Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Bommaigal
Kaadhal Bommaigal
Kaadhal Bommaigal
Ebook458 pages3 hours

Kaadhal Bommaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நாவலில் இடம் பெற்றுள்ள ப்ரியா போன்ற ஒரு பெண்ணையும் அவளுடைய குடும்பத்தினர்களையும் நான் ராமேஸ்வரத்தில் சந்தித்தேன். தாங்கவொண்ணா பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கு அந்த புண்ணிய பூமியில் 'திலஹோமம்' என்று ஒன்று செய்வார்கள். அவர்களும் அதற்காகத்தான் வந்திருந்தார்கள். அந்நாள்வரை.. அப்படி ஒரு நோய்... உடல் பிரச்சனை இருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. அதுவும் அந்த சின்னப் பெண் பாதிக்கப்பட்டிருந்த விஷயம் கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். கொஞ்ச நாட்கள் அந்தப் பெண்ணும் என் மகளும் நட்புடன் பழகி வந்தார்கள்… பின் அந்த நட்பு விட்டுப் போய் விட்டது.

ராஜசேகர் மணிமேகலையும் நிஜத்தில் உலவும் மனிதர்கள்... மணிமேகலை போன்ற, பூமா தேவிக்கு நிகரான ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை.

மீனாட்சியும் முழுவதும் கற்பனை பாத்திரமில்லை… குழந்தை பைத்தியம் என்று ஊராரால் அழைக்கப்பட்ட ஒரு பெண்மணி என் பிறந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்தாள். அவளுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் இருப்பதாகவே நினைத்துக் கொண்டு பேசுவாள்... செய்வாள்.. சாலையில் போகும் குழந்தைகளைப் பிடித்து சாதம் ஊட்டுவாள். பலகாரங்கள் கொடுப்பாள், தலை பின்னி விடுவாள். நான் குழந்தையாக இருந்த போது.. அவள் என்னையும் பிடித்துக் கொண்டு விடுவாள். அவள் நினைவாகவே மீனாட்சி உருவானாள்.

சந்தியாவும் நிஜம்.. அவளின் ஆஞ்சநேயர் பக்தி நிஜம். ஸ்ரீ வெங்கடேச பட்டாச்சார்யர் எழுப்பியுள்ள 32-36 அடி உயரமுள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை எல்லோருமே திருவள்ளூரில் தரிசித்து வரலாம். ஆனால் அந்த ஆலயம் எழுப்பப்படுவதற்குள் அவரின் காலம் முடிந்து விட்டதாக நான் கேள்விப்பட்டேன். அம்பாள் உபாசகியான எனக்கு மேலும் பல வல்லமைகள் கைகூட... சர்வவல்லமை பொருந்திய ஸ்ரீ ஆஞ்சநேயரை எனக்கு அவர்தான் அறிமுகப்படுத்தி மந்த்ர... யந்த்ர உபதேசமும் செய்தார். அன்றிலிருந்து இன்று வரை பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொண்டும் கடந்து கொண்டும் வருகிறேன். அந்த மகானுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நாவலின் மூலம் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

நாவலைப் படியுங்கள்... படித்துவிட்டு நிறை குறைகளை மனம் திறந்து சொல்லுங்கள். நாம் மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொண்டேயிருப்போம்.

நன்றி கலந்த வணக்கங்கள்.

என்றும் உங்கள்

ஸ்நேகமுள்ள சியாமளா

(டாக்டர் சியாமனா)

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126104080
Kaadhal Bommaigal

Read more from Dr. Shyama Swaminathan

Related to Kaadhal Bommaigal

Related ebooks

Reviews for Kaadhal Bommaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Bommaigal - Dr. Shyama Swaminathan

    http://www.pustaka.co.in

    காதல் பொம்மைகள்

    Kaadhal Bommaigal

    Author:

    டாக்டர் சியாமளா

    Doctor Shyamala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/shyama-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    என்னுரை

    வணக்கம்!

    இது என் ஆறாவது நாவல்.

    'நெஞ்சுக்குள் நெருஞ்சிமுள்' என்ற என் ஐந்தாவது நாவல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று வெளியீட்டாளர் சொல்லக் கேட்டபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். என் இந்த நாவலையும் மதிப்பிற்குரிய டாக்டர் சோலையப்பன் அவர்களே வெளியிட முன் வந்திருப்பது நான் பெற்ற பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    இந்த நாவலில் இடம் பெற்றுள்ள ப்ரியா போன்ற ஒரு பெண்ணையும் அவளுடைய குடும்பத்தினர்களையும் நான் ராமேஸ்வரத்தில் சந்தித்தேன். தாங்கவொண்ணா பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கு அந்த புண்ணிய பூமியில் 'திலஹோமம்' என்று ஒன்று செய்வார்கள். அவர்களும் அதற்காகத்தான் வந்திருந்தார்கள். அந்நாள்வரை.. அப்படி ஒரு நோய்... உடல் பிரச்சனை இருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. அதுவும் அந்த சின்னப் பெண் பாதிக்கப்பட்டிருந்த விஷயம் கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். கொஞ்ச நாட்கள் அந்தப் பெண்ணும் என் மகளும் நட்புடன் பழகி வந்தார்கள்… பின் அந்த நட்பு விட்டுப் போய் விட்டது.

    ராஜசேகர் மணிமேகலையும் நிஜத்தில் உலவும் மனிதர்கள்... மணிமேகலை போன்ற, பூமா தேவிக்கு நிகரான ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை.

    மீனாட்சியும் முழுவதும் கற்பனை பாத்திரமில்லை… குழந்தை பைத்தியம் என்று ஊராரால் அழைக்கப்பட்ட ஒரு பெண்மணி என் பிறந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்தாள். அவளுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் இருப்பதாகவே நினைத்துக் கொண்டு பேசுவாள்... செய்வாள்.. சாலையில் போகும் குழந்தைகளைப் பிடித்து சாதம் ஊட்டுவாள். பலகாரங்கள் கொடுப்பாள், தலை பின்னி விடுவாள். நான் குழந்தையாக இருந்த போது.. அவள் என்னையும் பிடித்துக் கொண்டு விடுவாள். அவள் நினைவாகவே மீனாட்சி உருவானாள்.

    சந்தியாவும் நிஜம்.. அவளின் ஆஞ்சநேயர் பக்தி நிஜம். ஸ்ரீ வெங்கடேச பட்டாச்சார்யர் எழுப்பியுள்ள 32-36 அடி உயரமுள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை எல்லோருமே திருவள்ளூரில் தரிசித்து வரலாம். ஆனால் அந்த ஆலயம் எழுப்பப்படுவதற்குள் அவரின் காலம் முடிந்து விட்டதாக நான் கேள்விப்பட்டேன். அம்பாள் உபாசகியான எனக்கு மேலும் பல வல்லமைகள் கைகூட... சர்வவல்லமை பொருந்திய ஸ்ரீ ஆஞ்சநேயரை எனக்கு அவர்தான் அறிமுகப்படுத்தி மந்த்ர... யந்த்ர உபதேசமும் செய்தார். அன்றிலிருந்து இன்று வரை பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொண்டும் கடந்து கொண்டும் வருகிறேன். அந்த மகானுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நாவலின் மூலம் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

    நாவலைப் படியுங்கள்... படித்துவிட்டு நிறை குறைகளை மனம் திறந்து சொல்லுங்கள். நாம் மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொண்டேயிருப்போம்.

    நன்றி கலந்த வணக்கங்கள்.

    என்றும் உங்கள்

    ஸ்நேகமுள்ள சியாமளா

    (டாக்டர் சியாமனா)

    1

    'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் ஒலி, தொடர்ந்து மிக மென்மையாக ஒலித்துக் கொண்டேயிருக்க, அந்த அறை முழுவதும் மக்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். இளம் ஆரஞ்சு வர்ண சேலையுடுத்திய ஒரே பெண்மணியான சந்தியாவும் அந்தக் கூட்டத்தினிடையே ஒருத்தியாக அமர்ந்திருந்தாள். அத்தனை ஆண்களுக்கு இடையே தான் மட்டும் தனி ஒரு பெண்மணியாக இடம் பெற்றிருக்கும் இது போன்ற சூழல்கள் அவளுக்கு பழக்கப்பட்டுத்தான் போய் விட்டது என்றாலும் கூட இன்றைய இந்தக் கூட்டத்திற்கிடையே அவளால் இயல்பாக இருக்க முடியாமல் தவித்துக் கொண்டுதான் இருந்தாள்.

    இன்னும் எத்தனை மணி நேரமோ தெரியாது. எல்லோரும் ஸ்வாமிஜியின் வரவிற்குக் காத்திருந்தார்கள். அறையின் நடுவில் சுவர் ஓரமாய் அவர் அமர்வதற்கான இருக்கை போடப்பட்டிருந்தது. 'ஓம் நமோ நாராயணாய' என்கிற மந்திரம் பொறிக்கப்பட்டிருந்த காவி வஸ்த்ரம் அவருக்கான இருக்கை மீது போர்த்தப்பட்டிருந்தது. அந்த இருக்கையின் பின்புறம் பஞ்சமுக ஆஞ்சநேயரின் திருவுருவம் கோட்டுச் சித்திரமாக வரையப்பட்டு போஸ்டர் போல் அச்சடிக்கப்பட்டு சுவற்றில் ஒட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழே அஸாத்ய சாதகஸ்வாமின்... என்று தொடங்கிய நான்கு வரி மந்திரம் இருந்தது. எல்லோரும் அந்த மந்திரத்தைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருப்பதாய் சந்தியா நினைத்தாள்.

    பட்டாச்சார்யர் எப்ப வருவார்? என்று யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லையென்றால் சந்தியாவுக்குத் தலை வெடித்துவிடும் போலிருந்தது. எல்லோரும் அவரை 'ஸ்வாமிஜி' என்று பயபக்தியுடன் அழைக்கும்போது... தான் மட்டும் பட்டாச்சார்யர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே... என்கிற எண்ணம் அவள் மனதில் உதிக்காமல் இல்லை. அவளுக்கு அவர் பெயர் வெங்கடேச பட்டாச்சார்யர் என்றுதான் சொல்லப்பட்டிருந்தது. அவளை இங்கே அனுப்பி வைத்திருந்த அவளுடைய எடிட்டரும்... அப்படித்தான் உச்சரித்திருந்தார். இங்கே வந்த பிறகுதான் எல்லோரும் அவரை ஸ்வாமிஜி என்றழைப்பதைத் தெரிந்து கொண்டாள்.

    பட்டாச்சார்யர் இருக்காரா? நான் 'இந்து தர்மம்' பத்திரிகையிலிருந்து வந்திருக்கேன்" என்று அவள் கேட்ட போது.. அவளை ஏறத்தாழ பார்த்தார்கள். ஏன் அப்படிப் பார்க்கிறார்கள் என்று அப்போது அவளுக்குப் புரியவில்லை. உள்ளே வந்து.. சிலரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததும்... புரிந்தது. ஆனால் பட்டாச்சார்யர் என்று சொன்னால்... ஸ்வாமிஜி என்பதைவிட ஒருபடி தாழ்வானதா? அல்லது பலபடிகள் தாழ்வானதா? என்றெல்லாம் எண்ணங்கள் பலவாறாக அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

    பட்டாச்சார்யர் இன்னும் வரவில்லை. சந்தியாவுக்கு அந்தச் சூழலில் மனம் ஒட்டவில்லை. எழுந்து போய் விடலாமா என்று தவித்தாள். ஆனால் எடிட்டரின் பேச்சை அவள் இதுவரை... அவருடனான ஐந்து வருடப் பழக்கத்தில் தட்டியதில்லை. இந்து தர்மம் பத்திரிகைக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை. அவள் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த பத்திரிகை இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பிற்கானது.. இருப்பினும் ஆசிரியர்... அவருடைய பலதரப்பட்ட வெளியீடுகளுக்காகவும் அவளை அனுப்பி வைப்பது வழக்கமாகிக் கொண்டு வருகிறது. சந்தியாவும் அனைத்தையும் தெரிந்து, புரிந்து, உள்ளது உள்ளபடி எழுதும் ஒரு தைரியமான பத்திரிகையாளர்தான். ஆனாலும் அதற்காக இப்படி ஒரு ஆன்மிகச் சூழலுக்குள் தள்ளுவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

    சந்தியாவின் மனது அவளுடன் அமர்ந்திருந்தவர்களைப் போல் ஒருமுகப்படுத்த இயலாது.. பலவித எண்ணங்களை அசை போட்டுக் கொண்டிருந்தது.. என்ன முயன்றும் மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சூழலுடன் ஒத்துப் போகமுடியவில்லை.

    ஆசிரியையின் மீது கோபம் கோபமாக வந்தது. என்ன வேலை இது... அலுவலகத்தில் அவள் முடித்தேயாக வேண்டிய பத்திரிகை பணிகள் குவிந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் விட்டுவிட்டு... இப்படி அனுப்பி வைத்துவிட்டாரே இங்கே என்னடா என்றால் சும்மா உட்கார்ந்திருக்கும் சோற்றுப் பண்டாரங்களைப் போல் உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கிறதே...

    பத்திரிகை உலகமே வேறு.. சந்திக்க வேண்டியவர்களை குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்துப் பேசி... வேலையை முடித்துக் கொண்டு வந்தமா.. போனமா என்றிருப்பார்கள் பத்திரிகையாளர் என்று சொன்னதுமே ஒரு ராஜமரியாதையும் தரப்படும்.. இங்கே என்னடா என்றால் யாரும் அப்படியெல்லாம் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. அவள் எழுந்து போய் விட்டாலும் கூட அது பற்றி அக்கறை காட்ட மாட்டார்கள் போலிருந்தது. பத்திரிகையாளர் என்றவுடன் உபசரித்து.. சிறப்பு இருக்கை ஒன்றையளித்து கௌரவிப்பார்கள். அதுவும் இல்லை. கூட்டத்தோடு கூட்டமாய் உட்கார்த்தி வைத்துவிட்டுப் போயிட்டார்கள். சந்தியாவிற்கு இதற்கு மேல் தாங்கவில்லை. எழுந்து போய் விடலாம் என்று சுற்று முற்றும் பார்த்தாள். அப்போதுதான் கவனித்தாள். அவளைச் சுற்றி மனிதர்கள் உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள். எழுந்து போவதற்கு இடமே இல்லாமலிருந்தது.

    சந்தியா மனம் புழுங்கினாள்.. என்ன இது.. இந்தப் பொழுது போகாத கூட்டத்தில் நாம் வந்து மாட்டிக் கொண்டோம். சந்தியாவுக்கு ஆசிரியர் அவளை அழைத்துப் பேசியபோதே இந்த விவகாரம் பிடிக்கவில்லை. நிறைய விவாதித்தாள். ஆசிரியருக்கும் அவளுக்கும் அறிவு சார்ந்த ஆரோக்கியமான நெருக்கம் இருந்தது. சந்தியாவின் வார்த்தைகளுக்கு அலுவலகத்தில் ராஜமரியாதை இருக்கும்.

    சந்தியா ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதில் ஆசிரியருக்கு அவளிடம் அன்பும், அக்கறையும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆனாலும் இந்த விஷயத்தில் விடாப்பிடியாக இருந்து விட்டார்.

    சார்... எனக்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தமில்லை சார்... ப்ளீஸ் என்னை விட்டுவிடுங்களேன்.

    ஒரு நல்ல பத்திரிகையாளர் இப்படி பேசறது எனக்கு ஆச்சர்யமாயிருக்கு சந்தியா மேடம்.

    மேடம்.. இல்ல.. சந்தியா மட்டுந்தான். நூறு தடவை சொல்லிட்டேன்.

    உங்களைப் பார்த்தாலே அப்படித்தான் கூப்பிட முடியறது.. மாத்திக்க முடியலை.

    என் வயசு காரணமா?

    கண்டிப்பா அது இல்ல.

    அஞ்சு வருஷமாச்சு... நான் இங்க வந்து... இன்னுமா முடியலை...

    சரி... அத விடுங்க.. இப்ப அதுவா முக்கியம்.. எல்லாத்துக்கும் ஆர்க்யூ பண்ணாம.. கொஞ்சம் போய் அந்த டெம்பிள் விஷயத்தைக் கொஞ்சம் கவர் ஸ்டோரியா பண்ணிடுங்க.

    அந்த பத்திரிகைக்கும் எனக்கும் சம்பந்தமில்லையே...

    அதுவும் நம்ம குடும்ப பத்திரிகைதானே சந்தியா மேடம்?

    சந்தியா அவரைப் பார்த்த பார்வையில்.. சரி... சந்தியா... என்று மாற்றிக் கொண்டார்.

    சார்... என்று அவள் தொடங்கு முன் ஆசிரியர் இடைமறித்தார்.

    நீங்களும் என்னை 'சிவா'ன்னு கூப்பிடுங்கன்னு ஐந்து வருஷமா கத்திகிட்ருக்கேன்.

    அப்படித்தானே கூப்பிடறேன்.

    இப்ப 'சார்'தானே கூப்பிட்டீங்க?

    இது உங்க அலுவலகம். நாம இருப்பது எடிட்டோரியல். நீங்க பத்திரிகையாசிரியர். நான் உங்ககிட்ட பணிபுரிகிற பத்திரிகையாளர்.. நீங்க முதலாளி... நான் என்று தொடர்ந்த சந்தியாவை... அவசரமாய் தடுத்து நிறுத்தினார் ஆசிரியர்.

    சந்தியா... தயவு செய்து.. தொழிலாளி.. கை நீட்டி சம்பளம் வாங்கிறவ.. அப்பிடி... இப்பிடினு சொல்லி என்னை நோக அடிக்காதீங்க... ப்ளீஸ்...

    சந்தியா அமைதியானாள்.

    அங்கே சில நிமிடங்கள் மௌனமாய் நகர்ந்தது. தனித்தனியே அவர்களின் மனங்களில் ஒரே மாதிரியான எண்ண அலைகள் எழுந்தன.

    சந்தியாவிற்கு ஒரு பத்திரிகையாளராக ஓடி... ஓடி வேலை பார்க்க வேண்டிய பொருளாதார அவசியத்தை ஆண்டவன் விதிக்கவில்லை. அவளுடைய திறமை அவளை இந்தத் துறையில் அவளே எதிர்பார்க்காத வகையில் முன்னேற்றிக் கொண்டிருந்தது. இடையே ஒரு தடங்கல். சந்தியா கவலைப்படவில்லை. நேற்று வரை பேனாவும் பிடித்தவள்... பேனாவை மூடி வைத்துவிட்டு.. கரண்டிகளை மட்டுமே பிடித்துக் கொண்டு கணவன் குடும்பம் என்று அமைதியானாள்.

    சில காலங்கள் தான்.

    சிவா பப்ளிகேஷன்ஸ் உங்களை சேர்த்துக் கொள்வதில் ரொம்ப ஆர்வமாயிருக்காங்க. அந்த ஆசிரியர் துடிப்பான இளைஞர். அவர் குழுமத்திலிருந்து பல பத்திரிகைகள் வெளிவருது. அதுல இளைஞர்கள் முன்னேற்றத்திற்கான ஒரு பத்திரிகை... கிட்டத்தட்ட காம்பெடிஷன் சக்சஸ்... ரிவ்யூ மாதிரி தமிழ்ல வருது. அதுக்கு உங்களை மாதிரி படிச்ச நபரா தேடிக்கிட்டிருக்காரு.. உங்களைப் பத்தி சொன்னதும் ரொம்ப ஆர்வமாயிட்டாரு... ஒரு தடவை நேர்ல நீங்க பாத்தீங்கன்னா.. உங்களுக்கும் பிடிச்சிடும். இந்தாங்க... அவங்க புத்தகம் புரட்டிப் பாருங்க. அப்புறம் நீங்க அவர் ஆபீஸ்லதான் போய் நிப்பீங்க... என்றபடியே மாதிரிப் புத்தகத்தை கொடுத்துச் சென்ற போது நண்பர் சந்தோஷப்பட்டுப் போனார். ஒரு நல்ல பத்திரிகைக்கு ஒரு திறமையாளரைக் கண்டு பிடித்துக் கொடுத்தோமே என்று.

    சந்தியா அந்த பத்திரிகையே தனது உயிர்மூச்சு என்று செயல்பட்டாள்.

    ஆசிரியரும் அவளைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்துதான் தாங்கினார்.

    அலுவலகத்திற்குள் அவர்கள் ஆசிரியரும். பத்திரிகையாளரும் என்றால்.. வெளியே சிவாவும்.. சந்தியாவுமாக ஒரு நல்ல ஆரோக்கியமான நட்பை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். சந்திரகுப்த மௌரியருக்கு சாணக்கியர் கிடைத்ததைப் போல் என்று வெளியுலகம் பேசிக் கொண்டது.

    சரி... இப்ப நீங்க போகப் போறீங்களா இல்லையா? வீட்டுல சாமிய வேரோட பிடிக்கிறவங்க நீங்க... இப்ப என்னடான்னா இப்படி யோசிக்கிறீங்க?

    சாமிய கும்பிடறது வேற விஷயம்... இது வேற விஷயம்.. சந்தியா தன் வாதத்தை தொடங்கினாள்.

    என்ன வேற விஷயம்... நல்ல விஷயந்தானே.. ஆன்மிக விஷயம். நம்ம பத்திரிகைக்கு பொறுத்தமான விஷயம்.. என்ன பிரச்சனை உங்களுக்கு?

    இருக்கிற கோயில்களுக்கு விளக்கேத்த வழியில்ல. கோடிக்கணக்கா பணத்தைச் செலவழிச்சு உலகத்திலேயே நான்தான் பெரிய கோயில் கட்டினேன்னு மார் தட்டிக்கிற விஷயம்... இதுல எனக்கு சம்மதமில்லை... என்னால ஆஹா ஓஹோன்னு எழுத முடியாது...

    சந்தியா ப்ளீஸ்... இப்படி வேண்டாத ஆர்க்யூ பண்ணாதீங்க.. நல்ல மேட்டர்.. இன்னும் யாரும் போடலை.. போய்தான் பாருங்களேன்.

    பொழுது போகாத வேலை... இந்த ஊர்ல இல்லாத கோயில்களா? இந்த திருவல்லிக்கேணியையே எடுத்துக்குங்க.. எத்தனை கோயில்கள் இருக்கு?

    திருவல்லிக்கேணில கோயில் இருந்தா போதுமா? திருவள்ளூர்ல கோயில் வேண்டாமா? பெரிய மனுஷங்கள்ளாம் சேர்ந்து.. இதையெல்லாம் யோசிக்காமயா முடிவெடுப்பாங்க.. போங்க சந்தியா போய் நல்ல மேட்டரா செய்துட்டு வாங்க.. நம்ம வண்டிய எடுத்துட்டுப் போங்க... நானும் போன் பண்ணி சொல்லிடறேன்.

    சந்தியா... அதற்கு மேல் விவாதிக்காமல்.. அரை மனதுடன் புறப்பட்டு வந்து விட்டாள். கூட்டத்தோடு கூட்டமாய் உட்கார்ந்து ஒரு மணி நேரம் கடந்து விட்டது. எழுந்தும் போக முடியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாய் மந்திர ஜபத்தில் ஐக்கியமாகவும் முடியவில்லை. தான் ஒரு பத்திரிகையாளர் என்பதையே மறந்து விட்டவர்களாய் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு டீ.... காபி கூடக் கொடுக்காமல்.. இதென்ன கொடுமை... என்று சந்தியா முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள்.

    கூட்டம் சலசலத்தது. திடீரென்று மந்திர உச்சாடனம் உச்சஸ்தாயியை எட்டியது. அந்த அறை முழுவதும் நிறைந்த அந்த மந்திர ஒலிகள் கொஞ்சம் கொஞ்சமாய் சந்தியாவின் நெஞ்சத்திற்குள் புகுந்து கொண்டது.

    அந்த நீள் சதுர அறைக்குள்.. அவர் பிரவேசித்தார். கூட்டம் ஆர்ப்பரித்தது. சந்தியாவுக்குள் புது ரத்தம் 'ஜிவ்’வென்று பரவுவது போலிருந்தது. அவர்.. ஸ்வாமிஜி என்றழைக்கப்பட்ட பட்டாச்சார்யர். நிதானமாக நடந்து வந்து... அவருக்கென பிரத்யேகமாகப் போடப்பட்டிருந்த இருக்கையின் மீது போடப்பட்டிருந்த ஓம் நமோ நாராயணாய என்று பொறிக்கப்பட்டிருந்த காவி வஸ்திரத்தை லாவகமாக எடுத்து தன் அருகே இருந்த மனிதரிடம் கொடுத்துவிட்டு சாதாரண மர நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

    கூட்டம் அமைதியானது.

    சந்தியா கூர்மையானாள். அவள் கண்கள் பட்டாச்சார்யரின் மீது ஆழமாகப் பதிந்திருந்தது.

    சில.. நொடிகள்... சில நொடிகள் தான்..

    சந்தியா தனக்குள் ஏதோ நெகிழ்வதைப் போல் உணர்ந்தாள். தனக்குள் ஏதோ ஒன்று உருகிக் கரைந்து காணாமல் போவது போல் உணர்ந்தாள். அது அவளுடைய 'தான்' என்கிற எண்ணம் தான் என்று அப்போது அவளுக்குப் புரியவில்லை.

    பட்டாச்சார்யர்... அவள் மனதுக்குள் முழுமையாக சிம்மாசனம் போட்டு ஆக்ரமித்துக் கொண்டார் என்பதையும் அவள் உணர்ந்து கொள்ளவில்லை.

    பட்டாச்சார்யர் தேஜோமயமாகக் காட்சியளித்தார். வெண் பளிங்கு போன்ற அவர் தேகத்தின் பெரும் பகுதியை காவி வஸ்த்ரங்கள் மூடி மறைத்திருந்த போதும் அவரது தேஜஸை பார்வையாளருக்கு புரிய வைத்துக் கொண்டும் இருந்தது. அவர் நெற்றியில் இடம் பெற்றிருந்த செந்தூரக் கோடு... இனம் புரியாத சிந்தனைகளை விதைத்துக் கொண்டிருந்தது சந்தியாவின் மனதுக்குள்.

    பட்டாச்சார்யர். அன்பொழுகப் பேச ஆரம்பித்தார். ரொம்ப சந்தோஷமா இருக்கு. மஹா பெரியவாள் நாம் இந்த சாதாரணன் கூப்பிட்டான்னு ஓடோடி வந்திருக்கிறது. ரொம்ப காக்க வச்சுட்டேனா... மன்னிச்சிடுங்கோ... உங்க வேலைகளின் அழுத்தம்... உங்க நேரத்தோட முக்கியம்.. எல்லாம் எனக்குத் தெரியும்... ஆனா... வந்தமா பேசினமா.. போனமான்னு இந்த விஷயம் இருக்க முடியாது. மஹா பெரிய சங்கல்பம். இந்த உலகச் சேம விஷயம்.. குறிப்பா.. திருவள்ளூர் ஜனங்களுக்கு ஜீவாதாரம். ஆஞ்சநேய ஸ்வாமியின் பரிபூரண விருப்பம். உங்க எல்லோருடைய புண்யத்தால... கைங்கர்யத்தால நடக்கப் போறது.. நீங்கள்ளாம் தானா இங்க வந்து சேரலை.. ஸ்ரீ பஞ்சமுக ஸ்வாமி பார்த்துப் பார்த்து செலக்ட் பண்ணி அழைச்சிண்டு வந்திருக்கார். அவருக்கு வேண்டியவாளை அவர் அழைச்சிண்டு வந்து என் முன்னால உட்கார்த்தி வச்சு... இந்தாடா... இதுதான் உன் சேனை... ஆரம்பி உன் வேலையன்னு" எனக்குக் கட்டளையிட்டுருக்கார்.. இதுல நான் உசத்தி... நீங்க தாழ்த்திங்கிற பேதமெல்லாம் கிடையாது.. நாம் எல்லோருமே அவருடைய கருவிகள்.. எதிர்காலத்துல பேசப்படப்போற ஒரு விஷயத்துக்காக நாம பயன்படுத்தப் படறோம். அவ்வளவுதான்.. ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கான இந்த மஹா சங்கல்பம் திருவள்ளூர்ல பிரும்மாண்டமா எழுந்து நிற்கும்போது... நான் இந்த பூமில இருக்க மாட்டேன்.

    பட்டாச்சார்யரின் உதடுகள் இதனை உச்சரித்த அந்த தருணத்தில்... ஸ்வாமி... ஸ்வாமி.. என்று நெக்குருகிப் போனார்கள் கூட்டத்தினர்.

    "வருத்தப்படறதுக்காக சொல்லலை. யதார்த்தம்... இந்த மஹா சங்கல்பத்தை தொடங்கி வைக்கத்தான் எனக்கு உத்தரவு... எனக்கு அந்த மூர்த்தியோட தரிசனம் பூலோகத்துல இல்லை. அதுதான் விதி. ஆனா.. உங்களுக்கு அப்படியில்லை. உங்க பேரக் குழந்தைகளை கைபிடிச்சு அழைச்சிண்டு வந்து.. வானத்துக்கும் பூமிக்குமா எழுந்தருளியிருக்கப் போகும் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரைக் காட்டி..

    உங்க தாத்தாவுக்கும் இதுல ஒரு பங்கு இருக்குடா என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொள்ளலாம்...

    பட்டாச்சார்யர்.. பிரும்மாண்டமாய் எழுந்தருளப் போகும் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கான ஆலயத்திற்கான திட்டங்களை விவரிக்கத் தொடங்கினார்.

    கூட்டத்தினர்.. ஆடாமல் அசையாமல் அவருடைய உதடுகள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளையும் கிரகித்துக் கொண்டனர்.

    பட்டாச்சார்யர் தொடர்ந்தார்.

    "இதென்னடா புதுசா ஒரு கோயில்.. இருக்கிற கோயில்களுக்கே எண்ணெய்விட்டு விளக்கேத்த நாதியில்ல..

    பொழுது போகாம ஒரு பிராம்மணன் கைல காலணா காசு இல்லாம கோடிக்கணக்கா திட்டம் போட்டு... இருக்கிறவாளையெல்லாம் இம்சை பண்றானேன்னு சில மனுஷாளுக்கு தோணும். போதாக்குறைக்கு வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு.. வந்தவங்களை மணிக்கணக்கா இந்த ரூம்ல தரைல உட்கார்த்தி வச்சு... ஒரு டீ காபி கூட கொடுக்காம பாடா படுத்தறானேன்னு கூட சில பேருக்கு என்மேல வருத்தம் இருக்கலாம்..."

    பட்டாச்சார்யரின் இந்த வார்த்தைகள் சந்தியாவின் நெஞ்சுக்குள் புகுந்து முள்ளாய் தைத்தது.. 'என்னைத் தான் சொல்கிறாரோ... எப்படி என் மன ஓட்டங்களைக் கண்டு பிடித்தார்? இவர் யார்? சன்யாசியா? ஜோஸ்யரா? அவதார புருஷரா? ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தி இருக்கும் போலிருக்கிறதே. நான் சாயத் தொடங்கி விட்டேனா..' சந்தியா பிரமிப்பாய், சிதறி ஓடும் எண்ணங்களை கட்டிப்பிடித்து இழுத்து வந்து மீண்டும் பட்டாச்சார்யரின் வார்த்தைகளில் செலுத்தினாள்.

    நான் ஒரு சாதாரண மனுஷன். அதனால் உங்களோட சாதாரண எண்ண ஓட்டங்களை என்னால புரிஞ்சுக்க முடியறது என்றபடியே அவர் வலது திசை நோக்கி ஒருவரைப் பார்க்க.. அடுத்த நொடிப் பொழுதில் அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது. சந்தியாவின் முன் தேனீர் வந்தபோது தயக்கமாய் எடுத்துக் கொண்டாள். கூச்சப்படாம சாப்பிடுங்கோ... முதல்ல மனசையும் உடம்பையும் சாந்தப்படுத்திட்டா... மூளை மும்முரமா வேலை செய்ய ஆரம்பிச்சிடும். பெரிய மனுஷாள்ளாம் வந்திருக்கேள்.. உங்களுக்கெல்லாம் நிறைய கொடுக்கணும். இப்ப என்னால டீ தான் கொடுக்க முடியறது... பின்னால என்னால கொடுக்க முடியாததையெல்லாம் திருவள்ளூர்ல எழுந்தருளப் போகும் ஸ்வாமி கொடுப்பார். முதல்ல உங்களுக்கெல்லாம் கொடுக்கணும்னுதான் உங்க எல்லாரையும் தேர்ந்தெடுத்து இங்க கூட்டிண்டு வந்திருக்கார். இதுல யாருக்கும் சந்தேகமே வேண்டாம். அலங்கார வார்த்தையில்ல இது. ஆஞ்சநேயர் சொல்றார். அடியேன் எடுத்துச் சொல்றேன்.

    சந்தியா நெக்குறுகிப் போனாள். மானசீகமாக ஆசிரியருக்கு நன்றி சொல்லிக் கொண்டாள். சூடான தேனீர் உள் இறங்கியதும் மூளை சுறுசுறுப்படைந்து கவனம் கூர்மையாகியது.

    பட்டாச்சார்யர், நீங்க ஒவ்வொருவரும் அவரவர் துறைல ரொம்பப் பெரியவான்னு எனக்குத் தெரியும். ஒருத்தருக்கொருத்தர் தெரியணுமோன்னோ.. அதனால.. உங்களை நீங்களே அறிமுகம் செஞ்சுக்கறேளா?

    சுய அறிமுகம் ஆரம்பமாயிற்று.. சந்தியா தன் கையோடு கொண்டு வந்திருந்த ஸ்கிரிப்ளிங் பேடில் குறித்துக் கொள்ளத் தயாரானாள்.

    நான் பாலசுப்ரமண்யன். எல்.அண்டு டில ஏ.ஜி.எம். ஆக இருக்கேன்.

    ஏ.ஜி.எம்.னா? பட்டாச்சார்யர் கேட்டார்.

    அசிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜர்..

    பெரிய போஸ்ட்டோ...

    பாலசுப்ரமண்யன் மௌனமாக இருந்தார்.

    பட்டாச்சார்யர் அடுத்த நபரைப் பார்த்தார்.

    நான் தியாகராஜன்.ஜி.இ.ல மார்க்கெட்டிங் மேனேஜர்.

    அடேயப்பா... என்றவரின் பார்வை நகர்ந்தது.

    நான் பழனியப்பன் அப்பல்லோல ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட்."

    ரொம்ப சந்தோஷம். பாவம் பேஷண்ட். எல்லாரையும் விட்டு விட்டு வந்துட்டேளோ...

    நான்.. சீதாராமன்.. சீஃப் ஆர்க்கிடெக்ட்.

    நமக்கு ரொம்ப உபயோகமாயிருப்பேன்னு ஆண்டவன் அனுப்பி வச்சிருக்கார்.

    "அறிமுகம் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒவ்வொருத்தர் வகிக்கும் பதவியைச் சொல்லும்போது சந்தியாவுக்குத் தன் கன்னத்தில் பளீர்.. பளீர் என அறைவது போல உணர்ந்தாள். வேலையில்லாத மனிதர்கள் வெட்டிப் பொழுது போக்குபவர்கள் என்றெல்லாம் ஓடிக் கொண்டிருந்த தன் மன ஓட்டங்களை பெரிய பெரிய பாறாங்கற்களாகத் தூக்கி வைத்து நசுக்கி தலையெடுக்காமல் செய்து விட்டதாக உணர்ந்தாள். தான் ஒரு பத்திரிகையாளர் என்று அவள் மீது இந்த க்ஷணம் வரை ஒட்டிக் கொண்டிருந்த கர்வம் பொடிப் பொடியாக உதிர்ந்து காணாமல் போயிருந்தது.. அவளின் முறை வந்தது... மிகுந்த தடுமாற்றத்துடன் எழுந்து நின்றாள்.

    ஸ்வாமி.. நான்...

    பட்டாச்சார்யர்ன்னே நீங்க கூப்பிடலாம்.. எதுக்காக உங்களை மாத்திக்கறேள்...

    சந்தியாவின் முகம் பேயறைந்தவளாய் ஆகியது... வார்த்தைகள் குழறின.

    சொல்லும்மா... நீங்கதான் இங்கே ஒரே ஒரு பெண்மணி... அதான் பதட்டப்படறேள்... அம்பாள் ஸ்வரூபமாதான் உங்களை இங்கே அனுப்பி வச்சிருக்கார் ஆண்டவன். தயங்காம பேசுங்கோ.. பேனா பிடிக்கிற நீங்க பயப்படலாமா?

    சந்தியா.. நிதானப்படுத்திக் கொண்டாள்... என்ன முயன்றும் அவளுடைய கணீர் குரல் வெளியே வர மறுத்தது. சன்னமான குரலில் நான் சந்தியா.. இந்து தர்மம் பத்திரிகைலேர்ந்து வந்திருக்கேன்.

    பத்திரிகையாளர்... ரொம்ப அவசியமானவங்க நீங்க.. இங்க உங்களுக்கு உபசாரமெல்லாம் பண்ணியிருக்க மாட்டாளே.. மணிக்கணக்கா உட்கார வச்சிருக்காளேன்னு கோபப்படாதீங்க.. இது தெய்வ சன்னதி. இங்க எல்லாரும் சமம். பெரிய பிராஜெக்ட் இது. நன்னா புரிஞ்சிண்டு உங்க பத்திரிகைல எழுதி எங்களுக்கு உதவுங்கம்மா...

    பட்டாச்சார்யர் தனது இரு கரங்களையும் கூப்பி அவளுக்கு வணக்கம் சொன்னார். யாருக்கும் கிடைக்காத மரியாதை இது... சந்தியா பதறிப் போனாள். ஸ்வாமிகளின் இந்த மரியாதைக்கு தான் தகுதியற்றவள் என்று உணர்ந்து குறுகிப் போனாள்.

    எல்லோருடைய அறிமுகமும் முடிந்தது.

    பட்டாச்சார்யர் கண்களை மூடிக் கொண்டு சில வினாடிகள் இருந்தார். கூட்டம் கனத்த அமைதியுடன் காத்திருந்தது.

    பிராஜெக்ட் பத்தி சொல்லச் சொல்லட்டுமா? என்றபடியே அவர் தலை சற்றே அசைவதற்குள் ஒரு மனிதர் கொத்து காகிதங்களைக் கைகளில் பிடித்தபடியே முன் வந்தார்.

    இவர்... கல்யாணராமன் ஐ.ஏ.எஸ். திருவள்ளூர்ல எழுந்தருளியிருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் பிராஜெக்டுக்கு தலைவர்.. இங்க வாம்மா லஷ்மி... என்று அவர் குரல் கொடுக்க.. எங்கிருந்தோ ஒரு பெண்மணி வந்து நின்றபோது சந்தியா ஆச்சர்யப்பட்டுப் போனாள். இந்தக் கூட்டத்தில் ஒரு பெண்ணும் இருக்கிறாளே என்று..

    இந்தம்மா லஷ்மி... பிசிக்ஸ்ல டாக்டரேட் பண்ணிட்டு... உலகமெல்லாம் சுத்திட்டு... ஆஞ்சநேயரே கதின்னு தன்னை அர்ப்பணிச்சுண்டுட்டா.. இங்க கோ ஆர்டினேட்டர்.. அதாவது ஒருங்கிணைப்பாளர்... இதெல்லாம் எதுக்கு எல்லாம் இந்தம்மாதான் கவனிச்சுக்கப் போறா... இவாதான் டீம்... இப்ப உங்களைப் போல பெரிய மனுஷாள்ளாம் எங்களோட சேர்ந்துக்கணும் என்ற பட்டாச்சாரியரின் குரல் தழுதழுத்தது.. சமாளித்தபடியே தொடர்ந்தார்.

    இந்தக் கையாலாகாதவன் கனவுல அவர் ஏன் வந்தார்னு தெரியலை. கட்டுடா கோயிலைங்கிறார். சும்மா இல்ல 32 அடி ஆஞ்சநேயர்.. இப்ப ஏழு கோடி பிராஜெக்ட். பச்சை கிரானைட்டுல ஒரே கல்லுல மூர்த்தி செதுக்கணும். அதுக்கு சுமார் நூத்தி ஐம்பது டன் எடையுள்ள ஒரே பாறை மலைலேர்ந்து வெட்டி எடுக்கணும்... அந்த மலை எங்கியோ ஹாசன்ல அதான் கர்நாடக மாநிலத்துல இருக்காம். பாறையை வெட்டி எடுத்துண்டு வர்றதுக்கு மூணு மாசம் ஆகலாம். ஒரே பாறைல பீடத்தோட சேர்த்து நாப்பது அடி உயரத்துக்கு பூமிக்கும் வானத்துக்குமா எழுந்தருளப் போறார் ஆஞ்சநேயர்... அடியேனோ அன்னக்காவடி.. பெரிய மனுஷாள் நாம் ஒண்ணா சேர்ந்து இந்த மஹா சங்கல்பத்தை நிறைவேத்தணும் பட்டாச்சார்யர் நீண்ட மௌனம் சாதித்தார்.

    சந்தியா மெய்மறந்து போனாள்.

    பொழுது போகாத வேலை என்று எவ்வளவு சுலபமாக... அலட்சியமாக நினைத்து விட்டோம். எத்தனை வல்லுனர்கள் தங்கள் பொன்னான நேரங்களை ஒதுக்கி இந்த ஆன்மிகப் பணியில் ஈடுபடுகிறார்கள். எத்தனை தொழில்நுட்பம்.

    சந்தியாவுக்குள் குடியேறியிருந்த வித்யா கர்வம் உத்யோக கர்வம் - என்று எல்லாம் அழிந்து போனது. புடம் போட்ட தங்கமென உணர ஆரம்பித்தாள். அக்னியில் பிரவேசித்து புத்துயிர் பெற்றவளாய் உணர்ந்தாள்.

    அவளுக்குள் பஞ்சமுக ஆஞ்சநேயர் முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டார்.

    எல் அண்ட் டி நிபுணர்கள் மலையிலிருந்து பாறையை வெட்டி எடுத்து, எத்தனை பாலங்களைக் கடந்து திருவள்ளூருக்குக் கொண்டு வரவேண்டும் என்பன போன்ற அதி தொழில்நுட்ப நுணுக்கங்களை அவரவர் துறை சார்ந்த நிபுணத்துவத்துடன் விளக்கிக் கொண்டிருந்தார்கள்..

    சந்தியா முழுவதும் மாறிப் போயிருந்தாள்.

    பட்டாச்சார்யரின் தெய்வீக தேஜஸ் அவளை வெகுவாக சமநிலைப்படுத்தி இருந்தது.

    கூட்டம் முடிவடையும் தருணத்தை எட்டியது.

    பட்டாச்சார்யர் சுவற்றில் இருந்த பஞ்சமுக ஆஞ்சநேய மூர்த்திக்கு தீப ஆராதனைகளைச் செய்தார்.

    ஒவ்வொருவராய் அவரிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள்.

    சந்தியா... அவரை நெருங்கினாள். பவ்யமாய் குனிந்து இருகரம் நீட்டி பிரசாதம் பெற்றுக் கொண்டாள்.

    பட்டாச்சார்யர்.. நிமிர்ந்து அவள் முகம் பார்த்தார். அவர் பார்வையின் தீட்சண்யம் தாங்க இயலாமல் தவித்தாள் சந்தியா.

    நான் போயிட்டு வரேன் ஸ்வாமிஜி.

    ’இந்து தர்மம்’ பத்திரிகைல எழுதறேளா..."

    அதுல நான் எழுதறதில்ல.. ஆசிரியர் அனுப்பி வச்சார். வந்தேன். கேட்டா எழுதிக் கொடுப்பேன். அவர் எதுல போடுவாரோ தெரியாது.

    ஆசிரியர் பெயர் என்ன?

    சிவா... இல்ல சிவராமன்.

    ரொம்ப பெரியவரா?

    ரொம்ப சின்னவர்.

    பட்டாச்சார்யரின் கைகளில் எதுவோ கொடுக்கப்பட்டது. சுருக்குப்பை போல் இருந்தது.

    இந்தாம்மா... இதை பூஜைல வை. தினம் இந்த புனுகால.. பதினாறு தடவை இந்த யந்திரத்துல விரலால தடவிக் கொண்டே இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டு வா... ஆஞ்சநேயர் அபாரமான சக்தி கொடுப்பார் உனக்கு. எத்தனையோ பேருக்கு நீ உதவி செய்யணுங்கிறது விதி. அதுக்கான பலத்தை அவர் கொடுப்பார். உனக்கு நிறைய பயணங்கள் இருக்கு. வடக்கே பயணம் போவாய். உன் மூலமா ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கிடைக்கும்... அது ஆரம்பம்தான். போகப் போக உன் பலம் உனக்கு புரியும். இந்த யந்திரத்தை கைப்பையிலேயே வச்சுக்க.. அவர் பாதுகாப்பா உன்கூடவே வருவார்.. பட்டாச்சார்யர் அடுத்த நபரை கவனித்தார்.

    சந்தியா நமஸ்கரித்துவிட்டு வெளியே வந்தாள். கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கும் மேலாகியிருந்தது. வெளியே வீசிய காற்று புதிதாய் இருந்தது. மனம் காகிதமாய் லேசாகியிருந்தது. அலுவலகம் திரும்ப விருப்பமில்லை. வண்டியில் ஏறி.. வீட்டுக்கே போனாள். சாரை நாளைக்கு சந்திக்கறேன் சொல்லிடு என்று டிரைவரை அனுப்பி வைத்தாள்.

    வீட்டில் நுழைந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாள். பூஜையறைக் கதவைத் திறந்து விளக்கேற்றினாள். கைப்பையைத் திறந்து பட்டாச்சார்யர் கொடுத்த யந்திரத்தையும், புனுகு டப்பாவையும், பஞ்சமுக ஆஞ்சநேயர் படத்தையும், சிந்தூரத்தையும் பக்தியாய் எடுத்து வைத்தாள்.

    "வடக்கே

    Enjoying the preview?
    Page 1 of 1