Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paarkadal 2.0
Paarkadal 2.0
Paarkadal 2.0
Ebook234 pages1 hour

Paarkadal 2.0

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முக நூலில் எதாவதி எழுதட்டுமர என்று கேட்டேன். அம்மாவின் பதில் "வானத்திற்கு கீழ் எதை வேணுமானாலும் எழுது" எழுதிவிட்டேன். அப்பா லா.ச.ராவுக்கு பிரபலமான வாழ்வியல் கட்டுரைகள் அடங்கியது "பாற்கடல்" தொகுதி.

நான் அதனை பாற்கடல் 2.0 ஆக்கிக் கொண்டேன்.

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580130210287
Paarkadal 2.0

Read more from Saptharishi La.Sa.Ra.

Related authors

Related to Paarkadal 2.0

Related ebooks

Reviews for Paarkadal 2.0

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paarkadal 2.0 - Saptharishi La.Sa.Ra.

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பாற்கடல் 2.0

    Paarkadal 2.0

    Author:

    சப்தரிஷி லா.ச.ரா.

    Saptharishi La.Sa.Ra.

    For more books

    https://www.pustaka.co.in/home/author/saptharishi-la-sa-ra

    பொருளடக்கம்

    விளிம்பிலுக்கும் அப்பால் சௌந்தர்ய...

    லா.ச.ராவின் எழுத்து.

    பாற்கடல்-2

    ஆஸ்பத்ரியில் அப்பா

    நான் ஆணையிட்டால்

    சோகப்பாடல்கள்

    சுண்டக்காய்ச்சிய...

    தங்கப்பதக்க(ம்)ங்கள்

    சிற்பி

    குமுதம்

    இருவாட்சி

    தலைவன்

    திருத்தவத்துறை என்கிற லால்குடி

    கோயில் புளியோதரையும்! கேரள சம்பந்திப்பொடியும்!! கடலை எள்ளு மிளகாய்ப் பொடியும்!!!

    இதழ்கள்

    ஞாபகசக்தி

    ஸ்ரார்தம்

    ராஜாஜி பிறந்த வீடு

    பாயசம்

    பொன்மனம்

    தாயுமானேன்.

    தாயுமானேன்-2

    நீ பாதி... நான் பாதி

    மனோநிலையும் சூழ்நிலையும்

    சாம்பவி கல்யாணம் வைபோகமே!

    கல்கத்தா நாட்கள்

    பெண் இல்லாத வீடு

    எது நிஜம்?

    பெண்ணே?... பெண்ணே!

    இரட்டைப்படை

    சீரியல்... கில்லர்

    யாத்ரா மொழி

    காஞ்சிமுனியெனும் கருணைநிதி

    ஸ்ரீதர் சாமாவின் காஞ்சிமுனி எனும் கருணைநிதி

    மிகச்சிறந்த புத்தகம்

    கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு

    நாஞ்சில்நாடன் விருது

    நாகர்கோவிலில் நட்ஷத்ரக்கலைவிழா

    மனக்கலசத்தில் அமிர்த எண்ணங்கள்!

    சாதனை சிநேகிதங்கள்

    ஜனனி! கல்யாணம் வைபோகமே!

    அம்மா வந்தாள்

    இது வெங்கடகுமாரின் கதை

    ஸ்ருதிபேதம்

    அம்மா போகிறாள்

    அஹோபிலம்

    நண்பர்கள்

    சிவராஜ்

    முரளிராகவன்

    திவாகரன் ஜகந்நாதன்

    விளிம்பிலுக்கும் அப்பால் சௌந்தர்ய...

    காஞ்சீபுரம் அருகே ஒரு சிறுகிராமம் வைத்திய நாத குருக்கள் வீடு. இரண்டு நாட்கள் அவர்வீட்டில் தங்கிவிட்டு கிளம்பு முன் அவரை நமஸ்கரிக்கிறேன். வயது தொண்ணூறு இருக்கும். எனக்கு விபூதி இடுகிறார். அந்தக்கணம் அப்பாவின் வெதுவெதுப்பான விரலின் ஸ்பரிஸமும் ஜில் விபூதியும் அப்பாவைப்போல இருந்ததோடு அப்பாவின் வாஸனையே அடித்ததை உணர்ந்தேன்.

    இதைப்பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாவிடம் கேட்டேன் அப்பா சொன்னார் மனமொத்த தம்பதிகள் மனமொத்து பத்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தால் ஒருவரின் முகச்சாயல் மறுவருக்கு வந்துவிடும் என்பார்கள். அதுபோல மனமொத்த நட்புக்கு ஒரு வாசனை... ஒரேவாசனை உண்டோ என்னவோ

    ***

    அப்பா சமையல் மேடைக்கு அருகில் பக்கவாட்டில் கீழே உட்கார்ந்து குமுட்டியில் சமைத்துக்கொண்டிருந்தார்.

    அம்மாவும் மற்றவர்களும் என்னிடம் சொல்லி அப்பாவிடம் சொல்லச்சொன்ன விஷயத்தை அப்பாவிடம் சொல்ல, சொற்களை அமைக்கத் தவிக்கிறேன்.

    அப்பா குமுட்டி அடுப்பை விசிறியபடி என்னை நிமிர்கிறார்.

    சிலவினாடிகள் நான் அவரையும் அவர் என்னையும் மௌனப்பரீட்ஷை செய்கிறோம்.

    நான் அவர்தோளில் கை வைக்கிறேன் என் கையின் லேசு நடுக்கத்தை அப்பா உண்ர்வாரா?

    அப்பா... விசாலம் மாமி...

    ‘ஹாங்’ மெல்ல எழுகிறர். எழுந்ததில் வேஷ்டி அவிழ்கிறது. அவர் உடல் துவள்கிறது கை விசிறி கைவிட்டு நழுவுகிறது.

    ‘யாராவது அடுப்பை அணைச்சுடுங்கோ’ போய் படுத்தவர் சாயங்காலம்வரை எழுந்திருக்கவில்லை.

    ***

    இரவு எட்டுமணி. ஐய்யம்பேட்டை அம்ஸை அடங்கிவிட்டது. ஒரு பெரியவர் முகவரி தேடி அலைகிறார். பத்தாம் வகுப்பு சிறுவன் ஒருவன் அந்த பெரியவர் தேடும் வீட்டைக் கண்டுபிடித்து அவரைக் கொண்டு சேர்க்கிறான்.

    அந்த சிறுவனுக்கு அந்தப் பெரியவர் லா.ச.ரா என்று தெரியாது.

    அவர் எழுதிய ‘அபிதா’வின் அபரிமித ரசிகனாகத்தான் மாறப்போவது அவனுக்குத் தெரியாது.

    பிற்காலத்தில் தொடர்ந்து தமிழ்த்திரையில் பன்னிரண்டு வருடங்கள் அதிகம் பாடல்கள் எழுதும் சாதனை புரியப்போகும் கவிஞர் நா. முத்துகுமாராக ஆகப்போவதும் அந்த சிறுவனுக்குத் தெரியாது.

    முக்கியமாக தான் அடையாளம் காண்பித்த வீடுதான் அபிதா நாவலின் உண்மையான அபிதா வீடு என்பதும் அவனுக்குத் தெரியாது.

    ***

    அப்பாவுக்கு ஏழு வயது. வைத்தி மாமாவிற்கு ஒன்பது வயது. அப்போதே திருமணம் ஆகி இருந்த அவரது மனைவி விசாலத்திற்கு ஐந்து வயது அவர்களுக்கு குழந்தைபாக்கியம் இல்லை. அந்த வயதிலிருந்தே தொடர்ந்த நட்பு அது. ‘அபிதா’ நாவலில் கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஆபத்தை சந்தித்திருக்கும் பவித்ர உறவு அது.

    அந்த விசாலம்தான் ‘அபிதா’ வாக ஆகிப்போனாள்.

    ***

    சௌந்தர்ய முன்னுரையில் லா.சா.ரா

    இது அபிதா எனும் நாவலின் கதாநாயகி ஆகிய பெண்மணிக்கு நினைவு அஞ்சலி செலுத்துகிறேன். கருவூலங்கள் எப்படிப் பிறக்கின்றன என்பது இன்னும் புரியாத வெளிச்சம்தான்.

    ‘சௌந்தர்ய’ ஒரு ஏழை குருக்கள் குடும்பம் பற்றியது. இப்போது அபிதாவாகிய விசாலாட்சியும் மறைந்து விட்டாள். வைத்திய நாத குருக்களும் மறைந்து விட்டார் சந்ததி கிடையாது. எப்படி வந்தார்களோ அப்படியே போய் விட்டார்கள். அவர்கள் வாழ்ந்தவரை அந்த வாழ்க்கை எனக்குக் கவிதையாகவே படுகிறது.

    இனி அந்த மனிதர்களும் வர மாட்டார்கள். அந்தக் காலமும் வராது. நான் அனுபவித்தேன் பாக்யவானானேன்.

    ‘சௌந்தர்ய’ என்னும் தலைப்பின் அடிப்படையே இதுதான்.

    ***

    அப்பா ‘விளிம்பில்’ எழுதி முடித்து என்னிடம் கொடுத்துவிட்டு (அப்போது வயது எண்பத்தி எட்டு) இதுதான் என் கடைசீ புஸ்தகம்ன்னு நெனைக்கிறேன்.

    அதுக்கப்புறம் ‘சௌந்தர்ய’ வை என்னிடம் கொடுத்த போது சொன்னேன். (எந்த) விளிம்பிலையும் தாண்டி நிற்பது சௌந்தர்ய.

    அப்பா என்னை வெதுவெதுப்பாய் கட்டிக்கொண்ட கதகதப்பை இந்த நிமிடம் உணர்கிறேன் (அழகியசிங்கருக்கு நன்றி) சௌந்தர்யம். என்றால் முற்றுப் பெற்றுவிடுகிறது. சௌந்தர்ய... என்பதில் ஒரு முற்றுப்பெறாத தேடல் இருக்கிறது.

    வேறென்ன வேண்டும்?

    பாற்கடல் 2.0

    எந்தைக்கும் தாய்க்கும் இன்று 63-வது கல்யாண நாள் அறுபத்தி மூணு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து விட்டார்கள்.

    சென்னையில் அப்போதெல்லாம் டவுனுக்கு போகிறேன் என்றால் உயர்நீதி மன்றம், first line beach. N.S.C. BOSEROAD இருக்குமிடம் தான்.

    அப்பா அம்மா கல்யாணம் அப்படிப்பட்ட டவுனில்தான் நடந்தது. கோவிந்தப்ப நாயகர் தெருவால் ராமானுஜக்கூடத்தில் ஜீலே ஒண்ணாந்தேதி திங்கட்கிழமை நடைபெற்றது. (நான் போகவில்லை) கல்யாணம் நடந்தவருடம் 1946 அரிசி, விறகு, மளிகைப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடாம். இருப்பினும் சிறப்பாகத்தான் நடந்ததாம்.

    துணிக்கும் ரேஷன் இருந்ததால் அம்மா கல்யாணத்திற்கு ‘அரக்கு பட்டுப்புடவை’ கிடைக்காதது அம்மாவிற்கு நினைவு இருந்த டிஸம்பர் 30ந்தேதி 2020 வரை நெஞ்சீரல்தான்.

    இருபத்தி ஐந்தாவது திருமணநாள் கொண்டாடியது நினைவில்லை. ஐம்பதாவது திருமணநாளுக்கு வெள்ளித்தட்டு வாங்கித் தந்தது நினைவிலிருக்கிறது இருப்பினும் அப்பா தன் இறுதிமுப்பது வருடங்கள் ஒருநாள்விடாமல் தினமும் வாழையிலையில்தான் சாப்பிட்டார்.

    நான்கு பிள்ளைகள் ஒருபெண். யார்மீதும் தனிப்பட்ட விருப்போ, வெறுப்போ இருவருக்குமே கிடையாது.

    அம்மாவை எப்போதும் அப்பா புகழ்ந்துகொண்டே இருப்பார். அம்மா அப்படி வெளிப்படையாக நடந்து கொள்ளமாட்டார்.

    யாவருக்கு மிருந்த குடும்ப கஷ்டங்கள் இருந்தபோதும், நாங்கள் ROTI KAPDA AUR MAKANக்கு கஷ்டப்பட்டதே கிடையாது. ஐம்பது படி அரிசிமூட்டை மூலையில் இருந்துகொண்டே இருக்கும் எங்கள் கூட்டுக்குடும்பத்திலேயே பத்துபேர். ஒருநாளைக்கு மூன்றிலிருந்து ஐந்து வெளியாட்களுக்கும் சாப்பாடு உண்டு காய்கறிகள் வீசை கணக்கில்தான்.

    வருடப்பிறப்பு, கிருஸ்துமஸ், ரம்ஜான், அமாவாசை, எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் பாயசம் உண்டு. பாயசத்தின் வெல்லம், ஏலக்காய் பச்சைக்கற்பூரம் நைவேத்யம் கலந்த வாசனையும் ஆவி பறத்தலும் வீட்டின் எல்லா மூலைகளிலும் ஆண்டு முழுவதும் மூக்கு முனையிலேயே தேங்கி நிற்கும்.

    அம்மா மூத்தபெண் என்பதால் பத்துவயதிலேயே சமைக்க ஆரம்பித்து விட்டார். மேடைமீது விறகு அடுப்பு என்பதால் ஸ்டூல் மேல் ஏறிநின்னு சமையலை கவனிப்பாராம். வீட்டு ஆண்கள் அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி இறக்கித் தருவார்களாம் ஏறக்குறைய எண்பத்து மூன்று வருடங்கள் சமைத்திருக்கிறார். அலுத்துக்கொள்ளவில்லை என்பதோடு கடைசீவரை ஆர்வத்தோடுமிருந்திருக்கிறார்.

    அப்பா அறுபது உபயதிற்கு மேல் மிகச்சரியான ஓய்வு பெற்றவரின் வாழ்க்கையை வாழ்ந்தார். காலை 4.30-க்கு காஃபி ( அவரே போட்டுப்பார்) முற்பகல் பதினொரு மணிக்கு சாப்பாடு. மூன்றுமணிக்கு டீ. டிபன் இருந்தால் சாப்பிடுவார் இரவு எட்டு மணிக்கு தயிர்சாதம். அல்லது ஒரு டம்ளர் மோர்.

    இருவருமே தங்கள் கடமைகளை செவ்வனே செய்து நிறைவுடனே நிறைந்தார்கள். நிறையும்போக கூட அப்பா தன் பிறந்தநாளன்றும் அம்மா வருடத்தின் கடைசீ நாளை முடித்துக் கொடுத்து பூரணமடைந்தார்கள்.

    திருப்தியான வாழ்க்கையை நிம்மதியாக நிறைத்து தந்த இவர்களின் எழுபத்து ஆறாவது திருமண நாளில் நம் அனைவர் மேலும் இவர்களின் ஆசிர்வாதங்கள் பொழிந்து நம்மை மகிழ்ச்சியில் நனைய விடட்டும்.

    லா.ச.ராவின் எழுத்து.

    லா.ச.ராவின் எழுத்தையும் வாழ்க்கையும் அவர் அருகிலேயே இருந்து ஐம்பது வருடங்கள் கவனித்திருக்கிறேன்.

    அவர் எழுந்திருப்பதிலிருந்து தூங்குவதுவரை எதைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். நேர்த்தியில் ஒரு நிதானம் இருக்கும். அந்த நிதானத்திலும் ஒரு நேர்த்தி இருக்கும்.

    பஞ்சபூதக் கதைகள் அடங்கிய தொகுப்பிற்கு அஞ்சலி என்று பெயர். முதல் இரண்டு சிறுகதைகள் எழுதுவதற்கு இரண்டிரண்டு வருடங்களும், மூன்றாவது சிறுகதைக்கு ஒருவருடமும், அடுத்த கதைக்கு மூன்று வருடங்களும், ஆகாயத்தை ஆதாரமாக கொண்ட கதைக்கு எட்டுவருடங்களும் எடுத்துக் கொண்டார்.

    முதல் நாவலான ‘புத்ர’ எழுத இரண்டு வருடங்கள். ‘கழுகு’ எழுத பத்து வருடங்கள்.

    அவர் தன் பதினேழாவது வயதில் எழுதிய முதல் சிறுகதை Baabuji தொண்ணுற்று இரண்டாம் வயதில் எழுதிய கடைசீ கதை Boyfriend (இரண்டுமே Bயில் ஆரம்பிக்கிறது)

    (கண்ணதாசனின் முதல் பாடல் கலங்காதிரு மனமே. கடைசீ பாடல் கண்ணே கலைமானே ‘க’ போல)

    லா.ச.ரா வேகமாக எழுதுபவரல்லர். ஆனால் ஓயாமல் எழுதுபவர். ஆமை நடை என்றாலும் ஜெயித்தநடை.

    இந்த மிகச்சரியாக எழுபத்திஐந்து வருட எழுத்தனுபவத்தில் இருநூற்று எழுபது சிறுகதைகள் அடங்கிய தொகுப்புகள் பதினெட்டு. நாவல்கள் ஆறு. இளமை நினைவுகள் ஏழு.

    லா.சா.ராவின் மொத்த சொத்து இவ்வளவே. லா.சா.ரா எனப்படும் அப்பா எனும் முழுச்சொத்து எங்கள் ஐவருக்கே.

    லா.ச.ராவுக்கு இலக்கணம் முக்கியம் அல்ல. சொல்லும் – சொல்லைத் தட்டிப்பார்த்து உணரும் ஒலியும், ஒலி ஏற்படுத்தும் அதிர்வும் சொல்லின் அர்த்தமும், அர்த்தம் காட்டும் ஜாலமும் மிக மிக முக்கியம்.

    அப்பட்டமான அர்த்த வெளியீடுகளைக் காட்டிலும் ஒரு புருவத்தின் உயர்த்தலும், ஒரு புன்னகை ஒரு கடைக்கண் பார்வையில் communication ஆகி விடவேண்டும் என்று ஆசைப்படுவார்.

    இதுதான் சொல்லின் உண்மையான மொழி என்பது அவரது கருத்து. இதற்குரிய மொழிநடையை தேடுவதாலேயே அவர் புரியாத எழுத்தாளர் ஆகிவிட்டார்.

    இவருடைய மொழியின் நோக்கமே மௌனம்தான் சொற்சிக்கனம். ஒரு நல்ல படைப்பின் வீர்யத்துக்கு அடிப்படை. சொல்லைக் குறுக்க குறுக்க அதற்கு அழுத்தம் pressure of Compression ஏற்படும். அது அதன் இடத்தில் ப்ரயோகம் ஆகுகையில், முகத்தில் பட்டாசு வெடித்தாற் போல மனதில் அதிர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது அவர் துணிபு.

    கதைக்குத் தலைப்பு சிறியதாய் இருக்கவேண்டும் ஓரிரு சொற்களுக்கு மேற்படக் கூடாது. பாத்திரத்தின் பெயராய் இருந்தால் வாசகனின் கவனத்தை உடனே ஈர்ப்பதாக சற்று அசாதாரணமாக இருக்கவேண்டும். தலைப்பைத் தீர்மானித்துக் கொண்டுதான் எழுத ஆரம்பிக்க வேண்டும். சில சமயங்களில் தலைப்புக்கே கதையை மேலே தள்ளிக் கொண்டு போகும் சக்தி உண்டு.

    இந்தவிஷயங்களை லா.ச.ரா கடைசீ கதைவரை பின்பற்றினார். ஏனெனில் இந்த அறிவுரையை அவருக்குச் சொன்னவர் அவருடைய குருவான தி.ஜ.ரங்கனாதன் அவர்கள்.

    தன் எழுத்துகள் வாசகனை சரியான இடத்தில் தொடவேண்டும் என்னும் அக்கரை லா.ச.ராவுக்கு எப்போதும் உண்டு. தன் எழுத்தில் வாசகன் தன்னை அடையாளம் கண்டுகொள்வதே தமது வெற்றி என்று கருதுகிறார்.

    தன்னுள் இருப்பது, தன்னால் சொல்ல முடியாதது இந்த எழுத்தில் எப்படி வந்தது என்று வாசகன் நெகிழ்ச்சி கொள்வான் என்று நம்புகிறார் லா.ச.ரா.

    வாசகனுக்கு வார்த்தையின் நோயைத் தொற்ற விடுவேன். வாசகனுக்கு நமநமன்னு இருக்கணும் என்னுடைய ‘விண்விண்’ணை அவனுக்குப் பரவ விடுவேன். எழுத்தாளன் + வாசகன் எனும் இரண்டு பக்கமும் சேர்ந்துதான் Complete ஆகிறது என்பார் லா.சா.ரா.

    பாற்கடல்-2

    தனிமை எல்லா சமயங்களிலும் இனிமை அல்ல. தனிக்குடித்தனம் சென்றவர்கள் உடல் நலமற்றே மனச்சுமையுடன் இருக்கும்போதோ விசாரிக்கக்கூட ஆள் இல்லாதபோது புரியும் கூட்டுக்குடும்பத்தின் அருமை.

    அப்பா எனக்குத்தெரிந்து அவரது வாழ்நாளின் கடைசீ இருபதுவருடங்களில் மூன்றுமுறை ஆஸ்பத்ரியில்

    Enjoying the preview?
    Page 1 of 1