Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaathal Mogini
Kaathal Mogini
Kaathal Mogini
Ebook76 pages24 minutes

Kaathal Mogini

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Arnika Nasser
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466855
Kaathal Mogini

Read more from Arnika Nasser

Related to Kaathal Mogini

Related ebooks

Related categories

Reviews for Kaathal Mogini

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaathal Mogini - Arnika Nasser

    அத்தியாயம் 1

    ததும்பும் கோடி கோடி டன் ரோஜாத்திரவமாய் கிழக்குச் சூரியன். விடியல் வானத்தில் வண்ண வண்ண புடவை தொழிற்சாலை. காலைப்பறவைகள் சங்கீத குரலில் சிணுங்கியபடி கூட்டிலிருந்து கிளம்பிபோயின. குதிநடை போடும் தொப்பைப் பெரியவர்கள் நடைமேடைகளில் காணப்பட்டனர். பெசன்ட் நகரின் ஒரு பங்களா...

    குளிர்பதன மூட்டப்பட்ட இரட்டை படுக்கையறை. இரவாடை அணிந்திருந்த மோகினி மல்லாக்கப்படுத்திருந்தாள். சீரான சுவாசத்தில் அவளது மார்பகங்கள் கொடைக்கானலுக்கும் வத்தலக்குண்டுக்கும் ஏறி இறங்கின. சயனமுகத்தில் புத்தரும் கிளியோபாட்ராவும் சரிக்கு சமமாய் ஊஞ்சலாடினர்.

    மோகனி இருபது வயது இளமைச் சூறாவளி, மாநிறம் கொண்டவள் தலைக்கேசத்தை குட்டையாய் கத்தரித்து விட்டிருப்பவள். 160 செ.மீ. உயரம் கூடியவள். இறுதி ஆண்டு தோட்டக்கலை படிப்பவள்.

    மோகினியின் அப்பா வினோத்குமார் காவல்துறையிரல் உயர் அதிகாரியாக பணிபுரிபவர். அம்மா சாண்யா கணிணி பொறியல் படித்துவிட்டு பணிக்கு, செல்லாமல் மனைவி பொறுப்பை சிறப்பாய் கவனிப்பவள்.

    மேஜையில் இருந்த அலாரம் மேடைப் பேச்சாளர் போல விடாப்பிடியாய் சப்தம் எழுப்பியது.

    எழுந்து அமர்ந்தாள் மோகினி, பிள்ளையாரப்பா மோகினி எழக்காத்திருந்தது போல படுக்கையறைக்குள் உட்பட்டாள் பணிப்பெண் சித்ரா.

    என் அம்மாவும் அப்பாவும் என்ன பண்றாங்க சித்ரா? அப்பா உடற்பயிற்சி அறையில், அம்மா சமையறையில்!"

    நல்லது! எழுந்தாள் மோகினி. பல் துலக்கினாள். இரவாடையைக்களைந்தாள், மேங்கள் சூழாத நிலவாய் நிர்வாணம். குளித்தாள். பூத்துவாலையால் தலைத்துவட்டினாள். புத்தாடை உடுத்திக்கொண்டாள்.

    சித்ரா இரு பூந்தொட்டிகளை தூக்கி வர பெற்றோரிடம் நடந்தாள் மோகினி

    "காலை வணக்கம் அப்பா. (காபி கொண்டு வரும் அம்மாவை தள்ளிக் கொண்டு போய் அப்பாவிடம் நிறுத்தி) காலை வணக்கம் அம்மா, உங்கள்

    இருவருக்கும் இருபத்திரெண்டாம் ஆண்டு திருமணவாழ்த்துக்கள் இன்னும் 78 வருடம் தாம்பத்தியம் நடத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவீர்களா ஆளுக்கொரு பூந்தொட்டியை பரிசளித்தாள். பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றாள் மோகினி,

    இன்னும் உன் அப்பாவிடம் 78 வருடம் குடும்பம் நடத்துறதா? தாங்கதடியம்மா மோகினி! கணவனை குறும்பாய் பார்த்தாள் சரண்யா.

    அப்படி என்ன என் அப்பா உன்னை பிடுங்கி வைக்கிறார்?

    அதெல்லாம் உன்னிடம் சொல்லமுடியுமா மோகி!

    என்னப்பா... அம்மாவின் புகார் மெய்தானா?

    வினோத்குமாரின் முகம் இறுகியது. அவள் சொன்னது உண்மைதான் மோகினி. போன பிறவியில் நிறைய பாவங்கள் செய்த பெண்களுக்குத்தான் இந்தப்பிறவியில் போலீஸ்காரர்கள் கணவன்களாய் கிடைப்பார்கள். இத்தனை வருடத்திருமண வாழ்வில் நான் குறித்தநேரத்தில் ஒருநாளும் வீட்டுக்கு வந்ததில்லை. துறையில் எனக்கு ஏற்படும் கோபதாபங்களை வீட்டுக்கு வந்து மனைவியிடம் நான் கொட்டித்தீர்த்திருக்கிறேன். கிரிமினல்களுடன் பேசிபேசி அதே உருட்டல் மிரட்டல் அதட்டல்தான் உன் அம்மாவிடம்!".

    சரண்யா கணவனை காதலாய் வெறித்தாள். நான் முதலில் சொன்னது விளையாட்டுக்கு என் கணவரின் உத்தியோக மிருக்கு எனக்கு மிகமிக பிடித்தமான விஷயம். நல்ல மனைவிக்கு சர்க்கஸ் கூண்டும் ஒன்றுதான், சமையலறையும் ஒன்றுதான். என் கணவருடன் 78 வருடமென்ன 78,000 வருடம் குடும்பம் நடத்த விரும்புகிறேன்.

    அப்படியானால் மோகினிக்கு போலீஸ் மாப்பிள்ளை பார்ப்பாயா?

    மோகினி சமாளிக்கத்தயாரென்றால் போலீஸ் மாப்பிள்ளை பார்க்க நான் தயார்!

    இன்னும் 5 வருடங்களுக்ககுப்பின் தான் எனக்கு திருமணப்பேச்சே எழ வேண்டும்.

    பெற்றோர் குளித்து புத்தாடை அணிந்து வெளிப்பட்டனர். போர்டிகோவில் ஆல்டோ ஸ்பின் கார் காத்திருந்தது, மூவரும் காரில் ஏறினர். கார் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு பறந்தது.

    விஸ்வருபம் எடுத்து நிற்கும் ஆஞ்சநேயரை கும்பிட்டாள் மோகினி. பிரசாதம் சுவைத்தபடி கார் திரும்பினர்.

    கார்

    Enjoying the preview?
    Page 1 of 1