Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Corona Kalathu Kurunovelgal - Part 2
Corona Kalathu Kurunovelgal - Part 2
Corona Kalathu Kurunovelgal - Part 2
Ebook157 pages59 minutes

Corona Kalathu Kurunovelgal - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

21ம் நூற்றாண்டு சந்தித்த மிகப் பெரிய சவால் கொரானா காலமாகும். உலகமே முடங்கிக் கிடந்தது. வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சினார்கள். முடங்கி விட்டார்கள். நானும் அவ்வாறுதான் வீட்டுக்குள் முடங்கிவிட்டேன். ஆனால் எதையாவது செய்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது. என்னுடைய பணி எழுதுவது. குறுநாவல்கள் எழுத ஆரம்பித்தேன். ஆறு குறுநாவல்கள் எழுதினேன். இந்தத் தொகுதியில் மூன்று குறுநாவல்கள் இருக்கின்றன. இந்த நாவல்களில் வருகின்ற கதாபாத்திரங்கள் கூட கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பதுதான் கதைக்களமாக இருக்கிறது.

ஆதிகாலம் தொட்டு உலகத்தில் காதலுக்கும், பணத்துக்குமான யுத்தம் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. ஈமகேஷ் நல்லவனா கெட்டவனா? எதற்காக அவன் நண்பர்களான சரண்யாவும், தீபக்கும் அவனைக் கைவிட்டார்கள்? சவீதா என்ன முடிவு எடுத்தாள்? இப்படி கதை தன் போக்கில் செல்கிறது. நாமும் அப்படி போகலாம். இரண்டாம் குறுநாவல் “வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ”--அறிமுகம் படிக்கும் காலத்திலிருந்தே நவீனும், நளினியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அவர்களுக்கு நளினியின் அம்மா நிர்மலா ஒரு பிரச்னையாக உருவெடுக்கிறாள். அவள் அவர்களை ஆதரிக்கிறாளா எதிர்க்கிறாளா என்பது இரு வீட்டாருக்கும் புரிபடவில்லை. அவர்கள் காதல் நிறைவேறியதா, நிர்மலா மனம் மாறினாளா? நாவலில் தெரிய வரும். மூன்றாம் குறுநாவல் “இனிமை நினைவுகள் தொடரட்டுமே” அறிமுகம் நளினியை ஒரு கல்யாண ரிசப்ஷனில் முதன் முதல் சந்திக்கிறான்.சுந்தர். மேடையில் அவள் பாடிய பாடலைப் பாராட்டுகிறான். நளினிக்கும் அவனைப் பிடிக்கும் போலிருந்தது. நடுவில் தேவகி என்ற பெண் போட்டியாக வருகிறாள். யார் இதில் வென்றார்கள். நாவலில் தெரிந்துவிடும்

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580115211034
Corona Kalathu Kurunovelgal - Part 2

Read more from Ananthasairam Rangarajan

Related to Corona Kalathu Kurunovelgal - Part 2

Related ebooks

Reviews for Corona Kalathu Kurunovelgal - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Corona Kalathu Kurunovelgal - Part 2 - Ananthasairam Rangarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொரானா காலத்து குறுநாவல்கள் - பாகம் 2

    Corona Kalathu Kurunovelgal - Part 2

    Author:

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Ananthasairam Rangarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ananthasairam-rangarajan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. என் வானிலே ஒரே வெண்ணிலா

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    2. வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    3. இனிமை நினைவுகள் தொடரட்டுமே!

    அத்தியாயம் 1.

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    முன்னுரை

    21ம் நூற்றாண்டு சந்தித்த மிகப் பெரிய சவால் கொரானா காலமாகும். உலகமே முடங்கிக் கிடந்தது. வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சினார்கள். முடங்கி விட்டார்கள். நானும் அவ்வாறுதான் வீட்டுக்குள் முடங்கிவிட்டேன். ஆனால் எதையாவது செய்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது. என்னுடைய பணி எழுதுவது. குறுநாவல்கள் எழுத ஆரம்பித்தேன். ஆறு குறுநாவல்கள் எழுதினேன். இந்தத் தொகுதியில் மூன்று குறுநாவல்கள் இருக்கின்றன. இந்த நாவல்களில் வருகின்ற கதாபாத்திரங்கள் கூட கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பதுதான் கதைக்களமாக இருக்கிறது.

    முதல் குறுநாவல் என் வானிலே ஒரே வெண்ணிலா அறிமுகம்—

    ஆதிகாலம் தொட்டு உலகத்தில் காதலுக்கும், பணத்துக்குமான யுத்தம் நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது. ஈமகேஷ் நல்லவனா கெட்டவனா? எதற்காக அவன் நண்பர்களான சரண்யாவும், தீபக்கும் அவனைக் கைவிட்டார்கள்? சவீதா என்ன முடிவு எடுத்தாள்? இப்படி கதை தன் போக்கில் செல்கிறது. நாமும் அப்படி போகலாம்.

    இரண்டாம் குறுநாவல் வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ--அறிமுகம்

    படிக்கும் காலத்திலிருந்தே நவீனும், நளினியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.

    அவர்களுக்கு நளினியின் அம்மா நிர்மலா ஒரு பிரச்னையாக உருவெடுக்கிறாள். அவள்

    அவர்களை ஆதரிக்கிறாளா எதிர்க்கிறாளா என்பது இரு வீட்டாருக்கும் புரிபடவில்லை.

    அவர்கள் காதல் நிறைவேறியதா, நிர்மலா மனம் மாறினாளா? நாவலில் தெரிய வரும்.

    மூன்றாம் குறுநாவல் இனிமை நினைவுகள் தொடரட்டுமே அறிமுகம்

    நளினியை ஒரு கல்யாண ரிசப்ஷனில் முதன் முதல்

    சந்திக்கிறான்.சுந்தர். மேடையில் அவள் பாடிய பாடலைப்

    பாராட்டுகிறான். நளினிக்கும் அவனைப் பிடிக்கும் போலிருந்தது.

    நடுவில் தேவகி என்ற பெண் போட்டியாக வருகிறாள். யார் இதில்

    வென்றார்கள். நாவலில் தெரிந்துவிடும்

    1. என் வானிலே ஒரே வெண்ணிலா

    அத்தியாயம் 1

    இரவில் மின்னலும் இடியுமாக மழை பெய்ததில் சரண்யா பால்கனி கதவைத் திறந்ததும் விஸ்ஸென்று சில்லிட்ட காற்று வீசியது. தன் கட்டிலில் உட்கார்ந்து அந்தக் குளிரை அனுபவித்துக்கொண்டே அந்தக் காலை எட்டு மணியில் கையைச் சூடாகத் தேய்த்துக்கொண்டாள். பணி விடுமுறை எடுத்துக்கொண்டு அத்தை வீட்டுக்கு வந்திருக்கிறாள்.

    டிவில சொல்றான் இந்த மழை பலமா இருக்கும்னு. காய்கறி லாரி வந்திருக்குனு கம்யூனிட்டி வாட்ஸப்ல தீபக் போட்டிருக்கான். நீ போய் வாங்கினு வா என்றாள் அறைக்குள் எட்டிப் பார்த்த பர்வதம்.

    சரி அத்தை என்று நைட்டியிலிருந்து சுடிதாருக்கு மாறினாள் சரண்யா.

    ஹாலில் லேப்டாப்பை ஆஃப் செய்த தீபக், அம்மா, அபார்ட்மெண்ட் செகரட்டரிங்கற முறையில நான் கீழே போய் ஆர்கனைஸ் பண்ணனும். சரண்யாவை நீ எதுக்கு வீணா அனுப்பறே? என்றான்.

    எனக்கு போர் அடிக்குது. நானும் வர்றேன் என்று சரண்யா சொல்ல இரண்டு பேரும் பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். லிஃப்ட் மக்கர் செய்தது. அதனால் படிகளில் இறங்கினார்கள்.

    என்னப்பா செகரட்டரி நீ... உன் ராஜ்ஜியத்துல லிஃப்ட் வேலை செய்யமாட்டேங்குது என்று அவனைக் கலாய்த்தாள் சரண்யா.

    அந்த எட்டு மாடி அபார்ட்மெண்டில் நாலு பிளாக்குகளில் 500 ஃப்ளாட்டுகள் இருந்தன. கொரானா லாக்டவுன் பீரியடில் லாரியில் வாசலுக்கே வந்து காய்கறி விற்றார்கள். மெயின் கேட் அருகே ஒரு திறந்தவெளியில் லாரி நின்றிருந்தது. தீபக் அவனுக்குத் தெரிந்த ஒரு வியாபாரியை ஏற்பாடு செய்திருந்தான்.

    லாரிகாரன் தீபக்கைப் பார்த்து சல்யூட் அடித்தான். காய்கறி வாங்க ஃப்ளாட்வாசிகள் க்யூவில் நின்றார்கள். எல்லாரும் முக கவசம் அணிந்திருந்தார்கள்.

    லாரியில் வந்த இளைஞன் ஒருவன், சரண்யாவைப் பார்த்து, நடையா, இது நடையா, ஒரு நாடகம் அன்றோ நடக்குது. இடையா இது இடையா... என்று பாடியவாறு அவள் பக்கத்தில் கையை ஆட்டியபடி வந்தான்.

    டேய், ஜாக்கிரதை என்றாள் பாப் தலை சரண்யா.

    என்னாம்மா ராங் பேசறே ... டேய்ங்கறே. நீதான் ஜாக்கிரதையா இருக்கணும் என்று சொல்ல, சரண்யா அவனை கராத்தே ஷாட் அடித்துக் குப்புறத் தள்ளினாள். அவன் கையிலிருந்த செல்போன் கீழே விழுந்து ணங் என்றது.

    தீபக் அவர்களை விலக்கிவிட்டான்.

    அதைப் பார்த்த காய்கறியை எடை போட்டுக்கொண்டிருந்த லாரி ஓனர்

    என்னம்மா என் பையனை இந்த அடி அடிக்கிறே.? என்று லாரியிலிருந்து இறங்கி சரண்யா முன் வந்தான்.

    அவன் என்னை பாத்து கேலியா பாடினான். அதுக்குதான் அடிச்சேன். பாடினா பரவாயில்ல. கண்ட சைகை எல்லாம் காட்டறான்.

    சரண்யா நீ சும்மா இரு. இவங்க யார் தெரியுமா ஐபிஎஸ் படிச்ச போலீஸ். நம்ம மாவட்டத்துல எஸ்.பியா இருந்தவங்க என்று தீபக் சரண்யாவைப் பற்றிச் சொன்னதும், மடித்த லுங்கியை கீழே இறக்கிவிட்ட லாரி ஓனர். சாரிம்மா, மன்னிச்சிடுங்க. தெரியாம கேட்டுட்டேன் என்றான் பவ்யமாய். தன் மகன் முதுகில் இரண்டு அடி போட்டான்.

    இன்னொரு வாட்டி அவனை இங்கே அழைச்சு வாராதீங்க என்றான் தீபக்.

    ஐயா, இன்னிக்கி எடை போடறவன் லீவு. எனக்கு உதவியா இவன் வந்தான் என்று சொல்லி மீண்டும் லாரிக்குள் அமர்ந்து சரண்யாவை முன்னே வரச்சொல்லி பயபக்தியோடு அவளுக்குக் காய்கறியை அளந்தான்.

    அங்கே காய்கறி வாங்க வந்த பெண்டிர் கூட்டம் சரண்யாவை மொய்த்துக்கொண்டு விசாரித்தனர். உங்களை எங்கியோ பாத்த மாதிரி இருக்கேனு நெனச்சேன். அரசியல்வாதி தேவனை நீங்கதானே கைது பண்ணிங்க? டிவில கூட வந்து பேசினீங்க என்றாள் ஒரு டிவி அடிக்ட் பெண்மணி.

    அதனாலே உங்களை மாத்திட்டாங்களாமே. ஒன் இண்டியாவ்ல படிச்சேன் என்றாள் ஒரு செல் நோண்டி. சரண்யா சிரித்துக்கொண்டே பட்டும் படாமலும் பதில் சொல்லிவிட்டுப் போனாள்.

    ஒரு அடிதடி கேஸில் தேவன் என்கிற ஒன்றிய சேர்மன் ஈடுபட்டதும், அவனைக் கைது செய்துவிட்டாள் சரண்யா. மாவட்டத்தில் அவள் கெடுபிடிகளைச் சகித்துக்கொள்ளாதவர்களின் புண்ணியத்தில் ஒரு எஸ்பியாக இருந்த அவளை ஒரு உபயோகமில்லா துறைக்கு மாற்றிவிட்டார்கள். அவள் லீவ் எடுத்துக்கொண்டு அத்தையைப் பார்க்க மேடவாக்கத்திற்கு வந்தாள்.

    அவளைப் பார்த்து இளவட்டங்கள் இப்படிக் கலாய்ப்பது அவள் படிக்கும் காலத்திலேயே நடந்தது. காரணம் அவள் உடல் வாகு கச்சிதமாய் இருந்தது. அவள் எந்த உடை அணிந்தாலும் அதில் நேர்த்தி இருக்கும். அவளை ஒரு தடவை பார்ப்பவர்கள் அனிச்சை செயலாக இன்னொருமுறை பார்ப்பார்கள். அவள் தந்தை ரிடையர்டு ஐ பி எஸ் வரதன் கொடுத்த ஊக்கம் காரணமாய் ஒரே பெண்ணான அவளும் அதற்குப் படித்தாள். முஸௌரி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் போலீஸ் ட்ரெயினிங் படித்தபோது அவளைக் கிண்டல் செய்த சிலர் அடி வாங்கியிருக்கிறார்கள். கராத்தேவில் உயர்ந்த சான்றிதழ் வாங்கியிருக்கிறாள்.

    படிகளில் ஏறும்போது தீபக் சொன்னான். என்னப்பா நீ, உன் போலீஸ் வேலையெல்லாம் வந்த இடத்துல கூட காட்டறே? அவன் ஏதோ உன்னை பாத்து சந்தோஷத்துல பாடினான். நானே ரசிச்சேன்... நான் கூட உன்னை பாடினா அடிப்பயா? என்றவனை ஸ்டூபிட் என்று பிடித்துத் தள்ளினாள் சரண்யா. டேய் அத்தை மகனே உஷார்! உன் குரல் கேட்டா கழுதை கூட நான் மேல்னு நெனைக்கும். அதுக்கே அடி வாங்குவே.

    அப்ப உன்னை லவ் பண்றது கஷ்டம்தான். அம்மா வேற என்னை உனக்கு கட்டணும்னு பாக்கறா.

    ஏன் உனக்கு இஷ்டம் இல்லையா? யாரையாவது லவ் பண்றயா... சொல்லிடு என்று அவள் கேட்டபோது வாசல் வந்துவிட்டது. காலிங் பெல்லை அமுக்கினான் தீபக்.

    கதவைத் திறந்த பர்வதம், ரொம்ப க்யூவோ? லேட்டா வர்றீங்க என்று பைகளை வாங்கிக்கொண்டாள். சரண்யாவிடம் தீபக் கண் சைகையில் ‘நடந்த எதுவும் சொல்லாதே’ என்றான்.

    ஆமா அத்தை. இந்த மழை சீசன்ல காய்கறி எல்லாம் டேமேஜ் ஆயிருக்கு. பொறுக்கி எடுத்தேன்.

    இன்னக்கி என்ன சமையல் பண்ணட்டும் சரண்?

    "அவியல் பண்றதுல நீங்க எக்ஸ்பெர்ட் அத்தை. அத

    Enjoying the preview?
    Page 1 of 1