Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanna Kanavugal
Vanna Kanavugal
Vanna Kanavugal
Ebook111 pages42 minutes

Vanna Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆடிட்டர் தியாகராஜனின் செல்ல மகள் தேன்மொழி. எனவே எல்லோரும் கிண்டல் செய்வதுபோல் அரிசி மூட்டை போல் இருக்கிறாள். அவளுக்காக என்று தன் தங்கை மகன் மகேஷை வளர்த்து படிக்க வைக்கிறார் ஆடிட்டர். ஆனால் அவனோ தேன் மொழியிடம் காதல் வசனங்களை பேசிக்கொண்டு மற்றொரு பெண்ணை விரும்பி அவளுக்கு வேண்டிய அனைத்து செலவுகளையும் தேன்மொழியின் பணத்தின் மூலம் செய்கிறான். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர, வாழ்வை அழகாகவும் சிறப்பாகவும் வாழ்வதற்கு உடல் தோற்றம் முக்கியமில்லை.

அறிவு தான் முக்கியம் என்று தேன்மொழி முடிவெடுக்கிறாள். மிகச் சிறந்த பேச்சாளராக மோட்டிவேஷனல் ஸ்பீச் தரக் கூடியவளாக ஆங்கிலமும் தமிழும் கலந்து அவள் பேசுவதைக் கேட்க உலகமே திரண்டு நிற்கிறது. வாழ்க்கையில் அவள் வெற்றி பெறுகிறாள். மகேஷ் அவளைத் தேடி வருகிறான். அழகே என்பது அழிந்து போகும் ஒன்று. அறிவு மட்டுமே என்றும் நிலைத்திருக்கும் என்று மகேஷுக்கு உணர்த்தும் அவள், தன்னை விரும்பும் ஒரு நல்லவனை மணந்து வாழ்க்கையை சாதித்துக் காட்டுகிறாள்.

Languageதமிழ்
Release dateSep 19, 2023
ISBN6580101010185
Vanna Kanavugal

Read more from Ga Prabha

Related to Vanna Kanavugal

Related ebooks

Reviews for Vanna Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanna Kanavugal - GA Prabha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வண்ணக் கனவுகள்

    Vanna Kanavugal

    Author:

    ஜி.ஏ. பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    சமர்ப்பணம்

    என்றும் எப்போதும் என் பெற்றோர்கள்

    தந்தை - ஸ்ரீ அனந்தநாராயணன்

    தாயார் - ஸ்ரீமதி சரோஜா

    என்னுரை

    இனிய வாசக நெஞ்சங்களுக்கு,

    அன்பான வணக்கங்கள். புஸ்தகா மூலம் உங்களை அடிக்கடி சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் அன்பும், வரவேற்பும்தான் மேலும், மேலும் எழுதும் ஆர்வத்தைத் தருகிறது. அதற்கு என் நன்றிகள் முதலில்.

    நம்மைச் சுற்றி கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. கோடிக்கணக்கான மனிதர்களின் கதைகள் இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்வும் வித்தியாசமாக இருக்கிறது. எப்படி வாழ்வது? வாழக்கூடாது என்பதற்கு அவர்களின் வாழ்வே உணர்த்துகிறது.

    எந்த நேரத்திலும் மனிதாபிமானம், அன்பு, கருணை இதை மட்டும் விடக் கூடாது என்றுதான் நான் என் கதைகளில் வலியுறுத்துகிறேன். ஒருவர் மனதில் இந்த உணர்வுகள் பதிந்தாலும் போதும். அதுவே எனக்கு வெற்றி.

    என் நாவல்களை தொடர்ந்து வெளியிடும் பெண்மணி, மற்றும் கண்மணி, மாலை மதி, ராணிமுத்து போன்ற மாத நாவல்களின் ஆசிரியர்கள், நிர்வாகம், தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள், ஈ புத்தகமாக வெளியிட்டு நாவல் உலகில் நிலைத்திருக்க வழி செய்த, செய்யும் புஸ்தகா நிறுவனம் திரு. ராஜேஷ், அழகாக வடிவமைக்கும் அவரின் குழுவினர் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி,

    அன்புடன்,

    ஜி. ஏ. பிரபா.

    1

    முருகா சரணம்.

    எதிரே தெரிந்த மருதமலையைப் பார்த்துக் கை கூப்பி நின்றாள் தேன்மொழி.

    பனிமேகம் முழுவதுமாக மலையைச் சூழ்ந்து நின்றது. நடுவில் உயர்ந்த கோபுரம் கம்பீரமாக நின்றது. மேகம் தவழும் கோபுரம் அவளைக் கை உயர்த்தி ஆசிர்வதித்தது.

    பசுமையான மலைப்பகுதி முழுவதுமாக மேகத்தால் சூழ்ந்திருந்தது. இரவு முழுவதும் பெய்த மழை தரையில், தெருவில் தேங்கி நின்றது. லேசான தூறல் பூத்தூவலாய் நனைத்தது.

    அதிகாலையில் மலையில் அங்கங்கே விளக்கொளி தெரிந்தது. மேகம் சூழ்ந்ததால் சுற்றிலும் இன்னும் வெளிச்சம் முழுவதும் பரவவில்லை. பெரிய விளக்குகளைப் போட்டபடி ஒரு பேருந்து, இரண்டு கார்கள் போனது. பால் வண்டி, பேப்பர் பையன் என்று மெதுவாக உயிர்பிக்க ஆரம்பித்தது.

    மொட்டைமாடியிலிருந்து தெருக்கோடி வரை தெரிந்தது. இங்கிருந்து மருதமலையும், கோபுரமும் தினமும் தரிசிப்பது தேன்மொழியின் வழக்கம். மழை, வெயில் என்று எது வந்தாலும் முருகனைத் தரிசிப்பது மட்டும் நிற்காது.

    புயல் வந்தா என்ன செய்வே? - குமரன் கேட்பான்.

    முருகனே என்னைத் தேடி வருவான்.

    அதெப்படி?

    நம்பிக்கைதான்.

    நம்பிக்கை ஜெயிக்குமா?

    அதுதானே வாழ்வை நகர்த்திப் போகுது.

    யாருக்கு எப்படியோ? தேன்மொழி மட்டும் நம்பிக்கையோடுதான் நாளை ஆரம்பிப்பாள். அதிகாலையில் மாடி ஏறி மலையைத் தரிசிக்கும்போதே இன்று நிறைய நல்ல செய்திகள் வரும் என்று தனக்குத்தானே மந்திரமாகச் சொல்லிக் கொள்வாள்.

    வந்து கொண்டுதான் இருக்கிறது மகிழ்ச்சியான, செய்திகள் என்பதைவிட, எதையும் மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ளும் ரகசியம் அறிந்தவள். அதனால் இது நல்லது என்று ஏற்றுக்கொள்ளும் அதே நேரம், இது வேதனையான சமாசாரம் என்றால் அதை விட்டு விலகி நிற்கவும் கற்றிருந்தாள்.

    பொதுவாக அவளை எந்த வேதனையும் அனுகாமல்தான் வீடு பார்த்துக் கொண்டது. ஆடிட்டர் தியாகராஜனின் ஒரே மகள். செல்ல மகள். வசதி, வளமை எல்லாம் இருக்கிறது. அவளுக்கு என்ன குறை?

    குறை ஒன்றும் இல்லை என்றுதான் பாடத் தோன்றியது. வீட்டில் அப்பா, அம்மா, பாட்டி எல்லாரும் கையில் வைத்துத் தாங்குகிறார்கள். செல்வ வளம் இருக்கிறது. உறவுகளுக்கு மத்தியில் இளவரசியாய் இருக்கிறாள் தேன்மொழி.

    என் குல தெய்வமே - என்பாள் பாட்டி. வருடா வருடம் சித்திரை விழாவுக்கு, குலதெய்வத்துக்கு புடவை எடுக்கும்போது தேன்மொழிக்கு புடவை எடுத்த பின்தான் அம்மனுக்கு. பெண்ணாக இருந்தாலும், அம்மனின் குண்டம் திருவிழாவில் முதலில் பண்டாரத்துக்கு அடுத்து, தியாகராஜன் இறங்க, அடுத்து தேன்மொழி இறங்கிய பின்னர்தான் மற்றவர்கள் இறங்குவார்கள்.

    பட்டாம்பூச்சியாய் பறக்கிறாள் தேன்மொழி.

    ஆனந்தமும், உற்சாகமும் நிறைந்து இருக்கிறது.

    நன்றி முருகா - மலையைப் பார்த்து வணங்கினாள். எல்லோரையும் நன்றாக வை - வேண்டிக் கொண்டாள்.

    கீழே இறங்கி வரும்போது பாட்டி கையில் காபியுடன் நின்றாள்.

    கண்ணு, இந்தா இந்தக் காபியைக் குடி. வெள்ளிக் கிழமை தலைக்கு எண்ணெய் வச்சு குளிச்சுட்டு வா. டிபன் ரெடியாயிடும்.

    குளித்து வந்ததும், பாட்டி தலைக்குப் புகை போட்டாள். தேன்மொழிக்கு அடர்த்தியான நீளக் கூந்தல். அதை பாட்டி பார்த்துப், பார்த்து பராமரித்தாள். தனியாக எண்ணெய் காய்ச்சி, வாரத்துக்கு இரண்டு தடவை குளிக்க வைப்பாள்.

    டேபிளில் டிபன் தயாராக இருந்தது.

    என்ன டிபன் பாட்டி?

    உனக்குப் பிடிச்ச டிபன்தான் கண்ணு.

    பாட்டி உத்தரவு போட, சமையல்காரம்மா பரிமாற ஆரம்பித்தாள்.

    ஆப்பம், தேங்காய்ப்பால், சட்னி, குழிப் பணியாரம், சாம்பார், ரவா தோசை, கேசரி, காபி என்று திவ்யமாக சாப்பிட்டு எழுந்தாள்.

    சூப்பர் மாமி - சமையல்காரம்மாவை கை குலுக்கினாள்.

    ஜீரணத்துக்கு கொஞ்சம் இதைக் குடி கண்ணு.

    என்னது மாமி?

    ஜீரகத் தண்ணீர்.

    கொடுங்க. அதையும் குடிக்கலாம்.

    வாங்கிக் குடித்தாள். பாட்டி அவளை ஹாலுக்கு போகச் சொன்னாள்.

    "அப்பா, பூஜை

    Enjoying the preview?
    Page 1 of 1