Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poo Pesum Vaarthai
Poo Pesum Vaarthai
Poo Pesum Vaarthai
Ebook254 pages1 hour

Poo Pesum Vaarthai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறப்புரை

திரு. கே.ஆர்.ஸ்ரீனிவாச ராகவன்

(கல்கி - தீபம் - பொறுப்பாசிரியர்)

பூக்கள் பேசுமா? பேசும். அவற்றோடு பேசுவது இறைவனாயிருக்கும்போது! ஆனால், ஷ்யாமா அநாயாசமாக அவற்றோடு பேசியிருக்கிறார். தங்க மழையாய் சொரியும் சரக்கொன்றையைப் பார்க்கும் போது பூரிப்பதாகட்டும்; தும்பை வட்டம் அமைத்த தாகட்டும்; பகவதிக்குப் பூவாடை செய்ததாகட்டும், ஒவ்வொன்றிலும் தாம் கரைந்த தன்மையை அவர் வெளிப்படச் செய்கிறார்.

குழந்தைப் பூக்களான பெண் சிசுக்கள் கொலை செய்யப்படுவது குறித்து - நேரில் கள ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றவர்; தம் தாத்தா பாட்டி பெயரில் டிரஸ்ட் அமைத்து, ஹோசூரில் அறுபதுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு கல்வி வசதியோடு, வீடுகளையும் கட்டித் தந்திருப்பவர் ஷ்யாமா. இங்கே, பூக்குழந்தைகள் குறித்து பரவசமூட்டும் பதிவுகளை செய்திருக்கிறார்.

பூக்கள் என்பதென்ன? வாசனை திரவியங்களுக்கான மூலப் பொருளா? இல்லை. பூக்கின்ற மலர் யாவும் இறைவனுக்கே என்கிறார் ஷ்யாமா. ஆனால், தொண்டரடிப் பொடியாழ்வார், 'பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி' என்று, மலர்களிலும் பகவானைக் கண்டு ஆனந்தித்தார். ஆம்; இறைவனின் ஆனந்தச் சிதறலாகவே பரிமளிக்கின்றன பூக்கள். அவற்றைப் பார்ப்பதே பேரானந்தம்தான். அவற்றில்தான் எத்தனையெத்தனை வடிவங்கள்? எவ்வளவு அழகான வண்ணச் சேர்க்கைள்? எத்தனை விதமான வாசனைகள்? அவை மலர்கின்ற பொழுதுகளிலும், காலங்களிலும் தான் எத்தனை வேறுபாடு?

புல், செடி, கொடி, மரம், புதர், குளம்... என்று அவை தோன்றுகின்ற இடங்கள் பற்பல. ஆனால், பூ என்கிற ஒற்றை எழுத்துக்குள் அவையனைத்தும் இடங்கொண்டு விடுகின்றன. தம்மைக் கட்டுகின்ற நாருக்கோ, நூலுக்கோ இசைந்து கொடுத்து அழகான மாலையாகின்றன.

“அனைவரின் பார்வைக்கும் இனியவராய் இருங்கள்; நேசிக்கத்தக்கவராய் இருங்கள்; சந்தோஷம் தருபவராய் இருங்கள்; அணுக எளியவராய் இருங்கள்; இணக்கமானவராக இருங்கள். அப்படியானால், நீங்களே மாலைதான்” என்று நமக்கு உபதேசிக்கின்றன பூக்கள்.

பூக்கள் என்றதும் பெண்களின் கூந்தலிலும், இறைவனின் திருமேனியிலும் இடம்பெறுபவை என்றுதான் தோன்றும். ஆனால், இலக்கியம், வரலாறு, அறிவியல், மருத்துவம் மற்றும் வழிபாடு என, அனைத்துக் கோணங்களிலும் தங்களின் பயன்பாடு பற்றி இவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கின்றன பூக்கள். அதை அழகாக, அருமையாக, பதியனிட்டிருக்கிறார் ஷ்யாமா.

பொதுவாக, பூச்செடிகளை ஊன்றி நீரூற்றி வளர்த்து நந்தவனம் அமைப்பார்கள். ஆனால், பூக்களே அமைத்துக் கொண்டுள்ள நந்தவனத்தை இங்கே காண்கிறோம். பூக்களின் நறுமணம் நம்மை மயக்க வல்லது. அதைப் போன்றே, இந்தத் தொடர் வாசகர்களின் மனத்தையும் ஈர்த்தது; லயிக்கச் செய்தது என்பதில் மிகையில்லை. இதை வாசிக்கும்போது, அந்த அனுபவம் உங்களுக்குள்ளும் ஏற்படும் என்பது நிச்சயம்.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580126104579
Poo Pesum Vaarthai

Read more from Dr. Shyama Swaminathan

Related to Poo Pesum Vaarthai

Related ebooks

Reviews for Poo Pesum Vaarthai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poo Pesum Vaarthai - Dr. Shyama Swaminathan

    http://www.pustaka.co.in

    பூ பேசும் வார்த்தை

    Poo Pesum Vaarthai

    Author:

    Dr. ஷ்யாமா ஸ்வாமிநாதன்

    Dr. Shyama Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/shyama-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    சிறப்புரை

    காளிகாம்பாள் கருணை

    ஸ்ரத்தாஞ்சலி?

    பூக்களால் பூஜிப்போம் பூக்களோடு பேசுவோம்

    1. 'பிரபஞ்சத் தொட்டில்'

    2. 'பூமிக்கு வந்த தேவ மலர்'

    3. 'கடவுளின் பரிசு'

    4. 'கற்பு'

    5. பிஞ்சிலம்

    6. போருக்கேத்த பூவிது

    7. ‘ஸ்வஸ்திகம் எனும் சோத்திகப் பூ’

    8. அர்க்க புஷ்பம்

    9. கேதகி புஷ்பம்

    10. சிவலோக மலர்!

    11. 'வகுள புஷ்பம்'

    12. 'தேவி புஷ்பம்'

    13. 'கரவீர புஷ்பம்'

    14. 'அபராஜித புஷ்பம்'

    15. 'சம்யாக புஷ்பம்'

    16. ஹரசம்பா புஷ்பம்

    17. 'பிந்துக புஷ்பம்'

    18. 'தருணி புஷ்பம்'

    19. 'மகப்பேறு மகத்துவ மலர்'

    20. குறிஞ்சிப்பூ

    21. 'கயிலையின் பனித்தூறல்'

    22. 'நாற்றத்துழாய்'

    23. 'பில்வ புஷ்பம்'

    24. புஷ்பாஞ்சலி

    முன்னுரை

    பூஜை மணியோசை கேட்டு விழித்தெழுந்தேன். ஓ! என் பாட்டி அதிகாலை வேளை பூஜையை ஆரம்பித்து விட்டாள். பதறி எழுந்து, ஓடி கொல்லைக் கதவைத் திறந்தேன். 'எப்படா திறப்பார்கள்?' என்று காத்துக் கிடந்ததைப் போல் 'ஜில்'லென்று காற்று வீசியது. இருள் விலகாத முன் காலைக் காற்று. குளிர் காற்றோடு போட்டி போட்டுக்கொண்டு 'கும்'மென்று நாசிக்குள் ஏறியது மலர்களின் கலவையான மணம்.

    கும்மிருட்டு வேளையிலும் வெண் படுக்கை விரித்தது போல் கொட்டிக் கிடந்தன பவழ மல்லி மலர்கள். நல்ல வேளையாக என் வீட்டு தோட்டத்தில் ஒரு எல்லை வரை சிமெண்ட் தரைதளம் போடப்பட்டிருந்தது. கொட்டிக் கிடந்த பவழ மல்லிகைகளுக்குத் துணையாக, அதன் அருகிலேயே ஓங்கி வளர்ந்திருந்த பன்னீர் புஷ்பங்களும் பூமியில் சங்கமித்திருந்தன. அவசர அவசரமாக, என் பாவாடையின் அடியைக் கூடை போல் பிடித்துக்கொண்டு லாவகமாக வாரி எடுத்துக் கொண்டேன். 'போதும்' என்ற மனம் பூக்களிடம் செல்லுபடியாகுமா என்ன? இன்னும் கொஞ்சம் கிடைத்தால் தேவலையே என்று மனம் கெஞ்ச, பத்து வயது சிறுமிக்குரிய பலத்துடன் பவழ மல்லிகை மரத்தை ஒரு உலுக்கு உலுக்கி மகிழ்ந்தேன். ஒரு சில மலர்கள் உதிர்ந்து என்னை உற்சாகப்படுத்தின. இருட்டு குகையாக காட்சியளித்த கிணற்றடியின் மற்றொரு புறம் மருதாணி மலர்கள். மஞ்சள் வண்ணத்துடனும், பிரத்தியேகமான நறுமணத்துடனும் பூத்து குலுங்கி இருப்பதை அண்ணாந்து பார்த்தேன். அவை மட்டும் தனியாக இருப்பானேன் என்று அருகிலேயே குண்டு மல்லிகைச் செடியும் பின்னிப் பிணைந்து, மருதாணி மரத்தில் வெள்ளை மல்லிகை பூத்தது போல் பிரகாசித்தன. அத்தனையும் பறித்து என் பாட்டி பூஜை செய்யும் அம்பாளின் திருப்பாதத்தில் கொடிவிடத் தான் ஆசை. ஆனால் அது என் பிரயத்தனத்தில் ஆகின்ற காரியமாக இல்லை. என் சகோதரப் படைகள் சகாயம் செய்தால் தான் உண்டு. பாவம் தூங்குகிறார்கள். விட்டு விட்டேன்.

    பூஜையறையில், தாம்பாளத்தில் நான் கொட்டிய மலர்களைப் பார்த்ததும் பாட்டி அகமகிழ்ந்து போய்விட்டாள். அடி சமத்தே... எழுந்துட்டியாடி கண்ணு... பூ வேற பறிச்சிண்டு வந்துட்டியா. அம்பாளுக்கு கொண்டாட்டம் தான் போ... பாட்டி சந்தோஷமாய் பூஜையைத் தொடர்ந்தாள். நானும் ஊசியும் நூலுமாய் பவழமல்லி கையை ஒன்றன் மீது ஒன்றாகக் கோர்த்து மாலை தயாரிப்பதில் மும்முரமானேன். அப்போது எனக்கு வயது பத்து இருக்கலாம்.

    இப்படி தான் எனக்கு பூக்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

    'பூ பேசும் வார்த்தை' என்ற தலைப்பில் தொடர் எழுத முடியுமா என்று 'கல்கி'யின் 'தீபம்' பொறுப்பாசிரியர் திரு. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் கேட்டபோது ஒரு சில நொடிகள் ஸ்தம்பித்துப் போய்விட்டேன். பூக்கள் என்னுடன் பேசிய வார்த்தைகளைவிட, நான்தானே பூக்களுடன் அதிகம் பேசியிருக்கிறேன். தமிழகத்தின் தெற்குக் கோடியில் இருக்கும் புதுக்கோட்டை வீட்டுத் தோட்டத்தில் பூக்களுடன் பேசுகின்ற என் வழக்கம், கேரளத்து வண்ண மலர்களில் பிரயாணித்து, அமெரிக்காவில் சீயாட்டில் நகரத்தில் என பெண் வீட்டுத் தோட்டத்து பெரிய பெரிய ரோஜாக்களில் தொடர்ந்து, போர்ட்லாந்து (Portland) ரோஜா தோட்டத்தில் லட்சக் கணக்கான பூக்களுடன் அதுவும் கறுப்பு ரோஜாக்களுடன்கூட காதல் மொழி பேசியிருக்கிறேன்.

    லட்சம் மலர்கள் என்று சொல்லிவிட்டேனே... மிகைப்படுத்துதல் என்று நினைத்து விடாதீர்கள். லட்சம் பூக்களுக்கும் எனக்கும் உண்மையிலேயே ரொம்பவும் நெருங்கிய சிநேகிதம். ஒவ்வொரு ஆண்டும் எனக்கும் என் குடும்பத்தினர் அனைவர்க்கும் லட்சம் பூக்களுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருந்தது.

    மார்கழி மாதம் வந்துவிட்டால், எங்கள் மனதுக்கு கொண்டாட்டம்தான். மலர்கள்... மலர்கள்... மலர்கள்! அரண்மனை போன்ற வீட்டின் அறைகளில், வித விதமான வண்ண, வண்ண மலர்களால், கூடை கூடையாக கொட்டப்பட்டிருக்கும். விதவிதமான மலர்களால் வாசம் வீசிக் கொண்டிருக்கும். மதுரை, தஞ்சாவூர், திருச்சி என்று பல ஊர்களிலிருந்தும் புதுக்கோட்டைக்கு வந்து போகும் டி.வி.எஸ்., பாண்டியன் பேருந்துகளில் மலர்கள் ஓலைக்குள், மூங்கில் கூடைக்குள் என்று மூட்டை மூட்டையாய் கொண்டு வந்து கொட்டப்பட்டு வீடு நிறைந்து போகும். செவ்வரளி, மஞ்சள், சாமந்தி, சம்பங்கி, மருக்கொழுந்து, கதிர் பச்சை, துளசி, மல்லிகை, முல்லை, தாமரை, ரோஜாக்கள் என்று பூக்களின் குவியல்களுக்கிடையே கரு வண்டுக் கூட்டங்கள் என நானும் என் சகோதரர்களும் குதித்துக் கும்மாளமிடுவோம்.

    இப்போதெல்லாம் இத்தகைய மலர் குவியல்களை ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமென்றால் கோயம்பேடு சந்தைக்கு தான் செல்ல வேண்டும் போலிருக்கிறது.

    அது சரி, எதற்காக இத்தனை மலர்களின் சேகரிப்பு? உதிரிப் பூக்கள் மட்டுமா? மலை போல் குவிந்து கிடக்கின்றனவே மலர் மாலைகள் ஒன்றா, இரண்டா? நூற்றுக் கணக்கில் இருக்கும் போலிருக்கே. யாருக்கு இவை?

    கம்பீரமாய் கருணை விழிகளுடன் காட்சி தந்து கொண்டிருக்கும் எங்கள் வீட்டு அன்பு தெய்வம் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரிக்குதான். அத்தனை மலர்களும்! அவளுக்குதான் லட்சம் அர்ச்சனைகள். அதுவும் ஒரே நாளில்.

    ஆண்டாண்டு காலமாய், ஊரே கூடி, உள்ளம் கனிந்து, பூக்களால், பாக்களால், ஆட்டங்களால், பாட்டங்களால், கும்மியடித்து கோலாட்டம் போட்டுக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவளை! ஆதி பராசக்தியை! அகிலத்து நாயகியை! ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம மந்திரத்தை சுமங்கலிகள் உச்சரித்துக் கொண்டே, ஒவ்வொரு மலராய் ஒரு லட்சம் மலர்களும் அவள் திருவடி சென்ற பிறவிப்பயன் அடைந்துவிடும்.

    அப்போதுதான் பூக்களுக்குள் எத்தகைய போட்டி? நான் சொன்னால் உங்களால் புரிந்து கொள்ள முடியுமா என்று எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு பூக்களும் எங்களின் காதுகளுக்குள் கெஞ்சும்! உண்மையாகத்தான். "என்னை... என்னை எடுத்துக் கொண்டு போய் அவள் பாதங்களில் சேர்த்து விட மாட்டீர்களா? என்று கெஞ்சும். 'ஷ்யாம் இந்த பூ ரொம்ப நேரமாய் கெஞ்சுதும்மா. நீ இப்ப எடுத்துண்டு போகலை என்றால் ரொம்பவும் அழுதுடும் சொல்லிட்டேன்' என்று என் சகோதரர்கள் சொல்லியபடியே அவர்கள் நிரப்பித்தரும் பூ கூடையை எடுத்துக் கொண்டு போய், உள்ளே அர்ச்சனை செய்து கொண்டிருக்கும் பெண்களிடம் கொடுத்துவிட்டு, 'பூ சந்தோஷமா இருக்குடா' என்பேன்.

    பூக்கள் இப்படி எங்கள் குடும்பத்தினருடன் நிறையவே பேசுவதை அவ்வப்போது என் அம்மா சொல்வதுண்டு. ஏனோ நானும் என் சகோதரர்களும் இத்தகைய பூஜையின் போது சில வகை பூக்களை கடைசி வரை எடுத்துக் கொடுக்கவே மாட்டோம். அப்போதெல்லாம் பூக்கள் கொட்டியிருக்கும் அறைக்கு பாட்டி வந்து பார்த்து, டேய் ஏண்டா இந்த பூக்களெல்லாம் என்ன பாவம் பண்ணித்து? உங்களுக்கு, பிடிக்கலையா? பாவம்டா, 'எத்தனை நாளா பூத்துக் கிடக்கிறோம். வெறுந்தரையில் விழுந்து வீணாகப் போய்விடுவோமோன்னு பயந்துண்டிருந்தோம். அவள் சன்னதிக்கு கொண்டு வந்து சேர்த்து எங்களை, அவள் திருவடி சேர்க்க மாட்டேங்கிறாளே, இது நியாயமா?'ன்னு கெஞ்சறது உங்கள் காதுல விழலியா? அள்ளிண்டு போய் கொடுங்கடா பாட்டி அதட்டலாய் சொல்லி விட்டு உள்ளே போவாள்.

    'பாட்டிக்கிட்டகூட பூவெல்லாம் பேசுமா? பாட்டிக்கு காது கேட்காதே' எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

    அரளியை எடுத்துப் போனால், சம்பங்கி முகம் சுளிக்கிறது. சம்பங்கியை எடுத்துப் போனால் சாமந்தி முகம் வாடுகிறது. சாமந்தியை எடுத்துப் போனால் துளசி கெஞ்சுகிறது. துளசியை எடுத்துப் போனால், வில்வம் விட்டேனா பார் என்கிறது. மருவும், மரிக்கொழுந்தும் பரிதாபமாய் பார்வையில் கெஞ்சுகின்றன. இவைகள் எதுவும் என் கற்பனை இல்லை. நிஜம்தான். பூக்களோடு ஜீவிதம் நடத்தும் மனிதர்களைக் கேட்டுப் பாருங்கள். பூக்களின் வார்த்தைகளை விதம்விதமாய் சொல்லுவார்கள்.

    அதற்கும் ஒரு நிஜமான நிகழ்ச்சியை சொல்லுகிறேன்.

    சென்னை பாண்டிபஜாரில் ஒரு பூக்காரி. நடுத்தர வயது பெண், என்னிடம், பூ வாங்கும்மா, வாங்கும்மா என்று விடாமல் துரத்திக் கொண்டே வந்தாள். பூவை வேண்டாம் என்று சொல்லக் கூடாது என்பதால் இருக்கும்மா விட்டு விடேன் என்றபடியே அவளை விட்டு நகர்ந்தேன்.

    நான் விட்டாலும் உன்னை இந்த பூ விடாது போலிருக்கே. உங்கிட்ட தான் வருவேன்னு அடம் பிடிக்குது பார் என்றாள். நான் ஸ்தம்பித்துப் போய் அவளைத் திரும்பிப் பார்த்தேன். அவளுடைய கண்களை ஏனோ எனக்குப் பிடித்தது. ரொம்ப நல்லா பேசறியே என்றேன். அதற்கும் அவள், நா எங்க பேசறேன். இந்த பூ தான் பேசுது. நம்பினா நம்பு, நம்பாட்டி போ. இது உன்கிட்ட தான் வருவேன்னு அடம் பிடிச்சு அழுவுது. என்றாள். அலட்சியமாக நின்றாள். என்னால் அதற்குப் பிறகும் அவளைத் தாண்டிச் செல்ல முடியவில்லை. அவள் வறுமையை மீறிய விஷயம் ஏதோ ஒன்று அவளிடம் இருப்பதாக எனக்குப் பட்டது.

    'உன் பெயரென்ன?'

    'மல்லிகா.'

    அதுவும் பூவா?

    'எங்க பரம்பரையே பூக்கார குடும்பம் தான் தாயீ. எங்க அப்பன் பேரு மரிக்கொழுந்து, எங்க பாட்டன் பேரு முல்லைநாதன். பூ கட்றதும், பூ விக்றதும் தான் தொழிலே.'

    'எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு.’

    ‘போங்கம்மா.’

    ‘நீ பூக்களோட பேசுவியா, இல்லை பூ உன்னோட பேசுமா?'

    'ரெண்டும்தான். சில சமயம் சந்தோஷமா பேசுவோம். சில சமயம் சோகமா பேசுவோம். என் கதைய சொல்லிகிட்டே தானே பூ கட்டுவேன். இவங்களும் (பூக்களும்) எதிர் பேச்சு பேசாம கேப்பாங்க.'

    'குழந்தைகள் இருக்கா உனக்கு?’

    ‘இருந்திச்சு, இப்ப இல்லை' குபீர் என்று அவள் கண்களில் கண்ணீர் வெள்ளமெனப் பாய்ந்தது. நான் பயந்தே போய் விட்டேன்.

    'என்ன ஆச்சும்மா. நான் எதாவது தப்பா கேட்டுட்டேனா?'

    'வேணாந் தாயீ. அதை வுடு. இப்ப பூ வேணுமா வேணாமா?'

    'என்கிட்டதான் வருவேன்னு அடம் பிடிச்சு அழற பூ எதுவோ அதை கொடு.’

    ‘இந்தா வச்சுக்கோ’ என்று அத்தனையும் அள்ளி என் கையில் கொடுத்தாள். இத்தனையுமா? எவ்வளவு?

    'எல்லாந்தான் அழுவுது. அடம் பிடிக்குது. இருநூறு சம்பாதிப்பேன். நீ நூறு கொடு போதும்' என்றாள். எனக்கும் வேண்டாம். அவளுக்கும் வேண்டாம் என்று நூற்றைம்பது ரூபாய்களைக் கொடுத்துவிட்டு 'சந்தோஷமா' என்று கேட்டேன்.

    அவள் சிரித்துக்கொண்டே நகர்ந்து போனாள்.

    வீட்டிற்கு வந்து நடந்ததைச் சொன்னதும், என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து 'சரியான ஏமாளி' என்று பட்டம் சூட்டினார்கள்.

    எனக்குக் கோபம் வரவில்லை. அந்த பூக்காரியிடம் ஏமாந்து போனேனா இல்லை பூக்களிடம் ஏமாந்து போனேனா தெரியவில்லை. ஆனால் என் வீட்டு தெய்வங்களுக்கு அன்று கொண்டாட்டம்.

    இனி... உங்களுக்கும் உங்களோடு எனக்கும் பூக்களோடு கொண்டாட்டம்தான்.

    அன்புடன்

    ஷ்யாமா

    *****

    சிறப்புரை

    திரு. கே.ஆர்.ஸ்ரீனிவாச ராகவன்

    (கல்கி - தீபம் - பொறுப்பாசிரியர்)

    பூக்கள் பேசுமா? பேசும். அவற்றோடு பேசுவது இறைவனாயிருக்கும்போது! ஆனால், ஷ்யாமா அநாயாசமாக அவற்றோடு பேசியிருக்கிறார். தங்க மழையாய் சொரியும் சரக்கொன்றையைப் பார்க்கும் போது பூரிப்பதாகட்டும்; தும்பை வட்டம் அமைத்த தாகட்டும்; பகவதிக்குப் பூவாடை செய்ததாகட்டும், ஒவ்வொன்றிலும் தாம் கரைந்த தன்மையை அவர் வெளிப்படச் செய்கிறார்.

    குழந்தைப் பூக்களான பெண் சிசுக்கள் கொலை செய்யப்படுவது குறித்து - நேரில் கள ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றவர்; தம் தாத்தா பாட்டி பெயரில் டிரஸ்ட் அமைத்து, ஹோசூரில் அறுபதுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு கல்வி வசதியோடு, வீடுகளையும் கட்டித் தந்திருப்பவர் ஷ்யாமா. இங்கே, பூக்குழந்தைகள் குறித்து பரவசமூட்டும் பதிவுகளை செய்திருக்கிறார்.

    பூக்கள் என்பதென்ன? வாசனை திரவியங்களுக்கான மூலப் பொருளா? இல்லை. பூக்கின்ற மலர் யாவும் இறைவனுக்கே என்கிறார் ஷ்யாமா. ஆனால், தொண்டரடிப் பொடியாழ்வார், 'பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி' என்று, மலர்களிலும் பகவானைக் கண்டு ஆனந்தித்தார். ஆம்; இறைவனின் ஆனந்தச் சிதறலாகவே பரிமளிக்கின்றன பூக்கள். அவற்றைப் பார்ப்பதே பேரானந்தம்தான். அவற்றில்தான் எத்தனையெத்தனை வடிவங்கள்? எவ்வளவு அழகான வண்ணச் சேர்க்கைள்? எத்தனை விதமான வாசனைகள்? அவை மலர்கின்ற பொழுதுகளிலும், காலங்களிலும் தான் எத்தனை வேறுபாடு?

    புல், செடி, கொடி, மரம், புதர், குளம்... என்று அவை தோன்றுகின்ற இடங்கள் பற்பல. ஆனால், பூ என்கிற ஒற்றை எழுத்துக்குள் அவையனைத்தும் இடங்கொண்டு விடுகின்றன. தம்மைக் கட்டுகின்ற நாருக்கோ, நூலுக்கோ இசைந்து கொடுத்து அழகான மாலையாகின்றன.

    அனைவரின் பார்வைக்கும் இனியவராய் இருங்கள்; நேசிக்கத்தக்கவராய் இருங்கள்; சந்தோஷம் தருபவராய் இருங்கள்; அணுக எளியவராய் இருங்கள்; இணக்கமானவராக இருங்கள். அப்படியானால், நீங்களே மாலைதான் என்று நமக்கு உபதேசிக்கின்றன பூக்கள்.

    பூக்கள் என்றதும் பெண்களின் கூந்தலிலும், இறைவனின் திருமேனியிலும் இடம்பெறுபவை என்றுதான் தோன்றும். ஆனால், இலக்கியம், வரலாறு, அறிவியல், மருத்துவம் மற்றும் வழிபாடு என, அனைத்துக் கோணங்களிலும் தங்களின் பயன்பாடு பற்றி இவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கின்றன பூக்கள். அதை அழகாக, அருமையாக, பதியனிட்டிருக்கிறார் ஷ்யாமா.

    பொதுவாக, பூச்செடிகளை ஊன்றி நீரூற்றி வளர்த்து நந்தவனம் அமைப்பார்கள். ஆனால், பூக்களே அமைத்துக் கொண்டுள்ள நந்தவனத்தை இங்கே காண்கிறோம்.

    பூக்களின் நறுமணம் நம்மை மயக்க வல்லது. அதைப்

    Enjoying the preview?
    Page 1 of 1