Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appa Ennai Mannichuduppa
Appa Ennai Mannichuduppa
Appa Ennai Mannichuduppa
Ebook98 pages36 minutes

Appa Ennai Mannichuduppa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முகூநூலில் என் எழுத்தைப்படித்து விட்டு குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன அவர்கள் அப்பாபற்றி இரண்டுவாராங்கள் வருவதுபோல கட்டுரை கேட்டார் தொடர்ந்து இன்னும் நாலுவாரம் இன்னும் எட்டு வாரங்கள் வேண்டும் என்று கேட்டு கேட்டு பரசுரித்தார். இந்தக்கட்டுரைக்கு நல்ல வரவேற்பருந்த தால் இருபதுவாரங்கள் வரை இடம் பெற்றதைத் தொடர்ந்து 'தீராநதியிலும் இரண்டு வருடங்கள் வாய்ப்பளித்தார்.

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580130210289
Appa Ennai Mannichuduppa

Read more from Saptharishi La.Sa.Ra.

Related authors

Related to Appa Ennai Mannichuduppa

Related ebooks

Reviews for Appa Ennai Mannichuduppa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appa Ennai Mannichuduppa - Saptharishi La.Sa.Ra.

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அப்பா என்னை மன்னிச்சுடுப்பா

    Appa Ennai Mannichuduppa

    Author:

    சப்தரிஷி லா.ச.ரா.

    Saptharishi La.Sa.Ra.

    For more books

    https://www.pustaka.co.in/home/author/saptharishi-la-sa-ra

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    நண்பர்கள்

    அபிதா

    சிவஜனனி

    அருணாச்சலம்

    பூஜா என்கிற ஹேமா

    யுவன்ங்கந்தா

    1

    ஆச்சு அப்பாவுக்கு நூற்று மூன்று வயது. இப்ப அவர் இருந்தாலும் எதையாவது எழுதிக் கொண்டேதானிருந்திருப்பார். பந்தய ஆமைபோல வேகமாக இல்லாவிட்டாலும் கடைசி வரை தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருந்தார். ஏனென்றால் அவரால் எழுதாமலிருக்க முடியாது.

    அவர் இலக்கியவாதி என்றாலும் சிறு பத்திரிகைகளில் அவருடைய கதைகள் ஒன்றிரண்டு வந்திருந்தாலே அதிகம். அவர் வணிக எழுத்தாளர் அல்லாத போதிலும் அனைத்து வணிகப் பத்திரிகையிலும் இடம் பெற்றிருந்தது ஓர் அழகிய முரண்.

    எந்த அறிவுரையும் எங்களுக்குக் கிடையாது. அடி கிடையாது. அவர் வாழ்ந்தார். நாங்கள் பார்த்தோம். நாங்கள் வாழ்கிறோம்.

    ஏம்பா கெட்ட விஷயத்துக்கு போகாதேன்னு சொல்ல மாட்டேங்கறே?

    ஏன் சொல்லணும்? அவா அவா கற்பை அவா அவாதான் காப்பாத்திக்கணும். போற இடத்துல எல்லாம் இன்னொருத்தர் பின்னாடியே வந்து காப்பாத்திண்டிருக்க முடியாது. அதையெல்லாம் அப்பாக்கு பயந்து பண்ணாம இருந்தா, அப்பா இல்லாதபோதெல்லாம் பண்ணத் தோணும். பண்ற காரியத்துக்கு பயந்து பண்ணாம இருந்தா நீ பண்ணவே மாட்டே!

    ***

    வேலைக்குப் போய்விட்டு அப்பா வந்து அன்றைய தபால்களை பார்க்கிறார். மூன்றும் என் பேருக்கே வந்திருந்தது என் விதி. முதல் கவரை பிரிக்கிறார். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் புகைப்படத்துடன் அவர் கையெழுத்திட்ட கடிதம் உதட்டைப் பிதுக்கினார்.

    சரி பிழைச்சுப் போறது அடுத்தது வெடிகுண்டு. என் கனவுக்கன்னி லட்சுமி ‘ரவிக் புகைப்படம். ஜெய்யும் லட்சுமியும் என் லட்சியக்காதலர்கள். ஒரே நாளில் இருவரும் எனக்கு கடிதம் போட்டதில் ஏதோ சமிக்ஞை இருந்தது. என்று மகிழ்ந்...

    என்னது இதெல்லாம்? நம்மாத்துக்கு ஏன் வர்றது?

    என் கையெழுத்து அழகா இருக்குன்னு பசங்க எழுதச் சொன்னாங்கப்பா. அப்பா பொறுமையுடன் ‘கையெழுத்து அழகாயிருக்கும். ஒத்துக்கறேன். நம்மாத்து அட்ரஸ் கூட அழகாயிருக்குன்னு உன் ஃப்ரெண்ட்ஸ் சொல்லியிருப்பாளா?’ (யாரு கிட்டே? அப்...பா...டா?)

    அடுத்த அணுகுண்டு கார்டு. அது சாதாரண கார்டு இல்லை. பிராக்கரஸ் கார்டு.

    அனைத்து பாடங்களிலும் குறைச்ச மார்க்ஸ், கணக்கிலோ ரொம்ப ‘குறைச்’. இருபுறமும் சின்ன சிவப்புக் கோடுகளின் பாதுகாப்பில் தப்பிக்க முடியாத 2 மார்க்.

    சில வினாடிகள் அதை உற்றுப் பார்த்த அப்பா கார்டில் கையெழுத்துப் போட்ட படியே சொன்னார். அப்பாங்கற முறையிலே நான் பண்ண வேண்டியதைப் பண்ணிட்டேன். புள்ளேங்கிற முறையில நீ பண்ண வேண்டியதைப் பண்ணு.

    கடைசி வரை நான் பண்ணவேயில்லை. மன்னிச்சுடுப்பா.

    ***

    அப்பா சாமியை கல்லால அடிக்கறவன் கூட நல்லாத்தானப்பா இருக்கான்?

    ‘கண்ணா உனக்குத்தாண்டா பேதங்கள் எல்லாம். சாமிக்கு எல்லாமே சமம்ங்கும்போது அதுக்கு கல்லும் பூதானே? SO கல்லால் அர்ச்சனை பண்றான்னு நெனைச்சுண்டு கொடுத்துட்டு போறார். அவருக்கே வலிக்கல்லே. உனக்கேன் வலிக்கறது?"

    அவரிடம் ஆன்மிகம் இருந்த அளவிற்கு பக்தி குறைச்சல்தான். சின்ன வயதில் ஏராளமான புராணக் கதைகள் சொல்லிவிட்டு இதைச் சொல்ல வேண்டியது என் கடமை. வாழ்ந்து பார்த்து சாமியை உணருங்கோ என்பார். கண்ணன் கதை சொன்னபோது, மண்ணள்ளிப் போட்டுண்ட குழந்தையோட வாயை திறக்கச் சொல்லி அவ அம்மா பாத்தபோது, அதுல நம்ம அம்மா சமைச்சிண்டிருக்கா. செந்தாமரையும் குட்டிப்புள்ளையும் மாட்டை ஓட்டிண்டு போறா. முத்து கை ரிக்ஷாவை இழுத்துண்டு வர்றான். 5E பஸ்ஸும் 49-ம் நம்பர் பஸ்ஸும் வேகமா போயிண்டிருக்கு. இப்படி உலகமே அவர் வாயில தெரியறது.

    நான் இப்ப யோசிக்கிறேன். அவர் வாயில தெரிஞ்சது உலகம் அல்ல. எனக்குத் தெரிஞ்ச உலகம்தான் அவர் வாயில தெரிஞ்சது. அது ஒரு குழந்தைக்கு தெரிஞ்ச அது நிதம் பார்க்கும் உலகம். ஒரு புரியாத விஷயத்துலேருந்து ஆரம்பிப்பதற்கு பதிலாக குழந்தைக்குத் தெரிஞ்ச விஷயத்திலிருந்து ஆரம்பிப்பது தானே சிறப்பு. அப்புறம் நான் பெரியவனாகி கே.எஸ். கோபால கிருஷ்ணனின் தசாவதாரத்தில் கிருஷ்ணர் வாய் திறக்கும் காட்சியில் 49-ம் நம்பர் பஸ் ஏன் இன்னும் வரலை என்று யோசித்து இருக்கிறேன்.

    ***

    நாங்கள் யார் எந்த கல்யாணத்திற்குச் சென்றாலும் ஸ்வீட் போடும்போது இடது கையில் வாங்கி வைத்துவிட்டு கர்ச்சீஃபில் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வேறெங்கும் செல்லாமல் நேரே வீட்டிற்குத்தான் செல்வோம்.

    உள்ளே நுழைந்ததுமே இறைஞ்சலில் அப்பாவின் கை நீட்டியிருக்கும். கர்ச்சீஃபை அவிழ்த்து அவர் கையில் அதைக் கொடுப்போம். இனிப்பு உருகி அதன் ஈரத்தன்மை இத்து சொட்டியிருக்கும். அதைப் புட்டுப் புட்டு ஆளுக்கு கொஞ்சம்... கொஞ்சம்.

    இதுதான் அவரிடம் நாங்கள் கற்றதும் பெற்றதும்.

    ***

    நான் எனக்குத் திருமணமான 26 வருடங்களில் மனைவியை ‘டி’ போட்டுக் கூப்பிட்டதில்லை. காரணம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்த 63 வருடங்களில் அம்மாவை ‘டி’ போட்டுக்

    Enjoying the preview?
    Page 1 of 1