Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எனது மலர் மடியிலே...
எனது மலர் மடியிலே...
எனது மலர் மடியிலே...
Ebook138 pages48 minutes

எனது மலர் மடியிலே...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிவன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. வழக்கமான அமைதி மனதை விட்டு நீங்கியதைப் போலிருந்தது. காரணம் - ராணியம்மாள் காலையில் நடந்து கொண்ட விதம்தான்.
 லெட்சுமியும், கண்ணையனும் மீண்டும் மீண்டும் அவளது மனதை ஆக்கிரமித்த வண்ணமே இருந்தனர்.
 லெட்சுமி இல்லாத இடம் களை இழந்து போனதைப் போலானது. அதிலும் அபர்ணாவும், சோழனும் வெளியே சென்றபின் வீடு வெறிச்சோடிக் கிடந்தது.
 கோவிலுக்குப் போய்விட்டு வந்த மாமியாரும் காலை நீட்டிப் படுத்துவிட்டாள். லெட்சுமி போய்விட்டதால் வேலைகளும் அப்படி அப்படியே கிடக்க - மலைப்பாக இருந்தது. ஏதேதோ எண்ணங்கள் நெஞ்சை அழுத்த - வேலைகளை முடித்தாள். மாலை ஆனதுமே கோவிலுக்கு கிளம்பி வந்துவிட்டாள். இங்கும் மனம் அமைதி அடையவில்லை.
 அபர்ணா சொன்னதைப் போல் அவர்கள் அப்படியென்ன தப்பு செய்துவிட்டார்கள்? காதலித்தால் தவறா? எந்தக் காலத்தில் இருக்கிறார் அவர்?
 கூடவே, அபர்ணா பேசியதும் ஞாபகத்துக்கு வந்தது.
 'வேலைக்காரர்கள் காதலித்ததற்கே வேலையை விட்டுத் துரத்தி இருக்கிறார் என்றால்... நான் காதலித்தால் என்ன செய்வாங்க?'
 அபர்ணா கேட்ட கேள்வி இவளுக்குள் அதிர்ச்சியை மட்டுமல்ல... மெல்லிய பயத்தையும் உண்டுபண்ணியது.
 அபர்ணா ஏன் அப்படிச் சொன்னாள்? அப்படி அவள் யாரையாவது காதலித்தால் என்ன நடக்கும்? - நினைக்கும் போதே நெஞ்சம் நடுங்கியது.ராணியம்மாள் எந்த அளவிற்கு அன்பானவளோ... அந்த அளவிற்கு கண்டிப்பானவள். அவளுக்கு வீட்டுத் தரையிலிருந்து மனசு வரைக்கும் சுத்தம் வேண்டும். பெண் என்றால் அடக்க ஒடுக்கம் இருக்க வேண்டும். பணக்காரியாக இருந்தாலும், அதைவிட மானம் - மரியாதையைத்தான் பெரிதாக நினைப்பாள்.
 சுரபியை ஒருநாளும் மனம் நோகப் பேசியதில்லை. அவளது குடும்பத்தின் மீது அன்பும், மதிப்பும் வைத்திருந்தாள். சுரபியின் தங்கைகள் இருவரிடமும் பாசமாக இருப்பாள். அடிக்கடி பிறந்தகம் சென்றுவர அனுமதிப்பாள். தங்கைகளுக்கு துணிமணிகள் எடுத்துக் கொடுத்து அனுப்புவாள்.
 'அப்பா இல்லாவிட்டாலும் பெண்களை எவ்வளவு நல்லா வளர்த்திருக்காங்க உங்க அம்மா?' என மனம் விட்டுப் பாராட்டுவாள். குற்றம் குறை சொல்லும் மாமியார்கள் மத்தியில் ராணியம்மாளின் இந்தப் பண்பு, சுரபிக்கு நேசத்தை அதிகரிக்கச் செய்தது.
 அவள் சிலிர்க்காத நாளில்லை. கடவுளுக்கு நன்றி சொல்லாத பொழுதில்லை.
 சோழன் மட்டுமென்ன... எதிர்பார்த்த மாதிரி பெண் கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்ததை நல்லபடி ஏற்றுக்கொண்டான்.
 நிறைய படித்த - இன்றைய உலகம் தெரிந்த தனக்கு சரிசமமாக மனைவி அமையாவிட்டாலும், அதற்காக வருத்தப்படவில்லை. அம்மாவின் விருப்பமே தன் விருப்பம் என வாழ்பவன்.
 கணவனைப் பற்றி நினைக்கும்போது அவளுக்குப் பெருமையாக இருந்தது. ஆனால், அபர்ணாவைப் பற்றி நினைத்தால் கலவரமாகத் தெரிந்தது.
 'அபர்ணா மனதில் எந்த சஞ்சலமும் வரக்கூடாது. வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை மணக்க வேண்டும். காதல் விஷயத்தில் அவள் விழுந்துவிடக் கூடாது' என்பதே சுரபியின் அன்றைய பிரார்த்தனையாக இருந்தது.
 பூஜை முடிந்து வீட்டிற்குக் கிளம்பியபோது, பின்னால் இருந்து அந்தக் குரல் கேட்டது.
 "ஹலோ..."திரும்பினாள். அவளைப் போலவே கையில் பூஜைக் கூடையுடன் ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள். அவளுடைய வலது கையில் ரோஜாப்பூ.
 "உங்க கூடையிலே இருந்து விழுந்துச்சு" என்று அதை நீட்டினாள்.
 நன்றி சொல்லி வாங்கிக் கொண்ட சுரபி, அதைத் தன் கூந்தலில் சொருகிக் கொண்டாள்.
 இருவரும் இணையாக நடந்தனர். அந்தப் பெண்ணை அடிக்கடி கோவிலில் பார்த்திருக்கிறாள் சுரபி.
 "உங்களைப் பார்த்திருக்கேன். வீடு பக்கத்துலதானா?" என்றாள்.
 "ஆமாம்."
 "உங்க பேர்...?"
 "பானு."
 "நல்ல பெயர். வேலை பார்க்கிறீங்களா?"
 "ஆமா! ஒரு கம்பெனியில கிளார்க்கா இருக்கேன்!" என்றவள், "நீங்க...?" என்றாள்.
 "என் பெயர் சுரபி. வேலை எதுவும் பார்க்கலை. என் கணவர் நல்ல வேலையில இருக்கார்."
 "குழந்தைங்க?"
 சுரபி சற்றே வெட்கத்துடன், "இன்னும் இல்லை. கல்யாணமாகி ஒரு வருஷம்தான் ஆகுது" என்றாள்.
 "அப்படியா... அப்ப - அவசரம் ஒண்ணுமில்லை. மெதுவா பெத்துக்கலாம்" என்று பானு சிரித்தாள்.
 "உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?"
 "ஒரே பெண்தான். நாலாவது படிக்கிறா..."
 "கணவர்?"
 "அவரும் ஒரு தனியார் கம்பெனியிலதான்..."
 இருவரும் பேசிச் சிரித்தபடியே கோவிலை விட்டு வெளியே வந்து, சாலையில் நடந்தனர்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223203445
எனது மலர் மடியிலே...

Read more from R.Sumathi

Related to எனது மலர் மடியிலே...

Related ebooks

Related categories

Reviews for எனது மலர் மடியிலே...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எனது மலர் மடியிலே... - R.Sumathi

    1

    அன்றைய காலைப்பொழுதை அழகான கோலம் போட்டு வரவேற்றாள் சுரபி.

    வாசலை அடைத்த கோலத்தை தன்னை மறந்து ரசித்தவளின் மனதில் பளிச்சென அம்மா வந்து போனாள். ‘அம்மா... உன்னுடைய வாழ்க்கையும் இந்தக் கோலத்தைப் போல்தானே சிக்கலாகிப் போனது’ - கையில் கோலமாவுக் கிண்ணத்துடன் ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டாள்.

    பால்கனியிலிருந்து அபர்ணா குரல் கொடுத்தாள்.

    அண்ணி... கோலம் சூப்பர்.

    நிமிர்ந்து பார்த்தாள் சுரபி. மார்போடு அணைத்த புத்தகத்துடன் அபர்ணா.

    அதே நேரம் ‘வாக்கிங்’ வந்த ராணியம்மாள், மாடியில் நின்ற மகளைப் பார்த்தாள்.

    வெறுமனே பாராட்டினா மட்டும் போதாது. மத்தவங்ககிட்டே இருந்து திறமையைக் கத்துக்கணும். ஒரு நாலு புள்ளிக் கோலம் கத்துக்கிட்டா போற இடத்துல மானம் போகாம இருக்கும்.

    அம்மா, இந்தக் கம்ப்யூட்டர் யுகத்துல உலகம் எவ்வளவோ மாறிப் போயிட்டு. நீ இன்னும் கோலம் போடறதைப் பத்திப் பேசறே?

    உலகம் மாறினாலும் கம்ப்யூட்டர்ல கோலம் போட முடியுமே தவிர கம்ப்யூட்டரே வாசலில் வந்து கோலம் போடாது.

    போதும்... ஆளை விடுங்க. எனக்கு இன்னைக்குப் பரீட்சை இருக்கு. நான் படிக்கணும்.

    ராணியம்மாள் உள்ளே வந்தாள்.

    சுரபி, ரொம்பக் களைப்பா இருக்கு. சீக்கிரமா காப்பி கொண்டா.

    இதோ கொண்டு வர்றேன் அத்தை - சுரபி அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

    ராணியம்மாள் சோபாவில் அமர்ந்தாள். காப்பியுடன் வந்தாள் சுரபி.

    இந்தாங்க அத்தை.

    வாங்கிக் கொண்ட ராணியம்மாள், சுரபி... வேலைக்காரி லெட்சுமி வந்துட்டாளா? என்றாள்.

    இன்னும் வரலை அத்தை. இப்ப வந்துடுவா! - சுரபி சொன்ன அதே நிமிடம் - படி ஏறிக் கொண்டிருந்தாள் லெட்சுமி. அபர்ணாவைவிட அவள் இரண்டு வயது மூத்தவள். கருப்பாக இருந்தாலும் அழகாக இருந்தாள்.

    அவள் உள்ளே நுழைந்ததுமே ராணியம்மாள், தன் கம்பீரமான குரலில் அழைத்தாள்.

    லெட்சுமி... இங்க வா. அவள் எதிரே வந்து நின்றாள்.

    சொல்லுங்கம்மா...

    நீ நாளையிலேர்ந்து வேலைக்கு வரவேணாம்.

    கட்டளையைப் போல் வந்த அந்த வார்த்தைகளை லெட்சுமி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

    சுரபிக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது. லெட்சுமி செய்யும் வேலையை திருந்தச் செய்வாள். சுரபி - அபர்ணாவிடம் சகோதரியைப் போல் பழகுவாள். ராணியம்மாவிடம்தான் பயம்.

    இன்னும் சொல்லப்போனால், இதுவரை அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாகவே இருந்தாள் லெட்சுமி. திடீரென வேலையை விட்டு நிற்கச் சொன்னதும் திகைப்பாக இருந்தது.

    அம்மா... எதுக்கு என்னை வேலையை விட்டு நிறுத்தறீங்க? - சற்று கோபமாகவே கேட்டாள் அவள்.

    இந்தக் கேள்வியெல்லாம் எனக்குத் தேவையில்லை. வேலையை விட்டு நின்னுக்கன்னு சொன்னா நின்னுக்க. சுரபி, இவளுக்கு இன்னைய தேதி வரைக்கும் கணக்கை செட்டில்’ பண்ணி அனுப்பிவிடு.

    அதெல்லாம் முடியாதும்மா. எனக்குக் காரணம் வேணும். இத்தனை வருஷத்தில் என் வேலையில என்ன குறை கண்டீங்க... சொல்லுங்க.

    குறைதானே வேணும். இப்ப சொல்றேன். சுரபி, டிரைவர் கண்ணையனைக் கூப்பிடு.

    சுரபிக்கு இன்னும் அதிர்ச்சி கூடியது. ‘அவன்தான் லெட்சுமியைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் போட்டுக் கொடுத்திருப்பானோ?’

    சந்தேகமாக வாசலுக்கு வந்தவள் - காரைத் துடைத்துக் கொண்டிருந்த கண்ணையனை அழைத்தாள். ராணியம்மாள் கூப்பிடுவதாகச் சொன்னதும், பணிவுடன் அங்கே வந்து நின்றான்.

    அம்மா... கூப்பிட்டீங்களா?

    ராணியம்மாள் அவனை ஒருமுறை ஏறிட்டுவிட்டு, சுரபியைப் பார்த்தாள்.

    சுரபி, இவன் கணக்கையும் சரி பார்த்து பணத்தைக் கொடுத்துடு. கண்ணா... நீயும் நாளையிலே இருந்து வேலைக்கு வர வேண்டாம்.

    சுரபிக்கு இது மேலும் திகைப்பாக - மாமியாரைப் பார்த்தாள்.

    கண்ணையன் கலவரம் பூசிய விழிகளுடன் நின்றான்.

    ராணியம்மாள் நடுக்கமாக நின்ற லெட்சுமியைப் பார்த்தாள்.

    இப்ப என்ன காரணம்னு உனக்குப் புரிஞ்சிருக்குமே?

    சுரபி எதுவும் புரியாமல் அனைவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

    லெட்சுமி தலை குனிந்தாள்.

    லெட்சுமி... சுரபியைப் பாரு. எதுவும் தெரியாம முழிக்கிறா. என்ன காரணம்னு சொல்லேன். அவளும் தெரிஞ்சுக்கட்டும்.

    லெட்சுமி அமைதியாக இருக்கவே - ராணியம்மாள் எழுந்தாள்.

    நானே சொல்றேன், சுரபி. இதுங்க ரெண்டையும் நாம வேலைக்கு வச்சா, ஒழுங்கா வேலையைப் பார்க்காம ஒருத்தரை ஒருத்தர் பார்க்கறதும்... சிரிக்கிறதும்... விளையாடுறதுமா இருக்குது. இதுக்குத்தான் நாம சம்பளம் கொடுக்கிறோமா?

    கண்ணையன் தைரியமாகவே பேசினான்.

    அம்மா, நாங்க காதலிக்கிறது உண்மைதான். கல்யாணம் செய்துக்கலாம்னு இருக்கோம். பெரியவங்களா இருந்து எங்க காதல் கல்யாணத்துக்கு ஆசீர்வாதம் செய்யாம, இப்படி வேலையை விட்டு நிறுத்துறீங்களேம்மா?

    "என்ன ஆசீர்வதிக்கணுமா? என்னைப் பொறுத்தவரை இந்தக் காதல் கண்றாவியெல்லாம் ஒழுக்கக்கேடான விஷயம். இந்த வீட்ல வயசுப் பொண்ணு ஒருத்தி இருக்கா.

    அவ எதிரே நீங்க ரெண்டு பேரும் இப்படித் தப்புத்தாளம் பண்ணிக்கிட்டிருந்தா அவ மனசு கெட்டுடாதா? அதான் இந்த முடிவு."

    ராணியம்மாள் குரலை உயர்த்திக் கத்த - இருவரும் மிரண்டு போய் வெளியேறினர்.

    அதே நேரம் மாடியில் இருந்து வந்த அபர்ணா அத்தனையையும் கேட்டு விட்டாள். அவளுடைய முகம் ஏனோ நிறமிழந்து போனது.

    லெட்சுமிக்கும், கண்ணையனுக்கும் அன்றைய தேதி வரைக்குமான சம்பளத்தைக் கொடுத்தபோது சுரபிக்கு நெஞ்சை அடைத்தது.

    லெட்சுமிக்காகவோ, கண்ணையனுக்காகவோ அவளால் வாதாட முடியாது. எல்லா விஷயங்களிலும் கண்டிப்பான ராணியம்மாளுக்கு மகன் சோழனும், அபர்ணாவுமே பயந்து பின்வாங்கும்போது மருமகளான அவள் எம்மாத்திரம்?

    கண்கலங்கிச் சென்ற லெட்சுமியின் முகம் நெஞ்சை அழுத்த - சுறுசுறுப்பு இல்லாமல் சமையலறைக்குள் நுழைந்தாள் சுரபி. ராணியம்மாள் எந்தவித உறுத்தலும் இல்லாமல் குளித்து முடித்துக் கோவிலுக்குப் போய் விட்டாள்.

    சிற்றுண்டிக்காக அபர்ணாவும், சோழனும் சாப்பாட்டு மேசைக்கு வந்தபோது லெட்சுமி, கண்ணையன் இருவரைப் பற்றிய பேச்சு எழுந்தது.

    அண்ணா... இந்த அம்மா ஏன் இப்படிப் பண்ணுறாங்க? கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாம... ச்சே!

    சோழன், தங்கையைப் பார்த்தான்.

    அம்மா சுபாவம்தான் தெரிஞ்ச விஷயமாச்சே? எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன். என்ன பண்ணுறது? ஏதாவது கேட்டா அவங்களுக்குக் கோபம் வந்துடுது! - விழிகள் பனிக்க அவளைப் பார்த்தான்.

    உணவு பரிமாறிய சுரபிக்கு கை நடுங்கியது. கையில் பிடித்திருந்த கரண்டியில் இருந்த சாம்பார் தளும்பி, மேசையில் சிந்தியது. அபர்ணா இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். கேலியாகச் சிரித்தாள்.

    என்ன ரெண்டு பேரும் பேய்முழி முழிக்கிறீங்க?

    அபர்ணா, நீ யாரையாவது... - சுரபி மென்று விழுங்கினாள்.

    காதலிக்கிறேனான்னுதானே கேட்கறீங்க? இதுவரைக்கும் இல்லை. நாளைக்கே என் மனதைக் கவரும் ராஜகுமாரன் என் எதிரே வந்து நின்னா, நான் காதல்ல விழாம என்ன செய்வேன்? விழுந்துட்டா...?

    உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கா? - சோழன் கேட்க,

    என்னை என்ன உன்னை மாதிரி நினைச்சியா? என அபர்ணா பதிலுக்குத் தாக்க, சுரபி சந்தேகமாகக் கணவனைப் பார்த்தாள்.

    அபர்ணா, உங்க அண்ணன் கல்யாணத்துக்கு முந்தி யாரையாவது காதலிச்சாரா? அம்மாவுக்குப் பயந்து என் கழுத்துல தாலி கட்டினாரா?

    அபர்ணா... பார்த்தியா? உன்னால வீணா குடும் பத்துல குழப்பம் உண்டாகுது.

    "அண்ணி, அண்ண னாவது... காதலிக்கிறதாவது? சரியான பயந்தாங்கொள்ளி. ஆனா, மனசுல பயங்கர ஆசை. அதிகம் படிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும். பொண்டாட்டி வேலைக்குப் போகணும்.

    Enjoying the preview?
    Page 1 of 1