Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Haikoo Maranangal
Haikoo Maranangal
Haikoo Maranangal
Ebook93 pages58 minutes

Haikoo Maranangal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Arnika Nasser, an exceptional Tamil novelist, Written over 300+ Novels and 100+ Short Stories, Readers who love the subjects Crime, Detective, Police, supernatural and Science will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Haikoo Maranangal

Read more from Arnika Nasser

Related to Haikoo Maranangal

Related ebooks

Related categories

Reviews for Haikoo Maranangal

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Haikoo Maranangal - Arnika Nasser

    15

    1

    ஜாய் டி.வி. தெரியுமா உங்களுக்கு?

    என்ன அபத்தமான கேள்வி இது?

    தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்தமான பத்து விஷயங்கள் கலைஞர் தமிழ், ரஜினி, கமல், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான், வைரமுத்து, கவுண்டமணி, பிரபுதேவா, உள்ளத்தை அள்ளித்தா ரம்பா, நிலா டி.வி. என்கிறீர்கள். நல்லது. நிலா டி.வி.யின் ஸ்தானத்தைப் பிடிக்க ஜாய் டி.வி. பிரம்மப் பிரயத்தனம் பண்ணுவதுதான் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கும் தெரியுமே என்கிறீர்கள்.

    ஜாய் டி.வி. இந்தியா மற்றும் 56 நாடுகளில் கிளை விரித்துள்ள தனியார் செயற்கைக்கோள் ஒளிபரப்பு. ஒரு நாளைக்கு இருபத்து நாலரை மணி நேரம் ஒளிபரப்பாகும் நான்கு சானல்களும் ஒரு தனி ‘பே’ சானலும் ஜாய் டி.வி. வைத்திருந்தது. ‘பே’ சானல் சந்தாதாரர்களுக்கு மட்டும்.

    ஜாய் டி.வி.யின் மேனேஜிங் டைரக்டர் மிருதுளா எம்.டி. என்றதும் மனோரமா வயதில், சாயலில் ஒரு பெண்மணியைக் கற்பனை செய்தீர்கள்.

    மிருதுளா. 32 வயதானவள். உயரம் 170 செ.மீ. போடெரிக் போல் நெளிவு சுளிவு உடல் பெற்றவள். குதிரை முகம். பாப் செய்யப்பட்ட கேசம். திருத்தப்பட்ட புருவங்கள்- பார்த்தவுடன் காக்டெய்ல் போதை தரும் கண்கள், கட்டளையிடும் நீள் மூக்கு செர்ரி உதடுகள், கச்சித பல்வரிசை, ரோஜா போன்ற அழகிய நாக்கு, ஒரு முகவாயில் மச்சம். உயர்ந்த கழுத்து.

    மிருதுளா நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து கடின உழைப்பின் மூலம் ஜாய் டி.வி தோற்றுவித்தவள். ஜாய் டி.வி. அமெரிக்கன் செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்பு நிகழ்த்துகிறது. 24 மணி நேர நிகழ்ச்சிகள் எட்டு ஒளிநாடாக்களாய் சர்வதேச கூரியரில் முந்தைய நாள் அனுப்பப்படும்.

    மிருதுளா ஜீன்ஸும், டி சர்ட்டும் உடுத்தியிருந்தாள். ஷாம்பு குளியல் கொண்ட கேசம் காற்றில் ஐலேஸா பாடியது.

    ஹை ஹீல்ஸ் டாக் டாக்க, தனது அரைக்கு, நடந்தாள்.

    டெலிபோன் ஆபரேட்டரிலிருந்து எதிர்ப்பட்டோர் அனைவரும் வணங்கினர்.

    வணங்கினாள்.

    ஒரு தளத்தில் ஒரு நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

    எட்டினாள். சில நிமிடங்கள் கவனித்தாள். திரும்பிய குழு மக்களுக்கு கையசைத்தாள்,

    குளிர் பதன மூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தாள்.

    ஏ.சி.யையும், டி.வி.யையும் ஆன் செய்தாள்.

    ஸ்டார் பிளஸ் ஓடிக்கொண்டிருந்தது.

    இருக்கையில் அமர்ந்தாள்.

    இன்டர்காமில் உதவியாளரை அழைத்தாள். அதே -

    மீனா வந்து வணங்கினாள். குட்மார்னிங் மேடம்!

    குட்மார்னிங் மீனா! தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் தயாரிப்பு பற்றி விவாதிக்க விரும்புறேன். சம்பந்தப்பட்ட அனைவரையும் என் அறைல அடுத்த ஒரு மணி நேரத்ல குழுமச் சொல்லு... ஓகே?

    ஓகே மேடம்!

    சசிதரன் வந்துட்டாரா? அவன்தான் மிருதுளாவின் வலதுகை, எலக்ட்ரானிக்ஸ் படித்தவன். ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளின் தரத்தையும் கண்காணிப்பவன். புதுப்புது நிகழ்ச்சிகளை வடிவமைத்துத் தருபவன்.

    அவர் மித்ரா ஸ்டுடியோல புது ப்ரோக்ராம் ரிக்கார்ட் பண்ணிக்கிட்டிருக்கார்!

    அவருக்கு ஃபோன் பண்ணி 11 மணி மீட்டிங்கில் கலந்துக்கச் சொல்லு...

    ஃபோன் பண்றேன் மேடம்!

    ஓகே! நீ போ... ஈமெயிலை ஆன் செய்தாள்.

    மானிட்டரில் சகிதரனின் தகவலோடியது.

    ஹாய் மிருதுளா! தமிழ்புத்தாண்டு நிகழ்ச்சி பற்றி அற்புதமான, ஐடியா வைத்துள்ளேன். ஜோவை டைரக்ட் பண்ணச் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன்!

    புன்னகைத்தாள், மிருதுளா.

    அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தாள்.

    சசிதரன் சில தகவல்கள் எழுதி வைத்திருந்தான்.

    வாசித்தாள்.

    ஒன்று: அமெரிக்காவில் செட்டிலான இந்திய விளையாட்டு வீரன் அடுத்த மாசம் ஒரு புது தமிழ் சானல் ஆரம்பிக்க இருக்கிறான். 24 மணி நேர ஒளிபரப்பு. வாரத்துக்கு ஏழு ஆங்கில ஆக்ஷன் படங்கள், அமெரிக்கன் சாடிலைட் மூலம் ஒளிபரப்ப இருக்கிறான். (இதனைப் பற்றி மகா கவனம் தேவை.)

    இரண்டு: வடநாட்டு டி.வி. தின தமிழ் ஒளிபரப்பை ஒரு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக்குகிறது. (கவலையில்லை. நமக்குச் சிறிதும் பாதிப்பு இல்லை.)

    மூன்று: நம் தொழில் எதிரியான நிலா டி.வி. புதிதாக இரு சூப்பர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது, அவைகளை நாம் நிச்சயமாக காப்பியடிக்க வேண்டும். (குயிக்)

    தகவல் தொடர்ந்தது.

    படித்துப் படித்து அதிலேயே காமென்ட் எழுதினாள் மிருதுளா.

    மெலாமைன் கோப்பையில் தக்காளி சூப் வந்தது. பருகினாள்.

    மணி 11 ஆனதை சுவர் கடிகாரம் அறிவித்தது.

    முதலில் சசிதரன் பிரவேசித்தான். அவனுக்கு முன் அவனது சென்ட் வாசம் பரவியது.

    மிருத்து!

    முதலாளியம்மா என்று இல்லாமல்

    Enjoying the preview?
    Page 1 of 1