Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ingeyuma Nee?
Ingeyuma Nee?
Ingeyuma Nee?
Ebook128 pages48 minutes

Ingeyuma Nee?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

N.C. Mohandoss has written more than 300 novels, more than 500 short stories, 23 novelettes, more than 3000 articles and 4 TV dramas. He has written on social topics and has to his credit more than 100 books published which have appeared in all leading Tamil magazines and newspapers. His writings are dedicatd for the students of Annamalai university tamilnadu for reaserach to obtain Phd.

N.C.Mohandoss has been conffered with doctorate for community services by The world tamil university, Meryland.

Mohandoss attributes his inspiration to the popular "Thuglak" magazine and reveres "Saavi" who encouraged him to write more and more. His success is also due to the efforts of Mr Ramesh of 'DinaMalar' and the constant support and guidance of his friend, Mr Manohar.

N.C.Mohandoss as the Founder of INDIAN FRONTLINERS, KUWAIT, a SERVICE Organisation registered with the Indian Embassy, Kuwait, has pioneered a number of social service activities and extended financial help to several orphanages, hospitals, and senior citizen homes, poor students for their educational and also for the welfare of stranded Indian workers in Kuwait.

Awarded by Dr.Kalam :

At the diamond jubilee of Anbu Paalam service organization function held on 4th oct 2013 --In acknowledgement of the support and assistance extended by NC.Mohandoss to ‘Anbu Paalam’ for the past 20 years, Dr .Kalam felicitated Founder & Writer N.C.Mohandoss with a Momento and Gold Medal . (matter and photo attached).

Mohandoss has also compiled, edited and released 23 parts of FRONTLINERS book, on Talented Indians in Kuwait, India tourism, Indian Embassy services, Indian educational institutions in Kuwait ,community services,Indian Achievers Globally and about Enviroment protection.

Mohandoss hails from a remote village called Nambukuruchy in Tiruchi District, Tamil Nadu which still lacks the post office.

He is working for Kuwait National Petroleum Company . Mohandoss feels a sense of pride in owning that his success is due to the support, patience and guidance of his wife ARULMOZHI, and their only daughter VINU, who correctly reads his mind and reflects his ambitions and aspirations in every way

Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580132405488
Ingeyuma Nee?

Read more from Nc. Mohandoss

Related to Ingeyuma Nee?

Related ebooks

Reviews for Ingeyuma Nee?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ingeyuma Nee? - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    இங்கேயுமா நீ?

    Ingeyuma Nee?

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அன்பே... நீ

    ஒரு கோடி நிலவென ஒளிர்கின்ற அழகோ

    கருங்கூந்தல் முகிலென தவழ்கின்ற எழிலோ

    முகமென்ற தாமரை மலர்கின்ற மலரோ

    மல்லிகை பற்கள் ஒளிவீசும் முத்தோ?

    விடியும் போதே எர்ணாகுளத்தின் ரோடுகளை மழைத் துளிகள் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தன. மழை என்பதற்காக ஜனங்கள் ஸ்தம்பித்து விடவில்லை. பால்பூத்தில் நிற்பதும், பச்சைகறி வாங்குவதுமாகதானிருந்தனர்.

    தினுசு தினுசான பெண்கள் தங்களின் அடர்ந்த முடியையும் மார்புகளையும் கடைக்குள் குறுக்கிக் கொண்டு படிப்பிற்கும் அலுவலுக்கும் தயாராகிக் கொண்டிருந்தனர். சிவப்பு சிவப்பாய் பஸ்கள் உறுமின ஓடின.

    அது பணம் பள்ளி நகர். பணக்கார பங்களாக்கள் நிறைந்த பகுதி. அந்த வீட்டின் ஜன்னல் வழி மலையாள மனோரமா வீசியெறியப்பட்ட போது லதா கமகம காப்பியுடன் ராமனாதனின் அறைக்குள் பிரவேசித்தாள்.

    அவள் தன் ஈர முடியை முதுகில் விசிரியிருந்தாள். கேரள பாணியில் சட்டையும் ஸ்கர்டும் அணிந்து நெற்றியில் சந்தனக்குறி இட்டிருந்தாள்.

    டீபாயில் காபியை வைத்துவிட்டு, குட்மார்னிங் அன்ட் ஹாப்பி பர்த்டே சார்!

    ராமனாதன் அந்த இனிமையான குரலில் கண் விழித்து கண்ணாடிக்கு தடவ, எடுத்து நீட்டினாள். தாங்க்யூம்மா என்று வாங்கி மாட்டிக் கொண்டார். பக்கத்து படுக்கையை பார்க்க, அம்மா எப்பவோ எழுந்து பூஜை பண்ணிட்டிருக்காங்க!

    அவளது மங்கள முகமும் ஐஸ்வர்ய பார்வையும் அவருக்கு இதம் தந்தன. தினம் தினம் இப்படி ஒரு சுந்தரியின் முகத்தில் விழிப்பது சுகம் பாக்கியம்!

    ராமனாதனுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம். அங்கு பிசினஸிற்காக செட்டிலாகி ரொம்ப வருடங்களாகிறது. வசதி ஏற ஏற சுகரும் ஏறுகிறேன் என்று ஏறி சமீபத்தில் அவரது கால்களை வெட்டும்படியாயிற்று.

    கால்கள் போனால் கூட அவரது திறமையும் சுறுசுறுப்பும் போய்விடவில்லை. வீட்டிலிருந்தபடியே பிசினஸ்களை கவனிக்க ஆரம்பித்தார். வீட்டிற்குள்ளேயே இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டு அங்கே ஒரு மினி அலுவலகம்!

    முதலில் லதா அங்கு டைப்பிஸ்டாகதான் சேர்ந்திருந்தாள். வெளியே ஹாஸ்டலில் தங்கி ஒன்பது மணிக்கு வந்து ஆறு மணிக்குப் போவாள்.

    அவளுடைய சேவை அலுவலகம் என்றில்லாமல் வீட்டினருக்கெல்லாம் தேவைப்பட்டதால் எதற்காக ஹாஸ்டலில் தங்க வேண்டும்... பேசாமல் எங்களுடனேயே இருந்து விடேன் என்று சொல்லி அவளுக்கு மறுக்க வாய்ப்புத் தராமல் பிடித்து இருத்திக் கொண்டனர்.

    அதன் பிறகு அந்த வீட்டில் எல்லாமே லதா தான். எல்லோருக்குமே லதா வேண்டும். அவளது பொறுமையும் பொறுப்பும் அவர்களை திகைக்க வைத்தன. அவளின் மேலிருந்த ஈடுபாட்டை அதிகபடுத்தின.

    ஐந்திலிருந்து ஒன்பது வரை அவள் குடும்ப நிர்வாகி. மாலை ஐந்து வரை டைப்பிஸ்ட் கம் செகரட்டரி, அப்புறம் திரும்ப குடும்ப பொறுப்பு. ராமனாதன் மட்டுமில்லை லட்சுமியம்மாளும் அவளுடன் ஐக்யமாகிப் போனாள். வாய்த்தால் இப்படி ஒரு மருமகள் வாய்க்க வேண்டும் என்று அவள் ஆசைபட, ராமனாதன், ஏன் இவளையே மருமகளாக்கிக் கொள்ளேன் என்பார்.

    அதுக்கு நம்ம பிரகாஷ் சம்மதிக்கணுமே!

    அவன் எம்.பி.ஏ முடிச்சு வரட்டும் சம்மதிக்க வைக்கிறேன்

    பிரகாஷ் கல்கத்தாவில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு லதாவின் மேல் ஒரு கண் தான்.

    என்ன சார் அப்படி பார்க்கறீங்க? லதா புன்னகையுடன் அவரது சிந்தனையை கலைத்தாள். காபி இனிக்கு தேன்னா? இன்னைக்கு பர்த்டேங்கிறதால சட்டம் தளர்த்தப்பட்டு அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ள உத்தரவு!

    அதற்குள் குக்கர் விஷ்... விஷ் என்க, குக்கர்கூட உங்களை விஷ் பண்ணுகிறது சார்! என்று உள்ளே ஓடினாள்.

    காபி ரெடியாக்கா? தேவி தன் தழுதழுத்த மேனியை சோம்பல் முறித்துக் கொண்டு கிச்சனிற்கு வந்தாள். அவள் கடை குட்டி. அவளுக்கு கலந்து கொடுத்த போது போன் அழைத்தது.

    லட்சுமியம்மாள் பூஜையறையிலிருந்து, தேவி! அதை எடேன்!

    நான் காபி குடிக்கிறேம்மா. டிஸ்டர்ப் பண்ணாதே!

    நான் எடுக்கறேம்மா என்று போனை அட்டென் பண்ணினவளின் முகம் சிவந்தது. விரிந்தது. அல்லது சிவந்து விரிந்து விரிந்துக் கொண்டே சிவந்தது.

    மறுமுனையில் பிரகாஷ் தான் பேசினான். இல்லை கொஞ்சினான். முத்தம் பார்சல் பண்ணினான். லதா! ஹவ் ஆர் யூ? ஃபைன் தானே? என்ன பண்ணிட்டிருக்கே? அம்மா எங்கே? ஒரு கவிதை சொல்லட்டுமா?

    அவளது அனுமதிக்கு காத்திராமல் இனியவளே! உன் கார் கூந்தலை காயவிட்டது போதும்! பார்... கார்த்திகை மேகமோ என்று களிப்படைகின்றன மயில்கள்!

    அதற்குள் அம்மா வந்துவிட லதா அவளிடம் போனை கொடுத்து விட்டு சிரித்தபடி ஓடிப்போனாள். அது அறியாமல் அவன், பாரி வாரி கொடுத்த தேரில் படர்ந்த கொடி எப்போது உன் இடையானது? என்க

    லட்சுமி தன் காதை பொத்திக் கொண்டு தன் தடித்த இடையை பார்த்துக் கொண்டு, ஏய்... ஏய் என்று கத்தினாள். காலங் கார்த்தால இது என்னடா அசட்டு பிசட்டுன்னு?

    அம்மா! நீயா? உனக்கு இடுப்பு வலி சரியா போச்சா? வந்து... அப்பாவுக்கு ஹாப்பி பர்த்டே சொல்லலாம்னு போன் பண்ணினால்... கொஞ்ச முன்னாடி கரகரன்னு பேசினது யாரும்மா?

    உனக்கு தெரியாதில்லே?

    சத்யமா தெரியலே.

    அது ஏதாச்சும் கிராஸ் டாக் பொண்ணா இருக்கும். எஸ்.டி.டியில் ஏறிகிட்டே போகும். வச்சுடறியா?

    *****

    2

    போராடும் விழிகள் நீராடும் சேலோ

    கூராடும் புருவம் சேரனின் வில்லோ

    இல்லென்று சொல்லும் இடையிங்கு கொடியோ

    நில்லென்று சொல்லும் நெஞ்சங்கள் கனியோ?

    சௌத் ஜங்ஷன்.

    நான் கரெக்ட் டையமிற்கு வந்துட்டேனாக்கும் என்று கொச்சின் எக்ஸ்பிரஸ் எட்டு மணிக்கு ஸ்டேஷனை அரவணைத்துக் கொள்ள, பிளாட்பாரம் கசகசத்தது. பத்து நிமிட சலசலப்பு, கூலிகளின் துரத்தல், ‘காப்பிச் சாயா'வுக்குப் பிறகு

    அவன் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் பெட்டியிலிருந்து இறங்கினான். உதடுகளிடம் நெருங்கிவிட்ட பீடியை துப்பிவிட்டு தாடியை சொறிந்துக் கொண்டான் அவன் சற்று தடிமனாயிருந்தான். புதர்கணக்காய் தாடி வைத்திருந்தான் கேஸ் கிடைக்காத போலீஸ்கள் தேவை என்றால் அவனை நக்ஸலைட் என்று சொல்லி இரண்டு நாட்களுக்கு உள்ளேக்கூட வைக்கலாம்.

    அவனது முகத்தில் அத்தனை இறுக்கம். கண்களில் குரூரத்தை பதுக்கியிருந்தான். வெளியே வந்து லோக்கல் கால் பண்ணினான். பிறகு ஆட்டோ பிடித்து துவாரஹா ஹோட்டலுக்கு விடு என்றான்.

    இங்கே கேரளத்து

    Enjoying the preview?
    Page 1 of 1