Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vittal Rao Kathaigal
Vittal Rao Kathaigal
Vittal Rao Kathaigal
Ebook377 pages2 hours

Vittal Rao Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என்னைச் சுற்றி நான் வேண்டியே அமைத்துக் கொண்ட வாழ்க்கையும், தானாகவே என்னைச் சூழ்ந்துள்ள வாழ்க்கையும் எனக்கு பல்கலைக் கழகப் பட்டப்படிப்புகள். இந்த அழகிய, சுறுசுறுப்பான, மந்தமான, சுகமான, சோகமான, நெறியான, நீசத் தனமான, பல்வேறு நம்பிக்கைளாலான, பொய்யான, மெய்யான, ஆண், பெண், விலங்குகள், பறவைகள், தாவரம் மற்றும் ஜடப்பொருள்களாலான வாழ்க்கையை நான் எவ்வளவுக்கு ஆழ்ந்து உற்று கவனித்து கிரகித்து, சுவீகரித்து, என் சக மனிதனிடம் அந்த எண்ணற்ற அனுபவங்களால் விளைந்த உணர்வுகளை வெளியிட்டு பகிர்ந்து கொள்ள முயல்கிறேன் - அந்த ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு சிறுகதை. அதில் ஏதேனும் புதியதாகப் புலப்படும். எனக்கும் உங்களுக்கும் ஒருவகை மகிழ்ச்சியான உறவை அக்கதைகள் ஏற்படுத்தியிருக்கலாம். என் கதைகளில் ஏதேனும் ஒன்றின் ஊடாக நீங்கள் என் அனுபவங்களில் உங்களையும், உமது அனுபவங்களில் என்னையும் பார்க்க முடிந்திருக்கும். தவிர்க்க முடியாத மொழி, நாடு, உணவுப் பழக்கத்தையும் மீறி ஒரு பிரபஞ்ச மனிதனாக, எவ்வித கட்டுப்பாடும், பிரிவும் அற்ற நிலையில் சுற்றித் திரிய இன்னும் கூட அடங்கா ஆசையில் கிடக்கும் மனம் சில விஷயங்களை இங்குள்ள சில கதைகளில் தெரிய வைத்துள்ளது.

மனிதன் தன்னைச் சுற்றியுள்ள , சார்ந்துள்ள, எதிர்த்து இயங்கவல்ல எல்லா உயிரினங்களோடும்- மனிதன் உள்ளிட்டு - ஜடப்பொருட்களோடும் வெவ்வேறு கதியில் உறவுப் பிணைப்பைக்கொள்ள வேண்டியுள்ள தருணங்களும், அத்தருணங்களில் வெளியாகும் அநுபவங்களும் இந்தக் கதைகளில் தெரிய வருபவை

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580121502427
Vittal Rao Kathaigal

Read more from Vittal Rao

Related authors

Related to Vittal Rao Kathaigal

Related ebooks

Reviews for Vittal Rao Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vittal Rao Kathaigal - Vittal Rao

    http://www.pustaka.co.in

    விட்டல் ராவ் கதைகள்

    Vittal Rao Kathaigal

    Author:

    விட்டல் ராவ்

    Vittal Rao

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vittal-rao

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பதிப்புரை

    1. சந்திப்பு

    2. சுழற்சி

    3. பேராசிரியர் தக்கியின் ஆடு

    4. சில அமர்வுகளும் ஒரு முடிவும்

    5. தோற்றம்

    6. உங்கள் ஓட்டு எங்களுக்கே.

    7. மகமாயி

    8. அணைப்பு

    9. கண் பார்வையில் இருவர்

    10. ஊதாமணியை

    11. ஒத்திகை

    12. உடைந்த பீங்கான் பூஜாடி

    13 தலைநகரம்

    14. அடையாளம்

    15. மனித பயம்

    16. பிம்பம்

    17. சிதிலங்கள்

    18. விழிப்பு

    19. ரகசியம்

    20. புலி

    21. கடன்

    22. கண் இல்லாதது

    23. செல்லி

    24. நம்மாள்

    25. ஒன்று வேறொன்றாய்

    26. ஏவுகணை

    27. அச்சம்மா

    28. கல்

    29. நாகப்பனின் விடுமுறை நாட்கள்

    30. இராணுவப் பெட்டி

    31. சின்னவாடு

    32. ஓய்வு

    33. சிதை

    பதிப்புரை

    பொதுவான கருத்தாக சிறு கதைகள் குறித்து சொல்ல புதியதாக என்னிடம் எதுவுமில்லை.

    என் கதைகள் குறித்து அதிலும் குறிப்பாய் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் குறித்தே கொஞ்சம் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. பல கதைகளே திரும்பத் திரும்ப படிக்க வேண்டிய ஆர்வத்தை இந்தத் தொகுப்பிலும் ஏற்படுத்தவல்லன.

    என்னைச் சுற்றி நான் வேண்டியே அமைத்துக் கொண்ட வாழ்க்கையும், தானாகவே என்னைச் சூழ்ந்துள்ள வாழ்க்கையும் எனக்கு பல்கலைக் கழகப் பட்டப்படிப்புகள். இந்த அழகிய, சுறுசுறுப்பான, மந்தமான, சுகமான, சோகமான, நெறியான, நீசத் தனமான, பல்வேறு நம்பிக்கைளாலான, பொய்யான, மெய்யான, ஆண், பெண், விலங்குகள், பறவைகள், தாவரம் மற்றும் ஜடப்பொருள்களாலான வாழ்க்கையை நான் எவ்வளவுக்கு ஆழ்ந்து உற்று கவனித்து கிரகித்து, சுவீகரித்து, என் சக மனிதனிடம் அந்த எண்ணற்ற அனுபவங்களால் விளைந்த உணர்வுகளை வெளியிட்டு பகிர்ந்து கொள்ள முயல்கிறேன் - அந்த ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு சிறுகதை. அதில் ஏதேனும் புதிய தாகப் புலப்படும். எனக்கும் உங்களுக்கும் ஒருவகை மகிழ்ச்சியான உறவை அக்கதைகள் ஏற்படுத்தியிருக்கலாம். என் கதைகளில் ஏதேனும் ஒன்றின் ஊடாக நீங்கள் என் அனுபவங்களில் உங்களையும், உமது அனுபவங்களில் என்னையும் பார்க்க முடிந்திருக்கும். தவிர்க்க முடியாத மொழி, நாடு, உணவுப் பழக்கத்தையும் மீறி ஒரு பிரபஞ்ச மனிதனாக, எவ்வித கட்டுப் பாடும், பிரிவும் அற்ற நிலையில் சுற்றித் திரிய இன்னும் கூட அடங்கா ஆசையில் கிடக்கும் மனம் சில விஷயங்களை இங்குள்ள சில கதைகளில் தெரிய வைத்துள்ளது.

    எல்லா கதைகளுமே பத்திரிகைகளில் வெளி வந்தவைதாம்.

    இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் புதிய பார்வை, தினமணி கதிர், இந்தியா டுடே, கணையாழி, சுதேச மித்திரன், பொன் மலர் ஆகிய பத்திரிகைகளில் எண்பதுகளிலும் தொண்ணுாறுகளிலும் வெளிவந்தவை. அவற்றை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    மனிதன் தன்னைச் சுற்றியுள்ள , சார்ந்துள்ள, எதிர்த்து இயங்கவல்ல எல்லா உயிரினங்களோடும்- மனிதன் உள்ளிட்டு - ஜடப்பொருட்களோடும் வெவ்வேறு கதியில் உறவுப் பிணைப்பைக்கொள்ள வேண்டியுள்ள தருணங்களும், அத்தருணங்களில் வெளியாகும் அநுபவங்களும் இந்தக் கதைகளில் தெரிய வருபவை.

    விட்டல்ராவ்

    சென்னை- 88

    17-6-1999

    1. சந்திப்பு

    நாளைக்கு அங்கே பெண் பார்க்க வருகிறார்கள். ஒரு வாரமாகவே அது விஷயமாய்க் கடிதங்கள். அப்பாவும் அருணாவும் குடுகுடுவென்று அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்வது காலி வீட்டில் சுண்டெலி நடமாட்டம்போல இருந்தது. அப்பா அன்று லீவு போட்டுவிட்டு வீட்டிலிருந்தார்.

    ஐந்து வருடமாய்த் திறக்கப் படாமலேயிருந்த அந்தப் பெரிய முன் அறையை நேற்றுத்தான் அப்பா திறந்து வைத்து வெள்ளையடிக்க வைத்தார். இந்தக் சாக்கில் வீடு முழுக்கவும் வெள்ளையடித்தாயிற்று: அது ஒரு செலவல்ல, வெள்ளையடிப்பதென்பது. வாடகையில் கழித்துக் கொண்டுவிடலாம். அப்பா அதிலெல்லாம் கண்டிப்பானவர். கணக்கானவர். வீட்டைச் சுற்றி எட்டு தென்னை மரங்கள், வருடம் முழுக்க காய்ப்பு. அவற்றை இறக்கிக் கோணியில் போட்டுக் கட்டித் தேங்காய்காரனுக்கு விற்றுப் பணத்தைத் தனியாக கணக்கில் வைத்து விடுவார். அவ்வப்போது, ஏற்படும் குழாய் பழுது பார்ப்பு, மின்சார வயரிங் பழுதுபார்ப்பு, பழுதடைந்த மின்சார சுவிட்சுகளை மாற்றுவது மற்ற சிற்சில மராமத்துகள் என்று அந்த வீட்டின் செலவுகளுக்குத் தேங்காய் பணத்தை உபயோகித்துக் கொள்வார். வீட்டுக்கு வெள்ளையடித்தால் அதற்கான செலவை வாடகைப் பணத்தில் கழித்துக்கொண்டு விடுவார். வீட்டுக்காரரே அப்படித் தான் விதித்திருந்தார். வருடா வருடம் வீட்டுக்கு வெள்ளையடிக்க வேண்டுமென்றும், அதற்கான செலவை வாடகையில் கழித்துக் கொள்ளலா மென்றும் ஆனால், அப்பாதான் இந்த ஐந்து வருடத்தில் வெள்ளையடிக்கவேயில்லை. ஐந்து வருடமாய் அருணாவிற்குப் பார்க்காத இடமில்லை. போடாத வலையில்லை. அவளும் இருபத்தெட்டைத் தாண்டிக் கொண்டிருக்கிறாள். அவளோடு படித்த நான்கு பேர் இந்த ஐந்து வருடத்தில் கல்யாணச் சாப்பாடு போட்டுக் குழந்தை பெற்று, சரித்திரம் படைத்து விட்டார்கள். அப்பாவின் அலைச்சலும், களைப்பும், ஏமாற்றமும் வெறுப்பும் அந்த வீட்டின் தோற்றத்தைப் பின்னும் பரிதாபமாக்கி விட்டன.

    நாளைக்கு அங்கே பெண் பார்க்க வருகிறார்கள். உள்ளூர்தான் பையனுக்கு. அப்பா அம்மா கூடப் பிறந்தவர்கள் யாருமே கிடையாதாம். அந்த முன் அறையில் தான் எல்லா ஏற்பாடும். விசாலமாயும் பெரிய பெரிய ஜன்னல்களையும் கொண்ட அவ்வறையில்தான் வெளிச்சமும் காற்றும் ஏக போகம்.

    எப்போதாவது ஊர்ப்பக்கம் வரும் வீட்டுக்காரர் வியாசமூர்த்தி அந்த அறையில்தான் தங்கிக் கொள்வார். தான் வந்தால் தங்கிக் கொள்வதற்காகத்தான் அந்த அறையை மட்டும் பூட்டிக்கொண்டு மற்ற எல்லா இடத்தையும் அப்பாவிற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். சாவி அப்பாவிடமிருக்கும்.

    மைதுர்ப்பாகு துண்டு போட்டாயிற்று. உதிரியில் கொஞ்சத்தையள்ளி வாயில் போட்டுக் கொண்ட அருணா, பரவசத்தைப் பாவமாக்கினாள். ஓமப்பொடியைக் கவனிக்கத் தொடங்கினாள் அம்மா.

    அருணா முன் அறையைக் கழுவி விட்டு விட்டு மாக்கோலமிட்டுக் கொண்டிருந்தாள். அந்த அறையில் மாட்டியிருந்த மின்சார விசிறி ஒன்று மட்டும் வியாச மூர்த்தியுடையது. அதைத் தான் கழட்டி சாப்பாட்டறையில் மாட்டியிருந்தார் அப்பா. இப்போது அதை அங்கிருந்து கழட்டி இந்த அறைக்கே மீண்டும் கொண்டு வந்து மாட்டிவிட ஆளைக் கூட்டிவரப் போயிருந்தார்.

    அந்தப் புதுப் பாயையும், உறைமாத்தி வச்சிருக்கிற தலைகாணியையும் கொண்டு போய் அந்த ரூம்ல போடணும் என்று பொதுவாகச் சொல்லி வைத்தாள் அம்மா.

    வாசலில் டாக்சி வந்து நின்றதைக் கண்டதும், அம்மா அவங்கெல்லாம் வந்தாச்சு," என்று நளின மிக்க உச்ச ஸ்தாயியில் அறிவிப்பு கொடுத்தபடியே வாசலுக்குப் போனாள் அருணா.

    வண்டி லேட், என்றபடியே வியாசமூர்த்தி மட்டும் ஒரு சூட்கேசுடன் உள்ளே நுழைவதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

    வென்னீர் ரெடி, என்றாள் அம்மா

    வியாசமூர்த்தி மெளனமாய் எழுந்து குளிக்கப் போனார். அப்பாவும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

    ஏன் மாமியும் சம்ப்பாவும் வர்லே? இவர் மாத்திரம் தான் வந்திருக்கார்? என்று குசு குசுத்தாள் அம்மா, அப்பா உதட்டைப் பிதுக்கிக் கொண்டார்.

    இவ்வளவு பாடு பட்டதும் வேஸ்ட், என்று முணு முணுத்தாள் அருணா.

    அப்படிச் சொல்லாதே, அங்கே என்னவோ ஏதோ, என்றார் அப்பா.

    குளித்துவிட்டு வந்து தம் அறைக்குள் நுழைந்த வியாசமூர்த்தி மின்சார விசிறியின் சுழற்சியைப் பார்த்ததும் கண்களை அப்படியே ஒரு கணம் மூடிக்கொண்டு பரவச நிலையை எய்தியவராய் அம்மா கொண்டு வந்து நீட்டின காபியை வாங்கிக் கொண்டே கூறினார்.

    அங்கே கல்கத்தாவிலே சதா சர்வ காலமும் கரண்ட் கட்தான். கரண்ட்டிருந்தாலும் லோ வோல் டேஜ் தொந்தரவு.

    இங்கேயும் இப்பல்லாம் அதெல்லாம் இருக்கு, என்றார் அப்பா. -

    இருந்தாலும் கல்கத்தாபோல இருக்காது. என்றார் வியாசமூர்த்தி.

    மாமா, சர்க்கரை சரியாயிருக்கா? என்றாள் அருணா.

    அவர் தலையாட்டினார்.

    அவராகவே சொல்லுவார், சொல்லட்டுமென்று காத்திருந்தார் அப்பா.

    இப்போ ரெண்டு பிரச்னை வந்திருக்கு. அதனாலத்தான் இப்படி நா மட்டும் புறப்பட்டு வந்தது. நாங்கூட வராமே ஒரு லெட்டர் மட்டும் எழுதிப் போட்டிருக்கலாம். அது அவ்வளவு நல்லாயிருக்காது, என்றெல்லாம் தட்டித் தடவிக் கொண்டிருந்த வியாச மூர்த்தி சட்டென்று விஷயத்தைப் பிடித்தார்.

    சம்ப்பாவுக்கு ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்லே டெல்லிக்கு போஸ்டிங்கு வந்திருக்கு. இன்னைக்குத் தேதியிலே அவபோயி ஜாய்ன் பண்ணியாகணும். என் தம்பிதான் டெல்லிக்குக் கூட்டிட்டுப் போயிருக்கான். சம்ப்பாவுக்கு டெல்லியிலே மாமா வீடு இருக்கு. தங்கிக்கலாம்.

    வேலைக்குப் போகட்டுமே. அதனாலே... என்றார் அப்பா.

    ஆனாலும் அப்பாவுக்கு இதில் அதிகம் தலையிட விருப்பமில்லை.

    பையனுக்கு யாருமேயில்லேங்கறது என் தம்பிக்கு ஒத்து வரல்லே. என்றார் அவர்.

    இங்கே வச்சு பெண் பார்க்க வர்ர ஏற்பாடெல்லாம் நடத்தப் போறது ஒங்க தம்பிக்கு தெரிஞ்சிருக்கணுமே, என்றார் அப்பா.

    அது அப்போ தெரியாது, அவனுக்கு. நா சொல்லி வைக்கல்லே. சொல்லியிருக்கணும். சொல்லல்லே, எங்க குடும்பத்திலே அவன் குரல்தான் உரத்தது.

    அப்பர் மெளனமாயிருந்தார். அவ்வளவுதான் இது. என்று முடிவுக்கு வந்திருந்தார். வியாசமூர்த்தி கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    இது என்னோட ஃபேன்தானே? என்று கேட்டார் சுழலும் மின் விசிறியைக் காட்டி.

    ஆமா... ஒங்க ஃபேன் தான், என்றார் அப்பா.

    ஒவரால் செய்யனும் சார். சத்தம் வருது. நீங்களே பண்ணிட்டு வாடகையிலே கழிச்சிக்கோங்க ஜானகி ராமன், என்றார் அப்பாவைப் பார்த்து.

    அம்மா, அப்பாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். சொல்லுங்களேன். சொல்லுங்களேன் என்று கேட்பது போலயிருந்தது. அவள் பார்வை. தமக்குப் புரிந்துவிட்டதுபோல அப்பாவும் வாயைத் திறந்துவிட்டார்.

    பண்ணினதெல்லாம் வேஸ்டாயிட்டது.

    ஆமா, என்று முணுமுணுத்தாற்போல சொல்லி விட்டு மன்னிப்பு வேண்டும் தோரணையில் பார்த்தார் வியாசமூர்த்தி. பிறகு, பாவம், நிறையப் பண்ணிட்டேளா? என்று இன்னும் குற்றவுணர்வு மிக்க தொனியில் வினவியபடியே எழுந்து சமையலறைக்குள் நுழைந்து நோட்டம் விட்டார். பெண் பார்க்க வருகிற பட்டாளத்திற்கென்று வேர்க்க விருவிருக்க அம்மாவும் அருணாவும் செய்து வைத்துள்ள பட்சணங்களைப் பார்த்தார்.

    இந்த ஏற்பாட்டுக்கான செலவையும் வாடகையிலேயே கழித்துக்கொள் - என்று எங்கே அவர் சொல்லிவிடப் போகிறாரோ என்று கூசினாள் அருணா.

    சம்ப்பா வியாசமூர்த்தியின் கடைசிப் பெண் , அவர்கள் கல்கத்தாவிற்குப் போய் அங்கேயே செட்டிலாகி விட்டார்கள். சம்ப்பாவிற்கு வேலை ஒரு பக்கம் வரன் ஒரு பக்கம் என்று தேடிவருகையில் வேலை கிடைத்து விட்டது. இந்த மதறாஸ் பையனைப் பெண் பார்க்க கல்கத்தாவிற்கு வரும்படி சொல்ல முடிய வில்லை. எனவே தாங்களே இங்கே வந்து தங்கி அதை முடித்து விடலாமென இந்த ஏற்பாடு. இதை உம்ம குடும்ப விஷயமாய்ப் பாவிச்சு ஒத்தாசைப் பண்ணவும். என்று அப்பாவுக்கு எழுதியிருந்தார்.

    சட்டென்று ஒரு முக மாறுதலோடு வியாசமூர்த்தி! ஜானகிராமன் எனக்கொரு யோசனை, எதுவும் வேஸ் டில்லை. நா சொல்லறபடி நடக் கட்டும். மத்தது வல்லான் வகுத்தது. அந்தப் பையனுக்கு யாருமே இல்லேங்கறதைப்பத்தி உம்ம கருத்தென்ன?" என்று கேட்டார்.

    அதனாலென்ன, அதெல்லாம் பெரிய விஷயமா சார்? என்றார் அப்பா.

    காரியம் முடிஞ்சாப்பல தான், அருணாவுக்கு அந்தப் பையனைப் பார்க்கலாமே. ஐ மீன், அந்தப் சபையன் அருணாவைப் பெண் பாக்கட்டும்னு சொல்றேன், என்றார் வியாசமூர்த்தி.

    என்ன சார். இதெல்லாம். என்று சங்கடத் தோடு இழுத்தார் அப்பா.

    சும்மா விட்டுப் பார்ப்போம் என்றார் அவர்.

    இரவு வியாசமூர்த்தி மட்டுமே நிம்மதியாகக் குறட் டையுடன் தூங்கினார். மற்றவர்கள் புரண்டுகொண்டே யிருந்தனர்.

    மறுநாள் காலை

    அவர்கள் காரில் வந்து இறங்கினார்கள். நான்கு பேரும் ஆண்கள் தான். ஒரு டெண் கூடக் கிடையாது. வியாசமூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார்.

    இவர் தான் பிரகாஷ், என்று சொல்லி அந்தப் பையனை அறிமுகப்படுத்தி வைத்து, இவர் வந்து. என்று அவனுக்கு ஜானகிராமனைக் காட்டியபோது, அவரே பேசினார்.

    நான் ஜானகிராமன். இவர் வீட்டில் குடியிருக்கேன். இதுக்கு அஞ்சு வருஷம் முன்னாடி புஷ்பவதியம்மாள் தெருவிலே, கோடியிலே குடியிருந்தப்ப, நாம்ப இதே விஷயமா சந்திச்சிருக்கோம், இல்லையா.

    அந்தப் பையன் - பிரகாஷ் சற்றே திகைத்துவிட்டு ஆமா மென்றான்.

    ஒங்க பெண்... என்று இழுத்தான் அவன்.

    ஒங்க மாதிரியே தானிருக்கா இன்னும்... என்றார் அப்பா.

    வியாசமூர்த்தி அவனைத் தோளில் உரிமையோடு தட்டிவிட்டு தன் விஷயத்தைத் தெளிவாக எடுத்துச் சொல்லி, தன்னை மன்னிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

    அவன் மெளனமாயிருந்தான். ஒரு குழம்பிய நிலையிலிருந்தான். அப்போது வியாசமூர்த்தி மெதுவாகச் சொன்னார், அருணா நல்ல பெண்."

    அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அருணாவைப் பாத்துட்டுப்போய் லெட்டர் போடறதா சொன்னார் ஒங்கப்பா. எந்தப் பதிலுமேயில்லை. நாபோட்ட தபாலுக்கும் பதிலில்லே. என்றார் அப்பா.

    சற்று மெளனமாயிருந்துவிட்டு அவன் சொன்னான்.

    உங்க வீட்டுக்கு வந்துட்டுப்போன மறு நாளே அப்பா மார்வலி கண்டு போயிட்டார். அம்மாவுக்கு செண்டிமெண்ட்ஸ். என்ன பதிலை எழுதணும்னு தோணல்லே பிடிக்கவுமில்லே, அடுத்த மாசத்திலே அம்மாவும் போயிட்டா. எனக்கும் என்னவோ போல ஆயிட்டது. கல்யாணமே வேணாம்னு அஞ்ச வருஷமா தள்ளிட்டேன். இவங்கெல்லாம் என்னோட ஆபீசு சினேகிதர்கள். என்னோட நலன்லே என்னைவிட இவங்களுக்குத்தான் அக்கறை ஜாஸ்தி. இவங்களாலே தான் மறுபடியும் கல்யாண முயற்சியிலே நான் இறங்கினது. நாம மறுபடியும் சந்திப்போம்னு நான் நினைக்கவே யில்லை...

    இந்த வீடு மறுபடியும் ஒரு சந்திப்புக்கு வகை பண்ணிட்டது. இல்லையா? என்றார் ஒருவிதப் பெருமையோடு வியாசமூர்த்தி.

    அருணாவைப் பிடிச்சிருக்குதானே? என்று கேட்டாள் , அம்மா.

    இப்ப சொல்லலாமே அதை என்றார் வியாச மூர்த்தியும்.

    பிரகாஷ் புன் சிரிப்புடனிருந்தான்.

    அந்தச் சமயத்தில் சிற்றுண்டியுடன் அருணா வந்தாள். ஏற்கனவே அவனுக்கு நமஸ்காரம் செய்திருந்தாலும் அந்த நமஸ்காரம் ஐந்து வருடப் பழையது. எனவே மறுபடியும் செய்தாள்.

    ஒங்களுக்கு எந்தத் தேதி செளகரியமோ அதையே குறிச்சு எனக்குத் தெரியப் படுத்துங்கோ, என்று கூறி விட்டுப் புறப்பட்டான் பிரகாஷ்.

    என்னோட டென்ஷன் நீங்கிடுத்து… என்றார் வியாசமூர்த்தி.

    -பொன்மலர் 1989

    2. சுழற்சி

    புனித மார்க் பள்ளிக் கட்டிடத்தின் பாசிப் பச்சைப் படர்ந்த கள்ளிக் கோட்டை ஓட்டுக்கூரை தெரியத் தொடங்கும்போது அமலாவுக்கு ஞாபகம் வந்தது. அடடா, மறந்து போயிட்டனே - என்று மிகவும் கோணித்துக் கொண்டது அவள் மனம். நேற்று காலை இறை வணக்கத்தின் போதே தலைமையாசிரியையும் கன்னியாஸ்திரியுமான மேரி மகதலின் தாயார் அறிவித்து விட்டிருந்தாள். வருடா வருடம் அறிவிக்கப் படுவதே அது. முன்னே பின்னே என்றிருந்தாலும், இந்த மாதத்தில்தான் அந்த அறிவிப்பு வரும். அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு வார காலத்துக்குள் அந்த பெண் மணிகளின் வருகை இடம் பெறும். ஒன்பது வருடமாய் தொடர்ந்து இதே பள்ளியில் படித்து வரும் அமலா இது வரை மேரி மகதலின் தாயாரின் வேண்டுகோளை இந்த முறைபோல உள் வாங்கிக் கொண்டதில்லை. அவள் குடும்பச் சூழலைப் பார்க்கும்போது இந்தப் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படிக்கிறதே ரொம்பப் பெரிய விஷயம். ஒவ்வொரு செலவின்போதும் அவளுடைய அம்மா புலம்புவதுண்டு..

    இந்தப் பள்ளிக்கூடத்துல சேர்ந்திருக்கவே கூடாது அதுக்கிதுக்குனு அப்பப்ப பிடுங்கிகிட்டேயிருக்காங்க. கவர்மெண்ட் ஸ்கூலா பார்த்து சேர்த்திருக்கணும்.

    அப்பா உடம்புக்கு வந்து வேலையில் நீடிக்க முடியாதென்ற நிலையேற்பட்டபோது அவர் தானாக முன் வந்து வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண் ஐந்து. அவளுக்கும் அவனுக்குமிடையே போலியோ வால் சற்றே ஊனமுற்ற பெண் ஒன்று. அம்மாவுக்கு அதே அலுவலகத்தில் ஒரு வேலை போட்டுக் கொடுத் தார்கள். அப்பா பார்த்து வந்த பகுதிதானென்றாலும் அவர் பார்த்த வேலைக்கு மிகவும் குறைந்த நிலையிலுள்ளதாகும் அது. அம்மாவின் கல்வித் தகுதிக்கு அது தான் கிடைத்தது என்பதோடு அதற்குத் தக்கபடி ஊதியமும் குறைவு. கெளரவமும் சற்று குறைவுதான். என்றாலும் இதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள முடியாது. அதே சமயம் இந்த கெளரவப் பிரச்சினையை மாத்திரம் அம்மாவால் மிகவும் எளிதாகத் துடைத்து அப்பால் எறிய முடிந்தது.

    அமலாவுக்கு துணிமணிச் செலவுகளையெல்லாம் அம்மாவால் தாராளமாகக் கவனிக்க முடியவில்லை. நல்ல வேளையாக பள்ளிச் சீருடைத் திட்டம் நடை முறையிலிருப்பது எவ்வளவுக்கோ ஒப்பேற்றியனுப்ப ஏதுவாயிருக்கிறது. ஆனாலும் வீட்டுக்கு வந்தவுடன் அமலாவின் மற்றொரு சொந்த உலகம் விழித்துக் கொண்டு விடுகிறது. அடுத்த வீட்டுச் சிறுமிகள், எதிர் வீட்டுச் சிறுமிகள் என்று ஒப்பிட்டுப் பேசி, கேட்கத் தோன்றுகிறது.

    அம்மாவுக்கு, அவள் பணிபுரியும் - சில ஆண்டுகளுக்கு முன் அப்பா பணி புரிந்து வந்த - அலுவலகத்தில் இரக்கமும் தர்ம சிந்தனையுமிக்க பெண் ஊழியர்கள் கொஞ்சம் உண்டு. அவர்களில் அனேகர் அப்பாவுக்குச் சமமான உத்தியோகத்திலிருப்பவர்கள். சிலர் அப்பாவைக் காட்டிலுமே உயர் படிப்பு படித்தவர்கள். அப்பா, கீழேயிருந்து படிப்படியாக பதவியில் உயர்ந்திருந்தவர். அத்தோடு பெண் சிப்பந்திகள் வீட்டு வருவாய் பயணத்தில் டபுள் எஞ்சின் ஓடக் கூடிய செளகரியம்.

    தப்பா நினைச்சிக்காதீங்க, சம்பூர்ணம், எங்க பொண்ணுக்கு இது சின்னதா போயிட்டது. எம் பொண்ணு கிடு கிடுணு வளந்திட்டு வருது. இதை ரெண்டு மூன்று தடவைதான் போட்டிருப்பா. நல்ல மட்டீரியல்.. என்று சொல்லிக் கொண்டே அந்த சட்டையை எடுத்துக் காட்டும்போது அமலாவின் அம்மாவால் நிராகரிக்கவே வராது. நிச்சயம் தன்னால் அமலாவுக்கு அது போன்ற தினுசை வாங்கித் தர இயலாது என்பது அவளுக்குத் தெரியும். எனவே பெரு மூச்சுக்கு எத்தனை அர்த்தம் இருந்தாலும் உள்ளுக்குள்ளேயே விட்டு விட்டு, சட்டையை வாங்கிக் கொள்ளுவாள். அமலாவுக்கு அனேகமாய் அது கச்சிதமாகவே அமையும். அவ்வாறில்லாவிடினும் தன் தையல் இயந்திரத்தில் அதை அமலாவின் அளவுக்கு சரி செய்து விடுவாள் அம்மா.

    ஒன்று மட்டும் நிச்சயமாய் அமலாவுக்கு விளங்கும் இது அம்மா கடையில் வாங்கினதல்ல, யாரோ கொடுத்தது - என்று. விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்திலிருந்து தின்பண்டங்கள் வீட்டுக்கு கொடுத்து விடுகின்ற விதமாகவே இது விஷயத்திலும் அவள் மனம் சகஜமாயிருக்கும். ஆனாலும் சினேகிதிகள், புதுசாடி, ரொம்ப நல்லாயிருக்கு, என்று கேட்கும்போது ஒன்றும் பதில் சொல்லமாட்டாள். அம்மா கொண்டு வந்தாங்க - என்று கூறும்போது தனக்கு நன்கு தெரிந்த்தை தான் வெளியில் சொல்லாமல் மறைப்பதும் அவளுக்கு நன்றாகவே தெரிகிறது. ஆம், அம்மாவுக்கு சகஜமாய்ப் போய்விட்ட கெளரவப் பிரச்சினை இவளுக்கு இப்போதிலிருந்த மனதில் குறு குறுக்கும் ஒன்றாக இருக்கிறது.

    இவள் உடல் வாகு, வளர்ச்சி குன்றியே இருந்தாள். இவளுக்கென்றே சொல்லி வைத்தாற்போல அம்மாவின் சினேகிதிகள் வீட்டுக் குழந்தைகள் கிடுகிடுவென வளர்ச்சியடைந்து விடுவதாய் இருந்தது. அந்த வகையில் போனவாரம் அம்மா கொண்டு வந்து வைத்திருக்கும் சட்டை ஒன்று இவளுக்கு ஏற்றாற்போல் அங்கிங்கே சிற்சில திருத்தங்கள் செய்யவென தையல் இயந்திரத்தின் மேல் கிடந்தது. அற்புதமான துணி, கண்ணைப் பறிக்கும் வண்ணம், அதி நவீன மோஸ்தர், ரெடிமேட் சட்டைக் கடையின் கண்ணாடிக் காட்சிக் கூண்டில் நிறுத்தப்பட்ட பொம்மைகள் அணிந்திருக்கும் தினுசுகளில் ஒன்று என்பது அமலாவுக்குத் தெரியும். அவர்கள் வீட்டு தையல் இயந்திரத்தில் என்னவோ பழுதேற்பட்டிருந்தது. அதைச் சரி பார்க்க ஒருவனை அம்மா அழைத்திருந்தாள். இன்னும் வரக் காணோம். வந்து விடுவான். அதனால் அந்தச் சட்டை அப்படியே மடிந்த வாக்கில் கிடந்தது.

    வருடா வருடம் ஒவ்வொரு வகுப்புக்கும் அந்தச் சுற்றறிக்கை வரும். வகுப்பாசிரியை மாணவிகளுக்காக அதை உரக்கப் படித்துக் காட்டுவாள்.

    கடைசியாக சுற்றறிக்கை அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுவிடும். பிறகு அந்தப் பக்கமாய் போய் வரும் சமயமெல்லாம் மாணவிகள் நின்று எம்பியெம்பிப் பார்த்துப் படிப்பார்கள்.

    வழக்கமாய் இரண்டு பெண்மணிகள் வருகை தருவார்கள். ஒருத்தி முதியவள். கண்ணாடியணிந்திருப்பாள். ஒவ்வொரு தடவையும் இவள் தவறாது வருவாள். கீச்சென்ற குரல். அனேகமாய் இவள் தான் எதையும் பேசுவாள். எதிர்படும் மாணவிகளையெல்லாம் நிறுத்தி வைத்து தொட்டுத் தொட்டுப் பேசுவாள். இன்னொருத்தி இளம் வயதினளாயிருப்பாள். அதிகம் பேசிக் கொண்டிருக்கமாட்டாள். இந்த வருடம் வருபவள் அடுத்த முறையும் வருவாள் என்பது நிச்சய பதிலாக வந்தாலும், இளம் வயதினளாகவே இருப்பாள். அப்படி ஒரு ஏற்பாடு போலும். இவர்கள் நார்வே தேசத்திலிருந்து வருகை தருவதாக வகுப்பாசிரியையும் தலைமையாசிரியையும் ஒவ்வொரு முறையும் அறிமுகப் படுத்துவார்கள். சுற்றறிக்கையிலும் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும்.

    போனவாட்டி நம்ம ஊர் துணிகளையெல்லாம் பீகாருக்கு அனாதைப் பசங்க விடுதிகளுக்கு அனுப்பிச் சாங்களாம். இந்தத் தடவை எதியோபியாவுக்கு அனுப்பறாங்களாம், என்று வகுப்பாசிரியை கூறின போது, எதியோபியா எங்கே இருக்கிறது என்ற கேள்வியில் பிள்ளைகள் இறங்கினார்கள். உலகப் படத்தில் அதன் இருப்பைக் காட்டிக் கொடுத்தாள் ஆசிரியை.

    சுருக்கமாகவும் அவசரத்துக்காகவும் அந்த அயல் நாட்டுப் பெண்களை, வறிய சகோதரிகள் என்றே குறிப்பிடுவார்கள்.

    இதுவரை அமலா, "வறிய சகோதரிகளின் நலனுக்காக தன் சார்பில் துணிமணி எதையும் அளித்ததில்லை. அப்படியான உணர்வு சமீபத்தில் தான் அவளில் விழித்துக் கொண்டிருக்கிறது. அம்மா தனக்காக எங்கிருந்தோ கொண்டு வரும் துணிமணிகளை ஏற்கும் சமீப காலத்தில்தான் அவளில் இவ்வுணர்வு குடைந்து வருகிறது. அப்படியும் அவ்வுணர்வில் எவ்விதத்திலும் முதிர்ச்சி எதுவும்

    Enjoying the preview?
    Page 1 of 1