Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iravu Sooriyan
Iravu Sooriyan
Iravu Sooriyan
Ebook128 pages50 minutes

Iravu Sooriyan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114202862
Iravu Sooriyan

Read more from Hamsa Dhanagopal

Related to Iravu Sooriyan

Related ebooks

Reviews for Iravu Sooriyan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iravu Sooriyan - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    இரவு சூரியன்

    Iravu Sooriyan

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    மருத்துவ கல்லூரி. மூன்றாம் ஆண்டு வகுப்பில் முதல் பெஞ்சின் கடைசி இருக்கையில் இருந்து அன்பரசு இங்கிருந்து போய் விட்டால் பரவாயில்லை என நினைக்கிறான். அப்படி போகிற பட்சத்தில் சக மாணவர்கள் கலாட்டா செய்து மானத்தை வானில் பறக்கவிடுவார்கள் என்பது உணர்ந்து அமைதி காத்தான்.

    சம்பள விகிதம் சரியில்லை என பேராசிரியர்கள் வகுப்பு எடுக்காமல் கல்லூரியில் வெளியே நின்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

    கொண்டாட்டத்திற்காளான மாணவ மணிகள்... தங்கள் மனம் போல வகுப்பு நடத்த... மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவி வைஷாலி, பேராசிரியர் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க... அவள் கையில் ஸ்கேல்... எல்.கே.ஜி வகுப்பு ஆசிரியை போல... சிந்துஜாவின் கண்ணாடி வேறு பிடுங்கி போட்டிருந்தாள்.

    நேவி புளு காக்ரா ஜரி வேலைப்பாடைமைந்த சோளி பாவாடை அதன் மீது பால் வெள்ளை ஷிபான் ஸல்வார். ஏதோ மலை முகட்டில் இருந்து இறங்கும் அருவி போல. எலுமிச்சை நிறமான அவளுக்குக் கூடுதல் கவர்ச்சி அளிக்க. தற்கால நாகரிகமாய் கூந்தலை அப்படியே சிக்காய் பின் புறம் விரித்திருந்தாள். காதுகளில் ஒற்றை வைரம் பதித்த வளையங்கள் அவள் அசையும் போதெல்லாம் மின்னி அவள் கன்னத்திற்காக மாணவர் களைப் பெரூமூச்சுவிடச் செய்தது.

    "வைஷா, இப்படியே உட்கர்ந்திருந்தா எப்படி... உன் போட்டி என்ன பந்தயம் எப்படி அதில் ஜெயிச்சா உன் பரிசு என்ன…’

    நகம் கடித்தபடி ஸ்டைலாய் யோசித்த வைஷாலி கூந்தலைப் பின்னுக்குத் தள்ளி, மாணவர்கள் தங்களுக்குள்பேசிக் கொண்டிருக்க யோசித் தாள்.

    மேஜையைத் தட்டி, சைலன்ஸ் சைலன்ஸ் என்றாள்.

    வகுப்பில் இரண்டு பெஞ்சுக்களை நிறைத்திருந்த பெண்கள் தலைக் குனிந்து தங்களுக்குள் பேசிச் சிரிக்க…

    "யூ நோ ப்ரன்ட்ஸ். பந்தயத்தில் ஜெயிசசுட்டா இரண்டாயிரம் மதிப்புள்ள தங்க மோதிரம் பரிசு. அதுவும் நானே ஹோட்டல்ல விழா எடுத்து பரிசு கொடுப்பேன்.

    புளியம் பழங்கள் உதிர்வது போல மாணவர்கள் கை தட்டினார்கள்.

    ஷாலி, பரிசு பத்தி சொல்லி எங்களை ஜொள்ளு விட வச்சுட்ட ஆனா போட்டி என்ன. அதுக்கு என்ன நிபந்தனை? அதைச் சொல்லு

    எஸ் சொல்லு வைஷா

    ஸாரி, நான் ஜெயிச்சு உன் கையால மோதிரம் அணிஞ்சிக்கிற மாதிரி சொல்லு வைஷாலி.

    டேய், நீ மட்டும் என்ன ஒசத்தி எனக்கும்தான் ஷாலி ரிங் வேணும்.

    மாணவர்கள் எழுந்து நின்று அவள் மோதிரம் பற்றி எரிந்த கட்சி எரியாத கட்சி பாட.

    ஓகே போட்டி என்னன்னு நான் சொல்லிடறேன். அப்புறம் சத்தம் போடுங்க. நம்ம ஹாஸ்பிடல் மார்ச்சுவரி இருக்கு பாருங்க.

    "என்ன செய்யனும் நைட் பன்னிரெண்டு மணிக்குப் போய் வரணுமா. நாங்க போய் வரதை யார் நின்னு பார்ப்பாங்க. அந்த பொணங்களா.'

    நைட் முழுசும் பொணத்தோட பொணமா படுத்திருக்கணுமா என்னால முடியாது ஷாலி

    ஷ்ஷ். சும்மாயிருங்க. நான் போட்டிய சொல்றதுக்கு முந்தி நீங்க சத்தம் போட்டுட்டு... அதுல ஒரு பொண்ணு பொணம் இருக்கு. அது கால்ல ஒத்தைக் கொலுசு இருக்கும். அதை கழற்றிட்டு, அதோட் மேல் சட்டையும் எடுத்து வரணும்.

    மை காட் அது எப்படி கொலுசு. கழட்டி மேல் சட்டை.

    எப்படியா. அந்த பொண்ணு பொணத்தில ரெண்டு மூணு ஜாக்கெட் போட்டிருக்கும். அதுல பர்ஸ்ட் கோட் மட்டும் கழட்டி எடுத்து வரணும்.

    வைஷாலியின் நண்பன் யஷ்வந்த் எழுந்தான்.

    ஷாலி, மோதிரம் கிடைக்கும்னு வாய தெறந்துட்டு இருந்தேன். ஐயாம் ஸாரி ஷாலி எனக்கு உன்னோட ரிங் வேணாம் எழுந்து வேடிக்கையாய் கண்ணைத் துடைத்தபடி வெளியே போனான். மாணவர்கள் சீராக டெஸ்க்கைத் தட்டினார்கள்.

    ஷேம்... ஷேம்...

    கவர்ட்... யூ கவர்ட்...

    அப்போது அன்பரசு எழுந்து வகுப்பைக் கடந்து வெளியேற முயன்றான். அப்போது மாணவர்கள் டெஸ்க்கைத் தட்டி ஆர்பரித்தார்கள்.

    யூ கன்ட்ரி புல்... நீயுமா

    ஷேம். ஷேம். புலிய மொறத்தால அடிச்ச மறத் தமிழச்சி பால் குடிச்சவனா.

    வைஷாலி மேடையிலிருந்து எழுந்து இரண்டெட்டில் வகுப்பைக் கடந்து கொண்டிருந்த அன்பரசுவின் இடது கையை அழுத்தமாய் பிடித்தாள்.

    அவன் உதறிவிட்டுப் போகப் பார்க்க. ஆனால் பிடி உடும்புப் பிடி.

    யூ ஸி ப்ரண்ட்ஸ்... நைட் நம்ம அன்பரசு மார்ச்சுவரிக்குள்ள போய் ஏழாம் நம்பர் பொணத்தோட ஜாக்கெட், கொலுசு...

    ஸாரி மிஸ் என்னை விட்டுருங்க. என்னால் முடியாது அன்பரசு அவள் கையை விலக்கப் பார்த்து தோற்றான்.

    நோ... நோ. உனக்குப் பயம். கோழைத்தனம். அதான் ஓடப் பார்க்கிறே.

    பட்டிக்காட்டுப் பய. அவனாலேயே முடியலங்கறான்.

    அன்பரசு, நீதான் இதைச் செய்யப் போறே.

    அன்பு, நீ செய்துட்டா, ரிங் மட்டுமில்ல. அதுக்கும் மேலே ஒண்ணு குடுப்பேன்.

    மாணவர்கள் கூட்டத்திலிருந்து ஒரு குரல். அன்பரசு உயிரோட இருந்தாத்தானே.

    உன்னோட ஸ்பரிசமா. இல்ல மரணத்தோட ஸ்பரிசமா.

    டெஸ்க்கள் தட்டப்பட அவன் உதறிப் போக பார்க்க, அவள் கை உதறி லேசாக தள்ளிவிட்டாள்.

    அன்பரசு போனா போ. இங்கே இருக்கிறவங்கதான் கோழை. நீ ஒருத்தன்தான் வீரன்னு நினைச்சேன். நீயும் ஜகா வாங்கிட்டே. சரி புறப்படு.

    நடக்க முற்பட்டவன் அப்படியே நின்றான். ஷர்ட் காலரை எடுத்து விட்டுக் கொண்டான்.

    "ஓ.கே. வைஷாலி நான் ரெடி.'

    இன்னிக்கு நைட்டே. உன்னோட பொணமும் மார்ச்சுவரியில் சேர்ந்துரப் போவுது.

    இன்னிக்கு இல்ல ப்ரண்ட்ஸ். அடுத்த வாரம் அமாவாசை. இரவு பன்னிரெண்டு மணிக்கு. அன்பரசு உன்னால முடியலனா இப்பவே தோல்விய ஒத்துக்க. அப்புறம் என்னைத் தப்பு சொல்லாதே.

    - நோ மிஸ் வைஷாலி. முன் வச்ச காலை நான் என்னிக்கும் பின் வைக்க மாட்டேன். நான் எடுத்து வரேன்.

    ஓ.கே. அன்பரசு. சரின்னுட்டான். எனது வாழ்த்துக்கள்.

    மை ஹார்ட்டி கங்ராஜுலேஷன்ஸ் மை பாய்.

    உன் விரல் அளவுக் குடு அன்பரசு. நான் ரிங்குக்கு ஆர்டர் குடுத்துடறேன்.

    - "நான் கொலுசும் ஓவர் கோட்டும் கொண்டு குடுத்தப்புறம்... மத்த தெல்லாம்...''

    ''அன்பரசு சொல்றது சரி."

    அன்பரசு வாழ்க. அன்பரசு வாழ்க.

    மாணவிகளும் சேர்ந்து டெஸ்க்கைத் தட்டினார்கள்.

    வெளியே புத்தகங்களுடன் போன யஷ்வந்த் கலவரத்துடன் வகுப்புக்குள்

    Enjoying the preview?
    Page 1 of 1