Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uttra Thozhi
Uttra Thozhi
Uttra Thozhi
Ebook202 pages1 hour

Uttra Thozhi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாம் கேள்விப்படும் எல்லா உண்மைக்குள்ளும் ஒரு புனையப்பட்ட கதை நூலிழையேனும் ஒட்டிக்கொண்டு இருக்கும். உண்மைக்கும் ஒரு அணிகலம் தேவை. அந்த அலங்காரம் தான் அதன்பால் நமது கவனத்தைக் கொண்டு செல்லும். புனையப்படும் கற்பனை கதைகளின் பின்னேயும் கண்டிப்பாக ஏதோ ஒரு உண்மை ஒளிந்து தான் இருக்கும். பார்த்த காட்சிகள், ரயில் ஸ்நேஹம் போலப் பாதியில் முடிந்த நட்பு , தண்டவாளமாய், விட்டு அகலாமல் உடன் ஓடும் உறவுகள், அன்றாடம் நாம் காணும் சக மனிதர்கள், நமக்கு ஏற்படும் அனுபவங்கள், சமூகத்தில் ஏற்படும் நல்லவையும், அல்லாதவையும், குழந்தைகள், விலங்குகள் என்று நம்மைச் சுற்றி இருக்கும் உலகின் தாக்கம், கற்பனையோடு இழைத்துத் தொடுத்த கதைகள் தான் உற்ற தோழி என்ற இந்தப் புத்தகம்.

Languageதமிழ்
Release dateMar 2, 2024
ISBN6580176410767
Uttra Thozhi

Related to Uttra Thozhi

Related ebooks

Reviews for Uttra Thozhi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uttra Thozhi - Visalam Muralidharan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உற்ற தோழி

    Uttra Thozhi

    Author:

    விசாலம் முரளிதரன்

    Visalam Muralidharan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/visalam-muralidharan

    பொருளடக்கம்

    புதினா கட்டும் , நூடுல்ஸ்ம்

    144

    அழகி

    கமலாம்பாளும் காமினியும்

    உணர்வுகள்

    கஃபே காதல்

    உற்றத் தோழி

    கனவுக் காதலி

    ஒரு மணி நேரம்

    சொல்ல வந்தது

    ரியாலிட்டி செக்

    முருகன்

    ஓய்வு

    தண்டனை

    ரயில் பயணம்

    பை

    பயம்

    பண்டாரச்சாமி

    தத்து

    ட்ரஸ்ட்

    புதினா கட்டும் , நூடுல்ஸ்ம்

    அவசர அவசரமாகக் கேட்டைத் திறந்தாள் விமலா. வாசலில் கைகளை நெஞ்சிற்கு குறுக்கே கட்டி முறைத்தபடி மணிகண்டன்.

    உனக்கு நான் வேலையிலிருந்து வர நேரம் தான் கரெக்ட்டா கதவை பூட்டிக்கிட்டு வெளில போகணுமா?

    காய்கறி தீர்ந்து போச்சு, காபிப்பொடி வேணும். மார்க்கெட் போயிட்டு நீங்க வரத்துக்குள்ள வந்துடலாம்னுத் தான் போனேன். நீங்க இன்னிக்கி வழக்கத்தை விட பத்து நிமிடம் முன்னாடியே வந்து இருக்கீங்க, விமலா கையில் இருந்த பெரிய பையைக் கீழே சாய்த்து வைத்து விட்டு பூட்டைத் திறக்க முயற்சி செய்தாள்.

    "உன் போன் எங்க?’ மணிகண்டன் கேட்டான்.

    பைக்குள்ள இருக்கு. இத்தனை சாமான் தூக்கிட்டு அதை எப்படி கைல வச்சுக்க முடியும்?

    பதில் சொல்லிக் கொண்டே விமலா உள்ளே சென்றாள்.

    சாய்த்து வைக்கப்பட்டப் பையில் இருந்து ஒரு பாலத்தீன் பை நழுவி விழுந்தது. புதினாக் கட்டுக்கள்.

    அதைத் தூக்கி கையில் வைத்துப் பார்த்துக் கொண்டு இருந்த மணிகண்டன்,’ போன் ஒழுங்கா எடுத்து பாத்து இருந்தா நான் சீக்கிரம் வருவேன்னு தெரிஞ்சு இருக்கும். ஒரு அவசரத்துக்கு உன்ன நம்ப முடியாது. அபர்ணா உன்ன பத்து தடவ கால் பண்ணி நீ எடுக்காம இருந்ததுல பயந்து போய் எனக்கு கால் பண்ணினா".

    கைப்பையில் இருந்து போனை எடுத்துப் பார்த்தாள். ஆறு மிஸ்ட் கால்ஸ். அபர்ணா நான்கு முறை கால் செய்து இருந்தாள் மற்ற இரண்டும் மணிகண்டனிடம் இருந்து. அபர்ணா நம்பர் டயல் செய்தாள்.

    என்னம்மா அவசரத்துக்கு போன் எடுக்க மாட்டேங்கற. காலேஜ் விட்டாச்சு. இங்க எதோ ஸ்ட்ரைக். பஸ் ஓடல. என்னோட மொபைல் டேட்டா காலி. ஒரு ஓலா ஆட்டோ புக் பண்ண உன்னைத் கால் பண்ணினா நீ எடுக்கவே இல்ல

    இவளா நான் போன் எடுக்காததுக்கு பயந்து போனவள். அவள் அவசரத்துக்கு கேட்டு இருக்கிறாள்.

    காய்கறி வாங்கப் போனேன். இப்போ எங்க இருக்க? ஆட்டோ கூப்பிடவா? குரலில் கொஞ்சம் பதட்டம்.

    வேண்டாம், அப்பா கிட்ட பேசிட்டேன். வந்துகிட்டே இருக்கேன். பசிக்குது சாப்பிட ஏதாவது ரெடியா வை

    மணிகண்டனை முறைத்தாள் விமலா. அவன் கையில் இருந்த புதினா கட்டுகளை ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தான்.

    எதுக்கு இவ்ளோ கட்டு வாங்கினே? என்ன விலை?

    மூணு கட்டு பதினஞ்சு ரூபா, விமலா அடுத்த கேள்விக்குத் தயாரானாள்.

    என்னது. பதினைஞ்சா? நேத்திக்கி பத்து ரூபாய்க்கு மூணு கட்டு நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டு வந்தேன். மணிகண்டனுக்கு கடுப்புடன் சொன்னான்.

    ஆமாம், இலையே இல்லாம வெறும் கட்டையை கட்டி குடுப்பாங்க. இப்போ சீசன் இல்ல, எப்படி கம்மி விலைக்கு கிடைக்கும்? இதுவே கட்டு ஆறு ரூபா. மூணு கட்டு வாங்கினா தான் இந்த விலை.

    விமலா பொறுமையாக விளக்கினாள்.

    அப்போ ஆறு ரூபாக்கு ஒண்ணு வாங்கி இருக்கலாம். ஒன்பது ரூபா நஷ்டம்.

    மணிகண்டனுக்கு இதை விட மனம் இல்லை.

    நம்ம வீட்டுக்கு ஒரு கட்டு பத்தாது. ரெண்டு கட்டு மினிமம் வேணும் துகையல் அரைக்க. இன்னும் ஒரு கட்டு ஆஞ்சு வெச்சா பிரியாணி, இல்ல பிரிஞ்சி செய்யும் போது போட்டுக்கலாம். இல்லனா நாளைக்கு சுந்தரி வேலைக்கு வரும் போது அவளுக்கு குடுக்கலாம்,

    விமலா சோபாவில் உக்கார்ந்துக் கொண்டாள்.

    அவசரமாக அவள் எதிரில் அமர்ந்தான் மணிகண்டன்.

    சுந்தரிக்கு எதுக்கு? அவ செய்யற வேலைக்கு, எனக்கு குடுக்கறதுக்கு முன்னாடி முதல் டிகாஷன் காபி, அப்புறம் டிபன். இதுல புதினா, காய்கறி, எல்லாம் வேற குடுக்கணுமா?

    விமலா ஒன்றும் பேசவில்லை. "நான் கேட்டதுக்கு பதில் சொல்லு, உனக்கு மூணாவது கட்டு யூஸ் இல்ல. அது சும்மா வாங்கினேன்னு ஒத்துக்கோ. நானா இருந்தா இதே மூணு கட்டை பத்து ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கி இருப்பேன். உனக்கு பெரிய கர்ணன் பரம்பரைன்னு நெனப்பு. விலை கேட்டு கொஞ்சம் பேசி விலை கொறைச்சு பண்ணி வாங்க உங்க கெளரவம் ஒத்து வராதோ?’

    இனிமேல் காய்கறி வாங்கும் வேலையை கண்டிப்பாக இவர் வருவதற்குள் முடித்து விட வேண்டும்.

    இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு? சுந்தரி நம்ம கிட்ட இருபது வருஷமா விடாம வேலை செய்யறா. அக்கம் பக்கம் எல்லாரும் மாசத்துக்கு மூணு ஆளு மாத்தறாங்க. நமக்கு அவ ரொம்ப விசுவாசமா இருக்கா. கொஞ்சம் குடுத்தா என்ன?

    நீ குடுக்கற எடத்துல தான் அவ இஷ்டத்துக்கு வேலை செய்யறா. மாடி பாதி நாள் பெருக்கறதே இல்ல. நீ கவனிச்சா தானே. மணிகண்டன் விடுவதாக இல்லை.

    எல்லாத்தையும் நானே கவனிக்கணும்ன்னு இல்லை. நீங்களும் கொஞ்சம் கவனிக்கலாம். விமலாவும் சளைக்காமல் பதில் கொடுக்க முனைந்தாள்.

    இப்போது மணிகண்டன் கொஞ்ச நேரம் மௌனம் காத்தான்.

    "ஆனாலும் இந்த புதினாக்கு பதினஞ்சு ரூபா ஜாஸ்தி. நானா இருந்தா அடிச்சுப் பேசி வாங்கி இருப்பேன்’,

    உங்கள மார்க்கெட்ல இருக்கறவா எப்படி கூப்படறாங்க தெரியுமா? பிசுக்கின்னு. விமலா சிரித்துக் கொண்டே சொன்னாள்.

    "யாரு சொன்னது அப்படி?’ மணிகண்டனுக்கு கோபம் வந்தது.

    யாரோ ஒருத்தன், நான் காய்கறி வாங்கும் போது பக்கத்துல இருக்கறவன் கிட்ட சொல்றான். இவிங்க தான் அந்த பிசுக்கி மணி ஐயா சம்சாரம் அப்படின்னு. இப்படி பேரம் பேசினா வேற என்ன சொல்லுவாங்க?

    ஓ அது உனக்கு பரவாயில்லயா? எவனோ என்னைப் பத்திப் பேசினா நீ எப்படி கேட்டுகிட்டு சும்மா இருந்த? நீ எப்படி என் புருஷனப் பேசலாம்னு அங்கேயே கேட்டு இருக்க வேண்டாம்? மணிகண்டனுக்கு எரிச்சல் மூண்டது.

    அவன் மூஞ்சிக் கூட நான் பாக்கல. யாருன்னே தெரியாம ரோட்ல நின்னு சண்டை போட முடியுமா? என்னப் பேசறீங்க? விமலாவிற்கு இந்த உரையாடல் அலுப்பு தந்தது.

    எனக்கென்னவோ அங்க யாரும் சொல்லல. நீயே கட்டுக்கதை கட்டற மாதிரி தோணுது. நீ செஞ்சதை சொல்லிக் காமிச்சதுக்கு பதிலடியா?

    வாசலில் ஆட்டோ நிற்கும் சத்தம். அபர்ணா வேகமாக உள்ளே வந்தாள். அப்பா, ஒரு டூ பிப்டி குடு, ஆட்டோக்கு குடுக்கணும்.

    எதுக்கு அவ்ளோ? சாதாரணமா உங்க காலேஜில் இருந்து இங்க வர ஐம்பது ரூபா தானே?, விமலா ஆச்சர்யமாகக் கேட்டாள்.

    அம்மா, பஸ் ஸ்ட்ரைக். ரேட் ஜாஸ்தி பண்ணிட்டாங்க, மணிகண்டனிடம் இருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடினாள்.

    நீங்கத் தானே அவளுக்கு புக் பண்ணினீங்க? நீங்க ரேட் பாக்கலியா?, மணிகண்டனிடம் கேட்டாள்

    பாத்தேன். என்ன செய்ய முடியும்? அவ வீட்டுக்கு வந்து சேரணும்ல?, மணிகண்டன் கையை விரித்தான்...

    சாதாரணமா ஆட்டோ பிடிச்சு வந்து இருந்தாலே நூறு ரூபால முடிஞ்சு இருக்கும்,

    வேகமாக உள்ளே வந்த அபர்ணா, "அம்மா ரொம்ப பசிக்குது. என்ன இருக்கு சாப்பிட?’

    கொஞ்சம் இரு உப்புமா செய்யப் போறேன். நீ குளிச்சுட்டு வா. அதுக்குள்ள சூடா ரெடியா இருக்கும் விமலா கீழே கிடந்த பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல எழுந்தாள்.

    ஐயோ. உப்புமாவா? ப்ளீஸ். நானே நொந்து போய் வந்து இருக்கேன். கொஞ்சம் வேற எதாவது சொல்லு. இல்லனா ஸ்விக்கில ஆர்டர் பண்ணிடலாம். எனக்கு நூடுல்ஸ் வேணும்.

    அபர்ணா சிணுங்கினாள்.

    மணிகண்டன் விமலாவைப் பார்த்தான். பாவம் அவ கேக்கறத பண்ணிக் கொடு.

    "வீட்ல நூடுல்ஸ் பாக்கெட் இல்ல. வாங்கிட்டு வந்து பண்ற நேரத்துக்கு நான் உப்புமா செஞ்சுடுவேன்.

    அபர்ணா ப்ளீஸ் அப்பா. எனக்கு நூடுல்ஸ் தான் வேணும்

    மணிகண்டன் தன் போனை எடுத்து ஸ்விக்கி நம்பர் தேடி ஆர்டர் செய்யத் தொடங்கினான்.

    ‘ஒரு நாள் தானே. போன போறது. நீயும் டயர்டா இருக்க. எல்லாருக்கும் சொல்லிடலாம். வேற என்ன வேணும் உனக்கு அப்பு, நூடுல்ஸ், அப்புறம்?’

    அப்பாவும் பெண்ணுமாய் எதோ ஆர்டர் செய்துக்க கொண்டு இருந்தார்கள். விமலா தன கையில் இருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து, கிச்சனை சீர் செய்து வைத்து திரும்பி வந்தாள்.

    என்ன ஆர்டர் பண்ணியாச்சா?’ அவ வேற பசிக்குதுன்னு சொன்னாளே, அபர்ணாவைத் தேடினாள்.

    அவ குளிக்கப் போயிருக்கா. இன்னும் அரை மணி நேரத்துல வந்துடும். ஒரு ஆயிரத்து முந்நூறு தயாரா வெச்சுக்கோ, மணிகண்டன் டிரஸ் மாற்ற உள்ளே சென்றான்.

    என்ன அவ்ளோ விலை?, விமலா திகைத்துப் போய் கேட்டாள்.

    வெறும் நூடுல்ஸ் பாத்தாது. டாக்கோஸ்,சாகோ லாவா கேக் எல்லாம் ஆர்டர் பண்ணியிருக்கு. இன்னிக்கி ஆஃபர் அதான் இவ்ளோ சீப். இல்லனா இதை விட அதிகம் ஆகும், மணிகண்டன் ரொம்பப் பெருமையாகச் சொன்னான்.

    வீட்டுக்கு வந்த நேரத்துக்கு வேலை செய்ய விட்டிருந்தால், மூணு பேருக்கும் சமையலே செஞ்சு முடிச்சு இருப்பேன். ரொம்ப பசிக்குதுன்னு பிடிவாதம் பிடிச்சவளுக்கு இப்போ ஒரு மணி நேரம் காக்க முடியுது. ஆயிரத்து முந்நூறு எடுத்து வைன்னு சாதாரணமா சொல்றீங்க. பதினஞ்சு ரூபாய்க்கு உள்ள நுழைஞ்சதில் இருந்து பட்டிமன்றம் நடந்துச்சு இங்க, விமலா பேசுவது கேட்காததுப் போல மெல்ல நழுவினான் மணிகண்டன்.

    நூடுல்ஸ் டாக்கோஸ் எல்லாம் பிரித்து சாப்பிடும் போது அந்த புதினா விற்ற சிறுவன் முகம் கண்ணுக்குள் தோன்றி மறைந்தது/ இனிமேல் வாங்கினால் மூன்று கட்டுக்கும் உரிய காசு குடுக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் விமலா.

    சாப்பிட்டு கை கழுவ உள்ளே சென்ற மணிகண்டனின் நாசியைப் புதினாவின் மணம் தொட்டது.

    இங்க கொண்டு வை, விமலா நான் உனக்கு இதை ஆஞ்சு தரேன். கொஞ்சம் அசடு வழிந்தபடி சொன்னான் மணிகண்டன்.

    144

    அம்மா! அப்பா வந்துட்டாரு கத்திக் கொண்டே வாசலுக்கு ஓடினான் முருகன். வாயிலைத் தாண்டி நின்று காலணிகளைக் கழற்ற முயற்சித்த கேசவன் தோளில் தாவினான். இருடா ஷூவ கழட்ட விடு, சிரித்தபடி தன் முயற்சியை கைவிட்டு முருகனைத் தோளுக்கு மேல் தூக்கி தட்டாமாலை சுற்றினான். சத்தம் கேட்டு பக்கத்து போர்ஷன் அன்னம்மா பாட்டி வெளியே வந்தாள்.

    என்னப்பா கேசவா, மாசமா இருக்குற பொண்ணு, ரெண்டுகெட்டான் வயசுல புள்ள, ரெண்டு பேரையும் விட்டு இப்படி நாள் கணக்கா வேலை வேலைனு அலையுற. அதுக்கு வலி எடுத்தா என்ன செய்யும். எந்நேரமும் பிரசவம் ஆகலாம்னு டாக்டர் அம்மா சொல்லி இருக்காங்க. வயித்த தூக்கிட்டு அது தனியா படர பாடு பாக்க முடியல

    "மகனை கீழே இறக்கினான். அவன் கையில் இருந்த பையைப் பறித்துக் கொண்டு உள்ளே ஓடினான் முருகன்.

    என்ன செய்ய பாட்டி? தேர்தல் நேரம். இன்னும் ரெண்டு நாள் தான். அப்புறம் பிரச்சாரம் நிறுத்திருவாங்க. அப்புறம் ரெண்டு நாள் தேர்தல். ஒண்ணும் பிரச்சனை இல்லாம முடிஞ்சா ஒரு வாரத்துல இந்த கெடுபிடி எல்லாம் முடிஞ்சுரும். எனக்கு மட்டும் ஆசையா, இப்புடி போக? பொழப்பு அப்புடி,

    பெருத்து சரிந்த வயிற்றை ஒரு கையால் பிடித்தபடி சாந்தி வெளியே வந்தாள். சோர்ந்து கிடந்த கண்களில் கேசவனைப் பார்த்ததில் ஒரு மின்னல்.

    நீங்க பக்கத்துல இருக்குற தைரியம் தான் பாட்டி. எதாவது ஒண்ணுன்னா நீங்க பாத்துக்க மாட்டீங்களா? சிரித்தபடி அன்னம்மாவை கேட்டான் கேசவன்.

    என்னப்பா இப்படி கேட்டுபுட்டே. அப்பன் ஆத்தா இல்லாத பொண்ணு. உன்னையே நம்பி இருக்குது. நாங்க எத்தனை பேரு பக்கத்துல இருந்தாலும் உன் ஒருத்தன் துணை மாதிரி வருமா? உம்மேல உசுரையே வெச்சு இருக்கு அந்த பொண்ணு,

    போதும் பாட்டி வந்த புருஷன வாசலோட விரட்டி விட்டுறாத. எனக்கு தெரியும் அவர் வேலை முடிஞ்சு வர வரைக்கும் நான் பெத்துக்க மாட்டேன், சாந்தி மெதுவாக வாசலைத் தாண்டி வந்தாள்.

    பையில் இருந்த ஸ்வீட் பொட்டலத்தை எடுத்தபடி ஓடி வந்தான் முருகன். "இது எனக்கா அப்பா?’

    கேட்ட மகனை அணைத்து முத்தமிட்ட கேசவன்,அதுல இருக்குற எல்லாமே உனக்கு தான் என்றபடி உள்ளே நுழைந்தான்.

    ஏய் முருகா, இந்த பாட்டிக்கு கொஞ்சம் குடுடா, என் கூட வா. ஒரு பொம்மை நான் தரேன் என்றபடி முருகன் கைப்பற்றி தன் போர்ஷனுக்குள் அழைத்துச் சென்றாள் அன்னம்மா.

    பத்துக்கு பத்து அறை. அதன் மூலையில் ஒரு கட்டில். பக்கவாட்டில் ஒரு பீரோ. அதை தாண்டிச் சென்றால் ஒரு சின்ன சமையலறை. பின்புறத்தில் ஒரு பாத்ரூம். கட்டிலில் உக்கார்ந்த கேசவன் உள்ளே போக முயன்ற சாந்தியின் கையைப் பற்றினான்.

    அந்த கிழவிக்கு இருக்கற புத்தி உனக்கு இல்ல. நாள் கழிச்சு வந்த புருஷனோட ஆசையா நீ இருக்கணும்னு புள்ளைய உள்ளே கூட்டிட்டு போயிடுச்சு. நீ என்னடானா... உள்ள போன அவன் வரதுக்குள்ள ஒரு முத்தமாவது தா.

    சிரித்தாள் சாந்தி.

    Enjoying the preview?
    Page 1 of 1