Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனமே பற... பற...
மனமே பற... பற...
மனமே பற... பற...
Ebook123 pages44 minutes

மனமே பற... பற...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கழுவிய பாத்திரங்களோடு அம்மா அடுக்களைக்குள் நுழையும் சத்தம் கேட்டதும், படித்துக் கொண்டிருந்த கதைப் புத்தகத்தை சட்டென்று மறைத்துக் கொண்டு, பாடத்தை வாய்விட்டுப் படித்தாள், சாந்தா. துளசி அதை காதில் வாங்கியவாறே மலர்ச்சியுடன் காபி போடத் தொடங்கினாள்.
 "சாந்தா... பல் தேய்ச்சுட்டு வாம்மா. காபி குடிக்கலாம் என்றாள், அன்பொழுக.
 "இரும்மா! படிக்க வேண்டியது இன்னும் கொஞ்சம் இருக்கு."
 "இருக்கட்டும். அப்புறம் காபி ஆறிப்போயிடும். போய் பல்லைத் தேய்ச்சுட்டு வா."
 "அடடா... என்னைப் படிக்கவே விடமாட்டியா? ஒண்ணு 'அந்த வேலை செய், இந்த வேலை செய்'ன்னு தொன தொணப்பே. இல்லாட்டி, 'காபி குடி, டிபன் சாப்பிடு'ன்னு வம்பு பண்ணுவே. சேச்சே!" என எரிச்சல் பட்டபடி புத்தகத்தை மூடிவிட்டு எழுந்தாள்.
 பல் தேய்த்துவிட்டு வந்து, அம்மா கொடுத்த காபியை எடுத்துக் கொண்டு மீண்டும் பழைய இடத்திற்கே வந்தாள். காபியைப் பருகிக் கொண்டே, மீண்டும் திருட்டுத் தனமாக கதைப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினாள்.
 துளசி அவசர அவசரமாக சமையலில் இறங்கினாள்.
 நேரம் போவதே தெரியாமல் கதையில் ஆழ்ந்து விட்ட மகளை அம்மாவின் குரல் அசைத்தது.
 "சாந்தா... உனக்கு நேரம் ஆகலையா? சீக்கிரம் குளிச்சுட்டு கிளம்பு. நானும் கிளம்பணுமில்லே... இருக்கிறதே ஒரு பஸ் அதையும் விட்டோம்ன்னா அவ்வளவு தான். போ... போய் குளி" என்றவள், "இந்தப் பொண்ணுக்கு படிக்க உட்கார்ந்துட்டா நேரம் போவதே தெரியாது. படிப்புல அவ்வளவு ஆர்வம். என்னமோ அந்த ஆண்டவன் தான்நல்ல வழி காட்டணும். என்னை மாதிரி கஷ்டப்படாமல், அவ படிச்சு ஒரு வேலைக்குப் போகணும்' நினைக்கும்போதே நெஞ்சம் நெகிழ்ந்து விம்மியது.
 கொடியில் கிடந்த துணிகளை எடுத்துக் கொண்டு, சாந்தா குளியலறை நோக்கிச் சென்றாள்.
 "அம்மாடி... அப்படியே உன் துணிகளை துவைச்சட்டு குளிடா. எனக்கு வேலையிருக்கு" என்றாள். தாய்.
 "போம்மா! என்னால் முடியாது" வெடுக்கென கூறிவிட்டு, குளியலறைக்குள் புகுந்து கொண்டாள், மகள்.
 துளசிக்கு மகள் மீது சற்று முன் ஏற்பட்ட பெருமை போய், எரிச்சல் தான் வந்தது.
 'என்ன பெண் இவள்? எந்த வேலை சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாள். போகட்டும். ஒழுங்காகப் படிக்கிறாளே. அது போதும்.'
 அவசர அவசரமாக சமையலை முடித்தாள்.
 ஒரு மணி நேரமாக, சமீபத்தில் வெளியான சினிமா பாட்டை ரசித்துப் பாடியவாறே குளித்துக் கொண்டிருந்தாள், சாந்தா.
 "எவ்வளவு நாழி குளிப்பே?" துளசி சத்தம் போட்ட பிறகே சாந்தா வெளியே வந்தாள். அதே பாட்டை விடாமல் கூடம் வரை ராகமாக இழுத்துக் கொண்டு வந்தாள்.
 "கண்றாவி! இதெல்லாம் என்ன அசிங்கமான பாட்டு... பாடுறதுக்கு உனக்கு வேறு பாட்டே கிடைக்கலையா? முதல்ல, பாடுறதை நிறுத்து."
 "ஏம்மா... நான் நல்லாப் பாடுறேன்னு உனக்குப் பொறாமையா?" என்று அம்மாவைப் பார்த்துக் கண்ணடித்தாள்.
 "அடிச்சேன்னா பாரு. பள்ளிக்கூடத்துக்குக் கிளம்புற வழியைப் பாரு. என்னதான் பாட்டோ? சேச்சே!" என்று முணு முணுத்தவாறே, தன் துணிகளை எடுத்துக் கொண்டு குளிப்பதற்காகச் சென்றாள்.
 சாந்தா, அடுத்து ஒரு அரை மணி நேரத்தை, அலங்காரத்தில் செலவிட்டாள்.
 சீருடையை எடுத்து அணியப் போனவள், "நீ எண்ணைக்குத் தான்ம்மா புதுசா யூனிபார்ம் வாங்கித் தரப்போறே? போன வருடத்துத் துணியையே நான் போட்டுட்டுப் போக வேண்டியிருக்கு" என்று சிணுங்கினாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223073093
மனமே பற... பற...

Read more from R.Sumathi

Related to மனமே பற... பற...

Related ebooks

Related categories

Reviews for மனமே பற... பற...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனமே பற... பற... - R.Sumathi

    1

    ‘நான் தூங்கினேன்; வாழ்க்கை அழகுமிக்கது என்று கனவு கண்டேன். விழித்து எழுந்தேன்; வாழ்க்கை, கடமை நிறைந்தது என்று கண்டு கொண்டேன்.’

    - இந்தத் தத்துவ வரிகள் தான் ஞாபகம் வருகிறது - சாந்தாவையும், துளசியையும் பார்க்கும்பொழுது.

    முன்வரிகள் சாந்தாவிற்கும், பின்வரிகள் துளசிக்கும் பொருத்தமாக இருந்தன.

    இரவு கண் மூடியதிலிருந்து இன்னமும் இழுத்துப் போர்த்திக் கனவு கண்டு கொண்டிருந்தாள், சாந்தா.

    கனவு! அழகழகான கனவு!! வண்ண வண்ணக் கனவு. வயதுக் கேற்ற கனவு. சில நேரம் வயதுக்கு மீறிய கனவு. வாழ்க்கையை மீறிய கனவு.

    சூரியனை எழுப்பி விடுவதற்காக எழுந்தவளைப் போல் திடுக்கிட்டு விழித்து, அரக்க பரக்க எழுந்தமர்ந்து, கைக் கெட்டிய ஜன்னலை விலக்கி - தெருவைப் பார்த்தாள், துளசி.

    தெருவும் சாந்தாவைப் போலவே இருள் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கிடந்தது. வாசலில் நிற்கும் வேப்பமரத்தின் குருவிகள் கூட, துளசி எழுந்த ஓசை கேட்ட பின்பே விழித்துக் கொண்டு ‘காச்மூச்’சென கத்தத் தொடங்கும்.

    தெருக்கோடியில் குழாயடி அமைதியாக இருந்தது. அதுவும் அவள் சென்று, தன் குடத்தை வைத்த ஓசையிலே உயிர் பெறும்.

    அவிழ்ந்து கிடந்த கூந்தலை அள்ளி முடித்தாள். இரவு விளக்கின் வெளிச்சத்தில் சாந்தாவைப் பார்த்தாள்.

    அவளுடைய அழகு முகத்தில் ஆழ்ந்த தூக்கம் மிச்சமிருந்தது. அசைத்தாள், அருமை மகளை.

    சாந்தா... அம்மாடி சாந்தா... எழுந்திரும்மா.

    உம்... போம்மா... அவளுடைய கையைத் தட்டி விட்டு, குப்புறப்படுத்துக் கொண்டாள்.

    சாந்தா... தூங்கினது போதும். எழுந்து, முற்றம் தெளி. நான் போய்த் தண்ணீர் பிடிக்கிறேன். எழுந்திரு மறுபடியும் அசைத்தாள்.

    நீ போய்த் தண்ணி பிடி. நான் எழுந்துக்கிறேன். போ... சிணுங்கிக் கொண்டே தலையணையை இறுக அணைத்துக் கொண்டாள்.

    துளசி எழுந்தாள். கையில் குடத்தை எடுத்துக் கொண்டு, கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

    அவளுடைய காலடி ஓசையில், வேப்ப மரத்து குருவிகள் விழித்துக் கொண்டு, அவளுக்குக் காலை வணக்கம் சொல்வதைப் போல் குரல் கொடுத்தன.

    காலை நேரத்தில் கூட்டமாக அவைகள் எழுப்பும் சத்தமே அந்த வீட்டிற்கு சுப்ரபாதம்.

    தெருமுனைக்கு வந்து, குழாயடியில் ‘நங்’கென அவள் குடம் வைக்கும் சத்தம், அந்தத் தெருப் பெண்கள் அனைவரின் தலையிலும் யாரோ குட்டு வைத்து எழுப்பியதைப் போல் அரக்கப் பறக்க எழ வைத்தது.

    அடுத்த நிமிடமே எல்லா வீட்டு வாசல்களிலும் எவர்சில்வர், பித்தளை, பிளாஸ்டிக் குடங்கள் முளைத்து குழாயடியை நோக்கி நகர்ந்து வந்தன.

    எப்பவும் நீதான் முந்திக்கிறே. ஒரு நாளாவது நான் முதல்ல தண்ணி பிடிக்கணும்னு நினைக்கிறேன். முடிய மாட்டேங்குதே! அங்கலாய்த்தாள், எதிர் வீட்டு கனகா.

    ஆமா, துளசி என்ன நம்மளை மாதிரியா? இஷ்டத்துக்கு தூங்கி, இஷ்டத்துக்கு எழுந்துக்க. சீக்கிரமா எழுந்தாத்தான் வேலைக்குப் போக அவளுக்கு சரியாயிருக்கும் பார்வதி சொல்ல... பொறுக்கவில்லை, கனகாவிற்கு.

    ஆமா! அவளுக்கு என்ன பிக்கல் பிடுங்கல் இருக்கு! மாமியாரா, மாமனாரா, நாத்தனாரா? வெள்ளாத்தா வூட்ல நாலு இட்லி, வாங்கி, வாயில் போட்டுக்கிட்டு போனா கூட ஆச்சு. ஆனா, நம்மைப் பாரு. எந்த வழியிலும் நிம்மதி இல்லை புருஷன் ஒரு பிடுங்கள். பிள்ளை ஒரு பிடுங்கல். ஒண்ணுக்கும் புண்ணியமில்லாத மாமியார் - மாமனார் கெழங்கள் அலுத்துக் கொண்டாள், கனகா.

    பல்லுகூட துலக்காமல் வெற்றிலை - பாக்கைக் குதப்பிய படியே வந்த ருக்குமணி ஏன்டியம்மா... புடுங்கலையெல்லாம் வச்சுக்கிட்டிருக்கே? பேசாம கல்லைத் தூக்கிப் போட்டேன்னா அதது கதை முடிஞ்சிடும். அப்புறம், நீ எந்தத் தொல்லையும் இல்லாம இருக்கலாமில்லே காவிப் பல்லைக் காட்டி ‘கெக்கே பிக்கே’ என சிரித்த அவளைப் பார்க்க கனகாவுக்கு இன்னும் கடுப்பாக இருந்தது.

    ஒரு நாளைக்கு உன் தலையிலதான் கல்லைத் தூக்கிப் போடப் போறேன் பாரு... பதிலடி கொடுத்தாள், கனகா. அனைவரும் சிரித்தனர்.

    பெண்களின் சிரிப்பு, அதிகாலைக்கு தனி அழகு சேர்த்தது.

    பொழுது மெல்ல புலரத் தொடங்கியது.

    யாரிடமும் எதுவும் பேசாமல் புன்னகை ஒன்றை மட்டுமே சிந்தியவாறு குடத்தை இடுப்பில் சுமந்தபடி வீட்டுக்கு வந்தாள், துளசி.

    வாசல் இன்னும் பெருக்கப்படாமல் வேப்பிலை சருகுகளையும், வாடிய பூக்களையும் சுமந்து கிடந்தது.

    குடத்திலிருந்த நீரை ஒரு பெரிய தவலையில் ஊற்றியவள், மீண்டும் குரல் கொடுத்தாள்.

    சாந்தா... எழுந்திரிம்மா. எழுந்து வேலையைப் பாரு குரலில் சற்றே அதட்டலை கலந்து கூறிவிட்டு, மறுபடியும் குடத்துடன் தெருவுக்குப் போனாள்.

    இரண்டாவது குடம் தண்ணீரோடு அவள் திரும்பி வந்த போது, நன்றாகவே விடிந்து விட்டது.

    எல்லார் வீட்டு வாசலும் பெருக்கி, தெளிக்கத் தொடங்கவே... சற்றே கோபமாகக் கத்தினாள், துளசி.

    எத்தனைவாட்டி எழுப்புறது? ஒரு தடவை சொன்னா உறைக்காதா? வாசலைப் பெருக்கிட்டு, பாத்திரத்தையெல்லாம் துலக்கிறதுக்கு எடுத்துப் போடு.

    இரண்டாவதாகக் கொண்டு வந்த தண்ணீரையும் தவலையில் சரித்துவிட்டு, நடந்தாள். மூன்றாவது குடத்துடன் அம்மா வந்தபோது, எழுந்து உட்கார்ந்திருந்த சாந்தாவின் கைகளில் பாடப்புத்தகம்.

    என்னடி... வாசல் தெளிக்கலையா?

    எனக்கு இன்னைக்குப் பரிட்சை இருக்கு. படிக்கணும்.

    அம்மாவின் வாயை அடைக்கும் வழியை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள், சாந்தா.

    துளசி எதுவும் பேசவில்லை. அவளே விளக்குமாறுடன் வாசலுக்கு வந்தாள். பெருக்கத் தொடங்கினாள்.

    பக்கத்து வீட்டு வாசலில் பெரிய கோலம் ஒன்றை போட்டுக் கொண்டிருந்த பார்வதி, என்ன... சாந்தா இன்னும் எழுந்திரிக்கலையா? என்றாள்.

    எழுந்துட்டா, படிச்சுக்கிட்டிருக்கா.

    படிச்சா என்ன? கூடமாட உனக்கு ஒத்தாசை செய்துட்டு படிக்கக்கூடாதா? இன்னும் அவ என்ன சின்னக் குழந்தையா? பத்தாவது படிக்கிறா. காலையில எழுந்து, வீட்டு வேலைகளையும் செய்துட்டு, நீயும் வேலைக்கு ஓடணும். புருஷனை பறிகொடுத்துட்டு, ஒத்த பொம்பளையா நின்னு அவளை எவ்வளவு சிரமப்பட்டு நீ வளர்க்கிறே? இதையெல்லாம் அவ புரிஞ்சுக்கணும், துளசி.

    பக்கத்திலேயே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வதி, ஆதங்கத்துடன் குறைபட்டுக் கொண்டாள்.

    அவ சின்ன குழந்தைக்கா. அவளுக்கு என்ன தெரியும்? எல்லாம் போகப் போகத் தானா தெரியும்.

    குப்பைகளை மரத்தோரம் ஒதுக்கினாள்.

    இந்தக் காலத்துப் பிள்ளைங்களை மட்டும் சின்னக் குழந்தைன்னு நினைக்கவே கூடாது, துளசி. அதிலும், பொம்பளைப் புள்ளைக்கு ரொம்ப செல்லம் கொடுக்காதே! கண்டிஷனா வளரு. என்னைக்கிருந்தாலும் ஒருத்தன் வீட்டுக்குப் போற பொண்ணு எச்சரிக்கை செய்வதைப் போல் பார்வதி சொல்லிவிட்டுப் போனாள்.

    வாசல் வேலையை முடித்துவிட்டு உள்ளே வந்தாள், துளசி. அம்மா கடந்து போகும் நேரத்தில் பாடப்புத்தகத்தின் வரிகளை சத்தம் போட்டுப்

    Enjoying the preview?
    Page 1 of 1