Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neelakuyile Kannamma
Neelakuyile Kannamma
Neelakuyile Kannamma
Ebook249 pages1 hour

Neelakuyile Kannamma

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written BY Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466589
Neelakuyile Kannamma

Read more from Arnika Nasser

Related to Neelakuyile Kannamma

Related ebooks

Reviews for Neelakuyile Kannamma

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neelakuyile Kannamma - Arnika Nasser

    24

    1

    படுக்கையிலிருந்து மனுஷ்நந்தன் எழுந்தான். தன்னிலிருந்து விலக்கிய போர்வையை, தூங்கும் மனைவியின் கழுத்துவரை போர்த்தினான்.

    தாரிணி! என்று மனைவி பெயரை உலக காதலாக பெருமையாக தித்திப்பாக பலமாக முணுமுணுத்தான் மனுஷ்நந்தன்.

    என்ன அழகாகத் தூங்குகிறாள்? கழுத்துத் தசையின் முன்னோட்டம் பின்னோட்டம் அவளின் சீரான சுவாசத்தை அறிவிக்கிறது. மூடிய இமைகளுக்குள் கரு விழிகள் கடிகார பெண்டுலம் வேலை செய்தன. சுகமான சுந்தரக் கனவு காண்கிறாளோ?

    இந்த தேவதையுடன் ஜோடி சேர்ந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றன. இன்று பதினாறாவது வருட திருமண நாள். குழந்தைத் திருமணமும் ஒரு புதுக்கோணத்தில் சரியானது தானோ? நானும் தாரிணியும் என் நான்கு வயதில் அவளின் ஒரு வயதில் இணை சேர்ந்திருந்தால் கூடுதல் இருபது வருட அவள் நெருக்கம் கிடைத்திருக்குமோ?

    கடந்த ஒவ்வொரு திருமண நாளும் தாரிணி என்ன செய்வாள்? தலைக்கு குளித்து மங்களகரமாய் குங்குமமிட்டு கல்யாணப் புடவை சரசரக்க வந்து தூங்கும் என்னின் கால்களை ஒத்தி... ஸ்பரிச சுகத்தில் எழுந்து நான் அவளை இழுத்து அணைக்க... அவள் ‘அய்ய! விடுங்க என்னை இப்பத்தான் குளிச்சிருக்கேன்’ சிணுங்குவாள்.

    இன்று ஏன் தூங்குகிறாள்? பாவம் என்ன அசதியோ? இந்த திருமண நாளில் ஒரு மாற்றம் செய்வோம்...

    எழுந்து நடந்த மனுஷ்நந்தன், நடுக்க நடுக்க குளிர் நீரில் குளித்தான். மனைவிக்கும் 12 வயது மகளுக்கும் நீண்ட ஆயுளுக்கு மதுரை மீனாட்சியை வணங்கினான். திரும்பவும் படுக்கையறைக்குள் நுழைந்து மனைவியின் கால்களைப் பற்றி அதன் மேல் நெற்றி படக் குனிந்து வணங்கினான்.

    பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம். ஸ்பரிசம் உணர்ந்து அதிர்ந்து எழுந்தாள் தாரிணி.

    மனுஷ்! என்ன பண்றீங்க?

    குட்டிம்மா! இன்னைக்கி நம்ம பதினாறாவது ஆண்டு திருமண நாள். எத்தனை காலம்தான் புருசன்கிட்ட பொண்டாட்டி ஆசிர்வாதம் வாங்குவா...பார் எ சேஞ்ச்... நான் பண்ணினேன்...

    எல்லாம் நான் லேட்டா எந்திரிச்ச விளைவு இது. மனுஷ்! இப்படி பண்ணாதப்பா. தப்பு...

    புருசன் பொண்டாட்டிக்குள்ளே எதுவுமே தப்பில்லை!

    விடியக்காலைல நீங்க இப்படி வழிஞ்சா எனக்கு ஆபத்து. ஆளை விடுப்பா. எந்திரிச்சு, குளிச்சு, வீடு கூட்டி, கோலம் போட்டு... நூறு வேலை இருக்கு!

    அதெல்லாம் கிடக்குது விடுடி. நம்ம கல்யாண நாள் அதுவுமா... ஏதாவது பரிசு குடேன்,

    என்ன பரிசு?

    நடிக்காதே. உதைப்பேன். ஒரு முத்தம் குடேன்.

    கணவனின் கன்னத்தைச் சிறிது பிடித்து உதட்டில் ஒத்திக் கொண்டாள் தாரிணி.

    அடிப்பாவி! இது என்னாது?

    முத்தம்!

    பிசாத்து முத்தம். நமக்குத் தேவை கடி முத்தம்.

    கடி முத்தம்!

    நம்ம செம ஸ்பெசல் முத்தம்!

    ஐய்யோ! நான் மாட்டேன்.

    குடுக்கல...உதை பின்னிருவேன்.

    அட! குடேன்ம்மா. நம்ம அப்பா. எங்கே போறார் எங்க வரார். குடேன்ம்மா.

    குரல் கேட்டு தாரிணியும் மனுஷ்நந்தனும் வெட்கத்துடன் திரும்பினர். வாசலில் பன்னிரண்டு வயது மகள் ஆர்யா நின்றிருந்தாள்.

    நீ எப்படிடி முழிச்ச ஆரி?

    நான் எந்திரிச்சு ரொம்ப நேரமாச்சு. இன்னிக்கி என்னோட அப்பாம்மா வெட்டிங் டே. தூங்கலாமா? இந்தாங்க... என் பிரசன்டேசன் நீட்டினாள்!

    மனுஷ் நந்தன் பார்சலைப் பிரித்தான். ‘ஹாப்பி அனிவர்சரி’ வாசகம் கொண்ட மகிழ்ச்சி ஆணும், மகிழ்ச்சிப் பெண்ணும் கைகோத்துக் குதூகலிக்கும் ப்ளோ அப்!

    வாவ் ப்யூட்டிபுல். நன்றி மகளே!

    நன்றி எல்லாம் இருக்கட்டும். நீங்க ரெண்டு பேரும் எந்திரிச்சு குளிச்சு... அப்பாதான் குளிச்சாச்சு. அம்மா நீ போய் குளிச்சுட்டு புது புடவை உடுத்திக்கிட்டு அப்பாவோட வா. சிவனையும் பார்வதியையும் கண்ட களிப்பாய் வணங்குகிறேன். அப்பா மடியில் அமர்ந்து கொண்டாள் ஆர்யா.

    எந்திரிடி எந்திரிடி. அப்பா மடிலயிருந்து எந்திரிடி

    ஏன் உக்காந்தா என்ன?

    பெண் பிள்ளைக்கு பத்து வயசு ஆயிடுச்சுன்னா அப்பன்கிட்ட இருந்து பத்தடி தள்ளி நிக்கணும்!

    உறவுகளைக் கொச்சைப்படுத்தும் மடமைப் பழக்கம். கொளுத்து கொளுத்து. எனக்கு எத்தனை வயதானாலும், ஆர்யாவுக்கு எத்தனை வயதானாலும் அவள் என் செல்ல மகள். என் குலம் தழைக்க வைக்கப் போகும் ஆலங்கன்று. நீ வாம்மா ஆர்யா!... மகளைத் தன்னருகில் வைத்துக் கொண்டான்.

    உங்க இஷ்டம். அதுக்கு மேல நான் என்ன செய்ய?

    ஒண்ணும் செய்ய வேண்டாம். எந்திரிச்சுக் குளிடி குட்டிம்மா.

    தாரிணி எழுந்து குளிக்கப் போனாள்.

    ஆர்யா! உனக்கு மன்த்லி எக்சாம் வருதே. படிக்கப் போ

    குளியலறைக்குள் நுழைந்து ஆடைகளைக் களைந்து பாவாடையை உயர்த்திக் கட்டிக் கொண்டாள் தாரிணி. பாதி ஸ்வஸ்திக் சிகைக்காய் சோப்பைக் கரைத்துக் குளித்து விட்டு புது ஆடைக்குள் மாறினாள். ஈரத் தலைக்கு பூத் துவாலை கட்டிக்கொண்டு வாசலில் விசேஷ நாள் கோலம் போட்டாள்.

    சமையல் கட்டுக்குள் புகுந்தவள் முன்னெச்சரிக்கையாய் ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டு சிலிண்டரில் கேஸ் லீக் ஆகிறதா என சோதித்துப் பார்த்துக் கொண்டாள். பின், பாலை நன்றாக கொதிக்க வைத்து காய்ச்சி மூன்று டம்ளர் பில்டர் காபி தயாரித்தாள்.

    படிக்கும் மகளுக்கும், கதை எழுதும் கணவருக்கும் காபி நீட்டினாள். தானும் ஒரு டம்ளர் காபி எடுத்து உறிஞ்சினாள்.

    ஓர் அடுப்பில் இட்லி வேகவைத்தாள். இரண்டாவது அடுப்பில் ரவையை வறுத்தெடுத்தாள். வாணலியில் நெய்யைக் காயவைத்து உலர் திராட்சை, முந்திரி, தூள் செய்த ஏலக்காய் இட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றினாள். முதல் கொதி வந்தவுடன் ஒரு டம்ளர் சீனி இட்டு, அது கரையும் வரை காத்திருந்தாள். பிறகு, ஒரு சிட்டிகை கேசரி பவுடர், ஒரு கல் உப்பு இட்டாள்.

    இரண்டாவது கொதியில் வறுத்த ரவையை சிறிது சிறிதாக இட்டு முடித்த பின், கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை ஊற்றிக் கிளறி, ‘உன்னோடு ஒட்ட மாட்டேன்’ என்று வாணலியிடம், கேசரியைச் சொல்ல வைத்தாள். அடுப்பிலிருந்து இறக்குமுன், நெய்யில் வறுத்த உலர் திராட்சை, முந்திரியையும், தூள் செய்த ஏலக்காயையும் தூவினாள்.

    அதற்குள் குக்கர் இட்லி வெந்து விட்டது. ஆவி பறந்தது. இட்லிகளைத் தனியே எடுத்து ஒரு பாத்திரம் நிறைத்தாள்.

    மிக்சியில் தேங்காய் சட்னி அரைத்தாள். தயாரான டிபனை எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்தாள்.

    மனுஷ்! ஆரி! ரெண்டு பேரும் சாப்பிட வாங்க! மனுஷ்நந்தன் வந்து ஒரு சேரில் அமர்ந்து கொண்டான். ஆர்யா தகப்பனுக்கு பக்கத்துச் சேரில் வந்து அமர்ந்தாள். சாப்பாட்டுத் தட்டில் தாளம் போட்டாள் மண்ணில் இந்தக் காதல்’ பாட்டை பலமாக விசில் அடித்தாள்.

    கேசரியைப் பரிமாறியபடி, விசில் அடிக்கும் மகளை, கணவனுக்குத் தெரியாமல் முறைத்தாள்.

    கேசரியை சுவைத்தபடி மனுஷ்நந்தன், சூப்பர்பா கேசரி. நல்லா பண்ணிருக்கா...

    அப்பா... இன்னிக்காவது பாராட்னீங்களே... உருளைக் கிழங்கு பொரியல்ல உப்பு அதிகம். குழம்புல காரம் அதிகம்னு ஏதாவது குறை சொல்லிட்டே இருப்பீங்க. இன்னிக்குதான் அதிசயமா...

    வேறென்ன பண்றது? இன்னிக்கு நம்ம கல்யாண நாள். மனைவியை குஷிபடுத்த பொய் சொல்ல வேண்டிய கட்டாயம்.

    டாடி! அம்மாவ கலாட்டா பண்ணாதீங்க. இன்னிக்கு டிபன் உண்மையிலேயே தூள்,

    அரட்டையுடன் டிபன் முடிந்தது. கைகளைப் பூத் துவாலையால் துடைத்தபடி எழுந்தான் மனுஷ்நந்தன்.

    டாடி! இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்?

    அம்மாவே பிரதம மந்திரி. அவளைக் கேள்

    என்னம்மா ப்ரோக்ராம்?

    மதியம் பயத்தம் பருப்பு பாயசம், உளுந்தம் வடை, விஜிடபிள் பிரியாணி, தேங்காய் சாதம், புளியோதரை, பருப்பு சாதம், புதினா சட்னி, தயிர் சாதம்.

    சாப்பாட்டை விடும்மா. பொழுது போக்கு அயிட்டங்களைச் சொல்.

    ஆர்யா! நீயும் மனுஷ்ஷும் மதியம் லீவு போடுங்க. சாயங்காலம் நாலு மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போயி சாமி கும்பிட்டுட்டு... அப்படியே ஈவினிங் ஷோ மூவி போவோம்.

    நைட்?

    நைட் ஏதாவது முனியாண்டி விலாஸ்ல ‘என் வி’ சாப்பாடு. அப்புறம் வீடு...

    எல்லாம் சரிம்மா. மதிய சாப்பாடு ஏகப்பட்ட அயிட்டம் இருக்கே. தனியா ப்ரிப்பேர் பண்ணிடுவியா? நான் வேணும்னா துணைக்கு...

    வேண்டாம் வேண்டாம். நீ பள்ளிக்கூடத்துக்குப் போ. நான் பாத்துக்கிறேன்!

    ஆர்யா யூனிபார்ம் அணிந்து கொண்டு புறப்பட்டாள். வெளியே பள்ளியின் வேன் பாம் பாம் என்றது. மகள் டாட்டா காண்பித்துக் கொண்டே புறப்பட்டாள்.

    மனுஷ்நந்தன் மனைவியை இழுத்துத் தன்னருகில் அமர வைத்தான்.

    உக்காரு குட்டி தாயி!

    என்னப்பா?

    நமக்குக் கல்யாணமாகி பதினஞ்சு வருசமாகி, பன்னிரண்டு வயசுல ஒரு மக. நம்ப முடியுதா? நேத்திக்கித்தான் நாம ஜோடி சேர்ந்த மாதிரி இல்ல?

    சிரித்த மாதிரி தலை ஆட்டினாள்.

    ஆமாம்பா.

    நம்ம முதலிரவு ஞாபகமிருக்கா?

    ம், இருக்கு.

    அந்த த்ரிலிங் இனிமே வருமா?

    எப்படி வரும்?

    இன்னிக்கு ராத்திரி வருதான்னு பார்ப்பம்

    போப்பா. உனக்கு எப்ப பார்த்தாலும் அதே பேச்சு

    குட்டிம்மா

    ஏம்ப்பா அழற?

    எனக்கு பயமா இருக்கு கன்னுகுட்டி.

    என்ன பயம்?

    நாம ரொம்ப சந்தோஷ இருக்கோம். ஒவ்வொரு சந்தோச ஒட்டக முதுகுலயும் துயரக் குள்ளன் அமர்ந்திருப்பான். அப்படி நம்ம வாழ்விலயும்...

    சொல்லாதப்பா. அப்படி ஒரு கற்பனை கூட செய்ய வேண்டாம். நீ எழுதுற கதைகள்ல கூட ஆப்டிமிசமும், சந்தோஷமும்தானே வழியும்! பின் உன் வாழ்க்கைல எப்படி சோகம் வரும்.

    தாயி! நீயும் நானும் கடைசி வரைக்கும் இணை பிரியாம இருக்கணும். நீ என் வாழ்க்கைல வந்த பின்தான் நான் மனிதன் ஆனேன்: நீ இல்லையென்றால் என் வாழ்வு பிரபஞ்ச சூன்யம். ஐ இம்மன்ஸ்லி லவ் யூ... ஐ வாண்ட் யூ போத் பிசிக்கலி அண்ட் மென்ட்டலி...

    மனுஷ்! நான் திடீர்னு செத்துப் போயிட்டா என்ன பண்ணுவீங்க?

    மனைவியுடன் உடன்கட்டை ஏறிய முதல் கணவன் என்ற பெயரைப் பெறுவேன் தாயி!

    நிஜமா?

    என் எழுத்து தேவதையின் மீது ஆணையாக...

    மனுஷ்! நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள்!

    நானும்தான். சரி... நான் அலுவலகம் புறப்படவா?

    சரிப்பா...

    எழுந்த மனுஷ்நந்தன் பேன்ட் சர்ட்டுக்கு மாறினான். வராண்டாவிலிருந்த பஜாஜ் எம் எய்ட்டியை ராம்ப்பில் தள்ளி இறக்கி ஸ்டார்ட் செய்து புறப்பட்டான். டாட்டா காண்பிக்கும் கணவனுக்கு டாட்டா காட்டினாள். கணவன், பார்வையில் மறைந்தான்.

    ‘என்னை தெய்வமாய் துதிக்கும் என் கணவனுக்கு நான் ஏற்றவளா? அவரிடம் எத்தனை மறைத்திருக்கிறேன்? எனக்கு உண்மையில் பாவ மன்னிப்பு உண்டா?’

    பெருமூச்சு விட்டபடி மதிய சமையலை கவனிக்க புறப்பட்டாள். சமையலறைக்கு இடை இடையே காலை ஆங்கில தினசரியை மேலோட்டமாக வாசித்தாள்.

    தேங்காய்த் துருவலைத் தாளித்து வறுக்கும்போது புகைசுருண்டு கிளம்பியது. அடக்கமுடியாத புகைச்சலுடன் இருமினாள் தாரிணி. மூன்றாவது தடவை இருமியவள் கையில் ஈர குழகுழப்பு. கையை உறுத்தவள், திடுக்கிட்டாள். ரத்தம் மீண்டும் மீண்டும் அடக்க முடியாத அளவுக்கு இருமல், தொடர்ந்து குழகுழப்பாய் ரத்தம். பயந்தவள் வாஷ்பேசினில் வாய் கொப்பளித்தாள். கண்களில் இருட்டு வலை பின்னியது. பின்னந்தலையில் வலி பூகம்பம் வெடித்தது. வாய் கொப்பளித்து நிமிர்ந்தவள் மயக்கமாய் தரையில் தொமீரினாள்...

    2

    பக்கத்து வீட்டு விஜியம்மா ஒரு பாட்டில் மண்ணெண்ணெய் இரவல் வாங்க தாரிணியின் வீட்டுக்குள் துழைந்தாள். ‘என்னது? வீடு பப்பரப்பான்னு திறந்து கிடக்குது! தாரிணி எங்கே?’

    தாரிணி! தாரிணி! ஆரிம்மா... பதில் இல்லை.

    சமையல் அறையிலிருந்து அபரிமிதமாய் கரும்புகை வெளி வந்து கொண்டிருந்தது.

    அய்யய்யோ! என்னாச்சு? சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்தாள். கேஸ் அடுப்பின் மீது வைக்கப்பட்டிருந்த சமையல் பாத்திரம் கரித்து உள்ளிருந்த தேங்காய் துறுவல் கரித்தூளாய். விஜியம்மா துணிந்து உள்ளே சென்று பாத்திரத்தை துணி பிடித்து இறக்கி வைத்தாள். அடுப்பை ஆப் செய்தாள். உள்ளேயும் அவளை- தாரிணியைக் காணவில்லை.

    பாத்ரூம் போயிருப்பாளோ? பாத்ரூமுக்கு நடந்தவள் ஸ்தம்பித்தாள். வாஷ் பேசினின் கீழே தாரிணி மயங்கிக் கிடந்தாள். ஓடிப்போய் முழங்காலிட்டு, ஆரிம்மா! ஆரிம்மா! உசுப்பினாள். புரட்டப்பட்ட தாரிணியின் மூக்கிலும் வாயிலும் ரத்தம் வெளியேறி பிசுபிசுப்பாய் உறைந்திருந்தது. சுவாசம் தாறுமாறாய் இருந்தது.

    மயக்கம் தெளிவிக்க நீரெல்லாம் அடித்துப் பார்த்தாள். தாரிணி எழவில்லை. விஜியம்மாவுக்கு பயம் பூதாகரமாய்க் கிளம்பியது.

    யோசித்தாள். என்ன செய்வது? முதலில் தாரிணியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வோமா? அதற்கு முன் அவளது கணவனுக்கு தகவல் தெரிவிப்பது நல்லது!

    தாரிணியின் கணவன் அமெரிக்கன் காலேஜில் சைக்காலஜி விரிவுரையாளராக இருக்கிறார் என்பது தெரியும். ஆனால், போன் நம்பர்? சரி, என்கொயரியில் கேட்டால் தெரிகிறது.

    நாலாவது வீட்டுக்கு ஓடினாள். என்கொயரியில் நம்பர் கிடைத்தது. காலேஜுக்கு போன் செய்தாள். விஜியம்மா விசயத்தை சொன்னவுடன் மனுஷ்நந்தன் ஒரு நானோ நொடி இயக்கம் இழந்து மீண்டான். தலைக்குள் பிரளய இரைச்சலாய் பதற்றம். சுவாசம் தறிகெட்டுத் தொடர்ந்தது. மரண பயத்தில் அட்ரினலின் சுரந்து தவி தவித்தான்.

    இ... இ... இதோ ஒரு நிமிசம். வ... வ...வந்துடுறேன்!

    ரிசீவரை சாத்தினான் மனுஷ்நந்தன். உலகம் அழியப் போகும் நொடியில் மறைவிடம் நோக்கி கரப்பான் பூச்சி பறப்பது போல வீடு நோக்கி விரைந்தான். வாசலில் ஒரே பெண்கள் கூட்டம். மயங்கிக் கிடந்த தாரிணியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    எழுத்தாளன், லெக்சரர், ஆண் மகன் அத்தனை இணைப்புகளையும் வீசிவிட்டு மயங்கிக் கிடக்கும் மனைவியைப் பார்த்து வாய் கோணிக் கதறி அழுதான்.

    தாரிணி தாரிணி! தாரிணி! அய்யோ என் குட்டிம்மா! செல்லக் குட்டிம்மா! குட்டிக் குட்டிம்மா! ராஜாத்தி! தாயி! பொன்னுத்தாயி!. உனக்கென்னம்மா ஆச்சு? காலைல நல்லா இருந்தியேம்மா...

    விஜியம்மா ஓடி வந்தாள். தாரிணிக்கு ஒண்ணும் ஆவல. பயப்படாம நர்சிங் ஹோமுக்கு கொண்டு போங்க. ஆர்யாவுக்கு தகவல்

    Enjoying the preview?
    Page 1 of 1