Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velli Nilave Vinotha
Velli Nilave Vinotha
Velli Nilave Vinotha
Ebook225 pages2 hours

Velli Nilave Vinotha

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written BY Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466596
Velli Nilave Vinotha

Read more from Arnika Nasser

Related to Velli Nilave Vinotha

Related ebooks

Related categories

Reviews for Velli Nilave Vinotha

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velli Nilave Vinotha - Arnika Nasser

    21

    1

    அவளது குழந்தை பால் உறிஞ்சிக் கொண்டிருந்தது. உறிஞ்சும் குழந்தையின் பிஞ்சு மூக்கும், ரோஸ் உதடுகளும் தன்னுடலில் அமுக்கியிருப்பது உணர்ந்து சுகானுபவம் பெற்றாள் அவள். தன்னுடலுக்கும், குழந்தை உதடுகளுக்குமிடையே மின்சாரத் தொடர்பு ஏற்பட்டு பால் பாய்வதாய் உணர்ந்தாள். குடிக்கும் குழந்தையின் தலைமுடியைக் கோதி விட்டாள். தண்டை அணிந்த குட்டி கால்களை அமுக்கினாள். ஒரு பக்கம் பால் தீர்ந்ததும் குழந்தையை மறுபக்கம் மாற்றினாள். இப்பக்கமும் குடித்ததும் ஆடையைத் திருத்திக் கொண்டு, குழந்தையை மடியில் போட்டுக் கொண்டாள். வயிற்றைத் தட்டிப் பார்த்தாள். குடித்தது முழுமை என்றது.

    பசி தீர்ந்த ஆசுவாசத்தில் குழந்தை தாயைப் பார்த்து சிரித்தது. கண்களை குறுக்கியது. குட்டி மூக்கை விடைத்தது. ஈறுகள் தெரியும் ஜொள் வாயைத் திறந்தது. வழியும் ஜொள்ளை சுட்டு விரலால் சேகரித்து தன் நுனி நாக்கில் ஒத்திக் கொண்டாள் தாய். உயிர் வரை தித்தித்தது.

    குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்தாள். குழந்தையை எந்தக் குறிப்பிட்ட மொழியிலும் கொஞ்சுவது அபத்தம். எப்படி ஒரு இசை அமைப்பாளன் தன்னுடைய மெட்டுக்கு ‘டூப்’ வார்த்தைகள் இட்டு நிரப்புவானோ அதைபோல அர்த்தமாகாத ஒலிக்குறிப்புகளைப் போட்டு கொஞ்ச வேண்டும்.

    அப்படித்தான் இவளும் கொஞ்சினாள். குழந்தையின் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டினாள். மீண்டும் குழந்தை சிரித்தது.

    குழந்தையைத் தட்டித் தூங்க வைத்தாள். தூங்கும் குழந்தையை ரசித்தாள்.

    கழுதை! அப்பனைப் போலவே ஒருக்களித்து இடக் கையைத் தலைக்கு வைத்துத் தூங்குகிறது! வியந்தாள்!

    பெர்சனல் கம்ப்யூட்டரின் பட்டன்களில் விக்னேஷின் விரல்கள் நர்த்தனமாடின. மானிட்டரில் எழுத்துக்கள் பூத்தன. கதை தொடர தொடர பால் கொடுக்கும் தாயாய் விக்னேஷ் மாறினான். பால் கொடுக்கும் சுகானுபவம் அடைந்தான்.

    மஞ்சுளா காபி கொண்டு வந்தாள். சப்தம் எழுப்பாமல் காபியை அவனருகில் வைத்துவிட்டு மானிட்டரை வாசித்தாள்.

    அந்த பால் கொடுக்கும் தாயாய் நானிருக்கக் கூடாதா என தாபம் கொண்டாள். மறுநொடி தாய்மை பெற்ற பெண் போல் நுணுக்கமாக கணவன் கதை எழுதுகிறானே என்று ஆச்சரியம் கொண்டாள்

    குனிந்து அவனை முதுகுடன் அணைத்துக் கொண்டாள்.

    ஏய் பய்யா!

    என்ன குட்டிம்மா?

    சமீபத்ல எந்த தாய் பால் கொடுக்கறத பாத்த? விலாவாரியா எழுதியிருக்க?

    யார பாக்கணும்? நீ கொடுக்கிற மாதிரி கற்பனை பண்ணினேன்...

    நானா? நோ சான்ஸ். உனக்கும், எனக்கும் கல்யாணமாகி பத்து வருஷமாச்சு. பத்து வருஷத்ல பொறக்காத குழந்தையா புதுசா இனிமேலா பொறந்திட போவுது? எனக்கு பாலூட்டும் அவயம் இருப்பதே மறந்து போய்விட்டது. பல வருடங்கள் பூட்டிக்கிடக்கும் பங்களா மாதிரி என் கர்ப்பப்பை ஒட்டடை படிந்து கிடக்கிறது.

    பின்னுக்கு இருந்தவளை இழுத்து தனது மடியில் போட்டுக் கொண்டான் விக்னேஷ். விழுந்தவளின் கண்களை ஆழமாய் பார்த்தான். இருவரது கண்களும் பனித்தன.

    என்னடி இப்டி பேசற? நம்பிக்கையை தளர விடலாமா? நமக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும்! குழந்தையை எடுத்துக் கொண்டு சென்னை மாநகரம் முழுவதும் அங்க பிரதட்சணம் செய்வோம். பாத்டப்பில் படுத்து குழந்தையை குளிப்பாட்டுவோம். உன்னத வாசனை அடிக்கும் குழந்தையை முகர்ந்து பார்ப்போம். குழந்தை உனது சாயலா, என் சாயலா என்பதற்கு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் வைப்போம். அழும் குழந்தைக்கு நிலா காட்டுவோம், நட்சத்திரம் காட்டுவோம், பறவைகள் காட்டுவோம், வீட்டு விலங்குகள் காட்டுவோம்.

    பேசும் கணவனை ரசித்தாள் மஞ்சுளா.

    தலையை உயர்த்தி அவனது இடது காதுக்கு அருகிலிருக்கும் சதை துணுக்கை நிமிண்டினாள்.

    எங்கேடா இப்டி பேசக் கத்துக்கிட்ட?

    "எனக்கு தாம்பத்யம் தரும் சுகத்தை விட, பேச்சு சுகமே அதிகம். விபரம் தெரிந்த நாளிலிருந்து பெண்களை துரத்தி பேச ஆரம்பித்தேன். ஒவ்வொரு பெண்கிட்டயும் நூறு டன் கற்பனை இருக்கு. பேசப் பேச என் உலகம் பெரிதாயிற்று. மீசை முளைத்த பின்னும் பெண்கள் நடுவில்தான் இருந்தேன். சுற்றி இருக்கும் பெண்கள் வாசனையில் என் அம்மாவை உணர்ந்தேன்.

    அவர்களின் பிரச்னைகளை கேட்டு கவலையுற்றேன். மொத்தத்தில் பெண்கள் உலகத்தில் கரைந்து போனேன். இன்று நான் கதை எழுதுவது, அற்புதமாய் பேசுவது கூட ஆயிரம் பெண்களின் கூட்டு வரம்!"

    அவர்கள்ல யாரையாவது நீ கல்யாணம் பண்ணியிருக்கலாமில்ல? சரியான காலத்ல ரெண்டு குழந்தைகளை பெற்று செட்டில் ஆயிருப்ப. மூத்த பெண் குழந்தைக்கு ஒன்பது வயசாகும். நாலாவது படிக்கும். ரெண்டாவது ஆண் குழந்தை. மூணு வயசாகும். எல்கேஜி சேத்திருப்ப...

    என்ன பண்றது? நான் காதலிச்சது இந்த மஞ்சுளாவைத் தானே?

    ஏமாந்திட்ட

    நோ நோ. நினைச்சவள அடைஞ்சிட்டேன். நம் முதல் முத்தத்துக்கு பிறகு நம் முதல் காதலுக்கு பிறகு அப்படியே அந்த உன்னதத்தோடயே செத்துடலாம்னு நினைச்சேன் குட்டிம்மா! குழந்தை குட்டி இல்லாத தம்பதிகள் பரஸ்பரம் வெறுப்பா இருப்பாங்க. பிரிஞ்சிட தயாரா இருப்பாங்க. பாலியல் குற்றம் சாத்தியம்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. அது முழுக்க முழுக்க தவறு. குழந்தை இல்லாத தம்பதிகள் எனக்கு நீ உனக்கு நான்னு ஒன்றிப் போயிடுவாங்க. அவங்களுக்குள்ள இருக்கிற அன்னியோன்யம் அசுரமா இருக்கும். ஒருத்தருக்கு சிறு காயம்னாலும் துடிதுடிச்சுப் போயிடுவாங்க!

    விதிவிலக்கு இருக்காதா?

    விதிவிலக்கு யோசிப்பதே பாவம் மஞ்சுளா.

    பேசாம நாம எந்த குழந்தையாவது தத்தெடுத்துக்கிட்டா என்ன?

    மஞ்சுளாவை ஆராய்ந்தான் விக்னேஷ். பச்சைக் கண்கள் மிளிர்ந்தான்.

    அதைவிட ஒரு ஆசிரமத்தையே தத்தெடுக்கலாம். ஆயிரம் குழந்தைகள் மத்தியில் விழுந்து புரளலாம். ஆனா அந்த உபாயத்தை இன்னும் சில வருடங்கள் கழித்து கையில் எடுக்கலாம். அதுவரை நாம் நம் பெண் மருத்துவரை நம்புவோம். மருத்துவ ரீதியாய் உனக்கும் எனக்கும் எந்த குறையுமில்லை. உனது சினை முட்டை குழாயில் அடைப்பு என்கிறார் மருத்துவர். அதற்கு மருந்து சாப்பிட்டு வருகிறாய். எனது உயிரணுக்களை வீரியப்படுத்த நானும் மருந்துண்கிறேன். சற்றே பொறு கண்ணம்மா! என்றான் விக்னேஷ்.

    டெலிபோன் சிணுங்கியது. எழுந்தாள்.

    ரிசீவரை கையில் எடுத்தான்.

    ஹலோ, விக்னேஷ் ஹியர்!

    நான் டாக்டர் காந்திமதி!

    சொல்லுங்கம்மா!

    இன்னைக்கு ஈவினிங் நீ ப்ரீயா?

    ஆமா...

    குட்... நீயும் மஞ்சுளாவும் ஈவினிங் ஆறு மணிக்கு என் கிளினிக் வந்திருங்க.

    என்ன விஷயம்?

    எல்லாம் நல்ல விஷயம்தான்... என்னுடைய கொலீக் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கா. செயற்கை கருத்தரிப்பில் நிபுணி. இங்கே இருமாதம் தங்கப் போகிறாள். உன்னுடைய கேஸையும் இன்னொரு கேஸையும் காட்டி, இரண்டாம் அபிப்ராயம் பெற்றேன். இப்போது அவளது நேரடி பார்வையில் உன் உயிரணுவை உன் மனைவியின் முட்டைக்கருவுடன் இணைத்து மீண்டும் கர்ப்பப்பையில் வைக்கப் போகிறோம்!

    நூறு சதவீதம் வெற்றி தருமா?

    மகா நிச்சயம் விக்னேஷ்!

    ரொம்ப சந்தோசமாயிருக்கு டாக்டர். சாயங்காலம் வந்திடறோம்...

    மஞ்சுளா எங்கே?

    பக்கத்லதான் நிக்கறா!

    அவகிட்ட சொல்லு. மாலை சந்திப்போம்! எதிர்முனை இறந்தது. ரிசீவரை வைத்தான் விக்னேஷ். சொல்ல முனைபவனை தடுத்தாள் மஞ்சுளா.

    புரிஞ்சு போச்சுப்பா... நாம் செயற்கை கருத்தரிப்பில் குழந்தை பெறப் போகிறோம்!

    ஆம் நிலாவே!

    படுக்கையில் அமர்ந்தான் விக்னேஷ். பெரிதாய் மூச்சுவிட்டான். மஞ்சுளா ஓடிவந்து அவனது மடியில் சரிந்தாள். மடியில் மனோரஞ்சித தோட்டம்.

    மாலையில் சென்னையின் புறநகரம் நங்கநல்லூர் பரபரத்தது. பணிக்குச் சென்றிருந்தோர் மின்ரயில் மூலம், பஸ் மூலம் வந்து குவிந்தனர். மாலை காய்கறி மார்க்கெட் உயிர்த்தது.

    குளித்து புத்தாடைக்கு மாறியிருந்தனர் மஞ்சுளாவும், விக்னேஷும்.

    மூன்றாவது மாடியிலிருந்து தரைத் தளத்துக்கு இறங்கினர். மூன்று மாடி அபார்ட்மென்ட் என்பதால் ரோகிணி அபார்ட்மென்ட்க்கு லிப்ட் இல்லை.

    இருவரும் மாருதிக்குள் புகுந்தனர்.

    மாருதி காம்பவுண்டை விட்டு பிரதான சாலைக்குள் புகுந்தது.

    தூரத்தில் அந்த பாலிகிளினிக் கட்டடம் தெரிந்தது. பார்க்கிங்கில் நிறுத்தி இறங்கினர். அறை எண் 32க்குள் பிரவேசித்தனர். அங்கு ஏற்கனவே ஒரு தம்பதியினர் அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகில் போய் அமர்ந்தனர்.

    என்ன... இன்னைக்கு அபூர்வமா கூட்டமில்லை? சத்தமாய் முணுமுணுத்தான் விக்னேஷ்.

    பதில் புதிய தம்பதியினரிடமிருந்து வந்தது.

    நீங்க விக்னேஷ் மஞ்சுளா தம்பதியினர் தானே?

    ஆமா!

    நாம ரெண்டு தம்பதிகளுக்கு மட்டும்தான் இன்று அப்பாய்ன்ட்மென்ட்டாம்!

    புதியவர்களில் பெண், விக்னேஷிடம் திரும்பினாள்.

    நீங்க ரைட்டர் விக்னேஷ் தானே?

    ஆமா!

    சந்திக்க வைத்த கடவுளுக்கு நன்றி. நான் உங்கள் உயிர்வாசகி. என் பெயர் வினோதா. இவர் என் கணவர். பெயர் ஷங்கர்! விக்னேஷ் எதிர்பாராமல் அவனது கையைப் பற்றி குலுக்கினாள் வினோதா.

    புன்னகைத்தான்.

    இவள் என் மனைவி மஞ்சுளா!

    இருவருக்கும் பொது பிரச்னை - குழந்தை இல்லை. அந்த ஏக்கம் டாக்டர் காந்திமதி மூலம் தீரப்போகிறது. நம் அறிமுகம் அடர்ந்த நட்பாய் பரிணாமம் கொள்ளட்டும் சார்! என்றாள் வினோதா குதூகலமாய்.

    ஆனால் இன்றைய அறிமுகம் பற்பல விபரீதங்களுக்கு வித்திடப் போகிறது என்பதனை இரு தம்பதிகளும் கொஞ்சமும் அறிந்தார்களில்லை.

    இறை சூட்சமம் சிரித்தது!

    2

    குதூகலப்படும் வினோதாவை ஒரு மாதிரி முறைத்தான் ஷங்கர்.

    இந்த எழுத்தாளர்கள் என்ன வினோதமான பிறவிகளா, ஏனிந்த பெண்கள் இப்படி பரவசப்படுகின்றனர்? இவர்களை கண்டு கொள்ளாமல் விட்டால் செத்து விடுவார்கள் செத்து. உலகத்திலேயே அதிக தலைக்கனம் பிடித்தவர்கள் இவர்கள்தான்...

    இன்னும் ஷங்கரின் மனம் துவேஷமாக நினைத்தது. உணர்வுகளை மறைத்து பூசி மெழுகி சிரித்தான் ஷங்கர்.

    நீங்க சொல்றது உண்மைதான் வினோதா. எனக்கென்னமோ உங்க ரெண்டு பேரையும் நூறு வருஷம் பாத்து பழகினது மாதிரி இருக்கு!

    வலை வீசுறான்! வலை வீசுறான்!

    இருக்கும் விக்னேஷ்... எனக்கும் அதே நிலைதான்... உங்களுக்கு?

    ஷங்கர் உதடு பிதுக்கினான்.

    சில நினைவுகள் நம்மை வேட்டையாடும். சில முகங்கள் நம்மை வேட்டையாடும்! தத்துவார்த்தமாய் பேசுவதாக நினைப்பு துரைக்கு!

    உங்களுக்கு முற்பிறவி, மறுபிறவியிலெல்லாம் நம்பிக்கையுண்டா விக்னேஷ்!

    ‘நல்லவேளை நர்ஸ் குறுக்கிட்டாள்!’ ஷங்கர் ஆசுவாசித்தான்.

    நர்ஸ் எட்டினாள்.

    விக்னேஷ் - மஞ்சுளா தம்பதியினரை மேடம் கூப்பிடுறாங்க!

    விக்னேஷ், மஞ்சுளாவுடன் எழுந்தான்.

    போயிட்டு வந்திர்றோம்!

    விக்னேஷ் உள்ளே போக ஷங்கர் வினோதாவை கடிந்தான்.

    ஏன்... அவன்கிட்ட இந்த வழி வழியற?

    இலக்கியம் பத்தி உங்களுக்கொண்ணும் தெரியாது... சும்மாருங்க...

    நீ இவ்ளவு பேச்சு பேசுனியே... அவன் பொண்டாட்டி ஒரு வார்த்த என்கிட்ட பேசினாளா?

    நீங்க மூஞ்சிய தூக்கி வச்சிருந்தா எவ பேசுவா?

    எழுத்தாள பசங்க பொண்டாட்டிகளை காலுக்கடில போட்டு மிதிச்சு வச்சிருப்பான்க...

    ஆமா... நீங்க கண்டீங்க... விடுறீங்களா இந்த பேச்சை...

    உள்ளே நுழைந்த விக்னேஷ் டாக்டர் காந்திமதியை வணங்கினான். காந்திமதியுடன், இன்னொருத்தியும் அமர்ந்திருந்தாள்.

    காந்திமதி பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தாள்.

    இவங்கதான் விக்னேஷ் - மஞ்சுளா. விக்னேஷ் மிகப் பெரிய எழுத்தாளர். இவங்கதான் அமெரிக்க டாக்டர் ஸ்டெல்லா!

    ஸ்டெல்லா இயக்கி வைத்தவளாய் புன்னகைத்தாள்.

    மேஜையில் கிடந்த இரு கனத்த பைல்களை காந்திமதி ஸ்டெல்லாவிடம் நீட்டினாள்.

    இந்த பைல்களில் இருவரது ஹிஸ்டரியும் இருக்கு ஸ்டெல்லா!

    வாங்கினாள். தொங்கும் மூக்குக் கண்ணாடியை முகத்தில் பொருத்திக் கொண்டாள்.

    அதில்-

    விக்னேஷின் உயிரணுக்கள் எண்ணிக்கை, அவைகளின் நகர்ச்சி திறன் முதலிய விவரங்கள் இருந்தன.

    மஞ்சுளாவின் கர்ப்பப்பை ஸ்கேனிங் ரிப்போர்ட் இருந்தது.

    எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் வாசித்தாள் ஸ்டெல்லா.

    நிமிர்ந்தாள். விக்னேஷை நம்பிக்கையாய் பார்த்தாள்.

    என்னுடைய ஆராய்ச்சி சம்பந்தமாக இன்னும் இரு மாதம் தமிழகத்தில் இருப்பேன்... உங்களுக்கும் வெளியே காத்திருக்கும் தம்பதியருக்கும் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தைகள் பரிசளிக்கப் போகிறோம். பெரிதாக ஒன்றுமில்லை. உங்களுடைய உயிரணுவை உங்கள் மனைவியின் முட்டைக் கருவுடன் இணைத்து மீண்டும் பத்திரமாக உங்கள் மனைவியின் கர்ப்பப்பையில் வைக்கப் போகிறோம்... அதனையடுத்த பத்து மாதங்களில் உங்கள் கைகளில் உங்களின் செல்ல வாரிசு தவழப் போகிறது!

    விக்னேஷ் பெரிதாய் குதூகலமடைந்தான்.

    "உங்களுடைய கேஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1