Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vithi Ezhuthatha Theerppu
Vithi Ezhuthatha Theerppu
Vithi Ezhuthatha Theerppu
Ebook114 pages36 minutes

Vithi Ezhuthatha Theerppu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Vijaya Chandran
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466961
Vithi Ezhuthatha Theerppu

Read more from Vijaya Chandran

Related to Vithi Ezhuthatha Theerppu

Related ebooks

Related categories

Reviews for Vithi Ezhuthatha Theerppu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vithi Ezhuthatha Theerppu - Vijaya Chandran

    1

    நேபாள நாட்டின் நில நடுக்கத்தை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். காலை நேரத்திலேயே தொழிலதிபர் சண்முகம்.

    குளித்து டவலால் தலை துவட்டியபடியே வந்தாள் கமலவேணி.

    ஏங்க மணி என்ன எட்டு. பேப்பரை புரட்டி ஒரு எழுத்து விடாமல் படிச்சீங்க. இப்ப டி.வி. முன்னாலே உட்கார்ந்து என்ன அப்படி பார்க்கறீங்க.

    கமலவேணி நேபாள நாட்டில் ஏற்பட்ட பேரழிவையும், உயிர் போனவங்களை அப்புறப்படுத்துவதையும் காட்டினாங்க. ஆயிரக்கணக்கானோர் உயிருக்கு போராடுவதையும் காட்டினாங்க. அதான் பார்க்கிறேன்.

    இதுதான் பார்க்க வேண்டிய நேரமா. என்ன காரியத்துக்குப் போகிறோம் என்பதை நினைச்சுப் பாருங்க. அதை விட இது முக்கியமா?

    முக்கியம் தான். காட்டறப்பதானே பார்க்க முடியும். எப்ப வேண்டுமானாலும் பார்க்க முடியுமா? எத்தனையோ உயிரை காவு கொண்டதைப் பார்த்து மனிதனுக்கு மனிதன் பரிதாபப்படுவது தான் மனித நேயம்.

    பார்த்தா போன உயிர் திரும்பியா வரும். அந்த நேயம், இந்த நேயம்ன்னு பேசறீங்க. புறப்படுங்க நேரமாகுது.

    நீ சொல்கிறமாதிரி எதுவும் வராது. பார்த்து ஒரு ஆதங்கம், பரிதாபம் காட்டறேன். நம்மளால் இதைத்தானே செய்ய முடியும்.

    ஆமா நீங்க காட்டுகிற பரிவு மனித நேயத்துலதான் செத்துப்போனவங்க பிழைச்சு வருவாங்க. காலையில் என் கோபத்தை தூண்டாதீங்க.

    எதுவும் பேசவில்லை. இனி உட்கார்ந்திருந்தால் அவளுடைய கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும் என்று தொலைக்காட்சியை ஆப்பண்ண மனமில்லாமல் ஆப் பண்ணி விட்டு எழுந்தார்.

    அரைமணி நேரத்தில் புதுமாப்பிள்ளையாக ரெடியானார்.

    இப்பதாங்க அழகா இருக்கீங்க.

    உன் பாராட்டுக்கு பஞ்சமில்லை கமலவேணி.

    நான் பாராட்டாமல் யார் பாராட்டுவதாம் உங்களை

    காவியாவுக்காக வாங்கி வந்ததை மறந்துடாமல் எடுத்து வைச்சுட்டியா?

    வைச்சுட்டேங்க.

    டிரைவர் காரை எடுப்பா.

    கார் புறப்பட்டவுடன் வேலையாளிடம் பத்திரம் எல்லாம் என்றார் கமலிவேணி.

    பார்த்துக்கிறேன்மா கார் கேட்டை விட்டு வெளியே வந்தது மணி ஒன்பது.

    என்னங்க பன்னிரெண்டு மணிக்கு கோவை போயிடுங்களா?

    போய் விடும்.

    கார் வாகன நெரிசலையும் ஜனநெரிசலையும் சமாளித்து எறும்பு போல ஊர்ந்து கொண்டிருந்தது.

    ஏங்க பெரிய டவுன்நம்ப ஊர். ரோடு வசதிகள் குறைவு அவசரத்துக்கு போக முடியுதா?

    அரசியல் நடத்துகிறவங்களைத் தான் போய் கேட்கணும்.

    ஏங்க அரசியல் உங்களுக்கு பிடிக்காதா?

    அரசியல் எல்லாம் அண்ணா, காமராஜர் காலத்தோட் தலை முழுகிட்டேன். எல்லா அரசியல் கட்சியும் பொது நலத்தில் அக்கறை இல்லை. சுயநலம் தான் முக்கியம் என்று இருக்கிறதாலே பிடிக்கலை.

    நல்லதுதாங்க.

    கார் நகரைவிட்டு அவுட்டரில் போய் கொண்டிருந்தது.

    காலை நேரம் வெயில் இல்லாததால் காற்று மனதிற்கு இதமாக இருந்தது.

    ஏங்க விவசாய நிலம் வீட்டு மனையாக மாறியே போகிறதே. இதை தடுக்கமாட்டாங்களா?

    முடியும் நீ மந்திரியானால்.

    கேலிதான் உங்களுக்கு எப்பவும். நீங்க ரொம்ப பங்சுவாலிட்டிங்க.

    "எதிலுமே அப்படி இல்லைன்னா கரூர் நகரில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் பெரிய தொழில் அதிபரா ஆக முடியுமா?

    உழைப்பு கடின, விடா முயற்சிகள், நாணயம் அந்த மூன்று தான் என்னை உயர்த்தியது. கரூரில் பெரிய தொழில் அதிபர் நான். என் மகன் கோவை நகரில் பெரிய தொழிலதிபரா ஆகப் போகிறான்."

    ஆகட்டுங்க.

    கார் கல்லூரி கேட்டின் முன் நின்றது. பல ஏக்கரை விழுங்கி பெரிய கல்லூரியாய், அலங்காரமாய் இருந்தது வி.என். கல்லூரி. அங்கு இல்லாத படிப்பே கிடையாது. அந்த அளவுக்கு கோவையில் பிரசித்தி பெற்றது.

    சண்முகமும், கமலவேணியும் கார்டை காட்டி வாட்ச்மேனிடம் அனுமதி பெற்று உள்ளே போனார்கள். வெயிட்டிங்ஹாலில் அமர்ந்திருந்தனர்.

    காவியாசுடிதாரில் அன்னநடை நடந்து வந்தாள். அம்மா, அப்பாவைக் கண்டதும் அப்படியே கட்டித் தழுவிக் கொண்டாள்.

    நல்லாயிருக்கீங்களா அம்மா, அப்பா

    நல்லாயிருக்கோம். நீதான் இளைச்சுப் போயிட்டே?

    அப்படியில்லைம்மா. நான் எப்பவும் இருக்கிறமாதிரிதானே இருக்கேன் என்றாள் காவியா.

    உன்னையே நீ பார்த்தா அப்படித்தான் இருக்கும் காவியா பெத்தவங்களுக்குத்தான் பிள்ளையின் அருமை தெரியும் என்று சும்மாவா பழமொழியை கண்டுபிடிச்சாங்க.

    மற்றவர்களை விசாரித்தாள்.

    காவியா இந்தா தின்பண்டங்களை அம்மா கொடுத்தாள்.

    எதற்கும்மா இத்தனை. வறுமையில் படிக்கிறவங்களை பார்க்க வைச்சு சாப்பிட முடியுமா?

    பங்கித்தின்னா பசி ஆறுமில்ல. கொடுடி.

    அப்படியே செய்றேன்மா என்று வாங்கிக் கொண்டாள்.

    காவியா.

    ஏங்கப்பா.

    படிப்பு முடிய மூன்று மாதம் தான் இருக்கு.

    ஆமாங்கப்பா. நான் இன்னமும் படிக்கிறேன்.

    காவியா நீ படிச்சு வேலைக்குப் போகணும் என்கிற நிலையில் இல்லை. நமக்கு இருக்கிற சொத்தை சாப்பிடவே முடியாது, நான்கு தலைமுறைக்கு சாப்பிடலாம். நீ படிப்பு முடிக்கிறே, உனக்காக காத்திருக்கிற கமலேசை கணவனா ஏத்துக்கிறே, வாழ்க்கையில் செட்டிலாகிற. உன் படிப்புக்கு பின்னால் படிப்பை போட்டுக்கிறதுக்காகத்தான் நீ படிக்கிறதே.

    அப்பா சண்முகம் வார்த்தைகள் தலையில் இடியாக விழுந்தது.

    அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

    என்ன காவியா பதிலையே காணோம் என்றார் அப்பா.

    ஏங்க கல்யாணம் என்றதும் அப்செட் ஆயிட்டா.

    அப்படியா காவியா.

    இல்லைங்கப்பா என்று சமாளித்தாள்.

    ‘இப்ப காதலன் விவேக் பற்றிச் சொன்னால் களேபரம் ஆகிவிடும் என்று அடக்கிக் கொண்டாள். நேரம் வரும்போது சொல்லலாம் என்று’.

    என்ன எதையோ யோசிக்கிறமாதிரி முகமே காட்டுதே?

    இல்லைங்கப்பா.

    நீ மறைச்சாலும் உன் முகம் காட்டுகிறது. எதை மறைச்சாலும் வெளியே சொல்லாமல் இருக்க முடியாது. தானாக வெளியே வரும்.

    Enjoying the preview?
    Page 1 of 1