Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Aasaikkiliye
En Aasaikkiliye
En Aasaikkiliye
Ebook158 pages53 minutes

En Aasaikkiliye

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Vijaya Chandran
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466954
En Aasaikkiliye

Read more from Vijaya Chandran

Related to En Aasaikkiliye

Related ebooks

Related categories

Reviews for En Aasaikkiliye

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Aasaikkiliye - Vijaya Chandran

    1

    விடியற்காலை நேரம் ஆலாம்பாளையம் கிராமம் சுறுசுறுப்பானது. விவசாயம் நிறைந்த ஊர் என்பதால் உழவுக்கு மாட்டை பிடித்துக் கொண்டும் மண்வெட்டியைத் தோளில் போட்டுக்கொண்டும் பெண்கள் கலைக்கொத்தைச் சுமந்தபடி தூக்குவாளியைத் தூக்கியபடியும் ஆண்களும் பெண்களும் இயந்திரமாகிக்கொண்டிருந்தனர்.

    ஆம்னிகார் ஒன்று புழுதியை வாரி இறைத்துக்கொண்டு விநாயகர் கோவில் முன்பு நின்றது.

    காரிலிருந்து உத்ராவும் நவினும் மாலையும் கழுத்துமாக இறங்கினார்கள். கூட இரண்டு ஆண்கள் மட்டும் இறங்கினார்கள் கூட்டம் கூடியது.

    வாத்தியார் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வந்தவன் நம்ம ஊர்ப்பிள்ளையை கைபிடிச்சுட்டான். ஒருவருக்கொருவர் பேச மாணிக்கமும் கற்பகமும் கேள்விப்பட்டு வெளியில் வந்து நின்றார்கள். கோவில் முன்பு ஊரே கூடிவிட்டது. வாயில் விரலை வைத்தபடி பக்கத்தில் உள்ள மாரியம்மன் காளியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டார்கள்.

    உத்ரா படித்திருந்தாலும் தாவணி பாவாடையுடன் ஊருக்குள் சுற்றுபவள் பட்டுச்சேலையை உடுத்த அழகுச் சிலைபோல இருந்தாள்.

    ஏண்டி மாரிக்கண்ணு?

    என்னக்கா! பார்த்தா ஒன்றும் தெரியாத பெண் மாதிரி இருந்தா, புடிச்சாலும் புடிச்சா புளியங்கொம்பா புடிச்சிருக்கா.

    சின்னப் பொண்ணுக்கா, எதுக்கும் ஒரு யோகம் வேண்டும்.

    ஆமாடி மாரிக்கண்ணு.

    அம்மா அப்பா நிற்பதைப் பார்த்ததும் உத்ரா அருகே அழைத்து வந்தாள்.

    அம்மா அப்பா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க.

    மாணிக்கம் தயங்கினார்.

    நம்ம பிள்ளை செய்தது தவறுதான் மன்னிச்சு ஏத்துக்கலாம். ஒரே பிள்ளை வெறுத்து என்னங்க செய்யப் போகிறோம்.

    மாணிக்கம் மகளின் கைகளைப் பிடித்து கண்ணீர் வடித்தவர். உத்ராவும் கலங்கினாள்.

    பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்கிற வார்த்தையை உத்ரா நினைத்துப் பார்த்தாள்.

    இரண்டு பேரும் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்கள். பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழுங்க என்று வாழ்த்தினார்கள்.

    இரண்டு பேரும் காரில் ஏற வைத்து அழைத்துப் போனார்கள். ஊர் வாயை மூடமுடியுமா எதையும் கண்டுக்கொள்ளவில்லை.

    வீட்டின் முன் நிறுத்தி ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிப் போனார்கள்.

    நவீன் உத்ராவைப் பார்த்தான்.

    எல்லாமே வெற்றிங்க என்று கண்களிலேயே ஜாடை காட்டினாள்.

    பாலும் பழமும் சாப்பிட்டு நவினின் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

    உத்ரா வீடு ஏத்துக்கிட்டாங்க. என் அம்மா என்ன களேபரம் நடத்துகிறாங்களோ என்கிற பயம் மனதில் அச்சாரம் போட்டது நவீனுக்கு.

    மாணிக்கமும் கற்பகமும் இப்படிப் பண்ணிக்கிட்டு வந்துட்டாளே என்று கண் கலங்கினார்கள்.

    கணவன் மனதைத் தேத்தினாள் கற்பகம்.

    என்னங்க உத்ரா செய்தது தப்புதான் இளசுங்க விரும்பிட்டாங்க கல்யாணமும் செய்து கணவன் மனைவியாகவும் ஆயிட்டாங்க. நல்ல பையனா முகமே காட்டுது. புனிதமான ஆசிரியர் பணி. நல்ல உத்யோகம். நமக்கு இருப்பது ஒரே பிள்ளை என்னங்க பன்றது ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். அவளோட தலையில் எழுதினதை மாற்றவா முடியும். எப்படியும் மாப்பிள்ளை கைவிடமாட்டார். நம்ப கஷ்டம் நம்பளோடு போகட்டும். அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமையட்டும் என வாழ்த்துவோம்.

    காதல் கல்யாணம் இப்பவெல்லாம் ஆடையை மாத்துகிறமாதிரி ஆயிடுச்சு நினைச்சா பயமா இருக்கு எனக்கு. என்றார் மணிக்கம்

    பயப்படாதீங்க. ஒன்றும் ஆகாது.

    வெளியே நின்ற நவீன் உள்ளே வந்தான்.

    உத்ரா தலைகுனிந்தபடியே நின்றாள்.

    அத்தை மாமா உங்க கவலை நியாயம் தான் நான் கோபப்படலை உத்ராவை காலம் பூராவம் கண்கலங்காமல் வைச்சுக் காப்பாற்றுவேன் என்னை நம்புங்க. எனக்கு உத்ரா அழகும் மனசும் பிடிச்சுப்போச்சு ஆசைப்பட்டேன் விரும்பினேன் வாழ்க்கையும் வாழ ஆரம்பிச்சுட்டோம். மனதில் எதையும் நினைக்க வேண்டாம் என்னை நம்புங்க. என்றான் நவீன்.

    மருமகனின் பேச்சு மனதை அப்படியே உரையவைத்தது.

    உத்ரா அப்பாவின் மார்பில் சாய்ந்தாள்.

    அவளின் கண்களில் கண்ணீர் கோடு போட்டு வடிந்தது.

    மாணிக்கம் துடைத்து விட்டார்.

    மாப்ளே ஒரே பிள்ளை என்று ஆசையாய் எங்க சக்தியை மீறி படிக்கவைச்சோம். நல்லமுறையாகப் படிச்சா. ஒரு கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்திட்டா. இருந்தாலும் பரவாயில்லை. இப்ப இருக்கிற சந்தோஷம் கடைசி வரையில் இருக்கணும். என்றார் மாணிக்கம்.

    எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க. மருமகனின் மானசீகமான ஆறுதல்.

    சமையல் செய்து சாப்பிட்டனர். மணி பதினொன்று இருவரையும் வழியனுப்பி வைத்தனர்.

    காரில் ஏறினாள்.

    கார் புறப்படும்போது உத்ராவை அறியாமல் கண்ணீர் மாலையாய் வடிந்தது.

    ஏன் உத்ரா அழறே பிறந்த வீட்டைப் பிரிந்து போகும் போது ஒரு தாக்கம் வரும் அதைத் தாங்கிக்க.

    அவளுடைய கண்களைத் துடைத்து விட்டான். புகுந்த வீடு எப்படியோ என்ன ஆனாலும் இனி என்ன செய்ய முடியும் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

    உத்ரா என் அம்மா எதைப் பேசினாலும் நீ வாய் திறக்காதே நான் பார்த்துக்கிறேன்.

    சரீங்க.

    வெளியில் எட்டிப் பார்த்தாள். பச்சைப்பசேல் என இருக்கிற மரம் செடிகொடிகள் கண்களுக்கு இதமாக இருந்தன.

    டவுனை ஒட்டியுள்ள சாயிபாபா நகர் அழகு நகரமாக இருந்தன.

    விஐபிக்கள் ஏரியா பங்களா முன் கார் நின்றது.

    இறங்கு உத்ரா என்றான் நவீன்.

    பெரிய பங்களா சினிமாவில் இருப்பதைப் போல அழகாக இருந்தது.

    இறங்கி மாலையும் கழுத்துமாக வீட்டுக்குள் ஜோடியாகப் போனார்கள்.

    அம்மா செல்வராணி மகனின் கோலத்தைப் பார்த்தவள் மலைபோல் அப்படியே சிலையாக நின்றாள்.

    அம்மா நாங்களா விரும்பிக் கல்யாணம் செய்துகிட்டோம் ஆசிர்வாதம் பண்ணுங்க.

    டேய் அப்படியே நில்லுடா.

    நவீன் அப்படியே நின்றான்.

    அம்மாவின் குரல் வேகமாக கேட்க மகன் மருமகள் எல்லாருமே வந்து விட்டனர்.

    மஞ்சுளா உன்னைவிட அழகானவள் என் தம்பி மனைவி. என மனைவியிடம் சொன்னான் அண்ணன் சுந்தர்.

    மஞ்சுளா முறைத்தாள்.

    கவிதா உன்னைவிட சூப்பர் என் தம்பி மனைவி என்றான் அண்ணன் கபிலன்.

    நீங்க சொத்துக்கும் நகைக்கும் ஆசைப்பட்டீங்க உங்கம்மாவும் தான் நவீன் அழகை மட்டும் விரும்பி அது சொத்து என திருமணம் செய்துகிட்டு வந்திருக்கான். என்றான் சுந்தர்.

    கபிலன் வாயடைத்துப் போனான்.

    நவீன் இரண்டு பையன்களும் படிக்கலை விவசாயம் விவசாயம் என்றே வளர்ந்துட்டான்கள் உன்னைப் படிக்க வைச்சு ஒரு உத்யோகம் வாங்கணும் என்று அப்பாவின் ஆசை அதை நிறைவேற்றினே. நான் என் தம்பி மகள். சவிதாவைக் கல்யாணம் செய்யணும் நம்ம கிராமத்தையே அசத்தணும் அப்பாவின் ஆசையை பூர்த்தி செய்யணும் என்று நினைத்திருந்தேன். நீ எவளையோ அன்னக்காவடியை அழகுமயிலா நினைத்து ஊரே கலந்து வாழ்த்தி திருமணம் நடக்க வேண்டியதை கோவிலில் நீயே வைத்து மஞ்சள் கயிற்றைப் போட்டுக்கிட்டு வந்து இவதான் உன் மருமகள் அம்மா என்று நிற்கிறியே செல்வராணியின் மரியாதை என்ன? அந்தஸ்த்து என்ன? அந்த அருமை பெருமைகளை குழி தோண்டிப் புதைச்சுட்டியேடா? அம்மாவின் அங்கலாய்ப்பு இது.

    அம்மா? சொத்து இன்றைக்கு வரும் நாளைக்குப்போகும் விரும்பிய பெண் அப்புறம் கிடைப்பாளா.

    நவீன் சோற்றை இறைச்சா ஆயிரம் காக்கா வரும் சாப்பிட நம்மகிட்ட இருக்கிற சொத்தைப் பார்த்தா பெண் கொடுக்கிறதுக்கு கியூவில் பெண்ணைப் பெத்தவன் நிற்பாங்கடா எனக்கு ஒரே தம்பி பெரிய கோடீஸ்வரன் ஒரே பெண் சவிதா அழகில்லையா? அவளை மனைவியாக்கணும் உனக்கு உறவுகள் தொடரணும் என்று ஆசைப்பட்டேன் இப்ப இப்படி வந்து நிற்கிறியே. அவளைக் கொண்டுப் போய் பெத்தவங்ககிட்ட விட்டுட்டு வா அவளுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ பணம் கொடுத்துவிட்டுட்டு வாடா இல்லை அதற்குமேலும் கூடத்தர்றேன் கொண்டுபோய் விடுடா.

    அம்மா அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க நானா அவளை விரும்பி கரம்பிடித்திருக்கேன் உத்ராமேல் தப்பே இல்லை எல்லாமே நான்தான். அப்படி எங்களை பிரிக்கணும்ணு நினைச்சா உங்க கையாலேயே எங்களை கொன்று போடுங்க வாழ்வில் ஒன்று சேரலைன்னாலும் சாவிலாவது ஒன்று சேருகிறோம்.

    காதலிச்சுக் கல்யாணம் செய்கிறவங்க சொல்கிற டயலாக்த்தானே இது நன்றாக யோசித்து முடிவு எடுப்பா.

    நான் உத்ராவோடுதான் வாழ்வேன் இல்லை என்னைப் பிரிக்கணும் என்று நினைச்சா நான் எனக்கும் சொத்துக்கும் சம்பந்தம் இல்லைனு எழுதிக் கொடுத்திட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1