Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ne En Uyirthean
Ne En Uyirthean
Ne En Uyirthean
Ebook218 pages2 hours

Ne En Uyirthean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அத்தியாயத்திற்கு அத்தியாயம் விருவிருப்பு - எதிர்பார்ப்பு நம் நெஞ்சை அள்ளுகிறது. இடையிடையே புரியும்படியான உலகியல் தத்துவங்கள், பாயசத்தில் காணும் முந்திரிப் பருப்புகளாகக் காட்சி தருகின்றன.

இயல்பான நடையோட்டத்துடன் கூடிய இக் குடும்ப நாவலில், பெண்கள் அவர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படுகின்ற துன்பங்களையும் சோதனைகளையும் கண்டு துவண்டு விடாமல் அவைகளைத் தாண்டி விடாமுயற்சியுடன் அவர்கள் முன்னேறும் போது, அவர்களைத் தெய்வமாக வணங்கத் தோன்றுகிறது.

எத்தனை முறை படித்தாலும் சலிப்புத் தட்டாத படியும், படிக்கப் படிக்க இன்பம் தருமாறும், சமுதாயச் சிக்கல்களையும் பல்வேறுபட்ட மனிதர்களுடைய குணாதிசயங்களையும் கற்பனைத் திறன் கொண்டு, உவமைகளையும் உருவகங்களையும் தந்து, நகைச்சுவை ததும்ப, இந்நூலாசிரியர் எழுதியிருப்பது பாராட்டுக்குரிய செய்தியாகும்.

கதை சொல்லும் உத்தியும் பாங்கும் அருமை. படிக்கத் தொடங்கினால் முடித்துவிட்டுத்தான் வைக்கத்தோன்றும் வகையில், ஆவலைத் தூண்டில் போட்டு இழுக்கின்றார் ஆசிரியர்.

நூலின் இறுதியில் திருப்புமுனைகளை மிக அற்புதமாகத் தந்து, வெற்றியும், மகிழ்ச்சியும் ஒருசேர அமையும்படி, நாவலை முடித்துள்ள ஆசிரியரின் ஒவ்வொரு பாத்திரப் படைப்பும், படித்து முடித்தபின் நம் கண்முன் நிற்கும் ஆற்றல் படைத்து விளங்குகிறது.

விரச உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட பரிசளிப்புக்கு ஏற்ற, கல்லூரிகளில் பாடமாக வைக்கத்தக்க, திரைப்படமாக்குவதற்கு ஏற்ற நல்ல கதையம்சங்கள் கொண்ட, படிப்பவரைத் தன்வயப்படுத்தும் இந்த அருமையான நாவலை, வசந்தம் - தினகரன் ஞாயிறு மலர் - தொடர்கதையாக வெளிவந்து, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாவல்.

Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580114201929
Ne En Uyirthean

Read more from Hamsa Dhanagopal

Related to Ne En Uyirthean

Related ebooks

Reviews for Ne En Uyirthean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ne En Uyirthean - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    நீ என் உயிர்த்தேன்!

    Ne En Uyirthean!

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    நீ என் உயிர்த்தேன்!

    (நாவல்)

    ஹம்ஸா தனகோபால்

    1

    தைத்து முடித்த ஆறு சோளிகளையும் உதறி மடித்து வைக்கிறாள் மீனாட்சி. நாளை இதைக் கொடுத்து வரும் பணத்தில் ரேஷன் வாங்கி விடலாம், சில நாட்களுக்குப் பிரச்சினை இல்லை என மனம் கணக்குப் போடுகிறது. தையல் இயந்திரத்தைச் சுத்தப்படுத்தி மூடி வைக்கிறாள்.

    மூத்த பெண் சுமதி ஏதோ பத்திரிகை படித்துக் கொண்டிருப்பதையும், அடிக்கடி கொட்டாவி விடுவதையும் பார்க்கிறாள். சுவரில் ஒளி மங்கிப் போன சுவர்க்கடியாரம் பார்க்கிறாள். இவள் வாழ்க்கையைப் போலவே அது மங்கி புகைபடிந்து, கால ஓட்டத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இவள் திருமணத்தின் போது கணவனின் கம்பெனியில் திருமணப் பரிசாக கொடுத்தது. நினைவில் கணவரும், அவரைச் சார்ந்த இனிய எண்ணங்களும் தோன்றி கண்களில் கசிவை எற்படுத்துகின்றன. அவள் கணவன் விட்டுப் போன சுமைகளை சுமக்கும் சுமைதாங்கி இவள்தான் இப்போது.

    ஏம்மா சுமதி, தூக்கம் வருது போல இருக்கே. நீ போய் சாப்பிட்டு தூங்கலாம் இல்ல. தியாகு வந்தா நான் சாப்பாடு போட மாட்டேனா என்ன

    தாயைப் பார்த்து வாஞ்சையுடன் புன்னகைக்கிறாள் சுமதி. மங்கிய மின் விளக்கொளியில் கைதேர்ந்த சிற்பி செதுக்கின மரச் சிற்பம் போல விளங்கும் மகளை, மணம் முடித்து அனுப்ப இயலவில்லையே என்கிற வழக்கமான ஏக்கம் மீனாட்சியை பெருமூச்சுவிடச் செய்கிறது.

    அம்மா, அக்கா-அண்ணன் வந்து சாப்பிட்ட பின்னாலேதானே சாப்பிடுது. அண்ணா சாப்பிடாம அக்கா என்னிக்காவது சாப்பிட்டிருக்கா?

    கடைசிப் பெண் விமலா படிப்பதை நிறுத்திவிட்டு பேசுகிறாள்.

    அம்மா உன்னையா கேட்டாங்க. நீ பாடம் படிக்கிற வேலையைப் பாரு. பிளஸ் ஒன் படிக்கிறே, நல்லா படிச்சாதான் பாஸ் செய்ய முடியும். இல்லன்னா என்னப் போல படிக்காத பெண்ணாகத்தான் இருக்கணும்

    தமக்கை சுமதி இப்படி சொல்ல, அவளைப் பார்த்து உதட்டைச் சுழித்துவிட்டு தன் பாடங்களில் மூழ்கிப் போகிறாள் விமலா.

    நீங்க சோளிங்களை என்கிட்ட கொடுத்தா நான் தைச்சுக் குடுக்க மாட்டேனா என்ன. அதைவிட்டு நீங்களே தைச்சுக் கஷ்டப்படறீங்களேம்மா

    அப்படியில்ல சுமதி. இந்த தையல் இயந்திரம் என்னோட போகட்டும். எல்லாம் தியாகுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும்தான். அப்புறம் இதை மூடி வச்சிட மாட்டேனா என்ன. என்னைப் போல நீ வேற இந்த தையல் வேலைய கட்டி அழனுமா என்ன?

    என்னம்மா நீங்க. அப்புறம் எதுக்கு என்னை தையல் கிளாசுக்கு அனுப்பினிங்களாம்? அதுக்கு வேற செலவு செய்து போய் வந்திருக்க வேண்டாம் இல்ல

    எட்டாவது கூட தாண்டலை. படிப்பும் இல்லை. எந்த தொழிலும் தெரியலன்னா எப்படி சுமதி? நாளைக்கே புருஷன் வீடு போனா ஒண்ணு தைக்க கொள்ள ஆகும் இல்ல. உனக்குத் தையல் சொல்லி வச்சது இந்த வீட்டுக்கு உழைச்சுப் போட இல்ல தெரிஞ்சுக்கோ

    "எப்பப் பாரு புருஷன் வீடு கல்யாணம்னு பேசிட்டு பாவம் அண்ணா பர்ஸ்ட் கிளாஸ்ல பி.காம். பாஸ் செய்துட்டு, வேலை கிடைக்காம அங்கே இங்கே கணக்கு எழுதிட்டு திரியது. இதுல

    என் கல்யாணத்துக்குச் செலவு செய்ய எங்கே போகும் அண்ணா?"

    அதுக்காக கல்யாணம் செய்து அனுப்பாம இருக்க முடியுமா? உனக்கு அடுத்து விமலா இருக்கா

    பேசியபடி விமலாவைப் பார்த்த மீனாட்சி மெல்ல புன்னகைக்கிறாள். சுமதி, அந்த விமலாவைப் பாரு, அப்படியே தூங்கிட்டா. விரிச்ச நோட்புக்ஸ் அப்படியே பிரிச்சு கெடக்குப் பாரு எடுத்து வைம்மா

    சுமதி எழுந்து போய் தங்கையின் புத்தகங்களை எடுத்து வைக்கிறாள். தங்கையின் தலைக்கு ஒரு தலையணை எடுத்து வந்து வைக்கிறாள்.

    அது ஒரு சின்ன குடியிருப்பு முன்புறம் வீட்டுச் சொந்தக்காரரும், அவர் மனைவியும் இருந்தார்கள். அவருக்கு நான்கு பெண்கள். நான்கு பேருக்கும் மணம் முடித்து அனுப்பி விட்டதால் மாதத்தில் பல நாட்கள் அவர் மனைவி, மகள்களை பார்க்கப் போய் விட்டிருப்பார். இப்போதெல்லாம் வீட்டு சொந்தக்காரர் நாகரத்தினம் வெளியே சாப்பிட்டுக் கொள்வார். இல்லாவிடில் தனக்குத்தானே சமைத்துக் கொள்வார். சில நேரம் மீனாட்சி வீட்டிலிருந்தும் இறக்குமதி ஆவதுண்டு.

    இங்கு பேசுவது அங்கே துல்லியமாக கேட்கும். அங்கே பேசுவதும் அப்படியே ஒரு சமையல் அறை, ஒரு சின்ன கூடம். ஒரு குட்டி அறை. இதுதான் மீனாட்சி அம்மாளின் மாளிகை. அங்கே பஞ்சமில்லாமல் இருந்தது அன்பும், பாசமும்தான்.

    ஏம்மா, அண்ணனுக்கு இந்த இண்டர்வியூலயாவது வேலை கிடைச்சிரும்மா?

    அதே நினைப்புத்தான் சுமதி எனக்கும். தியாகுவுக்கு வேலை கிடைக்கல நம்ம வீடு கஷ்டப்படுது என்கிறதைவிட தியாகுவை நினைச்சாதான்மா எனக்கு சங்கடமா இருக்கு மத்தவங்க போல நமக்கு வேலை கிடைக்கலைன்னு அவன் எப்படி துடிச்சுப் போறான் தெரியுமா

    பாவம் தியாகு அண்ணன் எத்தனை இடத்துக்கு எழுதிப் போடுது. யார் யாரைப் போய் பார்க்குது. ஆனா ஒரு நல்ல வேலை கிடைக்க மாட்டேன் என்கிறதே

    அது அதுக்கு ஒரு நேரம் வரணும் இல்லயா?

    அந்த நேரம் எப்ப வருமோ தெரியலை. ஆமாம்மா. பக்கத்து வீட்ல இருந்த இந்த லதா வீட்ட காலி பண்ணிட்டு போயிட்டாங்களே! போக வேண்டியதுதானே! அதோட இங்கே அடிக்கடி எதுக்கு வராம்மா?

    சுமதி இப்படி கேட்டதும், அளவு சோளிகளுடன் தைத்த சோளிகளைச் சுருட்டி வைத்துக் கொண்டிருந்த மீனாட்சி லேசாய் சிரித்துக் கொண்டாள். பேசவில்லை.

    என்னம்மா சிரிச்சுக்கிறீங்க. ஒண்ணும் சொல்லலியே

    சொல்ல என்ன இருக்கு சுமதி. ஏதோ அந்த பொண்ணு வருது போகுது. இதைப் போய் பெரிசா எடுத்துட்டு... ஒரு பழகின பாசம்தான்…

    வெளிக்கதவு தட்டப்படுகிறது. சுமதி எழுந்து கொள்கிறாள்.

    போய் கதவு திறந்து விடும்மா. வீட்டுக் காரராய் இருக்கும்

    அன்னாவாய் இருக்கும் மகிழ்ச்சியுடன் போய் கதவு திறந்து விடுகிறாள்.

    தெரு விளக்கொளியில் கிராப் கலைந்திருக்க... பேண்ட்டும்,சர்ட்டும் கசங்கியிருக்க தியாகராஜன் நிற்கிறான். இருப்பினும், அவன் முகத்தில் சோடியும் வேப்பர் லாம்ப் போட்ட ஒளி.

    என்னண்ணா இண்டர்வியூ என்னாச்சு. காலம்பற வந்து செல்றது கிடையாதா. நானும், அம்மாவும் துடிச்சுட்டு இருக்கோம்.

    ப்ச்சு. தெருவிலே வச்சு என்ன சொல்றது? உள்ளே வா

    தியாகு உள்ளே போக, கதவைத் தாளிட்டு திரும்புகிறாள் சுமதி.

    வீட்டுச் சொந்தக்காரர் நாகரத்தினம் உள் அறையில் கட்டிலில் படுத்திருக்கிறார். அவர்கள் பேசியதை நன்கு கேட்டார்.

    வாப்பா தியாகு, இண்டர்வியூ முடிஞ்சதும், ஒரு எட்டு வந்து சொல்லிட்டு போறது கிடையாதாப்பா

    இண்டர்வியூ முடியவே சாயந்திரம் ஆறு மணிக்கு மேலே ஆச்சும்மா. அம்மா, எனக்கு வேலை கிடைச்சிருக்கம்மா

    கருமாரி என் வயித்திலே பால் வார்த்துட்டா!

    அண்ணா, அண்ணா என்ன வேலை. சம்பளம் எவ்வளவு?

    எப்ப அண்ணா ஜாயின் பண்ணனும் தூக்கத்திலே இருந்து எழுந்து வந்த விமலா, அண்ணன் அருகில் உட்கார்ந்து கொள்கிறாள்.

    எல்லாம் பொறுங்க. நான் இண்டர்வியூவுக்குப் போனது நம்ம அப்பா வேலை பார்த்த பெரிய பருத்தி மில் இல்லியா! அங்கே கேசியர் வேலை. நிறைய பேருக்குச் சம்பள பட்டுவாடா அது இதுன்னு இருக்கு

    சரி தியாகு. இருக்கட்டுமே! நீ பொறுப்பா செய்வியே. எதுக்கு இப்படி சந்துஷ்டி இல்லாம இருக்கேப்பா?

    தங்கைகள், தமயனைப் பார்த்தபடி அவனை சூழ்ந்து கொள்கிறார்கள்.

    மீனாட்சி மகனுக்கு தட்டு எடுத்து வைத்து தண்ணீர் மொண்டு வைக்கிறாள். கை,கால், முகம் அலம்பி துடைத்தபடி வந்து தட்டு முன் அமர்கிறான் தியாகு.

    சுமதி, பத்து மணி ஆகப் போகுது நீயும் உட்கார். நான் சாப்பாடு போடறேன்.!

    வேண்டாம்மா. அண்ணன் சாப்பிடட்டும். அப்புறம் நாம் சாப்பிடலாம்.

    அண்ணனுக்கு சாப்பாடு வைத்து அப்பளம், குழம்பு என வைக்கிறாள் சுமதி.

    அம்மா, வேலை கிடைச்சிருக்கு. இண்டர்வியூவிற்கு பலபேர் வந்திருந்தாங்க. அதில் சிலர் பெரிய இடத்து சிபாரிசோட வந்திருந்தாங்க. அத்தனைப் பேர்லயும் எனக்கு வேலை ஆகியிருக்கு! ஆனா இது கேசியர் வேலை என்கிற்தாலே இருபத்தஞ்சாயிரம் முன் பணம் கட்டணும்மா. அதான் மனசு ஒடஞ்சி போயிட்டேன். உடனே வீட்டுக்கு வராமே ரவி வீட்டுக்குப் போனேன். அவன்தானே இருக்கிறதிலேயே கொஞ்சம் வசதியானவன். அவன் பணம் வச்சு இருந்திருக்கிறான். ஆனா மச்சினி கல்யாணத்துக்கு போன வாரம் தான் கொடுத்துட்டானாம்

    இதைக் கேட்டதும் மூவரும் இடிந்து போகிறார்கள். அண்ணனுக்கு வேலை கிடைத்ததும் எப்படியும் தனக்கொரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்து விடுவான் என ரகசியமாய் மனதிற்குள் நினைத்து மகிழ்ந்த சுமதி, தன் கனவு பாதியில் கலைந்து போனதில் பெரிதும் குலைந்து போகிறாள். அவள் கண்களில் கண்ணீர் மற்றவர் அறியாமல் சுண்டி விட்டுக் கொள்கிறாள்.

    தியாகு, நம்ம வீட்ல இருக்கிற நகைகளை வித்துட்டா…

    அம்மா, அதை மட்டும் எப்பவும் சொல்லாதீங்கம்மா. அந்த நகைகளை மனசுல வச்சிட்டுத்தான் நம்ம சுமதிக்கு ஒரு நல்ல இடம் பார்க்கலாம்னு நான் இருக்கேன். கல்யாண செலவுல நகை வேற செய்து போடணும்னா நம்மால முடியுமா? அதை மட்டும் சொல்லாதீங்கம்மா!

    அந்த நகைகளை அடகு வச்சா கூட பத்தாயிரத்துக்கு மேல வட்டிக்கடையில தர மாட்டாங்க தியாகு. அப்புறம் என்ன செய்யப்போறே தியாகு

    அதான்மா கஷ்டமா இருக்கு. கைக்கு கிடைச்சும் வாய்க்கு கிடைக்காது போல இருக்கு என்ன செய்யறதுன்னே புரியலைம்மா!

    மீனாட்சி குழம்பில் கரண்டி துழாவிக் கொண்டிருந்தவள் மனதிற்குள் அந்த முடிவிற்கு வருகிறாள். மகன் அறியாமல் நகைகளை விற்று விடுவது. அப்புறம் எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம் என நினைக்கிறாள்.

    மகனிடம் துணிந்து பொய் சொல்கிறாள் மீனாட்சி. நீ ஒண்ணுத்துக்கும் கவலைப் படாதே தியாகு. நான் வீட்டு சொந்தக்காரர்கிட்டே கடன் வாங்கி கொடுக்கிறேன்"

    அவர் வீட்ல இருக்கப் போறாராமா?

    இல்லை. இன்னும் வெளியே போனவர் வரலை. தியாகு, நாம விஷயம் சொல்லி கேட்டா கட்டாயம் குடுப்பார். நீ வேலையில் ஜாயின் செய்துடலாம். கவலைப்படாதே சுமதி, உட்கார்ந்து சாப்பிடும்மா. நான் பார்த்துக்கறேன். யாரும் கவலைப்படாதீங்க

    இவர்கள் பேச்சைத் தெளிவாய் வீட்டுச் சொந்தக்காரர் நாகரத்தினம் கேட்டுக் கொண்டேதான் இருந்தார். ஆனால் எதுவும் தெரியாததுபோல நடந்து கொண்டார். சொல்லத் துணிந்த பொய் தன்னையும், தன் குடும்பத்தையும் எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறது என்பதை அப்போது சுத்தமாய் உணரவேயில்லை மீனாட்சி.

    2

    பனகல் பார்க் அருகே மீனாட்சி காத்திருந்தாள். தொலைபேசியில் செய்தி சொன்னதும், மாலை நான்கு மணிக்கு வருவதாய் சொல்லியிருந்தாள் லதா. சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றுவாள் என்கிற நம்பிக்கையில், கடந்த அரை மணியாய் கடந்து போகின்ற வாகனங்களைப் பார்த்து, இதில் லதா வருவாளா என ஆதங்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

    நேற்றிரவு தியாகு வந்து சொன்னதும் ஒரு விநாடி இருபத்தைந்தாயிரம் ரூபாய் என்பதில் மலைத்துத்தான் போனாள் மீனாட்சி. வீட்டில் இருக்கும் நகைகளை விற்று எப்படியும் சமாளித்து விடலாம் என்றால், அதற்கும் வழி கொடுக்காமல் சுத்தமாய் பிள்ளை மறுக்கிறானே என்பதில் கோபம். எரிச்சல். ஆனால் வெளியே காண்பிக்க முடியவில்லை. பணத்திற்காக கிடைக்க இருக்கும் வேலை எங்கே கிடைக்காமல் போய் விடுமோ என அவன்பட்ட கிலேசம், சாப்பிடப் பிடிக்காமல் சோற்றில் கை அளைய... அப்போதே முடிவு செய்து விட்டாள் மீனாட்சி. நகைகள் விற்று பணத்தைப் புரட்டி விடுவது. அப்புறம் எப்பாடு பட்டாவது சிறுகச் சிறுக புத்தம் புதிய நகைகள் செய்து விடுவது என்று. அதற்குத்தான் லதாவை வரச்சொல்லி தொலைபேசியில் சொல்லியிருந்தாள்.

    ஆறு மாதம் வரை இவர்கள் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் குடியிருந்து போன குடும்பம் அது. லதா, அவள் தாயார் மட்டுமே. லதா எதிலும் சூட்டிகையான பெண். தனியார் சுய சேவை அங்காடியில் சூபர்வைசிங் பெண்ணாய் வேலை பார்க்கிறாள்.

    எதிலும் துணிந்து முடிவு எடுப்பாள். இவள் எதிர்பார்த்து நிற்கையில் ஆட்டோ வந்து நிற்க, அதிலிருந்து இறங்கி ஆட்டோவிற்குப் பணம் கொடுத்துவிட்டு சிரித்தபடி இவள் தோளை வந்து தொட்டாள் லதா.

    "சாரி அத்தை.

    Enjoying the preview?
    Page 1 of 1