Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அன்பு மலர்கள்
அன்பு மலர்கள்
அன்பு மலர்கள்
Ebook109 pages38 minutes

அன்பு மலர்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"என்னங்க... உங்க காபி ஆறிக்கிட்டிருக்கு. அப்படி என்ன யோசனை?" கேட்டபடியே கலாவதி கணவரின் அருகில் வந்து அமர்ந்தாள்.
 கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டியபடி யோசனையில் ஆழ்ந்திருந்த செல்லப்பா சுயநினைவுக்கு வந்தவராகக் காபியை எடுத்து உறிஞ்சினார்.
 "ஆறிப் போயிடுச்சா? நான் வேணா சூடா வேற கொண்டு வரட்டா?"
 "பரவாயில்லை, கண்மணி எங்கே?"
 "மாடியில் படிச்சுக்கிட்டிருக்கா."
 "அவளை என்னால் புரிஞ்சுக்க முடியலை."
 "என்னங்க இது...? நம்ம பொண்ணு அவ அவளைப் போய் உங்களால புரிஞ்சுக்க முடியலையா?"
 "வயசு ஏற ஏறக் குழந்தைங்க தாய் தந்தைன்னு இடையிலே திரையை உண்டாக்கிடறாங்க. மனசு பூரா ரகசியத்தை நிரப்பி வைச்சுக்கறாங்க."
 "புரியலைங்க. அவ மனசுல ரகசியம் இருக்கா?"
 "இல்லாமலா பொய் சொல்லுவா!"
 "என்ன பொய் சொன்னா? யார்கிட்டே பொய் சொன்னா?"
 "உன்கிட்டே. எங்கிட்டே. கம்பெனி முதலாளிகிட்டே." கலாவதி முகத்தில் நிற மாற்றம் செய்து கொண்டாள்.
 "புரியலைங்க."
 "வேலையை விட்டு நின்னதுக்கு நம்மகிட்ட என்ன காரணம் சொன்னா?"கேட்ட சம்பளத்தை முதலாளி கொடுக்கலைன்னு சொன்னா."
 "முதலாளிகிட்ட என்ன சொல்லியிருக்கா தெரியுமா?"
 "என்ன சொல்லியிருக்கா?"
 "வர்ற அஞ்சாந்தேதி எனக்கு நிச்சயதார்த்தம்னு..." இதைக் கேட்டு நொடியில் முகம் மாறினாள் கலாவதி.
 "என்ன சொல்றீங்க?"
 "இவ இப்படி திடுதிடுப்புன்னு வேலையை விட்டுட்டு வந்ததும், மன்னிப்புக் கேட்க நான் அவ கம்பெனிக்கு போன் பண்ணினேன் இல்லையா... அப்ப என் ஃபிரண்ட் சொன்னதைத்தான் நான் சொல்றேன்."
 கலாவதியின் முகம் வெளுத்தது.
 "ஏங்க இப்படிச் சொல்றா?"
 "அதான் சொன்னேனே! அவ மனசுல ஏதோ ரகசியம் இருக்கு. நம்மகிட்ட மறைக்கறா... உண்மையான காரணம் வேற ஏதோ இருக்கு."
 "அவளைக் கூப்பிடறேன். என்னன்னு கேட்போம்."
 "வேண்டாம். விடு... எந்தப் பிரச்சினையாயிருந்தாலும், அவளே முடிவு பண்றதுதான் சரி... நாம் மூக்கை நுழைக்க வேண்டாம். ஏதோ ஒரு காரணத்தால் அந்தக் கம்பெனியில அவளுக்கு வேலை பார்க்கப் பிடிக்கலை. அதான் விஷயமே."
 "என்ன காரணமாயிருக்கும்?"
 "அவ மனசு எதனாலேயோ பாதிக்கப்பட்டிருக்கு. இனிமே அந்த இடத்துக்குப் போகவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா. அதனால தான் அப்படி ஒரு பொய்யான காரணத்தைச் சொல்லி வேலையை விட்டுட்டு வந்திருக்கா. இல்லாட்டி அவளாவது... வேலையை விடறதாவது. அவளால் ஒரு நிமிஷம் கூட வீட்ல அடைஞ்சு கிடக்க முடியாது."
 கலாவதி கவலைப்பட்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223537229
அன்பு மலர்கள்

Read more from R.Sumathi

Related to அன்பு மலர்கள்

Related ebooks

Related categories

Reviews for அன்பு மலர்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அன்பு மலர்கள் - R.Sumathi

    1

    "கண்மணி..." கலாவதியின் குரல் அறைக்குள் நுழைந்ததுமே, சமையலறையில் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்துக் கொண்டிருந்த கண்மணி திரும்பினாள்.

    என்னம்மா...? என்றாள்.

    கண்மணி! இங்கே என்ன பண்ணிட்டிருக்கே?

    பாத்தா தெரியலையாம்மா? பாத்திரம் தேய்ச்சுட்டிருக்கேன்.

    அது தெரியுது. ஆபீஸ் போகலையா? மணியாயிட்டு.

    இல்லம்மா.

    ஏன்? லீவா?

    இல்லை…

    அப்புறம் ஏன் போகலை? கலாவதி கேள்விக் குறியுடன் புருவத்தைச் சுருக்கினாள்.

    வேலையை விட்டுட்டேம்மா.

    இதைக் கேட்டு முகம் மாறினாள் கலாவதி.

    ஏம்மா? எதுக்காக வேலையை விட்டே? ஆபீஸ்ல ஏதாவது பிரச்னையா?

    பாத்திரங்களைத் துடைத்து வைத்தவாறு சொன்னாள் கண்மணி.

    பிரச்னையெல்லாம் ஒண்ணுமில்லையம்மா... ரொம்ப அதிகமாக வேலை. முதுகு ஒடியுது. அதுக்கான சம்பளம் இல்லை. குறைச்ச சம்பளத்துக்கு எப்படிம்மா அதிகமாக உழைக்க முடியும்? சம்பளத்தை ஏத்தித் தரச் சொன்னேன். அந்தக் கம்பெனியோட பாஸ் ரொம்ப திமிரா பேசினார். இதான் சம்பளம். இஷ்டமிருந்தா வேலை பாரு... இல்லே, போயிக்கிட்டேயிருன்னார். எனக்கும் தன்மானம் இருக்குல்ல. அப்படியொன்னும் நாம கீழே கிடக்கலையே. சரிதான் போய்யான்னு வந்துட்டேன்.

    சரி... விடு... அதுக்காக வீட்டு வேலை செய்யணுமா? வேலைக்காரி எங்கே போனா?

    நான்தான் அவளை வேலையை விட்டு நிறுத்திட்டேன். கலாவதி முகத்தில் அதிர்ச்சியை வாங்கினாள்.

    என்னம்மா நீ?

    அம்மா! நான் வேலைக்குப் போகப் போறதில்லை. வீட்ல சும்மாதானே இருக்கப் போறேன். எதுக்கு வேஸ்ட்டா வேலைக்காரிக்குப் பணம் கொடுக்கணும். நானே செய்யறேன்.

    இது ரொம்ப நல்லாயிருக்குடி! உன் பேச்சைத் தண்ணியிலதான் எழுதணும். உன்னால வீட்ல ஒரு மணி நேரம் கூட உட்கார முடியாது. நாளைக்கு எங்க வேலை காலியிருக்குன்னு பார்த்து அப்ளிகேஷன் போட ஆரம்பிச்சுடுவே. அடுத்த ரெண்டு நாள்ல வேலைக்குப் போயிடுவே. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையா உன்னை நம்பி வேலைக்காரியை விட்டுட்டேன்னா, அப்புறம் என் பாடு திண்டாட்டமாயிடும்.

    கண்மணி அம்மாவின் பேச்சைக் கேட்டுச் சிரித்தாள்.

    அம்மா! பயப்படாதே! இனிமே நான் எங்கேயும் வேலைக்குப் போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.

    என்ன? உண்மையைத்தான் சொல்றியா?

    ஆமாம்மா நிஜமாவே நான் இனிமே வேலைக்குப் போகப் போறதில்லை.

    ஏன்?

    ப்ச் பிடிக்கலைம்மா. வேலைக்குப் போறது பரபரப்பாயிருக்கறது. ரொம்ப டென்ஷனாயிருக்கு. அமைதியா வீட்டிலயிருக்கணும் போலிருக்கு. காலாற நடந்து கோவிலுக்குப் போயிட்டு, விதவிதமா சமைச்சுப் பார்த்து, கத்துக்கிட்டு, அமைதியா புத்தகம் படிச்சுக்கிட்டு குழந்தைகளோட விளையாடிக்கிட்டு...!

    அடி, பொண்ணே...! இப்பவாவது கல்யாணம் பண்ணிக்கத் தயார்னு கோடிட்டுக் காட்டினியே... ரொம்ப தாங்க்ஸ்டி.

    மகளின் தோளில் ஆதரவாகக் கையை வைத்து, அசைத்துச் சிரித்தாள் கலாவதி.

    ஐயோ... என்னம்மா நீ? நான் என்ன அந்த அர்த்தத்திலேயா அப்படிச் சொன்னேன்?

    போடி! பாம்பின் கால் பாம்பறியும். ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத் தெரியாதா? அதுவும் ஒரு தாய்க்கு? முதல்ல இடத்தைக் காலி பண்ணு.

    நான் செய்யறேன்

    வேண்டாம் தாயே... நீ வீட்ல இருக்கப் போறது இன்னும் ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ? வேலைக்காரியை நிறுத்திட்டு இப்ப நீ வேலை செய்யலாம். ஆனா... கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டா நான்தானே கஷ்டப்படணும். போடி. போய் உன் வேலையைப் பாரு!

    ஐயோ... அம்மா. எனக்கு இப்ப ஒரு வேலையும் இல்லையே!

    அதான் சொன்னியே... புத்தகம் படிச்சுக்கிட்டு, குழந்தைகளோட விளையாடிக்கிட்டுன்னு... அக்கம் பக்கம் குழந்தையிருந்தா போய் விளையாடு.

    கலா... கலா... வெளியே கூடத்திலிருந்து கணவர் செல்லப்பாவின் குரல் கேட்க... வெளியே வந்தாள் கலாவதி.

    கண்மணி ஆபீஸ் போகலையா? மணியாகிட்டு..."

    உங்க செல்லப்பொண்ணு கேக்ற தொகையை அந்த பாஸ் கொட்டிக் கொடுக்கலையாம். அதனால் வேலையை ரிசைன் பண்ணிட்டாளாம்.

    அட...டா... நெஜமாவா?

    ஆமாம்பா... முதுகெலும்பு ஒடியற மாதிரி வேலை வாங்கறார். சம்பளம் மட்டும் நாய்க்கு எலும்பைத் தூக்கிப் போடற மாதிரி போடறார். சம்பளத்தை ஏத்திக் கொடுங்கன்னா, இஷ்டமிருந்தா வேலை பாரு... இல்லாட்டி நடையைக் கட்டுன்னு சொல்றார். சரிதான் போய்யான்னு வந்துட்டேன். எனக்குன்னு ஒரு தன்மானம் இருக்குல்ல...

    இங்க பாரும்மா... நீ செய்தது சரியில்லை.

    அப்பாவின் முகம் மாறுவதைக் கண்ட கண்மணி படபடவெனப் பொரிந்தாள்.

    என்னப்பா... என்ன செய்தது சரியில்லை? அவர் இஷ்டமிருந்தா வேலை பாரு... இல்லை நடையைக் கட்டுன்னு சொல்லுவார். அவர்கிட்ட வேலை செய்யணுமா?

    இப்படி எடுத்தோம்... கவிழ்த்தோம்னு ஒரு காரியத்தைப் பண்ணக் கூடாது. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசக்கூடாது. ஒரு இடத்துல வேலை செய்யறதுனால நமக்கு எவ்வளவு அனுபவம் கிடைக்குது. அதை யோசிச்சுப் பார்க்கணும். நீ எங்களுக்கு ஒரே பொண்ணு. நீ வாங்கிட்டு வர்ற சம்பளத்தை வச்சுத்தான் குடும்பம் நடத்தணுங்கிற நிலைமை இங்கே இல்லை. அப்படியிருக்கும் போது பணத்துக்காக நீ போராடுவது தப்பு.

    அதையேதாம்பா நானும் சொல்றேன். உங்க சம்பாத்தியமே பாங்க்ல... புள்ளை குட்டி பேரன் பேத்தின்னு தன் சந்ததியைப் பெருக்கிட்டிருக்கும்போது நான் எதுக்காக அவர் கொடுக்கற பிச்சைக்காரக் காசுக்கு நாயா உழைக்கணும்!

    ‘கண்மணி நீ என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே! வேற ஏதாவது காரணம் சொல்லி சுமுகமா விலகியிருக்கலாம். நீ வேலை பார்த்தது யாரோட கம்பெனியில? என் ஃபிரண்ட் மாதவனோட கம்பெனியில. அவன் உன்னோட துடுக்கத்தனமான செயலைப் பத்தி என்ன நினைப்பான்? எனக்கு அசிங்கமாயிருக்கு."

    அப்பா... சும்மா அதையே பேசிக்கிட்டு. விடுங்கப்பா. எனக்கு ஒண்ணு பிடிக்கலைன்னா, அதைப் பத்தி பேசக்கூட எனக்குப் பிடிக்காது.

    சொல்லிவிட்டுச் சரசரவெனத் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

    "பார்த்தியா உன் பொண்ணை. இவளுக்கு ஏத்தபடிதான் எல்லாரும் நடக்கணும்னு எதிர்பார்ப்பா... சகிச்சுக்கிட்டுப் போற தன்மையே கிடையாது. இவளுக்குக் கல்யாணம் பண்ணினா போற எடத்துல எப்படித்தான் குடித்தனம்

    Enjoying the preview?
    Page 1 of 1