Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aasaikkanavugal and PonVilakku
Aasaikkanavugal and PonVilakku
Aasaikkanavugal and PonVilakku
Ebook145 pages52 minutes

Aasaikkanavugal and PonVilakku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Vijaya Chandran
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466954
Aasaikkanavugal and PonVilakku

Read more from Vijaya Chandran

Related to Aasaikkanavugal and PonVilakku

Related ebooks

Related categories

Reviews for Aasaikkanavugal and PonVilakku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aasaikkanavugal and PonVilakku - Vijaya Chandran

    ஆசைக்கனவுகள்

    1

    அருகில் உள்ள ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சன்னதியில் சுப்ரபாதம் இடியோசை போல முழங்கியது. கண்களை விழித்தாள் செண்பகம் கண்களை கசக்கி மணியைப் பார்த்தாள். மணிஐந்து.

    சனிக்கிழமை கேவிலுக்குப் போவாள் என்று எழுப்பினாள்.

    எழுந்தாள். முகம் அலம்பி, வெளியே போர்டிகோவுக்கு வந்தாள். இருட்டு சூழ்ந்திருந்தது. விவசாய வேலைக்குப் போகிறவர்கள் எறும்பு போல சாரை சாரயைாக, மண் வெட்டிகளை, கொத்துச் சாப்பாட்டுத் தூக்கைச் சுமந்தபடி போய்க் கொண்டிருந்தனர். அதை ரசித்தாள். உழைப்பவர்களை என்றுமே பிடிக்கும் பூவிழிக்கு.

    பூவிழி காபி ரெடி.. வந்தாள். காபி தம்ளரை எடுத்துக் கொண்டு மீண்டும் போர்டிகோவுக்கு வந்தாள். பச்சென விடிந்திருந்தது. வேடிக்கைப் பார்த்தபடியே காபியைக் குடித்தாள்.

    நேரமாயிடுச்சு என டவலை எடுத்துக் கொண்டு போனாள். பூஜை அறையில் அம்மா துதி சொல்வது துல்லியமாகக் கேட்டது. |

    எவ்வளவு சீக்கிரம் குளிச்சுட்டு, பூஜை அறைக்குப் போயிடுச்சு. அம்மா எப்பவும் சுறுசுறுப்புதான் என்று பெறுமைப் பட்டாள்.

    குளித்து உடமைமாற்றி, தலையில் டவலைக் கட்டிக்கொண்டு வாசலைப் பெருக்கி, கோலம் போட்டு எழுந்தாள். காலைச் சூரியன் உதித்து வெளியே வர, களம் மஞ்சள் வெயிலை வெளியே கக்கிக் கொண்டிருந்தது வானம்.

    சமயைலரையில் இருந்த செண்பகம்,பூவிழி எனக் குரல் கொடுத்தாள்.

    என்னங்கம்மா...

    பைப்படியில் நல்ல தண்ணிர் வரும் நேரம். குடத்தை முதலிலே போட்டிருக்கேன். போய் தண்ணிர் எடுத்துக்கிட்டு வாடி

    போறேன்மா

    போனாள். தண்ணிர் பிடிப்பதில் தகராறு செய்த பெண்களைச் சமாதானப்பாடுத்தி, தண்ணிர் பிடித்து வந்தாள்.

    செண்பகமும் வர, இருவரும் சேர்ந்து சுமந்தார்கள். வாரம் ஒருமுறை தானே தண்ணிர் வருவது என்று.

    சமையல் முடிச்சுட்டேன், பாத்திரம் தான் துலக்கனும். நான் செய்கிறன்

    நான் செய்கிறேனம்மா

    கோவிலுக்குப் போக நேரமாகி விடும். கொல்லையில் உள்ள பூக்களைப் பறித்து, மாலையாகத் தொடுத்துக், கொண்டு போய் தரிசனம் செய்துட்டு வாடி, நேரமாகுது

    சரிங்கம்மா...

    சூரியன் உதித்து இளம் காலை வெயில் சுள்ளென்ரறு அடித்தது. மனதுக்கும் இதமாக இருந்தது.

    வீட்டுத் தோட்டம் போனாள் பூக்கூடையைச் சுமந்தபடி.

    பூக்களைப் பறித்து, தொடுத்து, மீதிப் பூவைத் தலையில் வைத்துக் கொண்டு,அம்மா போயிட்டு வர்றேன் என்று நடந்தாள்.

    ஊர்பரபரப்பாக இருந்தது. கோவிலை அடைந்தாள். கூட்டம் ஓரளவு இருந்தது.

    அர்ச்சகரிடம் பூக்களை கொடுத்து ராசியும் நட்சத்திரத்தையும் சொன்னாள்.

    அர்ச்சனை செய்து பூஜை நடந்த்து. நான் இந்த வருடம் நல்ல முறையா பாஸ் பண்ணனும் என்று வேண்டினாள் மனம் உருக. கோவில் பிரகாரத்தைச் சுற்றி, கோவில் முன்னால் வந்து அமர்ந்து, மஞ்சனை நெற்றியில் பூசி, துளசியை மடித்தபடியே எழுந்து, மற்ற துணை தெய்வங்களையும் தரிசனம் செய்து வீட்டிற்கு நடந்தாள்.

    அம்மாவுக்கு மஞ்சளையும், துளசியையும் கொடுத்தாள்.

    வாங்கிக் கொண்டாள்.

    பூவிழி, சாப்பிடலாம்

    என்னம்மா, டிபனா? சாப்பாடா?

    சாப்பாடு தான். இரண்டு நேரம் சமையல் செய்ய முடியாது. வயலில் வேலை.

    சரிங்கம்மா, கொண்டு வாங்க

    செண்பகம் கொண்டு வந்து முன்னால் வைத்தாள்.

    பூவிழி தினமும் சாப்பிட, மணியாயிடுச்சு பேருந்து போய் விடும் என்று அரைகுறையாக சாப்பிட்டு விட்டுப் போவே. இன்றைக்கு அமைதியா வயிறு நிறைய சாப்பிடுடி

    தாய்ப்பாசம் எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாது என்பது நினைவுக்கு வந்தது. அப்பொழுது,

    சரிங்கம்மா, உங்க ஆசையை நிறைவேற்றுகிறேன்

    சாப்பிட்டார்கள். சாம்பார், முருங்கைக்காய் வாசம் கமகம் வென்றது.

    சாப்பிட்டு முடித்ததும், சுந்தரத்திற்குச் சாதம் போட்டுக் கிளம்பினாள்.

    பூவிழி, பத்திரமா இருடி

    ஏம்மா? பயப்பாட மாட்டேன், தைரியமா போட்டுக்

    வெளியில் போறியன்னு கேட்டேன், பதிலே இல்லையே

    எங்கேயும் போகலைம்மா. படிக்கனும்..

    பத்திரமா இரு என்று கூறி, செண்பகம் நடந்தாள்.

    கதவைத் தாழிட்டு, புத்தகத்தைக் எடுத்தாள்.

    பூவிழி குடும்பம் பற்றி....

    செருக்கை கிராமத்தில் சிறிய விவாசயக் குடும்பமாக செண்பகம், சுந்தரம் தம்பதியினர் வாழத்து வருகின்றனர் மூன்று ஏக்கர் விவாசயம் தான் அவர்களை வாழ வைக்கிறது. அந்தக் கிராமமே விவாசாயத்தை வாழ்வாதரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். பூவிழி ஒரே பெண். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாததால் போகாத கோவில், ஏறாத மருத்துவமனை இல்லை. எப்படியோ பூவிழி பிறந்தாள்.

    பூவிழி படிப்பில் சுட்டி. நடுநிலை வகுப்பு படிக்கும் போதே பேச்சுப் போட்டியில் கலந்து பரிசு வாங்கினாள். அவளுக்குப் பேச்சு ஞானம் வந்தது. அப்பா தழிழ் பற்றுக் கொண்டவர். பகவத் கீதை, இராமாயணம் எனப் பழைய அரிய நூல்களை வாங்கி, வீட்டிலேயே குட்டி நூலகமாக வைத்துள்ளார். அப்பாவின் வழியில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திப் பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டாள்.

    அவளுக்குப் பிடித்த தழிழ் பி.ஏ., படித்து, தமிழ் எம்.ஏ., முடிக்கும் தருணம். கல்லூரி வாழ்க்கையில் மகிழ்ச்சியாகச் சுற்றனும், இந்த ஒரு வாழ்க்கை இனி எப்பவும் திரும்பக் கிடைக்காது எனச் சுற்றும் மாணவிகளிடம் ஒதுங்கியே இருப்பாள். அவளின் செயல், நிறைய மாணவ மாணவிகளுக்குப் பொறாமையாக இருக்கும் அதைக் கண்டு கொள்ள மாட்டாள்.

    படிப்பு அவளை ஈர்த்தது. நேரம் போனதே தெரியவில்லை. மணியைப் பார்த்தாள், மூன்று சாப்பிட்டாள். வெளியே வந்தாள். மதிய வெயில் மண்டையைப் பிளக்கும் அளவுக்கு இருந்தது. மீண்டும் போர்ட்டிகோவிலேயே படிக்க ஆரம்பித்தாள்.

    மணி ஐந்தானது.

    செண்பகம் வந்தாள்.

    என்னடி, படிச்சு முடிக்கலையா?

    படிச்சுட்டேன்ம்மா... என்று கூறி எழுந்தாள்.

    முகம் அலம்பி, தலை வாரி தன்னை அழகுப்படுத்திக் கொண்டு வந்தாள்.

    அப்பா பால் கொண்டு வந்தாள்.

    பூவிழி, காபி போடு என்றாள் செண்பகம்.

    ஏங்க

    என்ன செண்பகம்?

    பூவிழி அழகைப் பார்த்தீங்களா?

    அழகுப் பெட்டகம் தான். அதுக்கென்ன?

    அவள் முகத்தில் கல்யாணக் கலை தெரிகிறதுங்க. காலாகாலத்தில் கல்யாணம் செய்து முடிச்சா நாம நிம்மதியாக இருக்கலாம்.

    முயற்சி எடுப்போம். நம்மகிட்ட எதுவும் இல்லை. நமக்கு மேலே ஒருவன் இருக்கான். அவன் செயல் எல்லாமே

    காபி தம்ளருடன் வந்தாள்.

    மூன்று பேரும் காபியைக் குடித்தார்ள்.

    பூவிழி

    என்னங்கப்பா?

    இந்த வருடத்தோடு படிப்பு முடிகிறது

    ஆமாங்கப்பா

    உனக்கு காலாகாலத்தில் செய்ய வேண்டியதைச் செய்யலாம் என்கிற முடிவில் இருக்கோம்

    எல்லாப் பெற்றோர்களும் ஆசைப்படுவது நியாயம்தான். இன்றைய காலகட்டம் அப்படி. நான் எம்.ஏ., முடிச்சுட்டு எம்.பிஎல்., படிக்கனும். என்னோட ஆசை கல்லூரிப் பேராசிரியை ஆகனும் என்பதுதான். அதற்கு மட்டும் அனுமதி கொடுங்கப்பா? இரண்டு வருடத்திற்குப் படித்து முடித்ததும், எந்த வரனைக் கைகாட்டுறீங்களோ அவரையே திருமணம் செய்துக்கிறேன்

    பூவிழி கேட்கிறேன்னு தவறா நினைக்காதே?

    கேளுங்கப்பா. நீங்க கேட்கிறது நல்லதாகத் தான் இருக்கும். பெற்றவர்கள் தானே?

    யாரையாவது மனதில் நினைச்சிருக்கியா?

    அப்பா, இன்று காதல் ஒரு ஜல்லிக்கட்டாக வினளயாடி வருகிறது. கட்டுப்பாடு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் பார்க்கும் போது, படிக்கும் போது எனக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை காதல். உங்க மகள் எப்பவும் தவறான வழியில் போக மாட்டா? காரணம், வாசிப்புப் பழக்கம் என்னை உயர்த்திடுச்சு. நல்ல ஞானத்தையும் ஏற்படுத்திடுச்சு. ஆன்மிகமும் எனக்கு வந்திடுச்சு மனசுல

    சுந்தரம் மகளை மார்போடு சேர்த்து சேர்த்து, மகிழ்ச்சி அடைந்தார். செண்பகம் அந்தக் காட்சியைப் பார்த்து மனதில் ஒருபெரிய சந்தேகம் விலிகியது என பெருமூச்சு விட்டாள்.

    அப்பா, எக்ஸாம் படிக்கனும்

    போய்ப் படி பூவிழி

    பூவிழி உள்ளே போனாள்.

    பூவிழியைப் பார்த்து அப்படியே அமர்ந்திருந்தனர். மாலை நேரக் காற்று சிலுசிலுவென வீசியது மனத்திற்கு இதமாக இருந்தது.

    செண்பகம் சமையலறைக்குக் கிளம்பினாள்.

    சுந்தரம் கடைவீதிக்குச் சென்றார்.

    2

    ஞாயிற்றுக்கிழமை அம்மாவும், அப்பாவும் இல்லை. அன்று பௌர்ணமி. அருகில் உள்ள முருகன் கோவிலுக்குப் போய் விட்டுச் சைக்கிளில் வந்தாள்.

    ஸ்கூட்டி ஒன்று உரசியபடி

    Enjoying the preview?
    Page 1 of 1