Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enna Theril Aval
Enna Theril Aval
Enna Theril Aval
Ebook205 pages2 hours

Enna Theril Aval

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580114201888
Enna Theril Aval

Read more from Hamsa Dhanagopal

Related to Enna Theril Aval

Related ebooks

Reviews for Enna Theril Aval

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enna Theril Aval - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    எண்ணத் தேரில் அவள்

    Enna Theril Aval

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books
    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    எண்ணத் தேரில் அவள்

    ஹம்சா தனகோபால்

    என்னுரை

    இலக்கிய உலகில் மிகச் சிறந்த இலக்கியங்கள் எனப் போற்றப்படுபவை எல்லாம் உள்ளம் உருகிக் கண்ணிர் பெருக்கிக் கரைந்து நினைந்து நினைந்து படைக்கப்பட்டவைகளாகத்தான் இருக்கவேண்டும்.

    கவிஞனே எழுத்தாளனோ யாராக இருக்கட்டும், அவர்கள் உள்ளம் உருகிக் கரைகையில் அங்கு உன்னதமான இலக்கியம் சிருஷ்டிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட இலக்கியங்கள் சாகா வரம் பெற்றவை.

    என்னுள் நானே மெலிந்து கரைந்து கண்ணிர் பெருக்கிப் படைத்ததுதான் இந்த ‘எண்ணத் தேரில் அவள்’ இதில் வரும் நாயகியான ஜெயலக்ஷ்மி பெண் குலத்தின் ஒர் அங்கம். களங்கமற்ற அவள்மீது ஆபாசங்கள் வலிந்து திணிக்கப்படுகின்றன. எதற்காகப் பயந்து எதைக் காத்துக்கொள்ள அவள் நட்ட நடுநிசியில் ஓடிவருகிறாளோ அதே பள்ளத்தில் அமிழ்ந்து இழந்து. அவள் இழக்காதது வாழ்க்கையில் ஒன்றுமேயில்லை.

    இருப்பினும் அவள் நெஞ்சம் அவளுக்குத் துணையாகிறது. அதில் சதா எண்ணங்கள்; எண்ணங்கள். அதுவும் சராசரி மனத்துக்கும் மேலாக, தன் வாழ்க்கையில் குறுக்கிட்ட நபர்களின் குறுகலான மனங்களைப் பார்த்துச் சிரிக்கிறாள். வயிறு sவலிக்கச் சிரிக்கிறாள். துன்பங்கள் துரத்துகின்றன. வாழ்வு, பிரச்னையாகிறது. ஓவென்று கதறி அழவேண்டும் எனத் துடிக்கிறாள். கண்கள் மறுக்கின்றன.

    ஒரு பேதைப் பெண்ணின் அவல வாழ்க்கையின் ஒரு பகுதி தான் இந்த நாவல். என்னுடைய எல்லா நாவல்களிலும் இது தனித்துவம் பெற்றது.

    காலம் காலமாகப் பெண்ணினத்தை அடிமைப்படுத்தி விலைப்பொருளாக்கி வேடிக்கை பார்க்கும் இவ்வுலகம் என்றேனும் அவளுக்காக, அவளுடைய உணர்வுகளுக்காகக் கண்ணிர் சிந்தி வளமான வாழ்வை அவளுக்குத் திறந்து விட்டால் தெய்வங்கள் இங்கே மண்ணில் தோன்றிவிடும்.

    கட்சிகள் மாறுகின்றன. அரசியல் அரியாசனத்தில் பெருந்தலைகள் வந்து வந்து போகின்றன. நகரந்தோறும் கிராமந்தோறும் எரியும் சிகப்பு விளக்குகளை யாரும் அணைக்கக் காணோம். பெண்ணாகப் பிறந்துவிட்டதாலே பெருமைப்பட வேண்டியவள் சிறுமை கொண்டு நிற்கிறாள்.

    அப்படிப்பட்ட பேதைகளின் வாழ்வை வளப்படுத்தாத வரை பெருந்தலைவர்கள் ‘நாளைய முன்னேற்றத்திற்கு இன்று பாதை அமைத்துவிட்டோம்’ என்று பெருமைப்படுவதில் என்ன பொருள் இருக்கிறது?

    இதனைப் படிக்குங்கால் யாரேனும் உள்ளம் உருகிக் கண்ணிர் பெருக்கினால் அது என் எழுதுகோலுக்கு அவர்கள் அணிவிக்கும் விலைமதிப்பற்ற முத்துக்கள்.

    இப்படிப்பட்ட நாவலைப் படைப்பில் கொண்டு வந்ததற்காக நான் சாடப்படலாம்; சபிக்கப்படலாம். யார் பேசினலும் யார் ஏசினலும் இப்படிப்பட்ட நாவல் படைத்ததற்காகவே நான் பெருமைப்படுகிறேன்; உள்ளம் நிறைகிறேன்.

    மீண்டும் என் எழுத்துக்களை அச்சில் பிறக்க வைத்துள்ள என் மதிப்பிற்குரிய திரு. செல்லப்பன் அவர்களுக்கும், மீனுட்சி புத்தக நிலையத்தார் அவர்கட்கும் என்றும் என் இதயங்கனிந்த நன்றிகள்.

    1

    கண்ணுடியில் பார்த்துத் திலகத்தைச் சரிப்படுத்தியபடி, வெள்ளையம்மா, வெள்ளையம்மா எனக் குரல் கொடுத்தேன்.

    வரலாமா வேண்டாமா எனத் தயங்கிக்கொண்டு வெள்ளையம்மாள் அறையில் தலையை மட்டும் நுழைத்து எட்டிப் பார்த்தாள். நான் ஒப்பனை செய்துகொள்ளும்போதோ, படுக்கையறையில் இருக்கும்போதோ, குளியலறையில் இருக்கும்போதோ அவளை அழைத்தால் வரமாட்டாள். அவளுக்கு அவளே போட்டுக்கொண்ட கட்டுப்பாடா இது?

    நான் இதுபற்றி அவளிடம் பேசியது கிடையாது.

    என்னம்மா, கூப்பிட்டிங்களா? அவளுடைய கரிய முகத்தில் கண்கள் சந்தேகத்துடன் அலைபாய்ந்தன. பின்னங் கொசுவமிட்ட சேலை, கால்களில் பெரிய வெள்ளித் தண்டை. கைகளிலும் வெள்ளிக் காப்பு. சிறையிடப்படாமல் சேலைக்குள் பதுங்கிப் பறைசாற்றும் பெண்மை, அளவான தேகம். முகம் கறுப்பானலும் ஒரு கவர்ச்சி. அள்ளி முடித்த கூந்தல், கழுத்தில் மஞ்சள் காணாது கறுத்துப்போன தாலிக் கயிறு.

    என் பார்வையில் அவள் நெளிந்தாள்.

    காஸ் அடுப்பிலே குக்கர் வச்சிருக்கேன். இறக்கிடு. தலை ஈரமா இருக்கு, காய வெச்சுக்கப் போறேன்.

    சரிம்மா. என் பார்வையிலிருந்து பறந்துவிட்டாள். சிரித்துக்கொண்டேன்.

    என்னிடமிருந்து ஒதுங்குகிறாளா? அவளுக்கு என் பணம், உணவு வகைகள், உடைகள் எல்லாம் வேண்டும். ஆனல்.

    அடிஸ் பிரஷ்ஷை எடுத்து நீண்டு அடர்ந்த கூந்தலில் செருகியபடி மாடிப் படிகளில் ஏறினேன்.

    மாடியில் நின்று காலை இளம் வெயிலில் நனைந்தபடி கூந்தல் சிக்கைப் பிரிக்கலானேன். தோட்டத்தில் சுற்றி நின்ற செம்பருத்திச் செடிகளும், கொய்யா, மாதுளை, பவழமல்லிகை, மகிழம்பூ மரங்கள் நேற்றிரவு பெய்த மழையில் நீராடி, பச்சைப் பசேல் எனக் கண்களைப் பறித்தன. காம்பவுண்டில் மண் அழுந்தி... இந்த வெள்ளையம்மாளுக்குத்தான் எத்தனை கை லாகவம்.

    எவ்வளவு பெரிய கோலத்தை மயிரிழை தவறாமல் சரியாக இழுத்து முடித்திருக்கிறாள்! இத்தனை பெரிதாக இப்படிப் பொறுமையாக என்னால் போட முடியுமா?

    அம்மாவுக்கு நான் கோலம் போட்டாலே பேருமை. அக்கம் பக்கத்துப் பெண்களிடம், எங்க ஜயா மாதிரி யாருக்குப் புள்ளிக் கோலம் இத்தனை அழகா வரும்? என்பாள். நான் நன்றாகச் செய்யாவிட்டால்கூட அம்மாவுக்கு என் செயல்களில் அசாதாரணமான திறமை புலப்படும். அம்மா கொடுத்த செல்லமும் சுதந்தரமும்தான்...

    ஜயா...., அடி ஜயா பக்கத்துப் பங்களாவில் ஓங்கி உரத்து ஒலித்தது அந்தக் குரல்.

    திடுக்கிட்டேன். என்னையா? என் அம்மா அழைக்கும் அதே பாணி. அதே குரல். கண்களைத் தீட்டிக்கொண்டு பார்த்தேன்.

    மாடியில் துணிகளை உலர்த்திக்கொண்டிருந்த பதினாறு பதினேழு வயது இளம் பெண், இதோ வந்துட்டேன், அத்தே என்று கீழே எட்டிப்பார்த்துக் கூவினள்.

    மனம் பரபரக்க அந்தச் சிறு பெண்ணைப் பார்த்தேன். அவளும் அதே நேரத்தில் என்னைப் பார்த்தாள். நான் செயலற்று இருக்கும்போதே பற்கள் தெரியும்படி நளினமற்றுச் சிரித்துப் பெரிய பெரிய கண்களை மூடித் திறந்தபடி வெட்கத்துடன் நனைந்த தாவணி பாவாடையை இழுத்துவிட்டபடி படிகளில் இறங்கினாள்.

    நேற்றும் இப்படித்தான். லாரியில் சாமான்கள் வந்து வரிசையாக இறங்கிக்கொண்டிருந்தன. இந்தச் சிறு பெண் சிறு பெட்டியை அணைத்துக்கொண்டு ‘திருதிரு’வென விழித்தபடி காரிலிருந்து இறங்கியது. அவளைத் தொடர்ந்து மடிசார் புடவையும் மழிக்கப்பட்ட தலையில் முக்காடுமாக ஒரு வயோதிக ஸ்திரி. அதையடுத்து அந்தப் பெண்ணின் தந்தையாக இருக்குமோ? ஒரு ஆபீஸர் தோற்றத்தில் கண்களில் கண்ணாடி, வற்றலான தேகம், தலை வழுக்கை.

    வேறு யாரையும் காணோம். வெள்ளையம்மாளைக் கேட்டேன். ஊருக்குப் புதிதாக மாற்றப்பட்ட கமர்ஷியல் டாக்ஸ் ஆபீஸராம். இதற்குமுன்கூட அந்தப் பங்களாவில் ஒரு கமர்ஷியல் டாக்ஸ் ஆபீஸர்தான் குடியிருந்தார். அந்த ஆபீஸரின் மனைவி கடுமையானவள். என்னைப் பார்த்தால் முகத்தைத் தோள்பட்டையில் இடித்துக்கொள்வாள்.

    அவள் புருஷன் மாடிப்பக்கம் வந்தால் போதும். ஏன்னா அங்கே என்ன செய்றேள்? கீழே வாங்கோன்னா. கலி முத்திண்டு வரது. கண்ட கண்ட பீடைகள் மூஞ்சியிலே முழிக்க வேண்டியிருக்கு என என் காதுகளில் படவேண்டும் என்றே உரக்கப் பேசுவாள்.

    எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வரும். இவள் இருக்கும் அழகிற்கும், இவள் புருஷன் இருக்கும் அழகிற்கும் இரண்டு யானைக் குட்டிகளைப் பார்ப்பதைப் போலிருக்கும். அந்த அம்மாவுக்கு மூன்று குழந்தைகள்: மூன்றும் பெண்கள். எல்லாம் அம்மா அப்பாவைப் போலவே! இதுகள் கல்யாணம் ஆகிப்போய் .இதே மாதிரிப் பாரம்பரியம் தொடருமோ? என் சிரிப்பில் பயமும் தோன்றும். எப்படி இந்த அம்மாள் இந்த உடம்போடு இத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொண்டாள்?

    குக்கரை இறக்கிட்டு அடுப்பை அனைச்சுட்டேன்மா. வெள்ளையம்மாள் குரல் கொடுத்தாள்.

    சரி...சரி... இதோ வரேன். சொன்னதைச் செய்கையில் காட்டவில்லை.

    பெரிதாக இழுக்கப்பட்ட சப்தம், பக்கத்து மாடியைப் பார்த்தேன். ஈரத் துணிகளுக்குக் கிளிப்ஸ் போட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞன் என்னையே பார்த்துக்கொண்டு சிலையாகி நின்றிருந்தான்.

    அந்தப் பெண்ணின் சாயல் இளைஞனின் முகத்தில் நன்கு தெரிந்தது. நல்ல உயரம். ஒல்லியான தேகம். ஒல்லியாக இருப்பதாலேயே உயரமாக இருப்பதைப் போன்ற தோற்றம். குழந்தை முகத்தில் யாரோ மீசையை வெட்டி ஒட்டவைத்ததைப் போலிருந்தது. எதையோ தேடும் கண்கள். பார்க்கும் போதே ஒர் ஆழமான பார்வை.

    அவன் கண்களில் பதிந்திருந்த என் கண்களை மீட்டுக் கொண்டேன். உடம்பைப் போர்த்திக் கொள்ளவேண்டும் என்கிற உணர்வு. சேலைத் தலைப்பை வலது தோளில் இழுத்துப் போர்த்திக்கொண்டேன்.

    படிகளில் இறங்கும் முன் அங்கே பார்த்தேன். அவன் துணிகளுக்குக் கிளிப்ஸ் போட்டுக் கொண்டிருந்தாலும் பார்வை என்னவோ என்னையே தழுவியிருந்தது. அண்ணா... சுதாண்ணா... அத்த கூப்பிடறா. வா அந்த இளம் பெண்ணின் குரலா? அவன் என்னேப் பார்த்துவிட்டுக் கீழே குனிந்து அந்தப் பெண்ணைப் பார்த்தான்.

    என்னால் நிற்க முடியவில்லை.

    கீழே இறங்கிவிட்டேன்.

    அது என்ன பார்வை? அவன் பார்வையின் தீட்சண்யத்திலேயே கருகிவிடுவேனோ?...

    அம்மா... என் அம்மா... அவளும் இப்படித்தான் கண்களால் பார்ப்பாள். அவள் கண்ணால் தேடுவதைப் பார்த்தே செய்த திருட்டுத்தனங்களை ஒப்புவித்துவிடுவேன். அம்மா புத்தி சொல்வாளே தவிர ஒரு வார்த்தை கடிந்து சொல்ல மாட்டாள்.

    அப்பாகூட அவளைக் கடிந்து கொள்வார்.

    அடியே ராஜலட்சுமி, உன்னால்தாண்டி ஜெயா இப்படி மக்கு மாதிரி வளர்ந்திருக்கிறாள். ஸ்கூல் பிராகரஸைப் பார்த்தியா? பாதி சப்ஜெக்டுகளில் பெயில்.

    இருக்கட்டுமே. அவ படிச்சு உத்தியோகமா பார்க்கப் போறா. நமக்கிருக்கிறது ஒரே பெண், அவளையும் அடிச்சி அழவைக்கணுமா? ஆண்டவன் நம்ம அழவச்சிருக்கிறது போதாதா? அம்மாவின் கண்களுக்குச் சேலைத் தலைப்பு சென்றுவிடும்.

    அவள் வரிசையாக நான்கு பெண்களைப் பெற்று, பெற்ற வேகத்திலேயே குழிதோண்டிப் புதைத்துவிட்டவள். ஐந்தா வதாக, வெள்ளிக்கிழமையும் அதுவுமாக, நான் பிறந்தபோது சந்தோஷப்பட்டு ‘ஜெயலக்ஷமி’ எனப் பெயர் வைத்தாளாம்.

    எனக்கு அடுத்து ஒரு தம்பி, இரண்டு வயது ஆகும்போது மோட்டார் சைக்கிள் மோதி... அம்மா பத்து நாட்களுக்கு பச்சைத் தண்ணிரை வாயில் விடவில்லை. அம்மாவுக்கு எல்லார் மீதும் பாசம் அதிகம், சொறி நாயைக்கூட அவளால் வெறுக்க முடியாது.

    கறிகாய் விற்பவளிடம்கூட மணிக் கணக்கில் அவள் குடும்ப விவகாரத்தைப் பேசிக்கொண்டு நிற்பாள்.

    போன் சிணுங்கியது. கையில் எடுத்தேன். யாராக இருக்கும்? இன்றைக்கு யாரையும் வரச்சொல்லக் கூடாது. தனிமை... தனிமை... அது வேண்டும் எனக்கு. என் சிந்தனைத் தோழனிடம் பேசவேண்டும்.

    என் கற்பனையில் என்னுள் நானே கரைந்து... மிதந்து..., மெல்ல மிதந்து... பறந்து... அம்மா உனக்கு மறு பிறவி உண்டா? அப்படியானல் நீ யார் வயிற்றில் எங்கே பிறந்திருக்கிறாய்? என்னை நீ சந்தித்ததுண்டா! இனம் புரிந்து கொண்டாயா?

    ஹலோ, நான் ஜெயலக்ஷ்மி பேசறேன். நீங்க...

    கெமிஸ்ட்ரி புரொபஸர் செங்கப்பா பேசறேன். ஜெயா... இன்னிக்கு... இன்னிக்கு... குரல் குழைந்தது.

    சொல்லுங்க.

    நான் வரட்டுமா? உன்னைப் பார்க்கணும் போல இருக்கு ஜெயா. நீ கண்ணிலே நிற்கிறே.

    "கெமிஸ்ட்ரி புரொபஸர் எப்போ கவிஞர் ஆனர்? அங்கே பக்கத்திலே

    Enjoying the preview?
    Page 1 of 1