Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Analai Kaayum Ambuligal
Analai Kaayum Ambuligal
Analai Kaayum Ambuligal
Ebook266 pages3 hours

Analai Kaayum Ambuligal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

கதை முழுக்க மொத்தமே நான்கு பாத்திரங்கள்தான். நடுவில் இரண்டுபேர் வந்து செல்வார்கள். சிலர் ஓரமாய் நிற்பார்கள்.

கருப்பொருளும் சற்று வித்தியாசமானது!

வயதான ஒரு தந்தை, வயதுக்குவந்த மகளுக்கு திருமணம் செய்துவைக்க பாடுபடுவது உலகில் நடக்கும் ஒரு விஷயம். அந்தத் தந்தைக்கு மகள் திருமணம் செய்து வைக்க விரும்புவது மாறுபட்ட விஷயம்தானே?

அதேபோல் தெளிவான முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு இளைஞனும்; வசதியான வீட்டில் பிறந்த பெண்ணிற்குண்டான லட்சணங்கள் துளிகூட இல்லாமல், வாழ்க்கை தனக்களித்த சோதனைகளை சாதாரணமாக எதிர்கொண்ட ஒரு பெண்ணும் சந்தித்த கதைதான் அனலாய்க் காயும் அம்புலிகள்.

வலுவான பாத்திரங்கள் மட்டுமல்லாமல் கதையில் பல சமுதாய கோணங்களைச் சித்தரித்து அதனால் ஏற்படும் சிக்கல்களை, ஒவ்வொரு பாத்திரங்களின் உருவ அமைப்புகள், வாழ்க்கை முறைகள், பேசும் விதங்கள், அவர்களின் தொழில் பற்றிய ஞானம் உளவியல் அம்சங்கள் போன்ற எண்ணற்ற கூறுகளை சித்தரிக்கும் உன்னதப் படைப்பு.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352852420
Analai Kaayum Ambuligal

Read more from Indira Soundarajan

Related to Analai Kaayum Ambuligal

Related ebooks

Reviews for Analai Kaayum Ambuligal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Analai Kaayum Ambuligal - Indira Soundarajan

    அனலாய்க் காயும் அம்புலிகள்

    Analai Kaayum Ambuligal

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அனலாய்க் காயும் அம்புலிகள்

      -இந்திரா சௌந்தராஜன்

    மதிப்புரை

    திரு.சிவக்குமார் -திரைப்படக்கலைஞர், ஓவியர்.

    (உலகக்களஞ்சியம் தொகுப்புக்களில் ‘ஏ’ முதல் ‘இசட்’ வரையிலான அத்தனை செய்திக் குறிப்புக்களையும் இருபத்தியோரு வயதுக்குள் சுவாமி விவேகானந்தர் மனப்பாடம் செய்துவிட்டாராம்.

    பின்னாளில் அவர் சொன்னார், ‘புத்தகம் என்பது என்ன? பிற மனித மனம் உமிழ்ந்த எச்சில்-வாந்தி.’ எனவே கண்டதைப்படித்து மனதைக்குப்பைத்தொட்டி ஆக்காதீர்கள். எவை மனித நேயசிந்தனையை வளர்க்கிறதோ – எவை மனிதவாழ்வை மேம்படுத்தப் பயன்படுகிறதோ அவற்றை மட்டும் படியுங்கள் போதும் என்றார்.

    அதிகப்படியான நூல்களுடன் பரிச்சயம் இருப்பது தான் பெரியவிஷயம் என்றால், கன்னிமாரா போன்ற நூல் நிலையங்கள்தானே போற்றுதலுக்கு உரியவையான இருக்கும்.

    மனிதன் எத்தகையவன். அவன் வாழ்நெறி எவ்வளவு புனிதமானது. அவன் சிந்தனை எந்த அளவு உயரமானது, அவனுடைய மனித நேயம் மக்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதையே நாம் பார்க்க வோண்டும்.

    கண்ணதாசன், வாலி, சோ போன்றோர் இந்துமதத்தின் சாரத்தையும் ராமாயணம், மகாபாரதம், போன்ற காவியங்களையும் மக்களுக்குப் புரிகின்ற வகையில் சமீபத்தில் நிறைய எழுதியிருக்கிறார்கள்.

    மகாத்மா காந்தி அந்த அளவுக்கு விரிவாக எதையும் எழுதிவிடவில்லை. அவர் ஒன்றே ஒன்று தான் செய்தார்.

    சொல்லுக்கும் செயலுக்கும் அதிக இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொண்டார். அதுதான் அவரை மகாத்மா ஆக்கியது.

    "இந்த மண்ணில் வாழும் எவனும் தன்னை அப்பழுக்கற்றவன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. நல்ல மனிதனிடம் நல்ல தன்மைகள் 85 சதவீதமும், கெட்ட குணங்கள் 15 சதவீதமும் இருக்கும். கெட்ட மனிதனிடம் 85 சதவீதம் கெட்டதன்மையும் 15 சதவீதம் நல்ல விஷயங்களும் இருக்கும்.

    ஓவ்வொரு மனிதனும் தன்னை முழுமையான மனிதனாக்க – தம்மிடமிருக்கும் தீயவற்றை அகற்றி – பூரணத்துவம் பெற முயற்சிப்பதே வாழ்வின் நோக்கம்...

    அந்த வகையில், நாம் எழுதும் எழுத்து, படிப்பவரின் சிந்தனையை – வாழ்வைச் செம்மைப்படுத்த சிறிதளவாவது உதவவேண்டும்.

    "இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றுமில்லை

    இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்

    வலி கிடந்த மாற்றம் உரைக்கு மேல் அவ் இல்

    புலி கிடந்த தூறு ஆய்விடும்-"

    என்கிறார் ஒளவையார்.

    குணவதியான மனைவி வீட்டில் இருப்பின் அங்கு இல்லாதது எதுவுமில்லை. நிறைவான இல்லம். குடியிருக்கும் கோயில் அது.

    அப்படி ஒரு நல்ல மனைவி இல்லாது போனாலும் கணவனிடம் மனைவி கடுஞ்சொல் பேசினாலும்,  அவ்வீடு புலி வாழ்கிற புதர் ஆகிவிடும் என்கிறார்கள்.

    ‘அனலாய்க் காயும் அம்புலிகள்’என்ற இந்த நாவல் ஒளவையின் கருத்தையே வலியுறுத்துகிறது.

    ராம்நாத்தின் மனைவி சுசிலா நல்ல இல்லாளாக இருந்து கணவனையும் மகளையும் அன்புடன் கவனித்திருந்தால் இந்த நாவல் எழுதுவதற்கு கருவே இருந்திருக்காது.

    தாலிகட்டியவனைத்தலையில் தட்டி–தனதுபேராசைக்கு அவன் இணங்காத கட்டத்தில், அவனை வெட்டி விட்டு, அடுத்தவனைத் தேடிப்போன குருரமான பெண் அவள்.

    மனைவியின் செயலால் மனமொடிந்து போன ராம்நாத். குழந்தை மீது உயிரையே வைத்திருந்தபோதிலும், சோகமும் - பயமும் தன்னை ஆட்கொள்ளும் போதெல்லாம், தன்னை மதுவில் மூழ்கடித்துக் கொள்கிறார்.

    இறந்த மனைவியின் கல்லறை காய்வதற்குள் அடுத்த பெண்ணைத் தேடி அலையும், மனிதர்கள் மத்தியில், மகளுக்காக தனிமரபாய் வாழ்கிறார் அவர். அந்தத் தியாக உள்ளத்திற்காகவே – தவிர்க்க முடியாமல் குடிக்கும் தந்தையை அவள் நேசிக்கிறாள்.

    ஒரு ஏழை விதவைத்தாயிடம் வளரும் பிள்ளைக்குக் கிடைக்கும் சந்தோஷமும், எல்லா வசதியுமுள்ள ஒரு பணக்கார அப்பனின் அன்பில் தோயும் பெண்ணுக்குக் கிடைக்க முடியாது.

    ‘விதவை வாழ்வு முனிவர் தவ வாழ்வு’ போன்றது. முனிவர்கள் சிவன் - விஷ்ணுவை நெஞ்சில் நிறுத்தி உலகப்பற்றை ஒதுக்கி வாழ்கிறார்கள். விதவைகள், அப்படி ஒரு வாழ்வை, கணவனை நினைத்து வாழ வேண்டும் என்ற வாதத்தை அரவிந்தன் மூலம் ஒரு இடத்தில் ஆசிரியர் வைக்கிறார்.

    பரிதவிக்கிற பெண்கள் மறுமணம் செய்துகொள்வதில் தவறில்லை. குணசேகர் மாதிரி காமவலை வீசுவோர் முன் அவள் நிலைப்பாடு என்ன? கணவன்ங்கற பாதுகாப்பு இருந்த இந்த மாதிரி ஆட்கள் வாலாட்டத்தோன்றுமா? – என்ற எதிர்வாதத்தையும் ரம்யா மூலம் பிற்பகுதியில் வைக்கிறார்.

    வாழ்ந்து முடிந்து, பல்லும் சொல்லும் போன அரவிந்தனின் பாட்டிக்கு வேண்டுமானால் தவவாழ்வு என்கிற வாதம் பொருந்தும்.           

    திருமணமாகி மூன்று மாதங்கள்கூட முழுசாய்க் கணவனுடன் சேர்ந்து வாழும் வாயிப்புக் கிடைக்காத சரண்யா போன்றோருக்குப் பொருந்தாது.

    முப்பத்திரண்டு வயதில் கைம்பெண்ணாக, என் தாயார் கணவன் நினைவிலேயே வாழ்ந்து – என் தமக்கையையும் என்னையும் கரை சேர்த்தார்.

    ஆனால் என் பெரியம்மா?

    ஏழு வயதில் தாலிகட்டி எட்டுவயதில் அந்தத்தாலியை அறுத்து, பத்துவயதில் வயதுக்கு வந்து, தொண்ணூறு வயது வரை வெள்ளைச்சேலைக்குள் வெறும் நடைபிணமாய் உலவினாரே, அது தவ வாழ்வா?

    எட்டு வயதுச் சிறுமியின் வாழ்வை இச்சமூகம், சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரில் பறித்துக் கொண்டது கொலை பாதகமில்லையா?

    சரண்யா போன்ற பெண்களுக்கு அப்படிப்பட்ட தண்டனையை சமூகம் வழங்கக்கூடாது என்ற நல்லெண்ணம் ஆசிரியருக்கு இருப்பதில் மகிழ்ச்சி.

    ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு, இருபத்தி ஏழு வயது வித்தியாசத்தில் - சாரதாதேவியை மணம் முடித்துவைத்தார்கள். நாற்பத்திரண்டு வயதில் சக்தி வடிவமாக மனைவி அவருக்குக் காட்சியளித்ததில் தவறில்லை.

    ஆனால், சாரதா தேவி தன்னை சக்தியாக நினைத்திருப்பாரா? பதினைந்து வயதுப்பெண்ணின் உடல் இச்சை பற்றி யாராவது கவலைப்பட்டார்களா?

    சீதையை ராமர் நெருப்பில் குளிக்கச்சொன்னது: பாஞ்சாலி ஐந்து பேரை மணக்க நேர்ந்தது – எல்லாம் ஆணாதிக்கச் செயல்கள் அல்லவா...

    சலவைத்தொழிலாளியின் சந்தேகத்தைத் தீர்க்க: ராமபிரான் சீதையை நெருப்பில் இறங்கச்சொன்னது சரியா?

    உனக்கு ஐந்து கணவன்மார்கள் தேவையா என்று பாஞ்சாலியிடம் யாராவது கேட்டிருப்பார்களா?

    பெண்ணினம் ரத்தக் கண்ணீர் வடித்துக்கேட்கும் கேள்விகள் இவை.

    அரவிந்தன் - ரம்யா திருமணத்தை நோக்கி கதை சொல்வது எல்லோராலும் ஊகிக்கக் கூடியது தான். ஆனால், ராம்நாத் - சரண்யா திருமணம் உச்சக்கட்ட நிகழ்வாக அமைந்ததுதான் நாவலைத்தூக்கி நிறுத்தியது.

    ‘மேகக் கவிதைகளையும், ஒளி ஓவியமாய்த்திகழும் அந்தி வானத்தையும், பறவைகளின் நீச்சல் குளமாய் ஆகாயத்தையும் ரசிக்கும் அற்புதப்பாத்திரம் ரம்யா.

    ‘எனக்குத் தாய்ப்பால் கொடுத்தா தன் அழகு குறைஞ்சிடும்னு நெனைச்ச அவங்க என் அம்மா இல்லை. உங்களுக்கு ஒரு குழந்தையைப் பெத்துக்கொடுத்த வாடகைப் பொண்ணு’- என்று தாயை நினைக்கும் போது அனலாய்க்காய்கிறார்.

    நாங்கள்ளாம் எண்பதாயிரம், ஒரு லட்சம் சம்பளத்துக்காக புலி வாலைப்புடிச்சிட்டு விடமுடியாம தவிக்கிறோம் என்கிறார் கௌரவமேனேஜர் ஞானப்பிரகாசம்.

    முகம் என்பது, எழுத்திலும், சப்தத்திலும் இல்லாத ஒருமொழியைத்தன்வசம் வைத்திருக்கும் கரும் பலகை போன்றது...

    ஓவ்வொரு விஷயத்திலும், உண்மையில் உண்மையாக இருந்தாலொழிய வாழ்க்கையில் மலிவாய்ப் பொய்பேசுவது தவிர்க்க முடியாது.

    ஆண்பெண் இனச் சேர்க்கைக்கும் உருவாக்கத்திற்கும் ஆதாரமே பெண்கிட்ட இருக்கற வெட்கம் - பயம் அப்புறம் மடம்ங்கற ஒரு குணம்...

    இரவு நேரத்து வானில் ஜிகினாத் தூள் தூவினது போல நட்சத்திரங்கள்! பூனைக்குட்டி வளைய வருகிறாற்போல ஒரு தினுசான காற்று...

    ஒரு டைவர்சிக்கு வாழ்வு கொடுக்கறதா நெனைச்சு, மன நோயாளி ஒருத்திகிட்ட மாட்டி கிட்டேன்...

    இந்த உலகத்தில் பெரிய கொலைகாரன் ‘டைம்’தான். இரண்டாயிரம் ரூபாய் ரெடிமேட் சட்டையில் வரிகட்டும் பணக்கார சொட்டைத்தலையர்கள்.

    இந்த வரிகளில் ஆசிரியரின் அழகுணாச்சி, கூர்ந்தமதி, சொல்லாட்சி, சுட்டித்தனம் அனைத்தும் வெளிப்படுகிறது.

    ஒரு திரைப்படம் பார்ப்பது போல, காட்சிகளிலும் உரையாடல்களிலும் அவ்வளவு தெளிவு.

    குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு நிறைவாக ஒரு செய்தியைச் சொல்லும் இந்த நாவல் வாசகர்களை நிச்சயம் கவரும் என்று நம்புகிறேன்...

    வாழ்த்துக்களுடன்

    சிவக்குமார்

    திரைப்படக்கலைஞர் - ஓவியர்

    சென்னை - 17.

    மதிப்புரை

    திரு.மா.மு.துரைசாயி

    (துணைப்பொது மேலாளர், சுந்தரம் பாஸனர்ஸ் லிமிடெட்)

    நான் தமிழ் நாவல்கள் படித்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ஒரு முன்னணி நாவலாசிரியரின் படைப்புக்கு முன்னுரை எழுத முதலில் தயங்கினேன். என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? என்ற என் கேள்விக்கு ஆசிரியர் சொன்ன காரணங்களில் மிகவும் என்னைக்கவர்ந்தது – உங்களைப்போன்றவர்கள்தான் சம்பிரதாய கோட்பாடுகளை மீறி உண்மையான உறைகல்லாக இருக்க முடியும். எனக்கு உங்களுடைய வெளிப்படையான விமர்சனம் தேவைஎன்றார்.

    என்னால இந்த அம்புலிப்பயணத்தை அனுபவித்து, துல்லியமாக உணரமுடியும்; காட்சிகளைத்தெளிவாகக் காணமுடியும்; ஆவலோடு கேட்பவர்களுக்கு ஒரளவு பேச்சுத்தமிழில் புரியவைக்கவும் முடியும்; ஆனால் முன்னுரை எழுதுமளவிற்கு என்னிடம் வார்தை வசதியில்லையே; வேண்டுமென்றால் நான் படித்துவிட்டு, என்கருத்தைத்தங்களிடம் நேரிடையாகப்பகிர்ந்து கொள்கிறேன் என்றேன். அதற்கு அவர், உங்களிடம் இருப்பது உங்களைவிட எனக்கு சற்று அதிகமாகவே தெரியும்; நீங்கள் முதலில் படியுங்கள்; மற்றவை தானாகவே நிகழும் என்று நம்பிக்கையூட்டினார். நானும் தமிழும் ஒருவரிடமிருந்து ஒருவர் தப்பித்துக் கொண்டவர்கள் என்பது எனக்குத்தானே தெரியும்? எப்படி எழுதப் போகிறோம் என்ற மலைப்பிலேயே சிலநாட்கள் நகர, பொறுப்பை உணர்ந்து ஒரு அமைதியான இரவுப்பொழுதில் அனலாய்க் காயும் அம்புலிகளில் ஆழ்ந்தேன். உறைந்துபோன என் தமிழிலக்கிய தாகம் தலை தூக்கியதை உணர்ந்தேன்.

    நான் ஒரு பாலைவனப் பயணி. தோளில் தொங்கும் தண்ணீர்பையை எடுத்து தாகத்தைத் தீர்த்தால் எங்கே என் வேகம் குறைந்துவிடுமோ என்று என்(தமிழ்)தாகத்தைத் தள்ளிப்போட்டவன். அப்படியொரு வேலைப்பளு – தொழில் சங்கடங்கள். இந்த தொடர்பயணத்தில் ஏற்பட்ட இலக்கிய இடைவேளைதான் இந்த அம்புலிகள்.

    பச்சை வேர்க்கடலையில் ஒட்டியிருக்கும் ஈரமண்ணை ரசித்து, ரசித்து முகர்ந்துபார்த்துவிட்டு, அப்பா எனக்கு இந்த வாசனைரொம்ப பிடிக்கும்என்று என் குழந்தை சொல்லும் பொழுதும்; பசுக்களைப் பார்க்கும் போதெல்லாம் காரணமில்லாமல் அவன் பரவசப்படும் பொழுதும் அவனுள் இருக்கும் பாரம்பரிய படிமானங்கள என்னை அதிசயப்படவைத்திருக்கிறது. மேலும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் பாரம்பரிய வித்துக்கள் உறைந்து கிடக்கின்றன என்ற உண்மையையும் உணர்த்தியிருக்கிறது. ஈரமும், வெப்பமும் கிடைத்த மாத்திரத்தில் அவ்வித்துக்கள் உயிர்ப்பித்துக் கொள்கின்றன என்பதை இப்பொழுது உணர்கிறேன். என்னுள் உறைந்துகிடந்த என் தமிழிலக்கிய வித்தை முளைத்து எழவைத்த அந்த வெப்பமும், ஈரமும்தான் ஆசிரியர் இந்திராவின் ‘அனலாய்க் காயும் அம்புலிகள்.’

    தெளிவான முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு இளைஞனும் வசதியான வீட்டில்பிறந்த பெண்ணிற்குண்டான லட்சணங்கள் துளிகூட இல்லாமல், வாழ்க்கை தனக்களித்த சோதனைகளை சாதாரணமாக எதிர்கொண்ட ஒரு பெண்ணும் சந்தித்த கதைதான் அனவாய்க் காயும் அம்புலிகள். அரவிந்தன், ரம்யா, ராம்நாத், சரண்யா மற்றும் ஞானப்பிரகாசம் இவர்களையெல்லாம் நான் நெருங்கிப்பார்த்திருக்கிறேன், பழகியிருக்கிறேன். என்ற உணர்வு ஏற்படுகிறதே தவிர, இவர்கள் கதாப்பாத்திரங்கள் என்று எண்ணிப்பார்க்கக்கூட மனம் துளிகூட துணியவில்லை. ஒருசினிமா இயக்குனர் தன் கற்பனைகளுக்கு காட்சி அமைப்புகளின் மூலம் வடிவம் கொடுத்துவிடலாம். ஆனால், ஒரு கதாசிரியரோ தன் பாத்திரங்களுக்கு தன்னுடைய எழுத்தின் மூலமே உயிர் கொடுக்க முடியும். இதற்கு துல்லியமான காட்சி அமைப்பும் அதை சித்தரிக்கும் வார்தைச் செரிவும் மிகமிக அவசியம். இதில் ஒவ்வொரு பாத்திரங்களின் உருவ அமைப்புகள், வாழ்க்கை முறைகள், பேசும் விதங்கள், அவர்களின் தொழில் பற்றிய ஞானம் உளவியல் அம்சங்கள் போன்ற எண்ணற்ற கூறுகளின் நேர்த்தியான கலவைதான். அத்தகைய பாத்திரங்களுக்கு உயிரூட்டுகின்றன. கதையின் கருவுக்கேற்ற விஞ்ஞானவிஷயங்கள் சமூகவியல், வாழ்வியல் சரித்திரம், நாகரிகம் மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் ஆழமாகச் சென்று ஆராய்ச்சி செய்தால்தான் இந்த படைப்பு பிரம்மாக்கள் வெற்றி பெற முடியும். அத்தகைய படைப்புக்கள்தான் சிறந்த இலக்கியப்பரிசைப் பெறமுடியும். இந்த இலக்கை இந்திராசௌந்தரராஜனின் ‘அனலாய்க் காயும் அம்புலிகள்’ விஞ்சி விட்டன். இந்திராசௌந்தரராஜனின் இந்த பாத்திர படைப்புகள் உயிருடன் என் உணர்வில் கலந்து வாழம் நிஜங்களாகவே நினைக்கிறேன். எப்படி ஒரு கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் உள்ளத்தை வருடுகிறதோ. அதேபோல் உணர்வுபூர்வமாக படைத்த இந்த பாத்திரங்கள் உள்ளத்தைத் தொட்டு கண்களைக் கலங்க வைக்கின்றன. வலுவான பாத்திரங்கள் மட்டுமல்லாமல் கதையில் பல சமுதாய கோணங்களைச் சித்தரித்து அதனால் ஏற்படும் சிக்கல்களை, தன் முற்போக்கு சிந்தனையுடனும்,  மதியூகத்துடனும் சரிசெய்து முடித்திருப்பது ஒரு நல்ல எழுத்தாளரின் கைவண்ணத்தையும் பாத்திரங்களின் கேரக்டர்களுக்குள் புகுந்து, அவர் களுடைய மனோபாவங்களையும் பழக்கவழக்கங்களையும் ஆராய்ந்து பார்த்து வகுத்திருப்பது ஆசிரியரின் சொல்லாற்றலையும் உளவியல் ஆளுமையையும் தெளிவுபடுத்துகிறது. சமூக பிரக்ஞை உள்ள ஒவ்வொரு மனிதனையும் நிம்மதிப் பெருமூச்சு விடவைக்கும் இந் நாவலின் முடிவு.

    ஆக மொத்தத்தில் ‘அனலாய்க் காயும் அம்புலிகள்’ இந்திரா சௌந்தரராஜனை சிறந்த நாவலாசிரியராக அடையாளம் காட்டும் ஒரு ஒளிவட்டம். இந்த நாவல் இந்நாட்டின் மிகப்பெரிய இலக்கியப்பரிசைப் பெறும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. என்னைப் போன்ற நாவல் படிக்காதவர்களைக்கூட கவர்ந்த படைப்பு இது. என் தமிழார்வத்தையும், இலக்கிய தாகத்தையும் தூண்டி விட்ட இந்திராவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    தொடரட்டும் உங்கள் படைப்பு பண.

    வாழ்த்துக்கள்!

    அன்புடன்

    மா.மு.துரைசாயி.

        13.3.05

    சென்னை.

    என்னுரை

    கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன். எவ்வளவோ கதைகளை எழுதி விட்டேன். சமூகம், சரித்திரம். மர்மம் ஆன்மீகம், அமானுஷ்யம் என்று எல்லா களங்களிலும் வலம் வந்திருக்கிறேன். இதில் சிலகளங்களில் எனக்கு ராஜமுத்திரை விழுந்துள்ளது.

    குறிப்பாக சரித்திரம், அமானுஷ்யம் இரண்டிலும் நான் வெகுவாக அங்கீகரிக்கப்பட்டேன். ஆனால் என் மனம் கவர்ந்த சமூக நாவல் தளத்தில் நான் உற்றுதான் நோக்கப்பட்டேன்! இத்தனைக்கும் சமூக நாவல் தளங்களில் நான் பல பெரியபரிசுகளையும் பெற்றவன். கலைமகள் குறுநாவல் போட்டியில் இரண்டுமுறை முதல்பரிசு, என்பெயர் ரங்கநாயகிக்கு தமிழக அரசின் விருது. கிருஷ்ணதாசி தொலைக்காட்சித் தொடர்களில் ஒரு பெரும் வெற்றி பெற்ற தொடர் என்கிற அனேக அங்கீகாரங்கள் கிட்டியும் அமானுஷ்யத்தில் விழுந்த முத்திரை சமூககளத்தில் என்மேல் விழ வில்லை. அப்படி ஒரு ஆதங்கத்தில் நான் இருந்த போது எழுதியதுதான் இந்த ‘அனலாய்க் காயும் அம்புலிகள்’ புதினம்.

    கதை முழுக்க மொத்தமே நான்கு பாத்திரங்கள்தான். நடுவில் இரண்டுபேர் வந்து செல்வார்கள். சிலர் ஓரமாய் நிற்பார்கள். ஆனாலும் இந்தக் கதை பலநேரங்களில் என்னை உழுதது. உளவியல் ரீதியாக இக்கதையை நான் அணுகினேன். திடுக்கிடும் திருப்பங்கள் மயிர்க் கூச்செரியும சம்பவங்கள் என்று நான் செயற்கையாக இந்த கதையில் எதையும் செய்யவில்லை. பள்ளம்கண்ட இடத்தே பாயும் மழைநீர்போல சம்பவங்கள் தானாக என்னை இழுத்துச் சென்றன. அனுபவித்து எழுதுவது என்பார்களே... அப்படி ஒரு முயற்சி இது.

    கருப்பொருளும் சற்று வித்தியாசமானது!

    வயதான ஒரு தந்தை, வயதுக்குவந்த மகளுக்கு திருமணம் செய்துவைக்க பாடுபடுவது உலகில் நடக்கும் ஒரு விஷயம். அந்தத் தந்தைக்கு மகள் திருமணம் செய்து வைக்க விரும்புவது மாறுபட்ட விஷயம்தானே?

    எவ்வளவு நியாயங்கள் இருந்தால் இப்படி ஒரு முயற்சி எடுபடும் என்றும் எண்ணிப்பாருங்கள். நாயகி ரம்யா, நாயகன் அர்விந்த் இருவரும் காதலர்களா இல்லை நண்பர்களா என்பதில் கூட ஒரு சந்தேகம் கதை முழுக்கத்தெரியும்.

    மொத்தத்தில் எனக்குப் பிடித்த நாவல் வரிசையில்

    Enjoying the preview?
    Page 1 of 1