Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gnanakulam
Gnanakulam
Gnanakulam
Ebook292 pages2 hours

Gnanakulam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உண்மையும், நேர்மையும் இருந்தால் அவர்களைக் காப்பாற்ற தெய்வமே வரும். தன் மகளை ஏமாற்றியவனைப் பழி வாங்க, சுபத்ராவின் அப்பா தீய சக்திகளை ஏவுகிறார். அது தன் வேலை முடிந்தால் சுபத்ராவிடமே பாதிப்பை ஏற்படுத்தும். அவள் வணங்கும் அம்பிகை சிறுமி வடிவில் வந்து சுபத்ராவைக் காக்கிறாள். அப்பாவின் செயல்களைத் தடுத்து நிறுத்தி, அந்தக் குடும்பத்தை சுபத்ரா காப்பாற்றினாளா? இவள் வாழ்க்கை என்ன ஆனது? பாலா திரிபுர சுந்தரியின் அதிரடி ஆட்டங்களே ஞானக்குளம்.

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580101007640
Gnanakulam

Read more from Ga Prabha

Related to Gnanakulam

Related ebooks

Reviews for Gnanakulam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gnanakulam - GA Prabha

    https://www.pustaka.co.in

    ஞானக்குளம்

    Gnanakulam

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    இனிய வாசக நெஞ்சங்களுக்கு

    அன்பான வணக்கங்கள். புஸ்தகா மூலம் என் பல நாவல்களை நீங்கள் படித்திருந்தாலும் அதில் சற்று விசேஷமானது ஞானக் குளம். நாம் உண்மையாகவும், எல்லையற்ற பரம்பொருள் சக்தி மீது நம்பிக்கையும் வைத்தால் நம்மைக் காப்பாற்ற அம்பிகையே நேரில் வருவாள் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட என் முதல் ஆன்மீக த்ரில்லர்.

    வாழ்வில் நாம் எதை விதைக்கிறோமோ, அதுவேதான் திரும்பக் கிடைக்கும் என்பதை மறந்து விடுகிறோம். நல்லதோ, தீயதோ, அது நம்மிடமே திரும்பி வரும். வாழ்நாள் என்பது மின்மினிப் பூச்சி போல் விரைவில் மறைந்து விடும். அதற்குள் இதை நிறைவாக, பிறருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் வாழ்ந்து விட வேண்டும்.

    சுயநலம், வெறுப்பு, பகை, பழி வாங்கல் என்பதெல்லாம் அர்த்தம் இல்லாத செயல்கள். இதை உணர்த்துவதே ஞானக் குளம். தன் மகள் சுபத்ராவை ஏமாற்றிய கிருஷ்ண மூர்த்தியை தீய சக்திகளை எவுவதன் மூலம் பழி வாங்குகிறார் சோமசுந்தரம்.

    தான் ஏவப்பட்ட வேலை முடிந்ததும், எவியவரையே தாக்கும் குணம் கொண்ட தீய சக்தி சுபத்ராவைத் தாக்காமல் இருக்க, அவளுக்குப் பாதுகாப்பாக வருகிறாள் அம்பிகை. எல்லையற்ற அந்தச் சக்தி, சிறுமியாக வந்து நடத்தும் லீலைகளே ஞானக் குளம். எதுவும் நிரந்தரமில்லை. எதுவும் அந்த அம்பிகையின் லீலை என்பதை உணருவதே ஞானம். அந்த ஞானம் நிரம்பிய மானசரோவர் ஏரியாக இருக்கிறாள் பாலா திரிபுர சுந்தரி.

    நாம் செய்யும் தியாகங்களே நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. சமூகம், ரொமான்ஸ், குடும்பம் என்று எழுதிக் கொண்டிருந்த நான் சற்று விலகி ஆன்மீக த்ரில்லர் எழுத முயன்று வெளியான முதல் கதை.

    என்னுடை அறுபது நாவல்களுக்கும் மேலாக ஈ புத்தகமாக வெளியிட்டு என் வாசகர் வட்டத்தை அகலப் படுத்தியது புஸ்தகா. நேர்மை, உண்மை, ரசனை, சிறந்த கதைகளை வாசகர்களுக்குத் தர வேண்டும் என்ற அக்கறையோடு செயல்படும் புஸ்தகா மூலம் ஞானக் குளம் வெளி வருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

    இதற்கு நான் வடிவமைப்பில் என் ஆசைகள் சிலவற்றைக் கூறியபோது அதை மறுக்காமல் அதன்படியே அமைத்துக் கொடுத்த திரு ராஜேஷ் தேவதாஸ், மற்றும் அவரின் உதவியாளர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், மேலும் இனி அதிரடி ஆட்டங்களுடன் பாலா செய்யும் மாயங்கள் கதைகளாக வரும். நீங்கள் அதைப் படித்து, ஆதரவு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    சிறந்த முறையில் எழுத்தாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களின் எழுத்துக்களை ஊக்குவிக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கும், திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும், அடிக்கடி என் கருத்தைக் கேட்டு நான் விரும்பியபடி வடிவமைத்த திருமதி சசிகலா அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிப்பது மிக அவசியம். எல்லாம் வல்ல அம்பிகையின் அருளால் அனைவரும் நலமாக, வளமோடு வாழ்க என்று வேண்டுகிறேன்.

    நன்றி,

    அன்புடன்,

    ஜி.ஏ.பிரபா

    மொபைல்: 9486572227

    1

    "ஓம் ஸ்ரீமாதா ஸ்ரீமகாராஜ்ஞீ ஸ்ரீமத் சிம்ஹாசனேஸ்வரீ

    சிதக்னி குண்ட சம்பூதா தேவகார்ய ஸமுத்யதா"

    உலகுக்கே மாதாவாக இருக்கிறாள் அம்பிகை. எல்லாவற்றையும் ஸ்ருஷ்டி செய்து உலகைக் காக்கும் ஜெகன்மாதாவாக அவள் இருக்கிறாள். இந்தப் பிரபஞ்சத்தைப் பரிபாலனம் செய்யும் மகாராணியாக அவள் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். தேவர்களைக் காக்க அக்கினியில் தோன்றியவள். அவளே தன் குழந்தைகளைக் காக்க ஓடியும் வருகிறாள்.

    ஸ்ரீலலிதா.

    ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ

    அதிகாலையின் சூரிய ஒளியுடன் சேர்ந்து பூரணமாய்ப் பரவியது நாமம்.

    மெல்லிய ஊதுவத்தியின் வாசனையுடன், நெய் காயும் வாசனையும், ஏலக்காய் மணமும் அந்தத் தெருவெங்கும் மணந்தது.

    சாம்பல் பூத்த வானம் கம்பீரத்துடன் சூரியனை வெளிப்படுத்தியது. மெல்ல எழும்பிக் கொண்டிருந்த கதிரவனின் கதிர்கள் வீர்யத்துடன் தன் ஒளிக் கிரணங்களை பூமியெங்கும் பரவி உற்சாகமாக எழும்பினான்.

    தெருவின் இருமருங்கிலும் அடர்ந்திருந்த மரங்களில் பறவைகளின் உற்சாகக் குரல் கீச், கீச் என்று அழகாய்க் கீதம் பாடியது. தெருக் கோடியில் இருந்த விநாயகர் கோவில் மணியோசை. சிறப்பு பூஜை என்று அறிவித்தது.

    ஸ்ரீபவனம் என்ற அந்த வீட்டில் விளக்குகள் ஜெகஜோதியாக எரிந்தது. வாசலில் பசுஞ் சாணி போட்டு மெழுகி அரிசிமாவுக் கோலம் வளைந்து வளைந்து போனது. செம்மண் கரை இட்டு, காம்பவுண்டின் இருபுறமும் வாழை மரங்கள், வாசல் நிலையில் மாவிலைத் தோரணம் அந்த வீட்டில் எதோ விசேஷம் என்று அறிவித்தது.

    இன்னும் முழுதாக இருள் விலகாமல் அக்கம் பக்கம் வீடுகள் விழிக்காத நிலையில் இந்த வீட்டின் வெளிச்சம் தெருவெங்கும் இருட்டை விரட்டியது. உள்ளே வீடு பரபரப்பாக இருந்தது.

    லஷ்மி, எல்லாம் ரெடியா? ஒன்பது மணிக்குள் அங்க இருக்கணும். விநாயகர் அபிஷேகத்துக்கு எல்லாம் ரெடியா? ஸ்ரீமதி எங்கே? டேய் பதி ஓடிப்போய் குருக்களை அபிஷேகத்துக்கு ரெடி பண்ணச் சொல்லு..- மாதவன் எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தார்.

    சாதாரண நாள்லயே அதிகாரம் தூள் பறக்கும். இன்னைக்குக் கேட்கவே வேண்டாம்.- பதி அம்மாவிடம் முணுமுணுத்தான். கல்லூரியில் மூன்றாம் வருடம் பி.ஈ படிக்கிறான்.

    அவரைப் பற்றிதான் உனக்குத் தெரியும்ல? ஏழு மணிக்கு காலைல கிளம்பனும்னா முதல்நாளே இரவு ஒன்பது மணிக்கு குளிச்சு ரெடியாகி உட்காரும் மனிதர். பொண்ணுக்கு கல்யாணம்னா சும்மா இருப்பாரா?- லஷ்மி.

    கலயாணமா இன்னைக்கு. நிச்சயம்தானே?

    ஸ்ரீமதி ரெடியா?- லஷ்மி கேட்கும்போது ஸ்ரீமதி உள்ளே வந்தாள்.

    ஏற்றிவைத்த குத்து விளக்காய் ஜொலித்த மகளைப் பெருமையுடன் பார்த்தாள் லக்ஷ்மி. மாதவனைப் போல் பொன்னிறம். அவரைப் போலவே உயரம். இடுப்பைத் தாண்டி தொங்கும் நீளக் கூந்தல். அழகாய் எழுதிய ஓவியம்போல் கண்கள், புருவம், உதடு என்று ஓவியப்பவையாக இருந்தாள் ஸ்ரீமதி.

    பலவருடங்களாக லலிதா சஹஸ்ரநாமம் சொல்லிச் சொல்லி அவளிடம் ஒரு கம்பீரம், முகத்தில் ஒரு தேஜஸ், கண்கள் கருணையைப் பொழிந்தது.

    அப்பாவோட குணம் அது. விடும்மா. ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே போறது நல்லதுதானே.

    உங்கப்பாவை நீ விட்டுத் தர மாட்டியே?

    அப்படி இல்லம்மா. ஒருத்தரோட குறையைப் பற்றியே பேசாம, அதில் இருக்கும் நல்ல விஷயங்களைப் பார்க்கலாமே. அதில் நம் மனசு அமைதியாக இருக்கும்ல. அதுதான் சொல்றேன். அம்பாள், ஒருத்தர் பிறக்கும்போதே இவர் குணம், பேச்சு, செயல் இப்படி இருக்கும்னு படைச்சிடுவா. அதை நீயோ நானோ மாற்ற முடியுமா?

    ஆச்சு, ஆச்சு, ரெடியா?- மாதவன் வேகமாக உள்ளே வந்தவர் மகளைப் பார்த்ததும் அப்படியே பூரித்து நின்றார்.

    அம்மாடி, அப்படியே எங்கம்மா மாதிரியே இருக்கடா நீ- மகளிடம் நெருங்கி தலையைத் தடவிக் கொடுத்தார். அவரின் கண்களும், குரலும் நெகிழ்ந்தது.

    தன் மகளைப் பற்றி அவரிடம் ஒரு பெருமை உண்டு. மூத்த பெண் குழந்தை. அபாரமான சங்கீத ஞானம். இனிமையான குரல். யாரையும் கடிந்து பேச மாட்டாள். அனைவரையும் அவரவர் குற்றம் குறைகளுடன் நேசிப்பாள். சேவை நிறுவனங்களுடன் சேர்ந்து தன்னால் முடிந்த உதவிகள் செய்வாள். முக்கியமாக எம்.கே. ஆர் ஸ்வீட்சின் நிர்வாகி, அவள் பொறுப்பேற்ற பிறகு அந்த நிறுவனம் இன்று பல இடங்களில் கடை பரப்பியுள்ளது. இங்கு கோவையிலேயே ஐந்து இடங்களில் கிளை. அதைத் தவிர சேலம், ஈரோடு, திருச்சியில் கிளைகள், இப்போது சென்னையில் கிளை திறக்க ஏற்பாடு செய்கிறார்கள்.

    இனிப்பகத்தின் தரம், ருசி என்று சகலமும் அவள் பொறுப்புதான். இனிப்பகம் மூலம் ஒரு அநாதை இல்லம், முதியோர் இல்லங்களை தத்து எடுத்து அதன் பராமரிப்பு செலவுகளை ஏற்றிருக்கிறாள். அவளின் கல்லூரி நண்பர்கள், பதி, அவர் நண்பர் கண்ணபிரானின் மகன் ஹரி சேர்ந்து ஒரு அமைப்பு ஆரம்பித்து அதன் மூலம் கோவை, சுற்றுப் புறங்களில் இறந்துபோகும் அனாதைப் பிணங்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்கிறார்கள்.

    ஹரிக்கும், ஸ்ரீமதிக்கும்தான் திருமணம் நிச்சயித்து இன்று அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் நிச்சயதார்த்தம். காலையில் அபிஷேகம், பின் அருகில் உள்ள மணடபத்தில் நிச்சயம்.

    கண்ணபிரானும் அவரும் நெருங்கிய நண்பர்கள். அவர்களின் அப்பா காலத்திலிருந்து தொடரும் நண்பர்கள். மதுரையில் ஒரு சின்னக் கடையாக மாதவனின் அப்பா இனிப்பகம் ஆரம்பித்தபோது உடன் நின்றவர் கண்ணபிரானின் அப்பா. அது இன்றுவரை தொடர்கிறது. அம்பது வருட நட்பு. மாதவனின் தங்கையை கண்ணபிரானுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து இப்போது அவரின் மகனுக்கு தன் மகளைக் கொடுக்கிறார் மாதவன்.

    நிச்சயமே மிகச் சிறப்பாக பெரிய அளவில் நடக்கிறது. அநாதை இல்லம், முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு சாப்பாடு. இனிப்பகத்தில் இன்று யார் எது வாங்க வந்தாலும் அவர்களுக்கு அரை கிலோ லட்டு, அரை கிலோ மிக்சர்.

    தன் உற்சாகத்தை வெளிப்படுத்த தவித்தார் மாதவன். அந்த சந்தோஷத்தை தன் செய்கை, பேச்சின் மூலம் வெளிப்படுத்தியவர் குறுக்கும், நெடுக்கும் அலைந்தார். அவசர உத்தரவுகள் பிறப்பித்தார். படபடப்பும், நிலை கொள்ளாமல் அலைந்த அவரை சிரிப்புடன் ரசித்தார்கள் வீட்டில்.

    சரி கிளம்பலாமா?- மாதவன் கேட்டார்.

    ‘இன்னும் ஒரு பத்து நிமிஷம். சுக்ர ஹோரை ஆரம்பிக்கட்டும். அதுக்குள்ளே நம்ம அம்மணி பால் தரட்டும். ஒரு காப்பி போடறேன். குடிச்சுட்டு கிளம்பலாம். இதோ நாலு ஸ்டேப் வச்சா கோவில்"- ஸ்ரீமதி.

    அம்மணி பால் கரந்தாச்சா?

    காலையில் நாலரைக்கே பால்காரர் வந்துடுவார். ஆனா இன்னைக்கு என்னவோ இன்னும் காணோம். யார் போனாலும் சீறுது அம்மணி- லக்ஷ்மி

    பால்காரருக்கு பொன் செஞ்சியா?

    முழு ரிங் போறது. எடுக்கலை

    இரு நான் என்னன்னு பாக்கறேன்- மாதவன் பின்னாடி போனார்.

    மாட்டுக் கொட்டிலில் வரிசையாக பத்து மாடுகள் நின்றிருந்தது. இனிப்பகத்திற்கு இங்கிருந்துதான் பால் போகும். அம்மணியின் பால் மட்டும் வீட்டுக்கு. கன்று போட்டு ஒருமாதம் ஆகிறது. வெள்ளை நிறமும், கருகரு கண்ணுமாய் கன்றுக் குட்டி அம்மாவிடம் முட்டி முட்டி பால் குடித்துக் கொண்டிருந்தது.

    துள்ளிக் குதிப்பதும், அம்மாவிடம் பால் குடிப்பதுமாய் அதனிடம் விளையாட்டு.

    அம்மணி என்ன இன்னைக்கு பால் கறக்க இவ்வளவு நேரம்?- மாதவன் அதனிடம் போனார்.

    புஸ்- என்று திரும்பிய அதன் கண்ணில் கோபம் அவரை நடுங்க வைத்தது. கனிவும், அன்பும் நிரம்பிய அதன் கண்ணில் ஒரு குரூரம். கால்களால் தரையைக் கீறி உஸ், உஸ் என்று மூச்சு விட்டது.

    மாதவன் வேண்டாம்- அருகில் அப்பாவின் குரல் கேட்டது.

    அம்மணிக்கு என்னவோ சம்திங் ராங். அதை இன்னைக்கு விட்று. பால் இல்லைன்னா என்ன? மற்ற மாடுகள் பாலைக் கறந்து அனுப்பிடு.

    இல்லைப்பா.- மாதவன் பிடிவாதமாக மறுத்தார். நான் கரந்தா அது எதுவும் செய்யாது

    மாதவன் அம்மணியிடம் நெருங்கினார். கண் இமைக்கும் நேரத்தில் அது இவரை எட்டி உதைத்தது. சுருண்டு ஒரு அலறலுடன் தூர வந்து விழுந்தார் மாதவன். டங் என்று தலை கல்லில் மோத கண்ணில் பொறி பறந்தது.

    மாது அப்பா பதறி அடித்து ஓடி வந்தார். மகனைத் தூக்கி எழுப்பி உட்கார வைத்து முகத்தில் தெளித்தார்.

    எழுந்திரு. டாக்டர் கிட்டப் போலாம். சொன்னேன். நீ கேட்கலை

    விடுங்கப்பா. வீட்ல யாருகிட்டயும் சொல்ல வேண்டாம். ஸ்ரீமதி நிச்சயம் முடிக்கட்டும். டாக்டரைப் பார்த்துட்டு வந்துடலாம்.

    மாதவன் மெல்ல தளர்ந்து எழுந்தார். காலில், முழங்காலில் அடி. பின் மண்டை விண், விண் என்று தெறித்தது. காலை வளைத்து உள்ளே போனவரை வேதனையுடன் பார்த்தார் அப்பா.

    அம்மணி உனக்கு என்னடிம்மா ஆச்சு. ஏன் நல்ல நாளும் அதுவுமா இப்படிச் செஞ்சே?- அம்மணியிடம் நெருங்கி அதன் தலையைத் தடவிக் கொடுத்தார். அம்மணி இப்போது சாதுவாய் நின்றது.

    அப்பா தலை தடவ, குழைவாய்க் குனிந்து கொடுத்தது.

    அம்மணி நீ மகாலஷ்மி அம்சம். முப்பத்து முக்கோடி தேவர்களும் உன்னில் இருக்கிறார்கள். நாங்கள் என்ன பாவம் செய்திருந்தாலும் அதை மன்னித்து இன்னைக்கு ஸ்ரீமதியின் நிச்சயத்தை நல்லபடியா முடிச்சுக் கொடும்மா?- அப்பா மனமுருகி கை கூப்பினார்.

    அம்மணி மெல்ல பின் நகர்ந்தது.

    அப்பா வேதனையோடு அதைப் பார்த்தார். மனசு கலங்கியது.

    "தாயே, அம்பிகை மாதவனின் எந்தக் கர்மவினை கழிகிறது. பிறகும் ஒவ்வொரு ஜீவன்களும் தங்கள் கர்ம வினையைச் சுமந்துதான் பூமிக்கு வருகிறது. இவன் எதைச் சுமக்கிறான். எதைக் கழிக்கிறான்?கேள்விகள் குமுற நின்றார்.

    சாமீ பால்காரர் வேகமாக வந்தார்.

    ஏம்பா இவ்வளவு லேட்? தாத்தா மென்மையாகக் கேட்டார். அவர் யாரிடமும் அதிகம் கோபித்துக் கொள்ள மாட்டார். ஸ்ரீமதிக்கு அவரின் குணம்தான்.

    சின்னய்யா தேங்காய் கேட்டாருங்க. அதை வாரப்போ வீட்டுல வச்சிட்டு வந்திட்டேன். மகாள திரும்பிப் போய் எடுத்துனு வந்தேனுங்க

    சரி, சரி சீக்கிரம் பாலைக் கற- தாத்தா உள்ளே வந்தார்.

    வீடு மடமடவென்று தயாரானது.

    ஸ்ரீமதி ஒரு பெரிய வெள்ளித் தாம்பாளத்தில் தேங்காய், வெத்தலை, பாக்கு, பூ பழம், புதுப் புடவை, ஜாக்கெட் வைத்து கையில் எடுத்துக் கொண்டாள். சுவாமி விளக்கை ஏற்றி விட்டு வெளியில் வந்தாள்.

    அம்மாடி நீ முதல்ல வா_ மாதவன் கூற ஸ்ரீமதி படி இறங்கினாள்.

    முதல்படி இறங்கி அடுத்தபடி கால் வைக்கையில் எதோ ஒன்று காலை இடறியது. தாம்பாளம் மேலே பறக்க ஸ்ரீமதி தலைகுப்புற மண்ணில் விழுந்தாள்.

    தட்டிலிருந்த தேங்காய் உருண்டு, ஓடி வாழை மரத்தில் மோதி நின்ற அந்த நொடி வாழைமரம் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது.

    2

    "உத்யத்பானு சஹஸ்ராபா சதுர்பாஹு ஸமன்விதா

    ராகஸ்வரூபா பாசாட்யா க்ரோதாகாராங் குசோஜ்வலா"

    ஆயிரக்கணக்கில் கிரணங்கள் உடைய சூரியனின் ஜோதியைவிடப் பிரகசமானவள் நீ. மனதில் உள்ள துவேஷங்களை உன் ஜ்வலிக்கின்ற அங்குசத்தின் மூலம் அடக்கி ஆள்கிறாய். எங்களின் மன விகாரங்களை உன் கருணையால் நீக்கி உன்னிடம் எங்களை ஈர்த்துக் கொள்கிறாய்.

    லலிதா சஹஸ்ரநாமம்.

    நல் விடியலுக்கு நன்றி தாயே

    குருஜி இருகை கூப்பி கண்மூடி நின்றார்.

    மனம் முழுதும் பரவசமாக அகக்கண்களில் ஒரு முழு ஜோதி வடிவம் நிரம்பி நின்றது. அதன் பிரகாசத்தில் மூழ்கி மெய்மறந்து நின்றார் குருஜி.

    விடியலின் குளுமை சில்லென்று உடலைத் தழுவியது. ஆசிரமத்தைச் சுற்றி இருந்த மரங்கள் பூச்செடிகள் இனிய நறுமணத்தை குளிர்ந்த காற்றுடன் சேர்த்து வீசியது.

    டன், டன் என்று மணி முழங்க குருஜி கண் திறந்தார். அம்பிகையைப் பார்த்தபடி நின்றார்.

    பிரம்மாண்டமான தேவியின் சிலை. இருகால்களையும் மடக்கி அமர்ந்திருந்த பளிங்குச் சிலை. பச்சைப் பட்டு உடுத்தி, சம்பங்கிப் பூமாலை ஆளுயரத்திற்கு அணிந்திருந்தாள். பூஜை செய்யும் சாமி, அம்பிகையை அழகாய் அலங்கரித்திருந்தான். நிலமாலையை ஒட்டி பெரிய ரோஜாப்பூ மாலை. அடுத்து மடிமீது விழும் முல்லைப்பூ மாலை. தவிர பக்தர்கள் கொண்டுவந்து தரும் பூச்சரங்களை அவளைச் சுற்றி தொங்க விட்டிருந்தான்.

    அந்த இடமே பூக்களின் நறுமணத்தால் நிறைந்து தெய்வீகம் நிரம்பி இருந்தது.

    குருஜி கணுக்கால்வரை காவி வேஷ்டியும், முழங்கால்வரை நீண்ட வெள்ளை ஜிப்பாவும் அணிந்திருந்தார். வழுக்கையான தலை. பளீர் நிறம், கண்ணாடி போடாமல் தெளிவாகத் தெரியும் பார்வை. நெற்றியில் விபூதிப் பட்டை போட்டு சந்தானம், குங்குமம் வைத்திருந்தார்.

    உதட்டோரத்தில் நிரந்தரமாய் நெளியும் புன்னகையை கண்களும் பிரதிபலித்தது.

    ஆரத்தி காண்பிக்க, சாமி மணி அடித்தான். குருஜி பூஜை முடித்து தன் இடத்தில் வந்து அமர்ந்தார்.

    அந்த விடியல் நேரத்திலும் அம்பது பேருக்குக் குறையாமல் கூட்டம் இருந்தது.

    குருஜி தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

    "இந்தக் கலியுகத்திலும் அதிகாலையில் கோவிலுக்கு வரும் உங்களைப் போன்றவர்களே எனக்கு நம்பிக்கை தருகிறீர்கள். நமது சனாதன தர்மம் பல மகத்தான தத்துவங்கள் நிறைந்தது. அதில் மிக முக்கியமானது இறை வழிபாடும், மனித நேயமும்.

    இன்று மனிதன் பல துர்குணங்களுக்கு ஆட்பட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1