Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deva Ragasiyam
Deva Ragasiyam
Deva Ragasiyam
Ebook106 pages25 minutes

Deva Ragasiyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateDec 8, 2017
Deva Ragasiyam

Read more from Hamsa Dhanagopal

Related to Deva Ragasiyam

Related ebooks

Reviews for Deva Ragasiyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deva Ragasiyam - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    தேவ ரகசியம்

    Deva Ragasiyam

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    அபி… அபி கண்ணு... எங்கே ஒளிஞ்சிருக்கே? மம்மி பாவமில்லையா? எத்தனை நேரமா உன்னைத் தேடறாங்க பாரு. ஒடி வா. ஒடி வா கண்ணா.

    சாந்தி, அந்தக் குட்டி பங்களா முழுவதும் தேடி விட்டாள். மூன்று வயது நிரம்பாத அந்தப் பிஞ்சு கால்கள் இவள் தவிப்பை ரசித்தபடி எங்கோ ஒளிந்து இருக்கிறது.

    மனோ, இங்கே பாருங்கப்பா. அவனை எங்கேயும் காணலை. அப்பப்பிடிச்சுத் தேடறேன்.

    குளியலறையில் முகம் முழுவதும் ஷேவிங் கிரிம் அப்பியிருந்த மனோகர், எட்டிப் பார்க்கிறான்.

    சரிதான். ரெண்டு பேரும் விளையாட ஆரம்பிச்சுட்டீங்களா? அவன்தான் குழந்தை. அவனோடு சேர்ந்து நீயும் குழந்தையா விளையாடிட்டு…

    நான் ஒண்ணும் விளையாடலை. குயிக்கா புறப்படனும்னு சொன்னீங்களே. அவனுக்கு டிபன் ஊட்டிடலாம்னு பார்த்தா காணலை.

    பார். எங்கானும் சோபா பின்னாடி, கட்டில் அடியில் என மறைஞ்சிருப்பான். அவனுக்கு எப்பவும் இதே விளையாட்டுத்தான்.

    அங்கேயெல்லாம் பார்த்துட்டேனே.

    சரி... சரி... கழுதை சலிச்சுப் போனா, தானா வெளியே வரும். நீ போய் ஏதோ ஒண்ணு ரெண்டு நகை போட்டு நல்ல ஸாரியா கட்டிட்டுப் புறப்படு. அப்பாவை முதல் தடவையாப் பார்க்கப் போறோம்.

    என்னைத்தானே பார்ப்பார்.

    ப்ச்சு... சொன்னதைச் செய்யேன். சின்ன விஷயத்துக்கெல்லாம் பிடிவாதம் உனக்கு. மணி ஒன்பதுக்குள்ளே புறப்பட்டாத்தான் அங்கே மத்தியான சாப்பாட்டுக்குப் போயிர முடியும்.

    முகவாய் வழித்தபடி மனோகர் சொல்ல, அவனைப் பார்வையால் வெட்டிவிட்டுப் போகிறாள் சாந்தி.

    தந்தச் சிலை போன்ற இவள் கருவிழிகளுக்கு இவன் அடிமைப்பட்டுப் போனதில் தவறிருக்க முடியாது. முப்பது வயதை எட்டிக் கொண்டிருந்தபோதும் இருபது கூட நிறையாத இளமை இன்னமும் இவள் மேனியில் கூடாரமிட்டிருக்கிறது. தீண்டினால் ஒட்டிக் கொள்ளும் மென்மையும் சுகந்தமும் அவள் மேனி சொல்லும் ரகசியம்.

    அவன் குளியலறைக்குள் அடைக்கலமாக, சாந்தி படுக்கையறைக்குப் போகிறாள்.

    அலங்கார மேசைமுன் அமர்ந்து தன் நீண்ட பின்னலை பிரஷ் செய்கிறாள். அபிக்கு டிபன் கொடுத்துவிட்டு அலங்காரம் செய்து கொள்ளலாம் என்றால் இவன் எங்கே போய்... பிரிஜ், பீரோன்னு எங்கானும் இசகு பிசகாக மறைந்திருப்பானோ. மனம் கிடுக்கிடுகிறது.

    சரியான குறும்பு. அவனால் ஒரு வினாடி கூட அமைதியாய் இருக்க முடியாது.

    அவள் பின்னலைக் கவனிக்கையில், கட்டிலுக்கு அடியில் கதவுடன் அலமாரி போன்ற அமைப்புக்கொண்ட பலகை லேசாக அசைகிறது. துணுக்குறுகிறாள் சாந்தி.

    அதன் கைப்பிடியைப் பிடித்து இழுக்கிறாள். உள்ளே தலையணை, போர்வைகளுக்கு நடுவே நீளமாய்ப் படுத்திருக்கும் அபி இவளைப் பார்த்ததும் பால் பற்கள் காட்டிச் சிரிக்கிறான்.

    ஹையா மம்மி, ஏமாந்து போச்சு, ஹையா! மம்மி ஏமாந்து போச்சு!

    அவனைப் பிடித்து வெளியே இழுத்து நிறுத்துகிறாள் சாந்தி.

    குண்டுக் கண்களில் சிரிப்பும் குறும்பும் போட்டியிட வெறும் ஜட்டி மட்டும் போட்டிருந்த அபிஷேக், இவள் தந்த நிறத்தையும் அழகையும் அப்படியே கொண்டிருந்தான். பிராக் போட்டு மை வைத்தால் பெண் குழந்தையின்களை வந்துவிடும்.

    அபிக் கண்ணா, அதுக்குள்ளயெல்லாம் மறைஞ்சிரக் கூடாதுப்பா. மூச்சுவிட முடியாது. மூச்சு விடலன்னா செத்துரு வாங்க

    டைனிங் டேபிளுக்கு மகனை இழுத்துப் போகிறாள். நாற்காலியில் ஏறி உட்கார்ந்து கொள்கிறான் அபி. டைனிங் டேபிளுக்குச் சரியாக அவன் கண்கள் இருக்கின்றன.

    இன்றைக்குப் பார்த்து இந்த சமையற்காரம்மாள் மட்டம். மனம் சமையற்காரம்மாளைச் சபித்தபடி இருக்க, இட்லி எடுத்து சர்க்கரையைத் தொடுகிறாள் சாந்தி.

    அவன் வாயின் அருகே கொண்டு போகையில்,

    மம்மி, செத்துப் போறதுன்னா என்ன மம்மி? என்றான் குழந்தை

    அவன் வாயில் திணித்துவிட்டு யோசிக்கிறாள். பதில் சொல்லாவிட்டால் சாப்பிடும் அரை இட்லியைக் கூட நிறுத்தி விடுவான்.

    மூச்சு விடமுடியாது. அப்புறம் உடம்பு கட்டையாப் போயிரும். சாப்பிட மாட்டாங்க.

    அப்ப நானும் மூச்சு விடலன்னா செத்துருவேனா மம்மி?

    சாந்தியின் இதயம் ஒருமுறை மார்புக் கூட்டில் டென்னிஸ் பந்தாய் எகிறுகிறது. இப்படி கற்பனைக் கூடச் செய்யக் கூடாது.

    அப்படிச் சொல்லாதே கண்ணு. என் அபிஷேக் நூறு வருஷம் இருப்பான்.

    மம்மி, நூறுன்னா என்ன?

    நைன்ட்டி நைன், ஹண்ட்ரட்.

    ஹையா! டாட் வந்தாச்சு. டாட் வந்தாச்சு.

    நாற்காலியிலிருந்து இறங்க முடியாமல் இறங்கி, உள்ளே நுழையும் மனோகரைக் கட்டிக் கொள்கிறான் குழந்தை.

    குளித்து முடித்து

    Enjoying the preview?
    Page 1 of 1