Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanal Kaadhal
Kanal Kaadhal
Kanal Kaadhal
Ebook81 pages41 minutes

Kanal Kaadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114202841
Kanal Kaadhal

Read more from Hamsa Dhanagopal

Related to Kanal Kaadhal

Related ebooks

Reviews for Kanal Kaadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanal Kaadhal - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    கானல் காதல்

    Kanal Kadhal

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    லதா சமையல் அறையில் பம்பரமாய் சுழன்று வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    கூடத்தை ஒட்டின தங்கை சுதாவின் அறையில் அவள் நாற்காலியில் அமர்ந்திருந்தாள். குனிந்து புத்தகத்தைப் பார்த்திருந்தாள். இங்கிருந்து பார்க்கையில் படிக்கிறாள் எனத் தோன்றிற்று.

    சுதா, ஆச்சா. சுருக்கா வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு. இல்லை நீயாவது உன் பர்சனல் வேலையைப் பாரு இப்படி காலம்பற பிடிச்சு உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்.

    உக்கும்… என்ன இருந்தாலும் நீ எனக்கு அக்காதானே. அம்மா இல்லை அப்பாவா, பாவம் படிக்கட்டும் பொண்ணுன்னு சொல்ல. அதான் எப்பப்பாரு என்னை வேலை வாங்கறே

    நீ ஒண்ணும் எனக்கு வேலை செய்ய வேண்டாம். நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன். சமயத்திலே இந்த வேலைக்காரி கழுத்தை அறுத்திருவா. எனக்க இன்னிக்கு ஒரு பிரஸ் மீட் இருக்கு பதினோரு மணிக்கு அதான், சாரி சுதா, போய் குளிம்மா

    லதா சமையல் அறைவிட்டு வெளி வருவதை விழி தாழ்த்தி பார்த்து தெரிந்துகொண்ட சுதா அவசரமாய் முதுகால் மறைத்தபடி புத்தகத்தின் நடுவிலிருந்து வண்ணப்புகைப்படத்தை புத்தகத்தின் அட்டைக்குள் வைத்து திரும்ப அட்டையைச் சரியாக போட்டுவிட்டாள். இப்போது வெறும் புத்தகம் மட்டுமே தெரியும். இளைஞனின் புகைப்படம் பாதுகாப்பாய் ப்ரவுன் அட்டைக்குள் அடைக்கலம்.

    அருகில் வந்த லதா பரிவுடன் தங்கையின் கலைந்த கூந்தலை மயிலிறகாய் வருடினாள். ஸாரி சுதா, அந்த குறைத் தெரியாம உன்னைப் பார்க்கணும்னு நினைக்கறேன். ப்ளீஸ் போம்மா போய் குளி படிச்சது போறும் என்னோட வண்டியிலே வந்துரு நீ பஸ்ஸிலே போய் கஷ்டப்பட வேண்டாம்

    தங்கையின் புத்தக அட்டைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாலி பனின் புகைப்படத்தை பார்த்திருந்தால், வருங்காலத்தில் நிகழ இருந்த பற்பல அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் லதா அதைப் பார்க்காமல் போனதை விதி என்பதா சந்தர்ப்பச் சூழல் என்பதா புரியவில்லை.

    ப்ச்சூ இப்பதான் பி.காம் இரண்டாவது வருஷத்திலே சேர்ந்திருக்கே இதுக்குள் டூ வீலர். அதை பாதுகாப்பா ஓட்டுவியா. அதுவும் உத்தண்டியிலிருந்து ஸ்டெல்லா மேரீஸ் வரை... மை காட். உனக்கு எதிலும் அவசரம் அவசரம்தானே. பயமா இருக்கு சுதா, அதான் உனக்கு வண்டி வாங்கிக் குடுக்கல.

    நோ... நோ… அப்பா இருந்திருந்தா நான் கேட்டதும் இப்படியா சும்மா இருப்பார் மறுநாளே வண்டி என் கையில் இருக்காதா

    சரியான சந்தர்ப்பம் பார்த்து இல்லாத அப்பாவைத் துணைக்கு அழைத்தாள் சுதா,

    ஓ.கே. வண்டிதானே… அடுத்த மாசம் உனக்குக் கிடைக்கும்.

    ஹைய்யா… அக்கான்னா அது என் லதாக்காதான்

    வேலைகள் அத்தனையும் முடித்து தங்கையின் டிபன் பாக்ஸில் உணவு அடைத்து தானும் எடுத்துக்கொண்டு புறப்படுகையில் ஹாலில் மின் விளக்கொளியில் சந்தன மாலையில் நான்கு சட்டங்களுக்குள் நிரந்தர சிரிப்பில் இருக்கும் தந்தையை வணங்கினாள் லதா

    அப்பாவின் குரல் வழக்கம்போல அவள் செவிகளில் ஒலிக்க.

    ‘லதா, இது பெண்களுக்கு லாயக்கான தொழில் அல்லம்மா என் பேச்சைக் கேட்காமே எம்.ஏ. ஜர்னலிஸம் படிச்சே சரி.. ஒரு பத்திரிகையில் போய் உக்காந்து வேலையைப் பாரு ஆபிஸ்லேயே இரு என்னை மாதிரி அரசியல் நிருபருன்னு பேரு எடுத்து அலையறேன் என்கிற இது என்னம்மா நியாயம. உன்னால அரசியல் பகைய தாங்கிக்க முடியுமா. காலம் மாறிட்டே வருதுமா. முன்னைப் போல இல்லை. முன்ன என்ன எழுதினாலும் யாரும் தப்பிதமா எடுத்துக்கமாட்டாங்க. மத்தவங்க சுதந்திரத்தை மதிச்சு நடந்துட்டாங்க. ஆனா இப்ப.. எழுதின கையை உடைக்கறேன்னு கிளம்பிடறாங்க. பேசின

    Enjoying the preview?
    Page 1 of 1