பத்து உடல் இரகசியங்கள் சொல்லவா?

    சொல்லேன்!

    உனது வலது தோள்பட்டை இடதுதோள்பட்டையை விட சற்றே சிறிதானது. தொடையில் பின்னந்தோள்பட்டையில் காதுமடலில் உனக்கு மச்சங்கள் உள்ளன. உனது காதுமடல் துளைகள் தூர்ந்து போய்விட்டன. ஸ்டட் அணிய சிரமப்படுகிறாய். நீளமான முரட்டுத்தனமான ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்க அவதிபடுகிறாய். பள்ஸ் டூவில் நீ ஒரு சப்ஜக்ட் பெயிலாகி பின் பாஸானாய். உனக்கு நெகடிவ் ஆண்களை பிடிக்கும். உனக்கு பிடித்த நிறம் கறுப்பு...

    நிறுத்து நிறுத்து. இதற்குமேல் ஒரு வார்த்தை பேசாதே. நீ அடுத்தவர் அந்தரங்கங்களில் தலையை நுழைக்கும் பெண்மயக்கி சிங்கம்!

    சிங்கத்தை காலால் உதைத்தாள்.

    உதைத்த இடத்திலிருந்த சிங்கம் மறைந்து மறைந்து தெரிந்தது. பின் காணாமல் போனது. சிங்கம் அமர்ந்திருந்த இடத்தில் ஆண் வியர்வை வாசனையடித்தது. சிங்கம் அமர்ந்திருந்த இடத்தில் தலைவைத்து படுத்தாள் நேசிகா. இடுப்புவரை படுக்கையில் சாத்திவிட்டு இருகால்களையும் காற்றுக்கு உயர்த்தினாள். படுக்கையின் குறுக்கே நெடுக்கே சாமர்சால்ட்டினாள். இல்லாத சிங்கத்துடன் மல்யுத்தம் நடத்தினாள். விடியவிடிய மாயசிங்கத்துடன் மல்லாடித் தோற்றுப் போனாள் நேசிகா.

    நேசிகாவின் தோழி தூரிகை நேசிகாவின் கனவினை கேட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1