Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennarugil Nee Irunthal...
Ennarugil Nee Irunthal...
Ennarugil Nee Irunthal...
Ebook257 pages1 hour

Ennarugil Nee Irunthal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குறும்பு பேச்சும், கேலியும் கைவந்த கலையாய் 28 வயது வசீகர இளைஞன் திறமைமிக்க பிஸினஸ்மேன் பிரமோத். அதே நேரத்தில், ஆண்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தில் இருக்கும் இளம் பெண் எழுத்தாளர் மஞ்சரி. இவர்களுக்குள் முதலில் மோதலாகி, பின் நட்பாகி, பின் ஒரு தலை காதலாகி பின் ஏமாற்றத்துடன் நீண்ட இடைவெளிக்குப்பின் இரு மனங்களும் சேர்ந்ததா? இல்லையா? என்பதை காதலின் இன்பத்தோடும் வலியோடும் சேர்ந்து வாசித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்....!

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580140609914
Ennarugil Nee Irunthal...

Read more from R. Manimala

Related to Ennarugil Nee Irunthal...

Related ebooks

Reviews for Ennarugil Nee Irunthal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennarugil Nee Irunthal... - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    என்னருகில் நீ இருந்தால்...

    Ennarugil Nee Irunthal...

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    அழகாய்ச் சிரித்தபடி - அந்த

    வானவில் தோன்றியதே!

    காதல் மொழிபேசி - அவன்

    மவுனம் கலைக்கிறதே!

    ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கியதுதான் தாமதம்... கதிரவனின் ஒளிக்கீற்றுகள் குபுக்கென்று உள்ளே பாய்ந்தன.

    மற்றொரு நாளின் விடியல்.

    புத்தம் புதிய கதிர்கள்.

    மாடி ஜன்னலைத் தாண்டி உயர்ந்து அடர்ந்திருந்த மாமரத்தில் ஒளிந்திருந்த பட்சிகளின் ஆரவாரம்.

    அடர்ந்து, நீண்டிருந்த முடிக் கற்றையை ஒன்று சேர்த்து அலட்சியமாய்க் கொண்டை போட்டுக்கொண்ட மஞ்சரி ஜன்னலை நெருங்கி வந்து இளம் காலைப்பொழுதின் ஆரவாரத்தை ரசித்தாள்.

    ஜன்னலை ஒட்டியுள்ள கிளையின்மேல் தாவித்தாவி ஓடிவந்து அமர்ந்த அணில் ஒன்று பிரமிப்புடன் இவளையே பார்த்துக் கொண்டிருந்தது.

    பளபளத்த அதனின் சின்னஞ்சிறு கண்களும், தூரிகை போன்ற மெத்தென்ற வாலும் மஞ்சரியைக் கவர... சிறு குழந்தையாய் மாறிப்போனாள்.

    ஏய்... வா... வா! நான்கு விரல்களை மடக்கி அழைத்தாள்.

    மிரண்டுபோய் ஓடிவிட்டது.

    யார்கிட்டே பேசிட்டிருக்கே, மஞ்சரி?

    ஆச்சர்யமான குரல் கேட்டுத் திரும்பினாள்.

    அம்மா நின்றிருந்தாள்.

    காலையிலேயே குளித்து... முகத்தில் மஞ்சள் பளபளக்க, அளவான குங்குமப் பொட்டுடன் மங்களகரமாய் இருந்தாள் கனகம்.

    ஒண்ணுமில்லேம்மா... சும்மா அணிலைக் கூப்பிட்டேன்.

    அணிலைக் கூப்பிட்டியா? விழிகள் விரிய, கிண்டலாய்ச் சிரித்தாள்.

    எப்போதிருந்து இப்படி மாறினே மஞ்சரி?

    என்ன... என்னைப் பைத்தியக்காரின்னு சொல்றியா?

    சேச்சே... ஊரே மெச்சற எழுத்தாளர் என் பொண்ணு! நான் அப்படிச் சொல்வேனா? இன்னும் குழந்தைத்தனம் உன்னைவிட்டுப் போகலியேன்னு ஆச்சர்யப்பட்டேன்! சரி... நேரமாச்சே... குளிக்கலே?

    குளிக்கணும்!

    குளிச்சிட்டு பக்கத்துல இருக்கிற கோவிலுக்குப் போய்ட்டு வந்துடு மஞ்சரி!

    இல்லேம்மா... எழுதற வேலை இருக்கு, இன்னும் ரெண்டு நாள்ல ராணிமுத்துக்கு நாவல் கொடுத்தாகணும். நேரமில்லே...

    கோவிலுக்குப் போய்ட்டு வந்து எழுதலாமே! இன்னைக்கு ஆடிவெள்ளி மஞ்சரி. நல்ல நாள்! எனக்காகப் போய்ட்டு வாயேன்! என்றாள் கெஞ்சலாக கனகம்.

    ப்ச்... விடமாட்டியே... சரி... சரி... போறேன்.

    புடவை கட்டிட்டுப் போ! சுரிதார் வேண்டாம்!

    சரி... காவிக் கலர்லேதானே?

    என்ன கிண்டலா? அப்புறம்... அங்கே பார்த்தியா ஜன்னல் கதவு மேலே ரெண்டு காக்கா கத்திக்கிட்டே இருக்கறதை.

    இதிலே என்னம்மா அதிசயம்?

    இன்னைக்கு நம்ம வீட்டுக்கு யாரோ விருந்தாளி வரப்போறாங்க!

    மூட நம்பிக்கை...ம். அதுவும் எழுத்தாளரோட அம்மாவுக்கு!

    சரி... போய்க் குளி. விட்டா இதுக்கு அரை மணி நேரம் வாட்டி வதைப்பே... என்றபடி கீழே போய்விட்டாள் கனகம்.

    மஞ்சரி டவலை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள்.

    என்னவோ நினைத்துக் கொண்டவளாய்... ரேடியோ சுவிட்சைப் போட்டாள்.

    ஆடி வெள்ளி... தேடி உன்னை நான் அடைந்த நேரம்!

    மஞ்சரிக்குப் பிடித்த பழைய பாடல் ஒன்று கசிய... கூடவே பாடியபடி குளிக்கச் சென்றாள்.

    ***

    அழைப்பு மணி இனிமையாய் அலறியது.

    தன் அறைக்குள் நுழைய முயன்ற பிரமோத் திரும்பி அம்மாவைப் பார்த்தான்.

    சோபாவில் அமர்ந்திருந்த நீலவேணியும் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து பார்வையைத் திருப்பி மகனைப் பார்த்தாள்.

    நான் திறக்கிறேன்!

    இருப்பா... நான் பார்க்கிறேன். தலைய வலிக்குதுன்னு அலுவலகத்திலிருந்து சீக்கிரமா வந்துட்டே... போய்ப் படுத்து ஓய்வெடு. வேலைக்காரியாதான் இருப்பா... கடைக்கு அனுப்பி இருந்தேன்...! சிரமப்பட்டு எழுந்து சென்று வாயிற் கதவைத் திறந்தாள்.

    கண்ணன் நின்றிருந்தான்.

    வாப்பா...! பிரமோத்... கண்ணன் வந்திருக்கிறான்!

    எப்படிம்மா இருக்கீங்க?

    நல்லாயிருக்கேன்ப்பா... வா... உட்காரு!

    அலோ... வாங்க மாப்பிள்ளே! பிரமோத் சிரித்தபடி வரவேற்றான்.

    சோபாவில் அமர்ந்த கண்ணன் பிரமோத்தின் நண்பன். புகழ் பெற்ற புலனாய்வுப் பத்திரிகையில் நிருபராகப் பணிபுரிபவன். அழைப்பிதழ் தர வந்திருந்தான்.

    சம்பிரதாயமான உபசரிப்புகளுக்குப் பின் திருமண அழைப்பிதழை நீலவேணிக்குக் கொடுத்தான்.

    எனக்குக் கல்யாணம்! அம்மா அப்பா இல்லாத எனக்கு நீங்கதான் எல்லாமுமாக இருந்து நடத்தித் தரணும்!

    ரொம்ப சந்தோஷம்ப்பா... கண்டிப்பா வர்றேன். பேசிக்கிட்டிருங்க... என்றபடி மகனை ஏக்கத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றாள் நீலவேணி.

    பிரமோத் சிரித்துக் கொண்டான். அந்தப் பார்வையின் அர்த்தம் அவனுக்குத்தானே தெரியும்?

    நான் அம்மாவைப் பார்க்கணும்னுதான் வந்தேன். நீயும் வீட்லே இருப்பேன்னு எதிர்பார்க்கலே! அலுவலகம் போகலே நீ?

    தலைவலிப்பா. மூணு மணிக்கே வீட்டுக்கு வந்துட்டேன்.

    சரி... பிரமோத்... நான் புறப்படறேன்... நிறைய வேலையிருக்கு... அவசியம் கல்யாணத்துக்கு வந்துடு!

    நீ பத்திரிகை தரலேன்னாலும் முதல்ல வந்து நிக்கற ஆளு நான்! எல்லாருக்கும் பத்திரிகை வச்சுட்டியா?

    ஒரே ஒரு ஆளுக்குதான் பாக்கி. இப்ப அங்கேதான் போகிறேன்!

    யார் அது?

    எழுத்தாளர் மஞ்சரி வீட்டுக்கு!

    ஆமாம்... நீயும் அடிக்கடி சொல்லிக்கிட்டியிருப்பியே... ரொம்ப பிரபலமோ?

    என்ன இப்படி கேட்டுட்டே? அவங்களுக்குன்னு தனி வாசகர் வட்டமே இருக்குது. ஏன், நீ மஞ்சரியோட கதை ஒண்ணுகூட படிச்சதில்லையா?

    ஊகூம்... கதை படிக்கிறதெல்லாம் வெட்டி வேலைன்னு நினைக்கிறவன் நான். மஞ்சரி ரொம்ப வயசானவங்களா?

    அப்ப... அவங்களைப் போட்டோவுலகூட நீ பார்த்ததில்லே...!

    இல்லே...!

    ஆமா... வயசானவங்கதான்... கல்யாணத்துக்கு வருவாங்க... அறிமுகப்படுத்தறேன்! என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

    கல்யாணம் வரை காத்திருக்கணுமா? இப்பவே அறிமுகப்படுத்தலாமே!

    என்ன சொல்றே பிரமோத்?

    போர் அடிக்குது... நானும் உன்கூட வர்றேனே?

    ம்... என்று சில கணங்கள் யோசித்தவன், சரி... வா! என்றான்.

    ***

    கண்ணனின் பின்னே பைக்கில் தொற்றிக்கொண்ட பிரமோத்தைப் பற்றி மஞ்சரி வீட்டைப் போய்ச் சேர்வதற்குள் சொல்லிவிட வேண்டும்.

    இருபத்தெட்டு வயது வசீகர இளைஞன். திறமை மிக்க பிஸினஸ்மேன். எல்லாத் துறையிலும் ஈடுபட்டு வெற்றிபெற வேண்டும் என்ற ஆசையிருந்தும் நேரமின்மை! குறைந்தது... அந்தத் துறைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஈடுபாடு அதிகம். அதனால் எல்லா மட்டத்திலும் அவனுக்கு ஆண் பெண் பேதமின்றி நிறைய நண்பர்கள் உண்டு. குறும்புப் பேச்சும், கேலியும் கைவந்த கலை.

    ஒரு மாடி வீட்டின் முன் பைக் நின்றது.

    இறங்கு பிரமோத்... இந்த வீடுதான்!

    பழங்காலத்து வீடு போலும். தேக்கு மரக்கதவில் விளக்கேந்திய பெண்களின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது.

    கண்களால் அளந்தான் பிரமோத்.

    கண்ணன் அழைப்பு மணிப் பொத்தானை அழுத்த... ஒரு நிமிடம் கழித்து... கதவு திறக்கப்பட்டது.

    ஐம்பது வயது தாண்டிய பெண்மணியொருவர் கண்ணனைக் கண்டதும் முகத்தில் வியப்பைக் காட்டினார்.

    அடடே... கண்ணன்! வாப்பா... உள்ளே வா. எங்க வீட்டுக்கு வர இப்பத்தான் வழி தெரிஞ்சுதா உனக்கு? ரெண்டு வருஷமிருக்குமில்லே... நீ வந்து!

    வேலை அதிகம்... கூடுதல் பொறுப்பு... அதனாலதான். அப்புறம்... இவன் என்னுடைய நண்பன்... பிரமோத்!

    வணக்கம்மா!

    வணக்கம்ப்பா... வாங்க உட்காருங்க!

    பார்க்க அப்பாவியாய் இருக்கும் இவர்களா எழுத்தாளர் மஞ்சரி? பிரமோத் ஆச்சர்யப்பட்டான்.

    எனக்குக் கல்யாணம்... அவசியம் வந்திடணும்! ஒரு அழைப்பிதழை எடுத்து பவ்யமாய்த் தர... கனகத்தின் முகம் இலேசாக மாறிச் சட்டென இயல்புக்கு வந்தது.

    நல்லது... ரொம்ப சந்தோஷம்ப்பா... இப்பல்லாம் நான் எந்த நிகழ்ச்சியிலேயும் கலந்துக்கறதில்லே... தப்பா நினைச்சுக்காதேப்பா...

    பரவாயில்லேம்மா... மஞ்சரி இல்லையா?

    இருக்கிறா... அனுப்பறேன்! என்று அங்கிருந்து நகர்ந்தாள் கனகம்.

    அப்ப... இவங்க மஞ்சரி இல்லையா? என்றான் அவசரமாய் பிரமோத்.

    கண்ணன் சிரித்தான். அதில் கேலி கலந்திருந்தது.

    இல்லே... கொஞ்ச நேரத்திலே மஞ்சரி வந்திடுவாங்க... பார்க்கத்தானே போகிறே?

    போட்டோ... கீட்டோ மாட்டி வச்சிருக்கமாட்டாங்களா? வரவேற்பறையை நோட்டமிட்டான்.

    அலையாதே பிரமோத்... அதோ வந்தாச்சு!

    ஹலோ...! உற்சாகமாய்க் குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தாள் மஞ்சரி.

    அதிர்ச்சியில் உறைந்து போனான் பிரமோத்.

    அழகான, இளம் பெண்ணாய் எழுத்தாளர் மஞ்சரி இருப்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    சுடிதாரில் எளிமையாய்... நெற்றியில் சின்னப் பொட்டுடன் அடக்கமாய் இருந்தாள்.

    கண்ணன் தன் நண்பனை முட்டாளாக்கிவிட்ட மகிழ்ச்சியுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு, வா... மஞ்சரி! என்றான் ஒருமையில்.

    என்ன கண்ணன், ரொம்ப நாளா ஆளே காணோம்.

    பிஸி... வேறொண்ணுமில்லே. மஞ்சரி... இவன் என் நண்பன்... லெதர் பிஸினஸ் பண்றான். பேரு பிரமோத்.

    பிரமோத்... நீ பார்க்கணும், பேசணும்னு ஆசைப்பட்ட மஞ்சரி இதுதான். தமிழகத்தின் பிரபலமான இளம் எழுத்தாளர்!

    வணக்கம்!

    வணக்கம்!

    மஞ்சரி... எனக்குக் கல்யாணம் முடிவாய்டுச்சு. அவசியம் வரணும்! அழைப்பிதழை நீட்டினான்.

    பாவம்... யாரந்தப் பொண்ணு? சிரித்தபடி கிண்டலடித்த மஞ்சரி பிரித்துப் படித்தாள்.

    கல்யாணம் கொடைக்கானல்லேயா?

    பொண்ணோட சொந்த ஊர். அதனாலதான்!

    ம்... வர முயற்சி பண்றேன்!

    முயற்சிங்கற வார்த்தையே வரக்கூடாது. அவசியம் வரணும். என்னைச் சார்ந்தவங்க உன் வருகையை எதிர்பார்க்கிறாங்க மஞ்சரி... ப்ளீஸ்!

    அட... அதுக்கு ஏன் அழறீங்க? வர்றேன்!

    பேசணும்னு சொன்னியே, பேசேன்!

    அதுவரை அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பிரமோத். கண்ணன் தோளைத் தொட்டதும் கலைந்தான்.

    எப்படி எழுதறீங்க? என்றான் முதல் கேள்வியாய்.

    பிரமாதமான கேள்வி! பேனாவிலேதான்! என்றாள் உதட்டிற்குள் சிரிப்பை மென்று நிதானமாய்.

    ஓஹோ! அவளின் கிண்டலை உணர்ந்து கொண்டான்.

    அதில்லை மிஸ் மஞ்சரி. இவ்வளவு சின்ன வயசுல நிறைய எழுதிப் புகழ் பெற்றிருக்கறீங்க. ஆச்சர்யமான விஷயமல்லவா? ஆங்கில நாவல்களை அதிகம் படிப்பீங்க போலிருக்கு! என்றான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல்.

    சட்டெனக் கோபம் ஏறியது மஞ்சரிக்கு. கட்டுப்படுத்திக் கொண்டாள்.

    கண்ணனுக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது.

    உங்க நண்பருக்கு என்னைப்பற்றி அதிகம் தெரியலேன்னு நினைக்கிறேன். எனினும் உங்க தைரியத்தைப் பாராட்டறேன்! என்றாள் கண்ணனையும், பிரமோத்தையும் பார்த்து.

    இப்ப என்ன எழுதிட்டிருக்கீங்க மிஸ் மஞ்சரி? என்றான் பிரமோத்.

    என் படைப்புகளை வாசிச்சிருக்கீங்களா? அவன் கேட்டதற்குப் பதில் தராமல் எதிர்க் கேள்வி கேட்டாள்.

    என்ன இப்படி கேட்டுட்டீங்க? ஒரு சிலதைத் தவிர எல்லாத்தையும் படிச்சிருக்கேன்!

    விட்டால் பொய்யை அடுக்கிக்கொண்டே போவான் என்றுணர்ந்த கண்ணன் இடைமறித்தான்.

    சமீபத்திலே, உனக்குக் கிடைக்கவிருந்த விருதை வேண்டாம்னு மறுத்திட்டியாமே! ஏன் மஞ்சரி? படைப்பாளிகளுக்கு இது போன்ற விருதுகள் கவுரவமானதல்லவா?

    மஞ்சரி புன்னகைத்தாள்.

    நீங்கள் சொல்றது சரிதான் கண்ணன். ஆனா, அம்மாவோட உடல் நிலை சரியில்லே. ஏற்கெனவே பல பிரச்னைகள். போதாததற்கு அக்காவின் எதிர்பாராத மரணம்... வெகுவாய்ப் பாதிக்கப்பட்டிருக்காங்க. அவங்களை விட்டுட்டு என்னால எங்கேயும் போக முடியலே. விருது வழங்கற விழா திருச்சியிலே! அம்மாவை விட்டுட்டு முழுசா ஒருநாள்கூட என்னால பிரிஞ்சிருக்க முடியாது. அம்மாவை விட விருது எனக்கு முக்கியமில்லே! என்றாள் உணர்ச்சிவயப்பட்ட குரலில்.

    அதுவரை அவளைக் கலாய்த்துக் கொண்டிருந்த பிரமோத்... மரியாதையுடன் மஞ்சரியை நோக்கினான்.

    2

    காதல் கிளியொன்று - என்

    இதயம் வரை சென்று

    பூக்கள் மலர்வதுபோல் - என்னைப்

    புதுப்பித்துப் பறக்கிறதே!

    என்ன பிரமோத்... அமைதியாய்ட்டே? காபியை மெல்ல உறிஞ்சியபடி கேட்டான் கண்ணன்.

    அவர்கள் அமர்ந்திருந்த இடம் ரெஸ்டாரண்ட்!

    ஆழ்ந்த யோசனையில் ஆட்பட்டிருந்த பிரமோத், கண்ணன் மீண்டும் பெயர் சொல்லி அழைத்தபோதுதான் இயல்பிற்குத் திரும்பினான்.

    அ... என்ன கேட்டே?

    சரியாப் போச்சு. என்னாச்சு உனக்கு?

    ரொம்ப வித்தியாசமான பெண்!

    யாரைச் சொல்றே? சுற்றுமுற்றும் பார்த்தான்.

    மஞ்சரி... மஞ்சரியைச் சொன்னேன்!

    என்ன வித்தியாசம்? எல்லாப் பொண்ணுங்களைப் போலவே இரண்டு கண், இரண்டு காது, ஒரு மூக்குன்னு...

    பத்திரிகைக்காரன் இவ்வளவு மட்டமா, சிரிக்கவே முடியாத ஜோக்கெல்லாம் அடிக்கக்கூடாது.

    ஏதேது... சீரியஸாய் பேசறதைப் பார்த்தா... மஞ்சரியைப் பார்த்ததும் லவ் ஆரம்பிச்சிட்ட மாதிரி தெரியுது.

    சேச்சே... ஒரு பொண்ணைப் பத்தி பேசினா லவ்வாதான் இருக்கணும்னு நினைக்கறது உயர்ந்த முட்டாள்தனம்!

    பின்னே... அவளை ரொம்பவே கலாய்ச்சே?

    அது சும்மா... விளையாட்டுக்கு. நீ சொன்னதை வச்சு... தலை நரைச்ச வயசான பெண்மணிய கற்பனை செய்து எதிர்பார்த்திருந்தா... வந்தது... வாளிப்பான பருவப் பெண். பொதுவா... குறுகிய காலத்திலேயே சாதிச்சவங்ககிட்டே கொஞ்சம் தலைக்கனம் இருக்கும். அதுவும் பொம்பளையா இருந்தா... சொல்லவே வேணாம். அதுக்காகத்தான் சீண்டிப் பார்த்தேன். ஆனா, அதுக்குப் பிறகு, நான் பேசினதுக்காக ரொம்பவே வருத்தப்பட்டேன்.

    ஏன்?

    காசு கொடுத்து விருது வாங்கற இந்தக் காலத்திலே, கிடைச்ச விருதை அம்மாவுக்காக வேண்டாம்னு ஒதுக்கின அந்தப் பாசம்... எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.

    சரி... அவளை விடு! மலேஷியாவுல ஒரு பிஸினஸ் துவங்கப் போறதாகச் சொல்லிக்கிட்டிருந்தியே... பேச்சு எந்தளவுல இருக்கு?

    கிட்டத்தட்ட முடிவான மாதிரிதான்!

    அப்ப அடிக்கடி இந்தியாவுக்கும், மலேஷியாவுக்கும் பறக்கப் போகிறே!

    ...!?

    என்ன மறுபடி மவுனம்?

    நான் ஒண்ணு கேட்பேன்... ஆனா, தப்பா நினைச்சிடக் கூடாது.

    "தப்பா கேட்கணும்னு

    Enjoying the preview?
    Page 1 of 1