Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iniyavale Indhumathi
Iniyavale Indhumathi
Iniyavale Indhumathi
Ebook252 pages1 hour

Iniyavale Indhumathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாவியில் பயிற்சி பெற்ற பத்திரிகையாளர். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். K.K. Birla Foundation Fellowship for Journalism கிடைக்கப் பெற்ற முதல் தமிழ் பத்திரிகையாளர். இதற்காக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சித் தலைப்பு ‘தமிழக கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள்-தீர்வுகள்’. இதனைத் தொடர்ந்த இவரின் ஆராய்ச்சிப் புத்தகம் ( அதே தலைப்பில்) தமிழக அரசின் சிறந்த புத்தகப்பரிசினை பெற்றது. இந்தப் பரிசினை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார். மெட்ராஸ்- கல்சுரல் அகடமி ‘Excellence in Journalism’ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக இவர் எழுதியுள்ள கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், தொடர்கள், நாவல்கள், சமூக, ஆன்மீகப் புத்தகங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. இவருடைய மொழிமாற்ற (ஆங்கிலத்திலிருந்து தமிழ்) புத்தகங்கள் அனைத்தும் பரவலான ரசிகர்களை ஈர்த்துள்ளது.

பத்திரிகையாளர் பணியைத் தொடர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, ஜெயின் மகளிர் அகடமியின் இயக்குனராகவும், ஜெயின் அறக்கட்டளை ஒன்றின் CEO ஆகவும் தொடர்ந்த இவர், தற்போது கடந்த பத்து ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை மற்றும் பிற சமூக அவலங்களிலிருந்து காப்பாற்றப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்குழந்தைகளின் உயர்வுக்காக அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். எழுத்து இவரின் மூச்சு என்றால், பெண்குழந்தைகள் பாதுகாப்பு இவரின் வாழ்நாள் லட்சியமாக இருந்துவருகிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126104051
Iniyavale Indhumathi

Read more from Dr. Shyama Swaminathan

Related to Iniyavale Indhumathi

Related ebooks

Reviews for Iniyavale Indhumathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iniyavale Indhumathi - Dr. Shyama Swaminathan

    http://www.pustaka.co.in

    இனியவளே இந்துமதி

    Iniyavale Indhumathi

    Author:

    ஷ்யாமா ஸ்வாமிநாதன்

    Shyama Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/shyama-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    இரண்டாவது மாடியின் படுக்கையறை ஜன்னலில் இருந்து பார்த்தால் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலின் அழகு நெஞ்சை அள்ளிக் கொண்டுதான் போகிறது. எத்தனை மணிக்கணக்காக, மாதங்களாக, வருஷங்களாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அதன் அழகும் குறையவில்லை. போதுமே பார்த்தது என்று மனமும் சலித்துக் கொள்வதில்லை.

    ஜெயராமன்... இந்த விந்தையை எண்ணி எண்ணி வியந்திருக்கிறான். என்ன கம்பீரம்... பிள்ளையார் பாசம் தான் இதற்குக் காரணமாயிருக்குமோ? இருக்குமோ... இல்லை... எழில் சூழ்ந்த கோட்டை தான் காரணம்... இல்லவே இல்லை, ஊருக்கு நடுவே ஒய்யாரமாய் ஓங்கி நிற்கும் மலைதான் காரணம்... இப்படி ஜெயராமனின் மனம் மீண்டும் மீண்டும் அதிலேயே லயித்துப் போய் விடுவதுண்டு. தனக்கு மட்டுந்தான் இத்தகைய லயிப்பா... இல்லை...

    ஜன்னல்கள் தோறும் கண்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு, உச்சிப் பிள்ளையாரின் கம்பீரத்தைக் கண்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் தன்னைப் போன்ற பைத்தியங்கள் வேறு யாரேனும் உண்டா... அப்படியிருந்தால் அவர்களில் ஒரு சிலரையாவது தேடிப் பிடித்துத் தன் சந்தோஷத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு சுகிக்க வேண்டுமே என்று பலமுறை நினைத்துத் தவிப்பான் ஜெயராமன். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. அது அப்போது அவனுக்கும்.

    அவனுடைய இந்த ஜன்னல் தோற்ற மயக்கத்திற்கும் வந்து விட்டதே! ஜெயராமனால் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் ஒரு நொடிப் பொழுதில் துறந்து விட்டுப் போய்விட முடியும். இந்த உச்சிப் பிள்ளையாரை மட்டும் அப்படி உதறிவிட்டுப் போய்விட முடியாது!

    ஆனால் முடிந்தாக வேண்டும்!

    அவன் தலைஎழுத்து மாறத் தொடங்கியிருக்கிறது.

    சென்னைக்குக் குடிபெயர்ந்து போயே ஆக வேண்டும்.

    சென்னை என்றாலே கூவமும் குப்பமும்தான் நினைவில் வந்து முட்டுகிறது. ஜன நெரிசலும் போக்குவரத்தும் பயமுறுத்துகிறது.

    அங்கே இப்படி ஒரு ஆதரவான ஜன்னல் இருக்குமா என்ன? அப்படியே இருந்து விட்டாலும் மனதை வருடிக் கொடுக்கின்ற காட்சிகள் தான் இருக்குமா? எங்கும் பெட்டி பெட்டியாய் அடுக்கு வீடுகள்... ஒரு ஆள் போனால் ஒரு ஆள் மீது மோதாமல் நடக்க முடியாத குறுகிய மாடிப் படிகள்... போதாக் குறைக்கு மூலை முடுக்குகளெல்லாம் ரத்தச் சிவப்பாய் வெற்றிலைத் துப்பல்கள் வேறு இருக்குமாம். வெங்கு மாமா சொல்லிச் சொல்லி மாய்ந்து போவாரே... அப்படி ஒரு இடத்தில் தன்னால் எப்படி லயிக்க முடியும்?..

    ஜெயராமனுக்கு ஏன் இந்தத் தலையெழுத்து? அரசு உத்யோகத்தில் இருப்பவனுக்குத்தான் மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டும். ஜெயராமனுக்கு என்ன? அவனுக்கு அவனே ராஜா.. இருந்தும் பிரயோஜனமென்ன... அவனுக்கும் சில துரதிர்ஷ்டங்கள் தொடர்ந்து துரத்திக் கொண்டேதான் இருக்கின்றன. என்றாவது ஒரு நாள் இந்த உச்சிப் பிள்ளையார் ஏதாவது செய்வார் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தான். ஆனால் இப்படி ஒரேயடியாக ஊரை விட்டே அவனைத் துரத்தி விடுவார் என்று நினைக்கவில்லை.

    எந்த ஊரில் அவன் எதைச் செய்தாலும் அது சரியாகப் போவதில்லை. சிலருக்குத் தொட்டதெல்லாம் துலங்கும் என்பார்கள். அவனைப் பொறுத்தவரை அப்படி அமையவில்லை. அவனும் பிரும்மப்பிரயத்தனம் செய்து பார்த்து விட்டான்... எதுவும் சரியில்லை. சரி... எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு, கைகட்டி, வாய் பொத்தி, சலாம் போட்டு, கை நீட்டிச் சம்பாதிக்கலாம் என்றால், அதற்கும் எந்த வழியும் பிறக்க மாட்டேன் என்கிறது. -

    ஏதோ ஒன்று அவனின் அனைத்துச் செயல்களுக்கும் குறுக்கே வந்து பழியாய்க் கிடக்கிறது.

    அவன் ஜாதகமா? அவன் விதியா? அவன் குணமா?

    ஆள் பார்க்க வாட்ட சாட்டமாய் கம்பீரமாய்த்தான் இருக்கிறான். அதுவே கூடச் சில சமயங்களில் சுய கர்வத்தை ஏற்படுத்தி விடுகிறது.

    பழகுவதற்கு இனிமையானவன்.. பரோபகாரி.. சராசரிப் புத்திசாலித்தனத்தைவிடச் சற்றுக் கூடுதலானவன். இருந்தும் அவனை நிமிர முடியாமல் தலையில் தட்டி விடுகின்ற விஷயந்தான் என்ன... யாருக்கும் புரியவில்லை.

    ஒன்றை மட்டும் சொல்லித்தான் ஆக வேண்டும். அவன் எப்படியிருந்தாலும் கொடுத்து வைத்துள்ள ஒரு விஷயம். யாருக்கும்... எப்பேர்ப்பட்ட கொம்பனுக்கும் கிடைக்காத ஒரு விஷயம். அவனுக்கு வாய்த்திருந்தது. அது அவன் மனைவி வேதவல்லி!

    அவளை என்னவென்று வர்ணிப்பது? கண்டவுடன் கவிதை எழுதத் தூண்டுபவள் அவள். கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் தெய்விக புருஷியும் அல்ல.

    விட்டு விலக வைக்கின்ற தோற்றமும் அல்ல.

    சாதாரணமானவள்... ஆத்மார்த்தமானவள். அன்பானவள்.. கனிவானவள். யாரையும் துன்புறுத்தாத முகம்... வெள்ளையாய்ப் பேசும் பிள்ளை மனம் கொண்டவள். ஒன்றுமில்லாத விஷயத்திற்கும் உருகித் தவிக்கும் மென்மையள். ஜெயராமனுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். அவள் இல்லை என்றால் அவன் சந்தி சிரித்திருப்பான். ஆனால் அவளுக்கு அவன் கண் நிறைந்தவன். அவனுக்கு அவள்? ஜெயராமன் அது பற்றி ரொம்ப யோசித்திருப்பானா...? தெரியாது. வேதவல்லி போன்ற ஒருத்தி தனக்கு இறைவன் தந்த வரம் என்று நினைத்திருப்பானா...? தெரியாது... எதற்கும் உதவாத தன்னையே பூஜித்து உருகுகிறாளே... தான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று புளகாங்கிதம் அடைகிறானா? தெரியாது. அவன்... அவனாகவே இருந்து கொண்டிருக்கிறான். அவள்... அவளாகவே இருந்து கொண்டிருக்கிறாள். ஜெயராமன் ஜன்னல் கம்பியை விட்டுப் பிரிய மனமில்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான். வேதவல்லி கையில் காபியுடன் வந்து நின்றாள்.

    சாமானெல்லாம் நல்லா பாக்கிங் செஞ்சிட்டீங்களா? நசுங்காம... உடையாம போய்ச் சேர்ந்துடுமா? ஜெயராமன் 'சடக்கென்று திரும்பிப் பார்த்தான். மனதில் துளிர்விட்ட கோபம். அவள் முகம் பார்த்ததும் மடிந்தது. அது அப்படித்தான். அவளை அவனால் கோபிக்கவே முடிந்ததில்லை.

    அவள் உலகம் மிகக் குறுகியது.

    அவள் கவலைகளும் உள்ளங்கைகளுக்குள் அடங்கிப் போய்விடக் கூடியவையே.

    வேதா... இந்தக் கேள்வியை நீ நூறு தரம் கேட்டிருப்பேன்னு நினைக்கிறேன்...

    இருக்கலாங்க... என் கவலை எனக்கு... உங்களுக்கு உச்சிப் பிள்ளையார் மாதிரி... எனக்கு உலகம்... இந்த வீட்டுப் பொருட்கள் தானே... மெட்ராஸ் போய் பிரிச்சுப் பார்த்தா... எல்லாம் நல்லபடியா இருக்கணும்... இல்லைன்னா என் மனசே தூள் தூளாயிடும்.

    ஜெயராமன் சிரித்தான்.

    குடும்பம்... குழந்தைகள்... பாத்திரம்... பண்டம்.. சாப்பாடு... தூக்கம்... உடுக்கத் துணிமணி... ஒழிந்த நேரத்துக்கு டி.வி. என்ன முயன்றும் அவளை இந்தச் சின்ன வட்டத்திலிருந்து மீட்கவே முடியவில்லை.

    சில சமயங்களில் அவள் இந்தச் சின்ன வட்டத்திற்குள்ளேயே பட்டத்து ராணி போல் பவனி வந்து கொண்டிருக்கட்டுமே என்று விட்டு விடுவான்.

    காபியைக் குடித்துவிட்டு, இடுப்பிலிருந்து நழுவிய கைலியைச் சரி செய்தவாறே எழுந்தவனுக்கு, அந்த வீட்டின் அப்போதைய வெறுமை வெகுவாக உறுத்தியது.

    இந்த ஊர் மாற்றம் அவசியம் தானா? குப்பை கொட்டத் தெரியாதவனுக்கு இந்த ஊர் என்ன? வேறு ஊர் என்ன?

    வழக்கம்போல இந்த முறையும் எல்லாம் வேதவல்லியின் ஏற்பாடுதான். ஏனோ தெரியவில்லை. ஜெயராமனுக்கு, அவள் எடுக்கும் சில முடிவுகளை எதிர்க்கவே துணிவில்லை. ஒரு வேளை தன்னையறியாமலே தனக்குள் குடிகொண்டிருக்கும் தன் இயலாமைதான் காரணமாக இருக்குமோ என்று பல தடவை யோசித்திருக்கிறான். பலன்தான் என்ன?

    வேதவல்லியுடன் இணைந்து வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருக்கிறானே தவிர... அவனுக்குப் பிடித்த வேறு எந்த ஒரு சிறு செயலையும் அவளுடன் அவனால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் மட்டும் மனதின் ஓரத்தில் எப்போதும் ஒட்டிக் கொண்டே இருக்கிறது.

    இவளோடு உட்கார்ந்துகொண்டு... விண்வெளியில் பளிச்சிடும் நட்சத்திரங்களின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது.

    ஈர மணல் உறுத்தலை உணர்ந்து கொண்டே காலாரக் கடற்கரையில் நடந்து கொண்டு அரசியல் பேச முடியாது.

    முற்றத்தில் தகரத்தினூடே பயணித்து வந்து விழுகின்ற மழைத் துளிகள் ஏற்படுத்தும் விநோத இசை பற்றி ரசித்து சந்தோஷிக்க முடியாது.

    ஒரு சின்ன ரோஜாப்பூவை நீட்டி ஐ லவ் யூ வேதா என்று அன்பைக்கூட அவ்வப்போது வெளிப்படுத்தி அள்ளிக் கொள்ள முடியாது.

    இப்படி அவளோடு முடியாத காரியங்கள் ஜெயராமனுக்கு எவ்வளவோ உண்டுதான்.

    ஜெயராமன் கனவுகளில் மிதப்பவன்.

    அவளோ.. வாழ்க்கையின் தினசரி சராசரிகளில் சகஜமாய் சமயம் போக்குபவள்!

    'இவை எல்லாம்தான் வாழ்க்கையா?' என்று ஆலோசித்துப் பார்த்து, உயிரோட்டமான வாழ்க்கைப் பயணத்திற்கு இவையெல்லாம் அவசியம் என்று தீர்மானித்து ஏங்குபவனாகவே இருந்து விட்டான் ஜெயராமன்.

    ஒருவேளை இவையெல்லாம் கிடைத்தால்தான் ஒரு வெற்றிப் புருஷனாக மாலை சூடியிருப்பேனோ என்று நினைத்துப் பதில் தெரியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறான்.

    இப்படி ஒரு வெற்றி மாலையைச் சுமந்து கொண்டு தன் வாழ்க்கையில் யாராவது வருவதற்குச் சாத்தியக் கூறு இருக்குமா என்ன?

    என்ன பகல் கனவு உங்களுக்கு? எப்பப் பார்த்தாலும் ஒரு தூரப் பார்வை பார்த்துகிட்டு... பக்கத்துல இருக்கிற மனுஷா கண்ணுல படாம.. என்ன மனுஷன் நீங்க...

    ஜெயராமன் நத்தையாய்த் தன் எண்ணங்களைச் சுருக்கிக் கொண்டு...,

    வேதா.. உனக்கு இப்ப என்ன வேணும்? அதான் நீ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டி மூட்டை முடிச்சைக் கட்டியாச்சில்ல... இன்னும் என்ன பண்ணணும், சொல்லு.

    இந்த அலுப்பு சலிப்பையெல்லாமும் ஒரேயடியா மூட்டை கட்டி வச்சிடுங்க.. அங்க போனப்புறம் நமக்கு ரொம்ப வித்யாசமான வாழ்க்கை... ஏன், உங்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கை கூட அமையும்னு எனக்கு மனசுல படறது. நேரம் காலம் வந்துட்டா.. நமக்கு எல்லாம் சரியா வந்து அமையும்னு சொல்வாங்க. அதுக்கேத்த மாதிரி. துபாய்ல இருக்கிற உங்கக்கா மெட்ராஸ்ல வீடு வாங்கி, அதுல நம்மளை வந்து இருக்கச் சொல்லிக் கூப்பிடுவாங்களா?

    வேதவல்லி ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கிறாள் என்பதை அவள் வார்த்தைகள் காட்டிக் கொடுத்தன. போதாக்குறைக்கு ஜெயராமனின் வெகு அருகில் வந்து நெருக்கம் காட்டினாள்.

    ஜெயராமனுக்கும் அவள் நெருக்கம் புரியவே செய்தது. அவள் அவ்வளவாக மசிகிற ரகம் இல்லை. நடு இரவின். தனிமை கூட அவளைச் சலனப்படுத்தாது. இப்போது அவள் மனம் ஏதோ ஒரு குதூகலத்தில் குளித்துக் கொண்டிருக்கிறது இழைஞ்சு, குழைஞ்சு பக்கத்தில் வந்து அவன் மார்பிலும் சாய்ந்து கொண்டு, கண்கள் விரியப் பேசிக் கொண்டிருக்கிறாள். சென்னை மோகம் அவளுக்குள்.

    ஜெயராமனுக்கும் வேதவல்லியின் அப்போதைய இளக்கம்.. இனிமையாகத்தானிருந்தது.

    வானரப் படைகள் எங்க வேதா... கண்லயே காணமே... என்றபடியே அவள் முன்னுச்சிக் குழல் கற்றையில் விரலளைந்தான்.

    வீடு... வீடாய்ப் போய்ச் சொல்லிகிட்டு வந்துர்றோம்னு போயிருக்குங்க...

    வாசக்கதவு? ஜெயராமன் நிதானமாய்க் கேட்டான், வேதவல்லியும் புரிந்து கொண்டாள்.

    கொஞ்சம் இழைஞ்சா போதுமே... என்றபடி விலக யத்தனித்தவளை... வலுக்கட்டாயமாக இறுக்கி, இப்ப என்ன பிரச்சனை உனக்கு. எனக்கும்தான் கொஞ்ச நேரம் ஒதுக்கக் கூடாதா?

    "உங்களுக்காகத்தானே உசிரையே கொடுத்துகிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா கொஞ்ச நேரம்.. கொஞ்ச நாளுன்னு.. கெஞ்சிகிட்டிருக்கீங்க.

    வேதா... நீ செய்யறது நம்ம வாழ்க்கைக்காக... நா... இப்ப எதிர்பார்க்கிறது...

    போச்சுடா... உளற ஆரம்பிச்சிடுவீங்களே, ஆன்னா.. ஊ..ன்னா... ஏதோ பெரிய சினிமா டைரக்டர் மாதிரி பேச ஆரம்பிச்சிடறீங்க... உங்களுக்கு உங்க மனசுல நீங்க பெரிய கதாநாயகன்னு நினைப்பு. அதெல்லாம் சினிமா பாக்கத்தான் லாயக்கு. வாழ்க்கைக்கு ஒத்து வராது, என்றபடியே விருட்டென்று அவனிடமிருந்து விலகி வாசல் கதவை நெருங்கி அதன் முழு அகலத்துக்குமாகத் திறந்து வைத்தாள்.

    ஜெயராமன்... அவளின் நிதர்சனத் தாக்குதலுக்குப் பழக்கப்பட்டவனாய் அடங்கிப் போனாலும்... அவனின் உள் மனது வலித்தது. அவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு வேதவல்லி ஈடு கொடுப்பதில்லை. இவள் மட்டுந்தான் இப்படியா... இல்லை... எல்லாப் பெண்களுமே இப்படித் தானா... மார்பில் சாய்ந்த மனைவியோடு காதலாக நாலு வார்த்தை பேச முடியாத என் போன்ற புருஷர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? இருளில் பெண்ணின் தேக சுகத்தை உணர்ந்து கொண்டே.... இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லித் தேவையில்லாத பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் அது போன்ற நிமிடத் துளிகள் வேதாவுடன் அவனுக்குக் கிடைத்ததே இல்லை. எல்லாம் ஒரு இயந்தரத்தனமாக ஓடிக் கொண்டிருக்க வேண்டுமென்றால் அதற்கு உயிருள்ள ஜீவன்கள் எதுக்கு? இரண்டு இயந்திரங்கள் இணைந்து மேலும் சில இயந்திரங்களை உருவாக்குவதுதான் இந்த வாழ்க்கையின் தத்துவமா?

    அட... என்ன நீங்க... சும்மா சாஞ்சு உக்காந்துகிட்டு... ரயில் எத்தனை மணிக்கு.. புறப்பட நேரமாகலியா... திருச்சில கனா கண்டது போதுங்க... மிச்ச சொச்சத்தை மெட்ராஸ்ல போய் வச்சுக்கலாம். கிளம்புற வழியைப் பாருங்க... ஹோட்டல்ல சாப்பாடு வாங்கி வரணும். கிளம்பறீங்களா? வேதா உச்சஸ்தாயியில் உத்தரவு கொடுத்துக் கொண்டிருக்க, ஜெயராமன்... திருச்சியில் தன் கடைசி நிமிடக் காற்றை இழுத்து உள் வாங்கிக் கொண்டான். ஏனோ... அவனுக்கு வேதாவின் மீது எரிச்சலாக வந்தது. பொதுவாக அது போன்ற சமயங்களில் காலில் செருப்பை மாட்டிக் கொண்டு கண் காணாமல் போய் விடுவான். ஆனால் இன்று அவள் எரிச்சலை அவள் மீது கொட்ட வேண்டும் என்ற ஒரு உத்வேகம் பிறந்தது.

    எத்தனை மணிக்குக் கிளம்புறதுங்கற அறிவு எனக்கும் இருக்கு. உனக்கு வேலை கீலை எதுவும் இல்லைன்னா... நீயும் உன் புள்ளைங்க மாதிரி வீடு வீடாப் போய்ச் சொல்லிக்கிட்டு வா... நான் உன் தொல்லையில்லாம கொஞ்ச நேரம் இந்த மலைக்கோட்டை அழகை ரசிச்சுகிட்டிருக்கேன்.. அங்க போய்த் தொலைஞ்சா... என் சுதந்திரத்தைப் பறி கொடுத்துட்டு எங்கக்காவோட அடிமைகளாத் தானே காலங்கழிக்கணும்.

    வேதா... அவனைக் குறுகுறுவென்று பார்த்தாள்.

    'என்ன மனுஷன் இவன். தனக்காகவும் எதுக்கும் வக்கில்ல... தானா வர்ற சீதேவியையும் சந்தோஷமா ஏத்துக்க மாட்டேங்கிறான்... இவனை எப்படித் திருத்தறது...'

    யாராவது கேட்டா உங்களுக்குப் பைத்தியம்னுதான் சொல்லுவாங்க. மெட்ராஸ்ல ஒரு வீட்டை வாங்கி, உங்க கைல கொடுத்து, ஒரு வேலையும் வாங்கித் தரேன்னு ஒரு சகோதரி கூப்பிடறா... பதிலுக்கு என்ன கேக்கறாங்க? காலம் பூரா உங்கம்மாவைப் பத்திரமா பாத்துக்கணும்னு சொல்றாங்க. அவங்க என்ன சொல்றது? உங்களுக்கு உங்கம்மாவை வச்சுக் காப்பாத்திறது கடமையில்லையா... அவங்க சொல்லித்தான் நீங்க செய்யணுமா... நீங்களா செய்யலை. அவங்களை உத்தரவு போடற நிலைமைல கொண்டு போய் விட்டுட்டீங்க. இப்ப அடிமை மாதிரின்னு சும்மா கத்துறீங்க...

    வேதா... போதும், நிறுத்து... உனக்கு எங்கக்கா சகுந்தலாவைப் பத்தி தெரியாது. அனுபவிக்கும் போது என் கால்ல வந்து விழுவ.

    'எப்படியோ போங்க.. எனக்கு ஒண்ணும் தப்பா தெரியலை.. நல்லவங்கதான். என்ன,

    Enjoying the preview?
    Page 1 of 1