Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தாய்ப் பறவை
தாய்ப் பறவை
தாய்ப் பறவை
Ebook114 pages42 minutes

தாய்ப் பறவை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு வழியாய் எல்லா பஞ்சையும் பொறுக்கி தலையணைக்குள் திணிப்பதற்குள் சாரதாவிற்கு போதும் போதுமென்றாகிவிட்டது. வியர்த்துக் கொட்டிய மேனியுடன் நிமிர்ந்த போது முதுகுத் தண்டு வலித்தது.
 கலங்கிய கண்களோடு கணவனைப் பார்த்தாள். அவளையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார்.
 அந்தப் பார்வை. அந்த முகம். அந்த உயரமான தோற்றம்... நாற்பத்தைந்து வயதுக்குரிய கம்பீரம்...
 அவளை நிலைகுலைய வைத்தது. பார்ப்பவர்கள் சித்தபிரமை பிடித்தவரென்று சொல்லக் கூடிய தோற்றமா இது.
 கையில் புத்தகங்களோடு முழுக்கை வெள்ளை சட்டைப் போட்டு இறுக்கக் கட்டிய டையும், கண்ணாடியுமாய் கம்பீரமாய் நடந்து கல்லூரிக்குள் அவர் வந்தால் பார்ப்பவர் அனைவரின் கையும் தானே உயர்ந்து வணக்கம் சொல்லும்.
 எப்படியிருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டார். எவ்வளவு கனவுகளோடும் கற்பனைகளோடும் அந்த அற்புதாப் பெண்ணை வளர்த்தார். அந்த கனவுகளுக்கெல்லாம் தானே தடையாய் இருப்பது இவருக்குத் தெரியுமா? நெஞ்சம் வேதனையில் வெடிக்க அவர் அருகே வந்தாள். அவரின் கையைப் பற்றினாள்.
 "வாங்க..." என அழைத்துப் போனாள். காலைக் கடமைகளை முடிக்க வைத்து அவரை வெளியே அழைத்து வருவதற்குள் மணி பன்னிரெண்டானது.
 உட்கார வைத்து இட்லியை சட்னியில் நனைத்து நனைத்து ஊட்டி விட்டாள். பன்னிரெண்டு மணிக்கு அவர் காலை சாப்பாடு சாப்பிட்டார். அவளும் காலையிலிருந்து சாப்பிடவில்லையாதலால் உட்கார்ந்து இரண்டு இட்லியை அவசர அவசரமாய் பிட்டு வாயில் போட்டுக் கொண்டாள்காலையில் தயிர் சாதம்தான் அற்புதா எடுத்தும் போயிருந்தாள். சாதம் இருந்தது. குழம்பு வைத்தால் போதும். காய்கறி நறுக்கத் தொடங்கினாள். கண்கள் மட்டும் கணவன் மேல் இருந்தது. செளந்தரபாண்டி சோபாவில் அப்படியே சிலைபோல் உட்கார்ந்திருந்தார்.
 இப்படித்தான் உட்கார்ந்தேயிருப்பார். திடீர் திடீரென கையில் ஏதாவது கிடைத்தால் அதை உடைத்து எடுத்து விடுவார். எதுவுமே பேச மாட்டார். ஏதாவது வேண்டுமென்றால் தானே அழுவார். வாயைத் திறக்க மாட்டார்.
 சாம்பார் வைத்து ஒரு பொரியல் செய்து அப்பளம் பொரித்து எடுத்து வைத்த போது வாசலில் கொலுசு சத்தம் கேட்க அற்புதா வந்து விட்டது தெரிந்தது.
 லேசான பயத்துடன் சமையலறையை விட்டு வெளியே வந்தாள்.
 உள்ளே நுழைந்த அற்புதாவின் பார்வை முதலில் சோபாவில் உட்கார்ந்திருந்த செளந்தரபாண்டியின் மேல் தான் விழுந்தது. மறுகணம் அவளின் முகம் அப்படியே சுருங்கி, சுருங்கிய முகத்துடன் அவரைக் கடந்து வந்தாள். செளந்தரபாண்டி அவளைப் பார்த்து சிரித்தார். அந்த சிரிப்பில் சின்னக் குழந்தையின் கள்ளமற்ற உள்ளம் தெரிந்தது. தன் ஹேண்ட் பேகை கழட்டி மேஜை மேல் போட்டு விட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
 சாரதா அவளுடைய ஹேண்ட்பேக்கை திறந்து டிபன் பாக்சை எடுத்தாள். கனத்தது. சாப்பிடவில்லை. டிபன் பாக்சை சமையலறையில் வைத்து விட்டு அவளின் அறைக்குள் வந்தாள்.
 பேனை போட்டுக் கொண்டு கட்டிலில் கிடந்தாள் அற்புதா. மெல்ல அவளின் அருகில் சென்று அமர்ந்தாள் சாரதா. அவளின் தோளைத் தொட்டாள்.
 "அற்புதா கொஞ்சம் சாப்பிடும்மா."
 "எனக்குப் பசியில்லை."
 "எனக்காக கொஞ்சம் சாப்பிடம்மா."
 சடாரென எழுந்தாள் அற்புதா. பிசாசைப் போல் கத்தினாள்"உனக்காக... உனக்காகத்தான் நான் ஆடிக்கிட்டிருக்கேன். எனக்காக... நான் நினைக்கிறபடி எதுவும் இல்லை. என்னை எதுக்காக இப்படி இம்சிக்கிறே. இதுவரைக்கும் வந்தவங்க என்னை உதாசீனப்படுத்துன மாதிரி இவங்களும் அவமானப்படுத்தப் போறாங்க. வேற என்ன நடக்கப் போவுது. இந்தப் பெண் பார்க்குற எழவே வேண்டாமின்னு எத்தனை தடவை சொல்றது. எனக்கு கல்யாணமும் வேண்டாம். ஒரு கருமாதியும் வேண்டாம். என்னை என் போக்குல நிம்மதியா இருக்க விடு."
 அவளின் பேச்சின் முடிவில் இருவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223977827
தாய்ப் பறவை

Read more from R.Sumathi

Related to தாய்ப் பறவை

Related ebooks

Related categories

Reviews for தாய்ப் பறவை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தாய்ப் பறவை - R.Sumathi

    1

    "இந்த இடம் ரொம்ப நல்ல இடம். போதுமான வசதி. பையன் உத்தியோகத்துல இருக்கான். ஆள் நல்லாயிருப்பான். இந்தாங்க... போட்டோ..."

    தரகர் எடுத்து நீட்டிய போட்டோவை தயக்கமாய் வாங்கினாள் சாரதா, பார்த்தாள்.

    பையன் தரகர் சொன்னதைப் போலவே நன்றாக இருந்தான். கலர் போட்டோவில் நல்ல கலராக இருந்தான்.

    பையன் பேர் என்னன்னு கேட்கலியே... பேரு சுரேஷ் பாபு. தங்கமான குணம். அம்மா அப்பா ரெண்டு பேரும் இருக்காங்க. பெண்ணோட போட்டோவைக் காட்டின உடனேயே அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுட்டு, பையன் என்கிட்ட தனியா வந்து கட்டுனா இந்தப் பொண்ணைத்தான் கட்டுவேன். ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லிட்டான் என்று சொல்லி விட்டு சிரித்தார். சிரித்தபோது ஆங்காங்கே அரைகுறையான பற்கள் எட்டிப் பார்த்தது.

    பக்கத்து அறைக்குள் அவசர அவசரமாய் தலைபின்னிக் கொண்டிருந்த அற்புதா அனிச்சையாய் திரும்பி ஜன்னல் வழியேப் பார்த்து விட்டு - எந்த உணர்வையும் வெளிப்படுத்தாத முகத்துடன் மறுபடி தலை சீவினாள்.

    சாரதாவின் முகம் வேதனையில் கருத்தது.

    அவங்க இன்னைக்கு மதியம் மூணு மணிக்கெல்லாம் வர்றாங்க பெண் பார்க்க. ரெடியா இருங்க. என்றார்.

    வந்து... அவள் ஏதோ சொல்ல வாயெடுத்த போது தோளில் தன் பேகை மாட்டியபடி அறையிலிருந்து வந்தாள் அற்புதா.

    நிமிர்ந்து பார்த்த சாரதாவிற்கு ஒரு கணம் உடலில் இனம் புரியாத சிலிர்ப்பு ஓடியது.

    அழகு தேவதையாய் நிற்கும் அவளைப் பார்க்கப் பார்க்க அடிவயிற்றில் பெற்ற வயிறு அப்படியே சுருண்டது. உடல் கூனிக் குறுகிப் போகிறது.

    நிலவை எடுத்து துடைத்து ஓவியன் கையில் கொடுத்து வரைந்து வாங்கிக் கொண்ட முகம். காதில் பெயருக்கு மினுக்கிய பொட்டளவு மொட்டு. நரம்பு போன்று சின்னதாய் நெளியும் செயின். கையில் வளையல் கூட இல்லை. இடக்கையில் வாட்ச் மட்டும். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தும் இலக்கிய வரிகளில் சொல்லப்பட்டதை போல் அடர்ந்த கூந்தல். பின்னி முடிப்பதற்கே ஒரு மணி நேரம் வேண்டும். இருபத்தைந்து வயதிற்கு செதுக்கிய உடல்வாகு. தழைய தழைய தழுவிய சேலை.

    அம்மா... போயிட்டு வர்றேன் குரலில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் சொல்லிவிட்டு தன்னை கடந்த மகளின் பின்னழகையும் கண்ணீர் ததும்பப் பார்க்கிறாள்.

    கருநாகம் முதுகில் அசைந்தாட சென்றாள் அவள்.

    சம்பிரதாயத்திற்கு கூட தரகரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

    பாப்பா... ஆபீசுக்குப் போவுதா? என்றார் தரகர்.

    ஆமா... என்றாள் சாரதா.

    சாரதா நீ கெட்டிக்காரி. பொண்ணை நல்லா படிக்க வச்சு வேலையும் வாங்கிக் கொடுத்திட்டே தரகர் பாராட்ட அரும்பியிருந்த கண்ணீர் கன்னத்தில் வழிய அதற்கு மேலும் நிற்க முடியாதவளைப் போல எதிர் இருக்கையில் அமர்ந்து முந்தானையால் விழிகளைத் துடைத்துக் கொண்டாள்.

    ஒரு பொண்ணுக்கு படிப்பும் வேலையுமா மன நிம்மதியைத் தருது. அவ கழுத்துல தாலி ஏறாதான்னு நான் ஏங்கிகிட்டிருக்கேன். வர்றவங்க கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டீங்களா? அவள் அப்படிக் கேட்கவும் தரகரின் முகம் வேதனைக்கு மாறியது..

    சாரதா. நாம ஏன் முன்னாடியே சொல்லணும்? அறிமுகமில்லாதவங்ககிட்ட இருக்குற குறையை மத்தவங்க பெரிசாத்தான் நினைப்பாங்க. அறிமுகமாகி ஒருத்தரை ஒருத்தர் புடிச்சுப் போயிட்டா அதைப் பெரிசா எடுத்துக்க மாட்டாங்க. முதல்ல வரட்டும். பேசட்டும். அப்புறம் மெதுவாக சொல்லலாம்.

    இதோட இருபதுக்கும் மேல தட்டிகிட்டுப் போயிட்டு. இந்த இடமாவது முடியாதான்னு தோணுது.

    முடியுமின்னு நினை. நம்பிக்கைத்தான் வாழ்க்கை. மூணு மணிக்கு தயாரா இருப்பீங்கள்ல.

    அவ எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தா. மதியம் போன் பண்ணி வரச் சொல்றேன்.

    சரி அப்ப நான் கிளம்பறேன்.

    இருங்க. டிபன் சாப்பிட்டுப் போகலாம் என்றவாறு உள்ளே சென்றாள்.

    தட்டில் இட்லி வைத்து சட்னி ஊற்றி எடுத்து வந்தாள்.

    தரகர் சாப்பிட ஆரம்பித்தார்.

    அவர் கிளம்பிப் போனதும் சாரதா சோபாவில் வந்து அப்படியே உட்கார்ந்தாள். மனம் கனத்துப் போனது.

    ‘இந்த இடம் முடியுமா? என் கண்மணிக்கு கல்யாணம் நடக்குமா? அதைக் கண்குளிரப் பார்ப்பேனா? என்ன குறைச்சல் என் தங்கத்திற்கு. அழகும் படிப்பும் இருந்து என்ன பயன்? எங்கள் வாழ்க்கையில் அந்த அசம்பாவிதம் மட்டும் ஏற்படாமல் போயிருந்தால் என் வைரம் இந்த நேரம் கணவன் வீட்டில் சந்தோஷமாய் இருப்பாளே.’

    ஊரில் உள்ள எல்லாப் பெண்களுக்கும் திருமணமாகி விட்டது. இவள் இன்னும் மற்றவரின் பச்சாதாபமான பார்வையில் சிக்கித் தவிக்கிறாள். அவள் மனம் என்ன பாடுபடும்? இப்பொழுது இருபத்தைந்து வயதாகி விட்டது. இளமை தன் ஓட்டத்தை துவக்கும் பருவம். இன்னும் இரண்டு வயதில் இருக்கும் இளமையும் அழகும் ஓடி ஒளிந்து விட்டால் இன்னும் சிரமம்.

    இந்த உலகில் யாருக்குமே இரக்கம் கிடையாதா? யாருமே ஒருவரிடத்தில் எத்தனை பிளஸ் பாயிண்ட் இருந்தாலும் மைனஸ் பாயிண்ட்டைத் தானே அலசி ஆராய்கிறார்கள்.

    அவள் வயதில் நான் அவளுக்குத் தாயாகி விட்டேனே. ஆனால் அவள் அந்த இன்பத்தையெல்லாம் அடைவாளா? இல்லை... இப்படியே முதிர்கன்னியாக இருந்து விடுவாளோ?

    நான் என்ன செய்வேன்? பெண்ணைப் பெற்று விட்டாலே தாய்க்கு கவலை. அதில் இப்படி கல்யாணம் ஆகாமல் இருந்தால் அதைவிட வேதனைகள் வேறென்ன?

    நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகள்.

    சோபாவில் சாய்ந்திருந்த அவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

    அவள் இன்னும் சாப்பிடவே இல்லை. பெற்ற வயிறு மகளைப் பற்றி எண்ணிக் குமுறியதில் பசியாவது ஒன்னாவது?

    அந்தப் பெண் முகத்தில் சிரிப்பு என்பதே இல்லையே. எப்படி சிரித்து விளையாடுபவள். வீடே அவளால் தானே கலகலப்பாய் இருக்கும். சிரிக்க சிரிக்க சினிமாவில் வரும் சிரிப்பு நடிகையைப் போல் வளைய வந்த அவள் அளந்து பேசும் அளவிற்கு மாறியது எதனால்? கல்யாண ஏக்கத்தால். பார்த்து பார்த்து விட்டுப் போகும் மனிதர்களால் ஏற்பட்ட வேதனையால். தன் குடும்பம் இப்படி ஆகிவிட்ட துன்பத்தால்.

    தன்னை ஒத்த மனிதர்கள் வாழும் ஆனந்த வாழ்க்கையைக் கண்டு நாளும் நாளும் சாவதால்...

    வேலைக்குப் போவதால் துன்பத்தை மறக்கலாம் என்று போகிறாள். ஆனால் அப்படிப் போவதால்தான் வேதனையே அதிகமாக வருகிறது. சந்திக்கும் மனிதர்களைப் பார்ப்பதால்...

    தன் மடியில் மழலைப் பேசி வளர்ந்து தனக்கே தோழி போல் அரட்டையடித்து சரிசமமாய் பழகிய தன்

    Enjoying the preview?
    Page 1 of 1