Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Corona Kalathu Kurunovelgal - Part 1
Corona Kalathu Kurunovelgal - Part 1
Corona Kalathu Kurunovelgal - Part 1
Ebook153 pages56 minutes

Corona Kalathu Kurunovelgal - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

21ம் நூற்றாண்டு சந்தித்த மிகப் பெரிய சவால் கொரானா காலமாகும். உலகமே முடங்கிக் கிடந்தது. வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சினார்கள். முடங்கி விட்டார்கள். நானும் அவ்வாறுதான் வீட்டுக்குள் முடங்கி விட்டேன். ஆனால் எதையாவது செய்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது. என்னுடைய பணி எழுதுவது. குறுநாவல்கள் எழுத ஆரம்பித்தேன். ஆறு குறுநாவல்கள் எழுதினேன். இந்தத் தொகுதியில் நூலில் மூன்று குறுநாவல்கள் இருக்கின்றன. இந்த நாவல்களில் வருகின்ற கதாபாத்திரங்கள் கூட கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்கள் தான். அவர்கள் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பதுதான் கதைக்களமாக இருக்கிறது.

Languageதமிழ்
Release dateMar 30, 2024
ISBN6580115210908
Corona Kalathu Kurunovelgal - Part 1

Read more from Ananthasairam Rangarajan

Related to Corona Kalathu Kurunovelgal - Part 1

Related ebooks

Reviews for Corona Kalathu Kurunovelgal - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Corona Kalathu Kurunovelgal - Part 1 - Ananthasairam Rangarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொரானா காலத்து குறுநாவல்கள் - பாகம் 1

    Corona Kalathu Kurunovelgal - Part 1

    Author:

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Ananthasairam Rangarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ananthasairam-rangarajan

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. வொர்க் ஃப்ரம் ஹோம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    2. இதுதான் காதல் என்பதா!!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    3. சின்ன விழி பார்வையிலே

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    முன்னுரை

    21ம் நூற்றாண்டு சந்தித்த மிகப் பெரிய சவால் கொரானா காலமாகும். உலகமே முடங்கிக் கிடந்தது. வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சினார்கள். முடங்கி விட்டார்கள். நானும் அவ்வாறுதான் வீட்டுக்குள் முடங்கி விட்டேன். ஆனால் எதையாவது செய்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது. என்னுடைய பணி எழுதுவது. குறுநாவல்கள் எழுத ஆரம்பித்தேன். ஆறு குறுநாவல்கள் எழுதினேன்.இந்தத் தொகுதியில் நூலில் மூன்று குறுநாவல்கள் இருக்கின்றன. இந்த நாவல்களில் வருகின்ற கதாபாத்திரங்கள் கூட கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்கள் தான். அவர்கள் எவ்வாறு இயங்குகிறார்கள் என்பதுதான் கதைக்களமாக இருக்கிறது.

    1. வொர்க் ஃப்ரம் ஹோம்

    அத்தியாயம் 1

    காலிங் பெல் சத்தம் இரண்டு முறை ஒலித்தது. அமுதா தன் கம்பெனி மீட்டிங்கில் இருந்தாள். அவளுடைய பூசிய உடம்பு நைட்டியில் பாங்காக அமைந்திருந்தது. கொரானா தயவால் வொர்க் ஃப்ரம் ஹோம் என்று ஒன்றரை வருடமாய் வேலை செய்ததில் ஒரு சுற்று பெருத்திருந்தாள். கிளையண்ட் ஒருத்தி வளவள என்று அமெரிக்காவிலிருந்து பேசினாள்.

    கோயிலுக்கு அம்மா போயிருக்கிறாள். ‘வாசற் கதவு சாவியை எடுத்துப்போறேன், உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்’ என்றுதானே சொல்லிவிட்டுப் போனாள்? ஒருவேளை தன் கணவன் தினேஷ் சீக்கிரமாய் வங்கியிலிருந்து வந்துவிட்டாரா என்று எண்ணிக்கொண்டே கதவைத் திறந்தாள்.

    ஒரு நீல நிற புர்கா அணிந்த பெண் ஒரு டிராலி பெட்டி சகிதம் வாசலில் நின்றாள்.ஹாய் அம்மு! என்று முகத்திரையை விலக்கினாள் அந்தப் பெண்.

    ஓ! மஹி! வா வா என்றாள் அமுதா ஆச்சரியத்துடன்.இது என்ன வேஷம்?

    அவர்கள் ஹிந்தியில் பேசிக்கொண்டார்கள்.

    அம்மு. இட்ஸ் அ சர்ப்ரைஸ் விஸிட். லேப்டாப்பில் யாரது பேசறது? பிலோமினாவா? ஒரே அறுவை ஆச்சே அவள்! என்றாள் மஹதி, முதுகுப் பையை கீழே இறக்கியவளாய். ஒல்லியாய் நல்ல சிவப்பில் இருந்தாள். கண்கள் சிவந்திருந்தன. வீதியில் ஊபர் டாக்ஸி நின்றிருந்தது.

    எப்படி வந்தே?

    ஃப்ளைட்ல. பரவாயில்ல... புணேலிருந்து சென்னை ஒண்ணேகால் மணிதான். உன் வீட்டை கண்டுபிடிக்கிறதும் சுலபமா இருந்துச்சி என்று மஹதி சொல்லிக்கொண்டிருந்தபோதே ஊபர் கேபிலிருந்து தன் டிராலி பெட்டியை இழுத்துக்கொண்டு நரேஷ் இறங்கினான். முப்பதை நெருங்கினான். அப்பா அம்மா இல்லை. சென்னை ஆவடியில் மாமா வீட்டில் அவருடைய அதே வயதுப் பையன் கோபுவுடன் வளர்ந்தான்... ஆனால் நன்றாய் படித்தான். புனேயில் ஸாஃப்ட்வேர் வேலை கிடைத்து நல்ல ஊதியம். கோபுவுக்கு அரசியல் தொடர்பு ஏற்பட்டது. அங்கேயே வார்டு கவுன்சிலர் ஆனான். சைக்கிளில் போனவன் இன்று இன்னோவா வைத்திருக்கிறான். நிறைய அடிதடி கேஸ்களில் ஜாமீன் வாங்கியிருக்கிறான்.

    நரேஷ் மார்புக்குக் குறுக்கே ஒரு நீல நிற ஷோல்டர் பேக் மாட்டியிருந்தான். அதில் கிரெடிட் கார்டுகளும், சில பேப்பர்களும் இருந்தன...

    முகத்தில் மாஸ்க் போட்டிருந்தாலும், அவனை அடையாளம் கண்டதும் அமுதா அதிர்ந்தாள்.இவன் கூடவா வந்தே? என்றாள் அமுதா மெல்லிய குரலில்.

    அம்மு, இப்ப இவன் இல்ல. அவர் எனக்கு எனச் சொல்லிவிட்டுச் சிரித்தாள் மஹதி.

    கடசில நீதான் மாட்டினியா? என்ற அமுதா, வாங்க நரேஷ் என்று பொய்யான புன்னகையுடன் அவனை வரவேற்றாள். நரேஷ் குறுந்தாடியை தடவி கூர்மையான கண்களுடன் வெடவெடவென்று வளர்ந்திருந்தான்.

    ஹாய் அம்மு. என்னை எதிர்ப்பாக்கலையா நீ? அதுவும் இந்த மஹி கூட. இப்ப எனக்கு அவதான் வீட்ல பாஸ். ரெண்டு பேரும் நாலு நாள் முந்திதான் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகிட்டோம்.

    கங்க்ராட்ஸ் என்றாள் அமுதா.

    அதற்குள் கோயிலுக்குப் போன அம்மா சரசு வந்துவிட்டாள். நெற்றியில் விபூதி மட்டும் அணிந்திருந்தாள். மஹதியைப் பார்த்ததும் நீ மஹதிதானே? என்றாள்.

    ஹாய் அம்மா, சரியா ஞாபகம் வச்சிருக்கீங்களே.

    அம்மு புணேல வேலை செஞ்சப்ப உன் கூட இருக்கும் போட்டோக்களை அனுப்புவா.

    அம்மா கூட பேசிட்டிரு. நான் மீட்டிங் முடிச்சுட்டு வர்றேன் என்று தன் அறைக்குப் போய் லேப்டாப்பில் பிலோமினா பேசுவதைக் கேட்டாள் அமுதா.

    நரேஷும், மஹதியும் ஹால் சோபாவில் உட்கார்ந்தனர். மூன்று பெட்ரூம் வீடு. அதானால் இன்று ராத்திரி இங்கே தங்குவதில் பிரச்சினை இல்லை என்று மஹதி நினைத்தாள். சச்சுவுக்கு நரேஷை அறிமுகப்படுத்தினாள்.

    பத்து நிமிடத்தில் அமுதாவின் மீட்டிங் முடிந்தது.

    அப்போது மாலை மணி ஐந்தரை.

    ஸாரி அம்மு... உன் மேரேஜுக்கு நான் வரமுடியலை. அதே நாள்ல என் அண்ணாவுக்கு கல்யாணம்.

    உன் டிஷ் வாஷர் கிஃப்ட் நல்லா இருக்கு. பார்ஸல்ல வந்துச்சி. அம்மாவும் நானும் உபயோகிக்கிறோம். தேங்ஸ் மஹி. கொரானானு வேலைக்காரியை நிப்பாட்டிடோம். டீயா காபியா? என்றாள் அமுதா.

    ஒண்ணும் வேண்டாம். ஏர்போர்ட்டில் டீ குடிச்சுட்டோம் என்றான் நரேஷ்.

    அம்மு, சென்னைக்கு நான் புதுசு.

    சென்னைக்கு நான் புதுசில்ல. நான் ஆவடிக்காரன். மெட்ராஸ்ல எல்லா ஏரியாவும் தெரியும் என்றான் நரேஷ்.

    பக்கத்துல எந்த ஹோட்டல் நல்லது? என்றாள் மஹதி.

    சரசு சொன்னாள்: இன்னக்கி எங்க வீட்லயே தங்குங்க. புணேல உன் வீட்லதான் அம்மு ரெண்டுநாள் தங்கினா. நாளக்கி ஓட்டலுக்கு போவலாம்.

    அமுதாவுக்கு அம்மா பேச்சைக்கேட்டு எரிச்சலாய் இருந்தது. முந்திரிக்கொட்டைத்தனமாய் அம்மா பேசிவிட்டாள். மஹதி மட்டும் என்றால் பரவாயில்லை. நரேஷை ஏனோ பிடிக்கவில்லை. மஹதி தன் புர்காவைக் கழற்றிவிட்டு பூப்போட்ட சிவப்பு நிற சுரிதாரில் காட்சியளித்தாள்.

    தினேஷ் எட்டு மணிக்குத்தான் வருவார். அவர் கிட்ட எது நல்ல ஹோட்டல்னு கேக்கலாம் என்று அமுதா சொன்னவிதம் தன் வீட்டில் அவர்களுக்கு இடமில்லை என்பது போல் இருந்தது.

    தினேஷ் எட்டு மணிக்கு வந்தான்.மஹதியைப் பார்த்து, ஓ மஹி! எப்ப வந்தீங்க? என்றதும் அவள் மீட் மை ஹப்பி நரேஷ்" என்று அறிமுகப்படுத்தினாள்.

    நரேஷும் தினேஷும் கை குலுக்கிகொண்டனர்.

    ரொம்பநாள் பழகியவன் போல இருவரும் பேசிக்கொண்டனர். அமுதா ஒருகப் டீயை எடுத்து வந்தாள். தட்டில் பிஸ்கட்டை வைத்தாள். தினேஷ் நரேஷிடம் பிஸ்கட்டைக் காண்பித்து எடுத்துக்கொள்ளச் சொன்னான்.

    தினேஷ், உங்க கையைக் காண்பியுங்க. ஐ’ம் அ பாம் ரீடர். கை ரேகை சாஸ்திரம் படிச்சவன் என்று சொல்லிக்கொண்டே அவன் கையைப் பிடித்தான் நரேஷ்...

    இப்படி நரேஷ் மற்றவர்களுடைய கைரேகை பார்த்து உடனே அவர்களுடன் நட்பாகிவிடுவான். அவன் பார்க்காத கை அமுதாவுடையதுதான். அமுதா புனேவில் இன்ஜீனியஸ் என்கிற ஒரு எம் என் சி க்கு முதல் முதலாய் போனபோது அவளுடைய பேங்க் பிராஜெக்டில் இருந்த மஹதியை முதல் நாளிலேயே நட்பாக்கிக்கொண்டாள். அந்த ஊர் அவளுக்குப் புதிது. பெண்கள் ஹாஸ்டலுக்குப் போகும் முன் அவள் வீட்டில்தான் அமுதா தங்கினாள். மஹதியின் வீடு அந்த அபார்ட்மெண்டிலேயே பெண்ட் ஹவுஸ் டைப். ஐந்து பெட்ரூம்கள். அவள் அப்பா கோவிந்தராவ் படேல் புனேயில் ஒரு முக்கிய புள்ளி. சிடியில் 2000 டேக்ஸிகள் அவர் மகன் நிர்மல் பெயரில் ஓடின.

    அந்த முதல் நாளில் தன் கேபினில் அமுதா உடகாந்திருக்கிறாள். மஹதி அவளுக்கு கே டி எனப்படும் நாலெட்ஜ் டிரான்ஸ்ஃபர் செய்துகொண்டிருந்தபோது அங்கே நரேஷ் வந்தான்.ஐ’ம் நரேஷ். இந்த பிராஜெக்டில் சீனியர் என்றதும் அமுதா அவனுக்கு நமஸ்தே சொன்னாள்.

    ஏன் கையைக் கொடுக்கமாட்டீங்களா? சொன்னதோடு நில்லாமல்

    Enjoying the preview?
    Page 1 of 1