Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நிறம் மாறும் பூக்கள்
நிறம் மாறும் பூக்கள்
நிறம் மாறும் பூக்கள்
Ebook160 pages58 minutes

நிறம் மாறும் பூக்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காய்கறி வாங்குவதற்காக ஒயர் கூடையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் அழகம்மா.
 கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஆறாகப் போகிறது. சக்ரவர்த்தி வரும் நேரம். ஐந்தே முக்காலுக்கெல்லாம் வந்துவிடுவான். அவனை இன்னும் காணவில்லை. அவன் வந்துவிட்டால் அவனுக்கு காபியும் சிற்றுண்டியும் கொடுத்துவிட்டு கிளம்பலாம் என்று நினைத்தாள். சேலையை திருத்திக் கட்டிக் கொண்டாள். கண்ணாடி எதிரே வந்து நின்று அள்ளி போட்ட கொண்டையை பிரித்தாள். நரை கலந்த கூந்தல். ஆனால் இடுப்பு வரை இருந்தது. சீப்பு எடுத்து அதை சீவி கொண்டையாக்கினாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். முந்தானையால் சும்மாவே துடைத்தாள்.
 அழகம்மாவிற்கு ஐம்பது வயது என்று யாரும் சொல்ல முடியாது. இளம் வயதிலேயே கணவனை இழந்தவள். ஒரே மகனை ஈன்றவள்.
 விதவையாக இருந்தாலும் தன் ஒரே மகனை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பியிருந்தாள். கணவனுடைய நினைவுகள் மட்டுமே அவளுக்கு சொந்தமாக இருந்தன. அவர் இல்லை. அவர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அது ஒரு தனியார் நிறுவனம். பாதியிலேயே அவர் இறந்துவிட்டதால் கணிசமான தொகை மட்டுமே கிடைத்தது. அதை வங்கியில் போட்டிருந்தாள். அதில் வரும் வட்டியை வைத்தே வாழ்க்கை ஓடியது. பிறந்த வீட்டிலிருந்து உடன் பிறந்தவர்கள் உதவி செய்தனர். இருப்பது கூட ஒரு வாடகை வீடு தான். அவளுடைய வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது மாதிரியான பேச்சு மற்றவர்களை புறம் பேச வைக்கும் 'புருஷனை இழந்து ஒண்ணுமில்லாம இருக்கும் போதே இத்தனை சவடால் பேச்சு. இன்னும் இருக்கிறதோட இருந்துட்டா இவளை கையாலே பிடிக்க முடியாது.' என்பார்கள்.
 அழகம்மா அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டாள்.
 "அழகம்மா... அழகம்மா..."பக்கத்து வீட்டு பாக்யலட்சுமி வந்து கொண்டிருந்தாள்.
 "வா... பாக்கியலெட்சுமி" அழகம்மா.
 "அப்பவே மார்க்கெட்டிற்கு வர்றேன்னு சொன்னே? இன்னும் தான் கிளம்பறியா?" என்றாள்.
 "கிளம்பிட்டேன். இந்த சக்ரவர்த்திக்காக காத்துக்கிட்டிருக்கேன். அவன் வந்ததும் காபியுடன் டிபனும் கொடுத்துட்டு வரலாமேன்னு பார்த்தேன்."
 "ஆமா! அவன் என்ன சின்னக் குழந்தையா? எடுத்து வச்சா சாப்பிட மாட்டானா?"
 "பாவம்க்கா. ஆபீஸ்லேர்ந்து களைச்சு போய் வருவான். தானே எடுத்து வச்சு சாப்பிட அலுப்பு படுவான்."
 "அதுக்காக அவன் வர்ற வரைக்கும் எல்லா வேலையையும் போட்டுட்டு உட்கார்ந்திருப்பியா? அவனுக்கு ஒரு கல்யாணத்தை காலா காலத்துல செய்து வச்சிட்டீன்னா வீட்டை அவ கையில ஒப்படைச்சுட்டு நீ எங்க வேணா போகலாம். வரலாம் இல்லையா? அவனையும் அவ கவனிச்சுப்பாளே" அவள் இப்படி சொன்னதும் அழகம்மா அவளை எரித்து விடுவதைப் போல் பார்த்தாள்.
 "என்ன நீ? என் புள்ளைக்கு கல்யாணம் பண்ண சொல்றியா? இப்ப அவனுக்கு என்ன வயசாயிட்டு? அதுக்குள்ள அவனுக்கு எதுக்குக் கல்யாணம்? இவ்வளவு சின்ன வயசுல அவன் தலையில குடும்பப் பாரத்தை சுமத்தணுமா?" என்றாள்.
 அழகம்மாவின் கோபத்தைக் கண்ட பாக்யலெட்சுமி சிரித்தாள்.
 "அழகம்மா... மருமக வந்துட்டா உன் புள்ளை அவ பக்கம் சாஞ்சிடுவான்னு பயப்படறியா?"
 "பயமா? நான் ஏன் பயப்படணும். எனக்கு மருமகளா வர்றவளை அடக்கி ஆளுவேன்."
 "உனக்கு மருமகளா வர்றவ, உன்னோட பேச்சுக்கே பெட்டி பாம்பா அடங்கிடுவா."
 "அதானே, அப்படி சொல்லு."
 "அழகம்மா எது எப்படியிருந்தாலும் உன் பையனுக்கு வயசு ஏறிக்கிட்டேயிருக்கு. அதனால புள்ளைங்களை இன்னும் சின்ன வயசுன்னு நினைக்காம காலா காலத்துல ஒரு கால்கட்டைப் போட்டுட்டா நம்ம மானம்மரியாதை கப்பலேறாம இருக்கும். நாமும் நாலு இடத்துக்கு நாகரீகமா போய்ட்டு வரலாம்" என்றாள்.
 பாக்யலெட்சுமியின் வார்த்தைகள் சிந்தனையை தூண்டியது. சக்ரவர்த்தி உள்ளே வந்தான். சக்ரவர்த்தி இருபத்தியொன்று வயதில் பார்வைக்கு சினிமா நடிகர் ஜெயராமை போலிருந்தான். நிறம் கொஞ்சம் குறைச்சல். அடர்த்தியான மீசையோடு இருந்தான். முகத்தில் வயதிற்குரிய வசீகரம் இருந்தது. பார்வையில் படிப்பிற்குரிய தெளிவு இருந்தது.
 பாக்யலெட்சுமியைப் பார்த்ததும் சிரித்தான். அழகான பல் வரிசை.
 "என்ன அத்தை... எனக்காக எங்கம்மா செய்து வச்ச டிபனையெல்லாம் காலி பண்ணிட்டீங்களா?" என்றான்.
 பாக்யலெட்சுமி அழகம்மாவை திரும்பிப் பார்த்தாள்.
 அழகம்மா மகனுக்கு சிற்றுண்டி கொண்டு வர உள்ளே சென்றாள்.
 திரும்பி வந்தவள் கூடையுடன் பாக்கியத்துடன் வெளியே கிளம்பினாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223133438
நிறம் மாறும் பூக்கள்

Read more from R.Sumathi

Related to நிறம் மாறும் பூக்கள்

Related ebooks

Reviews for நிறம் மாறும் பூக்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நிறம் மாறும் பூக்கள் - R.Sumathi

    1

    வெயில் அன்றைக்கு அதிகமாக இருப்பதாக தோன்றியது நாராயணனுக்கு. அனல் மீது நடப்பதைப் போலிருந்தது. கால் சுடாதவாறு செருப்புகள், உடலில் கதர் உடை, தலைக்கு பெரிய குடை. வெயிலுக்கு இத்தனை பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தும் பயனில்லை. குடையை மீறி வழுக்கை விழுந்த தலையில் வெயில் ஊசி ஊசியாய் சூட்டை இறக்கி கொதிக்க வைத்தது. வெயிலின் சூட்டை தாங்க முடியாமல் உடம்பு குழந்தையாகி தலை முதல் கண்கள் கொண்டு அழுதது. உடம்பின் எரிச்சலில் வெளியான வியர்வை துளிகளை கதராடை உறிஞ்சிக் கொண்டது.

    நாராயணன் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சென்னையில் சொந்த வீடும், வீட்டிற்கு பின்னால் சிறு தோட்டமும் சென்னையை ஒட்டிய கிராமத்தில் கொஞ்சம் நிலமும் இருந்தன. உடம்பில் தெம்பு இருந்தவரை எப்பொழுதாவது சென்று நிலத்தைப் பார்த்துக் கொள்வார். உடம்பில் தெம்பு குறைந்ததும் அதையும் விட்டு விட்டார். கிராமத்திலிருக்கும் அவருடைய அண்ணன் குடும்பத்தார் அவற்றை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு பணமாகவோ, அரிசியாகவோ தந்துவிடுவர். நாராயணனுக்கு ஆண்பிள்ளை இல்லை. இரண்டும் பெண்கள். மூத்த பெண் சரஸ்வதி மும்பையில் கணவனுடன் வசிக்கிறாள். கணவனும் மனைவியும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கின்றார்கள். சரஸ்வதியை நன்றாகப் படிக்க வைத்த அவரால் குழலியை மட்டும் படிக்க வைக்க முடியவில்லை. குழலி பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தபோது அவளுடைய அம்மாவிற்கு கர்ப்பப் பையில் புற்றுநோய் வந்துவிட்டது. அதை ஆபரேஷன் செய்தனர். அவளை கவனித்துக் கொள்ள ஆள் இல்லாததால் குழலி வீட்டிலிருக்க நேர்ந்தது. அதனால் அவளுடைய படிப்பு தடைப்பட்டது. குடும்ப பாரம் அவளை அழுத்தத் தொடங்கியதில் படிப்பு பற்றிய எண்ணமே வரவில்லை.

    நாராயணன் கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். தபால் முறையிலாவது படி என்று. அதையும் அவள் படிக்கவில்லை.

    இப்பொழுது அவளுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு தரகர் சிவசிதம்பரத்திடம் கொடுத்து விட்டு வந்திருக்கிறார். ஒரு வாரத்தில் மாப்பிள்ளையோடு வருகிறேன் என்று அவரும் கூறியிருந்தார்.

    நாராயணன் வீடு வந்து சேர்ந்த போது மணி ஒன்றரையாகியிருந்தது. வயிற்றின் பசியை வயோதிகம் தாங்கிக் கொள்ளவே சிரமப்பட்டது. கைப்பையைத் திறந்து ஆட்டோ ஓட்டுனர் கேட்ட பணத்தை குறைக்காமல் கொடுத்து விட்டு உள்ளே வந்தார்.

    குழலி... அம்மா குழலி...

    உள்நோக்கி குரல் கொடுத்தவாறே வந்தவர் சோபாவில் அமர்ந்தவாறே துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டார். உள்ளிருந்து குரல் கேட்டு குழலி வந்தாள்.

    என்னப்பா... ஏன் இவ்வளவு லேட்டா வர்றீங்க? ஒரு மணிக்கெல்லாம் உங்களுக்கு சாப்பிட்டாகணும். வயசான காலத்துல ஏம்ப்பா இப்படி அலையறீங்க? வெளியில் தலைகாட்ட முடியலை. என்ன வெயில்? கொளுத்துது...

    காற்றாடியின் விசையை தட்டியவாறே அதன் சுழற்சிக்கு இணையாக இவளும் பேசினாள்.

    என்னம்மா பண்றது? பொண்ணை பெத்தவனுக்கெல்லாம் வெயிலும் பனியும் ஒண்ணுதாம்மா... போ... போய் ஜில்லென்று ஒரு டம்ளர் மோர் கொண்டா என்றார்.

    பொண்ணை பெத்தவங்களுக்கெல்லாம் வெயிலும் பனியும் ஒண்ணுதானே. அப்புறம் எதுக்கு வெயிலின் சூட்டை தணிக்க ஜில்லுன்னு மோர் கேட்கறீங்க. சூடா வெந்நீர் கொண்டு வர்றேன் என்று குழலி சிரித்தாள். அப்பாவிற்கும் சிரிப்பு வந்தது.

    சின்ன புள்ளையாட்டம் என்னம்மா வம்பு இது? போ... போய் மோர் கொண்டா என்றார்.

    சில நிமிடங்களில் மோர் தம்ளருடன் வந்த குழலியைப் பார்க்கும் போது எவருக்கும் அந்த மோரினை அருந்திய குளிர்ச்சி உண்டாகும்.

    நாராயணனுக்கு இரண்டு பெண்களுமே அழகை அள்ளி பூசிக்கொண்டு தான் பிறந்தார்கள். அதிலும் குழலி மிகவும் அழகாக பிறந்தாள். பிறக்கும் போதே அவளுக்கு தலை நிறைய கன்னங்கரேலென நிறைய குழல். அதனாலேயே அவளுக்கு குழலி என அவர் பெயர் வைத்தார். கொடி போன்ற அழகான உடல்வாகு. சிரிக்கும்போது நட்சத்திரங்கள் சிரிக்கும் விழிகள். பருவ செழிப்பில் கரிய பெரிய விழிகளும் கன்ன சிவப்பும் அவளுக்கு தனி அழகை தந்தது. குழல் மட்டும் அழகல்ல அவளுக்கு. அவளுடைய குரல் கூட குழல் தான். தேன் கலந்து ஒலிக்கும் குரல். குழலிலிருந்து புறப்பட்ட நாதம் போன்ற இனிமையான குரல்.

    குழலி படிக்கவில்லையே தவிர மற்ற எல்லாவற்றிலும் அவளுக்கு திறமை இருந்தது. வீடு முழுவதும் அழகழகான பூவேலைப்பாடுகள் செய்து வைப்பாள். படிக்காத பெண் என்று அவளை யாரும் சொல்ல முடியாது. வீட்டிலிருக்கும் நேரங்களில் நூல் நிலையத்திலிருந்து கொண்டு வரும் புத்தகங்களை வாசித்து உலக அறிவைப் பெற்றிருந்தாள்.

    கையில் கொண்டு வந்த மோரினை அப்பாவிடம் நீட்டினாள். நாராயணன் அதை வாங்கிப் பருகினார்.

    அருகே வந்த அவர் மனைவி சொர்ணாம்பாள்.

    சிவசிதம்பரத்தைப் பார்த்தீங்களா? ஆவலாய் கேட்டாள்.

    ம்... பார்த்தேன். ஜாதகத்தை கொடுத்தேன். நல்ல இடமா பாருய்யான்னு சொன்னேன். ஒரு வாரத்துலயே மாப்பிள்ளையோட வர்றேன்னார்.

    ஒன்றும் அவசரமில்லை. நிதானமா ஒரு இடத்துக்கு நாலு இடமா பார்த்து விசாரிச்சு நல்ல பையனா பார்க்க சொல்ல வேண்டியது தானே.

    அதெல்லாம் சொல்லாமலா வந்திருப்பேன்?

    அப்புறம் நம்ம கண்டிஷன் சொன்னீங்களா?

    வற்புறுத்தி சொல்லலை. ஜாடை மாடையா சொல்லிட்டு வந்தேன்.

    அவர் அப்படி சொன்னதும் அவளுக்கு முகம் சுருங்கியது.

    வற்புறுத்தி சொல்றதுக்கென்ன? என்றாள்.

    ப்ச்! சொர்ணம், இந்த காலத்துல மாப்பிள்ளை கிடைக்கிறதே ரொம்ப சிரமமாயிருக்கு. எல்லாம் ஒத்து வந்து கல்யாணம் முடியக்காட்டியும் போதும் போதும்னு இருக்கு. அப்படியே முடிஞ்சாலும் நல்லப்படியா வாழணுமேன்னு பயமாயிருக்கு. ஊர் உலகத்துல நடக்கறதை கேள்விப்படும் போது அப்படியெல்லாம் நம்ம பொண்ணுக்கு நடந்திடக் கூடாதேன்னு பயமாயிருக்கு. எவன் ஒழுங்காயிருக்கேன்? மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறதுக்குள்ள போதும் போதுமின்னு ஆகுது. ஏதோ... நம்ம மூத்த பொண்ணுக்கு நல்லவனா கிடைச்சான். அதைப் போல இவளுக்கும் கிடைச்சுட்டா போதும்.

    என்னங்க நீங்க. நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம ஏதேதோ பேசிக்கிட்டு போறீங்க?

    அதான் சொன்னேனே. மாப்பிள்ளை கிடைக்கிறதே சிரமம். இதுல வீட்டோட மாப்பிள்ளையா பாருன்னு எப்படி சொல்றது? நமக்கு ஆண்பிள்ளை இல்லேங்கறதுக்காக நம்மோட சுயநலத்துக்காக வீட்டோட மாப்பிள்ளைப் பார்க்க முடியுமா? மாப்பிள்ளை ஒத்துக் கொள்ள வேண்டாமா?

    என்னங்க நீங்க? நான் என்ன குடும்பத்துல உள்ள பையனையா? பார்க்கச் சொல்றேன்? அம்மா, அப்பா, கூடப் பிறந்தவங்களையெல்லாம் விட்டுட்டு மாமியார் வீட்டோட வந்திடுன்னா சொல்றேன். அம்மா அப்பா இல்லாத பையனா பாருங்கன்னுதானே சொல்றேன். நமக்கும் ஆண் பிள்ளை கிடையாது. மூத்த பொண்ணையும் ரொம்ப தூரத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டோம். இவளையும் வெளியூர்ல கொடுத்தா நாம கடைசி காலத்துல எப்படியிருக்கிறது? இவளையாவது வீட்டோட வச்சுக்கிட்டா நமக்கு ஒரு துணையாயிருக்குமே மனைவியின் ஆதங்கம் அவருக்குப் புரிந்தது. சிரித்தார்.

    உன் ஆதங்கம் எனக்குப் புரியுது சொர்ணம். ஆனா... நம்ம பொண்ணு நம்ம பக்கத்திலேயே இருக்கணும்? நமக்கு ஒரு பாதுகாப்பு வேணும்ங்கிறதுக்காக நல்ல குடும்பத்திலேர்ந்து ஒரு நல்ல மாப்பிள்ளை வந்தா தட்டிக் கழிச்சுட முடியுமா. அம்மா அப்பா இல்லே, பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லே மாமியார் வீட்டோட வந்துடுவான்கிறதுக்காக மோசமான ஒருத்தனுக்கு கொடுத்துட முடியுமா?

    நான் என்ன மோசமானவனுக்கா கொடுக்கச் சொன்னேன்?

    நீ சொன்னேன்னு சொன்னேனா? மாப்பிள்ளை நல்லவனாயிருந்தா அவன் குடும்பத்திலிருக்கானோ, தனியா இருக்கானோ எப்படியிருந்தாலும் கொடுத்திட வேண்டியதுதான். நம்மோட சுயநலத்துக்காக அவளோட வாழ்க்கையை அமைக்கலாமா?

    அப்ப நாம கடைசி காலத்தில தனியாத்தான் வாழணுமா?

    நீ தைரியமா இரு. தைரியம்தான் வாழ்க்கை. ஆண்பிள்ளை இல்லாதவங்களுக்கு தைரியம் தான் தேவை.

    மனசுல தைரியம் இருந்தாலும் உடம்புல இல்லையே. ம்... ஒரு ஆண் பிள்ளையைப் பெத்திருந்தா இந்தப் பேச்சுக்கே இடம் இல்லை. இறுதியில் பிறக்காத ஆண் பிள்ளைக்காக மூக்கை சிந்தினாள் சொர்ணாம்பாள்.

    அவர் சிரித்தார்.

    அடிபோடி பைத்தியக்காரி. ஊர் உலகத்துல எத்தனை பேர் பெத்தவங்களுக்கு சோறு போடறான்? ஒருத்தன் ரெண்டு பேர்தான்.

    ம்... எல்லாத்துக்கும் ஒரு காரணமும் விளக்கமும் சொல்லிடுங்க.

    சரி... சரி நடக்கிறது நடக்கும். போய் வேலையைப் பாரு. அம்மா குழலி...

    இதுவரை சுவரோரம் சாய்ந்து அவர்களுடைய உரையாடலை ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்த குழலி வந்தாள்.

    அப்பா.

    என்னம்மா...

    அப்பா... கல்யாணம் மெதுவா நாள் கழிச்சு பண்ணினாலும் பரவாயில்லை. அம்மா சொல்றமாதிரி இந்த வீட்டோட இருக்கிற மாதிரியே மாப்பிள்ளையைப் பாருங்கப்பா...

    அப்பா நிமிர்ந்தார் சட்டென.

    "ஆமாம்பா! உங்க ரெண்டு பேருக்கும் கடைசி வரை இப்படி இணையா உட்கார வச்சு நான் சாப்பாடு போடணும். என்னால உங்களை விட்டுட்டுப் போக முடியாது. என் கூடவே இருக்கணும். நீங்க. அதனால அம்மா சொல்ற மாதிரி வீட்டோட மாப்பிள்ளையா பாருங்க. அம்மா அப்பா

    Enjoying the preview?
    Page 1 of 1