Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbu Arul Anandham
Anbu Arul Anandham
Anbu Arul Anandham
Ebook109 pages44 minutes

Anbu Arul Anandham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Churchill Pandian is a popular Journalist and also a Cultural Conceptualizer, Producer and Impresario for Classical Fine Arts.

He started his career at the Department of Atomic Energy, Government of India and served there for fourteen years where he also served as the Cultural Secretary for its Recreation Center.

As a Journalist, he has interviewed hundreds of celebrities from all walks of life for several magazines. He has penned several unique articles on art and culture.

He has conceptualized and produced several shows for the stage and television in India and abroad.

He has also directed several shows and documentaries and coordinated numerous shows for all the leading television networks.

He is the founder of UTSAV MUSIC, a non-profit fine art organization striving to promote the traditional Indian classical arts and taking the different art forms to the common audience in India and abroad.

UTSAV MUSIC has produced and presented several unique shows bringing together various classical dance forms from different parts of India on one platform.

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580129804728
Anbu Arul Anandham

Related to Anbu Arul Anandham

Related ebooks

Reviews for Anbu Arul Anandham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbu Arul Anandham - Churchill Pandian

    http://www.pustaka.co.in

    அன்பு அருள் ஆனந்தம்

    Anbu Arul Anandham

    Author:

    சர்ச்சில் பாண்டியன்

    Churchill Pandiyan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/churchill-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ‘ஞான யோகி' ஸ்ரீ அரவிந்த அன்னை

    2. மலர் தத்துவம்

    3. ‘ராஜ யோகி' ரமண மகரிஷி

    4. ஸ்ரீ ரமணரின் குரல்

    5. உள்ளுணர்வின் வெளிப்பாடு...

    6. திருவண்ணாமலை மகிமை

    7. 'கர்ம யோகி' அன்னை தெரசா

    8. அன்னை பெற்ற சிறப்பு விருதுகள்!

    9. 'அன்னை இல்லம்' டைம் - டேபிள்

    10. அன்னை தெரசாவின் பொன்மொழிகள்!

    முன்னுரை

    அன்பார்ந்த வாசகர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

    சாதாரணமாய் குழந்தைகள் தங்களது மனசுக்குள் தங்களை மிகச் சிறந்த ஓவியர்களாக எண்ணிக்கொண்டு கோடுகளாகவும், வட்டங்களாகவும், காகிதத்தில் மனம் போனபடியெல்லாம் வரைவார்கள்...

    கேட்டால் - 'இது அம்மா' 'இது அப்பா' என்று தாங்கள் வரைந்த கிறுக்கல்களுக்கு விளக்கமும் கொடுப்பார்கள். 'அப்பாவுக்குப் பார் பெரிய மீசை...' என்று வளைந்த கோடுகளைச் சுட்டிக்காட்டி குழந்தை சொல்லும்போது நமக்கு சிரிப்பு வரும். சிரமப்பட்டு அடக்கிக்கொள்வோம். ஏன்

    ஆரம்பமோ முற்றுப்புள்ளியோ தெரியாத அந்தக் கிறுக்கலில் நமக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் குழந்தைக்கு அதன் அப்பா தெரிகிறார்... அம்மா கருணை ததும்ப சிரிக்கிறார்... அதுபோல்தான் இதுவும்.

    இந்தக் கட்டுரைகளில் நான் வரைந்துள்ள புனிதர்களைப் பற்றி என்னைவிட உங்களுக்கு நிறையத் தெரிந்திருக்கலாம். அப்படி விஷயம் தெரிந்தவர்கள் இவர்களோடு இன்னும் நிறையப் பழகியவர்கள் - சம்பந்தப்பட்டவர்கள் - சிரமம் பார்க்காமல் எனக்கு எழுதினால் இந்தக் குழந்தை விரல்களின் கிறுக்கல்கள் தெளிவாகி மேலும் விஸ்தரிக்கும்.

    ஸ்ரீ அரவிந்த அன்னையின் பரிச்சயம் எழுத்தாளர் திருமதி. அனுராதா ரமணன் அவர்களால்தான் எனக்குக் கிடைத்தது. வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்களைத் தாண்டி வந்த அவர், இன்றளவும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பது 'அன்னை'யின் கரங்களைத்தான்.

    எத்தனையோ எழுத்து வேலைகள்... எத்தனையோ சரீர உபாதைகள்... இத்தனைக்கும் நடுவில் தினமும் காலையில் நிதானமாக ஒவ்வொரு மலராக பார்த்துப் பார்த்து அன்னையின் திருவுருவத்தை அவர் அலங்கரிக்கும்போது, ஆரம்பத்தில் எனக்கு வேடிக்கையாகத்தான் இருந்தது.

    தினமும் இத்தனை பணம் கொடுத்து பூக்கள் வாங்குவதைவிட ஓரிரு மலர்கள் சாற்றினால் போதாதா என்று கேட்பேன். அதற்குப் பல சமயங்களில் அவரிடமிருந்து பதில் வராது. அப்படியே வந்தாலும் - 'சாப்பிடுவதற்கு எவ்வளவு செலவழிக்கிறோம்... உடுப்பதற்கு எவ்வளவு செலவழிக்கிறோம்... ஓரிடத்திலிருந்து ஓரிடத்திற்குப் போவதற்கு வாகனங்களுக்கு எவ்வளவு செலவழிக்கிறோம்... மருத்துவத்திற்கும், கேளிக்கைகளுக்கும் எவ்வளவு செலவழிக்கிறோம்... அதெல்லாம் பார்க்கும்போது இது ஒன்றுமே இல்லை...என்பார்.

    இன்றுவரையில் இவர் வீட்டில் மலர் அலங்காரத்திற்குக் குறைவே இல்லை. ஒரு முறை அவசரமாக அவர் வங்கிக்குக் கிளம்பும்போது பூக்காரர் வந்தார்.

    'இப்போ என்னிடம் கையில் இவ்வளவுதாம்பா பணம் இருக்கு... பேங்க் போய்தான் எடுக்கணும்' என்று இவர் சொல்ல - பூக்காரரும் 'என்னிடமும் இன்னிக்கு இவ்வளவுதான்மா பூவே இருக்கு. லாரி ஸ்டிரைக்கில் பூக்கள் வரவில்லை' என்றார். நான் திகைத்துப் போனேன்.

    அன்னைக்குத் தெரியும். அதற்கேற்றபடி பூக்களைக் கொண்டு வரச் செய்வார். அன்னைக்குத்தான் தனது அன்பர்களிடத்தில் எத்தனை பரிவு… இதுபோல எத்தனையோ சம்பவங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

    திரு. சூரிஜித் என்கிற நல்ல குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் திருவண்ணாமலை ஸ்ரீ ரமண மகரிஷி பற்றிய செய்திகள் அனைத்தையும் கேட்கும், படிக்கும், பார்க்கும், உணரும் பாக்கியம் பெற்றேன்.

    ரமணாஸ்ரமம் ஒரு உன்னதமான இடம். அங்கு தவழும் காற்றும், ஆடும் மயிலும், காலடியில் படும் மண்ணும்கூட ரமணகீதம் பாடும். யாரோ சொல்லக் கேள்வி - ஆதிசங்கரர் கால்நடையாகவே எல்லா திருத்தலங்களுக்கும் சென்றபோது - திருவண்ணாமலை வந்தவுடன் ஊருக்குள் போகாமல் அப்படியே திரும்பிவிட்டாராம். அதற்கு அவர் சொன்ன காரணம்

    'எத்தனையோ மகான்களின் பாதம் பட்ட மண். இன்னும் எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில் உலா வரப்போகிறார்கள். அப்பேர்ப்பட்ட புண்ணிய பூமியை நான் மிதித்தால்கூட பாவம்.'

    உண்மைதான். எத்தனையோ மகான்கள் திருவண்ணாமலையில் அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், ஸ்ரீ ரமணர், ஸ்ரீ ராம்சுரத்குமார் என்று பல அவதாரப் புருஷர்களின் அணிக்குப் பாத்திரமான அந்த மண்ணின் தரிசனம் - என் குடும்ப நண்பர் திரு. சூரஜித் மூலமாகக் கிடைக்க வேண்டும் என்று எனக்கு எழுத்து விதி இருக்கிறது. அவர் வீட்டுக் காலண்டரில் காட்சியளித்த ஸ்ரீ ரமணரின் திருவுருவப் படங்களில் மனம் ஒன்றிப்போனேன். அந்தக் கண்கள் பேசும். இன்னும் சற்று உற்றுப் பார்த்தால் சுவாசம் உள்ளும் புறமும் ஓடுவது போல, நாசி விரிந்து சுருங்குவது போலத் தோற்றமளிக்கும். அன்பு... அன்பு... அன்பைத் தவிர வேறெதுவுமே தெரியாத தூய புருஷர். வலியோ, வேதனையோ எதுவானாலும் புன்னகையுடன் ஏற்ற ஜீவன்முக்தர். ஆடு, மாடு, பூனை, நாய், மான், மயில், புறா என்று அவரைச் சுற்றி வாயில்லா ஜீவன்கள் அனேகம். ஆடித்திரியும் குரங்குகூட கட்டுப்பட்டு நின்ற விந்தையை கதையாகக் கேட்கும்போது மெய்சிலிர்த்துப் போனேன்.

    கடைசியாக மதர் தெரஸா. இது தனிக்கதை. எனது இரத்த நாளங்களோடு ஒன்றிப்போன திருவுருவம். என் தாயார், 'பிரதிபலனின்றி பிறருக்கு நாம் செய்யும் உதவியே கடவுளுக்கு நாம் ஆற்றும் தொண்டு' என்று அடிக்கடி சொல்வார். இதற்கு அவர் உதாரணமாகக் காட்டியதெல்லாம் மதர் தெரஸாவைத்தான். 'நான் ஆறு குழந்தைகளுக்குத்தான் தாயார். ஆனால் அந்த அம்மா ஆயிரம் குழந்தைகளுக்குத் தாய். அதுபோல வருமா... வருமா...' என்று அடிக்கடி கேட்பார். நான் விளையாட்டுக்குச் சொல்லுவேன் -

    அசப்பில் பார்த்தால் நீங்ககூட அவங்களை மாதிரித்தான் இருக்கீங்க...

    போதுமே...

    இப்படி அம்மா சொல்லிச் சிரிக்கும் அந்த பொக்கைவாய் மோகனம் இன்னும் என் கண் எதிரே நிற்கிறது. மதர் தெரஸா கர்த்தருக்குள் அடங்குவதற்கு முன்பே என் தாய் எஸ்தர்

    Enjoying the preview?
    Page 1 of 1