Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaa Kaanum Ullam
Kanaa Kaanum Ullam
Kanaa Kaanum Ullam
Ebook267 pages1 hour

Kanaa Kaanum Ullam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதல் என்பது பல சந்தர்ப்பங்களில் விரும்பத்தகாத ஒன்றாகவே கருதப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுகிறது.

இளம் வயது பெண்களுக்கு இனக்கவர்ச்சியில் காதல் எது, காரியம் எது என பிரித்தறிய முடியாத சூழ்நிலை ஏற்படுவது சகஜம்.

ஆனால் இங்கே சகஜமான விஷயம்கூட அதிக அன்பினாலும் அதிக பயத்தாலும் தாயின் அடக்கு முறையால் ஆவேசமாய் உருவெடுத்து-பூகம்பமாய் வெடிக்கிறது.

ஒரு தாய்க்கு மகள் மேல் அதிகப்படி பாசமும், நேசமும் காட்ட வேண்டியது அவசியம்தான். அது எந்த அளவிற்கு என்பதை வரையறை செய்து கொண்டால் வேண்டாத பிரச்னைகளைத் தவிர்க்கலாமே!

- என்.சி. மோகன்தாஸ்.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580132405797
Kanaa Kaanum Ullam

Read more from Nc. Mohandoss

Related to Kanaa Kaanum Ullam

Related ebooks

Reviews for Kanaa Kaanum Ullam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaa Kaanum Ullam - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    கனாக் காணும் உள்ளம்

    Kanaa Kaanum Ullam

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author//nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    முன்னுரை

    படித்த பின் உரை

    ஒரு எழுத்தாளர் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதை எப்படி எழுதுகிறார் என்பது மிக முக்கியம்.

    தொடர்கதையாக எழுதுகிறவர்கள் எல்லாருமே வாசகர்களை அடுத்த வாரத்திற்குள் ஒரு எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைக்க, ஒவ்வொரு வாரமும் ஒரு 'பன்ச்' கொடுத்து 'தொடரும்' என்று போட வைக்கும் ஒரு உத்தியை (அல்லது இலக்கணத்தை) நீண்ட காலமாகக் கையாண்டு வருகின்றனர். என்.சி. மோகன்தாசும் இதை நன்றாகவே செய்திருக்கிறார்.

    ஒரு பதினைந்து வயது சிறுமி, ஒரு பதினெட்டு வயது பையன் இவர்களின் விடலைப் பருவ மனநிலையை மையக்கருத்தாகக் கொண்டதே இந்நாவல்.

    இரண்டு பேர் காதலிக்கிறார்கள் என்றாலே அதற்கு ஏதாவது ஒரு ரூபத்தில் எதிர்ப்பு நிச்சயம் இருக்கத் தான் செய்யும் - சுவாரஸ்யமே அப்போதுதானே?

    இந்த நாவலிலும் இந்த எதிர்ப்பு முதலில் பெண்ணின் தாய் மூலமாக ஆரம்பித்து, பின் படிப்படியாக அவளின் தந்தை மூலம் தலை நீட்டுவது மிக இயல்பாக வெளிப்பட்டிருக்கிறது.

    காதலின் எதிர்ப்புக்கு அல்லது அங்கீகரிக்க மறுப்பதற்குக் காரணங்கள் ஒன்று ஜாதியாக இருக்க வேண்டும் அல்லது பொருளாதார இடைவெளியாக இருந்தாக வேண்டும்.

    இந்தக் கதையிலும் பொருளாதார அளவைக் காரணம் காட்டி இரண்டு இளம் உள்ளங்களை கண்ணாடியைக் கல் எறிந்து உடைப்பது போல் நொறுக்குகிறார்கள்.

    கதாநாயகன் ஊரை விட்டே வெளியேறி, பம்பாய் சென்று, பெரிய பணக்காரன் ஆகிறான். தன் மனதுக்குப் பிடித்தவளின் கரம் பிடிக்க ஒவ்வொரு ஆணும் ஒரு ஆக்ரோஷத்துடன் தன் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள ஆசைப்படுவது இயற்கையே. ஆனால் யதார்த்தமான வாழ்க்கையில் அதுவும் இந்த சமூக அமைப்பில் சட்டென்று ஒரு குறுகிய காலகட்டத்துக்குள் எந்த ஒரு மனிதனாலும் சுலபமாக முன்னேறிவிட முடிவதில்லை என்பது நிதர்சன உண்மை. அதுவும் பம்பாயில் கார், பங்களா வாங்கி வாழக்கூடிய அளவிற்கு முன்னேறுகிறான் என்பது இந்நாவலின் ஒரு சிறிய நெருடல்.

    ஒரு வேளை முயன்றால் எல்லோராலுமே உயர்ந்து விட முடியும் என்கிற 'பாசிடிவ்' அப்ரோச்சை optimistic கருத்தைச் சொல்ல வேண்டும் என்கிற ஒரு நல்ல எண்ணமோ கதாசிரியருக்கு?

    தெற்கே லால்குடியில் கதை நடக்கும் போது ஒரு இளம் ஜோடியின் காதல் கதையாக ஆரம்பமாகி, கதை பம்பாய்க்கு மாற்றலாகிப் போனதும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் பார்க்கும் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது நாவல்.

    மோகன்தாசை பொறுத்தவரை அவர் இந்த உத்தியில் நிச்சயம் வெற்றி கண்டிருக்கிறார் என்று பாராட்டலாம்.

    நாவல் முழுவதும் எளிமையான இயல்பான தமிழ் நடை, கதாபாத்திரங்கள் உரையாடும்போது பயன்படுத்தின ஆங்கில வார்த்தைகள் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் நாவலாசிரியரின் வர்ணனையிலும் ஏன் ஆங்கிலச் சொற்கள் ஆங்கங்கே எட்டிப் பார்க்கின்றன என்றுதான் புரியவில்லை. இதைச் சற்று கவனத்துடன் தவிர்த்திருக்கலாம் ஆசிரியர்.

    இந்த நாவலில் மிகவும் பாராட்டத்தக்க ஒரு அம்சம் ஒன்று சூட்சுமமாக அடங்கியுள்ளது.

    'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்கிற பத்தாம்பசலித்தனமான பெண் மனப்போக்கை கதாநாயகி சுபர்ணா மூலம் உடைத்தெறிய முயற்சித்திருக்கிறார் கதாசிரியர்.

    தன் காதலன் மாறிவிட்டானா? 'பழைய நாகுவாக இல்லாமல் அயோக்கியன் மாதிரி இருக்கிறானே' என்கிற சந்தேகம் வரும்போது நாயகி, தன் காதலை தியாகம் செய்யத் துணிகிறாள். அட்சடுத்தனமாக அவனை எப்படியாவது திருத்தி விடுவேன் என்று சராசரிப் பெண்ணாக அவளைச் சித்தரிக்காமல், சற்று உயர்த்தி 'புதுமைப் பெண்' என்கிற மறுபக்கத்தை தந்த கதாசிரியர் பாராட்டுக்குரியவர்.

    இந்த நாவல், விரைவு வண்டி வகையைச் சேர்ந்தது. அதாவது டி.வி. மெட்ரோ சானல் மாதிரி எழும்பூரில் ரயில் புறப்படும் போது இந்த நாவலை கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தால், நடுவில் எங்கேயும் கவனம் திரும்பாமல், செங்கல்பட்டில் இறங்கும் போது நாவலை ஒரே மூச்சில் முடித்திருப்போம் என்பது உண்மை-எக்ஸ்பிரஸ் வேகம், எளிய நடை... இன்றைய நாவல் கலையின் கண்ணாடி பிம்பம்

    எம். ஜி. வல்லபன்

    8, வள்ளலார் தெரு,

    எம். ஜி. ஆர். நகர்,

    சென்னை-78.

    *****

    என்னுரை

    காதல் என்பது பல சந்தர்ப்பங்களில் விரும்பத்தகாத ஒன்றாகவே கருதப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுகிறது.

    இளம் வயது பெண்களுக்கு இனக்கவர்ச்சியில் காதல் எது, காரியம் எது என பிரித்தறிய முடியாத சூழ்நிலை ஏற்படுவது சகஜம்.

    ஆனால் இங்கே சகஜமான விஷயம்கூட அதிக அன்பினாலும் அதிக பயத்தாலும் தாயின் அடக்கு முறையால் ஆவேசமாய் உருவெடுத்து-பூகம்பமாய் வெடிக்கிறது.

    ஒரு தாய்க்கு மகள் மேல் அதிகப்படி பாசமும், நேசமும் காட்ட வேண்டியது அவசியம்தான். அது எந்த அளவிற்கு என்பதை வரையறை செய்து கொண்டால் வேண்டாத பிரச்னைகளைத் தவிர்க்கலாமே!

    நன்றி.

    அன்புடன்,

    என்.சி. மோகன்தாஸ்.

    *****

    1

    என்

    இதயத்தை திருடாதே என்றேன்

    சரி என்றவள்

    நண்பனின் இதயத்தையன்றோ

    திருடிவிட்டாள்!

    - பெரம்பலூர் தேவ பிரகாஷ்

    விடியும் போதே லால்குடியின் தெருக்கள் சுத்தமாய் பெருக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பஸ் ஸ்டாண்டில் குதிரை வண்டிகள் நிறுத்தப்பட்டு செருமின. தெருக்களில் காய்கறிகளும், பழங்களும் கியூ பிடித்துக் கொண்டிருந்தன.

    அரியலூர், ஜெயங்கொண்டம், திருமழபாடி, புள்ளம்பாடி, டால்மியா, தஞ்சாவூர், இந்த பக்கம் திருச்சி என்று பஸ்கள் இரைச்சலுடன் கிளம்பிக் கொண்டிருந்தன.

    திருச்சி ரோடில் இருந்த அந்த வீடு சற்றுப் பெரிதாகவும் பங்களா என்று சொல்ல முடியாத அளவிற்கு சற்று சிறியதாகவும் இருந்தது. வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்கள் வானத்தை அண்ணாந்திருந்தன.

    பின்பக்கம் எங்கு பார்த்தாலும் பசுமையாயிருந்தது. காவிரியின் செழுமை நெற்பயிர்களில் தெரிந்தது. ராத்திரி பெய்த பனி முத்துக்கள் சூரிய ஒளிக்காக பயந்து கொண்டிருந்தன.

    ரேடியோவில் நாதஸ்வரமும் தொடர்ந்து பக்திப் பாடல்களும் ஒலிக்க அறைக்குள் சுபர்ணா சுகமாய்ப் படுத்திருந்தாள். அவள் அணிந்திருந்த நைட்டி சற்று விலகி கால்களின் வளமை வெளியே தெரிந்தது.

    அவள் தலையணையை மார்போடும், கால்களோடும் அணைத்திருந்தாள். அப்போது சிருங்கேஸ்வரி ஈரத்தலையில் டவலை சுற்றிக் கொண்டு வந்து, ஏய்... சுபர்ணா! என்று அவளை தட்டினாள்.

    தட்டிவிட்டு பீரோ கண்ணாடியின் முன் நின்று பொட்டு வைத்துக் கொண்டு, சாமி படத்திற்கு விளக்கேற்றி நமஸ்கரித்தாள். ஊதுபத்தி பத்த வைத்து, சுபர்ணா... சுபர்ணா!

    என்னம்மா...? என்று அவள் சிணுங்கினாளே தவிர எழவில்லை. கண்களைத் திறக்கவில்லை. இன்னும் கொஞ்சம்கூட வலுவாய் தலையணையைக் கட்டிக் கொண்டாள்.

    எழுந்திரிடி! நேரம் என்னாச்சுத் தெரியுமா...?

    என்னாச்சு?

    கண்ணைத் திறந்து வெளியே பார்! வெயில் காய்கிறது!

    சுபர்ணா, என்னம்மா நீ... தூங்கக்கூட விடமாட்டேன்கறே...? என்று எழுந்து கண்களைக் கசக்கினாள். ஜன்னல் வழி வந்த வெளிச்சம் அவளுக்குக் கூசிற்று.

    தூங்கித் தூங்கி உனக்கு சொகுசு ஜாஸ்தியாப் போச்சு! குளிச்சு ரெடியாகி ஸ்கூலுக்குப் போக வேணாமா... நீ...?

    ஸ்கூலுக்கா... இன்னைக்கு ஸ்கூல் லீவாச்சே!

    ஆமா... லீவ்! ராத்திரி கனவுல வந்து யாராச்சும் லீவ் விட்டிருப்பாங்க! சுடு தண்ணி ரெடியாயிருக்கு. போ!

    அம்மா காபி!

    பொட்டைப் பிள்ளையா லட்சணமா எழுந்து போய் முகம் அலம்பிட்டு, பல் தேய்ச்சுட்டு நீயே கலந்து குடி!

    என்னம்மா நீ...? என்று அவள் சிணுங்க, அதற்குள் சிருங்கேஸ்வரி அங்கிருந்து வெளியேறியிருந்தாள்.

    சுபர்ணாவிற்கு அலுப்பாயிருந்தது. இன்னும் கொஞ்சம் தூங்கினால் தேவலாம் போலிருந்தது. ஆனால் அதற்குள் மணி ஏழு ஆகிவிட்டிருந்தது. இன்று ஸ்கூல் போகாமல் கட் அடித்துவிடலாமா என்று கூட நினைத்தாள்.

    'இன்று ஸ்கூல் லீவ் விடமாட்டார்களா... யாராச்சும் ஸ்டிரைக்கோ இல்லை பந்த்தோ அல்லது சாலை மறியலோ பண்ணமாட்டார்களா?’ என்றிருந்தது அவளுக்கு.

    அவளுக்கு பதினைந்து வயது. பத்தாங்கிளாஸ் படிக்கிறாள். பதினைந்திற்கு வேண்டிய மதர்ப்பும், வனப்பும் அவளிடம் இருந்தன. அவள் திருச்சியில் படித்து, ரயிலில் பாஸ் வாங்கி தினசரி போய் வந்தாள்.

    அப்பாவின் செல்வமும், அவர் கொடுத்து வந்த செல்லமும் அவளை சுகவாசியாக்கிவிட்டிருந்தன. உங்க பொண்ணுக்கு எதிரி வேறு யாருமில்லை, நீங்கதான்! செல்லங்கொடுத்து, செல்லங்கொடுத்து அவளை நீங்க கெடுத்திடறீங்க! என்று அம்மா அவரைக் கடிந்துக் கொள்வாள்.

    உடன் சுபர்ணாவிற்கு அம்மாவின் மேல் கோபம் வரும். இந்த அம்மாவே இப்படித்தான். எதற்கெடுத்தாலும் சிடுசிடுப்பு! அம்மாவிற்கு சிரித்துப் பேசவே தெரியாதோ என்று நினைப்பாள்.

    சுபர்ணா எழுந்து உடலை முறுக்கிய போது, பீரோ கண்ணாடியில் நைட்டியின் உள்ளே, உடலின் செழுமை தெரிந்தது. அதை பார்க்கப் பார்க்க அவளுக்கு சிலிர்த்தது. நாம் இவ்ளோ சிகப்பா... இவ்ளோ அழகா... என்று வியந்துப் போனாள்.

    முகத்தில் எண்ணெய்ப் பசையைத் துடைத்த போது நெற்றியில் பரு முளைத்திருப்பது தெரிந்தது. அதைக் கிள்ளி எறிவோமா... என நினைத்து வேண்டாம், அப்புறம் கன்னம் முழுக்கப் பரவிவிடும் என்று விட்டு வைத்தாள்.

    சீப்பு எடுத்து பொசபொசவென இருந்த முடியை வாரி ஒதுக்கினாள். கண்ணாடியில் சைடாய் நின்று அழகு பார்த்த போது அவளுக்கே பிரமிப்பாயிருந்தது. தன்னுடலில் நாளுக்கு நாள் வித்யாசம் - வனப்பு கூடிக் கொண்டேயிருப்பதாய்பட்டது அவளுக்கு. டவல் எடுத்துக் கொண்டு பாத்ரூம் போனாள். அங்கே சன்ஷேட் ஜன்னலை விலக்க, கோடு கோடாய் வெளிச்சம் உள்ளே வந்தது. பல்லை பிரஷ் பண்ணிக் கொண்டு மைக்கா கண்ணாடி வழியே தோட்டத்தை நோட்டமிட்டாள்.

    அங்கே நாகேந்திரன் லுங்கியுடனும், கழுத்தில் துண்டுடனும் தோட்டத்தில் பூச்செடிக்களுக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தான். அவனுடைய முடி ஈரத்துடன் சிலுப்பிக் கொண்டிருந்தது.

    நாகு காலேஜ் படிக்கிறான். அவன் அவளுக்கு தூரத்து சொந்தம். சிவகாசியில் அவனுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவனை அவளது அப்பாதான் அழைத்து வந்து வீட்டோடு வைத்துக் கொண்டார்.

    அவன் இந்த வீட்டிற்கு வந்து பத்து வருடங்கள் இருக்கும். அன்றிலிருந்து இன்றுவரை அவர்களுடைய குடும்பத்து அங்கத்தினன் போலவே ஒன்றாகப் பழகி, பேசி, சாப்பிட்டு, தன் படிப்பையும் கவனித்து வருகிறான்.

    அவன் சுபர்ணாவைவிட கெட்டிக்காரன். அவளைப் போல சோம்பல் இல்லாதவன். காலேஜ் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வீட்டில் ஏதாவது செய்துக் கொண்டுதானிருப்பான்.

    தோட்டம், பராமரிப்பு, கார் துடைத்தல், காய்கறி, மளிகை வாங்கி வந்து தருவது ரேஷன், பால்கார்டு, என்று எல்லாமே அவன் தான். அப்பாவுக்கு வேண்டிய ஒத்தாசைகளும் செய்து தருவான். சமயத்தில் அவரது பிசினஸ் கணக்கு-வழக்குகளைக் கூட சரி பார்ப்பான். அதனால் அப்பாவிற்கு அவனை ரொம்பப் பிடிக்கும். அவன் அவருக்கு செல்லப் பிள்ளை.

    நாகு... நாகு என்று அவனை அவர் வைத்த இடத்தில் வைக்க மாட்டார். சுபர்ணாவிற்கு துணி எடுக்கும் போதெல்லாம் அவனுக்கும் எடுத்துத் தருவார். வேண்டாம் சார் எனக்கு இருக்கிறது போதும் என்று அவன் மறுப்பான்.

    நீ முதல்ல 'சார்'ன்னு கூப்பிட்டு என்னை அந்நியப்படுத்தறதை நிறுத்து!

    அப்புறம் நான் உங்களை எப்படிக் கூப்பிடுவேன்!

    ஏன்-வையாபுரின்னே பெயர் சொல்லி கூப்பிடேன்!

    போங்க சார்! உங்களோட வயசென்ன, அனுபவமென்ன... என்று அவன் சங்கோஜப்படுவான்.

    அப்போ சரி, உனக்கு மரியாதையா கூப்பிடணும் அவ்ளோதானே... அங்கிள்னு கூப்பிடு, அல்லது மாமா!

    சரிங்க அங்கிள் மாமா! என்று சிரிப்பான்.

    அவனும் திருச்சியில்தான் படித்து சுபர்ணாவுடன் ரயிலில்தான் போய் வந்தான். அவனை நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும். இவனால் எப்படி இத்தனை சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது? சதா வேலை செய்துக் கொண்டிருக்கிறான். எந்த நேரத்தில் தான் படிக்கிறானோ தெரியாது. ஆனால் பரீட்சைகளிளெல்லாம் நல்ல மார்க்கு வாங்கி விடுகிறான். நாமும் தான் சொகுசாய் இருக்கிறோம். விழுந்து விழுந்து படித்துப் பார்க்கிறோம். படிப்பே, ஏற மாட்டேன்கிறதே என்று நினைத்து வருந்துவாள்.

    ஒரு வேளை சொகுசிற்கும் படிப்பிற்கும் ரொம்ப தூரமோ? நாம் நன்றாய் படிக்க வேண்டும், படித்து வேலைக்கு போனால்தான் பிழைக்க முடியும் என்கிற நிர்பந்தத்தில் நம்மையும் அறியாமல் படித்து விடுவோமோ...? இருக்கலாம். ஆனால் அந்த நிர்பந்தம் எனக்கு இல்லையே!

    எனக்கென்ன கவலை? அப்பா சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். பிசினஸ் பார்க்கிறார். படித்தாலும், படிக்காவிட்டாலும் நல்ல மாப்பிள்ளையாக பார்த்து... மாப்பிள்ளை என்றதும் அவளுடைய முகம் நாணிற்று.

    அவள் பிரஷ் பண்ணிக் கொண்டு தோட்டத்திற்கு வந்தாள். நாகு பக்கட்டில் தண்ணீர் பிடித்து தூக்கி வருவதையும், குவளையில் மொண்டு, கை விரல்களை பரப்பி செடிகளின் மேல் தெளிப்பதையும் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    நாகுவும், அவளும் ரொம்ப தோஸ்த். எலிமென்ட்ரி ஸ்கூலிலிருந்தே அவர்கள் ஒன்றாகச் சிரித்துப் பேசி, விளையாடுவார்கள். ஒன்றாகவே சாப்பிடுவார்கள். அவளுக்கு வேண்டியதையெல்லாம் அவன் வாங்கித் தருவான். அவளுக்காக அவன் எதையும் செய்யத் தயாராயிருந்தான்.

    அதனால் அவளையுமறியாமல் அவன் மேல் ஒரு பாசமும் பரிவும் வளர்ந்துவிட்டிருந்தது. சுபர்ணா அவனுக்கு பின்னால் போய், தென்னஞ்சீவு ஒன்று எடுத்து அவனது வெற்று முதுகில் கோடு போட, சடக்கென நிமிர்ந்தவன் அவளைக் கண்டதும் கூச்சப்பட்டு நெளிந்தான்.

    குட்மார்னிங் நாகு! என்று அவள் அவனது வெற்றுடம்பையும்

    Enjoying the preview?
    Page 1 of 1