Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amma Veedu
Amma Veedu
Amma Veedu
Ebook250 pages1 hour

Amma Veedu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாயில்லா ஜீவன்களின் பசியை போக்கிய படிப்பறிவு இல்லா சிறுவனின் பெருந்தன்மையையும் அன்னதானத்தில் ஏமாற்றம் அடைந்த சிறுவனின் மனநிலையை என்ன என்பதை பற்றியும் நான்கு மனைவிகளை கட்டிய தாத்தாவின் இறுதி வாழ்க்கையும் கிணறுதான் எங்கள் சொத்து இதுபோன்ற பல்வேறு சுவாரசியமான மனிதர்களின் மாண்புகளை அம்மா வீடு என்ற சிறுகதைத் தொகுப்பில் பார்ப்போம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580165509791
Amma Veedu

Read more from Subramania Pandian

Related to Amma Veedu

Related ebooks

Reviews for Amma Veedu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amma Veedu - Subramania Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அம்மா வீடு

    (சிறுகதைத் தொகுப்பு)

    Amma Veedu

    (Sirukathai Thoguppu)

    Author:

    சுப்ரமணிய பாண்டியன்

    Subramania Pandian
    For more books

    https://www.pustaka.co.in/home/author/subramania-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என் வாழ்வியல் அனுபவங்களே என் படைப்புலகம்

    1. உயிர்த்தண்ணீர்

    2. தர்ம சாலை

    3. காணிக்கை

    4. இருளும் வெளிச்சமாகும்

    5. மச்சக்கேசவன் தலைமை ஆசிரியர் ஓய்வு

    6. அம்மா வீடு

    7. திரைச்சீலை

    8. கடன்காரன்

    9. குருகுலம்

    10. வயித்துப் பசி

    11. கைத்தடி

    12. வித்தைக்காரன்

    சமர்ப்பணம்

    இந்நூலை என் பாசத்திற்கும் மரியாதைக்குமுரிய என் தந்தை தெய்வத்திரு. த. சுப்ரமணியன் அவர்களுக்கு சமர்பிக்கின்றேன்.

    அணிந்துரை

    சுப்ரமணிய பாண்டியன் எழுதிய சிறுகதைகளை மனதுக்கு நெருக்கமானவையாக உணர முடிகிறது. கள்ளங் கபடம் இல்லாத, எளிய, கிராமத்து மனிதர்களை அறிமுகப்படுத்துகிறார். வாழ்க்கை ஈர மனதோடு அணுக வேண்டிய ஒன்று என்கிறார் ஆசிரியர். அத்தனை போராட்டங்களும் துன்ப துயரங்களும் உள்ளடக்கியது வாழ்க்கை. என்றாலும் அது நேசிக்கத்தக்கதாய் இருக்கிறது அவருக்கு. சமுதாயத்தில் ஒரு எழுத்துக் கலைஞனின் தேவையும் அதுவாகவேதான் இருக்க முடியும்.

    ‘உயிர்த்தண்ணீர் முதல் சிறுகதையை உதாரணப்படுத்தியே இதை விளக்க முடியும். அவர் எடுத்துக்கொண்ட களம் வறட்சியான ஒரு பூமி. மனிதர்கள் மாத்திரம் அல்ல. பிற பறவைகள் போன்ற உயிர்கள் மாத்திரம் அல்ல. பயிர் பூண்டுகளே வாழத் திகைக்கின்ற ஒரு நெருக்கடி காலம். இதில் இன்னும் மனதில் ஈரம் மிச்சம் இருக்கின்ற ஒரு கதாநாயகன். அந்தக் கதாநாயகன் எப்படி? அவனே ஒரு துன்பக் கிடங்குதான். பிறப்பு முதல் நடப்பு வரை துயரம் மாத்திரமே கண்டவனின் அன்புதான் கதை. அந்தக் கருவைக் கேட்கவே எளிய சாமான்ய மனிதனுக்கு உதட்டோரம் புன்னகை வரக்கூடும்.’

    கதையின், இழப்பு சூழலை இன்னும் துலக்கப்படுத்துகிற மாதிரி, தானே புயலுக்குப் பிறகு நடக்கும் கதை, என்று சேர்த்துக் கொள்கிறார். பயிரை நாசம் செய்ய படையெடுத்து வந்து தங்கியிருக்கும் மயில்க் கூட்டம். தானே புயலுக்குப் பிறகு உணவு தேடி வந்தவை அவை என்கிறார். வயலுக்கு சற்று தள்ளி உள்ளே இருக்கும் காட்டில் அடைந்தவை. புயலில் அநேக மரங்கள் சாய்ந்து அவைகளின் உணவும் பிரச்னையாகையில் வயலுக்கு இறங்கின அவை என்கிறார்.

    கதாநாயகன் கால் ஊனமுற்றவன். எல்லாருக்குமே அவன் என்றால் இளக்காரம். பெற்ற அம்மாவே அவனை கர்ப்பப் பையிலேயே கலைத்துவிட முயன்றிருக்கிறாள். அதாவது அவன் அப்பாவின் ஒப்புதலோடுதான் இது நடந்திருக்கும். இவன் அதைமீறிப் பிறந்து அம்மாவின் அப்பாவின் வெறுப்புக்கும் ஆளானவன் என்கிறார். அவனை கர்ப்பத்திலேயே கலைக்க வேண்டிய அவசியம் என்ன, கதையில் சொல்லப்படவில்லை. ஆனால் இவன் தம்பியை நன்றாகப் படிக்க வைக்கிறார்கள் இவன் பெற்றோர்.

    கர்ப்பத்தைக் கலைக்க முன்முயற்சி எடுத்ததால் அவன் சற்று ஊனக் காலுடன் பிறக்கிறான். சிறிது திக்கிப் பேசுகிறான். இப்படி ஒரு பாத்திரத்தை வைத்து கொண்டு, எழுத்தாளர் அந்தப் பாத்திரத்தை ‘நான் எனவே அறிமுகப்படுத்தி, அதே சமயம் அன்பின் நெகிழ்ச்சிகரமான தருணங்களை விளக்க முனைகிறார் ஆசிரியர் என்பதைப் பாராட்டுகிறேன்.’

    முந்திரித் தோப்பில் ஊடுபயிராக உளுந்து போட்டிருக்கிறார்கள். அதன் விளைந்த நிலையில் காவலுக்கு வருகிறான் அவன். அவனது விந்திய நடையில் மயில்கள் அடிக்கும் கொட்டத்தை அடக்க அவனால் கூடவில்லை. வயலின் ஒருபக்கம் அவன் ஓடி விரட்டினால் மயில்கள் வயலின் மறு பக்கத்துக்குப் போய் அட்டகாசத்தைத் தொடர்கின்றன. மயில்கள் மாத்திரம் அல்ல. வேலைக்கு வரும் பெண்களும் உளுந்தைப் பறித்து ஒளித்து வைப்பதை அவன் கண்டுபிடிக்கிறான். தன் தந்தையிடம் அந்தப் பெண்கள் அவனைப் பற்றி இல்லாத புகார் சொல்கிறார்கள்... என நிறுத்தி விடுகிறார். அந்தப் பெண்கள் பற்றி அவன் தந்தையிடம் உண்மையான காரணம் சொல்லலாம் அல்லவா? அவன்மீது வாசகர்கள் இரக்கப்பட வேண்டும், என்று மாத்திரம் ஆசிரியர் யோசித்திருக்கிறாரோ?

    ஆனாலும் இதில் ஒரு நுட்பம் இருக்கிறது. இவர்கள் செய்வது திருட்டு. மயில்கள் தேடுவது உணவு. அது திருட்டு ஆகாது, என்று கதாநாயனின் நியாயம் உணர்த்தப்பட்டிருப்பதாகவே கருதமுடிகிறது. காரணம் வயல் வேலைக்கு வந்த பெண்கள் கூலி பெறுகிறார்கள். அதற்கும் மேலே திருட்டில் ஈடுபடுகிறாள்.

    ஆசிரியர் தனது முதல் சிறுகதைத் தொகுதியில் தந்தையை முன்னிலைப் படுத்தி ‘அப்பாவின் மிதிவண்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த இரண்டாவது தொகுதி ‘அம்மா வீடு.’ இவரது அடுத்த தொகுதியின் தலைப்பில், குடும்பத்தில் யார் முன்னிலைக்கு வருகிறார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது.

    பகலில் மாத்திரம் அல்லாமல் இரவிலும் மயில்கள், நீர்தேடி வயல்பக்கம் வருகின்றன. இரவில் அவை தாகம் எடுத்து குடும்பமாக வருகின்றன. ஒரு பானையில் இவன் வைத்திருக்கும் தண்ணீரைக் கண்டதும் அவை உற்சாகங் கொள்கின்றன, என்கிறார். அது ஆசிரியரின் உற்சாகம் என நான் சொல்வேன். அத்தனை மயில்களும் பானைக்குள் அலகை நுழைத்து நீர் அருந்த வேகப்படும்போது பானை உடைந்து தண்ணீர் அத்தனையும் மண்ணுக்கு வீணாய்ப் போய்விடுகிறது. மண் அந்த நீரை உறிஞ்சிக் கொள்ளுமுன் மயில்கள் அந்த நீரை அலகில் உறிஞ்ச முயற்சி செய்கிற ஆவேசத்தை எழுதுகிறார் ஆசிரியர்.

    அட நான்கு குடங்களில் தண்ணீர் வைத்தால் மயில்கள் இரவில் நீரருந்தி ஆசுவாசப்படுமே என நினைக்கிறான் அவன். தான் காவல் காக்கும் பயிர்களை நாசம் செய்ய வந்தவை அவை, என அவன் யோசிக்கவே இல்லை. அதை விரட்ட தன்னால் ஆகவில்லை, அதனால் அவனுக்கு அப்பாவிடம் கெட்ட பெயர், என்பதே அவனது பிரச்சினையாகச் சொல்கிறார் ஆசிரியர்.

    அடுத்தநாள் இரவில் காவலுக்குப் புறப்படுமுன் நான்கு குடங்களில் நீர் எடுத்து சைக்கிள் கேரியரில் கட்டிக்கொண்டு கிளம்பும்போது அப்பா அவனை மறிக்கிறார். மயில்களுக்குத் தண்ணீர் எடுத்துப் போவதை அவனால் சொல்ல முடியாது. பயிர் வாடியிருப்பதாய் அவன் ஒரு பொய்க் காரணம் சொன்னபோது அப்பா அனுமதிப்பதாக முடிகிறது கதை.

    எந்த செயற்கைப் பூச்சும் காட்டாத சம்பவங்கள். ஒரு வாழ்க்கையை தனது அன்பு சூழ்ந்த மனதினால் எழுதிக் காட்டியிருக்கிறார் சுப்ரமணிய பாண்டியன். வாசிக்க சுகமான கதைகள் என இப்படி இவரது ஒவ்வொரு கதைகளையும் விவரிக்கலாம் என்று தோன்றுகிறது.

    வாசிக்கிற வாசகன் அதிர்ஷ்டசாலி.

    மிக்க அன்புடன்,

    எழுத்தாளர்

    எஸ். சங்கரநாராயணன்

    என் வாழ்வியல் அனுபவங்களே என் படைப்புலகம்

    எனது முதல் தொகுப்பின் பரிணாம வளர்ச்சிதான் இந்த அம்மா வீடு என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமிதம் கொள்கின்றேன்.

    நமக்கு பல சம்பவங்கள் மனதில் தோன்றினாலும் சமூகத்திற்கு தேவையான விஷ்யத்தை மட்டும் கதைகளாக்கி படைப்பது என்னும் முயற்சியில்தான் இந்த அப்பாவின் மிதிவண்டி என்ற எனது முதல் சிறுகதைத்தொகுப்பு பிரவாகம் எடுத்தது. அது தந்த உற்சாகமும் உந்துதலும் எண்ணிலடங்காதவை என்றாலும் அதிலிருந்து சிலவற்றை நான் பகிர்ந்துதான் ஆகவேண்டும்.

    திருக்குறள் பேரவை - கருவூர், 35ஆம் ஆண்டு விழாவை ஒட்டி சிறந்த நூல் விமர்சனப்போட்டியில் எனது அப்பாவின் மிதிவண்டி சிறுகதைத்தொகுப்பு, இரண்டாம் பரிசுக்கு தேர்வு பெற்று மிகுந்த பாராட்டும், பொற்கிழியும் கொடுத்து எங்களை கௌரவித்த அதன் செயலாளர் ஐயா மேலை. பழனியப்பன் அவர்களுக்கும், அவர்தம் குழுவினற்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    அவர்களை தொடர்ந்து சேலம் தமிழ்ச்சங்கத்தில், ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி, நூல் ஆய்வு போட்டியில் என்னுடைய சிறுகதைத்தொகுப்பு, உகந்தப்பரிசுக்கு தேர்ந்தெடுத்த அதன் தலைவர் ஐயா சீனி. துரைசாமி அவர்களுக்கும் அவர்தம் குழுவினருக்கும் எனது வணக்கத்தையும் நன்றிகளையும் காணிக்கையாக்குகின்றேன்.

    அவர்கள் தந்த பாராட்டும் ஊக்கமும், இது நாள் பட்ட வலிகளெல்லாம் மறந்து, இரவு பகலெல்லாம் தொடர்ந்து உழைக்க வைத்து, என்னுடைய எழுத்திற்கு இன்னும் கூடுதல் வலு சேர்த்த அவ்வமைப்புகளுக்கு என்றென்றும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

    அந்த வரிசையில், கவிஞரும், எழுத்தாளருமான தேன் தமிழன், நெய்வேலி அவர்களும், எனது சகோதரியும், தமிழாசிரியருமான திருமதி ம. கலாமுருகேசன், விழுப்புரம் அவர்களும், ஆய்வாளர் திருமதி க. கவிதா, எம்.ஏ., பி.எட், சேலம் அவர்களும் அப்பாவின் மிதிவண்டி சிறுகதைத்தொகுப்பிற்கு சிறந்ததொரு ஆய்வுக்கட்டுரைகள் சமர்பித்து, அதன் பெருமைகளை உலகறிய செய்தார்கள்.

    இவர்களுடைய ஆழ்ந்த சுவாசத்தில் கதைகளில் ஒட்டியிருக்கும் மண்வாசனையை மனங்குளிர எடுத்தியம்பி பாராட்டினார்கள். உளமாற அவர்கள் வாழ்த்திய வாழ்த்துக்கள், என்னுடைய எழுத்துக்களுக்கு உரமாய் மாறி, செம்மையாகவும் செழுமையாகவும் இன்னும் பல கதைகள் வரப்பெற்று இந்த அம்மா வீடு என்ற தொகுப்பில் மரமாக வளர்ந்து தோப்பாகியிருக்கின்றன.

    அந்த தோப்பில் பலவிதமான சுவையான கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்படியாக வெவ்வேறு கால சூழலில் வெவ்வேறு சமூக சிந்தனைகள் நிறைந்த கதைக்களங்களாக அவற்றில் படைத்திருக்கின்றேன்.

    அவற்றில் ‘வயித்துப்பசி’ என்ற சிறுகதை பாலறாவாயன் கலைக்குழுமம், சங்கரன் கோவில் நடத்திய சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று அவர்களால் ‘சிந்தனைச் சிற்பி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. அச்சிறுகதை பலரது பாராட்டை பெற்றுத்தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அக்கலைக்குழுமத்திற்கும், அதன் நிர்வாக இயக்குனர் ச. விக்னேஷ் அவர்களுக்கும் என்றென்றும் நன்றிகள் பல.

    ‘மச்சக்கேசவன் தலைமை ஆசிரியர் ஓய்வு’ என்ற சிறுகதை தேனீர் பதிப்பகம் நடத்திய குறுங்கதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. அனைவரையும் கவர்ந்த படைப்பாக மாறி மேலும் பெருமை தேடித்தந்தது. அவர்களுக்கும் அவர்தம் குழுவிற்கும் என்றென்றும் நன்றிகள் பல.

    இப்படியாக ஆன்ம நேயம், பெண்மை, அறம், கல்வியின் பெருமை, நட்பு, அன்பு, முதியோர் பாதுகாப்பு, விழித்திரு போன்ற கதைக்களங்களாக இச்சிறுகதைகள் இந்த தொகுப்பில் இயங்குகின்றன, அவைகள் வாசகர்களின் வாசிப்பில், முக்கனியாய் என்றும் இனிக்கும் என்பதில் ஐயமில்லை.

    எப்போதும் என் எழுத்து பணிக்கு உந்து சக்தியாக, அடித்தளமிட்ட பத்திரிக்கைகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சி, தினமணி - கதிர், அமுதசுரபி, புதுவை வானொலி நிலையம், வாசக சாலை, சிறுகதைச் செம்மல் விருதளித்த தமிழ் இலக்கிய ஆய்வு மையம் - தர்ஷிணி பதிப்பகம் ஆகியோருக்கும் எனது வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வரும் என்.எல்.சி இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கும் என்றென்றும் நன்றி கடன்பட்டுள்ளேன்.

    இந்நூல் வெளிவர உறுதுணையாக இருந்து வருபவரும், கதைகள் அனைத்தையும் படித்து அதற்கு விமர்சனம் செய்து இன்னும் அவற்றை செழுமையடையச் செய்துக்கொண்டிருக்கும் நண்பரும், விமர்சகரும், எழுத்தாளருமான ஊத்தங்கால் ப. கோவிந்தராசு அவர்களுக்கு என்றென்றும் நன்றிகடன் பட்டுள்ளேன்.

    என்றும் பரிபூரண ஆசிகள் வழங்கிக்கொண்டிருக்கும் தமிழக அரசு விருதுப்பெற்ற பன்முக எழுத்தாளர், இலக்கிய பிதாமகன் ப. ஜீவகாருண்யன், வெம்பாக்கம் அவர்களுக்கும், என்னுடைய இலக்கியப் பணிக்கு எப்போதும் பெரும் பங்காற்றி வரும் பன்முக எழுத்தாளர், இலக்கிய பிதாமகன் பாரதிகுமார், நெய்வேலி, தீபக்ராஜ், தமிழறிஞர் மா .இராமச்சந்திரன் கட்டுமானப் பொறியாளர் அவர்களுக்கும் என்றென்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

    மிகுந்த பணிச்சூழலுக்கு மத்தியிலும் என்னுடைய பன்னிரெண்டு சிறுகதைகளையும் ஆழ்ந்து படித்து, அகமகிழ்ந்து, அற்புதமானதொரு அணிந்துரையை வழங்கிய இலக்கிய பிதாமகன் எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன், சென்னை ஐயா அவர்களுக்கு என்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

    அன்றும் இன்றும் என்றுமே எனது எழுத்துப் பணிக்கு உதவியாகவும் கதைகளைக்கேட்டு அகமகிழ்ந்து ஆசி வழங்கி வரும் பெரியப்பா த. மணி, மாமா சு. கோவிந்தசாமி, அம்மா கமலம்சுப்ரமணியன், மனைவி ச. ஜோதி, மகள் பா.ஜோ. பூஜாஸ்ரீ மற்றும் சகோதரர் தே. ரமேஷ், ம. குணசேகரன், ம. பாலூ, தே. சுரேஷ் மைத்துனர்கள் கே. ராஜீ, ஆர். திருமுருகன், ச.ஸ்ரீஸ்கந்தன், சு. முருகேசன் என்று நன்றிகள் சொல்ல என் உறவுகள் பட்டியல் இன்னும் என் மனதில் நீண்டுக்கொண்டே இருக்கின்றன. அவர்களுக்கும் எப்போதும் நன்றிகடன் பட்டுள்ளேன்.

    கொஞ்சம்கூட சலிக்காமல் இந்த அம்மா வீடு சிறுகதைத்தொகுப்பிலும் கருப்பொருளுக்கு தக்க கதாப்பாத்திரங்களாக, கதை நாயகர்களாக உலா வந்து, உயிரோட்டமான கதாபாத்திரத்தினை ஏற்று, மக்கள் மனதில் இன்றும் நீங்கா இடம்பிடித்திற்கும் என் முன்னோர்கள், மகான்கள், மற்றும் எங்கள் குலதெய்வத்தையும், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகின்றேன்.

    இந்த இலக்கிய உலகில் முதல்

    Enjoying the preview?
    Page 1 of 1