Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naragathil Santhippom Nanba
Naragathil Santhippom Nanba
Naragathil Santhippom Nanba
Ebook115 pages2 hours

Naragathil Santhippom Nanba

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466763
Naragathil Santhippom Nanba

Read more from Arnika Nasser

Related to Naragathil Santhippom Nanba

Related ebooks

Related categories

Reviews for Naragathil Santhippom Nanba

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naragathil Santhippom Nanba - Arnika Nasser

    1

    தியாகராய நகர்.

    காவி கட்சி மாநிலத் தலைமையகத்துக்கு எதிரே அந்த ஆறுமாடிக் கட்டடம் நிமிர்ந்திருந்தது. கட்டடத்தின் முகப்பில் ‘பேகன் வீடியோஸ்’ என்கிற நியான் போர்டு பார்வையானது.

    நான்காவது தளம்.

    மூன்று வீடியோ கேமிராக்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தன.

    ‘பறவைப் பார்வை’ நிகழ்ச்சியின் இயக்குநர் பார்கவி ஒளிப்பதிவாளர் சிவக்குமாருடன் எடுக்கப்போகும் எபிஸோட் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தாள்.

    புயலாய் காட்சியமைப்புக்குள் பிரவேசித்தான் மாதவ். உலகத் தமிழர்களிடையே மாதவ் மிகப் பிரபலம். எல்லாரும் அவனைச் செல்லமாக ‘மஞ்சள் சட்டை மாதவ்’ என்றுதான் அழைப்பர்.

    மாதவ்வுக்கு வயது 35. உயரம் 180 செமீ. திராவிட நிறம். உதயநிதி ஸ்டாலின் போல ஒழுங்கீனமான தாடி. பம்பையாய் தலைக்கேசம். மைக்ராஸ்கோபிக் கண்கள். குறை சொல்லவே பிறந்த வாய். ஐந்து வயதிலிருந்து 35 வயதுக்குள் பத்தாயிரம் திரைப்படங்களையாவது பார்த்திருப்பான்.

    கடந்த ஐந்து வருடங்களாக ‘பறவைப் பார்வை’ என்கிற பெயரில் சினிமா விமர்சனம் யூட்யூப் சானலில் பண்ணிக் கொண்டிருக்கிறான். எந்தப் படம் என்றாலும் விமர்சனம் என்கிற பெயரால் கடித்துக் குதறி விடுவான். வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அன்று மாலையே சுடச்சுட விமர்சனம் பண்ணி விடுவான். தமிழ் ரசிகர்களுக்கு மாதவ்வின் விமர்சனம் வேதவாக்கு. ஒரு படத்தை மாதவ் ‘வேஸ்ட்’ என அறிவித்து விட்டால் போதும், ரசிகர்கள் அந்தத் தியேட்டர் பக்கம் கூடப் போகமாட்டார்கள்.

    ஹாய் பார்கவி! ஹாய் சிவக்குமார்!

    ஹாய் மஞ்ச சட்டை மாதவ்!

    ரெடியா இருக்கீங்களா? இன்னிக்கு ஒரு படத்துக்கு மேல புல்டோஸரை விட்டு தொம்சம் பண்ணப் போறோம்!

    இன்னைக்கி என்ன படம் விமர்சனம் பண்ணப்போற மாதவ்?

    வேறென்ன படம்? மெஹா மெஹா பட்ஜெட் படம் ‘சோழநிலா’வைத்தான் பிரிச்சு மேயப்போறேன்.!

    அறுநூறு கோடி பட்ஜெட் படம்... ஒரே நேரத்தில் ஆறு மொழிகளில் எட்டாயிரம் தியேட்டர்களில் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியுள்ளது... அந்தப் படத்துக்குக் கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா?

    கருணை... தமிழில் எனக்கு மிகவும் பிடிக்காத வார்த்தை!

    மாதவ்வின் கைபேசி சிணுங்கியது.

    எடுத்து காதில் இணைத்தான்.

    ஹலோ!

    ஹலோ! நான் சோழநிலா டைரக்டர் பத்மகுமார் பேசுறேன்... உங்க பக்கத்ல யாராவது இருக்காங்களா?

    ஏன்?

    உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்!

    சொல்லுங்க!

    சோழநிலா பார்த்திட்டீங்களா மாதவ்?

    பார்த்திட்டு இப்பத்தான் ஸ்டூடியோவுக்குள்ள நுழையுறேன்!

    படம் எப்படி இருந்துச்சு?

    டாஸ்மாக் பார் மாதிரி கலீஜா இருந்துச்சு!

    உங்ககிட்ட இருந்து வேறென்ன வார்த்தைகள் வந்திரப்போகுது? இந்தப் படம் என் மூன்று வருட உழைப்பு. ஆறு டாப் ஹீரோஸ், ஆறு டாப் ஹீரோயின்கள், நான்கு டாப் காமெடியன்கள், ஆயிரம் துணை நடிகர்கள், இருநூறு யானைகள், ஐநூறு குதிரைகள் வச்சுப் படமெடுத்திருக்கேன். படத்தோட போஸ்ட் புரடக்ஷனே ஆறு மாசம் பண்ணிருக்கேன். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பிரமாதப்படுத்தியிருக்கேன். சர்வ சாதாரணமா கலீஜ்னு விமர்சனம் பண்ணினா எப்டி மாதவ்?

    உங்க படம் மூணு மணி நேரம் ஓடுது. மூணு மணி நேரம் தியேட்டருக்குள்ள உக்காந்து படம் பாக்றது நரகவேதனை. உங்க படம் சரித்திரப் படமல்ல, தரித்திர படம்!

    மாதவ்! மைன்ட் யுவர் வேர்ட்ஸ்... இதே தோரணைலதான் என் படத்தை விமர்சனம் பண்ணப்போறியா?

    உங்ககிட்ட சொன்னதைவிட கேவலமா கழுவிக் கழுவி ஊத்தப்போறேன்.

    நாம ஒரு டீல் பேசிக்குவமா?

    என்ன டீல்?

    என் படத்தைப் பாராட்டி விமர்சனம் பண்ணினா, அம்பது லட்சம் பணம் தரேன்!

    நோ நோ!

    எழுபத்தியஞ்சு லட்சம்?

    நோ நோ!

    பைனலா சொல்றேன்... ஒரு கோடி வாங்கிக்கிட்டு என் படத்தை பாசிட்டிவ்வா விமர்சனம் பண்ணு! பத்மகுமார்.

    நான் தினம் ஆயிரம் ரூபாய்க்கு சிங்கி அடிக்கறவன்தான். ஆனா, உன் கோடி ரூபாய்க்கு மயங்கமாட்டேன்!

    நீ என்ன முட்டாளா?

    இருக்கலாம்!

    உன் விமர்சனத்தால என் படத்துக்கு ஏதாவது பின்னடைவு ஏற்பட்டுச்சுன்னா, நான் சும்மா இருக்கமாட்டேன். நான் சும்மா இருந்தாலும், புரடக்ஷன் சைடு சும்மா இருக்கமாட்டாங்க!

    மிரட்றியா?

    இல்ல, உண்மையச் சொன்னேன்... தயாரிப்பாளர் லூக்காஸ் உலக பணக்காரர்களில் ஒருவர். அவருக்கு இந்தப் படம் வெற்றி பெறுறது ஒரு கௌரவப் பிரச்சனை... எதாவது ஏடாகூடம் பண்ணினா போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பார்!

    என் மேல கை வச்சுத்தான் பாருங்களேன்!

    வேற யார் சொன்னா கேப்ப?

    கடவுளே சொன்னாலும் கேக்கமாட்டேன்!

    தமிழிலுள்ள அனைத்துக் கெட்டவார்த்தைகளாலும் அர்ச்சித்து எதிர்முனை மௌனித்தது.

    விமர்சனத்தை எழுதிட்டு வந்திட்டியா மாதவ்? வினவினாள் பார்கவி.

    சட்டைப்பையைத் தொட்டு, நாலுபக்கம் எழுதிட்டு வந்திருக்கேன். ரணகளப்படுத்திரலாம்! என்றான் மாதவ்.

    ஒப்பனை அறைக்குள் போனான் மாதவ். போட்டிருந்த சட்டையைக் கழற்றினான். மஞ்சள் நிற சட்டையை உடுத்திக் கொண்டான்.

    மஞ்சள் நிற சட்டையை உடுத்திக்கொண்டதுமே, அவனுக்குள் ஒரு விமர்சன பூதம் புகுந்தது.

    மேக்கப்மேன் மாதவ்வின் முகத்தில் மேக்கப் போட்டார்.

    விமர்சனத்தை எடுத்து பார்கவி முன் ஒருமுறை உரக்க வாசித்தான், ரொம்ப கொதிக்குது மாதவ். கொஞ்சம் எடிட் பண்ணிடேன்!

    நெவர்!

    உனக்கு உயிர்பயம் இருக்கோ இல்லையோ எங்களுக்கு நிறைய இருக்கு. ஒரு விமர்சனத்தை ஷூட் பண்ணி வெளியிட்டா நாலு நாளைக்குத் தூக்கம் வரமாட்டிங்குது. எவனாவது மூஞ்சில ஆசிட் ஊத்திடுவானோன்னு பயமா இருக்கு!

    பயமாயிருந்தா பேசாம எதாவது ஒரு மெகா சீரியலுக்கு எபிஸோடு டைரக்டரா போய்டு பார்கவி!

    மாதவ் சட்டையில் காலர் மைக் பொருத்தப்பட்டது.

    பின்னணியில் ‘பறவைப் பார்வை’ என்கிற பேனர் டிஸ்பிளே செய்யப்பட்டிருந்தது.

    ஷூட்டிங் ஆரம்பித்தது.

    சோழநிலாவுக்கான விமர்சனத்தை வாசிக்க ஆரம்பித்தான் மாதவ்.

    "இந்தப் படத்தை டைரக்டர் பத்மகுமார்

    Enjoying the preview?
    Page 1 of 1